Tamil Star |
- 4G LTE ஆதரவு கொண்ட எல்ஜி f60 ஸ்மார்ட்போன் அறிமுகம்!
- இந்த காணொளியின் கடைசி வரை பாருங்க…. ஒரு கண்கொள்ளாக் காட்சி காத்திருக்குது!
- இல்லத்தரசிகளே!… அன்றாட சமையலில் பயன்படும் சூப்பர் டிப்ஸ்
- காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து பதற்றம்: ஒருவர் பலி; 15 பேர் காயம்
- கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் திடீர் துப்பாக்கிச்சூடு : 3 பேர் பலி
| 4G LTE ஆதரவு கொண்ட எல்ஜி f60 ஸ்மார்ட்போன் அறிமுகம்! Posted: 08 Oct 2014 06:25 AM PDT
எல்ஜி நிறுவனம், அதன் 4G LTE ஸ்மார்ட்போன் பிரிவுகளை விரிவடைந்து, எல்ஜி F60 என்ற புதிய ஸ்மார்ட்போனை தொடங்கியுள்ளது. நிறுவனத்தின் புதிய F-தொடர் ஸ்மார்ட்போன் ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்காவில் இந்த வாரம் தொடங்கும் என்று அறிவித்துள்ளது. எல்ஜி நிறுவனம் கைப்பேசிகளின் விலை மற்றும் கிடைக்கும் விவரங்களை வெளியிடப்படவில்லை. எல்ஜி f60 ஸ்மார்ட்போன் ஒற்றை மற்றும் இரட்டை சிம் ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கும். எல்ஜி f60 ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட் அம்சங்களை கொண்டுள்ளது. எல்ஜி f60 ஸ்மார்ட்போனில் 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.5 இன்ச் WVGA டிஸ்ப்ளே கொண்டுள்ளது மற்றும் 207ppi பிக்சல் அடர்த்தி வழங்குகிறது. இது ரேம் 1GB உடன் இணைந்து ஒரு 1.2GHz குவாட் கோர் (குறிப்பிடப்படாத சிப்செட்) குவால்காம் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 4GB மற்றும் 8GB உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது, விரிவாக்கத்தக்க சேமிப்பு பற்றி எந்த வார்த்தையும் இல்லை. இந்த ஸ்மார்ட்போன் 5 மெகாபிக்சல் பின்புற கேமரா, 1.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா வருகிறது. எல்ஜி f60 ஸ்மார்ட்ஃபோனில் ஒரு 2100mAh நீக்கக்கூடிய பேட்டரி ஆதரவு, மற்றும் 127.5x67.9x10.6mm மெஷர்ஸ் கொண்டுள்ளது. எல்ஜி f60 ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் வெள்ளை வண்ண வகைகளில் கிடைக்கும். எல்ஜி f60 ஸ்மார்ட்போன் அம்சங்கள்: ஒற்றை மற்றும் இரட்டை சிம், 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.5 இன்ச் WVGA டிஸ்ப்ளே, 207ppi பிக்சல் அடர்த்தி, ரேம் 1GB, 1.2GHz குவாட் கோர் (குறிப்பிடப்படாத சிப்செட்) குவால்காம் ப்ராசசர், 4GB மற்றும் 8GB உள்ளடங்கிய சேமிப்பு, 5 மெகாபிக்சல் பின்புற கேமரா, 1.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட், 2100mAh நீக்கக்கூடிய பேட்டரி.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்த காணொளியின் கடைசி வரை பாருங்க…. ஒரு கண்கொள்ளாக் காட்சி காத்திருக்குது! Posted: 08 Oct 2014 04:27 AM PDT |
| இல்லத்தரசிகளே!… அன்றாட சமையலில் பயன்படும் சூப்பர் டிப்ஸ் Posted: 08 Oct 2014 04:22 AM PDT |
| காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து பதற்றம்: ஒருவர் பலி; 15 பேர் காயம் Posted: 08 Oct 2014 04:06 AM PDT
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 50 இந்திய நிலைகள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருவதால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. காஷ்மீர் எல்லையில் இந்தியா பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இடையே தொடரும் சண்டையால் ஆயிரக்கணக்காண மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுகின்றனர். போர் நிறுத்த உடன்பாட்டை மீறி இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. குடியிருப்புகள் மீதும் குண்டுகள் வீசப்படுவதால் எல்லையோர கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். நேற்று பிற்பகல் முதல் வாலோனி, ஹர்னியா, ஆர்.எஸ்.புரா, பாத்வால் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தொடர் தாக்குதலில், இந்திய தரப்பில் வீரர் ஒருவர் பலியானர், மேலும் 15 பேர் காயமடைந்தனர். இதற்கு இந்திய தரப்பில் கடும் பதிலடி கொடுக்கப்பட்டு வருவதால் இருதரப்புக்கும் இடையே பயங்கர சண்டை நிடித்து வருகிறது. இதனால் எல்லையோர கிராமங்களில் வசிக்கும் ஆயிரக்காணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர். பாகிஸ்தான் படையினர் அத்துமீறளுக்க கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா கொடி அமர்வு கூட்டத்தை ரத்து செய்துள்ளது. மேலும் 2,000 தீவிரவாதிகள் எல்லையில் ஊடுருவத் தயாராக உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் திடீர் துப்பாக்கிச்சூடு : 3 பேர் பலி Posted: 08 Oct 2014 12:09 AM PDT
கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த விஜய பிரதாப் சிங் என்பவர் சக ஊழியர்களான கணேசன், சுப்புராஜ் மோகன்சிங் ஆகியோர் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். வழக்கமாக தொழில் பாதுகாப்பு துறை அதிகாரிகள் கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு காலை 4 மணிக்கு வேலைக்கு வருவது வழக்கம் அதே போல விஜய பிரதாப் சிங் என்பவருக்கும் மேலும் 3 சக வீரர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் விஜய பிரதாப் சிங் 5 பேரை சரமாரியாக சுட்டுள்ளார், 9 எம் கார்பன் துப்பாக்கியால் அவர் சுட்டதில் 5 பேருக்கும் காயம் ஏற்பட்டது. 9 எம் துப்பாக்கி மூலமாக ஒரே சுற்றில் 30 போரையும் சுட முடியும் என கூறப்படுகிறது. துப்பாக்கியால் சுட்ட விஜய பிரதாப் சிங்கை கல்பாக்கம் தமிழ்நாடு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அங்கிருந்து 4 குண்டுகளையும் போலீசார் கைப்பற்றிள்ளதாக கூறப்படுகிறது. விஜய பிரதாப் சிங் இன்று காலை வேலைக்கு வரும் போது மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் வந்தார் என்று கூறப்படுகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |




