Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- கோட்டாறு புனித சவேரியார் பேராலயத் திருவிழா: டிச. 3இல் உள்ளூர் விடுமுறை
- பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் பெண்ணின் கருப்பையில் இருந்த 3.5 கிலோ கட்டி அகற்றம்
- தில்லியில் போலீஸாரின் குடியிருப்புகளை ரூ.3.96 கோடியில் பழுதுபார்க்க அனுமதி
- அனுஷ்காவுடன் காதல்: ஒப்புக் கொண்டார் விராட் கோலி
- சென்னையில் நவம்பர் 29, 30-இல் தாவர உணவுத் திருவிழா
- திருட்டு சி.டி. விற்பனை: 55 பேர் கைது
- தமிழகத்துக்கு இழைக்கப்படும் அநீதியை தடுக்காவிட்டால் ஒருமைப்பாடு சீர்குலையும்: வைகோ
- பொது இடங்களுக்கு தனி நபர்களின் பெயர்களை வைக்க மாநகராட்சி திட்டம்
- 25 வீடுகளுக்கு ஒரு தொண்டர் மூலம் பிரசாரம்
- தில்லியில் பெண் கெளரவக் கொலை?
- பாஜக தலைவர்கள் தீவிர ஆலோசனை
- தில்லியில் 5 தமிழக மீனவர்களுக்கு வரவேற்பு
- அரசு ஊழியர்கள் காப்பீட்டுத் திட்டம்: சிகிச்சை பெறும் பட்டியலில் பன்நோக்கு சிறப்பு மருத்துவமனை
- மருத்துவத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி: உலக சுகாதார நிறுவனப் பிரதிநிதி புகழாரம்
- காமராஜர் பெயரைச் சொல்லி ஆட்சி அமைக்க முடியாது
- கடைசி நேரத்தில்கூட திமுகவுடன் கூட்டணி கிடையாது: ராமதாஸ்
- எம்.எல். தேர்வு அட்டவணை: சென்னை பல்கலை. வெளியீடு
- கேரள அரசுக்கு விதித்த தடையை நீக்க பசுமைத் தீர்ப்பாயம் மறுப்பு
- இந்திராகாந்தி பிறந்த நாள் விழா
- வெள்ளிகோடு பள்ளியில் அரசு பல் மருத்துவ முகாம்
- புதிய வாடகைக் கட்டணத்துக்கு எதிர்ப்பு:ஆட்டோ டிரைவர்கள் 27இல் வேலைநிறுத்தம்
- மயிலை பெரியசாமி மறைவு: கருணாநிதி இரங்கல்
- சித்த மருத்துவப் படிப்புகளுக்கு இன்று கலந்தாய்வு
- அம்மா திட்ட முகாம் இன்று நடைபெறும் இடங்கள்
- கல்லூரியில் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி ஏற்பு
- குடும்ப அட்டை முறையை எளிதாக்க மதச்சார்பற்ற ஜனதாதளம் வலியுறுத்தல்
- குமரி மாவட்டத்தில் இடியுடன் பலத்த மழை
- திருவனந்தபுரத்துக்கு அய்யா வைகுண்டர் இன்று பாதயாத்திரை
- மாதவபுரம்கோயிலில் திருஏடு வாசிப்பு
- மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கல்
- மீனவர்கள் விடுதலை: பிரதமருக்கு பாராட்டு
- தொடர் மழை: வாழைக் கன்றுகளில் கருகல் நோய்த் தாக்குதல்
- அரசுப் போக்குவரத்துக் கழக காலிப்பணியிடங்கள்: 6,500 விண்ணப்பங்கள் விநியோகம்
- இந்த நாளில் அன்று இந்த நாளில் அன்று 20.11.1993; ; தேர்தல் நடத்தை விதியை ராவ் மீறினாரா? "தேர்தல் கமிஷன் ஆராயும்' - சேஷன்
- மீனவர்களின் மரண தண்டனை ரத்துமத்திய அரசுக்கு தமிழ் நல எழுத்தாளர் சங்கம் பாராட்டு
- திருவட்டாறு ஒன்றிய திமுக தேர்தல்
- பளுகல் அருகே தேவாலயம் முன் மின்மாற்றி அமைக்க எதிர்ப்பு
- களியக்காவிளையில் பலத்த மழை
- ஆசிரமத்திலிருந்து மாயமான பள்ளி மாணவி சடலமாக மீட்பு
- குமரி மாவட்டத்துக்கு 715 டன் யூரியா உரம் வந்தது
- பாரம்பரிய சித்த வர்ம சிகிச்சை கருத்தரங்கு 25இல் தொடக்கம்
- மின்னல் பாய்ந்து வீடு சேதம்: மின் சாதனப் பொருள்கள் வெடித்துச் சிதறின
- கிள்ளியூர் தி.மு.க. ஒன்றியச் செயலர் தேர்வு
- வல்லன்குமாரவிளையில் 27இல் மாவட்ட ஹாக்கி போட்டி
- காலிப்பணியிடங்களில் முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தல்
- நீர்நிலைகள்: அன்றும் இன்றும்
- நல்ல பிள்ளைகளே நல்ல பிரஜைகள்!
- பிரதமரின் ஃபிஜி விஜயம்!
- விதைப் பண்ணைகள் மூலம் கூடுதல் மகசூல்
- மாணவர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி
- திண்டுக்கல்லில் போலீஸாரை கண்டித்து தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்
- புலி நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறைக்கு கோரிக்கை
- மலைச்சாலையில் 250 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து 3 பேர் காயம்
- பேரணி செல்ல முயன்ற 1000 பேர் மீதான வழக்கு ரத்து
- ரேஷன் அரிசி கடத்திய மூவர் கைது: இரு ஜீப்புகள் பறிமுதல்
- வாகனத்துடன் கண்மாயில் விழுந்த இளைஞர் சாவு
- முல்லைப் பெரியாறு: தமிழகம் - கேரள அரசுகளுடன் உமா பாரதி நாளை பேச்சு
- தேவர்குளம் கிராமம் எம்.பி. தத்தெடுப்பு
- சிவகாசியில் குழந்தைகள் தினவிழா
- வத்திராயிருப்பில் 4 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது
- கலசலிங்கம் பல்கலை.யில் மாநில கைப்பந்துப் போட்டி
- பருப்பு கொள்முதல் விவகாரம்: ராமதாஸ் மீது மான நஷ்ட வழக்கு: அமைச்சர் காமராஜ்
- பைக்-பேருந்து மோதல்:இளைஞர் சாவு
- நவம்பர் 22 மின் தடை
- நவம்பர் 21 மின் தடை
- பிளஸ் 2 தேர்வில் சிவகங்கை மாவட்டம் முன்னேற்றம் கண்டு வருகிறது
- எஸ். புதூர் ஒன்றிய திமுக செயலர் தேர்தல்
- பள்ளியில் தேசிய ஒருமைப்பாட்டு தினவிழா
- காப்பீட்டுச் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறாவிடில் வேலைநிறுத்தம்: இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் அறிவிப்பு
- காலிப் பணியிடங்களுக்கு பதிவு மூப்புப் பரிந்துரை
- உள்ளாட்சி அமைப்புகளில் ஊழல், முறைகேடு: புகார்களை விசாரிக்கத் தனி அதிகாரி
- ஜி.கே. வாசன் ஆதரவு தலைவர்கள் தில்லியில் முகாம்
- நாடு திரும்பினார் நரேந்திர மோடி: பாஜகவினர் உற்சாக வரவேற்பு
- ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உரிய பிரதிநிதித்துவம் தேவை: இந்தியா வலியுறுத்தல்
- தங்கம்: பவுனுக்கு ரூ.168 குறைவு
- நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை: பிசானப் பருவ சாகுபடிப் பணிகள் தீவிரம்
- 6 மணி நேரத்தில் 25 ஓவியங்கள்: மாற்றுத் திறனாளி மாணவர் சாதனை
- வைகை அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறப்பு
- 2015: 24 அரசு விடுமுறை தினங்கள்
- ஒடிஸாவில் முதலீட்டாளர் நலன் காக்க ரூ.300 கோடி தொகுப்பு நிதி
- மாணவர்களின் புத்தாக்கத் திறனை ஊக்குவிக்கத் திட்டம்: ஸ்மிருதி இரானி
- மேற்கு வங்கத்தில் இரு இடங்களில் குண்டு வெடிப்பு: 3 பேர் காயம்
- சிபிஐ இயக்குநரை நீக்க ஆம் ஆத்மி வலியுறுத்தல்
- தகவல் உரிமைச் சட்ட வரம்புக்குள் வர மறுக்கும் அரசியல் கட்சிகள்: புகார் மனு மீது இன்று விசாரணை
- வாராக் கடன் அதிகரிப்பு: வங்கிகளுடன் ஜேட்லி ஆலோசனை
- சாரதா நிதி நிறுவன மோசடி: 3 இடங்களில் சிபிஐ சோதனை
- தேவிபட்டினம் கடலில் புனிதநீராட கட்டணம் வசூலிக்கக் கூடாது: மாவட்ட ஆட்சியரிடம் மனு
- நவம்பர் 22 மின் தடை
- கமுதியில் நாளை இலவச பொது மருத்துவ முகாம்
- கம்பம் நகராட்சி ஆணையருடன், எம்.எல்.ஏ. வாக்குவாதம்: தொகுதி வளர்ச்சி நிதியை பயன்படுத்தாதது குறித்து கேள்வி
- தேனியில் நூலக வார விழா
- காஷ்மீர் தேர்தல்: மனு தாக்கல் செய்தார் ஒமர்
- சின்னமனூர் பகுதியில் கம்பு விளைச்சல் அமோகம்
- ஆண்டிபட்டியில் காய்கறி விலை குறைவு: பொதுமக்கள் மகிழ்ச்சி
- தேனியில் மீன் விற்பனை நிலையம் திறப்பு
- கட்சி வளர்ச்சிப் பணி: தேனியில் இன்று மு.க.ஸ்டாலின் ஆய்வு
- மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர் கைது
- மதுபானக் கடையை மூடக் கோரி பெண்கள் முற்றுகைப் போராட்டம்
- பொறுப்பேற்பு
- தனியார் நிதி நிறுவன முதலீட்டாளர்கள் சாலை மறியல்
| கோட்டாறு புனித சவேரியார் பேராலயத் திருவிழா: டிச. 3இல் உள்ளூர் விடுமுறை Posted: 20 Nov 2014 01:23 PM PST நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலயப் பெருவிழாவையொட்டி டிச. 3ஆம் தேதி குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
| பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் பெண்ணின் கருப்பையில் இருந்த 3.5 கிலோ கட்டி அகற்றம் Posted: 20 Nov 2014 01:23 PM PST பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் பெண்ணின் கருப்பையில் இருந்த 3.5 கிலோ கட்டி, அறுவை சிகிச்சை மூலம் புதன்கிழமை அகற்றப்பட்டது. |
| தில்லியில் போலீஸாரின் குடியிருப்புகளை ரூ.3.96 கோடியில் பழுதுபார்க்க அனுமதி Posted: 20 Nov 2014 01:23 PM PST "தில்லியில் காவல் துறையினர் வசிக்கும் 106 குடியிருப்புகளை ரூ.3.96 கோடி செலவில் பழுதுபார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது' என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் மாநகர காவல்துறை தகவல் தெரிவித்தது. |
| அனுஷ்காவுடன் காதல்: ஒப்புக் கொண்டார் விராட் கோலி Posted: 20 Nov 2014 01:18 PM PST பாலிவுட் நடிகை அனுஷ்காவுடன் காதல் இருப்பதை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஒப்புக் கொண்டார். எனினும், "இது எங்கள் தனிப்பட்ட வாழ்க்கை. இதை மற்றவர்கள் மதிக்க வேண்டும்' என்றும் தெரிவித்துள்ளார். |
| சென்னையில் நவம்பர் 29, 30-இல் தாவர உணவுத் திருவிழா Posted: 20 Nov 2014 01:14 PM PST தாவர உணவுத் திருவிழா சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வருகிற 29,30 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது என சர்வதேசத் தாவர உணவு சங்கமத்தின் தலைவர் ப.முத்துக்குமாரசுவாமி தெரிவித்தார். |
| திருட்டு சி.டி. விற்பனை: 55 பேர் கைது Posted: 20 Nov 2014 01:14 PM PST சென்னையில் திருட்டு சி.டி. விற்றதாக 55 பேர் கைது செய்யப்பட்டனர். |
| தமிழகத்துக்கு இழைக்கப்படும் அநீதியை தடுக்காவிட்டால் ஒருமைப்பாடு சீர்குலையும்: வைகோ Posted: 20 Nov 2014 01:07 PM PST தமிழகத்துக்கு இழைக்கப்படும் அநீதியை மத்திய அரசு தடுக்காவிட்டால், இந்திய ஒருமைப்பாடு சீர்குலையும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார். |
| பொது இடங்களுக்கு தனி நபர்களின் பெயர்களை வைக்க மாநகராட்சி திட்டம் Posted: 20 Nov 2014 01:06 PM PST தில்லி மாநகராட்சிகளின் வருவாயை அதிகரிக்க பூங்காக்கள், பள்ளிகள், சமுதாய மையங்கள், மருத்தவமனைகள் போன்ற பொது இடங்களுக்கு ஒரு தனிநபரின் பெயரை வைக்க வடக்கு தில்லி மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. |
| 25 வீடுகளுக்கு ஒரு தொண்டர் மூலம் பிரசாரம் Posted: 20 Nov 2014 01:06 PM PST தில்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, வீடுகள்தோறும் கட்சித் தொண்டர்களை அனுப்பி பிரசாரத்தில் ஈடுபடச் செய்யும் உத்தியை ஆம் ஆத்மி கட்சி வகுத்துள்ளது. அதன்படி, 25 வீடுகளுக்கு ஒரு தொண்டர் வீதம் 1 லட்சத்து 10 ஆயிரம் தொண்டர்களை இந்த பிரசாரப் பணியில் ஈடுபடுத்த கட்சித் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். |
| Posted: 20 Nov 2014 01:06 PM PST கலப்புத் திருமணம் செய்து கொண்ட 21 வயதுப் பெண்ணை அவரது பெற்றோரே கெüரவக் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். |
| Posted: 20 Nov 2014 01:06 PM PST தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பிரசார பணிகள் தொடர்பாக பாஜக தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். வீடு, வீடாகப் பிரசாரம் மேற்கொள்ளும் பணியையும் மேற்கொண்டுள்ளனர். |
| தில்லியில் 5 தமிழக மீனவர்களுக்கு வரவேற்பு Posted: 20 Nov 2014 01:06 PM PST இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் இந்தியாவின் ,அழுத்தத்தை தொடர்ந்து பொது மன்னிப்பு அளிக்கப்பட்ட ஐந்து தமிழக மீனவர்கள் எமர்சன், பி. அகஸ்டஸ், ஆர். வில்சன், கே. பிரசாத், ஜே. லாங்லெட் ஆகியோர் வியாழக்கிழமை மாலையில் தில்லி திரும்பினர். கொழும்பு விமான |
| அரசு ஊழியர்கள் காப்பீட்டுத் திட்டம்: சிகிச்சை பெறும் பட்டியலில் பன்நோக்கு சிறப்பு மருத்துவமனை Posted: 20 Nov 2014 01:05 PM PST காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தமிழக அரசு ஊழியர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளின் பட்டியலில் பன்நோக்கு நவீன சிறப்பு மருத்துவமனையும் இடம்பெற்றுள்ளது. தனியார் மருத்துவமனைகளின் பட்டியலுடன் இந்த மருத்துவமனையும் இணைக்கப்பட்டுள்ளது. |
| மருத்துவத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி: உலக சுகாதார நிறுவனப் பிரதிநிதி புகழாரம் Posted: 20 Nov 2014 01:05 PM PST இலவச மருந்துகளை வழங்குவதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாகவும் எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது என உலக சுகாதார நிறுவனத்தின் இந்தியப் பிரதிநிதி டாக்டர் நடா மெனாப்டே கூறினார். |
| காமராஜர் பெயரைச் சொல்லி ஆட்சி அமைக்க முடியாது Posted: 20 Nov 2014 01:04 PM PST காமராஜர் பெயரைச் சொல்லி ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாது என காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசியதால், இளைஞர் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் கடும் அமளி ஏற்பட்டது. |
| கடைசி நேரத்தில்கூட திமுகவுடன் கூட்டணி கிடையாது: ராமதாஸ் Posted: 20 Nov 2014 01:01 PM PST வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கடைசி நேரத்தில்கூட திமுகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். |
| எம்.எல். தேர்வு அட்டவணை: சென்னை பல்கலை. வெளியீடு Posted: 20 Nov 2014 12:59 PM PST எம்.எல். சட்ட மேற்படிப்புக்கான 2014 டிசம்பர் தேர்வுக் கால அட்டவணையை சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. |
| கேரள அரசுக்கு விதித்த தடையை நீக்க பசுமைத் தீர்ப்பாயம் மறுப்பு Posted: 20 Nov 2014 12:58 PM PST முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கேரள அரசு கட்டி வரும் வாகன நிறுத்துமிடத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் (தெற்கு மண்டலம்) மறுப்புத் தெரிவித்தது. |
| இந்திராகாந்தி பிறந்த நாள் விழா Posted: 20 Nov 2014 12:31 PM PST அகஸ்தீசுவரம் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. |
| வெள்ளிகோடு பள்ளியில் அரசு பல் மருத்துவ முகாம் Posted: 20 Nov 2014 12:31 PM PST வெள்ளிகோடு ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் அரசு பல் மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமை, தக்கலை சரக தொடக்க கல்வி அலுவலர் சேம்ராஜ் தொடங்கி வைத்தார். |
| புதிய வாடகைக் கட்டணத்துக்கு எதிர்ப்பு:ஆட்டோ டிரைவர்கள் 27இல் வேலைநிறுத்தம் Posted: 20 Nov 2014 12:31 PM PST ஆட்டோவுக்கான புதிய வாடகைக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நவம்பர் 27ஆம் தேதி, ஒரு நாள் ஆட்டோக்கள் ஓடாது என தொழிற்சங்க கூட்டமைப்பினர் |
| மயிலை பெரியசாமி மறைவு: கருணாநிதி இரங்கல் Posted: 20 Nov 2014 12:31 PM PST காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் மயிலை பெரியசாமி மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். |
| சித்த மருத்துவப் படிப்புகளுக்கு இன்று கலந்தாய்வு Posted: 20 Nov 2014 12:30 PM PST சித்த மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு சென்னையில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 12) நடைபெறவுள்ளது. |
| அம்மா திட்ட முகாம் இன்று நடைபெறும் இடங்கள் Posted: 20 Nov 2014 12:30 PM PST குமரி மாவட்டத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ. 21) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. |
| கல்லூரியில் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி ஏற்பு Posted: 20 Nov 2014 12:30 PM PST நாகர்கோவிலில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி ஏற்கப்பட்டது. |
| குடும்ப அட்டை முறையை எளிதாக்க மதச்சார்பற்ற ஜனதாதளம் வலியுறுத்தல் Posted: 20 Nov 2014 12:29 PM PST குடும்ப அட்டை வழங்கப்படும் முறையில் கொண்டு வந்துள்ள மாற்றத்தை ரத்துசெய்து மக்களுக்கு எளிதாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதச்சார்பற்ற ஜனதாதளம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| குமரி மாவட்டத்தில் இடியுடன் பலத்த மழை Posted: 20 Nov 2014 12:29 PM PST குமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை இடியுடன் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் ஒரு வாரமாக மிதமான மழை மற்றும் தூறல் நீடித்து வந்தது. அவ்வப்போது வெயிலும் |
| திருவனந்தபுரத்துக்கு அய்யா வைகுண்டர் இன்று பாதயாத்திரை Posted: 20 Nov 2014 12:29 PM PST சாமிதோப்பு அன்புவனத்தில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி 177 ஆவது ஆண்டு அய்யா வைகுண்டர் பாதயாத்திரை வெள்ளிக்கிழமை (நவ. 21) தொடங்குகிறது. |
| மாதவபுரம்கோயிலில் திருஏடு வாசிப்பு Posted: 20 Nov 2014 12:28 PM PST மாதவபுரம் ஸ்ரீமன் நாராயணசுவாமி கோயிலில் திருஏடு வாசிப்பு திருவிழா வெள்ளிக்கிழமை (நவ. 21) தொடங்கி, டிசம்பர் 7 ஆம் தேதிவரை நடைபெறுகிறது. |
| மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கல் Posted: 20 Nov 2014 12:28 PM PST களியக்காவிளை அருகே மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவர்களுக்கு நடிகர் விஜய் நற்பணி மன்றம் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது. |
| மீனவர்கள் விடுதலை: பிரதமருக்கு பாராட்டு Posted: 20 Nov 2014 12:28 PM PST தமிழக மீனவர்கள் 5 பேர் விடுதலை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்ததற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் பாராட்டுத் தெரிவித்தனர். |
| தொடர் மழை: வாழைக் கன்றுகளில் கருகல் நோய்த் தாக்குதல் Posted: 20 Nov 2014 12:28 PM PST குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வாழைக் கன்றுகளில் கருகல் நோய்த் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால், வாழை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் வாழைப் பயிர் நடவு முக்கிய சாகுபடிகளில் ஒன்றாகும். இந்த மாவட்டத் |
| அரசுப் போக்குவரத்துக் கழக காலிப்பணியிடங்கள்: 6,500 விண்ணப்பங்கள் விநியோகம் Posted: 20 Nov 2014 12:28 PM PST அரசுப் போக்குவரத்துக் கழகம், நாகர்கோவில் மண்டலத்தில் காலிப்பணியிடங்களுக்கு 6,500 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. |
| Posted: 20 Nov 2014 12:27 PM PST அனந்தப்பூர், நவ.20- சர்க்கரை ஆலைகளுக்கு லைசென்ஸ் வழங்குவது குறித்து தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரசிம்ம ராவ் பேசியது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதா என்பது குறித்து தேர்தல் கமிஷன் ஆராயும் என்று தலைமைத் தேர்தல் கமிஷனர் டி.என். சேஷன் தெரிவித்தார். |
| மீனவர்களின் மரண தண்டனை ரத்துமத்திய அரசுக்கு தமிழ் நல எழுத்தாளர் சங்கம் பாராட்டு Posted: 20 Nov 2014 12:27 PM PST தமிழக மீனவர்களின் மரண தண்டனையை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொண்ட மத்திய அரசுக்கு குமரி மாவட்டத் தமிழ் நல எழுத்தாளர் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது. |
| திருவட்டாறு ஒன்றிய திமுக தேர்தல் Posted: 20 Nov 2014 12:27 PM PST திருவட்டாறு ஒன்றிய திமுக உள்கட்சித் தேர்தல் அழகியமண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. தேர்தலில் பே. ராஜேந்திரன் மற்றும் நெல்சன் தலைமையில் இரு அணிகள் போட்டியிட்டன. இதில், |
| பளுகல் அருகே தேவாலயம் முன் மின்மாற்றி அமைக்க எதிர்ப்பு Posted: 20 Nov 2014 12:27 PM PST பளுகல் அருகே கிறிஸ்தவ தேவாலயம் முன் மின்மாற்றி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. |
| Posted: 20 Nov 2014 12:26 PM PST களியக்காவிளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலையில் தொடங்கி இரவுவரை சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. |
| ஆசிரமத்திலிருந்து மாயமான பள்ளி மாணவி சடலமாக மீட்பு Posted: 20 Nov 2014 12:26 PM PST ஆரல்வாய்மொழி ஆசிரமத்தில் இருந்து மாயமான பள்ளி மாணவி, அப்பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக வியாழக்கிழமை மீட்கப்பட்டார். |
| குமரி மாவட்டத்துக்கு 715 டன் யூரியா உரம் வந்தது Posted: 20 Nov 2014 12:26 PM PST குமரி மாவட்டத்தில் நிலவிவரும் உரத் தட்டுப்பாட்டை போக்க 715 டன் யூரியா உரம் வியாழக்கிழமை நாகர்கோவிலுக்கு வந்தது. |
| பாரம்பரிய சித்த வர்ம சிகிச்சை கருத்தரங்கு 25இல் தொடக்கம் Posted: 20 Nov 2014 12:25 PM PST கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் பாரம்பரிய சித்த வர்ம சிகிச்சை கருத்தரங்கு மற்றும் மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை (நவ. 25) தொடங்குகிறது. |
| மின்னல் பாய்ந்து வீடு சேதம்: மின் சாதனப் பொருள்கள் வெடித்துச் சிதறின Posted: 20 Nov 2014 12:25 PM PST அருமனை அருகே வியாழக்கிழமை மின்னல் பாய்ந்து தொழிலாளியின் வீடு சேதமடைந்ததோடு, வீட்டிலுள்ள மின்சாதனப் பொருள்கள் வெடித்துச் சிதறின. |
| கிள்ளியூர் தி.மு.க. ஒன்றியச் செயலர் தேர்வு Posted: 20 Nov 2014 12:25 PM PST கிள்ளியூர் ஒன்றிய தி.மு.க. தேர்தல் கருங்கலில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஒன்றியச் செயலராக மனோதங்கராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். |
| வல்லன்குமாரவிளையில் 27இல் மாவட்ட ஹாக்கி போட்டி Posted: 20 Nov 2014 12:25 PM PST மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டி வல்லன்குமாரவிளையில் நவம்பர் 27ஆம் தேதி நடைபெறுகிறது. |
| காலிப்பணியிடங்களில் முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தல் Posted: 20 Nov 2014 12:25 PM PST பதவி உயர்வால் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களில் முதுநிலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| Posted: 20 Nov 2014 12:24 PM PST நீரின்றி அமையாது உலகு' என்பது அற நூல். காடு கொன்று நாடாக்கி, குளந்தொட்டு வளம் பெருக்கியவர்கள் தமிழர்கள். இந்தியாவிலேயே மழை நீரைத் தேக்கி வைத்து நீர்ப்பாசனத்திற்காக அதிக நீர்நிலைகளை ஏற்படுத்தியவன் தமிழன். |
| Posted: 20 Nov 2014 12:23 PM PST நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வெளிநாடுகளுடனான நமது உறவு, நமது நாட்டின் தூய்மை எனப் பல அம்சங்களிலும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு பல நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த முயற்சிகள் பலனளிக்குமா அல்லது தோல்வியைத் தழுவுமா என விவாதங்கள் உருவாகியுள்ளன. |
| Posted: 20 Nov 2014 12:22 PM PST மியான்மர், ஆஸ்திரேலியா, ஃபிஜித் தீவுகள் ஆகிய மூன்று நாடுகளுக்குமான தனது ஒன்பது நாள் அரசு முறைப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைநகர் தில்லிக்குத் திரும்பி இருக்கிறார். |
| விதைப் பண்ணைகள் மூலம் கூடுதல் மகசூல் Posted: 20 Nov 2014 12:17 PM PST விதைப்பண்ணைகள் அமைப்பதன் மூலம், விவசாயிகள் கூடுதல் மகசூல் பெறலாம் என விதைச்சான்று இயக்குநர் ராதாகிருஷ்ணன் புதன்கிழமை தெரிவித்தார். |
| மாணவர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி Posted: 20 Nov 2014 12:17 PM PST விபத்தில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சத்துக்கான காப்பீட்டுத் தொகையை காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக துணைவேந்தர் சு.நடராஜன் வியாழக்கிழமை வழங்கினார். |
| திண்டுக்கல்லில் போலீஸாரை கண்டித்து தமுமுகவினர் ஆர்ப்பாட்டம் Posted: 20 Nov 2014 12:17 PM PST போலீஸாரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கடைகளை அடைத்து, தமுமுகவினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| புலி நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறைக்கு கோரிக்கை Posted: 20 Nov 2014 12:16 PM PST பழனி அருகே பொருந்தல் பகுதியில் புலி நடமாட்டத்தை கண்காணிக்குமாறு வனத்துறைக்கு கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| மலைச்சாலையில் 250 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து 3 பேர் காயம் Posted: 20 Nov 2014 12:16 PM PST உருளைக்கிழங்கு ஏற்றிச் சென்ற லாரி கொடைக்கானல்-பழனி மலைச்சாலையில் 250 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்ததில் 3 பேர் காயமடைந்தனர். |
| பேரணி செல்ல முயன்ற 1000 பேர் மீதான வழக்கு ரத்து Posted: 20 Nov 2014 12:16 PM PST ராமநாதபுரத்தில் பேரணி சென்றதாக ஆயிரம் பேர் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| ரேஷன் அரிசி கடத்திய மூவர் கைது: இரு ஜீப்புகள் பறிமுதல் Posted: 20 Nov 2014 12:16 PM PST போடி மெட்டு வழியாக புதன்கிழமை கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற மூவரை போலீஸார் கைது செய்தனர். உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் குமரேசன் மற்றும் பறக்கும் படை |
| வாகனத்துடன் கண்மாயில் விழுந்த இளைஞர் சாவு Posted: 20 Nov 2014 12:15 PM PST பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் கண்மாயில் விழுந்து உயிரிழந்தார். பெரியகுளம் அருகே உள்ள மேல எண்டப்புளி கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் |
| முல்லைப் பெரியாறு: தமிழகம் - கேரள அரசுகளுடன் உமா பாரதி நாளை பேச்சு Posted: 20 Nov 2014 12:15 PM PST முல்லைப் பெரியாறு விவகாரத்தில் சுமுகத் தீர்வு காணும் முயற்சியாக தமிழகம், கேரளம் ஆகிய மாநில அரசுகளின் பிரதிநிதிகளுடன் மத்திய நீர் வளத் துறை அமைச்சர் உமா பாரதி சனிக்கிழமை (நவம்பர் 22) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். |
| தேவர்குளம் கிராமம் எம்.பி. தத்தெடுப்பு Posted: 20 Nov 2014 12:15 PM PST சிவகாசி வட்டம் தேவர்குளம் கிராமத்தை விருதுநகர் தொகுதி மக்களவை உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன் மத்திய அரசின் உத்திரவின் பேரில் தத்தெடுத்துள்ளார். |
| சிவகாசியில் குழந்தைகள் தினவிழா Posted: 20 Nov 2014 12:15 PM PST சிவகாசி ஆர்ட்ஸ் கிளப் சார்பில் குழந்தைகள் தினவிழா நடைபெற்றது. இதில் தொடக்கமாக சமாதானப் புறாக்கள் பறக்க விடப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு தொழிலதிபர் எஸ்.கே.டி. ரத்தினம் தலைமை |
| வத்திராயிருப்பில் 4 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது Posted: 20 Nov 2014 12:15 PM PST விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பில் வியாழக்கிழமை குற்றப் புலனாய்வு போலீஸார் திடீர் சோதனை நடத்தியபோது, ஒருவரைக் கைது செய்து அவரது வீட்டிலிருந்த 4 கிலோ கஞ்சா |
| கலசலிங்கம் பல்கலை.யில் மாநில கைப்பந்துப் போட்டி Posted: 20 Nov 2014 12:14 PM PST கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மாநில அளவில் பள்ளிகளுக்கிடையிலான கைப்பந்துப் போட்டிகள் நடைபெற்றன. |
| பருப்பு கொள்முதல் விவகாரம்: ராமதாஸ் மீது மான நஷ்ட வழக்கு: அமைச்சர் காமராஜ் Posted: 20 Nov 2014 12:14 PM PST நியாய விலைக் கடைகளில் விநியோகம் செய்யப்படும் பருப்பு வகைகளை கொள்முதல் செய்வதில் முறைகேடு நடைபெறுவதாக உண்மைக்கு மாறான தகவல்களைத் தெரிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ் மீது மான நஷ்ட வழக்குத் தொடரப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார். |
| பைக்-பேருந்து மோதல்:இளைஞர் சாவு Posted: 20 Nov 2014 12:14 PM PST அருப்புக்கோட்டை-திருச்சுழி சாலையில் மோட்டார் சைக்கிள் மீது தனியார் பேருந்து மோதியதில் இளைஞர் உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் அருப்புக்கோட்டை அரசு |
| Posted: 20 Nov 2014 12:14 PM PST விருதுநகர் மின் கோட்டத்தைச் சேர்ந்த துலுக்கப்பட்டி, சூலக்கரை துணை மின் நிலையங்களில் நவம்பர் 22ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் கிராமங்களில் மின்தடை செய்யப்பட இருப்பதாக பொறியாளர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார். |
| Posted: 20 Nov 2014 12:13 PM PST ராஜபாளையம் முடங்கியார், சேத்தூர் உப மின்நிலையங்களில் (நவ. 21) வெள்ளிக்கிழமை மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. |
| பிளஸ் 2 தேர்வில் சிவகங்கை மாவட்டம் முன்னேற்றம் கண்டு வருகிறது Posted: 20 Nov 2014 12:13 PM PST பிளஸ் 2 தேர்வில் சிவகங்கை மாவட்டம் முன்னேற்றம் கண்டு வருகிறது என்று வியாழக்கிழமை சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் தெரிவித்தார். |
| எஸ். புதூர் ஒன்றிய திமுக செயலர் தேர்தல் Posted: 20 Nov 2014 12:13 PM PST சிவகங்கை மாவட்டம் எஸ். புதூர் ஒன்றிய திமுக செயலரை தேர்வு செய்வதற்கான தேர்தல் சிங்கம்புணரி அண்ணா மன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| பள்ளியில் தேசிய ஒருமைப்பாட்டு தினவிழா Posted: 20 Nov 2014 12:12 PM PST சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி ஆர்.எம். மெய்யப்பச் செட்டியார் மெட்ரிக். பள்ளியில் இந்திரா காந்தியின் 97ஆவது பிறந்தநாள் விழா தேசிய ஒருமைப்பாட்டு தினவிழாவாகக் கொண்டாடப்பட்டது. |
| Posted: 20 Nov 2014 12:12 PM PST காப்பீட்டுச் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெறாவிட்டால் நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. |
| காலிப் பணியிடங்களுக்கு பதிவு மூப்புப் பரிந்துரை Posted: 20 Nov 2014 12:12 PM PST தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு, ஆவின் நிறுவனம் மற்றும் அரசு தானியங்கி பணிமனை ஆகியவைகளில் காலிப் பணியிடங்களுக்கு சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தால் பதிவு மூப்புப் பரிந்துரை செய்யப்படவுள்ளது. |
| உள்ளாட்சி அமைப்புகளில் ஊழல், முறைகேடு: புகார்களை விசாரிக்கத் தனி அதிகாரி Posted: 20 Nov 2014 12:12 PM PST தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறும் முறைகேடுகள், ஊழல் புகார்களை விசாரிப்பதற்கு முதன்மைச் செயலாளர் நிலையிலான விசாரணை அதிகாரியை நியமிப்பதற்கான அவசரச் சட்டத்தை தமிழக ஆளுநர் கே.ரோசய்யா பிறப்பித்தார். அவசரச் சட்டம் என்பதால், அது உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. |
| ஜி.கே. வாசன் ஆதரவு தலைவர்கள் தில்லியில் முகாம் Posted: 20 Nov 2014 12:11 PM PST முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் புதிதாகத் தொடங்கும் கட்சியின் பெயரைப் பதிவு செய்வதற்கான பணிகளில் ஈடுபடுவதற்காக அவரது ஆதரவாளர்களான பி.எஸ். ஞானதேசிகன், எஸ்.கே. கார்வேந்தன், வேலூர் ஞானசேகரன் ஆகியோர் தில்லியில் முகாமிட்டுள்ளனர். |
| நாடு திரும்பினார் நரேந்திர மோடி: பாஜகவினர் உற்சாக வரவேற்பு Posted: 20 Nov 2014 12:10 PM PST மியான்மர், ஆஸ்திரேலியா, ஃபிஜி ஆகிய நாடுகளில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை நாடு திரும்பினார். |
| ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உரிய பிரதிநிதித்துவம் தேவை: இந்தியா வலியுறுத்தல் Posted: 20 Nov 2014 12:08 PM PST ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சர்வதேச சமூகத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காவிட்டால், அதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி விடும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. |
| தங்கம்: பவுனுக்கு ரூ.168 குறைவு Posted: 20 Nov 2014 12:00 PM PST ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.168 குறைந்தது. |
| நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை: பிசானப் பருவ சாகுபடிப் பணிகள் தீவிரம் Posted: 20 Nov 2014 11:59 AM PST திருநெல்வேலி மாவட்டத்தில் வட கிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்துவரும் நிலையில், பிசானப் பருவ சாகுபடிப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. |
| 6 மணி நேரத்தில் 25 ஓவியங்கள்: மாற்றுத் திறனாளி மாணவர் சாதனை Posted: 20 Nov 2014 11:58 AM PST பழனி அருகே, இரண்டே முக்கால் அடி உயரமும், சுமார் 5 கிலோ எடையும் உள்ள 11 வயது மாற்றுத் திறனாளி மாணவர் 6 மணி நேரத்தில் 25 ஓவியங்களை வரைந்து சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார் |
| வைகை அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறப்பு Posted: 20 Nov 2014 11:54 AM PST வைகை அணையில் இருந்து வெள்ளிக்கிழமை முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். |
| 2015: 24 அரசு விடுமுறை தினங்கள் Posted: 20 Nov 2014 11:53 AM PST அடுத்த ஆண்டில் (2015) 24 தினங்கள், அரசு விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக, ஜனவரி 14-ஆம் தேதி கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையானது, அடுத்த ஆண்டில் ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மேலும், இஸ்லாமியர்களின் மிலாதுநபி பண்டிகை இரண்டு முறை வருகிறது. |
| ஒடிஸாவில் முதலீட்டாளர் நலன் காக்க ரூ.300 கோடி தொகுப்பு நிதி Posted: 20 Nov 2014 11:47 AM PST சீட்டு நிதி மோசடி குறித்த எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு அதிகரித்து வரும் நிலையில் முதலீட்டாளர்களின் நலன் காக்கும் வகையில் ரூ.300 கோடி தொகுப்பு நிதியை ஒடிஸா அரசு உருவாக்கியுள்ளது. |
| மாணவர்களின் புத்தாக்கத் திறனை ஊக்குவிக்கத் திட்டம்: ஸ்மிருதி இரானி Posted: 20 Nov 2014 11:46 AM PST "மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களின் புத்தாக்கத் திறனை ஊக்குவிக்கும் வகையில், "திங்க் இன் இந்தியா' (இந்தியாவிலேயே திட்டமிடுவோம்) எனும் பிரசாரத்தை தொடங்கத் திட்டமிட்டு வருகிறோம்' என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார். |
| மேற்கு வங்கத்தில் இரு இடங்களில் குண்டு வெடிப்பு: 3 பேர் காயம் Posted: 20 Nov 2014 11:43 AM PST மேற்கு வங்க மாநிலத்தில் இரு இடங்களில் வியாழக்கிழமை நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் 3 பேர் காயமடைந்தனர். |
| சிபிஐ இயக்குநரை நீக்க ஆம் ஆத்மி வலியுறுத்தல் Posted: 20 Nov 2014 11:42 AM PST மத்திய புலானாய்வுத் துறை (சிபிஐ) இயக்குநர் பதவியிலிருந்து ரஞ்சித் சின்ஹாவை உடனடியாக நீக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அந்தக் கட்சி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: |
| தகவல் உரிமைச் சட்ட வரம்புக்குள் வர மறுக்கும் அரசியல் கட்சிகள்: புகார் மனு மீது இன்று விசாரணை Posted: 20 Nov 2014 11:42 AM PST தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் வர அரசியல் கட்சிகள் மறுப்பதாக எழுந்த புகார் குறித்து மத்திய தகவல் ஆணையத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற உள்ளது. |
| வாராக் கடன் அதிகரிப்பு: வங்கிகளுடன் ஜேட்லி ஆலோசனை Posted: 20 Nov 2014 11:41 AM PST வங்கிகளின் வாராக் கடனை வசூலிப்பது குறித்து பொதுத்துறை வங்கித் தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார். |
| சாரதா நிதி நிறுவன மோசடி: 3 இடங்களில் சிபிஐ சோதனை Posted: 20 Nov 2014 11:38 AM PST சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக, கொல்கத்தாவில் உள்ள சாரதா குழுமத்தின் 3 நிறுவனங்களில் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினர். |
| தேவிபட்டினம் கடலில் புனிதநீராட கட்டணம் வசூலிக்கக் கூடாது: மாவட்ட ஆட்சியரிடம் மனு Posted: 20 Nov 2014 11:38 AM PST ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கடலில் புனிதநீராட கட்டணம் வசூலிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் நந்தகுமாரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 20 Nov 2014 11:37 AM PST கமுதி, முதுகுளத்துர், பார்த்திபனூர் ஆகிய ஊர்களில் சனிக்கிழமை (நவ. 22) மின் தடை செய்யப்படுகிறது. |
| கமுதியில் நாளை இலவச பொது மருத்துவ முகாம் Posted: 20 Nov 2014 11:37 AM PST கமுதியில் சனிக்கிழமை (நவ.22) சத்திரிய நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இலவச பொது மருத்துவ முகாம் நடைபெறுகிறது. |
| Posted: 20 Nov 2014 11:36 AM PST கம்பம் சட்டப் பேரவை உறுப்பினர் என்.ராமகிருஷ்ணன் வியாழக்கிழமை, நகராட்சி ஆணையரிடம், தான் ஒதுக்கிய வளர்ச்சி நிதியை பயன்படுத்தாது ஏன் என்று கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. கம்பம் சட்டப் பேரவை உறுப்பினராக என்.ராமகிருஷ்ணன் உள்ளார். இவர் தொகுதி வளர்ச்சி |
| Posted: 20 Nov 2014 11:36 AM PST தேனியில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் நூலக வார விழா நடைபெற்றது. மாவட்ட நூலக அலுவலர் சி.ஆர்.ரவீந்திரன் தலைமை வகித்தார். நூலகர் சு.முத்துக்குமரன் |
| காஷ்மீர் தேர்தல்: மனு தாக்கல் செய்தார் ஒமர் Posted: 20 Nov 2014 11:36 AM PST ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பீர்வா தொகுதியில் போட்டியிடும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான ஒமர் அப்துல்லா, வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தார். |
| சின்னமனூர் பகுதியில் கம்பு விளைச்சல் அமோகம் Posted: 20 Nov 2014 11:36 AM PST சின்னமனூர் பகுதியில் மானாவாரியாக விளைவித்த கம்பு நல்ல விளைச்சல் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். |
| ஆண்டிபட்டியில் காய்கறி விலை குறைவு: பொதுமக்கள் மகிழ்ச்சி Posted: 20 Nov 2014 11:36 AM PST ஆண்டிபட்டி பகுதியில் சபரிமலை சீசன் துவங்கியுள்ள நிலையில் காய்கறிகள் விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். |
| தேனியில் மீன் விற்பனை நிலையம் திறப்பு Posted: 20 Nov 2014 11:35 AM PST தேனி அல்லிநகரத்தில் வியாழக்கிழமை மீன் வளத்துறை சார்பில் மீன் விற்பனை நிலையத்தை ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி திறந்து வைத்தார். |
| கட்சி வளர்ச்சிப் பணி: தேனியில் இன்று மு.க.ஸ்டாலின் ஆய்வு Posted: 20 Nov 2014 11:35 AM PST தேனியில் வெள்ளிக்கிழமை திமுக கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். |
| மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர் கைது Posted: 20 Nov 2014 11:35 AM PST போடியில், மாட்டு வண்டியில் ஆற்று மணல் கடத்தியவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். |
| மதுபானக் கடையை மூடக் கோரி பெண்கள் முற்றுகைப் போராட்டம் Posted: 20 Nov 2014 11:35 AM PST ஆண்டிபட்டி அருகே, மதுபானக்கடையை மூடக்கோரி பெண்கள் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| Posted: 20 Nov 2014 11:34 AM PST தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக ஆர்.மணிவண்ணன் வியாழக்கிழமை பொறுப்பேற்றார். |
| தனியார் நிதி நிறுவன முதலீட்டாளர்கள் சாலை மறியல் Posted: 20 Nov 2014 11:34 AM PST முதிர்வுத் தொகையை தராமல் மோசடியில் ஈடுபட்டு வருவதாக தனியார் நிதி மற்றும் காப்பீட்டு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதில் முதலீடு செய்தவர்கள் சாலை மறியலில் |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |