Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ஐ.நா.பொருளாதார, சமூக அமைப்பில் இந்தியா மீண்டும் தேர்வு
- கொபானேவுக்குள் நுழைந்தனர் சிரியா கிளர்ச்சியாளர்கள்
- இலங்கையில் நிலச்சரிவு: தமிழர்கள் 100 பேர் பலி?
- கடலில் மூழ்கிய படகை மீட்க ராமேசுவரம் மீனவர்கள் விரைவு
- மு.க.ஸ்டாலின் - வைகோ சந்திப்பு
- திண்டிவனம் அருகே கார் விபத்தில் தம்பதி சாவு
- ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு
- பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா: முதல்வர், அமைச்சர்கள் இன்று அஞ்சலி
- 1008 பால்குட ஊர்வலம்
- இந்த நாளில் அன்று (30.10.1984); மீனவர்கள் பிரச்னை; அடுத்த மாதம் இலங்கை - இந்திய அதிகாரிகள் பேச்சு
- பாழாகும் பாரம்பரிய வணிகம்
- பனை மரம் பண மரமல்ல
- சறுக்கல்!
- தில்லி ஆட்சி முட்டுக்கட்டை: மத்திய உள்துறை அமைச்சருடன் துணைநிலை ஆளுநர் சந்திப்பு
- அரசுப் பள்ளி உதவியாளர் பணியிட நியமனத்தை இறுதி செய்ய இடைக்காலத் தடை
- மதுரையில் பெண்கள் சிறை அடுத்தாண்டு செயல்படும்: டி.ஐ.ஜி. முகம்மது ஹனிபா
- பால் விலை உயர்வு: நவ.4-இல் மதிமுக ஆர்ப்பாட்டம்
- நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களை அதிகரிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஓ.பி.எஸ். கடிதம்
- தலைமைத் தேர்தல் அதிகாரியாக சந்தீப் சக்சேனா பொறுப்பேற்பு
- "இலங்கை வடக்கு மாகாணத்தில் ராணுவ நடவடிக்கைகளைக் குறைக்க வேண்டும்'
- காமன்வெல்த் ஊழல்: சுவிஸ் அதிகாரிகள் மூவரைக் கைது செய்ய நடவடிக்கை: நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்
- மகாராஷ்டிரம்: பதவியேற்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்த பாஜக திட்டம்
- வீடு புகுந்து கணவரை தாக்கி மனைவி, மகளிடம் நகை பறிப்பு
- மினி வேன் கவிழ்ந்ததில் 14 பெண்கள் காயம்
- அபாகஸ்: அரியலூர் மாணவர்கள் சாதனை
- காஷ்மீர் தேர்தலைப் புறக்கணிக்க ஹூரியத் மாநாட்டுக் கட்சி அழைப்பு
- ஜயங்கொண்டத்தில் தீவிர நோய்த்தடுப்பு நடவடிக்கை
- பாரம்பரிய உணவுத் திருவிழா
- "மாதிரி கிராமம்' திட்டத்தை விரைவாக நிறைவேற்றுங்கள்: எம்.பி.க்களுக்கு நிதின் கட்கரி கடிதம்
- வேப்பந்தட்டை அருகே மக்காசோள வயலில் நீரிடி
- பதவி உயர்வு , நிர்வாக மாறுதல் கலந்தாய்வு இன்று தொடக்கம்
- வாக்காளர் பட்டியல்: இன்று சிறப்பு கிராமசபைக் கூட்டம்
- தொழிற்கல்வி பயிற்றுநர் பணி :பரிந்துரையைச் சரிபார்க்கலாம்
- ஒடிஸாவில் பேருந்து கட்டணம் குறைப்பு
- மேற்கு வங்க மோதல் சம்பவம்: உண்மையைக் கண்டறிய பாஜக குழு
- திருவரங்குளம் அரசுப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்
- விராலிமலையில் சூரசம்ஹார விழா
- "உலகில் பக்கவாத நோயால் 15 கோடி பேர் பாதிப்பு'
- கணிணி சிட்டா, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் தாமதமின்றி கிடைக்க நடவடிக்கை தேவை
- குடியரசுத் தலைவர் விருது: மத்திய பல்கலைக்கழகங்கள் விண்ணப்பிக்கலாம்
- கணினி பயிற்றுநர் பணி:நாளை பதிவுமூப்பை சரிபார்க்கலாம்
- மாடியிலிருந்து விழுந்து காயமடைந்தவர் சாவு
- தஞ்சையில்லாரி மோதி இளைஞர் சாவு
- நாதுல்லா எல்லையில் வளர்ச்சிப் பணி: நாடாளுமன்றக் குழு ஆய்வு
- குடந்தையில் தங்கவிலாஸ் இன் ஹோட்டல் திறப்பு
- விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்
- பிரதமருடன் அஸ்ஸாம், நாகாலாந்து முதல்வர்கள் சந்திப்பு
- நண்பரின் மகன் கத்தியால் குத்தியதில் காயமடைந்தவர் சாவு
- தஞ்சையில் சலங்கை நாதம் கலைவிழா: அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனை
- காரைக்காலில் குழந்தைகள் அறிவியல் மாநாடு
- கல்வி மாவட்ட விளையாட்டுப் போட்டியில் சீர்காழி ச.மு.இ. பள்ளிக்கு கோப்பை
- திருவாரூர் மாவட்டத்தில்மார்க்சிஸ்ட் நாளை ஆர்ப்பாட்டம்
- ஐ.எஸ். அமைப்பில் சேர முயன்றதாக தமிழக இளைஞரிடம் விசாரணை
- அரசு நிர்ணய விலைக்குநிலம் வழங்க நில உரிமையாளர்களுக்கு ஆட்சியர் அழைப்பு
- வைத்தீஸ்வரன்கோவிலில் சூரசம்ஹாரம்
- இலக்கியவாதிகளை அங்கீகரிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்
- எட்டுக்குடி கோயிலில் கந்த சஷ்டி விழா
- அரவக்குறிச்சி பகுதியில் 2-வது நாளாக பலத்த மழை
- அமராவதி ஆற்றின் கரையோரம் பாதுகாப்புப் பணி: ஆட்சியர் ஆய்வு
- கரூர் மாவட்டத்தில் இன்று கிராமசபைக் கூட்டம்
- பால் விலை உயர்வை திரும்பப் பெற ஏஐடியுசி வலியுறுத்தல்
- பாஜக தேர்தல் பிரசாரக் குழு அமைப்பு
- குளித்தலை அருகே விவசாயி தூக்கிட்டுதற்கொலை
- ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டி
- அரியலூரில் கந்தசஷ்டி விழா
- இளம்பெண் பலாத்காரம்: இளைஞர் கைது
- திருமானூர் அருகே பெண் தற்கொலை
- ஓலையூரில் ரூ. 18 லட்சத்தில் நலத் திட்ட உதவி
- செட்டிக்குளம் மலைக்கோயிலில்...
- தேனூர் ஏரிக்கரையைப் பலப்படுத்தும் பணி ஆய்வு
- திரிணமூல் காங்கிரஸை பயங்கரவாத கட்சியாக அறிவிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு
- ஆலங்குடியில் சூரசம்ஹாரம்:பக்தர்கள் காவடி எடுத்து வழிபாடு
- ஆந்திரத்தில் மகளிர் குழுக்களிடம் மணல் குவாரிகளை ஒப்படைக்க அரசு முடிவு
- வம்பன் வேளாண் நிலையத்தில் நாளை கத்தரி சாகுபடி பயிற்சி
- உரங்களை அதிக விலைக்கு விற்கும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை
- கறம்பக்குடியில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
- பள்ளி மாணவியை கடத்திய இளைஞர் மீது வழக்கு
- நகராட்சி அலுவலகத்தில் அண்ணா,கருணாநிதி படங்களை வைக்க வலியுறுத்தல்
- பிறவி மருந்தீசர் கோயிலில் கந்த சஷ்டி விழா
- எட்டுக்குடி கோயிலில் கந்த சஷ்டி விழா
- அற உணர்வையும், அறிவார்ந்த ஆற்றலையும் சமயம் கொடுத்துள்ளது
- கங்கையை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
- நாகை: 434 ஊராட்சிகளில் இன்றுகிராம சபைக் கூட்டம்
- டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகள் தீவிரம்
- ஆற்றின் நீர்ப் போக்கை தடுக்கும் மீன் வலைகளை அகற்ற வேண்டும்
- வேளாண் இயந்திரங்கள் செயல்விளக்க பயிற்சி
- சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில் சூரசம்ஹார விழா
- நகராட்சி அலுவலகத்தில் அண்ணா,கருணாநிதி படங்களை வைக்க வலியுறுத்தல்
- "கருப்புப் பண விவகாரம்: உச்ச நீதிமன்றத்துக்கே பாராட்டு'
- தஞ்சாவூர்
- மகாராஷ்டிர பாஜக அரசில் பங்கேற்பதா? மூத்த தலைவர்களுடன் உத்தவ் தாக்கரே ஆலோசனை
- கொபானேவுக்குள் நுழைந்தனர் சிரியா கிளர்ச்சியாளர்கள்
- வங்கதேச எதிர்க்கட்சி மூத்த தலைவருக்கு மரண தண்டனை
- தேசியக் கொடியில் மாற்றம்: வாக்கெடுப்பு நடத்துகிறது நியூஸிலாந்து
- இலங்கையில் நிலச் சரிவு: 10 பேர் சாவு; 300 பேர் மாயம்
- கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
- ஜாம்பியா அதிபர் மைக்கேல் சாடா மரணம்
- திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: கோயில், பேரூராட்சி சார்பில் பக்தர்களுக்கு வசதிகள்
- "அதிக விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை'
- தூத்துக்குடி விபத்தில் காயமடைந்த மேலும் ஒருவர் சாவு
| ஐ.நா.பொருளாதார, சமூக அமைப்பில் இந்தியா மீண்டும் தேர்வு Posted: 29 Oct 2014 01:31 PM PDT ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக அமைப்பில் இந்தியா அதிக வாக்குகள் பெற்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுளளது. |
| கொபானேவுக்குள் நுழைந்தனர் சிரியா கிளர்ச்சியாளர்கள் Posted: 29 Oct 2014 01:30 PM PDT சிரியாவின் எல்லைப்புற நகரான கொபானேவில், இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுடன் போரிடுவதற்காக சிரியா கிளர்ச்சிப் படையினர் துருக்கி வழியாக அந்த நகருக்குள் புதன்கிழமை நுழைந்தனர். |
| இலங்கையில் நிலச்சரிவு: தமிழர்கள் 100 பேர் பலி? Posted: 29 Oct 2014 01:30 PM PDT இலங்கையின் மத்தியப் பகுதியில், பருவ மழை காரணமாக நேரிட்ட நிலச் சரிவில் சிக்கி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்கள் 100 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. |
| கடலில் மூழ்கிய படகை மீட்க ராமேசுவரம் மீனவர்கள் விரைவு Posted: 29 Oct 2014 01:20 PM PDT ராமேசுவரம் பகுதியிலிருந்து சில மாதங்களுக்கு முன்பு மீன் பிடிக்கச் சென்று கடல் சீற்றத்தால் படகு சேதமடைந்து கடலில் மூழ்கியது. |
| மு.க.ஸ்டாலின் - வைகோ சந்திப்பு Posted: 29 Oct 2014 01:20 PM PDT திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் மாமல்லபுரத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற ராமதாஸ் இல்லத் திருமண நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்டனர் |
| திண்டிவனம் அருகே கார் விபத்தில் தம்பதி சாவு Posted: 29 Oct 2014 01:18 PM PDT விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே டேங்கர் லாரி- கார் மோதியதில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், அவரது மனைவி உயிரிழந்தனர். |
| ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு Posted: 29 Oct 2014 01:18 PM PDT முதுகுளத்தூரில் தேவர் குருபூஜையை முன்னிட்டு ஆளில்லா விமானத்தில் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டு, தென் மண்டல ஐ.ஜி. அ.கு.சிங் முன்னிலையில் சோதனை செய்து இயக்கிக் காட்டப்பட்டது. |
| பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா: முதல்வர், அமைச்சர்கள் இன்று அஞ்சலி Posted: 29 Oct 2014 01:15 PM PDT ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பலரும் அரசின் சார்பில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்துகின்றனர். |
| Posted: 29 Oct 2014 01:09 PM PDT தேவர் குருபூஜையை முன்னிட்டு, புதன்கிழமை முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள தேவர் சிலைக்கு 1008 பால்குட அபிஷேகம், யாக பூஜை நடைபெற்றது. |
| இந்த நாளில் அன்று (30.10.1984); மீனவர்கள் பிரச்னை; அடுத்த மாதம் இலங்கை - இந்திய அதிகாரிகள் பேச்சு Posted: 29 Oct 2014 01:02 PM PDT மீனவர்கள் பிரச்னை; அடுத்த மாதம் இலங்கை - இந்திய அதிகாரிகள் பேச்சு |
| Posted: 29 Oct 2014 12:59 PM PDT மது நாட்டின் வணிகர்களின் நாடி நரம்புகளையெல்லாம் துண்டிக்கச் செய்யும் நாசகாரச் செயலுக்கு வழிகோலுவது தற்போது அறிமுகமாகி வருகிற இணையதள வணிகம் மற்றும் ஊக வணிகம் ஆகியவை. |
| Posted: 29 Oct 2014 12:57 PM PDT சங்கம் வளர்த்த தமிழ் மன்னர்களின் குலச் சின்னம் பனை மரமே. அன்று பனை மரம் என்பது பண மரம். தமிழர்களின் தேசிய பானம் "பனங்கள்'. தமிழர்கள் இனிப்புக்குப் பயன்படுத்தியது பனைவெல்லம் என்ற கருப்பட்டி. |
| Posted: 29 Oct 2014 12:53 PM PDT பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற சில மாதங்களிலேயே அனைவருக்கும் வங்கிக் கணக்கு, தூய்மை இந்தியா, எம்.பி.க்கள் கிராமங்களைத் தத்தெடுத்து மேம்படுத்துதல் போன்ற திட்டங்களைத் தொடங்கி அனைவரது பாராட்டுதல்களையும்... |
| தில்லி ஆட்சி முட்டுக்கட்டை: மத்திய உள்துறை அமைச்சருடன் துணைநிலை ஆளுநர் சந்திப்பு Posted: 29 Oct 2014 12:50 PM PDT மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் புதன்கிழமை சந்தித்துப் பேசினார். |
| அரசுப் பள்ளி உதவியாளர் பணியிட நியமனத்தை இறுதி செய்ய இடைக்காலத் தடை Posted: 29 Oct 2014 12:48 PM PDT அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களின் நியமனத்தை இறுதி செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| மதுரையில் பெண்கள் சிறை அடுத்தாண்டு செயல்படும்: டி.ஐ.ஜி. முகம்மது ஹனிபா Posted: 29 Oct 2014 12:45 PM PDT மதுரையில் பெண்கள் சிறையானது அடுத்த ஆண்டு முதல் செயல்படும் என மதுரை சரக டி.ஐ.ஜி. முகம்மது ஹனிபா கூறினார். |
| பால் விலை உயர்வு: நவ.4-இல் மதிமுக ஆர்ப்பாட்டம் Posted: 29 Oct 2014 12:44 PM PDT பால் விலை உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி மதிமுக சார்பில் நவம்பர் 4-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார். |
| நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களை அதிகரிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஓ.பி.எஸ். கடிதம் Posted: 29 Oct 2014 12:43 PM PDT ஐ.ஐ.டி., என்.ஐ.டி., உள்ளிட்ட முக்கிய கல்வி நிலையங்களில் மாணவிகள் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்குப் பயிற்சி அளிக்கும் மத்திய அரசின் திட்டத்திலுள்ள (மஈஅஅச) குறைகளைக் களைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். |
| தலைமைத் தேர்தல் அதிகாரியாக சந்தீப் சக்சேனா பொறுப்பேற்பு Posted: 29 Oct 2014 12:41 PM PDT தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா புதன்கிழமை பொறுப்பேற்றார். அவர் பிரவீண்குமாரிடம் இருந்து தனது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். தமிழகத்தின் 26-ஆவது தலைமைத் தேர்தல் அதிகாரியாக சந்தீப் சக்சேனா பொறுப்பேற்றுள்ளார். |
| "இலங்கை வடக்கு மாகாணத்தில் ராணுவ நடவடிக்கைகளைக் குறைக்க வேண்டும்' Posted: 29 Oct 2014 12:39 PM PDT இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் ராணுவத்தின் நடவடிக்கைகளைக் குறைக்க வேண்டும் என்று காமன்வெல்த் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா வலியுறுத்தினார். |
| காமன்வெல்த் ஊழல்: சுவிஸ் அதிகாரிகள் மூவரைக் கைது செய்ய நடவடிக்கை: நீதிமன்றத்தில் சிபிஐ தகவல் Posted: 29 Oct 2014 12:39 PM PDT தில்லியில் கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் ஊழல் வழக்குத் தொடர்பாக சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த நிறுவனத்தின் 3 பேரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. |
| மகாராஷ்டிரம்: பதவியேற்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்த பாஜக திட்டம் Posted: 29 Oct 2014 12:26 PM PDT மகாராஷ்டிரத்தில் பாஜகவின் முதல் முதல்வராக தேவேந்திர பட்னவீஸ் பதவியேற்கும் நிகழ்ச்சியை மும்பை வான்கடே மைதானத்தில் பிரம்மாண்டமாக நடத்த அக்கட்சி முடிவு செய்துள்ளது. |
| வீடு புகுந்து கணவரை தாக்கி மனைவி, மகளிடம் நகை பறிப்பு Posted: 29 Oct 2014 12:25 PM PDT தஞ்சாவூர் அருகே வல்லம் சென்னம்பட்டி சாலையில் உள்ள ஏகெüரியம்மன் நகரைச் சேர்ந்தவர் எஸ். மோகன்லால் (50). இவர் வல்லத்தில் டீ கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ராதா (48). மகள் சரண்யா தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். |
| மினி வேன் கவிழ்ந்ததில் 14 பெண்கள் காயம் Posted: 29 Oct 2014 12:25 PM PDT தஞ்சாவூர் அருகே பொய்யுண்டார்கோட்டையைச் சேர்ந்த சுமார் 20 பெண்கள் தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்ற வளைகாப்புக்கு வந்தனர். பிற்பகலில் மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். விளார் |
| அபாகஸ்: அரியலூர் மாணவர்கள் சாதனை Posted: 29 Oct 2014 12:25 PM PDT சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான அபாகஸ் போட்டியில் அரியலூரைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 27 பேர் தங்கம் பெற்றனர். |
| காஷ்மீர் தேர்தலைப் புறக்கணிக்க ஹூரியத் மாநாட்டுக் கட்சி அழைப்பு Posted: 29 Oct 2014 12:25 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு ஹூரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் சையது அலி ஷா கிலானி புதன்கிழமை அழைப்பு விடுத்தார். |
| ஜயங்கொண்டத்தில் தீவிர நோய்த்தடுப்பு நடவடிக்கை Posted: 29 Oct 2014 12:25 PM PDT அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் நகராட்சியில் நோய் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெறுகின்றன. |
| Posted: 29 Oct 2014 12:24 PM PDT அரியலூரில் பாரம்பரிய உணவுத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் நடைபெற்ற விழாவை |
| "மாதிரி கிராமம்' திட்டத்தை விரைவாக நிறைவேற்றுங்கள்: எம்.பி.க்களுக்கு நிதின் கட்கரி கடிதம் Posted: 29 Oct 2014 12:24 PM PDT பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள "நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதிரி கிராமம் திட்டம்' (சன்சத் கிராம யோஜ்னா) கீழ் பயன்பெறும் கிராமத்தை அடையாளம் கண்டு, திட்டத்தை விரைவுபடுத்த உடனே நடவடிக்கை எடுங்கள் என்று அனைத்து எம்.பி.க்களுக்கும் மத்திய கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நிதின் கட்கரி கடிதம் எழுதியுள்ளார். |
| வேப்பந்தட்டை அருகே மக்காசோள வயலில் நீரிடி Posted: 29 Oct 2014 12:24 PM PDT பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே மக்காச்சோள வயலில் செவ்வாய்க்கிழமை இரவு நீரிடி விழுந்தது. |
| பதவி உயர்வு , நிர்வாக மாறுதல் கலந்தாய்வு இன்று தொடக்கம் Posted: 29 Oct 2014 12:24 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில் பதவி உயர்வு மற்றும் நிர்வாக மாறுதலுக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுகிறது. |
| வாக்காளர் பட்டியல்: இன்று சிறப்பு கிராமசபைக் கூட்டம் Posted: 29 Oct 2014 12:23 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கான சிறப்பு கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. |
| தொழிற்கல்வி பயிற்றுநர் பணி :பரிந்துரையைச் சரிபார்க்கலாம் Posted: 29 Oct 2014 12:23 PM PDT தொழிற்கல்வி பயிற்றுநர் பணிக்கான பரிந்துரையை வெள்ளிக்கிழமைக்குள் (அக். 31) சரிபார்க்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: |
| ஒடிஸாவில் பேருந்து கட்டணம் குறைப்பு Posted: 29 Oct 2014 12:23 PM PDT டீசல் விலை அண்மையில் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒடிஸா மாநிலத்தில் பேருந்துக் கட்டணத்தை அந்த மாநில அரசு புதன்கிழமை குறைத்துள்ளது. |
| மேற்கு வங்க மோதல் சம்பவம்: உண்மையைக் கண்டறிய பாஜக குழு Posted: 29 Oct 2014 12:22 PM PDT மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக தொண்டர்கள் மீது திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து ஆய்வு செய்வதற்காக, பாஜக துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி தலைமையிலான உண்மை கண்டறியும் குழுவை, அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா புதன்கிழமை அமைத்துள்ளார். |
| திருவரங்குளம் அரசுப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் Posted: 29 Oct 2014 12:22 PM PDT புதுக்கோட்டை அருகே திருவரங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. |
| Posted: 29 Oct 2014 12:22 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| "உலகில் பக்கவாத நோயால் 15 கோடி பேர் பாதிப்பு' Posted: 29 Oct 2014 12:22 PM PDT உலகம் முழுவதும் பக்கவாத நோயால் 15 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் மாவட்ட சுகாதாரத் திட்ட அலுவலர் மருத்துவர் வி.சி. சுபாஷ்காந்தி. |
| கணிணி சிட்டா, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் தாமதமின்றி கிடைக்க நடவடிக்கை தேவை Posted: 29 Oct 2014 12:22 PM PDT கணினி சிட்டா, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் தாமதமின்றி கிடைக்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின் மாவட்டச் செயலாளர் த. செங்கோடன் வெளியிட்டுள்ள அறிக்கை: |
| குடியரசுத் தலைவர் விருது: மத்திய பல்கலைக்கழகங்கள் விண்ணப்பிக்கலாம் Posted: 29 Oct 2014 12:21 PM PDT உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த மத்திய பல்கலைக்கழகம், அவற்றின் ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளுக்கு குடியரசுத் தலைவரின் சிறப்பு விருதுகள் வழங்கப்படவுள்ளன. இவ்விருதுகள் பெற விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று குடியரசுத் தலைவரின் செயலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. |
| கணினி பயிற்றுநர் பணி:நாளை பதிவுமூப்பை சரிபார்க்கலாம் Posted: 29 Oct 2014 12:21 PM PDT சென்னை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள கணினி பயிற்றுநர் காலிப் பணியிடங்களுக்கு பி.எட்- கல்வித் தகுதியுடன் பி.எஸ்சி (கம்யூட்டர்சயின்ஸ் அல்லது இன்பர்மேசன் டெக்னாலஜி அல்லது கம்யூட் |
| மாடியிலிருந்து விழுந்து காயமடைந்தவர் சாவு Posted: 29 Oct 2014 12:21 PM PDT பட்டுக்கோட்டையில் மாடியிலிருந்து கீழே விழுந்ததில் காயமடைந்த இளைஞர் உயிரிழந்தார். திருவாரூர் மாவட்டம், பெருகவாழ்ந்தான் காவல் சரகம், தெற்கு நாணலூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் |
| தஞ்சையில்லாரி மோதி இளைஞர் சாவு Posted: 29 Oct 2014 12:21 PM PDT தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் இளைஞர் உயிரிழந்தார். |
| நாதுல்லா எல்லையில் வளர்ச்சிப் பணி: நாடாளுமன்றக் குழு ஆய்வு Posted: 29 Oct 2014 12:20 PM PDT சிக்கிம் மாநிலத்தில், இந்திய- சீன எல்லையில் அமைந்துள்ள நாதுல்லா கணவாயில் மேற்கொள்ள வேண்டிய உள்கட்டமைப்புப் பணிகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக பாதுகாப்புக்கான நாடாளுமன்றக் குழு அங்கு சென்றுள்ளது. |
| குடந்தையில் தங்கவிலாஸ் இன் ஹோட்டல் திறப்பு Posted: 29 Oct 2014 12:20 PM PDT கும்பகோணத்தில் நால்ரோடு அருகே தங்கவிலாஸ் இன் தி கிராண்ட் ஹோட்டல் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் Posted: 29 Oct 2014 12:20 PM PDT மழையால் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன். |
| பிரதமருடன் அஸ்ஸாம், நாகாலாந்து முதல்வர்கள் சந்திப்பு Posted: 29 Oct 2014 12:20 PM PDT அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகோய், நாகாலாந்து முதல்வர் டி.ஆர்.ஜெலியாங் ஆகிய இருவரும் தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை புதன்கிழமை சந்தித்துப் பேசினர். |
| நண்பரின் மகன் கத்தியால் குத்தியதில் காயமடைந்தவர் சாவு Posted: 29 Oct 2014 12:20 PM PDT மதுக்கூரில் நண்பரின் மகன் கத்தியால் குத்தியதில் காயமடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். |
| தஞ்சையில் சலங்கை நாதம் கலைவிழா: அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனை Posted: 29 Oct 2014 12:19 PM PDT தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் சலங்கை நாதம்- 2014 கலை விழா நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. |
| காரைக்காலில் குழந்தைகள் அறிவியல் மாநாடு Posted: 29 Oct 2014 12:19 PM PDT காரைக்காலில் குழந்தைகள் அறிவியல் மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் தயார் செய்திருந்த 107 ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. |
| கல்வி மாவட்ட விளையாட்டுப் போட்டியில் சீர்காழி ச.மு.இ. பள்ளிக்கு கோப்பை Posted: 29 Oct 2014 12:18 PM PDT சீர்காழி ச.மு.இ. மேல்நிலைபள்ளி மயிலாடுதுறை கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் அதிக புள்ளிகளை பெற்று வீரப்பபிள்ளை வெள்ளி கோப்பையை வென்றது. |
| திருவாரூர் மாவட்டத்தில்மார்க்சிஸ்ட் நாளை ஆர்ப்பாட்டம் Posted: 29 Oct 2014 12:18 PM PDT தமிழக அரசு அறிவித்துள்ள பால் உயர்வைக் கண்டித்தும் அறிவிக்கப்படவுள்ள உத்தேச மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், திருவாரூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (அக்.31) 10 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. |
| ஐ.எஸ். அமைப்பில் சேர முயன்றதாக தமிழக இளைஞரிடம் விசாரணை Posted: 29 Oct 2014 12:18 PM PDT இராக்கில் செயல்படும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர முயன்றதாக ஹைதராபாதில் வசிக்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த 30 வயது மென்பொருள் பொறியாளரை போலீஸôர் பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை விடுவித்தனர். |
| அரசு நிர்ணய விலைக்குநிலம் வழங்க நில உரிமையாளர்களுக்கு ஆட்சியர் அழைப்பு Posted: 29 Oct 2014 12:18 PM PDT அதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்தின்கீழ், அரசு நிர்ணய விலைக்கு நிலம் வழங்க நில உரிமையாளர்கள் முன்வர வேண்டும் என்று நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். |
| வைத்தீஸ்வரன்கோவிலில் சூரசம்ஹாரம் Posted: 29 Oct 2014 12:17 PM PDT சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் சூரசம்ஹார விழா புதன்கிழமை நடைபெற்றது. தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமானது தையல்நாயகி அம்மன் உடனுறை வைத்தியநாதசுவாமி கோயில். |
| இலக்கியவாதிகளை அங்கீகரிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் Posted: 29 Oct 2014 12:17 PM PDT இலக்கியவாதிகளை அங்கீகரிக்கும் மனப்பான்மையை தமிழர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார் சாகித்ய அகாதெமி ஒருங்கிணைப்பாளர் கி. நாச்சிமுத்து. |
| எட்டுக்குடி கோயிலில் கந்த சஷ்டி விழா Posted: 29 Oct 2014 12:17 PM PDT திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் பிரதான நிகழ்வான சூரசம்ஹாரம் புதன்கிழமை நடைபெற்றது. |
| அரவக்குறிச்சி பகுதியில் 2-வது நாளாக பலத்த மழை Posted: 29 Oct 2014 12:16 PM PDT கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியப் பகுதிகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக புதன்கிழமை பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. |
| அமராவதி ஆற்றின் கரையோரம் பாதுகாப்புப் பணி: ஆட்சியர் ஆய்வு Posted: 29 Oct 2014 12:16 PM PDT அமராவதி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றுக்குள் யாரும் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், அந்தந்த காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் போலீஸார் |
| கரூர் மாவட்டத்தில் இன்று கிராமசபைக் கூட்டம் Posted: 29 Oct 2014 12:16 PM PDT கரூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை (அக். 30) 157 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது. |
| பால் விலை உயர்வை திரும்பப் பெற ஏஐடியுசி வலியுறுத்தல் Posted: 29 Oct 2014 12:15 PM PDT பால் விலை உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் என ஏஐடியுசி வலியுறுத்தியுள்ளது. |
| பாஜக தேர்தல் பிரசாரக் குழு அமைப்பு Posted: 29 Oct 2014 12:15 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தேர்தல் பிரசாரக் குழுவை பாஜக அறிவித்துள்ளது. |
| குளித்தலை அருகே விவசாயி தூக்கிட்டுதற்கொலை Posted: 29 Oct 2014 12:15 PM PDT குளித்தலை அருகேயுள்ள பெரியகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பி. ஆண்டியப்பன் (60), விவசாயி. இவர் தனது வீட்டின் அருகே உள்ள வேலமரத்தில் புதன்கிழமை தூக்கிட்டு இறந்துகிடந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குளித்தலை போலீஸார், சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், |
| ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டி Posted: 29 Oct 2014 12:15 PM PDT "ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடவுள்ளது' என்று அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அம்பிகா சோனி தெரிவித்தார். |
| Posted: 29 Oct 2014 12:15 PM PDT அரியலூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்ஹார நிகழ்ச்சி புதன்கிழமை மாலை நடைபெற்றது. |
| இளம்பெண் பலாத்காரம்: இளைஞர் கைது Posted: 29 Oct 2014 12:14 PM PDT அரியலூர் அருகே உள்ள சொக்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம் (45) சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார். இவரின் 17 வயது மகள் அரியலூர் அரசுக் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் வேலாயுதம் சென்னையில் நேரிட்ட விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார். அவரை பார்ப்பதற்காக வேலாயுதத்தின் மனைவி |
| Posted: 29 Oct 2014 12:14 PM PDT அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள கீழப்பழூவூர் காவல் சரகம், செம்மந்தங்குடி கிராமம் மேலத்தெருவைச் சேர்ந்த காசிராஜன் மகள் வேம்பு(25). இவருக்கும், தஞ்சை மாவட்டம், நாகல்குழியைச் சேர்ந்த உலகநாதனுக்கும் (29) கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. வேம்பு சற்று மனநிலை |
| ஓலையூரில் ரூ. 18 லட்சத்தில் நலத் திட்ட உதவி Posted: 29 Oct 2014 12:13 PM PDT அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள ஓலையூர் கிராமத்தில் புதன்கிழமை நடந்த மனுநீதி நாள் நிறைவு விழாவில் ரூ. 17.78 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வழங்கினார் |
| செட்டிக்குளம் மலைக்கோயிலில்... Posted: 29 Oct 2014 12:13 PM PDT பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளம் தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கந்தசஷ்டி விழா புதன்கிழமை நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கி தண்டாயுதபாணிக்கு சிறப்பு பூஜை, ஏ |
| தேனூர் ஏரிக்கரையைப் பலப்படுத்தும் பணி ஆய்வு Posted: 29 Oct 2014 12:13 PM PDT பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்தில் சேதமடைந்து சீரமைக்கப்படும் தேனூர் ஏரிக்கரையை புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. |
| திரிணமூல் காங்கிரஸை பயங்கரவாத கட்சியாக அறிவிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு Posted: 29 Oct 2014 12:13 PM PDT திரிணமூல் காங்கிரஸ் கட்சியை "பயங்கரவாதக் கட்சி'யாக அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் மேற்கு வங்க மாநில பாஜக மனு கொடுத்துள்ளது. |
| ஆலங்குடியில் சூரசம்ஹாரம்:பக்தர்கள் காவடி எடுத்து வழிபாடு Posted: 29 Oct 2014 12:12 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் கந்தசஷ்டி விழா மற்றும் சூரசம்ஹார விழாவையொட்டி புதன்கிழமை காவடி எடுத்து பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். |
| ஆந்திரத்தில் மகளிர் குழுக்களிடம் மணல் குவாரிகளை ஒப்படைக்க அரசு முடிவு Posted: 29 Oct 2014 12:12 PM PDT ஆந்திர மாநிலத்தில் பொருளாதாரத்தில் பெண்கள் முன்னேற்றம் அடைவதற்காக, மணல் குவாரிகளை நடத்தும் பொறுப்பை மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் அந்த மாநில அரசு ஒப்படைக்க உள்ளது. |
| வம்பன் வேளாண் நிலையத்தில் நாளை கத்தரி சாகுபடி பயிற்சி Posted: 29 Oct 2014 12:12 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வம்பன் வேளாண் நிலையத்தில் கத்தரி சாகுபடி பயிற்சி வெள்ளிக்கிழமை (அக். 31) நடைபெறவுள்ளது. |
| உரங்களை அதிக விலைக்கு விற்கும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை Posted: 29 Oct 2014 12:12 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனியார், கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து வேளாண் இணை இயக்குநர் கே.எம். ஷாஜஹான் வெளியிட்ட செய்திக் குறிப்பு: |
| கறம்பக்குடியில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு Posted: 29 Oct 2014 12:11 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். |
| பள்ளி மாணவியை கடத்திய இளைஞர் மீது வழக்கு Posted: 29 Oct 2014 12:11 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள அம்மன்பட்டியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்துவந்தார். இந்த நிலையில், புகாரின் பேரில், கடந்த 23-ம் தேதி பள்ளிக்குச் சென்ற மாணவியை கடத்திச் சென்றதாக அதே கிராமத்தைச் சேர்ந்த சிதம்பரம் மகன் கலைச்செல்வன் மீது திருமயம் |
| நகராட்சி அலுவலகத்தில் அண்ணா,கருணாநிதி படங்களை வைக்க வலியுறுத்தல் Posted: 29 Oct 2014 12:11 PM PDT திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, மு. கருணாநிதி மற்றும் டாக்டர் அம்பேத்கர் படங்களை வைக்க வேண்டுமென்று புதன்கிழமை நடைபெற்ற நகராட்சிக் கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர். |
| பிறவி மருந்தீசர் கோயிலில் கந்த சஷ்டி விழா Posted: 29 Oct 2014 12:10 PM PDT திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசர் கோயிலில் அமைந்துள்ள முருகன் சன்னதியில் கந்தர் சஷ்டி விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| எட்டுக்குடி கோயிலில் கந்த சஷ்டி விழா Posted: 29 Oct 2014 12:10 PM PDT திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் பிரதான நிகழ்வான சூரசம்ஹாரம் புதன்கிழமை நடைபெற்றது. |
| அற உணர்வையும், அறிவார்ந்த ஆற்றலையும் சமயம் கொடுத்துள்ளது Posted: 29 Oct 2014 12:10 PM PDT சமயம் அற உணர்வையும், அறிவார்ந்த ஆற்றலையும் கொடு த்துள்ளது என்றார் வேளாக்குறிச்சி ஆதீனம் தவத்திரு சத்திய ஞான மகாதேவ தேசிக பராமாச்சாரிய அடிகளார். |
| கங்கையை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் Posted: 29 Oct 2014 12:09 PM PDT கங்கை நதியை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| நாகை: 434 ஊராட்சிகளில் இன்றுகிராம சபைக் கூட்டம் Posted: 29 Oct 2014 12:09 PM PDT வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்புப் பணி குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில், நாகை மாவட்டத்தில் உள்ள 434 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை (அக். 30) நடைபெறவுள்ளது. |
| டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகள் தீவிரம் Posted: 29 Oct 2014 12:09 PM PDT நீடாமங்கலம் ஒன்றியத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. |
| ஆற்றின் நீர்ப் போக்கை தடுக்கும் மீன் வலைகளை அகற்ற வேண்டும் Posted: 29 Oct 2014 12:09 PM PDT ஆற்றின் நீர்ப் போக்கைத் தடுக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள மீன், இறால் வலைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றார் நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி. |
| வேளாண் இயந்திரங்கள் செயல்விளக்க பயிற்சி Posted: 29 Oct 2014 12:09 PM PDT நாகை மாவட்டம், சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வேளாண் இயந்திரங்கள் செயல்விளக்கப் பயிற்சி முகாம் நவ. 3-ம் தேதி நடைபெறுகிறது. |
| சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில் சூரசம்ஹார விழா Posted: 29 Oct 2014 12:08 PM PDT நாகை மாவட்டம், சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில் கந்த சஷ்டி பெரு விழாவையொட்டி, சூரசம்ஹார நிகழ்ச்சி புதன்கிழமை மாலை நடைபெற்றது. சிக்கல் நவநீதேசுவர சுவாமி கோயிலில் தனி சன்னிதி கொண்டு காட்சியளிப்பவர் சிக்கல் சிங்காரவே |
| நகராட்சி அலுவலகத்தில் அண்ணா,கருணாநிதி படங்களை வைக்க வலியுறுத்தல் Posted: 29 Oct 2014 12:08 PM PDT திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, மு. கருணாநிதி மற்றும் டாக்டர் அம்பேத்கர் படங்களை வைக்க வேண்டுமென்று புதன்கிழமை நடைபெற்ற நகராட்சிக் கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர். |
| "கருப்புப் பண விவகாரம்: உச்ச நீதிமன்றத்துக்கே பாராட்டு' Posted: 29 Oct 2014 12:07 PM PDT கருப்புப் பணம் தொடர்பான வழக்கில் வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர்ப் பட்டியலை வெளிக்கொண்டு வந்ததற்கு உச்ச நீதிமன்றத்துக்கே பாராட்டுகள் உரித்தாகும் என்று சிவசேனை கட்சி கூறியது. |
| Posted: 29 Oct 2014 12:07 PM PDT |
| மகாராஷ்டிர பாஜக அரசில் பங்கேற்பதா? மூத்த தலைவர்களுடன் உத்தவ் தாக்கரே ஆலோசனை Posted: 29 Oct 2014 12:05 PM PDT மகாராஷ்டிரத்தில் அமைய உள்ள பாஜக அரசில் பங்கேற்பதா, வேண்டாமா என்பது குறித்து சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரே தன் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். எனினும், அக்கட்சி இப்போதைக்கு பாஜக அரசில் சேராது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| கொபானேவுக்குள் நுழைந்தனர் சிரியா கிளர்ச்சியாளர்கள் Posted: 29 Oct 2014 11:59 AM PDT சிரியாவின் எல்லைப்புற நகரான கொபானேவில், இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுடன் போரிடுவதற்காக சிரியா கிளர்ச்சிப் படையினர் துருக்கி வழியாக அந்த நகருக்குள் புதன்கிழமை நுழைந்தனர். |
| வங்கதேச எதிர்க்கட்சி மூத்த தலைவருக்கு மரண தண்டனை Posted: 29 Oct 2014 11:58 AM PDT வங்கதேச சுதந்திரப் போரின்போது போர்க்குற்றத்தில் ஈடுபட்ட வழக்கில், ஜமாத்-ஏ-இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் மோதியுர் ரஹ்மான் நிஜாமிக்கு (71) புதன்கிழமை மரண தண்டனை விதிக்கப்பட்டது. |
| தேசியக் கொடியில் மாற்றம்: வாக்கெடுப்பு நடத்துகிறது நியூஸிலாந்து Posted: 29 Oct 2014 11:57 AM PDT பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தில் நியூஸிலாந்து இருந்ததை நினைவுபடுத்தும் வகையில் உள்ள, அந்த நாட்டின் தேசியக் கொடியில் மாற்றம் கொண்டு வரலாமா, வேண்டாமா என்பது குறித்து அடுத்த ஆண்டு பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என பிரதமர் ஜான் கீ புதன்கிழமை தெரிவித்தார். |
| இலங்கையில் நிலச் சரிவு: 10 பேர் சாவு; 300 பேர் மாயம் Posted: 29 Oct 2014 11:56 AM PDT இலங்கையின் மத்தியப் பகுதியில், பருவ மழை காரணமாக நேரிட்ட நிலச் சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். 300 பேரைக் காணவில்லை. |
| கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் Posted: 29 Oct 2014 11:54 AM PDT கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| ஜாம்பியா அதிபர் மைக்கேல் சாடா மரணம் Posted: 29 Oct 2014 11:54 AM PDT மத்திய ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவின் அதிபர் மைக்கேல் சாடா (77) உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்ததாக அந்நாட்டு அரசு புதன்கிழமை அறிவித்தது. |
| திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: கோயில், பேரூராட்சி சார்பில் பக்தர்களுக்கு வசதிகள் Posted: 29 Oct 2014 11:54 AM PDT திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா சூரசம்ஹாரத்தையொட்டி பேரூராட்சி சார்பில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டிருந்தன |
| "அதிக விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை' Posted: 29 Oct 2014 11:53 AM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு உரம் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை இணை இயக்குநர் தட்சிணாமூர்த்தி எச்சரிக்கைவிடுத்துள்ளார். |
| தூத்துக்குடி விபத்தில் காயமடைந்த மேலும் ஒருவர் சாவு Posted: 29 Oct 2014 11:53 AM PDT தூத்துக்குடியில் அண்மையில் நிகழ்ந்த கார் விபத்தில் 5 பேர் இறந்த நிலையில் காயமடைந்தவர்களில் மேலும் ஒருவர் புதன்கிழமை இறந்தார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |