Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


சொந்தக் காலில் காஷ்மீர் நிற்பது எப்போது?

Posted: 06 Oct 2014 12:54 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநில மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு, மிகத் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

நாகர்கோவில் முதல் குமரி வரை அதிமுகவினர் மனிதச் சங்கிலி போராட்டம்

Posted: 06 Oct 2014 12:20 PM PDT

ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி நாகர்கோவில் முதல் கன்னியாகுமரி வரை சுமார் 23 கி.மீ. தொலைவுக்கு அதிமுகவினர் திங்கள்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர்.

தேமுதிக ஒன்றியச் செயலருக்கு அரிவாள் வெட்டு

Posted: 06 Oct 2014 12:19 PM PDT

நான்குனேரி தே.மு.தி.க. ஒன்றியச் செயலரை திங்கள்கிழமை அரிவாளால் வெட்டியது தொடர்பாக 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருச்செந்தூரில்காரில் இருந்த நகை திருட்டு

Posted: 06 Oct 2014 12:19 PM PDT

திருச்செந்தூரில் காரில் இருந்து நகை மற்றும் செல்போனை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். மதுரை மேலஅனுப்பானடியைச் சேர்ந்த சோலையப்பன் மகன் மணிகண்டன் (30). இவர் அங்குள்ள தனியார்

நெல்லையப்பர் கோயிலில் அக்.10-இல் திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்றம்

Posted: 06 Oct 2014 12:19 PM PDT

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் கோயிலில் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழா

திருவட்டாறு அருகே மாணவரை தாக்கியதாக ஆசிரியை மீது வழக்கு

Posted: 06 Oct 2014 12:19 PM PDT

திருவட்டாறு மாணவரைத் தாக்கியதாக ஆசிரியை மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். திருநந்திக்கரைப் பகுதியைச் சேர்ந்தவர் தங்கப்பன், ரப்பர் பால்வடிப்புத் தொழிலாளியான இவரது மகன்

திருவண்ணாமலையில் இன்று கிரிவலம்

Posted: 06 Oct 2014 12:19 PM PDT

புரட்டாசி மாத பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரர்

டிசம்பர் 5-இல் கார்த்திகை தீபத் திருவிழா: அருணாசலேஸ்வரர் கோயிலில் பூர்வாங்கப் பணிகள் தொடக்கம்

Posted: 06 Oct 2014 12:18 PM PDT

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெறுகிறது.

ஏழுதேசம் பேரூராட்சியில் ஜி.எஸ். மணி நினைவு தினம்

Posted: 06 Oct 2014 12:18 PM PDT

ஏழுதேசம் பேரூராட்சி மற்றும் வாவறை ஊராட்சிப் பகுதிகளில் ஜி.எஸ். மணி நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

ஒரு மணி நேரத்தில் அறிவிப்பை திரும்பப் பெற்ற தனியார் பள்ளிகள்

Posted: 06 Oct 2014 12:18 PM PDT

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி, குமரி மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் செவ்வாய்க்கிழமை (அக்.7) மூடப்படும் என்று அறிவித்த மாவட்ட நர்சரி, மெட்ரிக், ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளி கூட்டமைப்பினர், சிறிது நேரத்தில் அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றனர்.

பைங்குளம் ஊராட்சியில் "தூய்மை இந்தியா' திட்டம் தொடக்கம்

Posted: 06 Oct 2014 12:18 PM PDT

முன்சிறை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பைங்குளம் ஊராட்சியில் தூய்மை இந்தியா திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.

நவராத்திரி பூஜைக்கு திருவனந்தபுரம் சென்ற சுவாமி விக்ரகங்கள் குமரிக்கு திரும்பின

Posted: 06 Oct 2014 12:17 PM PDT

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நவராத்திரி பூஜைக்கு சென்ற குமரி மாவட்ட சுவாமி விக்ரகங்கள் திங்கள்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட எல்லையான களியக்காவிளைக்கு கொண்டு

ஈரான் சிறையில் உள்ள குமரி மீனவர்களை விடுதலை செய்யக் கோரி 10இல் ஆர்ப்பாட்டம்

Posted: 06 Oct 2014 12:17 PM PDT

ஈரான் நாட்டில் சிறைபிடிக்கப்பட்ட குமரி மாவட்ட மீனவர்கள் 4 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி, நாகர்கோவிலில் அக். 10ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த மீன் தொழிலாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.

சிற்றுந்து உரிமையாளர்கள் அமைதிப் பேரணி, அதிமுக மனிதச் சங்கிலி

Posted: 06 Oct 2014 12:17 PM PDT

அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி, தக்கலையில் சிற்றுந்து உரிமையாளர் சங்கம் சார்பில் அமைதிப் பேரணியும், அதிமுக சார்பில் மனிதச் சங்கிலி போராட்டமும் திங்கள்கிழமை

பக்ரீத்: மந்தாரம்புதூரில் சிறப்புத் தொழுகை

Posted: 06 Oct 2014 12:17 PM PDT

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பக்ரீத் பெருநாள் சிறப்புத் தொழுகை மந்தாரம்புதூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அக்டோபர் 7 மின் தடை

Posted: 06 Oct 2014 12:16 PM PDT

பூக்கடை மற்றும் கொல்லங்கோடு பகுதிகளில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை மின்விநியோகம் இருக்காது.

இன்று இந்துக் கல்லூரியில் இலக்கிய அரங்கம்

Posted: 06 Oct 2014 12:16 PM PDT

நாகர்கோவிலில் கவிமணியின் படைப்புகள் குறித்த இலக்கிய அரங்கம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (அக். 7) நடைபெறுகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கும் விழா

Posted: 06 Oct 2014 12:16 PM PDT

சகாயபுரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கும் விழா நடைபெற்றது. வீ கேர் அறக்கட்டளையின் 4ஆம் ஆண்டு தொடக்க விழா, மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்க

சுரண்டை அருகே கிணற்றில் தவித்த மயில் மீட்பு

Posted: 06 Oct 2014 12:15 PM PDT

சுரண்டை அருகே கிணற்றில் தவித்த மயிலை தீயணைப்பு மற்றும் மீட்புதுறையினர் மீட்டனர்.

திருவண்ணாமலையில் இன்று கிரிவலம்

Posted: 06 Oct 2014 12:15 PM PDT

புரட்டாசி மாத பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரர்

தூத்துக்குடி, கோவில்பட்டியில் பக்ரீத் சிறப்புத் தொழுகை

Posted: 06 Oct 2014 12:15 PM PDT

தூத்துக்குடியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திங்கள்கிழமை பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.

காயல்பட்டினம் கடற்கரையில் முஸ்லிம்கள் பக்ரீத் தொழுகை

Posted: 06 Oct 2014 12:15 PM PDT

காயல்பட்டினம் கடற்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் திங்கள்கிழமை பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

செய்துங்கநல்லூரில் பக்ரீத் பெருநாள் தொழுகை

Posted: 06 Oct 2014 12:14 PM PDT

செய்துங்கநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பக்ரீத் பெருநாள் விழா சிறப்புத் தொழுகை திங்கள்கிழமை நடைபெற்றது.

எட்டயபுரத்தில் நாயன்மார்கள் குருபூஜை

Posted: 06 Oct 2014 12:14 PM PDT

எட்டயபுரம் கான்சாபுரம் நகர் பாலவிநாயகர் திருக்கோயிலில் புரட்டாசி மாத நாயன்மார்கள் குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆழ்வார்திருநகரி பள்ளியில் மரக்கன்று நடும் விழா

Posted: 06 Oct 2014 12:14 PM PDT

ஆழ்வார்திருநகரி இந்து மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 மரக்கன்றுகள் நடப்பட்டன.

"15முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்

Posted: 06 Oct 2014 12:13 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 15 ஆம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அபாய நிலையில் பேருந்து நிறுத்தம்: சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

Posted: 06 Oct 2014 12:13 PM PDT

சாத்தான்குளம் அருகே சிறப்பூர் விலக்கில் உள்ள பேருந்து நிறுத்தத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வன விலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு: லோயர்கேம்ப்- சுருளியாறு சாலை மூடல்

Posted: 06 Oct 2014 12:12 PM PDT

மேகமலை வன உயிரின சரணாலயப் பகுதியில், வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதால்,

நாலுமாவடி ஸ்ரீபாதக்கரை சுவாமி கோயில் கொடை விழா

Posted: 06 Oct 2014 12:12 PM PDT

நாலுமாவடி ஸ்ரீபாதக்கரை சுவாமி கோயிலில் மகா ருத்ராபிஷேகம் மற்றும் கோயில் கொடை விழா 4 நாள்கள் நடைபெற்றன.

திருச்செந்தூரில் நாம ஜெப வேள்வி பூஜை

Posted: 06 Oct 2014 12:12 PM PDT

திருச்செந்தூரில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பண்டாரா டிரஸ்ட் சார்பில் உலக மக்கள் நன்மை அடைய வேண்டி ஜெப வேள்வி நடைபெற்றது.

தற்காப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Posted: 06 Oct 2014 12:11 PM PDT

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ளுதல் என்ற தலைப்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சாகுபுரம் அரிமா சங்க விழா

Posted: 06 Oct 2014 12:11 PM PDT

சாகுபுரம் அரிமா சங்கத்தில் அரிமா வட்டாரத் தலைவர் அதிகாரப்பூர்வ வருகைதின விழா நடைபெற்றது.

வடக்கு வண்டானம் புனித மிக்கேல் ஆலயத் திருவிழா சப்பர பவனி

Posted: 06 Oct 2014 12:11 PM PDT

கோவில்பட்டி அருகேயுள்ள வடக்கு வண்டானம் அதிதூதர் புனித மிக்கேல் ஆலயத் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை சப்பர பவனி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுகவினர் உண்ணாவிரதம், சிறப்பு வழிபாடு

Posted: 06 Oct 2014 12:11 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனையைக் கண்டித்து அதிமுகவினர் போராட்டங்களிலும், அவர் விரைவில் சிறையில் இருந்

காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்கு பாஜக நிதி சேகரிப்பு

Posted: 06 Oct 2014 12:11 PM PDT

காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்காக தூத்துக்குடியில் பாஜகவினர் திங்கள்கிழமை நிதி சேகரித்தனர்.

தூத்துக்குடியில் டாஸ்மாக் கிட்டங்கியில் திடீர் சோதனை

Posted: 06 Oct 2014 12:10 PM PDT

தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் அருகேயுள்ள கிட்டங்கியில் மதுரை மண்டல மேலாளர் தலைமையிலான குழுவினர் திங்கள்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.

வியாபாரிகள் சங்க ஆண்டு விழா

Posted: 06 Oct 2014 12:10 PM PDT

திருச்செந்தூரில் நாடார் வியாபாரிகள் சங்க ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

காவல்துறை வாகனம் கவிழ்ந்து காவலர்கள் மூவர் காயம்

Posted: 06 Oct 2014 12:08 PM PDT

தேனி அருகே திங்கள்கிழமை காவல் துறை வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததில் ஒரு காவலர் மற்றும் 2 சிறப்பு காவல் படை வீரர்கள் காயமடைந்தனர்.

இணைப்பு பாலத் திட்டத்தை செயல்படுத்த கோரிக்கைதேனி,

Posted: 06 Oct 2014 12:08 PM PDT

தேனி அருகே கோட்டூர்-கூழையனூருக்கு இடையே முல்லையாற்றின் குறுக்கே பாலம் அமைப்பதாக அறிவிக்கப்பட்ட திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆண்டிபட்டியில் அதிமுகவினர் உண்ணாவிரதம்

Posted: 06 Oct 2014 12:07 PM PDT

அதிமுக பொதுசெயலர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி ஆண்டிபட்டியில் உண்ணாவிரதம் நடைபெற்றது.

பக்ரீத் கொண்டாட்டம்

Posted: 06 Oct 2014 12:07 PM PDT

உத்தமபாளையம், சின்னமனூரில் பக்ரீத் சிறப்புத்தொழுகை நடைபெற்றது.

மாணவியை கேலி செய்தவர் கைது

Posted: 06 Oct 2014 12:07 PM PDT

ஆண்டிபட்டி அருகே பாலூத்தைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த பிச்சைமணி மகன் பிரபு(28) கேலி செய்தாராம்.

நத்தத்தில் சிறப்புத் தொழுகை

Posted: 06 Oct 2014 12:06 PM PDT

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நத்தத்தில் இஸ்லாமியர்கள் சிறப்புத்தொழுகை நடத்தினர்

கொடைக்கானல் மேல்மலையில் சேதமடைந்த சாலைகள்

Posted: 06 Oct 2014 12:05 PM PDT

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் சேதமடைந்த சாலைகளால் கிராம மக்கள் அவதியடைந்துள்ளனர். கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், கிளாவரை, பூண்டி, கூக்கால்,

சிவாலயங்களில் பிரதோஷ விழா

Posted: 06 Oct 2014 12:05 PM PDT

பழனியில் திங்கள்கிழமை சிவன் ஆலயங்களில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.

பள்ளியில் காந்தி ஜயந்தி விழா

Posted: 06 Oct 2014 12:05 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயாவில் காந்தி ஜயந்தி விழா தாளாளர் ஜி.எஸ்.முருகேசன் தலைமையில் நடைபெற்றது

சாத்தூரில் அதிமுகவினர் உண்ணாவிரதம்

Posted: 06 Oct 2014 12:05 PM PDT

 சாத்தூரில் திங்கள்கிழமை அதிமுகவினர் பாதயாத்திரை மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அதிமுக பொதுசெயலர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு,

ராஜபாளையம் வனப்பகுதியில் மழை: நீர்தேக்கத்துக்கு தண்ணீர் வரத்து

Posted: 06 Oct 2014 12:04 PM PDT

ராஜபாளையத்துக்கு மேற்கே வனப்பகுதியில் பெய்த பரவலான மழையால் ஆறாவது மைல் குடிநீர் தேக்கத்திற்கு தண்ணீர் வரத்து துவங்கியுள்ளது.

மாணவர்களை ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தி பாராட்ட வேண்டும்: நடிகர் தாமு

Posted: 06 Oct 2014 12:04 PM PDT

மாணவர்களை ஆசிரியர்கள் திட்டாமல், பாராட்டி கல்வி புகட்ட வேண்டும் என்று திரைப்பட நடிகர் தாமு கூறினார்.

சாத்தூரில் திருநங்கைகள் திடீர் போராட்டம்

Posted: 06 Oct 2014 12:04 PM PDT

சாத்தூரில் திருநங்கைகளை தவறாக பேசியதாக, தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருநங்கைகள் மறியலில் ஈடுபட்டனர்.

கம்பன் கழகக் கூட்டம்

Posted: 06 Oct 2014 12:04 PM PDT

அருப்புக்கோட்டை கம்பன் கழகக் கூட்டம் சொக்கநாதர் ஆலய வளாகத்தில் உள்ள சுப்பாராஜ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. செயலாளர் காசி இறைவணக்கம் பாடினார். ராமரும், ராமலிங்கரும் என்ற

கட்டுப்படுத்தப்படுமா

Posted: 06 Oct 2014 12:03 PM PDT

தீபாவளிப் பண்டிகை நெருங்கிவரும் நிலையில் காரைக்குடியில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கலைஞர் தமிழ்ச் சங்க ஆண்டு விழா

Posted: 06 Oct 2014 12:03 PM PDT

காரைக்குடி கலைஞர் தமிழ் சங்கத்தின் சார்பில் 17ஆம் ஆண்டு கலைஞர் விழா காரைக்குடி சுபலெட்சுமி மகாலில் சனிக்கிழமை நடைபெற்றது.

அண்ணா தொழிற் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

Posted: 06 Oct 2014 12:03 PM PDT

முதுகுளத்தூரில் அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பணிமனை முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி 4 நாள்களாக தொடர் நூதன போராட்டம் நடத்தினர்.

அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன பணியாளர்களுக்கு கடன் முறையில் கதர் விற்பனை: ஆட்சியர்

Posted: 06 Oct 2014 12:02 PM PDT

அரசுப் பணியாளர்களுக்கும், தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் கதர் ரகங்கள் கடன் முறையில் விற்பனை செய்யப்படும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

சாயல்குடியில் அதிமுகவினர் சிறப்பு வழிபாடு

Posted: 06 Oct 2014 12:02 PM PDT

சாயல்குடி மற்றும் மாரந்தையில் திங்கள்கிழமை அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா சிறையில் இருந்து விடுதலை பெற வேண்டி அதிமுகவினர் சிறப்பு வழிபாடு செய்தனர்.

தொடர்ந்து மோடியைப் பாராட்டினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்: சசி தரூருக்கு காங்கிரஸ் எச்சரிக்கை

Posted: 06 Oct 2014 12:02 PM PDT

பிரதமர் நரேந்திர மோடியை, தொடர்ந்து பாராட்டிப் பேசினால் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று

திண்டுக்கல் ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயிலில்அதிமுகவினர் தீபமேற்றி வழிபாடு

Posted: 06 Oct 2014 12:02 PM PDT

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா, வழக்கிலிருந்து விடுதலை பெற வேண்டி, திண்டுக்கல் நகர அதிமுக சார்பில் கோயில்களில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கொடைக்கானலில் சிறப்புத் தொழுகை

Posted: 06 Oct 2014 12:01 PM PDT

கொடைக்கானலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

வடமதுரையில் அதிமுகவினர் உண்ணாவிரதம்

Posted: 06 Oct 2014 12:01 PM PDT

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்து, சட்டப்பேரவை உறுப்பினர் ச.பழனிச்சாமி தலைமையில் வடமதுரையில் உண்ணாவிரத போராட்டம் மற்றும் கடையடைப்பு நடைபெற்றது.

புதிய கல்விக் கொள்கைக்கு மக்களிடம் ஆலோசனை கேட்கப்படும்: ஸ்மிருதி இரானி

Posted: 06 Oct 2014 12:01 PM PDT

தேசிய அளவிலான புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரிடம்

மலைவாழ் மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்

Posted: 06 Oct 2014 12:01 PM PDT

மலைவாழ் மக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம், சிறுமலையில் நடைபெற்றது.

அரசுப் பள்ளிகளின் செலவு விவரம் கண்காணிப்பு

Posted: 06 Oct 2014 12:00 PM PDT

பொது நிதி மேலாண்மை திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியின், செலவு விவரங்களை கண்காணிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

150 பேர் மொட்டையடித்து நேர்ச்சை

Posted: 06 Oct 2014 12:00 PM PDT

பழனி மலைக்கோயிலில் திருப்பூர் மாவட்டம் கொழுமம், குமரலிங்கத்தை சேர்ந்த அதிமுகவினர் 150 பேர் மொட்டையடித்து நேர்ச்சை செலுத்தினர்.

விவசாயிகளுக்குப் பயிற்சி

Posted: 06 Oct 2014 12:00 PM PDT

பழனியை அடுத்த ஆயக்குடியில் விதை கிராமத் திட்டத்தின் கீழ் பயறுவகை சாகுபடி விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

பூட்டை உடைத்து 4 பவுன் நகை திருட்டு

Posted: 06 Oct 2014 12:00 PM PDT

பழனி அருகே வீடு புகுந்து நான்கரை பவுன் நகையை திருடர்கள் திருடிச் சென்றதாக புகார் செய்யப்பட்டுள்ளது.

தூக்கிட்டு ஒருவர் தற்கொலை

Posted: 06 Oct 2014 12:00 PM PDT

பழனி அருகே மனைவி பிரிந்ததால் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பழனியை அடுத்த புஷ்பத்தூரைச் சேர்ந்தவர் சுப்ரமணி(35). இவரது மனைவி செல்வி. திருமணமாகி 12

கீழக்கரையில் பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகை

Posted: 06 Oct 2014 11:59 AM PDT

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை திங்கள்கிழமை திடல்களிலும் மசூதிகளிலும் நடைபெற்றன.

பரமக்குடியில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்

Posted: 06 Oct 2014 11:59 AM PDT

பரமக்குடி ஆர்ச் பகுதியில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி அக்கட்சியின் மருத்துவ அணி சார்பில் மனித சங்கிலி போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ராமேசுவரத்தில் அதிமுகவினர் கண்டன பேரணி

Posted: 06 Oct 2014 11:59 AM PDT

பெங்களூர் சிறையிலிருக்கும் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் பேரணியாக சென்று பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம் மற்றும் மனித சங்கிலி போராட்டங்களை நடத்தினர்.

ராமநாதபுரத்தில் அதிமுக மாணவரணியினர் உண்ணாவிரதம்

Posted: 06 Oct 2014 11:58 AM PDT

ராமநாதபுரத்தில் அதிமுக மாவட்ட மாணவரணியின் சார்பில் ஜெயலலிதாவை விடுதலை செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கமுதி பகுதி கோயில்களில் தசரா உற்சவம் நிறைவு

Posted: 06 Oct 2014 11:58 AM PDT

கமுதி பகுதி கோயில்களில் நவராத்திரி 9 நாள் உற்சவம் நிறைவு பெற்றது. இதையொட்டி நடைபெற்ற சுவாமி அம்பு விடும் உற்சவத்தில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

Posted: 06 Oct 2014 11:58 AM PDT

எமனேசுவரம் வரதராஜப் பெருமாள் காலனியில் செüராஷ்ட்ர மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் 7 நாள் சிறப்பு முகாம் அக்டோபர் 1ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிற

சாயல்குடியில் அதிமுகவினர் உண்ணாவிரதம்

Posted: 06 Oct 2014 11:58 AM PDT

சாயல்குடி தேவர் சிலை அருகே திங்கள்கிழமை அதிமுகவினர் உண்ணா விரதம் இருந்தனர்.

விலை வீழ்ச்சியால் சாலையில் கொட்டப்படும் முருங்கைக்காய்கள்

Posted: 06 Oct 2014 11:56 AM PDT

ஆண்டிபட்டி பகுதியில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சியடைந்ததால், சாலையில் கொட்டப்படுவதைத் தடுக்க, முருங்கைக்காய் பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தருண் கோகோய், சச்சினுக்கு மோடி பாராட்டு

Posted: 06 Oct 2014 11:56 AM PDT

"தூய்மை இந்தியா' திட்டத்தில் இணைந்த அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகோய், கிரிக்கெட் வீரர் சச்சின்

தேனி, போடியில் பக்ரீத் சிறப்புத் தொழுகை

Posted: 06 Oct 2014 11:56 AM PDT

தேனியில் திங்கள்கிழமை பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

தூய்மைப் பணியில் இளைஞர்கள் பங்கேற்பு

Posted: 06 Oct 2014 11:55 AM PDT

தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்த இளைஞர்கள் சீலையம்பட்டியில் திங்கள்கிழமை தூய்மைப் பணியை மேற்கொண்டனர்.

சூலப்புரத்தில் நாட்டு நலப் பணித்திட்ட முகாம்

Posted: 06 Oct 2014 11:55 AM PDT

போடி அருகே நடைபெற்ற நாட்டு நலப் பணித்திட்ட முகாமில் சேவைப் பணிகள் நடைபெற்றன.

முக்கிய இடங்களின் வரைபடங்களை வைத்திருந்ததாக இளைஞர் கைது

Posted: 06 Oct 2014 11:55 AM PDT

உத்தரப் பிரதேச மாநிலம்,  காஸ்கஞ்ச் ரயில் நிலையத்தில், முக்கிய கட்டடங்களின் வரைபடங்கள்,  எல்லைப்

காதல் திருமணத்தால் மோதல்: மூவர் காயம்

Posted: 06 Oct 2014 11:55 AM PDT

உத்தமபாளையம் அருகே காதல் திருமணத்தால் ஏற்பட்ட மோதலில் 3 பெண்கள் காயமடைந்தனர். ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

ஆட்சியைக் கைப்பற்றிய பிறகும் கோஷம் எழுப்புவதை பாஜக கைவிடவில்லை: சரத் யாதவ்

Posted: 06 Oct 2014 11:55 AM PDT

மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கோஷங்கள்

பக்ரீத் திருநாளை முன்னிட்டு முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை

Posted: 06 Oct 2014 11:54 AM PDT

விருதுநகரில் பக்ரீத் திருநாளை முன்னிட்டு முஸ்லிம்கள் ஈத்கா மைதானத்தில் திங்கள்கிழமை சிறப்பு தொழுகை நடத்தினர்.

பெண் கொலை வழக்கு: லாரி ஓட்டுநர் கைது

Posted: 06 Oct 2014 11:54 AM PDT

விருதுநகரில் பூட்டியிருந்த வீட்டுக்குள் பெண்ணைக் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 06 Oct 2014 11:54 AM PDT

விருதுநகர் மின் பகிர்மான கோட்டத்திற்கு உள்பட்ட மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் செவ்வாய்கிழமை (அக்.7) நடைபெறவுள்ளது.

ஜெயலலிதா விடுதலையாக வேண்டி தர்ஹாவில் சிறப்பு வழிபாடு

Posted: 06 Oct 2014 11:54 AM PDT

 சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டி

சிவகாசி பகுதியில் நெல் நடவு பணிகள் தொடக்கம்

Posted: 06 Oct 2014 11:53 AM PDT

சிவகாசி பகுதியில் நெல் நடவுப் பணி தொடங்கியுள்ளது.

அக்டோபர் 7 மின் தடை

Posted: 06 Oct 2014 11:53 AM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு மற்றும் வலையபட்டி துணை மின் நிலையங்களில் செவ்வாய்கிழமை(அக்.7) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே அன்றைய தினம்

பெண்ணிடம் 29 ஏக்கர் நிலம் மோசடி: சார்-பதிவாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு

Posted: 06 Oct 2014 11:53 AM PDT

விருதுநகர் அருகே பெண்ணிடம் 29 ஏக்கர் நிலம் மோசடி செய்ததாக ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள், சார்-பதிவாளர் உள்பட 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சொத்து தகராறு: தந்தை கொலை

Posted: 06 Oct 2014 11:52 AM PDT

குன்றத்தூரில் சொத்து தகராறில் தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தலைமறைவாக உள்ள அவரது மகனை போலீஸார் தேடி வருகின்றனர்.

லாரி மோதி இளைஞர் சாவு

Posted: 06 Oct 2014 11:52 AM PDT

அம்பத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் திங்கள்கிழமை இளைஞர் இறந்தார். அம்பத்தூர், பாடி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (26). தனியார் நிறுவன ஊழியர். திங்கள்கிழ

ஆரம்பாக்கத்தில் ரத்ததான முகாம்

Posted: 06 Oct 2014 11:52 AM PDT

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் சமூக மனிதநேய சங்கத்தின் சார்பில் காந்தி ஜெயந்தியையொட்டி ஞாயிற்றுக்கிழமை ரத்ததான முகாம் நடைபெற்றது.

தொகுப்பு வீட்டில் தீ விபத்து: ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் நாசம்

Posted: 06 Oct 2014 11:52 AM PDT

ஊத்துக்கோட்டை அருகே அரசின் தொகுப்பு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சாம்பலாகின.

சிவகாசியில் தூய்மைப் பணி

Posted: 06 Oct 2014 11:52 AM PDT

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் சிவகாசி நகர பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை ரயில் நிலையத்தில் தூய்மைப் பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் நகரத்

தெலங்கானா: 2 விவசாயிகள் தற்கொலை

Posted: 06 Oct 2014 11:52 AM PDT

தெலங்கானா மாநிலம், கரீம் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டனர்.

அக்டோபர் 8 மின் தடை

Posted: 06 Oct 2014 11:52 AM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டத்தில் உள்ள படிக்காசுவைத்தான்பட்டி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (அக்.8) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே அன்றைய தினம் காலை 9 மணி முதல் பகல் 2

தசரா கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு: பாஜக

Posted: 06 Oct 2014 11:52 AM PDT

பிகார் மாநிலம், பாட்னாவில் தசரா கூட்ட நெரிசலின்போது 33 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பணியிடமாற்றம்

எரிச்சநத்தத்தில் அதிமுகவினர் உண்ணாவிரதம்

Posted: 06 Oct 2014 11:52 AM PDT

ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி சிவகாசி ஒன்றிய அதிமுக சார்பில் திங்கள்கிழமை எரிச்சநத்தத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

காளான் வளர்ப்பு பயிற்சி முகாம்

Posted: 06 Oct 2014 11:51 AM PDT

சிவகாசி எஸ்.எப்.ஆர்.மகளிர் கல்லூரி தாவரவியல்துறை சார்பில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்வர் த.சசிரேகா தலைமை வகித்தா

ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் நூதனமுறையில் பணம் மோசடி

Posted: 06 Oct 2014 11:51 AM PDT

ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் நூதனமுறையில் பணம் மோசடி செய்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™