Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


விமானத்தை கையில் இழுத்த அக்ஷ்ய் குமார்!

Posted:

பாலிவுட்டின் ஆக்ஷ்ன் ஹீரோவான அக்ஷ்ய் குமார், தனது விளம்பர படம், சினிமா உள்ளிட்ட பல சண்டைக்காட்சிகளில் பல்வேறு சாகசங்களை செய்து இருக்கிறார். இப்போது ஒரு சிறிய ரக விமானத்தை தன் கையால் இழுத்து அசத்தியிருக்கிறார். அக்ஷ்ய் குமார், தி ஷாக்கீன்ஸ் என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார். இப்படத்தில், ''பேராபானி...'' என்ற ஒரு ...

ஐபிஎஸ்., ஆக முயற்சித்து வேண்டாம் என சினிமாவுக்கு வந்துவிட்டேன் - இயக்குநர் ஹரி பேட்டி!

Posted:

பிரஷாந்த் நடித்த ''தமிழ்'' படத்தின் மூலம் இயக்குநராக அவதரித்தவர் ஹரி. தொடர்ந்து சாமி, கோவில், ஐயா, தாமிரபரணி, சிங்கம், சிங்கம்-2 உள்ளிட்ட 12 படங்களை இயக்கியவர் ஹரி. தற்போது 13வது படமாக பூஜை-யை இயக்கியுள்ளார். இப்படத்தில் விஷால், ஸ்ருதிஹாசன் ஹீரோ-ஹீரோயினாக நடித்துள்ளனர். இப்படம் இந்த தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. ...

நான்கு ஆண்டுகள் என்னை யாரும் கண்டுகொள்ளவில்லை - கோவிந்தா!

Posted:

பாலிவுட்டின் மாஜி ஹீரோ கோவிந்தா. ஏராளமான ஹிட் படங்களில் நடித்தவர், கடந்த சில ஆண்டுகளாக எந்தப்படங்களிலும் நடிக்காமல், கிட்டத்தட்ட சினிமாவை விட்டே ஒதுங்கியிருந்தார். தற்போது அவர் கில் தில், ஹேப்பி எண்டிங் உள்ளிட்ட படங்களின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி ஆகியிருக்கிறார் கோவிந்தா.

இந்நிலையில், அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ...

கிக் சாதனையை முறியடித்த பேங் பேங்!

Posted:

ஹிருத்திக் ரோஷன்-கத்ரீனா கைப் நடிப்பிங் வெளியாகி வசூலில் பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்து கொண்டு இருக்கிறது பேங் பேங் படம். இரண்டுவாரங்களில், இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ.150 கோடியும், உலகளவில் ரூ.200 கோடியை தாண்டியும் வசூல் சாதனை புரிந்து இருக்கிறது. ஹிருத்திக் ரோஷனின் நடிப்பில் வெளியான படங்களிலேயே பேங் பேங் படம் தான் அதிக வசூலை ...

மீண்டும் சைப்-ப்ரியங்கா ஜோடி சேருகின்றனர்.?

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகையான ப்ரியங்கா சோப்ரா, சல்மான் கான், ஷாரூக்கான், அமீர்கான், சைப் அலிகான் உள்ளிட்ட பலருடன் ஜோடி போட்டு விட்டார். இந்நிலையில், சைப் அலிகானும், ப்ரியங்கா சோப்ராவும் மீண்டும் ஒரு படத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபுதேவா அடுத்து இயக்க இருக்கும் படத்தில் ப்ரியங்கா சோப்ராவும், சைப் அலிகானும் ...

ஹேப்பி நியூ இயர் படத்துடன் அக்ஷ்ன் ஜாக்சன் டிரைலர்!

Posted:

ஷாரூக்கான் நடிப்பில் இந்தாண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் ஹேப்பி நியூ இயர். பராகான் இயக்கத்தில், ஷாரூக்கான், தீபிகா படுகோனே, அபிஷேக் பச்சன், சோனு சூட், போபன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப்படம் தீபாவளி சரவெடியாக அக்டோபர் 24ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இந்தப்படத்துடன் பாலிவுட்டில் சில பிரபலங்கள் ...

அமீர்கானை தொடர்ந்து ஷாரூக்கானும் குண்டு துளைக்காத காரை வாங்கினார்!

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாரூக்கான், வெடிகுண்டு துளைக்காத காரை வாங்கியுள்ளார். சமீபத்தில் நடிகர் ஷாரூக்கானின் வீட்டின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனையடுத்து அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு எல்லாம் போடப்பட்டது.

இந்நிலையில் தனக்கான பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக, இப்போது புதிதாக ...

ஆசாமி என்ற கெட்டபெயரை நீக்குவேன்: சாமி சொல்கிறார்

Posted:

கொழுந்தன் மீது ஆசைப்படும் அண்ணியை கொண்டு உயிர். மாமனார் மீது ஆசைப்படும் மருமகளை கொண்டு சிந்துசமவெளி படங்களை இயக்கிய சாமி, இப்போது கங்காரு என்ற படத்தை இயக்கி வருகிறார். இது அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக கொண்ட படம். தவறான படங்கள் எடுத்து ஆசாமி என்று நான் எடுத்த பெயரை மாற்றுவேன் என்கிறார் சாமி.

அவர் மேலும் கூறியிருப்பதாவது: ...

100 கோடி வசூலில் ஹாட்ரிக் அடித்த சஞ்சய் லீலா பன்சாலி

Posted:

பாலிவுட்டின் சகலகலா வல்லவன் என்றால் அது சஞ்சய் லீலா பன்சாலிதான், 8 படங்களை இயக்கி உள்ளார், 10 படங்களை தயாரித்துள்ளார். 3 படத்துக்கு இசை அமைத்துள்ளார். 3 படத்திற்கு எடிட்டராக பணியாற்றி இருக்கிறார். சமீபத்தில் அவர் தயாரித்த ராம்லீலா, ரவுடி ரத்தோர். மேரிகோம் ஆகிய மூன்ற படங்களும் 100 கோடிக்கு மேல் வசூலித்து பன்சாலிக்கு ஹாட்ரிக் வெற்றியை ...

விருது கிடைக்காததால் விலகி இருந்தேன்: ஸ்ரேயா ரெட்டி!

Posted:

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து சாமுராய் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரேயா ரெட்டி. திமிரு படத்தின் மூலம் புகழ்பெற்றார் அதன் பிறகு வெயில், பள்ளிக்கூடம், காஞ்சீவரம் படங்களில் நடித்தார். விஷால் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானவர் இப்போது அண்டாவ காணோம் படத்தின் மூலம் ரீ ...

கவிதாயினி ஆனார் ஸ்வாதி

Posted:

சுப்பிரமணியபுரம் ஸ்வாதி இப்போது பிசியான நடிகை இல்லைதான் ஆனாலும் மொழிக்கு ஒரு படத்தில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். அவர் நடித்துள்ள அமளி துமளி தமிழ் படம் விரைவில் வெளிவர இருக்கிறது. தற்போது யட்சன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தெலுங்கில் கார்த்திகேயாவில் நடிக்கிறார். டபுள் பரேல் என்ற மலையாளப்படத்தில் நடித்து ...

நாடக கலைஞர்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் விஷால்!

Posted:

நடிகர் விஷால்தான் இப்போது சினிமாவை தாண்டி அதிகம் பேசப்படும் ஹீரோ. நடிகர் சங்கத்தின் முறைகேடுகளை தட்டிக் கேட்கிறார். நடிகர் சங்கத்துக்கு கட்டிட நிதி திரட்ட நடித்து தருவதாக சொல்கிறார். படத் தயாரிப்புக்கு பிரச்னை வந்தபோது சொந்த கம்பெனி ஆரம்பித்தார். பூஜை படத்தின் ஆடியோவை மட்டமான விலைக்கு கேட்டதால் சொந்தமாக ஆடியோ நிறுவனம் ...

களம் பற்றிய திகில் படம்!

Posted:

பொதுவாக சினிமாவில் கதை களம் என்ற வார்த்தையை அடிக்கடி சொல்வார்கள். அது கதை நடக்கும் இடத்தை, சூழ்நிலையை குறிக்கும், இப்போது அந்த களத்தை பற்றியே ஒரு படம் எடுக்கிறார்கள். படத்தின் பெயரும் களம்தான். ஜீவா சங்கரிடம் உதவியாளராக இருந்த ராஜ் இயக்குகிறார். முகேஷ் ஒளிப்பதிவு செய்கிறார், பிரகாஷ் நிக்கி இசை அமைக்கிறார். ஸ்ரீனி, அம்ஜெத், ...

நான் நடிக்க வேண்டிய படத்தில் அமலாபால் நடிக்கிறார்: மனீஷா ஆதங்கம்

Posted:

சினிமாவில் நடிக்க மும்பை கோல்கட்டாவிலிருந்து மாடல்களை அழைத்து வருவதைப்போல இப்போது சின்னத்திரை சீரியலில் நடிக்கவும் அங்கிருந்து மாடல்கள் அழைத்து வரப்படுகிறார்கள். அப்படி அழைத்து வரப்பட்டவர்களில் ஒருவர் மனீஷா சட்டர்ஜி. தமிழுக்காக மனீஷா என்று பெயரை சுருக்கி வைத்திருக்கிறார். தற்போது அவர் நடித்து வரும் சக்தி தொடர் 100 ...

கத்தி படத்திற்கு மீண்டும் மிரட்டல்

Posted:

விஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ள படம் கத்தி. இந்தப் படத்தை இலங்கை தமிழர்களான சுபாஷ்கரனும், கருணாகரனும் இணைந்து தயாரித்துள்ளனர். தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கத்தி படத்தை இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் உறவினர் பினாமி பெயரில் தயாரிக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இதற்கு ...

நடிகர் சங்க அவசர செயற்குழு கூட்டம் 16ந் தேதி நடக்கிறது: சங்க கட்டடப் பிரச்னை பற்றி விவாதிக்கிறது

Posted:

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் வருகிற 16ந் தேதி கூடுகிறது. சங்க தலைவர் சரத்குமார் தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர் ராதாரவி, துணை தலைவர்கள் விஜயகுமார், கே.என்.காளை, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். இவர்கள் தவிர ஸ்ரீகாந்த், சிம்பு, நளினி உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களும் கலந்து ...

கவியரசர் கண்ணதாசன் விழா: 18ந் தேதி நடக்கிறது

Posted:

கவியரசர் கண்ணதாசன்-விஸ்வநாதன் அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் கவியரசர் கண்ணதாசன் விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வருகிற 18ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள குமாரராஜா முத்தையா அரங்கில் மாலை 6 மணிக்கு நடக்கும் விழாவில் டாக்டர் குமாரராணி மீனா முத்தையா குத்துவிளக்கேற்றுகிறார். ப.லட்சுமணன் தலைமை ...

மைக்கேல் ஜாக்சனுக்கு சமர்ப்பணம் செய்த பராகான்!

Posted:

மறைந்த பாப் சிங்கர் மைக்கேல் ஜாக்சனுக்கு, பாலிவுட் நடிகர்களான ஹிருத்திக் ரோஷன், ஷாகித் கபூர், டைகர் ஷெரப் உள்ளிட்ட பலர் அவருக்கு நடனங்கள் மூலம் ஏற்கனவே மரியாதை செய்துள்ளனர். இந்நிலையில் இப்போது நடன அமைப்பாளரும், இயக்குநருமான பரா கானும், மைக்கேல் ஜாக்சனுக்கு பாடல் மூலம் மரியாதை செய்துள்ளார். அவர் இயக்கியுள்ள, ''ஹேப்பி நியூ ...

'பாகுபலி' படப்பிடிப்பில் தீ விபத்து!

Posted:

'நான் ஈ' படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி தற்போது பிரம்மாண்டமாக இயக்கி வரும் சரித்திரப் படம் 'பாகுபலி'. இப்படம் தமிழில் 'மகாபலி' என்ற பெயரிலும் படமாக்கப்பட்டு வருகிறது. பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் ...

தேசிய விருதுக்காக ரிஸ்க் எடுக்கும் விக்ரம்!

Posted:

அந்நியனைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ஐ. இந்த படத்திலும் மாறுபட்ட கெட்டப்பில் நடித்திருக்கும் விக்ரம், அதற்காக இரண்டரை ஆண்டுகளாக கடுமையாக உழைத்திருக்கிறார். குறிப்பாக ஒரு அகோரமான கூனி வேடத்திற்காக தனது உடம்பை வருத்தி நடித்த விக்ரமின் அந்த கெட்டப்பைப் பார்த்து விட்டு பாலிவுட் நடிகர்களெல்லாம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™