Tamil Star |
- காண்டாமிருகத்திற்கு ஒட்டகச்சிவிங்கி கொடுத்த தர்மஅடி!
- இந்த ஆண்களிடம் எந்த பெண்ணாவது போட்டி போட முடியுமா?
- அழகா யாருக்காவது கேக் சாப்பிடத் தெரியுமா?…. பாருங்க சொக்கிப் போயிடுவீங்க!
- வெள்ளப்பெருக்கை கடந்துவிடுமா இந்த பேருந்து?
- ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் கொண்ட கூகுள் நெக்ஸஸ் 9 டேப்லட் அறிமுகம்!
- துலீப் கோப்பை கிரிக்கெட் : பைனலில் தென் மண்டலம்!!
- டபுள்யுடிஏ பைனல்ஸ் தொடர் : அரை இறுதியில் வோஸ்னியாக்கி!
- எபோலா பாதித்த நாடுகளில் டிசம்பரில் தடுப்பு மருந்துகள் : உலக சுகாதார நிறுவனம்!!
- சட்டத்தை அமெரிக்கா மீறுகிறது ரஷ்ய அதிபர் புடின் குற்றச்சாட்டு!
- மகிந்தவின் மக்களை ஏமாற்றும் வஞ்சகம்: கூட்டமைப்பு – ஜனாதிபதி சந்திப்பு
- தீவிரவாதம் இலங்கை நாட்டை தனிமைப்படுத்தும்: ரவூப் எச்சரிக்கை
- கூகுள் நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகள் தமிழரிடம்!!!
- அமெரிக்காவில் அதிரடித் தீர்ப்பு! 1500 வருடங்கள் சிறைத்தண்டனை பெற்ற தம்பதி!
| காண்டாமிருகத்திற்கு ஒட்டகச்சிவிங்கி கொடுத்த தர்மஅடி! Posted: 25 Oct 2014 03:39 AM PDT |
| இந்த ஆண்களிடம் எந்த பெண்ணாவது போட்டி போட முடியுமா? Posted: 25 Oct 2014 03:35 AM PDT |
| அழகா யாருக்காவது கேக் சாப்பிடத் தெரியுமா?…. பாருங்க சொக்கிப் போயிடுவீங்க! Posted: 25 Oct 2014 03:30 AM PDT |
| வெள்ளப்பெருக்கை கடந்துவிடுமா இந்த பேருந்து? Posted: 25 Oct 2014 03:28 AM PDT |
| ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் கொண்ட கூகுள் நெக்ஸஸ் 9 டேப்லட் அறிமுகம்! Posted: 25 Oct 2014 03:22 AM PDT
கூகுள் நிறுவனம் HTC உடன் இணைந்து நெக்ஸஸ் 9 என்று அழைக்கப்படும் புதிய நெக்ஸஸ் டேப்லட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுள் நெக்ஸஸ் 6 ஸ்மார்ட்போன் உடன் இணைந்து புதிய HTC கூகுள் நெக்ஸஸ் 9 டேப்லட்டில் கூகுளின் அடுத்த தலைமுறை மொபைல் ஆப்ரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் இயங்குகிறது. கூகுள் நெக்ஸஸ் 9 டேப்லட் வெள்ளிக்கிழமை முதல் ப்ரீ ஆர்டரில் தொடங்கி இருக்கும், நவம்பர் 9 ம் தேதி முதல் கடைகளில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நெக்ஸஸ் டேப்லட் 16GB, Wi-Fi மாடல் $ 399 விலையில் (சுமார் ரூ 24,500), 32GB, Wi-Fi மாடல் $ 479 (தோராயமாக ரூ. 29,500), மற்றும் 32GB LTE மோட் $ 599 (சுமார் ரூ. 37,000) மேலும், பெண்டா பேண்ட் எச்எஸ்பிஏ+ உடன் இணைந்து குவாட் பேண்ட் ஜிஎஸ்எம்/எட்ஜ் மற்றும் சிடிஎம்ஏ ஆதரிக்கும். கூகுள் நெக்ஸஸ் 9 கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு மற்றும் QXGA உடன் 2048x1536 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 8.9 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. டேப்லெட்டில் கெப்லர் ஜி.பீ.யூ மற்றும் RAM 2GB உடன் இணைந்து ஒரு 64-பிட் என்விடியா டெக்ரா K1 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது போன்ற வதந்திகள் நிலவுகிறது. இதில் f / 2.4 aperture மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட ஒரு 8 மெகாபிக்சல் பின்புற ஆட்டோஃபோகஸ் கேமரா மற்றும் 1.6-மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. கூகுள் நெக்ஸஸ் 9 டேப்லெட்டில் 6700mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்கள் 3.5 மிமீ ஆடியோ ஜாக், மைக்ரோ-USB, ஜிபிஎஸ், Wi-Fi, NFC, மற்றும் ப்ளூடூத் ஆகியவை அடங்கும். மேலும் கூகுள் நெக்ஸஸ் 9 டேப்லெட் அம்சங்களான HTC யின் பூம் சவுண்ட் மற்றும் டூயல் மைக்ரோபோன்கள் உடன் டூயல் முன் எதிர்கொள்ளும் ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது. டேப்லெட்டில் பட்டியலிடப்பட்ட சென்சார்கள், அம்பிஎண்ட் லைட் சென்சார், கிரையோஸ்கோப், அச்செலேரோமேட்டர் மற்றும் மேக்னட்டோமீட்டர் உள்ளிட்டவை அடங்கும். HTC கூகுள் நெக்ஸஸ் 9 டேப்லட் அம்சங்கள்: 2048x1536 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 8.9 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, RAM 2GB, 2.3GHz ப்ராசசர், 16GB சேமிப்பு, 8 மெகாபிக்சல் பின்புற ஆட்டோஃபோகஸ் கேமரா, 1.6-மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, 3.5 மிமீ ஆடியோ ஜாக், மைக்ரோ-USB, ஜிபிஎஸ், Wi-Fi, NFC, ப்ளூடூத், ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப், 6700mAh பேட்டரி.This posting includes an audio/video/photo media file: Download Now |
| துலீப் கோப்பை கிரிக்கெட் : பைனலில் தென் மண்டலம்!! Posted: 25 Oct 2014 03:11 AM PDT
கிழக்கு மண்டல அணியுடனான துலீப் கோப்பை கிரிக்கெட் அரை இறுதியில், இன்னிங்ஸ் மற்றும் 118 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற தென் மண்டல அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அரியானா மாநிலம் ரோட்டக், பன்சிலால் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற கிழக்கு மண்டலம் முதலில் பந்துவீசியது. தென் மண்டல அணி முதல் இன்னிங்சில் 264 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது (101.1 ஓவர்). தொடக்க வீரர் ராபின் உத்தப்பா 120 ரன் (196 பந்து, 14 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். அடுத்து களமிறங்கிய கிழக்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் வெறும் 84 ரன் மட்டுமே எடுத்து சுருண்டது (47.4 ஓவர்). பாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்சை தொடர்ந்து ஆடிய அந்த அணி, நேற்று நடந்த 3வது நாள் ஆட்டத்தில் 62 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஷரத் 4, பின்னி 3 விக்கெட் வீழ்த்தினர். தென் மண்டல அணி இன்னிங்ஸ் மற்றும் 118 ரன் வித்தியாசத்தில் வென்று பைனலுக்கு தகுதி பெற்றது. உத்தப்பா ஆட்ட நாயகன் விருது பெற்றார். மத்திய மண்டலம் , வடக்கு மண்டலம் இடையே மொகாலியில் நடந்து வரும் முதலாவது அரை இறுதியில் வெற்றி பெறும் அணியுடன், தென் மண்டல அணி பைனலில் மோதும்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| டபுள்யுடிஏ பைனல்ஸ் தொடர் : அரை இறுதியில் வோஸ்னியாக்கி! Posted: 25 Oct 2014 03:06 AM PDT
டபுள்யுடிஏ பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி தகுதி பெற்றார். மகளிர் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீராங்கனைகள் பங்கேற்கும் இந்த தொடரில், தலா 4 பேர் கொண்ட இரு பிரிவுகளில் ரவுண்ட் ராபின் லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சிவப்பு மற்றும் வெள்ளை பிரிவில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் வீராங்கனைகள் அரை இறுதிக்கு முன்னேறுவர். வெள்ளை பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பெத்ரா குவித்தோவாவுடன் (செக் குடியரசு) மோதிய வோஸ்னியாக்கி 6,2, 6,3 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று ஹாட்ரிக் வெற்றியுடன் முதலிடம் பிடித்தார். அவர் ஏற்கனவே ஷரபோவா (ரஷ்யா), ரத்வன்ஸ்கா (போலந்து) இருவரையும் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. மற்றொரு லீக் ஆட்டத்தில் ஷரபோவா 7,5, 6,7 (4,7), 6,2 என்ற செட் கணக்கில் ரத்வன்ஸ்காவை வீழ்த்தினார். வெள்ளை பிரிவில் ரத்வன்ஸ்கா, ஷரபோவா, குவித்தோவா ஆகியோர் தலா ஒரு வெற்றி, 2 தோல்வி பெற்ற நிலையில், செட்களின் எண்ணிக்கை அடிப்படையில் ரத்வன்ஸ்கா 2வது இடம் பிடித்து அரை இறுதிக்கு முன்னேறினார். இந்த தொடரின் இரட்டையர் பிரிவு அரை இறுதியில் விளையாட இந்தியாவின் சானியா மிர்சா , காரா பிளாக் (ஜிம்பாப்வே) ஜோடி தகுதி பெற்றுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| எபோலா பாதித்த நாடுகளில் டிசம்பரில் தடுப்பு மருந்துகள் : உலக சுகாதார நிறுவனம்!! Posted: 25 Oct 2014 02:59 AM PDT
பின்னர் அவை படிப்படியாக மற்ற நாடுகளுக்கும் வினியோகிக்கப்படும் என்று உலக சுகாதார நிறுவனம் நேற்று லண்டனில் அறிவித்தது. மேற்கு ஆப்ரிக்க நாடுகளான கினியா, லைபீரியா மற்றும் சியர்ரா லியோனி நாடுகளை எபோலா நோய் கடுமையாக தாக்கியுள்ளது. இதற்கு மருந்து கண்டுபிடிப்பதற்கு முன் தடுப்பு மருந்துகளை அளிப்பது குறித்து நேற்று லண்டனில் உலக சுகாதார ஆய்வு மைய விஞ்ஞானிகளின் கூட்டம் நடைபெற்றது. எபோலா நோய் பாதித்த 3 ஆப்ரிக்க நாடுகளில் பணியாற்றும் சுகாதார ஊழியர்களுக்கு முதலில் வரும் டிசம்பர் மாதம் முதல் தடுப்பு மருந்துகளை வழங்க இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்த தடுப்பு மருந்துகள் அவர்களிடையே பரிசோதிக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக அனைவருக்கும் வழங்கப்படும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் உதவி இயக்குநர் ஜெனரல் டாக்டர் மேரி பாலே கென்னி கூறினார். மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான லைபீரியா, கினியா மற்றும் சியர்ரா லியோனி ஆகிய 3 நாடுகளில் எபோலா நோய் தாக்கியது. இந்நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களை குணப்படுத்துவதற்கு மருந்துகளை கண்டுபிடிப்பதற்கு பல்வேறு நாடுகளில் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 22ம் தேதிவரை எபோலா நோய்க்கு 9,936 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 4,877 பேர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. எபோலாவை தடுப்பதற்கு தற்போது தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, பல்வேறு கட்டங்களில் நடைபெற்ற பரிசோதனையில் வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, எபோலா நோய் பாதித்த நாடுகளில் பணியாற்றும் சுகாதார ஊழியர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் முதல் இந்த மருந்துகள் வழங்கப்பட்டு பரிசோதிக்கப்படும். எபோலா நோய் பாதித்த ஆப்ரிக்க நாடுகளில் சர்வதேச விமான சேவை மற்றும் வர்த்தகத்துக்கு பொது தடை விதிக்கும் கமிட்டியின் பரிந்துரையை உலக சுகாதார நிறுவனம் நிராகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| சட்டத்தை அமெரிக்கா மீறுகிறது ரஷ்ய அதிபர் புடின் குற்றச்சாட்டு! Posted: 25 Oct 2014 02:54 AM PDT
உக்ரைனின் கிழக்கு பகுதியில் நடைபெற்ற உள்நாட்டு போரில் பிரிவினைவாதிகளுக்கு ரஷ்ய படைகள் ஆதரவு தெரிவித்தன. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கொண்டு வந்தன. இதைத் தொடர்ந்து, ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடும் பனிப்போர் நிலவி வருகிறது. இந்நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு அருகே லாராவில் நடைபெற்ற பொருளாதார நிபுணர்கள் கூட்டத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று பேசியதாவது: உலக நாடுகள் அனைத்தையும் ஒருமித்த பார்வையுடன் நோக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் சர்வதேச சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. உக்ரைன் பிரச்னையை தொடர்ந்து, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை கொண்டு வந்தன. தான் மேற்கொள்ளும் ஒருதலைபட்சமான முடிவுக்கு அனைத்து நாடுகளும் கட்டுப்பட வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கருதுகின்றன. அவ்வாறு உடன்படாத நாடுகள் மீது பல்வேறு தடைகளை கொண்டு வருகின்றன. இது ஒரு ஆதிக்க மனோபாவத்தை எடுத்துக் காட்டுகிறது. இதை ஒருபோதும் ரஷ்யா ஏற்றுக்கொள்ளாது. அவ்வாறு எடுக்கப்படும் ஒருதலைபட்ச முடிவுகள், பிற்காலத்தில் பல்வேறு பின் விளைவுகளை ஏற்படுத்தும். ஒருங்கிணைந்த ரஷ்யாவில் இருந்து பிரிந்து போன நாடுகளை மீண்டும் ரஷ்யாவுடன ஒருங்கிணைப்பது குறித்து எவ்வித முடிவுகளும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பேசினார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மகிந்தவின் மக்களை ஏமாற்றும் வஞ்சகம்: கூட்டமைப்பு – ஜனாதிபதி சந்திப்பு Posted: 25 Oct 2014 02:39 AM PDT
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் நேற்று தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவுத் திட்டமானது மக்களை ஏமாற்றும் கபட நாடகம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். மீண்டும் ஜனாதிபதியாகும் கனவில் இருந்துகொண்டு மக்களின் வாக்குகளை கொள்ளையிட மகிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட வஞ்சகமே அன்றி அதில் வேறு எதுவுமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் இந்த வரவு செலவுத் திட்ட அறிக்கையில் எந்த இடத்திலும் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவது தொடர்பிலான செலவுகள் பற்றி சரியான முறையில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், மக்களிடம் இருந்து 20 ஆயிரம் கோடி ரூபாவை வரியாக அறவிடுவது குறித்து உரிய முறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ராஜபக்ஷ அரசாங்கம், மிகவும் தந்திரமான முறையில் மக்களை ஏமாற்றி, அவர்களின் வாக்குகளை பெறுவதற்காக பல்வேறு கற்பனைகளை உருவாக்கி வருகிறது எனவும் எரான் விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சி உறுப்பினர்களை கடுப்படித்த மஹிந்த: கூட்டமைப்பு - ஜனாதிபதி சந்திப்பு வரவு செலவுத் திட்ட உரையை முடித்துவிட்டு வெளியே வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை கடுப்படித்துள்ளார். எதிர்க்கட்சிகள் அண்மைக்காலமாக ஜனாதிபதி மஹிந்தவை பய்யா (பட்டிக்காட்டான்) என்ற பட்டப் பெயரில் ஏளனமாக அழைத்து வருகின்றனர். ஒரு சில இணையத்தள ஊடகவியலாளர்கள் ஒரு படி மேலே சென்று தமது செய்தியறிக்கைகளிலும் பய்யா என்றே ஜனாதிபதியை விளித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று வரவு-செலவுத்திட்ட உரை நிகழ்த்துவதற்காக ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தார். நாடாளுமன்ற அமர்வு முடிந்து ஜனாதிபதி வெளியே வந்தபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவர் முன்னால் எதிர்ப்பட்டனர். அவர்களைப் பார்த்தவுடன் புன்முறுவல் பூத்த ஜனாதிபதி , "பட்டிக்காட்டானின் பட்ஜெட் எப்படி? " என்று கேட்டு கடுப்படித்தார். திகைத்துப் போன எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புன்முறுவலுடன் அங்கிருந்து மெல்ல நகர்ந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் தேநீர் விருந்துபசாரத்தை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற தேநீர் விருந்துபசாரத்தில் முக்கிய கட்சிகள் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, 2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்திருந்தார். வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் வழமையாக தேநீர் விருந்துபசாரமொன்றை ஜனாதிபதி வழங்குவது வழமையாகும். இந்த தேநீர் விருந்துபசாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த கட்சிகள் ஜனாதிபதியின் விருந்துபசாரத்தை புறக்கணித்துள்ளனர். எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் ஜனாதிபதி மஹிந்த கைலாகு செய்து பேசியுள்ளதாக பாராளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் வரவு செலவுத்திட்டத்தின் பின்னர் ஜனாதிபதி வழங்கும் விருந்துபசாரத்தில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| தீவிரவாதம் இலங்கை நாட்டை தனிமைப்படுத்தும்: ரவூப் எச்சரிக்கை Posted: 25 Oct 2014 02:36 AM PDT
உம்ரா கடமைக்காக சவூதி சென்று நாடு திரும்பிய போது ரியாத்தில் வைத்து இந்த வாரம் செய்தி நிறுவனம் ஒன்றிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த பிரச்சினை தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட்டாமையானது துரதிஸ்டவசமானது என்றும் அமைச்சர் தெரிவித்தார். இந்தநிலையில் இந்தப்பிரச்சினைக்கு அரசாங்கம் உரிய தீர்வைக் காணாதுபோனால் சர்வதேச அரங்கில் இலங்கை தனித்து விடப்படக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார். நாட்டின் நீதியமைப்பு ஒன்று இருக்குமானால் பௌத்த பிக்குவாக இருந்தாலும் அதனை கடைபிடிக்க வேண்டும் என்று ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| கூகுள் நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகள் தமிழரிடம்!!! Posted: 25 Oct 2014 02:27 AM PDT
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லார்ரி பேஜ்ஜிடமிருந்த முக்கியமான பொறுப்புகள் பலவும் ஆண்ட்ராய்ட் பிரிவை நிர்வகிக்கும் சுந்தர் பிச்சையிடம் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளன. இந்த பொறுப்பு அதிகரிப்பு என்பது, சென்னை மனிதரான சுந்தர் பிச்சையின் கேரியரில் முக்கியமான ஏற்றமாக பார்க்கப்படுகிறது. சென்னையை சேர்ந்த பிச்சை சுந்தர்ராஜன் (42), சுந்தர் பிச்சை என்ற பெயரால் புகழடைந்தவர். ஐஐடி காரக்பூரில் பேச்சிலர் இன் டெக்னாலஜி படிப்பை முடித்த பிச்சை, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் படிப்பும், பென்சில்வேனியாவின் வார்டன் பள்ளியில் எம்.பி.ஏவும் படித்தவர். முன்னணி நிறுவனமான கூகுளில் இவர் 2004ம் ஆண்டுதான் பணிக்கு சேர்ந்த போதிலும், திறமை காரணமாக வெகு விரைவில் உயர் பதவிகளுக்கு வந்தார். கூகுளின் முக்கியமான தயாரிப்பான ஆண்ட்ராய்டு பிரிவை நிர்வகிக்கும் பொறுப்பு பிச்சையிடம் அளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி குரோம், கூகுள் ஆப்ஸ் ஆகியவற்றையும் பிச்சைதான் நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் முக்கிய முடிவு ஒன்றை கூகுள் சி.இ.ஓ லார்ரி பேஜ் எடுத்துள்ளார். அதன்படி, கூகுளின் மேப்ஸ், கூகுள் பிளஸ், ஆய்வு, விளம்பரம் மற்றும் கட்டமைப்பு ஆகிய பிரிவுகளையும் பிச்சையின் பொறுப்பிலேயே கொடுத்துள்ளார் லார்ரி பேஜ். சுந்தர் பிச்சையின் பதவியில் எந்த மாற்றமும் அளிக்கப்படவில்லை என்ற போதிலும், கூடுதலான பொறுப்புகள், பிச்சையின் முக்கியத்துவத்தை கூகுள் உணர்ந்துள்ளதன் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. புதிதாக தரப்பட்டுள்ள பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்கள், இனிமேல் சுந்தர் பிச்சையின் கட்டுப்பாட்டில் வருகிறார்கள். இப்பொறுப்புகளில் இருந்து விடுபட்டுள்ள லார்ரி பேஜ், கூகுளின் வர்த்தகம், செயல்பாடு, கூகுள் எக்ஸ், நிர்வாக மேம்பாடு, சட்டம், நிதி மற்றும் வர்த்தகம் போன்றவற்றில் மட்டும் கவனம் செலுத்த உள்ளார். கூகுளை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்ல லார்ரி பேஜ் முழு நேரத்தையும் செலவிட இந்த மாற்றங்கள் உதவும் என்கிறது கூகுள் தரப்பு. சுந்தர் பிச்சை, 2012ல் கூகுள் ஆப்ஸ் பிரிவுக்கும், 2013ல் ஆண்ட்ராய்டு பிரிவுக்கும் பொறுப்பாளராக பதவி உயர்வுகளை பெற்றார் என்பது நினைவிருக்கலாம். கூகுளில் இணையும் முன்பாக, அப்ளைய்ட் மெட்டீரியல்ஸ் மற்றும் மெக்கின்சே அன்ட் கோ ஆகிய நிறுவனங்களில் சுந்தர் பிச்சை பணியாற்றியுள்ளார். சென்னை மனிதரின் பெயர் இப்போது உலகின் ஜாம்பவான் நிறுவனங்களான டுவிட்டர், மைக்ரோசாப்ட் நிறுவனங்களில் முக்கிய பதவிகளுக்கான தேடுதல் பட்டியலில் இடம் பெற்றிருப்பது பெருமையே.This posting includes an audio/video/photo media file: Download Now |
| அமெரிக்காவில் அதிரடித் தீர்ப்பு! 1500 வருடங்கள் சிறைத்தண்டனை பெற்ற தம்பதி! Posted: 25 Oct 2014 02:18 AM PDT
அமெரிக்காவில் உள்ள தம்பதிகள் சிறுவர் மற்றும் சிறுமிகளை வைத்து ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவர்களுக்கு நீதிமன்றம் 1500 வருடங்களுக்கும் மேல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சமீப காலத்தில் வழங்கப்பட்ட மிக அதிக வருடங்கள் சிறைத்தண்டனை தீர்ப்பு என்று இந்த வழக்கின் தீர்ப்பு கூறப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள Lauderdale County என்ற பகுதியை சேர்ந்த Patricia Ayers என்ற பெண்ணும், அவருடைய கணவர் Matthew Ayers என்பவரும் சேர்ந்து சிறுவர், சிறுமிகளை ஆபாச படம் எடுத்து இண்டர்நெட்டில் விற்பனை செய்துள்ளனர். பின்னர் அமெரிக்காவின் சைபர் க்ரைம் போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டு கடட்ந்ஹ 1998ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தம்பதியினர் மீது 53 பிரிவுகளில் போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுவிட்டதால், இந்த குற்றத்தை புரிந்த Patricia Ayers அவர்களுக்கு 1590 வருடங்களும், அவருடைய கணவர் Matthew Ayers அவர்களுக்கு 750 வருடங்களும் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை L. Scott Coogler என்ற அமெரிக்க நீதிபதி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


















