Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மிக்சி, கிரைண்டர், பேன் வழங்கும் திட்டம் தொய்வு: ஜெ., கைதுக்கு பின் அதிகாரிகள் தொடர்ந்து மவுனம்

Posted:

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை, கைது நடவடிக்கையை தொடர்ந்து, அரசின் இலவச பொருள் வழங்குவதில் கடும் தொய்வு ஏற்பட்டுள்ளதால், எதிர்பார்ப்பில் இருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இலவச பொருட்கள் வழங்கும் திட்டத்தை, அரசு விரைவுப் படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.அ.தி.மு.க., தன் தேர்தல் அறிக்கையில் கூறியபடி இலவச பொருட்களை வழங்கும் திட்டத்தை, கடந்த 2011 செப்., 15ல் துவக்கியது. கடந்த, 2011 ஜூன், 30 கணக்கின் படி தமிழகத்தில் உள்ள 1.85 கோடி ரேஷன் கார்டு தாரர்களுக்கு இலவச பொருட்கள் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு ...

கு.க., ஆபரேஷன் பெண்களுக்கு கொடுத்த மாத்திரையில் எலி விஷம்

Posted:

ராய்ப்பூர்: 'சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த கருத்தடை முகாமில், 13 பெண்கள் பலியானதற்கு, அவர்களுக்கு செலுத்தப்பட்ட நோய் எதிர்ப்பு மாத்திரையில், எலிகளை கொல்ல பயன்படும் ரசாயனம் கலந்திருந்ததே காரணம்' என, முதல்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது.சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் நகரில், சில நாட்களுக்கு முன், மாநில அரசின் சுகாதாரத் துறையும், தனியார் மருத்துவமனை ஒன்றும் இணைந்து, கருத்தடை அறுவை சிகிச்சை முகாமை நடத்தின. இதில், கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்களில், 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. ...

ஆண் கைதிகளுடன் செக்ஸ் உறவு கொள்ளுங்கள்: பெண் கைதிகளை கட்டாயப்படுத்தும் வார்டன்கள்

Posted:

பெங்களூரு: பெங்களூரு மத்திய சிறையில், பெண் கைதிகளை, ஆண் கைதிகளுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளும்படி, சிறை வார்டன்கள் கட்டாயப்படுத்துவதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த, 'சேவை'க்காக, ஆண் கைதிகளிடம் இருந்து, சிறை வார்டன்கள் பணம் பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.பெங்களூரு மத்திய சிறை வளாகத்தில், கர்நாடக உயர் நீதிமன்றம் சார்பில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பெட்டியில், சில மாதங்களுக்கு முன், இரண்டு கடிதங்கள் போடப்பட்டுள்ளன. தேதி குறிப்பிடப்படாத அந்தக் கடிதங்களில், எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுவதாவது: பெங்களூரு மத்திய சிறையில் ...

இனி கவனிக்க வேண்டியது வைகை அணை தான்: ஐந்து மாவட்ட மக்கள் நிம்மதிக்கு வழி?

Posted:

தேனி : முல்லை பெரியாறு அணை நீர் மட்டம், 142 அடியை எட்ட உள்ள நிலையில், வைகை அணையை தூர்வாரினால், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்கள் செழிப்பாக விவசாயம் செய்யும் நிலை உருவாகி விடும்.தமிழகம் - கேரளா இடையே நடந்து வந்த, 36 ஆண்டு கால தண்ணீர் போராட்டம் முடிவடைந்து, முல்லை பெரியாறு அணை பிரச்னையில், தமிழகம் வெற்றி பெற்றுள்ளது. 12 அடிக்கு வண்டல்:இன்றோ, நாளையோ, நீர்மட்டம் 142 அடியை எட்டி விடும். இதைத் தடுக்க, கேரள அரசு சட்ட ரீதியான போராட்டங்கள் நடத்தினாலும், அதிகாரிகள் மட்டத்தில் தடை ஏற்படுத்தினாலும், அதில் கேரள அரசு ...

அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., சமாதிகளில் கோடிக்கணக்கில் மின் கட்டண பாக்கி

Posted:

சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். சமாதிகளுக்கு கடந்த 14 ஆண்டுகளாக மின் கட்டணம் செலுத்தப்படவில்லை என்கிற தகவல் வெளியாகி, அரசு தரப்பினரை, கலக்கம் அடைய செய்திருக்கிறது. அண்ணாதுரை சமாதிக்கு 2 கோடி ரூபாயும், எம்.ஜி.ஆர்., சமாதிக்கு 1 கோடி ரூபாயும் கட்டண பாக்கி உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த இரு சமாதி மற்றும் நினைவிடங்களில் எத்தனை மின் இணைப்புகள் உள்ளன? அவற்றிற்கு மின் கட்டண பாக்கி எவ்வளவு? என, தகவல் உரிமை சட்டம் மூலம், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திடம் தகவல்கள் கேட்கப்பட்டன.மூன்று இணைப்பு: இதில் அண்ணாதுரை சமாதி பெயரில் ...

பட்ஜெட்டிற்கு தயாராகும் தெற்கு ரயில்வே: திருச்சியில் 18ம் தேதி தமிழக எம்.பி.,க்களுடன் ஆலோசனை

Posted:

ரயில்வே பட்ஜெட்டில், தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை கேட்டு பெற, தெற்கு ரயில்வே சார்பில், கோட்ட வாரியான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி யில், வரும் 18ம் தேதி நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க வரும்படி, எம்.பி.,க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கருத்து கேட்பு: ஆண்டுதோறும், பார்லிமென்ட்டில், ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கு முன், எம்.பி.,க்கள் - எம்.எல்.ஏ.,க்கள், பயணிகள் சங்கங்கள் உட்பட பல்வேறு தரப்பில் இருந்து வரும் கோரிக்கைகள் ஏற்கப்படுகின்றன. அதன் அடிப்படையில், புதிய ரயில்கள் இயக்கம், ரயில் ...

காங்கிரஸ் உறவுக்கு தி.மு.க., அச்சாரம்? 44 ஆண்டுக்கு முந்தைய கருணாநிதி கவிதை வெளியீடு

Posted:

சென்னை: காங்கிரசுடன் மீண்டும் இணைவதற்காக, முன்னாள் பிரதமர் நேருவின், 125வது பிறந்த தினத்தை, தி.மு.க., தலைவர் கருணாநிதி பயன்படுத்துகிறார் என, அரசியல் வட்டாரங்களில் கருத்து நிலவுகிறது.முன்னாள் பிரதமர் நேருவின், பிறந்த தினம், கடந்த 14ம் தேதி முடிந்தது. இந்நிலையில், முரசொலி சார்பில், நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை: 'நேரு கண்ட ஜனநாயகம்' என்ற தலைப்பில், 1970 நவ., 14ம் தேதி நடந்த, கவியரங்கத்துக்கு தலைமை வகித்து, கருணாநிதி கவிதை பாடினார். இந்த கவியரங்கில், கவிஞர்கள் எஸ்.டி.சுந்தரம், கொத்தமங்கலம் சுப்பு, முருகுசுந்தரம், அப்துல் ரகுமான், கண்ணதாசன் ஆகியோர் கலந்து ...

டில்லி - சென்னை இடையே அதிவேக ரயில் பாதை அமைக்க ரூ.2 லட்சம் கோடி: ஆறு மணி நேரத்தில் 1,754 கி.மீ., தூரத்தை எளிதில் கடக்கலாம்

Posted:

புதுடில்லி: உலகிலேயே, இரண்டாவது நீளமான, அதிவேக ரயில் பாதையை, டில்லி - சென்னை இடையே அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதை பயன்பாட்டிற்கு வந்தால், ஆறு மணி நேரத்தில், டில்லியில் இருந்து சென்னை வந்து விடலாம்.புதிய ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சுரேஷ் பிரபு, தற்போது, பிரதமர் நரேந்திர மோடியுடன் வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தாலும், அமைச்சராக பதவியேற்ற பின், டில்லியில் இருந்த சில நாட்களில், பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அதுபற்றிய விவரங்கள், தற்போது ஒவ்வொன்றாக வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி, உலகிலேயே, இரண்டாவது நீளமான, ...

கறுப்பு பணத்தை மீட்க பிரதமர் மோடி உறுதி: சர்வதேச நாடுகளில் ஒத்துழைப்பை கோருகிறார்

Posted:

பிரிஸ்பேன்: ''கறுப்பு பணத்தை மீட்க, சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம். குறிப்பாக, ஜி - 20 நாடுகளின் தலைவர்கள், இந்த விஷயத்தில் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,'' என, பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடக்கும், ஜி - 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, அங்கு சென்றுள்ளார். நேற்று, மாநாடு துவங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன், குயின்ஸ்லாந்து பார்லி., ஹவுசில், ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட், மற்ற நாடுகளின் தலைவர்களுக்கு விருந்து அளித்தார்.அப்போது, பிரதமர் மோடி பேசியதாவது: ஏராளமான இந்தியர்கள், ...

பெரியாறு அணை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் கேரளா மனு தாக்கல்: அணையில் 142 அடிக்கு தண்ணீர் தேக்க தடை விதிக்க கோரிக்கை

Posted:

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் பருவமழை காரணமாக, அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, பல ஆண்டுகளுக்கு பின், முதல்முறையாக இந்த ஆண்டு, அணையின் நீர்மட்டத்தை, 142 அடி வரை உயர்த்துவதற்கு தமிழக அரசின் பொதுப்பணி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.தற்போது அணையின் நீர்மட்டம், 141 அடியை நெருங்கி விட்ட நிலையில், தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள அரசின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.வழக்கம்போல்...: ...

வெள்ள அபாய எச்சரிக்கை: கேரள நாடகம் அம்பலம்

Posted:

கூடலூர்: பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியாக நிலைநிறுத்தப்பட்டிருக்கும் போது 134 அடி வந்தவுடனே கேரளா வெள்ள அபாய எச்சரிக்கை விட்டு கேரள மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வந்தது. தற்போது நீர்மட்டம் 141 அடியை எட்டிய போதிலும் இரண்டு கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடாமல் இருப்பது முன்பு கேரளா நடத்திய நாடகம் என்பது அம்பலமாகியுள்ளதாக என தமிழக விவசாயிகள் கூறியுள்ளனர்.பெரியாறு அணையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு முன் நீர்மட்டம் 136 அடியாக நிலைநிறுத்தப்பட்டிருந்த போது நீர்மட்டம் 136 அடியைக் கடந்தவுடன் அணையை ஒட்டியுள்ள 13 ஷட்டர் வழியாக கேரள பகுதிக்கு தண்ணீர் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™