Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


அயிட்டம் டான்சர் நடிகையான அனுஷ்கா சர்மா!

Posted:

பாலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களே எந்தவித தயக்கமும் இன்றி அயிட்டம் பாடல்களில் நடனமாடுவார்கள். ஆனால் அனுஷ்கா சர்மா மட்டும் இதுவரை பல வாய்ப்புகள் தேடிச்சென்றபோதும் அதை ஏற்கவில்லை. காரணம், அயிட்டம் பாடல் என்கிறபோது அதிக ஆடைகுறைப்பு செய்யச்சொல்வார்கள் என்பதால் அந்த வாய்ப்புகளை கட்டாயமாக தவிர்த்து வந்தார்.

ஆனால், ...

கத்தி திரையிடப்படும் தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீச்சு !

Posted:

சென்னையில், தீபாவளிக்கு நடிகர் விஜய்யின் "கத்தி திரைப்படம் வெளியாகவிருந்த திரையரங்கின் மீது நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். "கத்தி திரைப்படத்தை வெளியிடுவது தொடர்பாக ஏற்கெனவே சர்ச்சை இருந்து வந்த நிலையில், தீபாவளிக்கு வெளியாக இருக்கும் "கத்தி ...

அமரகாவியம் சத்யாவின் படம் பிஸ்னல் ஆகவில்லையாம்!

Posted:

ஆர்யாவின் தம்பி சத்யா நடித்த முதல் படம படித்துறை. ஆனால் அந்த படம் இன்னமும் கிடப்பில் கிடக்கிறது. அதையடுத்து சின்னத்திரை நடிகர் விஜய் ஆதிராஜ் நடித்த புத்தகம் படத்தில் நடித்தார். அந்த படம் வெளியானது ஆனால் ஓடவில்லை. அதனால் தம்பிக்காக ஆர்யாவே தயாரிப்பாளராக களமிறங்கி அமரகாவியம் என்ற படத்தை தயாரித்தார். நான் படத்தை இயக்கிய ஜீவா ...

காமெடி சூப்பர் ஸ்டாரை தூக்கியெறிந்த சந்தானம்!

Posted:

சந்தானத்தின் மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது அவர் வைத்ததுதான் சட்டமாக இருந்தது. அவர் எப்போது கால்சீட் கொடுக்கிறாரோ அப்போது வரை ஹீரோக்கள் காத்திருக்க வேண்டும். அதோடு அந்த காலகட்டத்தில் காமெடி கதைகளே அதிகமாக வெற்றி பெற்று வந்ததால், தாங்கள் பேசி நடிக்கும் காமெடி காட்சிகளுக்கான வசனங்களைகூட சந்தானத்திடம்தான் கேட்டு வாங்கி ...

ப்ரியாஆனந்தைத் தொடர்ந்து சரக்கு சர்ச்சையில் சிக்கிய காஜல்அகர்வால்!

Posted:

அரிமா நம்பி படத்தில் ஒரு காட்சியில் சரக்கு அடிப்பது போன்று நடித்திருந்தார் ப்ரியாஆனந்த். அதையடுத்து ஒரு தமிழ்நாட்டுப்பெண் இப்படி சரக்கு அடிப்பது போன்று நடிக்கலாமா? என்று கேள்விகள் எழுந்தது.அதையடுத்து, நான் நிஜ சரக்கு அடித்து நடிக்கவில்லை. கூல் டிரிங்ஸ்தான் குடித்தபடி நடித்தேன். மேலும், டைரக்டர் அப்படியொரு காட்சியில் நடிக்க ...

பூஜையிலும் தொடரும் ஸ்ருதிஹாசனின் செண்டிமென்ட்!

Posted:

ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள 13வது படம் பூஜை. இந்த படத்தில் விஷால்-ஸ்ருதிஹாசன்-சத்யராஜ் முக்கிய வேடங்களில நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருககிறார். தீபாவளிக்கு வெளியாகும் இப்படம் இதுவரை விஷால் படங்கள் இல்லாத அளவுக்கு 1108 தியேட்டர்களில் வெளியாவதாக அதிகாரப்பூர்வமான செய்தி வெளியாகியிருக்கிறது.

அந்த வகையில், ...

ஒரே நாளில் லிங்கா பட டப்பிங்கை பேசி முடித்த ரஜினி!

Posted:

ஒரே நாளில் லிங்கா படத்தின் டப்பிங்கை பேசி முடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். கோச்சடையான் படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்து வரும் படம் லிங்கா. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் இப்படத்தில், ரஜினி ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ...

கேரள ரயில்களில் கத்தி போஸ்டர் - விஜய் படத்திற்கு செம வரவேற்பு!

Posted:

தமிழகத்தில் விஜய் படத்திற்கு எந்தளவுக்கு மாஸ் இருக்கிறதோ... அதே அளவு மாஸ் கேரளாவிலும் இருக்கிறது. அங்குள்ள மம்மூட்டி, மோகன்லால் படங்களை போலவே விஜய்யின் படத்தையும் கேரள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், கேரளாவில் ஓடும் ரயில்கள், பஸ்களில் எல்லாம் விஜய்யின் படங்களின் போஸ்டரை ஒட்டியுள்ளனர். விஜய்யின் கத்தி படம் ...

அஜீத் 56 படத்திற்கு தயாரிப்பாளர் யார்?

Posted:

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்ற சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் அஜீத். சிவா இயக்கிய வீரம் படத்தில் நடித்தபோதே அவர் ...

'போடா ஆண்டவனே நம்ம பக்கம்' - கண்ணன் இயக்கும் பட டைட்டில் இது

Posted:

ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சேட்டை படங்களை இயக்கிய ஆர்.கண்ணன், தற்போது ''ஒரு ஊர்ல ரெண்டு ராஜா'' படத்தை இயக்கி வருகிறார். விமல், சூரி, ப்ரியா ஆனந்த், விஷாகா நடித்திருக்கிறார்கள். யூ சான்றிதழுடன் படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. அடுத்த மாதம் 7ந் தேதி ரிலீசாகிறது.

பொதுவாக ஒரு சொந்த கதைப் படம், ஒரு ...

நடிகர் ஆனார் தீபிகாவின் தந்தை!

Posted:

இந்தி முன்னணி நடிகை தீபிகா படுகோனேவின் தந்தை பிரகாஷ். இவர் ஒரு பேட்மிட்டன் விளையாட்டு வீரர். மகளையும் பேட்மிட்டன் வீராங்கனையாகத்தான் வளர்த்தார், ஆனால் அவர் நடிகையாகிவிட்டார். தீபிகா ஒரு தனியார் வங்கியின் விளம்பர தூதராக இருக்கிறார். அந்த வங்கியின் விளம்பர படங்களில் நடித்து வருகிறார். பென்சன் தொடர்பான அந்த வங்கியின் ...

கடைசிநேர இழுபறியில் கத்தி... திட்டமிட்ட படி படம் வெளிவருமா...?!

Posted:

கத்தி படத்தில், லைகா படத்தின் பேனரை அகற்ற தயாரிப்பாளர் தரப்பு மறுத்து வருவதால் கத்தி படம் திட்டமிட்டபடி வெளிவருமா...? என்பது சந்தேகமாகியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய், சமந்த நடிப்பில் உருவாகியுள்ள படம் கத்தி. இப்படத்தை லண்டனை சேர்ந்த லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அல்லிராஜா, ...

'முகமூடி' நாயகியின் முன்னேற்றம்...

Posted:

'முகமூடி' என்ற ஒரு படத்தை இயக்கியதையே மறக்க வேண்டும் என்றுதான் அந்தப் படத்தை இயக்கிய மிஷ்கினே நினைத்திருப்பார். அந்தப் படத்தில் சூர்யாதான் முதலில் நடிப்பதாக இருந்தது, அவர் மறுத்த கதையில்தான் ஜீவா நடித்தார். நல்ல வேளை அந்தப் படத்தில் நடிக்காமல் இருந்தோமே என சூர்யா அந்த அளவிற்கு மகிழ்ந்திருப்பார். 'முகமூடி' படத்தில் நாயகியாக ...

பாகுபலி - ருத்ரமாதேவி போட்டி ஆரம்பம்...

Posted:

தெலுங்குத் திரையுலகில் தற்போது இரண்டு படங்களுக்கு இடையேயான ஆரோக்கியமான போட்டி ஆரம்பமாகியுள்ளது. 'நான் ஈ' படத்தை இயக்கிய ராஜமௌலி 'பாகுபலி' என்ற சரித்திரப் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இந்தப் படம் ஒரு சரித்திரப் படமாக உருவாகி வருகிறது. ...

ஆம்பள படத்தில் ஆண்ட்ரியா!

Posted:

''அரண்மனை'' படத்திற்கு பிறகு சுந்தர்.சி இயக்கும் படம் ஆம்பள. இதில் விஷால் ஹீரோ. ஹன்சிகா உள்பட மூன்று ஹீரோயின்கள். ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா என்ற மூன்ற மாஜி ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். விஷாலுக்கு மூன்று அத்தைகள் அவர்கள் தங்கள் மகளை விஷாலுக்கு கட்டி வைக்க போடும் போட்டிதான் கதை. அதில் ரம்யா கிருஷ்ணன் மகளாக ஹன்சிகாக ...

ரஜினி வாழ்த்துக்கு ஜெயலலிதா நன்றி

Posted:

சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் சுப்ரீம் கோர்ட் ஜாமீன் அளித்ததையடுத்து வெளியே வந்துள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு, நடிகர் ரஜினி நேற்று வாழ்த்து அனுப்பி இருந்தார். அதில், ஜெயலலிதா ஆரோக்யத்துடனும் நலமுடனும் இருக்கவும் வாழ்த்து தெரிவித்த ரஜினி, தீபாவளி வாழ்த்தும் ...

என் காதல் தேர்வு தவறாகிவிட்டது: சபர்னா சொல்கிறார்

Posted:

நாணயம், ரேகா ஐ.பி.எஸ், அரசி, சொந்தபந்தம், துளசி, பிரிவோம் சந்திப்போம் தொடர்களில் நடித்தவர் சபர்ணா. தற்போது புதுக்கவிதையில் தினேசுடன் நடித்து வருகிறார். சபர்ணாவுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள். விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: நான் பக்கா கோயம்புத்தூர் பொண்ணு. டிகிரி ...

1200 திரையரங்குகளில் பூஜை...?

Posted:

தீபாவளிக்குத் திரைக்கு வரும் படங்களில் பலரும் 'கத்தி' படத்தைப் பற்றி மட்டுமே பேசி வருகிறார்கள். அதே தினத்தில் வெளிவரும் 'பூஜை' படத்தைப் பற்றிய பேச்சு குறைவாகவே இருக்கிறது. விஜய்க்கு இருக்கும் லட்சக் கணக்கான ரசிகர்களே அதற்குக் காரணம். சமூக வலைத்தளங்களில் கூட 'கத்தி' படத்தைப் பற்றித்தான் நல்ல விதமாகவோ, கெட்ட விதமாகவோ ...

லண்டனில் இருந்து திரும்பிய உதயநிதி, நயன்தாரா!

Posted:

உதயநிதி ஸ்டலின் தற்போது நண்பேன்டா படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கும்பகோணம் மற்றும் சென்னையில் நடந்து வந்தது. ஒரு பாடல் காட்சிக்காக நயன்தாராவுடன், உதயநிதி கடந்த வாரம் லண்டன் சென்றார். அங்குள்ள தெருக்களில் இருவரும் பாடி ஆடும் டூயட் பாடல் ஒன்றை படம் பிடித்தனர்.

படப்பிடிப்பு முடிந்து நேற்று முன்தினம் (அக் ...

நதியா கேரக்டரில் நடிக்கிறார் மதுபாலா

Posted:

ரோஜா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட மதுபாலா, அதன் பிறகு இந்தியில் டாப் ஹீரோயின் ஆனார். திருமணமாகி செட்டிலாகிவிட்ட பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் வாய்மூடி பேசுவோம் படத்தில் நடித்தார். தற்போது கன்னடத்தில் நடிக்கிறார். தெலுங்கில் ஹிட்டான அத்தரிண்டிக்கி தேரேதி கன்னடத்தில் ரீமேக் செய்யப்படுகிறது. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™