Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


டப்பிங் சீரியல்களை கட்டுப்படுத்த நளினி திட்டம்

Posted:

சமீபத்தில் நடந்த சின்னத்திரை நடிகர்கள் சங்கத் தேர்தலில் நளினி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது பதவி காலத்தில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்த அவர் முடிவு செய்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
சின்னதிரை நடிகர்கள் சங்கத்தில் பெண்கள்தான் அதிக அளவில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதனால் ஒரு பெண் தலைவராக ...

தங்கைக்காக பாடுகிறார் ஸ்ருதிஹாசன்

Posted:

கமலஹாசனின் இளையமகள் அக்ஷரா ஹாசன் சமிதாப் என்ற இந்திப் படத்தின் மூலம் அறிமுகமாகிறார். அமிதாப் பச்சன், தனுஷ், ரேகா நடிக்கிறார்கள். பால்கி இயக்குகிறார், இளையராஜா இசை அமைக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தில் தங்கை அக்ஷரா ஹாசனுக்காக அக்கா ஸ்ருதி ஹாசன் ஒரு பாடல் பாடுகிறார். இளையராஜா இசையில் அவர் ஹிந்துஸ்தானி ...

கராத்தே கற்கிறார் க்ருத்தி

Posted:

டைகர் ஷரோப் படத்தில் அனைவரையும் கவர்ந்த க்ருத்தி சனோன், தற்போது தனது இரண்டாவது படத்தில் அக்ஷை குமாருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சிங் இஸ் பிளிங் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை பிரபு தேவா இயக்குகிறார். இந்த படத்தில் க்ருத்தி, டான்சராக நடிப்பதாக முன்னர் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது, அந்த படத்தில் க்ருத்திக்காக ...

பிகே படத்திற்காக போஜ்புரி மொழி கற்ற அமீர்கான்

Posted:

மிகவும் வித்தியாசமான கதைகளத்துடன் எடுக்கப்பட்டு வரும் பிகே படத்திற்காக அமீர் கான், பல மாதங்களுக்கு முன்பிருந்தே தன்னை தயார்ப்படுத்தி வந்தாராம். இந்த படத்தில் போஜ்புரி மொழி முக்கிய இடம் வகிப்பதால், இந்த படத்திற்காக போர்ஜ்புரி மொழியையும் கற்றாராம் அமீர்கான். இந்த படத்தில் அவரது கேரக்டர் யதார்த்தமாகவும், நகைச்சுவை கலந்ததாகவும் ...

பிடித்த கேரக்டரில் தான் நடிப்பேன்: சுஜாதா சொல்கிறார்

Posted:

பருத்தி வீரன் படத்தில் பிரியாமணியின் அம்மாவாக நடித்து தன் கீச்சு குரலால் புகழ்பெற்றவர் சுஜாதா. கிராமத்து அம்மா, அண்ணி, அக்கா என்றால் இன்றைய தேதிக்கு சுஜாததான் பெஸ்ட் சாய்ஸ். 50 படங்களுக்கு மேல் நடித்து விட்டார். கோலிசோடாவின் ஆச்சி கேரக்டர் சமீபத்தில் அவருக்கு பெரிய பெயரை பெற்றுக் கொடுத்தது. நிறைய வாய்ப்புகள் வந்தாலும் எனக்கு ...

புரொடக்ஷன் மானேஜர் படம் இயக்க கூடாதா? இயக்குனர் கேள்வி

Posted:

சேது, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், அட்டகாசம் உள்பட 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு புரொடக்ஷன் மானேஜராக இருந்தவர் கே.முருகானந்தம். அவர் இப்போது முருகாற்றுப்படை என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் சரவணன் என்ற புதுமுகம் நடிக்கிறார். இங்கிலீஸ் விங்கிலீஸ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நவிக்கா ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
தான் ஒரு ...

லிங்கா படப்பிடிப்பில் விபத்து: 5 மாடி உயரத்தில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார்

Posted:

ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடிக்கும் லிங்கா படத்தின் படப்பிடிப்புகள் தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. புறநகர் பகுதியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு ரஜினி, சோனாக்ஷி சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த செட் 5 மாடி உயரம் கொண்டது. இதனை சுதர்சன் என்ற ஊழியர் மேற்பார்வை செய்து வந்தார். பாடல் காட்சி ...

வருணுக்காக தயாரிக்கப்பட்ட சைட்ஹீரோ கதை

Posted:

சமீபத்தில் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்த வருண் தவான், தற்போது சைட்ஹீரோ என்ற படத்திற்காக கதை கேட்டுள்ளார். இந்த கதை வழக்கமான கமர்ஷியல் படங்களை மிஞ்சி விடும் என கூறும் வருண், தனக்கு மிகவும் பொருத்தமானதாக இந்த கதை இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த படத்தை, பெட்டிலெர்ஸ் என்ற படத்தை இயக்கிய வசன் பால் இயக்குகிறார். சைட்ஹீரோ ...

ஜெயலலிதா ஜாமீனில் விடுதலை: சினிமா அமைப்புகள் கொண்டாட்டம்

Posted:

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருந்தார். இப்போது அவரை உச்சநீதி மன்றம் ஜாமீனில் விடுதலை செய்துள்ளது. இதனை திரையுலக அமைப்புகள் வரவேற்றும், மகிழ்ச்சி தெரிவித்தும் கொண்டாடி உள்ளன.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் செயற்குழு கூட்டம் திருப்பதியில் நடந்தது. செயற்குழு ...

இந்திய இயக்குனர்கள் உலக சினிமாவை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் : விது வினோத் சோப்ரா

Posted:

இயக்குனரும் தயாரிப்பாளருமான விது வினோத் சோப்ரா, இந்திய சினிமாக்கள் உலக தரத்திற்கு உயர்வதற்கு இந்திய இயக்குனர்கள் உலக சினிமாவை பார்க்க வேண்டும். அப்படி இல்லா விட்டால் இந்திய சினிமாத்துறை தொடர்ந்து முட்டாள் தனமான படங்களை தான் தயாரிக்கும் என கருத்து தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற 16வது திரைப்பட விழாவில் கலந்து ...

சூட்டிங்கில் பிரச்னையில் சிக்கிய அனுபம், அன்னு, பியூஸ்

Posted:

டில்லியின் சமாலா பொருட்கள் விற்பனை செய்யும் பகுதியான சவ்ரி பஜாரில் சமீபத்தில் சூட்டிங் நடத்தப்பட்டது. இந்த சூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக அனுபம் கர், அன்னு கபூர் மற்றும் பியூஸ் மிஷ்ரா ஆகியோர் அங்கு சென்றிருந்தனர். அந்த படத்தின் கதைப்படி, பியூஸ் மிஷ்ரா மசாலா பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரியாம். அதனால் இப்பகுதியில் ...

24 மணி நேரத்தில் டப்பிங் முடித்த ரஜினிகாந்த்...

Posted:

திரையில் மட்டும்தான் ரஜினிகாந்த் வேகமானவர் என நினைக்க வேண்டாம். திரைக்குப் பின்னும் ரஜினிகாந்தின் வேகம் 'லிங்கா' குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாம். 'லிங்கா' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் ஆரம்பமாகி பரபரப்பாக நடைபெற்று திட்டமிட்டபடி முடிந்தது. ரஜினிகாந்தின் ஒத்துழைப்பை மிகவும் ஆச்சரியமாகப் ...

பெங்களூருவில் தீபாவளி கொண்டாடுகிறார் தீபிகா

Posted:

ஹேப்பி நியூ இயர் படத்தின் புரோமோஷன் பணிகளை முடித்து விட்ட தீபிகா படுகோனே, இந்த ஆண்டு தீபாவளியை தனது குடும்பத்துடன் கொண்டாட உள்ளாராம். தீபிகாவின் குடும்பம் பெங்களூருவில் வசித்து வருகிறது. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக தீபிகா தனது குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடவில்லையாம்.
இந்த ஆண்டு படங்கள் அனைத்தையும் முடித்து விட்டு ...

'விஸ்வரூபம் 2' முதலில்...மற்றவை அப்புறம்தான்...

Posted:

கமல்ஹாசன் நடிப்பில் ஒரே சமயத்தில் மூன்று படங்கள் உருவாகி வருவதால் எந்தப் படம் முதலில் வரும் என்ற குழப்பம் ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் திரையுலகினரிடமும் இருந்து வருகிறது. வெகுநாட்கள் முன்பே எடுத்து முடிக்கப்பட்ட 'விஸ்வரூபம் 2' படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் மட்டும் கொஞ்சம் செய்ய வேண்டி உள்ளதாம். அவற்றை முடித்ததும் படத்தை ...

மார்க்கெட்டை ஸ்டெடி பண்ணுகிறார் சந்தானம்!

Posted:

சமீபகாலமாக ஹீரோக்களுடன் ஹீரோயின் வருகிறாரோ இல்லையோ கட்டாயம் ஒரு காமெடியன் சீன் பை சீன் வருவது ட்ரெண்டாகி விட்டது. அதிலும் சந்தானம் நடிக்கும் படங்களில் ஹீரோக்களை விட அவர்தான் ஜாஸ்தியாக டயலாக்கே பேசுவார். அது மட்டுமின்றி ஒரு கட்டத்தில் அவரது மார்க்கெட் வேல்யூவைப் பார்த்து அவருக்கு பாடல்கூட கொடுத்தார்கள்.

உதயநிதி நடித்த ...

ஹேப்பி நியூ இயர் படத்திற்கு யு சான்றிதழ்

Posted:

ஃபரக் கான் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா, அபிஷேக் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள ஹேப்பி நியூ இயர் படத்திற்கு சென்சார் போர்ட் யு சான்றிதழ் வழங்கி உள்ளது. இதனால் படக்குழுவினர் மிகப் பெரிய மகிழ்ச்சியில் உள்ளனர்.

அக்டோபர் 24ம் தேதி வெளிவர உள்ள இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் ...

செல்வராகவனுக்கு யுவனின் கூட்டணி கொடுத்த நம்பிக்கை!

Posted:

துள்ளுவதோ இளமை படத்தில் தனது இயக்குனர் பயணத்தை தொடங்கியவர் செல்வராகவன். அந்த படத்தில்தான் அவரது தம்பியான தனுசும் ஹீரோவாக நடித்து அறிமுகமானார். முதல் படமே செக்ஸ் சம்பந்தப்பட்ட கதை என்பதால், அண்ணனும், தம்பியும் சேர்ந்து செக்ஸ் படம் எடுத்திருக்கிறார்கள் என்று அந்த சமயத்தில் கோடம்பாக்கத்தில் பேச்சு எழுந்தது.

ஆனால் ...

புதுமுக டைரக்டருக்கு சிபாரிசு செய்த சசிகுமார்!

Posted:

சுப்ரமணியபுரம் படத்தை இயக்கி, அதில் ஒரு முக்கிய வேடத்திலும் நடித்தார் சசிகுமார். அதையடுத்து, நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பிரம்மன் ஆகிய படங்களில் நடித்தவர் சசிகுமார். தற்போது பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்தில் கரகாட்டக்காரன் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மேலும், தனது நட்பு ...

பாபநாசம் படம் த்ரிஷயம் படத்தின் முழுமையான ரீமேக் அல்ல...

Posted:

மலையாளத்தில் மோகன்லால், மீனா மற்றும் பலர் நடிக்க ஜீது ஜோசப் இயக்கி கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் த்ரிஷ்யம். இப்படம் தமிழில் கமல்ஹாசன், கௌதமி மற்றும் பலர் நடிக்க பாபநாசம் என்ற பெயரில் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலி, கேரளா மற்றும் பல பகுதிகளில் படமாகி வருகிறது. ஒரு அழகான குடும்பத்துக்குள் ...

லிங்கா - மூன்று வேடங்களில் ரஜினிகாந்த்...

Posted:

கே.எஸ்.ரவிக்குமார் - ரஜினிகாந்த் வெற்றிக் கூட்டணியில் உருவாகி வரும் லிங்கா படம் வெளி வர இன்னும் ஐம்பது நாட்களே உள்ள நிலையில் படத்தைப் பற்றி தினமும் புதுப் புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இப்போதெல்லாம் பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்களைப் பற்றிய பல விஷயங்களும் மறைக்கப்பட்டுதான் வருகின்றன. படம் வெளியாகும் வரை எந்தப் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™