Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


குடந்தைக்கு 2,624 டன் உரம் வந்தது

Posted: 08 Oct 2014 01:28 PM PDT

டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் சம்பா சாகுபடிக்காக தூத்துக்குடி, சென்னையிலிருந்து 2,624 டன் உரம் கும்பகோணத்துக்கு புதன்கிழமை வந்தது.

அரியலூரில் பலத்த மழை: மக்கள் மகிழ்ச்சி

Posted: 08 Oct 2014 01:27 PM PDT

அரியலூரில் புதன்கிழமை பெய்த பலத்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

டாஸ்மாக் கடையில்ரூ. 50 ஆயிரம் மதுபாட்டில்கள் திருட்டு

Posted: 08 Oct 2014 01:26 PM PDT

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே டாஸ்மாக் கடையில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் செவ்வாய்க்கிழமை இரவு திருட்டுப்போயின.

அரசு சிமென்ட் ஆலை தொழிலாளர்களுக்கு20% போனஸ் வழங்க வலியுறுத்தல்

Posted: 08 Oct 2014 01:26 PM PDT

அரியலூர் அரசு சிமென்ட் ஆலைத் தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு ஜாமீன்மறுப்பு: அதிர்ச்சியில் அதிமுக தொண்டர் சாவு

Posted: 08 Oct 2014 01:26 PM PDT

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதால், அதிர்ச்சியடைந்த அதிமுக தொண்டர் புதன்கிழமை உயிரிழந்தார்.

பேருந்தில் இருந்துதவறி விழுந்த மாணவர் பலத்த காயம்

Posted: 08 Oct 2014 01:25 PM PDT

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே புதன்கிழமை பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவர் பலத்தக் காயமடைந்தார்.

இளைஞர் தீக்குளித்து தற்கொலை

Posted: 08 Oct 2014 01:25 PM PDT

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே இளைஞர் தீóக்குளித்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

அக்டோபர் 9 மின் தடை

Posted: 08 Oct 2014 01:25 PM PDT

தேனூர், கீழப்பெரம்பலூர், கூத்தூர் பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (அக். 9) மின் விநியோகம் இருக்காது.

மனிதக்கழிவு அகற்றுபவர் கணக்கெடுப்பு: நாளை முதல் கருத்து தெரிவிக்கலாம்

Posted: 08 Oct 2014 01:24 PM PDT

மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றுவது குறித்த கணக்கெடுப்பு பற்றி வியாழக்கிழமை (அக். 9) முதல் கருத்துத் தெரிவிக்கலாம்.

தொடரும் மழை: முழு வீச்சில் சம்பா நாற்றுவிடும் பணி

Posted: 08 Oct 2014 01:24 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கி இரு நாள்களாக மழை பெய்து வருவதைத்தொடர்ந்து, சம்பா பருவ நெல் சாகுபடிக்கான நாற்று விடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

பெரம்பலூரில் புகைப்படம், விடியோ எடுக்க இலவச பயிற்சி

Posted: 08 Oct 2014 01:23 PM PDT

பெரம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் புகைப்படம், விடியோ குறித்த இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய கவிதை, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றோர் விவரம்

Posted: 08 Oct 2014 01:23 PM PDT

பெரம்பலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர் இறந்த 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

Posted: 08 Oct 2014 01:23 PM PDT

கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் வாரிசுதாரர், அரசு ஊழியர் இறந்த 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

225 பேருக்கு ரூ. 1.65 கோடி விவசாய கடன்: ஆட்சியர்

Posted: 08 Oct 2014 01:22 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம், இதுவரை 225 விவசாயிகளுக்கு ரூ. 1.65 கோடி விவசாய கடன் வழங்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

இந்த நாளில் அன்று (9.10.1975); காமராஜ் பெயரால்....

Posted: 08 Oct 2014 01:16 PM PDT

காமராஜ் பெயரால்....

கண்ணில் சிறந்த உறுப்பில்லை

Posted: 08 Oct 2014 01:11 PM PDT

உலக சுகாதார நிறுவனம், கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் பார்வையிழப்பு பற்றிய விழிப்புணர்வினை மேம்படுத்துவதற்காகவும் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் இரண்டாவது வியாழக்கிழமையை உலக கண் பார்வை தினமாக அறிவித்துள்ளது.

மருந்துகளுக்கே நோய் என்றால்...

Posted: 08 Oct 2014 01:09 PM PDT

புதுப்புது ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆனால், மிகப் பழைய அமைதியோ தொலைந்து விட்டது.

உரிமை, இரத்தல் அல்ல!

Posted: 08 Oct 2014 01:00 PM PDT

போபால் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் விஷவாயுக் கசிவினால் ஏற்பட்ட மிகக் கொடூரமான தொழிற்சாலை விபத்து நிகழ்ந்து டிசம்பர் மாதத்துடன் 30 ஆண்டுகளாகப் போகின்றன.

விரிவான பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு

Posted: 08 Oct 2014 12:51 PM PDT

நீதித் துறையை இழிவுபடுத்தி பேனர்கள், சுவரொட்டிகள் ஒட்டியது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு விரிவான பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதல்வருக்கு விஜயகாந்த் கோரிக்கை

Posted: 08 Oct 2014 12:50 PM PDT

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றி, மக்களின் அச்சத்தைப் போக்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

சிறுபான்மையினர் நலனுக்காக தேசியத் திறன் மேம்பாட்டு மையம்

Posted: 08 Oct 2014 12:49 PM PDT

"சிறுபான்மையினர் நலனுக்காக தேசிய அளவிலான திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்' என்று மத்திய சிறுபான்மையினர் நலன் விவகாரத் துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா தெரிவித்தார்.

கூடங்குளம் மின்சாரத்தில் பெரும் பகுதியை தமிழகத்துக்கு வழங்க வேண்டும்: ஜி.கே. வாசன்

Posted: 08 Oct 2014 12:48 PM PDT

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் பெரும்பகுதியை தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் வலியுறுத்தினார்.

கடலில் மாயமான 5 மீனவர்களை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: தமிழக அரசு அறிவிப்பு

Posted: 08 Oct 2014 12:47 PM PDT

கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது, மாயமான 5 மீனவர்களை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

காங்கிரஸ் மேலிட வட கிழக்கு மாநில பொறுப்பாளராக நாராயணசாமி நியமனம்

Posted: 08 Oct 2014 12:45 PM PDT

காங்கிரஸ் மேலிட வட கிழக்கு மாநில பொறுப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி நியமிக்கப்பட்டார்.

இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 24 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

Posted: 08 Oct 2014 12:44 PM PDT

இலங்கைச் சிறையிலுள்ள 24 தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். மேலும், கச்சத்தீவை மீட்பதில் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு அரசுப் பதவி: கால இடைவெளியை நிர்ணயிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

Posted: 08 Oct 2014 12:42 PM PDT

ஓய்வு பெற்ற நீதிபதிகள் அரசுப் பதவிகளை வகிப்பதற்கு, குறிப்பிட்ட கால இடைவெளியை நிர்ணயிக்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

Posted: 08 Oct 2014 12:41 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், லடாக் ஆகிய பகுதிகளை ஒட்டிய இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் மற்றும் சீன ராணுவத்தினர் நடத்திவரும் அத்துமீறல்களைத் தடுப்பதற்கு, மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என காங்கிரஸ், சமாஜவாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

பேரூராட்சி பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

Posted: 08 Oct 2014 12:40 PM PDT

பொன்னமராவதி பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அக்டோபர் 9 மின் தடை

Posted: 08 Oct 2014 12:40 PM PDT

ஆலங்குடி, வடகாடு பகுதியில் வியாழக்கிழமை (அக். 9) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பாகிஸ்தான் தாக்குதலை முறியடிக்க மோடி முயற்சிக்கவில்லை: ராகுல் குற்றச்சாட்டு

Posted: 08 Oct 2014 12:40 PM PDT

பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறித் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், அதைத் தடுப்பதற்கு பிரதமர் மோடி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

"நல்ல படைப்புகள் சமூகத்தை மாற்றியமைக்கும்'

Posted: 08 Oct 2014 12:39 PM PDT

நல்ல படைப்புகள் சமூகத்தை மாற்றியமைக்கும் என்றார் மலேசிய எழுத்தாளர் நா.ஆ. செங்குட்டுவன்.

புதுகையில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

Posted: 08 Oct 2014 12:39 PM PDT

கர்நாடக அரசைக் கண்டித்து, புதுக்கோட்டையில் வழக்குரைஞர்கள் புதன்கிழமை நீதிமன்றப் பணிகளை புறக்கணித்தனர்.

தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் வழங்கியவர்கள் தாமதமின்றி இழப்பீடு பெற அறிவுறுத்தல்

Posted: 08 Oct 2014 12:39 PM PDT

தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்காக நிலம் வழங்கியவர்கள் தாமதமின்றி அதற்குரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தையல் பயிற்சி முடித்த மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் புரிய விண்ணப்பிக்கலாம்

Posted: 08 Oct 2014 12:39 PM PDT

தையல் பயிற்சி முடித்த மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் புரியும் வகையில், விலையில்லா மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் தெரிவித்தார்.

மகளிர் கபடி போட்டி: புதுகை மாமன்னர் கல்லூரி சாம்பியன்

Posted: 08 Oct 2014 12:38 PM PDT

புதுக்கோட்டையில் பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையே செவ்வாய், புதன் ஆகிய இரு நாள்கள் நடைபெற்ற மகளிர் கபடி போட்டிகளில் புதுகை அரசு மாமன்னர் கல்லூரி அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றது.

புதுகையில் ரூ. 5 கோடியில் நகராட்சி நிர்வாக அலுவலகக் கட்டுமானப் பணி: ஆட்சியர் ஆய்வு

Posted: 08 Oct 2014 12:38 PM PDT

புதுக்கோட்டை நகராட்சியில் ரூ. 5 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் புதிய அலுவலகத்தின் கட்டுமானப் பணிகளை ஆட்சியர் செ. மனோகரன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

தனிக்குடித்தனம் செல்ல மறுத்துஆசிட் குடித்த பெண் சாவு

Posted: 08 Oct 2014 12:37 PM PDT

கும்பகோணத்தில் தந்தை தனிக்குடித்தனம் செல்லச் சொன்னதால் மகள் ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வேலையின்மைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Posted: 08 Oct 2014 12:37 PM PDT

தஞ்சாவூரில் வேலையின்மைக்கு எதிராக புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சேவைத்துறையில் நேரடி அந்நிய முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தொடரும் மழை: முழுவீச்சில் சம்பா நாற்று விடும் பணி

Posted: 08 Oct 2014 12:36 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கி இரு நாள்களாக மழை பெய்து வருவதைத்தொடர்ந்து, சம்பா பருவ நெல் சாகுபடிக்கான நாற்று விடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

அரசுப் பொருள்காட்சி விரைவில் தொடங்கும்

Posted: 08 Oct 2014 12:36 PM PDT

தஞ்சாவூரில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அரசுப் பொருள்காட்சி விரைவில் தொடங்கப்படவுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன்.

அக்டோபர் 9 மின் தடை

Posted: 08 Oct 2014 12:36 PM PDT

துணைமின் நிலையப் பராமரிப்பு பணி காரணமாக, புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் பகுதிகளில் வியாழக்கிழமை (அக். 9) மின்சாரம் இருக்காது.

தனிக்குடித்தனம் செல்ல மறுத்து ஆசிட் குடித்த பெண் சாவு

Posted: 08 Oct 2014 12:36 PM PDT

கும்பகோணத்தில் தந்தை தனிக்குடித்தனம் செல்லச் சொன்னதால் மகள் ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

குடந்தைக்கு 2,624 டன் உரம் வந்தது

Posted: 08 Oct 2014 12:35 PM PDT

டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் சம்பா சாகுபடிக்காக தூத்துக்குடி, சென்னையிலிருந்து 2,624 டன் உரம் கும்பகோணத்துக்கு புதன்கிழமை வந்தது.

அய்யம்பேட்டை சிட்டி யூனியன் வங்கி சார்பில் தூய்மைப் பணி

Posted: 08 Oct 2014 12:35 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் வட்டம்,அய்யம்பேட்டை சிட்டி யூனியன் வங்கிக் கிளை சார்பில் பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத் தொடக்க விழா வங்கி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

என்எஸ்எஸ் சிறப்பு முகாம்கள் நிறைவு

Posted: 08 Oct 2014 12:35 PM PDT

பேராவூரணி பகுதி பள்ளிகளில் ஒருவார கால நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.

பட்டு வளர்ச்சி ஆய்வாளர் பணி

Posted: 08 Oct 2014 12:35 PM PDT

பட்டுவளர்ச்சி ஆய்வாளர் பணிக்கான பரிந்துரைப் பட்டியலை சரிபார்த்துக் கொள்ள பதிவுதாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கணவர் மாயம்:மனைவி புகார்

Posted: 08 Oct 2014 12:34 PM PDT

கும்பகோணம் அரசலாறு படுகை சிங்காரம் தோப்பைச் சேர்ந்தவர் ரமேஷ் (43). இவரது மனைவி மாரியம்மாள் (40). ரமேஷ் கடந்த 1-ஆம் தேதி வீட்டிலிருந்து திடீரென காணாமல்போனார். அவரை மனைவி மாரியம்மாள்

108 கலச சிறப்பு வழிபாடு

Posted: 08 Oct 2014 12:34 PM PDT

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை கோடி முத்து மாரியம்மன் கோயிலில் மழை வேண்டியும், உலக சமாதானத்துக்காகவும் 108 கலச பெருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து காங்கிரஸார் சாலை மறியல்

Posted: 08 Oct 2014 12:34 PM PDT

காரைக்கால் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் புதன்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட பி.ஆர்.என்.திருமுருகன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

காரைக்கால் தூய்மைப் பணிக்குமருத்துவக் கல்லூரி நிர்வாகம் நிதியுதவி

Posted: 08 Oct 2014 12:33 PM PDT

காரைக்காலை தூய்மைப்படுத்தும் பணிக்கு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் மாவட்ட ஆட்சியரிடம் ரூ. 50 ஆயிரம் நிதியுதவி அளித்தது.

கூடுதல் பணியை புறக்கணித்த பட்டதாரி ஆசிரியர்கள்

Posted: 08 Oct 2014 12:33 PM PDT

காரைக்கால் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கூடுதல் பணி செய்து வந்த பட்டதாரி ஆசிரியர்கள் புதன்கிழமை முதல் பணி புறக்கணிப்பை தொடங்கினர்.

"தூய்மை இந்தியா' திட்டத்தை செயல்படுத்த மக்கள் ஒத்துழைப்பு அவசியம்: ஆட்சியர்

Posted: 08 Oct 2014 12:33 PM PDT

காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் ஊரக வளர்ச்சி வார விழா அக். 2 முதல் 7-ம் தேதி வரை நடைபெற்றது. இதன் நிறைவு நிகழ்ச்சி புதன்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இ. வல்லவன் கலந்துகொண்டு பேசியது:

குடவாசலில் 59.6 மி.மீ. மழை

Posted: 08 Oct 2014 12:32 PM PDT

திருவாரூர் மாவட்டம், குடவாசலில் செவ்வாய்க்கிழமை 59.60 மில்லி மீட்டர் மழைப் பதிவானது.

ஒன்றிய அளவிலான மகளிர் விளையாட்டுபோட்டிகள் இன்று தொடக்கம்

Posted: 08 Oct 2014 12:32 PM PDT

திருவாரூர் மாவட்டத்தில் ஒன்றிய அளவிலான தேசிய மகளிர் விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை முதல் தொடங்குகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாணவர்களின் பாதுகாப்பில் பள்ளி நிர்வாகத்துக்கு பொறுப்பு உண்டு

Posted: 08 Oct 2014 12:32 PM PDT

தனியார் வேன்களில் செல்லும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பில், பள்ளி நிர்வாகத்துக்கு பொறுப்பு உண்டு என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனுமதி இல்லாமல்செங்கல் தயாரித்த பெண் கைது

Posted: 08 Oct 2014 12:31 PM PDT

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே அனுமதி இல்லாமல் செங்கல் சூளை அமைத்து செங்கல் தயாரித்த பெண் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

சௌரிராஜ பெருமாள் கோயிலில் உதய கருட சேவை

Posted: 08 Oct 2014 12:31 PM PDT

நாகை மாவட்டம், திருமருகல் அருகே உள்ள திருக்கண்ணபுரம் செüரிராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி உதய கருட சேவை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தூய்மை இந்தியா திட்டம்: அனில் அம்பானி பங்கேற்பு

Posted: 08 Oct 2014 12:31 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்று "தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி புதன்கிழமை தூய்மைப் பணி மேற்கொண்டார்.

தஞ்சாவூர்

Posted: 08 Oct 2014 12:31 PM PDT

ஆந்திரம், ஒடிஸா கடற்கரையை அக். 12-இல் "ஹுட் ஹுட்' புயல் தாக்கும்?

Posted: 08 Oct 2014 12:29 PM PDT

ஆந்திரம், ஒடிஸா கடற்கரையை வரும் 12ஆம் தேதி பிற்பகலில் "ஹுட் ஹுட்' புயல் தாக்கலாம் என்று தில்லி வானிலை ஆராய்ச்சி மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கத் தயார்: ஐ.நா. சபையில் இந்தியா

Posted: 08 Oct 2014 12:29 PM PDT

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடிக் கொடுக்க இந்திய ராணுவம் முழு வீச்சில் தயாராக உள்ளதாக ஐ.நா. சபையில் இந்தியா தெரிவித்தது.

டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறையும்?

Posted: 08 Oct 2014 12:27 PM PDT

மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய 2 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு பிறகு, டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைக்கப்படலாம் எனத் தெரிகிறது.

அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சுவாமி மனு

Posted: 08 Oct 2014 12:22 PM PDT

வழக்குகளை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி புதன்கிழமை மனு தாக்கல் செய்தார்.

பர்த்வான் குண்டு வெடிப்பு சம்பவம்: தீவிரவாதி பயன்படுத்திய மேலும் 2 வீடுகள்

Posted: 08 Oct 2014 12:22 PM PDT

மேற்கு வங்க மாநிலம் பர்த்வானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதி பயன்படுத்திய மேலும் 2 வீடுகள் கண்டறியப்பட்டுள்ளன. கக்ராகரில் குண்டுவெடிப்பு நடைபெற்ற வீட்டின் அருகிலேயே அந்த 2 வீடுகளும் உள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர்.

கிஷண்கஞ்சில் ஊரடங்கு தளர்வு

Posted: 08 Oct 2014 12:21 PM PDT

பிகார் மாநிலம், கிஷண்கஞ்ச் பகுதியில் அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு புதன்கிழமை 3 மணி நேரம் தளர்த்தப்பட்டது.

முலாயமுடன் ஒரே மேடையில் சரத் யாதவ்

Posted: 08 Oct 2014 12:20 PM PDT

சமாஜவாதி கட்சியின் தேசிய மாநாட்டில் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் சரத் யாதவ் புதன்கிழமை கலந்து கொண்டார். அவரிடம், சமாஜவாதியுடன் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைக்குமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

எல்லைப் பகுதிகளில் மத்திய அமைச்சர் ஆய்வு

Posted: 08 Oct 2014 12:18 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப் பகுதிகளில், பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் இடங்களை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரியாறு அணை அருகே "வைல்டு லைப்' அருங்காட்சியகம்

Posted: 08 Oct 2014 12:17 PM PDT

முல்லைப் பெரியாறு அணையின் பின்புறம் உள்ள வல்லக்கடவு, கெவி வனப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வைல்டு லைப் அருங்காட்சியகத்தை, புதன்கிழமை கேரள வனத்துறை அமைச்சர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் திறந்துவைத்தார்.

காஷ்மீர் வெள்ள நிவாரண நிதி வழங்கிய கிராம மக்கள்

Posted: 08 Oct 2014 12:17 PM PDT

தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டி ஊர்ப் பொதுமக்கள் சார்பில் ஜம்மு-காஷ்மீர் வெள்ள நிவாரண நிதி ரூ.1.91 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது.

உணவகம் தீயில் எரிந்து நாசம்: ரூ.1 லட்சம் பொருள்கள் சேதம்

Posted: 08 Oct 2014 12:17 PM PDT

போடி அருகே, தனியார் உணவகத்தில் தீப் பிடித்ததில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. போடி ஜக்கமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் மகன் சேகர் (30). இவர் போடி அருகே பி.

குளம் ஆக்கிரமிப்பால் விவசாயிகள் பாதிப்பு

Posted: 08 Oct 2014 12:17 PM PDT

சின்னமனூரில் கால்வாய் மூலமாக கொண்டு வரப்படும் தண்ணீரை தேக்கி வைக்கப்படும் குளத்தை, ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருவதால், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

மலைவாழ் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு மனுநீதி நாள் முகாம்

Posted: 08 Oct 2014 12:16 PM PDT

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான வடகரைப்பாறை கிராமத்தில், மலைவாழ் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது.

ராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கூட்டம்

Posted: 08 Oct 2014 12:16 PM PDT

விருதுநகர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளைச் செயலர்கள் கூட்டம் ராஜபாளையத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.எம். ராமசாமி, ராஜபாளையம் நகரச் செயலர் வி. ரவி ஆகியோர் தலைமை வகித்தனர்.

மகாராஷ்டிரத்துக்கு பதிலாக பாகிஸ்தான் மீது மோடி கவனம் செலுத்த வேண்டும்: சிவசேனை

Posted: 08 Oct 2014 12:16 PM PDT

""மகாராஷ்டிர அரசியலில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, பாகிஸ்தானின் அட்டூழியங்களை முடிவுக்கு கொண்டு வருவதில் முதலில் கவனம் செலுத்த வேண்டும்'' என்று பிரதமர் நரேந்திர மோடியை சிவசேனை கட்சி வலியுறுத்தியது.

அருப்புக்கோட்டையில் ரத்த தான முகாம்

Posted: 08 Oct 2014 12:16 PM PDT

அருப்புக்கோட்டையில் காந்தி ஜயந்தியை முன்னிட்டு திருநகரம் காட்டுத் தெரு நண்பரகள் குழு சார்பாக ரத்த தான முகாம் செங்குந்தர் தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பெண் கொலை வழக்கு: 3 பேர் கைது

Posted: 08 Oct 2014 12:15 PM PDT

ராஜபாளையத்தில் பெண் செவ்வாய்க்கிழமை கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து புதன்கிழமை மூவரை கைது செய்தனர்.

மாணவர்களுக்கு விளையாட்டு ஆடைகள் வழங்கல்

Posted: 08 Oct 2014 12:15 PM PDT

விருதுநகர் அருகே விருட்சம் மகளிர் முன்னேற்ற அமைப்பு சார்பில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் அங்கீகாரத்துடன் இயங்கும் உண்டு உறைவிடப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

என்.எஸ்.எஸ். தின விழா

Posted: 08 Oct 2014 12:15 PM PDT

கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் நாட்டு நலப் பணித் திட்ட தின விழா வேந்தர் க. ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. துணை வேந்தர் எஸ். சரவணசங்கர் முன்னிலை வகித்தார். திட்ட அலுவலர் பா. பெருமாள் வரவேற்றார்.

சீல் வைக்கப்பட்ட குடோனிலிருந்த பட்டாசுகள் மாயம்

Posted: 08 Oct 2014 12:15 PM PDT

சிவகாசியில் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பட்டாசு குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது. பின்னர் குடோனை திறந்து பார்த்த போது, அதில் பல பட்டாசு பண்டல்கள் மாயமாகி இருந்தன.

ஹரியாணாவின் நிலைமை மாற லோக் தளத்துக்கு வாக்களியுங்கள்: ஓம் பிரகாஷ் செளதாலா

Posted: 08 Oct 2014 12:14 PM PDT

"ஹரியாணா மாநிலத்தின் நிலைமை மாற, இந்திய தேசிய லோக் தளத்துக்கு வாக்களியுங்கள்' என்று அந்தக் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் செளதாலா வேண்டுகோள் விடுத்தார்.

தொழிலதிபர் வீட்டில் நகை திருட்டு: தனிப்படை விசாரணை

Posted: 08 Oct 2014 12:14 PM PDT

ராஜபாளையம் ஐ.என்.டி.யு.சி. நகரில் வசிக்கும் தொழிலதிபர் வீட்டில் 83.5 பவுன் நகை திருடு போனது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

கல்லூரியில் பயிலரங்கம்

Posted: 08 Oct 2014 12:14 PM PDT

சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி உயிரி தொழில் நுட்பவியல் துறை சார்பில் அறிவியல் ஆராய்ச்சியில் புள்ளியியலின் பங்கு என்ற தலைப்பிலான பயிலரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்வர் வ. பாண்டியராஜன் தலைமை வகித்தார். துறைத்தலைவர் த.நீ.பி. சுடர்மணி வரவேற்றார். பேராசிரியர் ஜெ.

கண்டதேவி முத்துமாரியம்மன் கோயிலில் காப்பு கட்டுதல்

Posted: 08 Oct 2014 12:13 PM PDT

தேவகோட்டை அருகே கண்டதேவியில் பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட தப்பாட்டக் கலைஞர்கள் வாழ்வில் வசந்தம் ஏற்படுமா?சி.வ.சு.ஜெகஜோதி

Posted: 08 Oct 2014 12:13 PM PDT

ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவால் இம் மாவட்டத்தில் வசிக்கும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தப்பாட்டக் கலைஞர்கள் உணவுக்குக் கூட வழியின்றி, வறுமையில் வாடுவதாகத் தெரிவிக்கின்றனர்.

தர நிர்ணய மதிப்பீட்டுக் குழு ஆய்வு

Posted: 08 Oct 2014 12:13 PM PDT

எம்விஎம் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில், தேசிய தர நிர்ணய மதிப்பீட்டுக் குழுவினர் வியாழக்கிழமை (அக்.9) முதல் 3 நாள்கள் ஆய்வு நடத்துகின்றனர்.

வத்தலகுண்டு அருகே இடி தாக்கி சர்ச் கட்டடம் சேதம்

Posted: 08 Oct 2014 12:12 PM PDT

வத்தலகுண்டு அருகே இடியுடன் பெய்த கனமழை காரணமாக, தேவாலயக் கட்டடம் சாய்ந்தது.

ஊழல் மலிந்த ஹரியாணாவை திறன் மிகுந்த மாநிலமாக மாற்றுவோம்: பிரதமர் உறுதி

Posted: 08 Oct 2014 12:12 PM PDT

ஊழல் மலிந்துள்ள ஹரியாணாவை திறன் மிகுந்த மாநிலமாக மாற்றுவோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

முதியோர் உதவித் தொகை கேட்டு வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

Posted: 08 Oct 2014 12:12 PM PDT

நிறுத்தப்பட்டுள்ள முதியோர் உதவித் தொகையை மீண்டும் வழங்க வலியுறுத்தி, ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்ட முதியோர்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.

பழனி-கொடைக்கானல் மலைச் சாலை சரிவு: போக்குவரத்துக்கு பாதிப்பில்லை

Posted: 08 Oct 2014 12:12 PM PDT

தொடர் மழை காரணமாக, பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் மலைச் சாலை சேதமடைந்ததை அடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொடைக்கானலுக்குச் செல்ல பழனி வழியாகவும், வத்தலகுண்டு வழியாகவும் சாலைகள் உள்ளன.

தரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனை: கண்காணிக்க உத்தரவு

Posted: 08 Oct 2014 12:12 PM PDT

தீபாவளி பண்டிகையையொட்டி, தரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனை செய்வோரை கண்காணித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உணவுப் பாதுகாப்பு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொடைக்கானல் பெண்கள் அமைப்பினர் ஊர்வலம்

Posted: 08 Oct 2014 12:11 PM PDT

காந்தி ஜயந்தியை முன்னிட்டு, கொடைக்கானலில் பெண்கள் அமைப்பு சார்பில் ஊர்வலம் மற்றும் கூட்டம் நடைபெற்றது.

நவீன தொழில்நுட்பத் திறன் குறித்த கருத்தரங்கு

Posted: 08 Oct 2014 12:11 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் பாலிடெக்னிக் கல்லூரி வேலைவாய்ப்புத் துறை மற்றும் ஐ.ஆர்.ஓ. அமைப்பு சார்பாக, நவீன தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டு வாரம், கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

நத்தத்தில் குரங்குகள் அட்டகாசம்

Posted: 08 Oct 2014 12:11 PM PDT

 நத்தம் பேரூராட்சி பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், அவற்றை கூண்டு வைத்து பிடித்துச் செல்லவேண்டும் என்றும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வள்ளலார் அவதாரத் திருநாள்

Posted: 08 Oct 2014 12:10 PM PDT

அருள்ஜோதி வள்ளலாரின் 192ஆவது அவதாரத் திருநாள் அண்மையில் நடைபெற்றது.

வத்தலகுண்டு மகளிர் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்

Posted: 08 Oct 2014 12:10 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு மகாலெட்சுமி மகளிர் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம், ரெங்கப்பநாயக்கன்பட்டியில் நடைபெற்றது.

மனநிலை பாதிக்கப்பட்டவர் தற்கொலை

Posted: 08 Oct 2014 12:10 PM PDT

பழனி அருகே மனநிலை பாதித்த நபர் தற்கொலை செய்து கொண்டார்.

ராமேசுவரத்தில் மத்திய சர்வேத் துறையினர் ஆய்வு

Posted: 08 Oct 2014 12:09 PM PDT

ராமேசுவரம்- தனுஷ்கோடி சாலையில் மத்திய சர்வே துறையைச் சார்ந்த பொறியாளர்கள் மணல் பரப்பின் தன்மை குறித்து புதன்கிழமை ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனர்.

ஜெயலலிதா விடுதலை பெறக் கோரி தேவர் நினைவிடத்தில் வேள்வி பூஜை

Posted: 08 Oct 2014 12:09 PM PDT

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா விடுதலை பெறக்கோரி, திங்கள்கிழமை பசும்பொன் தேவர் நினைவிட மண்டப வளாகத்தில், சிறப்பு யாகசாலை வேள்வி பூஜை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இலவச கண் மருத்துவ முகாம்

Posted: 08 Oct 2014 12:09 PM PDT

ராமநாதபுரம் மாவட்டத்தில் 12 ஊர்களில் அக்.10 முதல் இலவச கண் மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன. மாவட்ட ஆட்சியர், க.நந்த குமார் உத்தரவில், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட அலுவலர், மருத்துவர் எஸ்.சுபாசங்கரி மேற்பார்வையில் இந்த முகாம்கள் நடைபெறுகின்றன.

ராமநாதபுரத்தில் வன உயிரின வார விழா

Posted: 08 Oct 2014 12:09 PM PDT

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடந்த வன உயிரின வார விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™