மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- முனைப்புடன் செயல்படுங்கள்: ராகுலுக்கு கர்நாடக முதல்வர் அறிவுரை
- திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரமோற்சவம் நாளை தொடங்குகிறது
- சபரிமலையில் முதல் நாளிலேயே அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: தரிசன நேரம் அதிகரிப்பு
- திருப்பதி கோவிலில் கூடுதலாக 2 லட்டு கவுண்டர் திறப்பு
- தெலுங்கானாவில் எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் ரூ.2 லட்சமாக உயர்வு
- சட்டசபை தேர்தல்: பிரதமர் மோடி, காஷ்மீரில் 22–ந்தேதி பிரசாரம் தொடக்கம்
- கேரளாவில் ரூ.17 லட்சம் லஞ்சம் வாங்கிய போலீஸ் சூப்பிரண்டு
- அரசு நிலத்தில் மோசடி: ராபர்ட் வதேராவுக்கு உதவிய அதிகாரி சஸ்பெண்ட்
- பீகாரில் லல்லு பிரசாத்–நிதீஷ்குமார் கட்சிகள் இணைய முடிவு? - பா.ஜ.க.வை வீழ்த்த வியூகம்
- மராட்டிய பா.ஜனதா அரசில் சிவசேனா பங்கேற்க அதிக வாய்ப்பு: மனோகர் ஜோஷி தகவல்
- தேசிய ஒருமைப்பாடு வாரத்தை கொண்டாடுங்கள்: ராஜ்நாத் சிங் அறிவுறுத்தல்
- ஜம்மு-காஷ்மீர் 2-ம் கட்ட தேர்தல்: 18 தொகுதிகளில் 175 வேட்பாளர்கள் போட்டி
- அத்வானி வீட்டிற்குச் சென்ற மம்தா பானர்ஜி
- எபோலா நோய் தாக்கிய டாக்டர் சிகிச்சை பலனின்றி அமெரிக்காவில் பலி
- வெளிநாடுகளில் மோடிக்கு திரண்ட கூட்டம் தானாக வந்ததா?: குர்ஷித் கேள்விக்கு அருண்ஜெட்லி சவுக்கடி
- காரை ஏற்றிக் கொலை செய்ய முயற்சி: உ.பி. பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு
- உ.பி.யில் ஓடும் ரெயிலில் இருந்து வாலிபரை தூக்கி வீசிய கும்பல்
- ரூ.350 கோடி பறிபோனதால் தற்கொலை: சமாஜ்வாதி முன்னாள் எம்.எல்.ஏ. மரணத்தின் மர்மம் விலகியது
- சாரதா நிதிநிறுவன ஊழல் வழக்கில் 2-வது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது
- உ.பி.: நிலப்பிரச்சினையில் 6 வயது மாற்றுத்திறனாளி சிறுமி சுட்டுக்கொலை
| முனைப்புடன் செயல்படுங்கள்: ராகுலுக்கு கர்நாடக முதல்வர் அறிவுரை Posted: 17 Nov 2014 11:13 PM PST பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக ராகுல்காந்தியை விமர்சித்து வருகிறார்கள். ராகுல் நடத்தும் அரசியல் சரி அல்ல என்பது அவர்களது குற்றச்சாட்டாக உள்ளது. இன்னும் சில தலைவர்கள், ராகுலை தவிர்த்து விட்டு பிரியங்காவுக்கு முக்கியத்துவம் கொடுத்தால்தான் காங்கிரஸ் புத்துணர்ச்சி பெறும் என்று கூறி வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது கர்நாடகா காங்கிரஸ் முதல்–மந்திரி சித்தராமய்யாவும் சேர்ந்துள்ளார். நேற்று அவர் கூட்டம் ஒன்றில் பேசுகையில், ராகுலின் அரசியல் செயல்பாடுகள் போதாது. இன்னும் உறுதியாக முனைப்புடன் அவர் |
| திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரமோற்சவம் நாளை தொடங்குகிறது Posted: 17 Nov 2014 10:47 PM PST திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை பிரமோற்சவம் கோலாகலமாக நடத்தப்படுவது உண்டு. இந்த ஆண்டுக்கான பிரமோற்சவம் நாளை கொடியே |
| சபரிமலையில் முதல் நாளிலேயே அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: தரிசன நேரம் அதிகரிப்பு Posted: 17 Nov 2014 10:27 PM PST சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16–ந்தேதி மாலையில் நடைதிறக்கப்பட்டது. நேற்று முதல் மண்டல பூஜை நடந்து வருகிறது. முதல் நாளிலேயே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக் |
| திருப்பதி கோவிலில் கூடுதலாக 2 லட்டு கவுண்டர் திறப்பு Posted: 17 Nov 2014 09:21 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசன டிக்கெட் அடிப்படையில் பக்தர்களுக்கு தலா ரூ.25 கட்டணத்தில் 4 லட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தற்போது 4 கவுண்டர்கள் உள்ளது. பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் தற்போது கூடுதலாக 2 லட்டு கவுண்டர்கள் திறக்கப்பட்டு உள்ளது. தேவஸ்தான கூடுதல் நிர்வாக |
| தெலுங்கானாவில் எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் ரூ.2 லட்சமாக உயர்வு Posted: 17 Nov 2014 09:06 PM PST ஆந்திராவில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்தில் மொத்தம் 120 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். சட்ட மேல்–சபையில் 40 பேர் எம்.எல்.சி.க்களாக இருக்கிறார்கள். இரு சபைகளிலும் உறுப்பினர்களாக 160 பேர் உள்ளனர். இவர்களில் 36 பேரை மந்திரிகளாக முதல்–மந்திரி சந்திரசேகரராவ் நியமனம் செய்துள்ளார். தெலுங்கானா எம்.எல்.ஏக்கள், எம்.எல்.சி.க்களுக்கு மாத சம்பளமாக ரூ.12,500 |
| சட்டசபை தேர்தல்: பிரதமர் மோடி, காஷ்மீரில் 22–ந்தேதி பிரசாரம் தொடக்கம் Posted: 17 Nov 2014 09:06 PM PST காஷ்மீர் மாநில சட்ட சபைக்கு வருகிற 25–ந்தேதி முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 20–ந்தேதி வரை 5 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக காஷ்மீரில் உள்ள 87 சட்டசபை தொகுதிகளிலும் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. |
| கேரளாவில் ரூ.17 லட்சம் லஞ்சம் வாங்கிய போலீஸ் சூப்பிரண்டு Posted: 17 Nov 2014 09:00 PM PST கேரள மாநிலம் பத்தனம் திட்டா பகுதியை சேர்ந்தவர் அஜித். கல் குவாரி உரிமையாளர். சமீபத்தில் இவரது கல் குவாரியை மூட பத்தனம்திட்டா போலீஸ் சூப்பிரண்டு ராகுல் ஆர்.நாயர் உத்தரவிட்டார். |
| அரசு நிலத்தில் மோசடி: ராபர்ட் வதேராவுக்கு உதவிய அதிகாரி சஸ்பெண்ட் Posted: 17 Nov 2014 08:49 PM PST காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா, அரியானா மாநிலத்தில் நடந்த காங்கிரஸ் ஆட்சியை பயன்படுத்தி அம்மாநிலத்தில் அரசு நிலங்களை வாங்கி மோசடி செய்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அரியானாவில் பரீதாபாத்தில் உள்ள சிர்ஷி கிராமத்தில் அரசு நிலத்தை ராபர்ட் வதேரா மிக, மிக குறைந்த விலைக்கு வாங்கி இருப்பதும், இதற்காக அரசு ஆவணங்களை திருத்தி இருப்பதும் கண்டு |
| பீகாரில் லல்லு பிரசாத்–நிதீஷ்குமார் கட்சிகள் இணைய முடிவு? - பா.ஜ.க.வை வீழ்த்த வியூகம் Posted: 17 Nov 2014 08:18 PM PST பீகார் மாநில சட்டசபைக்கு கடந்த 2010–ம் ஆண்டு நடந்த தேர்தலில் நீதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளமும், பா.ஜ.க. வும் கூட்டணி அமைத்து மொத்தம் உள்ள 243 இடங்களில் 206 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தன. பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதால் கோபம் அடைந்த நிதீஷ்குமார் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளத்தை விலக செய்தார். பீகாரில் அடுத்த ஆண்டு (2015) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று பா.ஜ.க. தீவிர முயற்சிக |
| மராட்டிய பா.ஜனதா அரசில் சிவசேனா பங்கேற்க அதிக வாய்ப்பு: மனோகர் ஜோஷி தகவல் Posted: 17 Nov 2014 02:54 PM PST மராட்டிய பா.ஜனதா அரசில் சிவசேனா பங்கேற்க அதிக வாய்ப்பு இருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் மனோகர் ஜோஷி தெரிவித்தார். மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 145 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 121 எம்.எல்.ஏ.க்களை கைவசம் வைத்து உள்ள பா.ஜனதா தனித்து சிறுபான்மை அரசை அமைத்தது. இதைத் தொடர்ந்து கவர்னரின் உத்தரவின் பேரில், பா.ஜனதா அரசு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி குரல் ஓட்டு மூலம் வெற்றி பெற்றது. |
| தேசிய ஒருமைப்பாடு வாரத்தை கொண்டாடுங்கள்: ராஜ்நாத் சிங் அறிவுறுத்தல் Posted: 17 Nov 2014 10:17 AM PST மதநல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு ஒவ்வொரு இந்தியரையும் சென்றடையும் வண்ணம் வரும் 19-ந் தேதி முதல் துவங்கும் தேசிய ஒருமைப்பாடு வாரத்தை சிறப்பாக கொண்டாடுமாறு அனைத்து அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசை உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியாவின் பல்வேறு கலாச்சாரங்கள், சகோதரத்துவம், ஒற்றுமை ஆகியவற்றை நினைவுகூரும் வகையில் வரும் 19-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை தேசிய ஒருமைப்பாடு வாரம் அனுசரிக்கப்படுகிறது. |
| ஜம்மு-காஷ்மீர் 2-ம் கட்ட தேர்தல்: 18 தொகுதிகளில் 175 வேட்பாளர்கள் போட்டி Posted: 17 Nov 2014 08:18 AM PST ஜம்மு காஷ்மீரில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான களத்தில் 175 வேட்பாளர்கள் உள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வரும் 25-ம் தேதி முதல் 5 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் டிசம்பர் 2-ம் தேதி நடைபெற உள்ள 2ம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு வாபஸ் இன்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளான இன்று, பல்வேறு தொகுதிகளில் இன்று 8 வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர். |
| அத்வானி வீட்டிற்குச் சென்ற மம்தா பானர்ஜி Posted: 17 Nov 2014 07:34 AM PST மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்வராக இருப்பவர் மம்தா பானர்ஜி. காங்கிரஸ் சார்பில் டெல்லியில் நடைபெறும் ஜவஹர்லால் நேருவின் 125-வது பிறந்தநாளையொட்டி சர்வதேச மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள டெல்லி சென்றுள்ளார். அந்தவேளையில் பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், தற்போதைய எம்.பி.யுமான அத்வானியின் வீட்டிற்குச் சென்றார். அங்கு அத்வானியுடன் உடல்நிலை சரியில்லாத அவரின் மனைவி இருந்தார். அவரது உடல்நலம் குறித்து மம்தா விசாரித்தார். |
| எபோலா நோய் தாக்கிய டாக்டர் சிகிச்சை பலனின்றி அமெரிக்காவில் பலி Posted: 17 Nov 2014 07:29 AM PST மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவிய எபோலா நோய், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை பலிவாங்கியுள்ளது. இந்நிலையில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட டாக்டர் ஒருவர் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார். சியாரா லியோனை பூர்வீகமாக கொண்டவர் டாக்டர் மார்ட்டின் சலியா. இவர் அமெரிக்க பெண்ணை திருமணம் செய்து கொண்டு மேரிலேண்ட் மாநிலத்தில் வசித்து வந்தார். இவர் வடக்கு ஆப்பிரிக்காவில் அறுவை சிகிச்சை டாக்டராக பணிபுரிந்து வந்தார். |
| வெளிநாடுகளில் மோடிக்கு திரண்ட கூட்டம் தானாக வந்ததா?: குர்ஷித் கேள்விக்கு அருண்ஜெட்லி சவுக்கடி Posted: 17 Nov 2014 07:24 AM PST மியான்மர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்ச்சிகளில் ஏராளமான இந்தியர்கள் பங்கேற்பதாக செய்திகள் வருகின்றன. இந்த கூட்டம், தானாக கூடும் கூட்டமா?, பிறர் அழைத்துவந்த கூட்டமா? எனற பொருள் தொணிக்கும்படி கடந்த சனிக்கிழமை உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய மந்திரி சல்மான் குர்ஷித், 'மியான்மர் தலைநகர் நேபிடாவுக்கு நான் இரண்டு முறை |
| காரை ஏற்றிக் கொலை செய்ய முயற்சி: உ.பி. பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு Posted: 17 Nov 2014 06:54 AM PST உத்தர பிரதேசத்தில் உள்ள மாநில கட்சி அப்னா தளம். பாராளுமன்ற தேர்தலில் இக்கட்சி பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்திருந்தது. இந்த கட்சியின் பெண் எம்.பி. அனுப்பிரியா பட்டேல். இவர் நேற்று இரவு உ.பி.யில் உள்ள கோலா என்ற இடத்தில் நடைபெற்ற சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு லக்னோவிற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். |
| உ.பி.யில் ஓடும் ரெயிலில் இருந்து வாலிபரை தூக்கி வீசிய கும்பல் Posted: 17 Nov 2014 06:13 AM PST உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலைப்பார்த்து வந்தவர் முகேஷ் குமார் (வயது 28). இவர் இன்று காலை வேலைக்காக ரெயிலில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவருடன் ரெயில் பயணம் செய்த சிலர் அவரிடம் தகராறு செய்தனர். அத்துடன் அவரை விட்டுவிடவில்லை. ஹர்டோய் ரெயில் நிலையம் அருகே ரெயில் சென்றபோது, அவர் வைத்திருந்த 1600 ரூபாயை பறித்துக்கொண்டு அவரை ரெயிலில் இருந்து தூக்கி வீசி விட்டனர். |
| ரூ.350 கோடி பறிபோனதால் தற்கொலை: சமாஜ்வாதி முன்னாள் எம்.எல்.ஏ. மரணத்தின் மர்மம் விலகியது Posted: 17 Nov 2014 06:11 AM PST உத்தரப்பிரதேசம் மாநில ஓட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சமாஜ்வாதி கட்சி முன்னாள் எம்.எல்.ஏ., 350 கோடி ரூபாயை பறிகொடுத்த சோகத்தில் தற்கொலை செய்து கொண்ட திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சமாஜ்வாடி கட்சி முன்னாள் எம்.எல்.ஏ., அனார் சிங் திவாகர். இவர் கோட்வாலி என்ற இடத்தில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் நேற்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். |
| சாரதா நிதிநிறுவன ஊழல் வழக்கில் 2-வது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது Posted: 17 Nov 2014 05:54 AM PST மேற்கு வங்காளத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வந்த சாரதா நிதிநிறுவனம் பொதுமக்களிடம் பலஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் தலைவர் சுதிப்தா சென் மற்றும் அவரது மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. விசாரணையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. குணால் கோஷ் கைது செய்யப்பட்டார். இதனால் அவர் அந்தக்கட்சியில் |
| உ.பி.: நிலப்பிரச்சினையில் 6 வயது மாற்றுத்திறனாளி சிறுமி சுட்டுக்கொலை Posted: 17 Nov 2014 05:50 AM PST உத்தர பிரதேசம் மதன்பூர் பகுதியைச் சேர்ந்த இரு கும்பலுக்கிடையே நிலப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினை நேற்று துப்பாக்கி சூடு வரை சென்றுள்ளது. ஓம் பிரகாஷ், முன்னா மற்றும் பிந்து ஆகியோர் ஸ்ரீபால் யாதவ் என்பவருடன் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அந்த மூன்றுபேரும் துப்பாக்கியால் சராமரியாக சுட்டதில் ஸ்ரீபால் யாதவ் அதிர்ஷ்டவசமாக தப்பித்தார். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |