Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


திறமை தான் மதிப்பிட்டு காட்டும்; அழகு அல்ல - கங்கனா ரணாவத்!

Posted:

வறுமையில் வாடுகின்ற பெண்களுக்கு உதவும் விதமாக வாக்எம்பவர் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகை கங்கனா ரணாவத் பங்கேற்றார். அப்போது பெண்கள் மத்தியில் பேசிய கங்கனா, இன்றைக்கு வறுமையில் வாழும் பல பெண்களுக்கு போதிய கல்வியறிவோ, அல்லது அவர்கள் எந்த மாதிரியான வேலைக்கு செல்ல வேண்டும் என்பதை பற்றியோ விழிப்புணர்வோ அவர்களுக்கு ...

நடித்த படங்கள் ரிலீஸ் ஆகாததினால், மன நெருக்கடியில் சிம்பு!

Posted:

ஏற்கனவே ஒப்புக்கொண்டு நடித்த படங்களும் ரிலீஸ் ஆகவில்லை....புதுப்பட ஒப்பந்தங்களும் இல்லை....எனவே கடும் மன நெருக்கடியில் இருக்கிறாராம் சிம்பு. இதேநிலை நீடித்தால், தன்னுடைய கேரியர் எதிர்காலத்தில் என்னாகும் என்ற அச்சமும் அவருக்கு ஏற்பட்டிருக்கிறதாம். சிம்பு படம் வெளிவந்து சுமார் இரண்டு வருடங்களாகிவிட்டன. விக்னேஷ் சிவன் ...

கில் தில்-லில் நடிக்க என் மனைவி தான் காரணம் - கோவிந்தா!

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருந்த கோவிந்தா, நீண்ட இடைவெளிக்கு பிறகு ''கில் தில்'' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கோவிந்தாவுடன் ரன்வீர் சிங், பிரணீதி சோப்ரா, அலி ஜாபர் ஆகியோரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இப்படத்தின் டிரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ...

ஹிருத்திக் ரோஷன் ஹாட்டஸ்ட் நடிகர் - பாரீஸ் ஹில்டன்!

Posted:

பாலிவுட்டின் ஹாட்டஸ்ட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் என ஹாலிவுட் நடிகை பாரீஸ் ஹில்டன் கூறியுள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகையான பாரீஸ் ஹில்டனும், ஹிருத்திக் ரோஷனும் துபாயில் உள்ள ரெஸ்டாரண்ட் ஒன்றின் திறப்பு விழாவுக்காக சென்றிருந்தனர். அப்போது இருவரும் சந்தித்து கொண்டனர். இந்த சந்திப்பு குறித்து பாரீஸ் ஹில்டன் தனது டுவிட்டரில் ...

அமிதாப்-பர்கான் நடிக்கும் டூ-வின் முதல் ஸ்டில் வெளியீடு!

Posted:

பிரபல இயக்குநர் பிஜாய் நம்பியார், நடிகர்கள் அமிதாப் பச்சன், பர்கான் அக்தரை வைத்து இயக்கி வரும் படம் டூ. இப்படத்தின் ஷூட்டிங் டில்லியில் நடந்து வருகிறது. இதில் பர்கான் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அமிதாப் பச்சன், பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட செஸ் வீரராக நடித்துள்ளார். நடிப்பில் இருவருமே சளைத்தவர்கள் அல்ல, அதனால் இருவரும் ...

இளையராஜா தொடர்ந்த வழக்கு - ரிகார்டிங் நிறுவனங்களுக்கு தடை நீட்டிப்பு

Posted:

பிரபல இசை அமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கில், ரிகார்டிங் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை, சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
இளையராஜா தாக்கல் செய்த மனு: என் இசை அமைப்பு, ஒலிப்பதிவு, பாடல்களுக்கு, முழு பதிப்புரிமையும் எனக்கு தான் உள்ளது. சினிமா பாடல்கள் மட்டும் அல்லாமல், பக்தி பாடல்களையும், ஒலிப்பதிவு ...

ஆந்திர புயல் நிவாரணத்துக்கு அள்ளிக் கொடுத்த நடிகர்கள் பட்டியல்

Posted:

கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்க கடலில் உருவான ஹூட் ஹூட் புயல் ஆந்திராவில் உள்ள விசாகபட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம், கிழக்கு கோதாவரி பகுதிகளை கடுமையாக தாக்கி மக்களின் வாழ்க்கையை சீர்குலைத்தது. அதற்காக பலதரப்பட்ட மக்கள் தங்களால் இயன்ற நிவாரணத் தொகையை வழங்கி வருகிறார்கள். திரைப்படத்துறையில் இருந்து நிவாரண உதவி ...

ஹாலிவுட் இயக்குனரின் தமிழ் திகில் படம்!

Posted:

ஹாலிவுட் படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியவர் ஸ்ரீநாத் ராமலிங்கம், பல குறும்படங்களை இயக்கி விருது பெற்றிருக்கிறார். சிங்கப்பூர் தொலைக்காட்சிக்காக தொடர் இயக்கி இருக்கிறார். தற்போது அவர் ஹாலிவுட் ஸ்டைலில் தமிழில் இயக்கி இருக்கும் திகில் படம் டெய்சி. இது 8 வயது சிறுமியை சுற்றி நடக்கும் திகிலான சம்பவங்களை கொண்டது. அதோடு ...

பாபநாசம் படப்பிடிப்பில் நடந்தது என்ன? கமல் விளக்கம்

Posted:

மலையாளத்தில் ஹிட்டான த்ரிஷ்யம் படத்தின் ரீமேக்கான பாபநாசம் படத்தில் நடித்து வருகிறார் கமல், அவருடன் கவுதமியும் நடித்து வருகிறார். இதன் இரண்டாவது கட்ட படப்பிடிப்புகள் கேரளாவில் உள்ள தொடுபுழாவில் நடந்து வருகிறது. அங்கு போலீசாக நடிக்கும் கலாபவன் மணி கமலை ஒரு டீக்கடை முன் வைத்து தாக்குவது போலவும் கமலின் மூக்கு வீங்கி ...

விஜயகாந்தின் அண்ணன் மகன் தயாரிப்பாளர் ஆனார்

Posted:

விஜயகாந்தின் அண்ணன் நாகராஜின் மகன் எம்.என்.ராஜசிம்மன், சினிமா தயாரிப்பாளராகியிருக்கிறார். மதர் பிக்சர்ஸ் என்ற தனது நிறுவனத்தின் சார்பில் அவர் தயாரிக்கும் படத்தின் பெயர் ஒரு காதல் ஒரு கல்யாணம். கணேஷ் என்ற புதுமுகம் ஹீரோவாகவும், ஜீவிகா, மயூரி என்ற புதுமுகங்கள் ஹீரோயினாகவும் அறிமுகமாகிறார்கள். ஹார்முக் ஒளிப்பதிவு செய்கிறார். ...

இரண்டு ஜோடிகளுடன் கார் ரேஸ் சாம்பியனாக நடிக்கிறார் பிரேம்ஜி!

Posted:

பிரேம்ஜி இப்போது மாங்கா என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அடுத்து ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார், இசையும் அவர்தான் படத்தின் பெயர் டக்கர். (ஜெயம்ரவி நடிக்கும் படத்தின் பெயர் அப்பாடக்கர்).

இதில் பிரேம்ஜி கார் பந்தைய வீரராக நடிக்கிறார். அவருக்கு மீனாட்சி தீக்ஷித், அருந்ததி என்ற இரண்டு ஹீரோயின்கள் ஜோடியாக ...

ஒரு எழுத்து திகில் படம்!

Posted:

இப்பொழுது ஒரு எழுத்தில் படத்துக்கு டைட்டில் வைப்பது பேஷனாகிவிட்டது. இதற்கு முன் உ, ப, தா, கோ, வா என ஒரு எழுத்துக்களில் பெயர் வைத்தார்கள். ஷங்கர் தன் படத்துக்கு ஐ என்று பெயர் வைத்ததும் அது இன்னும் அதிகமாகிவிட்டது. ழ, தி, ரூ ஆகிய ஒரு எழுத்துக்களில் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

இப்போது புதியவர்கள் இணைந்து வி என்ற படத்தை ...

படமே ரிலீசாகாத முதல் வெள்ளிக்கிழமை

Posted:

இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்தே ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் குறைந்த பட்சம் 5 படங்கள் முதல் 10 படங்கள் வரை வெளிவந்தது. கடந்த வெள்ளிக்கிழமை டப்பிங் படங்களையும் சேர்த்து 12 படங்கள் ரிலீசானது. இதுவே இந்த ஆண்டின் அதிகபட்ச அளவாக இருந்தது.

இந்த வெள்ளிக்கிழமை (அக் 17) ஒரு தமிழ் படம்கூட வெளிவரவவில்லை லெப்ட் பிகைண்டு (பிளைட் 257 ...

ஏஞ்சலினா ஜூலி வழியில் ஹூமா குரேஷி!

Posted:

கேங்ஸ் ஆப் வசிப்பூர், ஸார்ட்ஸ், டிடே போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ஹூமா குரேஷி. தற்போது இவர் பதல்பூர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜூலியின் வழியை தான் பின்பற்ற போவதாக ஹூமா குரேஷி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, ஏராளமான ஹாலிவுட் ஹிட் படங்களில் நடித்த ...

மலையாளக் கரையோரம் ஒதுங்கிய பரத்

Posted:

தமிழில் பட வாய்ப்பு இல்லாமல் போனதும் மற்ற மொழிப்படங்களில் நடிக்கப்போவார்கள் கதாநாயகி நடிகைகள்.
இந்த வழக்கம் நடிகைகளுக்கு மட்டுமல்ல இப்போது கதாநாயகர்களுக்கும் பொருந்தும்.
தமிழில் பிஸியாக இருந்த சரத்குமார், பிரபு போன்ற ஹீரோக்கள் இங்கே மார்க்கெட்போனதும், மற்ற மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார்கள்.
இந்த லிஸ்ட்டில் ...

"கத்தி, மெட்ராஸ்” பாடல்களைப் பாராட்டிய ஷங்கர்...

Posted:

'ஐ' படத்தின் இறுதிக் கட்டப் பணிகளுக்கிடையேயும் இயக்குனர் ஷங்கர் மற்றவர்களைப் பாராட்டுவதில் தயக்கம் காட்டுவதேயில்லை. சில மாதங்களுக்கு முன்னர் கூட வெளிவந்த புதிய படங்களைப் பற்றி மனம் திறந்து பாராட்டி, அந்த புதியவர்களுக்கு உற்சாகத்தை அளித்தார். நேற்று, 'கத்தி' பாடலைப் பற்றியும் 'மெட்ராஸ்' பாடல்களைப் பற்றியும் ...

தெலுங்கிலும் வெற்றி பெறுவாரா விஜய்...?

Posted:

தமிழ்த் திரையுலகின் அடுத்த சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் விஜய் நடித்து வெளிவரும் படங்கள் தமிழில் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. கடந்த சில வருடங்களாக கேரளாவிலும் அதிக திரையரங்குகளில் விஜய் நடிக்கும் படங்கள் வெளியாகி அங்கும் அவருக்கென தனி ரசிகர் கூட்டத்தைச் சேர்த்திருக்கிறது. தற்போது 'கத்தி' படம் இதுவரை ...

சல்மானின் பிக்பாஸில் தன் படத்தை புரொமோட் செய்யாத ஷாரூக்கான்!

Posted:

சல்மான் கானுக்கும், ஷாரூக் கானுக்கும் இடையே ஒரு பனிப்போர் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்த சூழலில் தனது ஹேப்பி நியூ இயர் படத்தை, சல்மான் கான் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஷாரூக்கான் புரொமோட் செய்யமாட்டார் என தெரிகிறது. பராகான் இயக்கத்தில், ஷாரூக்கான், தீபிகா, அபிஷேக், போமன் இரானி, சோனு சூட், விவன் ஷா ஆகியோரது ...

பிரான்ஸ் மற்றும் ஈரானிய படங்களில் நடிக்க ஆசைப்படும் தீபிகா படுகோனே!

Posted:

பாலிவுட்டின் ஹாட் அண்ட் செக்ஸி நடிகையான தீபிகா படுகோனே, பராகான் இயக்கத்தில், ஷாரூக்கான் ஜோடியாக, ''ஹேப்பி நியூ இயர்'' படத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்., 24ம் தேதி வெளியாக உள்ள நிலையில், தற்போது இப்படத்தின் புரொமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பாலிவுட் படங்களில் மட்டுமே நடித்து வரும் தீபிகா ஏற்கனவே ...

சமந்தாவிற்கு 'கத்தி' கை கொடுக்குமா...?

Posted:

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தாலும், சென்னைப் பெண்ணாக இருந்து கொண்டு தமிழில் இன்னும் பெரிய வெற்றியைப் பெற முடியாத ஹீரோயினாகவே இருந்து வருகிறார் சமந்தா. அவர் இதுவரை தமிழில் நடித்த படங்கள் கமர்ஷியல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லையென்றாலும், தெலுங்கில் அவர் நடித்த பல படங்கள் தாறுமாறாக ஹிட் ஆகி அங்கு முன்னணியில் உள்ளார். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™