மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- நில விற்பனை விவகாரம்: வதேராவுக்கு ரூ.44 கோடி ஆதாயம்- கணக்கு தணிக்கைத்துறை குற்றச்சாட்டு
- டெல்லி மேல்–சபை தேர்தல்: கபில்சிபலுக்கு சமாஜ்வாடி ஆதரவு
- திருப்பதியில் பக்தர்கள் கூட்டம்: ஏழுமலையானை தரிசிக்க 20 மணி நேரம் காத்திருப்பு
- கொலை முயற்சி வழக்கில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது
- பார்களை திறக்க ரூ.5 கோடி லஞ்சம்: அரசியல் சதி குறித்து கேரள மந்திரி மாணி பேட்டி
- பெரியாறு நீர்மட்டத்தை உயர்த்த கேரள அரசு மீண்டும் முட்டுக்கட்டை: தலைமைச் செயலர் திடீர் ஆய்வு
- நேருவின் 125–வது பிறந்த நாள்: கோலாகலமாக கொண்டாட மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்
- குழந்தைகள் மீதான பாலியல் பலாத்கார சம்பவம்: தனியார் பள்ளிகளுக்கு சித்தராமையா எச்சரிக்கை
- பிரதமர் நரேந்திர மோடி நாளை ரேடியோவில் பேசுகிறார்
- இமாச்சலப் பிரதேசத்தில் பாதாளத்தில் பஸ் பாய்ந்து 14 பேர் பலி
- மராட்டியத்தில் தலித்கள் படுகொலை: டி.ஜி.பி. விசாரணைக்கு முதல் மந்திரி பட்னாவிஸ் உத்தரவு
- உமர் அப்துல்லா கட்சி மூழ்கி கொண்டிருக்கும் கப்பல்: பா.ஜனதா
- சிவசேனா பிடிவாதத்தை கைவிட வேண்டும்: ராம் விலாஸ் பஸ்வான்
- கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த 600 அடி நீள கேக்: கேரளாவில் தயாரிக்கப்பட்டது
- தேர்தலில் கட்சிக்கு எதிராக செயல்பட்ட ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் பதவி நீக்கம்
- கர்நாடகத்தில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்யப்பட்ட 14 வயது மாணவி மரணம்
- புயலால் பாதித்த ஆந்திர மாநிலத்திற்கு புனரமைப்புக்கு வி.ஐ.டி. சார்பில் ரூ.1 கோடி நிதி உதவி
- பீகாரில் படகு கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலி: 7 பேர் மாயம்
- மூடப்பட்ட மதுபார்களுக்கு லைசென்ஸ் வழங்க மந்திரிக்கு ரூ. 5 கோடி லஞ்சம்: பார் உரிமையாளர்கள் குற்றச்சாட்டு
- குஜராத்தை மிரட்டிய நிலோபர் புயல் வலு இழந்தது
| நில விற்பனை விவகாரம்: வதேராவுக்கு ரூ.44 கோடி ஆதாயம்- கணக்கு தணிக்கைத்துறை குற்றச்சாட்டு Posted: 01 Nov 2014 10:36 PM PDT காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் (பிரியங்கா கணவர்) ராபர்ட் வதேரா. இவர் பல்வேறு தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான 'ஸ்கைலைட் ஆஸ்பிட்டா லிட்டி' நிறுவனத்துக்கு ஹூடா தலைமையிலான முந்தைய காங்கிரஸ் அரசு சிகோபூர், குர்கான் ஆகிய இடங்களில் 3.5 ஏக்கர் நிலங்களை வணிக குடியிருப்புகள் கட்ட விற்பனை |
| டெல்லி மேல்–சபை தேர்தல்: கபில்சிபலுக்கு சமாஜ்வாடி ஆதரவு Posted: 01 Nov 2014 10:33 PM PDT டெல்லி மேல்–சபைக்கு உத்தரப்பிரதேசத்தில் இருந்து எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் ஆளும் சமாஜ்வாடி கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர். காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி கபில்சிபல் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து டெல்லி மேல்–சபைக்கு போட்டியிட முடிவு செய்துள்ளார். |
| திருப்பதியில் பக்தர்கள் கூட்டம்: ஏழுமலையானை தரிசிக்க 20 மணி நேரம் காத்திருப்பு Posted: 01 Nov 2014 10:32 PM PDT திருப்பதியில் சனிக்கிழமையான நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அலை மோதினார்கள். நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை 31,172 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். |
| கொலை முயற்சி வழக்கில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது Posted: 01 Nov 2014 10:31 PM PDT ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள நந்தியாலா நகரசபை கூட்டம் தலைவர் சுலோச்சனா (தெலுங்கு தேசம்) தலைமையில் நடந்தது. கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பூமாநாகி ரெட்டி எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் நகர பிரச்சினைகள் பற்றி பேசிக் கொண்டு இருந்த போது கூட்டம் முடிந்தததாக தலைவர் சுலோச்சனா அறிவித்தார். |
| பார்களை திறக்க ரூ.5 கோடி லஞ்சம்: அரசியல் சதி குறித்து கேரள மந்திரி மாணி பேட்டி Posted: 01 Nov 2014 10:30 PM PDT கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலா காங்கிரஸ் கூட்டணி அரசு மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த திட்டமிட்டு உள்ளது. 10 ஆண்டுகளில் மதுவில்லா கேரளாவை உருவாக்க போவதாக முதல்–மந்திரி உம்மன் சாண்டி அறிவித்து உள்ளார். அதைத் தொடர்ந்து படிப்படியாக கேரளாவில் உள்ள மது பார்கள் மூடப்பட்டு வருகிறது. |
| பெரியாறு நீர்மட்டத்தை உயர்த்த கேரள அரசு மீண்டும் முட்டுக்கட்டை: தலைமைச் செயலர் திடீர் ஆய்வு Posted: 01 Nov 2014 10:03 PM PDT முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ள சுப்ரீம்கோர்ட்டு கடந்த மே மாதம் 7–ந் தேதி உத்தரவிட்டது. இதனையடுத்து இதற்காக அமைக்கப்பட்ட மூவர் குழுவினர் கடந்த ஜூலை 27–ந் தேதி அணையில் பார்வையிட்டு நீர்மட்டத்தை 142 அடி வரை தேக்கும் வகையில் 13 ஷட்டர்களையும் இறக்கினர். |
| நேருவின் 125–வது பிறந்த நாள்: கோலாகலமாக கொண்டாட மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் Posted: 01 Nov 2014 03:39 PM PDT நாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேருவின் 125–வது பிறந்த நாளை (வரும் 14–ந் தேதி) கோலாகலமாக கொண்டாட முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசில் முடிவு எடுக்கப்பட்டு, விழாக்குழுவும் அமைக்கப்பட்டது. ஆனால் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், பிரதமர் மோடி |
| குழந்தைகள் மீதான பாலியல் பலாத்கார சம்பவம்: தனியார் பள்ளிகளுக்கு சித்தராமையா எச்சரிக்கை Posted: 01 Nov 2014 11:49 AM PDT 'பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என்று கர்நாடக முதல்–மந்திரி சித்தராமையா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். குழந்தைகள் மீதான பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து தனியார் பள்ளிகளுக்கு முதல்–மந்திரி சித்தராமையா கடும் |
| பிரதமர் நரேந்திர மோடி நாளை ரேடியோவில் பேசுகிறார் Posted: 01 Nov 2014 11:04 AM PDT பிரதமர் நரேந்திர மோடி 'மன் கி பாத்' என்ற பெயரில் கடந்த அக்டோபர் 3–ஆம் தேதியன்று ரேடியோ வழியாக முதன் முறையாக உரையாடினார். அப்போது பிரதமர் மோடி, மக்கள் கதர் அணிவதை ஊக்குவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இனி ஒவ்வொரு மாதமும் முதல் |
| இமாச்சலப் பிரதேசத்தில் பாதாளத்தில் பஸ் பாய்ந்து 14 பேர் பலி Posted: 01 Nov 2014 08:28 AM PDT இமாச்சலப் பிரதேசத்தில் ஏராளமான பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் பாதாளத்தில் பாய்ந்த விபத்தில் 14 பேர் பலியாகினர். சம்பா மாவட்டத்தின் சம்பா நகரில் இருந்து ஹிமிக்ரி என்ற பகுதியை நோக்கிச் சென்றபோது, சலூனி என்ற இடத்தின் அருகே மேட்டுப் பாங்கான சாலையின் ஒரு குறுகிய வளைவில் திருப்ப முயற்சிக்கையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் கீழே இருந்த சுமார் 700 மீட்டர் பாதாளத்துக்குள் பாய்ந்தது. |
| மராட்டியத்தில் தலித்கள் படுகொலை: டி.ஜி.பி. விசாரணைக்கு முதல் மந்திரி பட்னாவிஸ் உத்தரவு Posted: 01 Nov 2014 08:10 AM PDT மராட்டிய மாநிலம், அகமத்நகர் மாவட்டத்தில் கடந்த மாதம் 21-ம் தேதி தலித் சமுதாயத்தை சேர்ந்த 3 பேர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். இந்நிலையில், நேற்று மராட்டிய மாநிலத்தின் முதல் மந்திரியாக பொறுப்பேற்றுக் கொண்ட தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. |
| உமர் அப்துல்லா கட்சி மூழ்கி கொண்டிருக்கும் கப்பல்: பா.ஜனதா Posted: 01 Nov 2014 07:36 AM PDT ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நவம்பர் 25-ந்தேதி முதல் டிசம்பர் 20-ந்தேதி வரை 5 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. ஜம்மு- காஷ்மீரில் முதல் முறையாக ஆட்சியை பிடிக்க பாரதீய ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. இதனால் அனைத்து தொகுதியிலும் தனித்து போட்டியிடுகிறது. அதேபோல் உமர் அப்துல்லா ஆட்சியை மீண்டும் கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறார். இதனால் இரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. |
| சிவசேனா பிடிவாதத்தை கைவிட வேண்டும்: ராம் விலாஸ் பஸ்வான் Posted: 01 Nov 2014 06:25 AM PDT மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு தனி மெஜாரிட்டி இல்லாததால் கூட்டணி கட்சியான சிவசேனா ஆதரவு தேவைப்படுகிறது. இரு கட்சிகளும் கடைசி வரை தங்கள் முடிவை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் மராட்டிய முதல்– மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றார். மந்திரி சபையில் 2–ல் 1 பங்கு அதாவது பாதிக்கு |
| கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த 600 அடி நீள கேக்: கேரளாவில் தயாரிக்கப்பட்டது Posted: 01 Nov 2014 05:46 AM PDT கேரள மாநிலம், கோழிக்கோடு அருகாமையில் உள்ள புழக்கல் பகுதியில் கடந்த 30-ம் தேதி முதல் அடுமனையாளர்கள் (பேக்கரி பொருட்கள் தயாரிப்பாளர்கள்) நடத்திய கண்காட்சி நடைபெற்றது. கேரளாவைச் சேர்ந்த பிரபல சுதந்திரப் போராட்ட தியாகிகள், தற்போது உலகிலேயே அதிக வயதான இந்தியப் பெண்மணியாக இருக்கும் 112 வயது |
| தேர்தலில் கட்சிக்கு எதிராக செயல்பட்ட ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் பதவி நீக்கம் Posted: 01 Nov 2014 05:22 AM PDT நாடாளுமன்ற மேல்சபை தேர்தலின்போது ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் 4 பேரை கட்சி கட்டுப்பாட்டை மீறியதற்காக பதவி நீக்கம் செய்து இன்று சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். பீகார் மாநிலத்தில் கடந்த ஜுன் மாதம் இரண்டு மேல்சபை எம்.பி.க்கான தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் துணையுடன் ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்த பவான் வர்மா மற்றும் குலாம் ரசூல் பல்யாவி ஆகியோர் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். |
| கர்நாடகத்தில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்யப்பட்ட 14 வயது மாணவி மரணம் Posted: 01 Nov 2014 05:16 AM PDT கர்நாடக மாநிலம், ஷிமோகா மாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளி பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி அங்குள்ள பள்ளியொன்றில் எட்டாம் வகுப்பில் படித்து வந்தார். கடந்த புதன்கிழமை காலை பள்ளிக்கு செல்லும் வழியில் அந்த மாணவியை வழிமறித்த சிலர், அருகாமையில் இருக்கும் தோட்டத்தில் அந்த மாணவியை கடத்திச் சென்று, பலாத்காரம் செய்துவிட்டு, மயங்கிய நிலையில் கிடந்த |
| புயலால் பாதித்த ஆந்திர மாநிலத்திற்கு புனரமைப்புக்கு வி.ஐ.டி. சார்பில் ரூ.1 கோடி நிதி உதவி Posted: 01 Nov 2014 04:19 AM PDT ஆந்திர மாநிலத்தை தாக்கிய 'ஹூட்ஹூட்' புயலால் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து அந்த மாநிலத்தில் புயல் தாக்கிய பகுதிகளில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள உலக முழுவதும் உள்ள தனி நபர்கள், நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் தங்களின் உதவி மற்றும் பங்களிப்பு செய்யுமாறு ஆந்திர மாநில முதல்–மந்திரி என். சந்திரபாபு நாயுடு |
| பீகாரில் படகு கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலி: 7 பேர் மாயம் Posted: 01 Nov 2014 03:53 AM PDT பீகார் மாநிலத்தில் இருவேறு இடங்களில் படகு கவிழ்ந்த விபத்துகளில் 6 பேர் பலியாகினர். ஜமுய் மாவட்டத்தைச் சேர்ந்த 16 பேர் கோயில் திருவிழாவில் பங்கேற்பதற்காக அருகாமையில் உள்ள நவாடா மாவட்டத்துக்கு படகில் சென்றபோது, கரி அணைக்கட்டு பகுதியில் ஆற்றுச் சுழலில் சிக்கிய அந்தப் படகு கவிழ்ந்தது. அதில் சென்ற 4 பேர் நீந்தி கரை சேர்ந்தனர். இச்சம்பவத்தில் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 5 பேர் |
| Posted: 01 Nov 2014 03:45 AM PDT கேரளாவில் நட்சத்திர ஓட்டல்கள் தவிர மற்ற இடங்களில் மதுபார்களை படிப்படியாக மூட முதல் – மந்திரி உம்மன்சாண்டி நடவடிக்கை எடுத்து வருகிறார். முதல் கட்டமாக 700 மதுபார்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் மூடப்பட்டது. இதை எதிர்த்து மதுபார் உரிமையாளர்கள் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கோர்ட்டு மனுவை தள்ளுபடி செய்தது மதுபார்களை மூடியது சரியே என்று |
| குஜராத்தை மிரட்டிய நிலோபர் புயல் வலு இழந்தது Posted: 01 Nov 2014 03:42 AM PDT குஜராத்தை மிரட்டிய 'நிலோபர்' புயல் வலு இழந்து மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியது. இந்தியாவின் மேற்கு கடற்கரையையொட்டி வடகிழக்கு அரபிக் கடலில் சில நாட்களுக்கு முன் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது காற்றழுத்த மண்டலமாக மாறி தொடர்ந்து வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து சென்றது. பின்னர் அது மேலும் தீவிரம் அடைந்து புயலாகவும், |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |