Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


நியூசிலாந்து தமிழ்பெண்களின் சூப்பரான குத்து டான்ஸ்!

Posted: 17 Oct 2014 07:48 AM PDT

amil kuthu Aadukalam and variya dance

amil kuthu Aadukalam and variya dance

This posting includes an audio/video/photo media file: Download Now

குழந்தைகளை குப்பைத்தொட்டியில் வீசும் மனிதர்களே இந்த போராட்டத்தையும் பாருங்க!

Posted: 17 Oct 2014 07:43 AM PDT

Elephant

Elephant

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒரு நாள் போட்டி : மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு 331 ரன்கள் வெற்றி இலக்கு

Posted: 17 Oct 2014 07:08 AM PDT

india

indiaமேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராத் கோலி அபாரமாக விளையாடி சதமடித்து அசத்தினார். இது விராத் கோலிக்கு 20-வது சதமாகும். கோலி 114 பந்துகளில் 13 பவுண்டரி, 3 சிக்சருடன் 127 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். சுரேஷ் ரெய்னா அதிரடியாக ஆடி 58 பந்துகளில் 71 ரன்கள், ரகானே 68 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மேற்கு இந்திய தீவுகள் அணி தரப்பில் டெய்லர், ஹோல்டர், ரஸ்சல், பென் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதனை அடுத்து 331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கு இந்திய தீவுகள் அணி களமிறங்க உள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்திய அணியுடனான தொடரை ரத்து செய்து வெளியேறுகிறது மேற்கு இந்திய தீவுகள் அணி!

Posted: 17 Oct 2014 07:00 AM PDT

india-team

india-teamஇந்திய அணியுடனான கிரிக்கெட் தொடரை ரத்து செய்து மேற்கு இந்திய தீவுகள் அணி வெளியேறுகிறது. மேற்கு இந்திய தீவு கிரிக்கெட் வாரியத்துடன் வீரர்கள் ஊதியம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டதால் இந்த முடிவை மேற்கொண்டுள்ளனர். வீரர்களை கலந்தாலோசிக்காமல் குறைந்த ஊதியம் நிர்ணயம் செய்துள்ளதாக வீரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 5-வது ஒரு நாள் போட்டி, டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் மேற்கு இந்திய தீவுகள் அணி விளையாடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய போட்டிக்கு பதிலாக இந்தியாவுடன் இலங்கை அணி விளையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஹோலி ஸ்மார்ட்போன், ஹானர் எக்ஸ்1 டேப்லெட் இந்தியாவில் அறிமுகம்!

Posted: 17 Oct 2014 03:16 AM PDT

holi smart phone

holi smart phoneஹவாய் நிறுவனம், இந்தியாவில் அதன் சாதனம் தொகுப்பு விரிவடைந்து, ரூ.6,999 விலையில் ஹானர் ஹோலி ஸ்மார்ட்போன் மற்றும் ரூ.19,999 விலையில் ஹானர் எக்ஸ்1 டேப்லெட் தொடங்கியது மற்றும் இரண்டு சாதனங்களும் Flipkart இணையதளத்தில் பிரத்தியேகமாக கிடைக்கின்றன. ஹவாய் ஹானர் ஹோலி ஸ்மார்ட்போன், அக்டோபர் 16ம் தேதியும் மற்றும் ஹவாய் ஹானர் எக்ஸ்1 டேப்லெட் அக்டோபர் 15ம் தேதியும் தொடங்கி இருக்கும். குறிப்பாக, நிறுவனம் ஹானர் 6 ஸ்மார்ட்போன் மற்றும் மீடியாபேட் T1 8.0 டேப்லெட் உடன் இணைந்து கடந்த மாதம் இந்திய சந்தைக்காக ஹானர் ஹோலி ஸ்மார்ட்போன் வெளியீடை உறுதி செய்தது. ஹவாய் ஹானர் எக்ஸ்1 டேப்லெட் தற்போது Flipkart இணையதளத்தில் ப்ரீ ஆர்டர் வரிசையில் உள்ளது. ஹவாய் ஹானர் ஹோலி ஸ்மார்ட்போன்: ஹவாய் ஹானர் ஹோலி ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் புதிய எமோசன் UI உடன் ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட் இயங்குகிறது. இது 294ppi பிக்சல் அடர்த்தி உடன் 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் HD எல்சிடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனில் ரேம் 1GB உடன் இணைந்து 1.3GHz குவாட் கோர் (குறிப்பிடப்படாத சிப்செட்) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. ஹானர் ஹோலி ஸ்மார்ட்போனில் இரட்டை காத்திருப்பு ஆதரவுடன் இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்) சாதனம் ஆகும். இதில் microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. ஹவாய் ஹானர் ஹோலி ஸ்மார்ட்போனில் எல்இடி ப்ளாஷ் மற்றும் சாம்சங் BSI சென்சார் கொண்ட 8 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் பின்புற கேமரா மற்றும் ஒரு 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. பனோரமிக் மோடு, பியுட்டி மோடு, HDR மோடு, கன்டினியூஸ் ஷாட் மற்றும் சீன் மோடு போன்ற பல்வேறு மோடுகள் பின்புற கேமராவில் உள்ளன. கைபேசியில் ஒரு 2000mAh பேட்டரி ஆதரவோடு வருகிறது. இணைப்பு விருப்பங்கள் ப்ளூடூத் 4.0, Wi-Fi, மைக்ரோ-USB, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், WiFi, DLNA, மற்றும் 3 ஜி ஆகியவை அடங்கும். ஹானர் ஹோலி ஜி உணரி, ப்ரொக்ஷிமிட்டி சென்சார், மற்றும் அம்பிஎண்ட் லைட் சென்சார் போன்ற சென்சார்கள் அடங்கும். ஹவாய் ஹானர் எக்ஸ்1 டேப்லெட்: ஹவாய் ஹானர் எக்ஸ்1 டேப்லெட், ஒரு குரல் அழைப்பு டேப்லெட் ஆகும். இது நிறுவனத்தின் எமோசன் 2.0 UI உடன் ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் இயங்குகிறது. டேப்லெட்டில் 1920x1200 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 7 இன்ச் முழு HD LTPS டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. ஹானர் எக்ஸ்1 டேப்லெட்டில் ரேம் 2GB உடன் இணைந்து, 1.6GHz Balong V9R1 (கார்டெக்ஸ் A9) குவாட் கோர் பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இதில் microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. ஒரு 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா மற்றும் சோனி BSI சென்சார், பெரிய f / 2.2 aperture, மற்றும் ஹைப்ரிட் ஐஆர் ஃப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது. கைபேசியில் ஒரு 5000mAh பேட்டரி ஆதரவோடு வருகிறது. இணைப்பு விருப்பங்கள் 4G / LTE, 3 ஜி, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், ப்ளூடூத், மற்றும் Wi-Fi ஆகியவை அடங்கும். ஹவாய் ஹானர் ஹோலி ஸ்மார்ட்போன் விவரக்குறிப்புகள்: இரட்டை சிம், 294ppi பிக்சல் அடர்த்தி, 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் HD எல்சிடி டிஸ்ப்ளே, ரேம் 1GB, 1.3GHz குவாட் கோர் (குறிப்பிடப்படாத சிப்செட்) ப்ராசசர், microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு, 8 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் பின்புற கேமரா, 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, ப்ளூடூத் 4.0, Wi-Fi, மைக்ரோ-USB, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், WiFi, DLNA, 3 ஜி, ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட், 2000mAh பேட்டரி. ஹவாய் ஹானர் எக்ஸ்1 டேப்லெட் விவரக்குறிப்புகள்: 1920x1200 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 7 இன்ச் முழு HD LTPS டிஸ்ப்ளே, ரேம் 2GB, 1.6GHz Balong V9R1 (கார்டெக்ஸ் A9) குவாட் கோர் பிராசசர், microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு, 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, 13 மெகாபிக்சல் பின்புற கேமரா, 4G / LTE, 3 ஜி, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், ப்ளூடூத், Wi-Fi, ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன், 5000mAh பேட்டரி.  

This posting includes an audio/video/photo media file: Download Now

இறந்துபோன பாட்டியிடம் இருந்து பேத்திக்கு எஸ்எம்எஸ் மெசேஜ் குடும்பத்தினர் அதிர்ச்சி!

Posted: 17 Oct 2014 03:10 AM PDT

mobile-phone

mobile-phoneகடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இறந்துபோன பாட்டியின் செல்போனில் இருந்து, அவரது குடும்பத்தினருக்கு குறுந்தகவல் வந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் நடைபெற்ற விசாரணையில், யாரோ ஒருவர் செய்த குறும்பு எனத் தெரியவந்துள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசித்த லெஸ்லி எமர்சன் (59) என்கிற பெண் கடந்த 2011ம் ஆண்டு மரணமடைந்தார். அவருடன், அவர் பயன்படுத்திய செல்போன் உள்ளிட்ட பொருட்கள் எரிக்கப்பட்டன. இந்நிலையில் அவருடைய பேத்தி ஷெர்ரி (21), தனது பாட்டி இறந்து போனதை மறந்து, வழக்கம் போல நல்ல செய்திகளை தனது பாட்டியின் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பிக் கொண்டிருந்தாள். இதேபோல் அவள் அனுப்பிய செய்திக்கு கடந்த வாரம் திடீரென உன்னுடைய செய்தியை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று பதில் வந்தது. உன்னுடைய செய்தியை படித்ததில் இருந்து எனக்கு உடல்நிலை சரியில்லை, உன்னுடைய முடிவு எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது என்று பேத்தியின் எஸ்எம்எஸ்க்கு பதில் வந்து கொண்டிருந்தது. இதைக் கண்டதும் பேத்தி ஷெர்ரி அதிர்ச்சியடைந்தாள். இதுகுறித்து தனது மாமாவிடம் கூறினாள். பாட்டி பயன்படுத்திய செல்போன் நம்பரை அந்நிறுவனம் துண்டிக்காமல், மற்றொருவருக்கு கொடுத்துவிட்டது. அந்த நம்பரில் வந்த செய்தியைப் பார்த்ததும் குறும்பு வாலிபர் பதிலளித்தது துப்பறியும் நிறுவனத்தின் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து செல்போன் நிறுவனமும் அந்த குறும்பு வாலிபரும் நேற்று பாட்டியின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டு கொண்டனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழ் கவிஞருக்கு சிங்கப்பூரில் கலாசார விருது!

Posted: 17 Oct 2014 03:06 AM PDT

KTM-Ikbol

KTM-Ikbolசிங்கப்பூரில் வசிப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கவிஞர் கே.டி.எம்.இக்பால் (வயது 74). இவர் அந்த நாட்டின் மிக உயர்ந்த கலாசார விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் சிங்கப்பூர் வானொலி நிலையத்திற்காக கடந்த 1970 முதல் 1980 வரை 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாடல்களை எழுதி உள்ளார். மேலும் 7 கவிதை தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற இக்பாலின் சொந்த ஊர் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் ஆகும். கலாசார விருது பெற்ற இக்பால் கூறுகையில், "எனக்கு இந்த கலாசார விருது அறிவிக்கப்பட்டிருப்பதை வியக்கத்தக்க மரியாதையாக கருதுகிறேன். இந்த விருது கிடைக்கும் என்று நான் கற்பனை செய்து கூட பார்க்கவில்லை" என்றார். இந்த விருது 80 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் ரொக்கத்துடன் (சுமார் ரூ.39 லட்சம்) கூடியதாகும். இந்த விருதை அந்த நாட்டின் அதிபர் டோனி டான் கெங் யாம் வழங்கி, இக்பாலை கவுரவிப்பார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழீழ விடுதலைப் புலிகள் தடை நீக்கம்! சட்டத்தரணி கருத்து

Posted: 17 Oct 2014 02:41 AM PDT

Thamara-Buruma

Thamara-Burumaஐரோப்பிய ஒன்றியத்தினால் பயங்கரவாத அமைப்பாக கருதப்படும் அமைப்புக்களின் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு சேர்க்கப்பட்டிருந்த முடிவை இரத்து செய்து லக்ஸம்பேர்க்கிலுள்ள ஐரோப்பிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நேற்று வியாழக்கிழமை லக்சம்பேர்க்கில் அமைந்துள்ள ஐரோப்பிய நீதிமன்றத்தால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஒருங்கிணைப்பில் சட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் இத் தீர்ப்பு தமிழீழ விடுதலைக்காக தமது இன்னுயிர்களை கொடுத்த மாவீரர்களுக்கும் , மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும் . தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பாக திறமையாக வழக்காடிய மூன்று வழக்கறிஞர்கள் Victor Koppe , Thamara Buruma, மற்றும் A.Marike van Eik ஆகியோர்களுக்கு உலகத்தமிழர்கள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளார்கள் . பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் என்ற அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் குறிப்பிட்ட சில நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக இயக்கப்படும் குறிப்பிட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பொருத்தமற்றவை எனவும் அவற்றை ரத்து செய்யவும் ஐரோப்பிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுதலை புலிகள் அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்படுவதில் கையாளப்பட்டிருந்த நடைமுறையில் தவறுகள் இருக்கின்ற காரணத்தால், இந்த முடிவை எடுத்துள்ளதாக ஐரோப்பிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து 2011-ல் லக்சம்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் விசாரணை நடைபெற்று வந்தது. லக்ஸம்பேர்க்கிலுள்ள ஐரோப்பிய நீதிமன்றதின் தீர்ப்பின் விடையமாக இவ் வழக்கை வாதாடிய மூன்று வழக்கறிஞர்களில் ஒருவரான Thamara Buruma அவர்கள். தீர்ப்பின் முழு விபரத்தினையும் வாசிக்க இங்கே அழுத்தவும் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம்: ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு! புலிகள் மீதான தடை நீக்கம்! ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பு இருண்ட வானத்தில் ஒளிக்கீற்று!- வைகோ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம்! ஈழத் தமிழ் மக்களுக்குக் கிடைத்த பாரிய வெற்றி: சட்டத்தரணி லதன் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பு: கடுப்பில் இலங்கை

This posting includes an audio/video/photo media file: Download Now

விமல் வீரவன்சவுடன் ஜனாதிபதி விசேஷ பேச்சுவார்த்தை!!

Posted: 17 Oct 2014 02:37 AM PDT

rajapaksa

rajapaksaஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், அமைச்சர் விமல் வீரவன்சவுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று இன்று மாலை இடம்பெறவுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் ஆதரவை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்த சந்திப்பு நடைபெறுவதாக விமல் வீரவன்சவின் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2005ம் ஆண்டு தொடக்கம் அமைச்சர் விமல் வீரவன்ச, ஜனாதிபதித் தேர்தல்களின் போது கடும் போக்கு சிங்களவர்களின் வாக்குகளை மஹிந்தவுக்குப் பெற்றுக் கொடுப்பதில் முன்னின்று உழைத்துள்ளார். அவரது சரளமான பேச்சாற்றல், இனவாதக் கருத்துக்கள் காரணமாக இன்றளவும் அவருக்கு கடும்போக்குவாதிகளின் ஆதரவு இருக்கின்றது. மேலும் எதிர்க்கட்சிகளின் சார்பில் முன்னிற்கும் பிரதான தேரரான மாதுளுவாவே சோபித தேரருக்கும், அமைச்சர் விமல் வீரவன்சவுக்கும் இடையில் நெருக்கமான நல்லுறவு நிலவுகின்றது. அதன் காரணமாக விமல் வீரவன்ச மூலமாக மாதுளுவாவே சோபித தேரரின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளவோ, அவரை மௌனிக்கச் செய்வதற்கோ அரச தரப்பு முயற்சிக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. இந்நிலையில் எதிர்வரும் தேர்தலின் போதும் ஜனாதிபதி தரப்பின் பிரதான பேச்சாளர்களில் ஒருவராக அமைச்சர் விமல் வீரவன்ச செயற்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் இதற்காக அவர் சில வரப்பிரசாதங்களை அரசாங்கத்திடம் கேட்டுப் பெறும் நோக்கிலேயே இன்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாகவும் சில தகவல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழ் இளைஞரால் குடியுரிமை பெறமுடியாத நிர்க்கதி கனடாவில்!

Posted: 17 Oct 2014 02:29 AM PDT

Kogularamanan

Kogularamananகனடாவில் அகதி அந்தஸ்த்து பெற்ற இலங்கை தமிழர் ஒருவர், நிரந்தரக் குடியுரிமை பெறமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக கனடா ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கோகுலரத்னம் அருளாநந்தம் என்று குறித்த இலங்கையர், கனடாவில் பாதுகாப்பு வீசாவை பெற்றுள்ளார். அதனால் அவரை இலங்கைக்கு நாடுகடத்த முடியாது. எனினும் அவர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே அவரால் கனடாவில் நிரந்தர குடியுரிமையை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது. இந்த நிலையில் அவர் மீண்டும் குடிவரவுத் திணைக்களத்தினால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று கனடாவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

This posting includes an audio/video/photo media file: Download Now

மழை பொழிந்த அமெரிக்கா: நூற்றுக்கணக்கான ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி !

Posted: 17 Oct 2014 02:25 AM PDT

us_airstrikes

us_airstrikesசிரியா மற்றும் ஈராக்கில் அமெரிக்க கூட்டு படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் நூற்றுக்கணக்கான ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர். சிரியா-ஈரக்கின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ், தற்போது சிரியாவின் எல்லை பகுதியில் உள்ள கோபன் (Kobane) நகரத்தை தங்கள் வசமாக்க தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. இதற்காக தங்களை எதிர்த்து போராடிய அப்பகுதியில் வாழும் குர்து இன மக்களில் 500 பேரை சமீபத்தில் கொடூரமாக ஐ.எஸ்.ஐ.எஸ் படுகொலை செய்துள்ளது. இதனையடுத்து 40 சதவீத நகரத்தை கைப்பற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள், தங்களது கொடியையும் சிரியாவின் எல்லை பகுதியில் பறக்க விட்டனர். இந்நிலையில் குர்து மக்களை காப்பாற்றும் நோக்கில் அமெரிக்கா தொடர்ந்து 18 முறை சரமாரியாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றிய பகுதிகளில் குண்டுமழை பொழிந்துள்ளது. இதில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈடுக்கொடுக்க முடியாமல் ஐ.எஸ்.ஐ.எஸ் கோபன் நகரத்தை கைப்பற்றுவதிலிருந்து பின்வாங்கியதாகவும், 20 சதவீத இடம் மட்டுமே அவர்களின் வசம் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

This posting includes an audio/video/photo media file: Download Now

பெண்கள் உடையில் இந்து மத கடவுள்கள் அதிர்ச்சியில் இந்து அமைப்புக்கள்!

Posted: 17 Oct 2014 02:20 AM PDT

amezon

amezonபெண்கள் அணியும் லெக்கிங்ஸ் (leggings) என்ற உடையில் இந்து கடவுள்களின் படங்களை கொண்டு தயாரித்த அமேசான் நிறுவனத்திற்கு இந்துமத அமைப்புகளிடம் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. ஆன்லைனில் வர்த்தகம் செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அமேசான், அமெரிக்க நிறுவனத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம். இந்த நிறுவனம் சொந்தமாகவே பல பொருட்களை தயாரித்து சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பெண்கள் அணியும் உடைகளுள் ஒன்றான லெக்கிங்ஸ் உடையில் இந்து மத கடவுள்களான பிள்ளையார், சிவன், பிரம்மா, விஷ்ணு, முருகன், அனுமான், ராமர், ராதா கிருஷ்ணர், காளி ஆகிய தெய்வங்களின் படங்களை தொடைப்பகுதியில் வரும்படி டிசைன் செய்து விற்பனை செய்து வருகிறது. இந்த டிசைன்கள் அமெரிக்காவில் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்து கடவுள்களை அமேசான் நிறுவனம் அவமதித்துவிட்டதாக அங்குள்ள இந்துமத அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள இந்துமத தலைவர் ராஜன் சேத் என்பவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், "இந்துக்கள் கலைப் பண்பை வெளிப்படுத்துவதற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் தங்களது மதத்தின் மீது விசுவாசமும் பற்றும் உடையவர்கள். பல கோடி மக்கள் வழிபடும் கடவுள்களின் படங்களை கொண்டு, ஆடைகளை வடிவமைப்பது ஏற்கக் கூடியது அல்ல. இந்த நிலையில், அமேசான் நிறுவனம் லெக்கிங்ஸ்களில் ஏற்கத்தகாத வகையில் இந்துக் கடவுள்களை சித்தரித்துள்ளது மன வேதனை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்து மதத்தை பின்பற்றுவோரை மன உலைச்சலுக்கு உள்ளாக்குகிறது. ஆகவே, சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் உள்ள ஆடைகள் கொண்ட பட்டியலை உடனடியாக அமேசான் நிறுவனம் தனது இணையதளத்திலிருந்து நீக்க வேண்டும். இந்த தவறுக்கு அந்த நிறுவனம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்" என்று வலியுறுத்தி வருகின்றனர்.  

This posting includes an audio/video/photo media file: Download Now

முதல்வர் ரொப் ஃபோர்ட்டின் மருத்துவ விபரங்களை முறைகேடாக பார்வையிட்ட மருத்துவமனைப் பணியாளர்கள் இருவர்!

Posted: 17 Oct 2014 02:16 AM PDT

rob

robமவுண்ட் சைனாய்(Mount Sinai) மருத்துவமனையின் இரண்டு பணியாளர்கள், ரொறன்றோ மாநகர முதல்வர் றொப் ஃபோர்ட்டின் மருத்துவ விபரங்களை முறைகேடான முறையில் பார்வையிட்டுள்ளார்கள் என அந்த மருத்துவமனை அறிவித்துள்ளது . பாதுகாப்பு, மற்றும் தனிப்பட்ட அந்தரங்கம் தொடர்பான கொள்கைகள், இறுக்கமான கட்டுப்பாடுகள், காரணமாக அந்த விடயம் தெரியவந்ததெனவும், உடனடியாக உரிய நடவடிக்கையை எடுத்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. சட்டப்படி பாதிக்கப்பட்டவருக்கு அந்த விடயம் அறிவிக்கப்படவேண்டுமென்பதால், றொப் ஃபோர்ட்டுக்கு அதனை அறிவித்ததாகவும் மருத்துவமனை தெரிவித்தது. அபூர்வமான ஒரு வகைப் புற்றுநோய்க்கு றொப் ஃபோர்ட் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிபிடத்தக்கதாகும்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™