Tamil Star |
- போட்டியிடுவது வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான போராட்டம்: சரத் பொன்சேகா
- மமதையில் நினைத்தை செய்யலாம் என்று இலங்கை அரசு செயற்படுகிறது: சம்பந்தன்
- பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் நடத்திய கவன ஈர்ப்பு தெரு வெளி கருத்தியல் சித்திரம்!
- தையல் ஊசி மற்றும் சவர பிளேட் சாக்லேட்டிற்குள் ?
| போட்டியிடுவது வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான போராட்டம்: சரத் பொன்சேகா Posted: 10 Nov 2014 02:03 AM PST
பொது வேட்பாளராக போட்டியிவது வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையிலான போராட்டம் என 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்ட சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு தான் எதிர்நோக்கிய அனுபவங்கள் நினைவுக்கு வரும் போது மயிர்கூச்செறியும் எனவும் அவர் கூறியுள்ளார். நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பு கோட்டே சோலிஸ் ஹொட்டலில் இன்று முற்பகல் ஏற்பாடு செய்த விசேட செய்தியாளர் சந்திப்பில் பொன்சேகா இதனை குறிப்பிட்டுள்ளார். பொது வேட்பாளராக போட்டியிடும் நபர் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான போராட்டத்தில் ஈடுபடும் தயார் நிலையில் வரவேண்டும். தேர்தல் காலத்தில் அனைவரும் நம்முடன் இருப்பர். ஆனால் தோல்வியடைந்த பின் அனைவரும் நம்மை விட்டுச் சென்று விடுவர். தனித்தே சிறை சோறு சாப்பிட வேண்டும். இவற்றை அறிந்து புரிந்து கொண்டு பொது வேட்பாளர் போட்டியிடுவாரேயானால் சிறந்து எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மமதையில் நினைத்தை செய்யலாம் என்று இலங்கை அரசு செயற்படுகிறது: சம்பந்தன் Posted: 10 Nov 2014 01:58 AM PST
சட்டத்தின் அடிப்படையில் ஊழலற்ற ஆட்சி இலங்கையில் உருவாக ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தமது பங்களிப்பைச் செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். தான் நினைத்தை செய்யலாம் என்ற மமதையில் இலங்கை அரசு தற்போதும் செயற்பட்டு வருவதால் சர்வதேச சமூகத்தின் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் அது உள்ளது. எனவே, இதிலிருந்து தப்பிக்கலாம் என்று அரசு ஒருபோதும் நினைக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார். மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் எழுதிய "என் எழுத்தாயுதம்" (ஒரு பத்திரிகையாளனின் பட்டறிவுப் பகிர்வு) நூல் நேற்று மாலை 4.30 மணிக்கு கொழும்பு, பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சம்பந்தன் தனது உரையில் குறிப்பிடுகையில், எனக்கும் வித்தியாதரனுக்கும் நீண்ட காலத் தொடர்பு உண்டு. எமது உரிமைப் போராட்டம் ஆயுத ரீதியில் மேற்கொள்ளப்பட்ட காலப்பகுதியில் இவரின் ஊடகப் பணியும் அயராது தொடர்ந்தது. மிகவும் இக்கட்டான காலப்பகுதிகளில் சுடர்ஒளி, உதயன் பத்திரிகைகளின் ஆசிரியராக இவர் செயற்பட்டு வந்தார். நாட்டில் சமாதானம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கோடு இவர் உழைத்தார். எனவே, நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்பட வித்தியாதரனின் பங்களிப்புத் தொடரவேண்டும். இன்று இலங்கையின் இனப் பிரச்சினை சர்வதேச மயமாகிவிட்டது. உண்மையான நல்லிணக்கம், நிரந்தர அரசியல் தீர்வு இலங்கையில் ஏற்பட வேண்டும் என்பதே சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடாகும். ஆனால், யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 5 வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் இலங்கையில் இவை ஏற்படவில்லை. இந்த நாடு சுதந்திரமடைந்து 65 வருடங்களுக்கு மேலாகிவிட்டன. ஆனால், தேசிய பிரச்சனை இன்னும் தீர்க்கப்படவில்லை. நாடு சுதந்திரமடைய சிறுபான்மை சமூகம் ஒத்துழைப்பை வழங்கியது. ஆனால், சுதந்திரத்தின் பின்னர் சிறுபான்மை சமூகத்தினரை நாட்டின் இரண்டாம் பிரஜைகளாக்கிவிட்டது அரசு. நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று நாம் ஒருபோதும் நினைக்கவில்லை. நாட்டுக்குள்ளேயே இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று கூறி வந்தோம். இன்று இலங்கையின் இனப்பிரச்சினை சர்வதேசமயமாக சிறுபான்மை சமூகம் காரணமல்ல. ஆட்சி புரிந்த அரசுகளே காரணம். இந்தப் பிரச்சினை நீண்ட காலம் தொடரும் என்று நாம் நினைக்கவில்லை. விரைவில் தீர்வு கிடைக்க எமது முயற்சி தொடரும் என தெரிவித்தார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் நடத்திய கவன ஈர்ப்பு தெரு வெளி கருத்தியல் சித்திரம்! Posted: 10 Nov 2014 01:48 AM PST
கனடா யோர்க் பல்கலைக் கழக தமிழ் மாணவர்கள் மாவீர நாள் நிகழ்வுகளில் புதிய யுக்தியை கையாண்டு பரப்புரை செய்கின்றனர், இவர்களுக்கு உலகத் தமிழர்களின் பாராட்டுக்கள். அனைத்து புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மாணவர்களும் எங்கள் போராட்டத் தளத்தில் தம்மாலான பணிகளை இது போல் தனித்துவமாக முன்னகர்த்தும் கடப்பாடு உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| தையல் ஊசி மற்றும் சவர பிளேட் சாக்லேட்டிற்குள் ? Posted: 10 Nov 2014 01:42 AM PST
ஒட்டாவாவில் 10-வயது சிறுவன் ஒருவன் சினிக்கேஸ் சாக்கலேட்டை கடித்த போது அதற்குள் ஒரு தையல் ஊசி இருக்க கண்டுபிடித்துள்ளான். இந்த சாக்கலேட் ஹலோவின் தினத்தன்று டிறிக்-ஒ-ட்றிற்ரிங் சென்றபோது கிடைக்கப் பெற்றது. இது குறித்து பொலிசார் புலன்விசாரனையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பிட்ட சிறுவன் சனிக்கிழமை சிறிய சாக்கலேட் பாரைக் கடித்தபோது ஊசி கண்டுபிடிக்கப்பட்டது. இதே போன்ற அசம்பாவித சம்பவங்கள் வேறு இடங்களிலும் நடந்துள்ளன. ஒன்ராறியோவில் நோத் பே என்ற இடத்தில் வியாழக்கிழமை வேறு வேறு இடங்களில் தையல் ஊசி மற்றும் சவர பிளேட் போன்றவை இரண்டு வித்தியாசமான சாக்லேட் பாரிற்குள் இருந்து கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |




