Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சிட்டிசன் கே - கமலின் சுயசரிதை புத்தகம்

Posted:

களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், அரை நூற்றாண்டுக்கும் மேலான திரையுலக அனுபவம் கொண்டவர் கமல். தற்போதையை திரைப்பட கலைஞர்களில் கமல் அளவுக்கு திரையுலக அனுபவம் வாய்ந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

ரஜினியே கமலுக்குப் பிறகு திரைப்படத்துறைக்கு வந்தவர்தான். ஐம்பது ...

"அவள் அப்படித்தான்" இயக்குநர் ருத்ரைய்யா காலமானார்

Posted:

அவள் அப்படித்தான் இயக்குநர் ருத்ரைய்யா காலமானார். அவருக்கு வயது 67. 1978ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் மாறுபட்ட ஒரு இயக்குனராக நுழைந்தவர் சி.ருத்ரைய்யா. இவரது முதல் படமான "அவள் அப்படித்தான்", முன்னணி நட்சத்திரங்களான கமலஹாசன், ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீபிரியா ஆகியோர் நடித்திருந்தபோதும், அவர்களிடமிருந்து வழமையாக ரசிகர்கள் ...

இந்தியன் பனோரமாவில் தனஞ்செயனின் புத்தகம் வெளியீடு..!

Posted:

தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களை தயாரித்து வரும் பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான யுடிவி நிறுவனத்தின் தென்னிந்திய நிர்வாக தலைவராக இருப்பவர் தனஞ்செயன். திரைப்பட தயாரிப்பாளர் என்பதை தாண்டி, தனஞ்செயன் சினிமாவை நேசிப்பவர். அதுமட்டுமல்ல, சிறந்த திரைப்பட ஆய்வாளர் மற்றும் விமர்சகராகவும் முத்திரை ...

இறுதிச்சுற்று முடிந்தது....மாதவனின் கெட்டப் மாறியது..

Posted:

மாதவன் தமிழில் ஹீரோவாக அறிமுகமானாலும், தமிழைவிட ஹிந்தியில் நடிப்பதில்தான் ஆரம்பத்திலிருந்தே அதிக கவனம் செலுத்தி வருகிறார். 2012 ஆம் வருடத்தில் லிங்குசாமி இயக்கத்தில் வேட்டை படத்தில் நடித்தார். அந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. அதன் காரணமாகவோ என்னவோ வேட்டை படத்துக்குப் பிறகு மாதவன் தமிழ்ப்படங்களில் நடிக்கவே ...

விஜய் படத்துக்காக சென்னையில் ஸ்ரீதேவி...!

Posted:

கடந்த காலங்களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டிப்பறந்த கதாநாயகி நடிகைகளை பட்டியலிட்டால்..அதில் தவிர்க்க முடியாத பெயர் - ஸ்ரீதேவி. எழுபதுகளின் பிற்பகுதியிலும், எண்பதுகளிலும் தமிழ்சினிமாவில் நம்பர் ஒன் கதாநாயகியாக வலம் வந்தவர்.
ரஜினி, கமல் என இரண்டு முன்னணி ஹீரோக்களுடன் ஒரே நேரத்தில் பல படங்களில் ஜோடி சேர்ந்து நடித்த ஸ்ரீதேவி, 28 ...

கப்பல் இசையை வெளியிடும் ஏ.ஆர்.ரஹ்மான், டிரெய்லரை வெளியிடும் விக்ரம்

Posted:

இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்தவர் கார்த்திக் ஜி கிரிஷ். வெங்கட்பிரபுவின் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த வைபவ்வை ஹீரோவாக்கி கப்பல் என்ற படத்தை இவர் இயக்கினார். ஐ ஸ்டுடியோஸ் எண்டர்டெயின்மெண்ட் என்ற படநிறுவனம் இப்படத்தை தயாரித்தது.

கப்பல் படத்தின் ஃபர்ஸ்ட்காப்பி ரெடியானதும், மரியாதை நிமித்தமாக தன்னுடைய குருநாதரான ...

ஹூமாவுக்கு பதில் சுர்வீன் சாவ்லா!

Posted:

அனீஸ் பாஸ்மி இயக்கும் படம் வெல்கம் பேக். இப்படத்தில் ஜான் ஆபிரஹாம் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் ஜான் ஆபிரஹாம் உடன் ஒரு பாட்டுக்கு ஆட ஹூமா குரேசியை கேட்டனர். ஆனால் அவர் அதிகமாக சம்பளம் கேட்டதால் அவரை வேண்டாம் என்று நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக சுர்வீன் சாவ்லா புக்காகியுள்ளார். அதேசமயம் கால்ஷீட் பிரச்னையால் ஹூமா ...

லிங்கா பட பாடல் வரிகள்.....முழுமையாக....

Posted:

ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷிசின்ஹா மற்றும் பலர் நடித்துள்ள 'லிங்கா' படத்தின் பாடல் வரிகள்.

பாடல் - என்மன்னவா...மன்னவா....

எழுதியவர் - வைரமுத்து

பாடியவர்கள்-ஸ்ரீனிவாஸ், அதிதிபவுல்

பெண் :என்மன்னவா! ...

இசையமைப்பாளர் தமனுக்கு கார் பரிசளித்த தியாகராஜன்!

Posted:

மம்பட்டியான் படத்திற்கு பிறகு நடிகர் பிரஷாந்த் நடிப்பில், பிரமாண்டமாய் உருவாகி வரும் படம் சாஹசம். அருண் ராஜ் வர்மா என்ற புதியவர் இயக்குகிறார். பிரஷாந்தின் அப்பா தியாகராஜன் பெரும்பொருட் செலவில் தயாரிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தில் மொத்தம் ஐந்து ...

மீண்டும் நடிக்க வருகிறார் விஷ்ணுவர்தனின் மனைவி பாரதி!

Posted:

கன்னடத்தில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகர் விஷ்ணுவர்தன். தமிழிலும் சில படங்களில் நடித்து இருக்கிறார். இவர் கடந்த 2009ம் ஆண்டு காலமானார். இவரது மனைவி பாரதி. இவரும் நடிகை தான். தமிழில், கட்டபஞ்சாயத்து உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்துள்ளார். மற்ற மொழிகளிலும் சேர்த்து சுமார் 200 படங்களில் நடித்துள்ளார். தற்போது அடிக்கடி சென்னை ...

காமெடி கலந்த வில்லன் ரோலைத்தான் ரசிக்கிறார்கள் - நான் கடவுள் ராஜேந்திரன்

Posted:

பைட்டராக இருந்தவர், பாலாவின், நான் கடவுள் படத்தில் வில்லனாக அறிமுகப்படுத்தப்பட்டவர் ராஜேந்திரன். தொடர்ந்து அவர் நடித்த பல படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தன. சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்துள்ள விலாசம் படத்தில், காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். இது பலராலும் ரசிக்கப்பட்டது.

இதுப்பற்றி அவர் ...

2015ல் தமிழ் சினிமாவில் வீசப்போகும் அழகு புயல்கள் - ஸ்பெஷல் ஸ்டோரி

Posted:

தமிழ் சினிமாவுக்கு கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மும்பை பக்கம் இருந்து ஆண்டுதோறும் அழகுப் புயல்கள் கோடம்பாக்கத்தில் மையம் கொள்ளும். இந்த ஆண்டு அது அதிகமாகவே இருந்தது. கன்னட தேசத்திலிருந்து, குறைந்த அளவே அழகு தேவதைகள் வருவார்கள். இந்த ஆண்டு கன்னடத்திலிருந்துதான் அதிக தேவதைகள் வந்திருக்கிறார்கள். இந்த ஆண்டின் இறுதிப் ...

கல்வி படத்தை கமர்ஷியல் படமாக எடுத்தது ஏன்? அர்ஜுன் விளக்கம்

Posted:

அர்ஜுன் தயாரித்து, இயக்கி நடித்த படம் ஜெய்ஹிந்த் 2. இது கல்வியை அரசுடைமையாக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி ஆக்ஷன் மற்றும் கமர்ஷியல் படமாக உருவானது. தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் ரிலீசானது. படத்தில் இடம்பெற்ற ஆக்ஷன் காட்சிகள் பேசப்படுகிறது. பொதுக் கல்வி என்ற முக்கியமான கருத்தை வலியுறுத்தும் படத்தை ...

அப்பா-மகனாக நடிக்கும் ஆதித்யா-சூரஜ் பஞ்சோலி!

Posted:

ஆதித்யா பஞ்சோலியன் மகன் சூரஜ் பஞ்சோலி என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர் அறிமுகமாகும் முதல்படமான ஹீரோவில் சூரஜ், ஆதித்யாவின் வளர்ப்பு மகனாக நடிக்க இருக்கிறார். ஹீரோ படத்தில் ஆதித்யா, அமைச்சராகவும், சூரஜ் ஆரம்பத்தில் சிறை சென்று பிறகு ஆதித்யாவின் வளர்ப்பு மகனாகவும் நடிக்கிறார்.

1983-ம் ஆண்டு வெளிவந்த ஹீரோ படத்தை ...

இணை இயக்குனரானார் லட்சுமிதேவி

Posted:

பிரபல மலையாள நடிகையான லட்சுமிதேவி மசாலா படம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இதில் மிர்ச்சி சிவா, பாபிசிம்ஹா நடிக்கிறார்கள். வெண்ணிலா கபடி குழு படத்தின் கேமரா மேன் லக்ஷமண் இயக்குகிறார். இதன் முதல்கட்ட படிப்பிடிப்புகள் பாண்டிச்சேரியில் முடிந்து விட்டது. தற்போது இரண்டாம் கட்ட ...

மீண்டும் ஒளிபரப்பாகிறது மகாபாரதம்

Posted:

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பான தொடர் மகாபாரம். தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான புராண தொடர்களில் நம்பர் ஒன் இடத்தை பிடித்ததோடு. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் தொடர்ந்து முன்னணியில் இருந்தது.
சுமார் 20 கோடி ரூபாய் செலவில் 267 எபிசோட்களாக இந்தியில் தயாரிக்கப்பட்ட ...

யான் ஹாலிவுட் படத்தின் காப்பி: தயாரிப்பாளர் அதிர்ச்சி

Posted:

ஜீவா, கார்த்திகா நடித்து சமீபத்தில் வெளியான படம் யான். பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கி இருந்தார். ஆர்.எஸ்.இன்போடைய்ன்மெண்ட் சார்பில் எல்ரட் குமார் தயாரித்திருந்தார். இந்தப் படம் 1978ம் ஆண்டு வெளிவந்த ஹாலிவுட் படமான மிட்நைட் எக்ஸ்பிரஸ் என்ற படத்தின் அப்பட்டமான காப்பி. ஆஸ்கர் விருது பெற்ற பிரபலமான படம் ...

டிசம்பர் 2ல் திரையுலகினர் பிரமாண்ட பேரணி: ஏற்பாடுகள் தீவிரம்

Posted:

திருட்டு விசிடி முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பெருகி விட்டது. திரையுலகமும் அதனை தீவிரமாக எதிர்க்கத் தொடங்கி விட்டது. திரைப்படத்துறையில் உள்ள எல்லா அமைப்புகளும் சேர்ந்து கூட்டமைப்பை ஏற்படுத்தி உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு கூடிய இந்த கூட்டமைப்பில் வருகிற டிசம்பர் 2ந் தேதி திரையுலகினர் கலந்து கொள்ளும் பிரமாண்ட பேரணி ...

இரட்டை வேடத்தில் நடிக்கிறார் ஜாக்குலின்!

Posted:

'கிக்' படத்தின் மூலம் ரசிகர்களை ஈர்த்தவர் ஹாட் அண்ட் செக்ஸி நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ். இவர் அடுத்து ''ராய்'' என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ராய் படத்தில், ஜாக்குலின், இயக்குநர் மற்றும் கலை இயக்குநராக நடிக்க இருப்பதாகவும், இதில் ஜாக்குலின், தியா எனும் கேரக்டரிலும், ஆயிஷா எனும் கேரக்டரில் நடிக்க ...

அடுத்தாண்டு மே மாதத்தில் ரிலீஸாகும் பாம்பே வெல்வெட்!

Posted:

ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா நடிப்பில் உருவாகியுள்ள படம் பாம்பே வெல்வெட். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் நடந்து வருகிறது. இந்தாண்டே ரிலீஸாக இருப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது படத்தின் ரிலீஸ் தேதியை அடுத்தாண்டு மே மாதம் 15ம் தேதிக்கு மாற்றியுள்ளனர்.

இதுகுறித்து படத்தின் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™