Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


திருப்பதி பஸ் நிலையத்தில் ரூ.3 லட்சம் கள்ள நோட்டுகளுடன் கூலித் தொழிலாளி கைது

Posted: 07 Oct 2014 10:42 PM PDT

சித்தூர் மாவட்டம் ராமகுப்பம் மண்டலம் கர்ணப்பள்ளியை சேர்ந்தவர் சீமல சுப்பாரெட்டி (வயது 34). கூலித்தொழிலாளியான இவர், திருப்பதி அரசு பஸ் நிலையத்தில் கடை வைத்திருக்கும் வணிகர்கள் கொடுக்கும் சிறு சிறு வேலைகளை செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார். கடந்த ஆகஸ்டு மாதம் 15–ந்தேதி திருப்பதி அரசு பஸ் நிலையத்தில் நின்றிருந்தபோது அவருக்கும், அடையாளம் தெரியாத மர்ம ஆசாமி ஒருவருக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டது. அதிலிருந்து இருவரும்

தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தினால் கட்சி அங்கீகாரம் ரத்து: தேர்தல் கமிஷன்

Posted: 07 Oct 2014 10:37 PM PDT

தேர்தல் பணிகளில் சிறுவர்களை ஈடுபடுத்துவதற்கு தடைவிதிக்க கோரி மும்பை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ''அரசியல் கட்சிகளின் பதிவை எங்களால் ரத்து செய்ய முடியாது. ஆனால் அரசியல் கட்சிகள் சிறுவர்களை பிரசாரத்தில் ஈடுபடுத்துதல் போன்ற

ஜாமீனில் விடுதலை செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா மனு

Posted: 07 Oct 2014 10:29 PM PDT

ரூ.66 கோடி சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் ஜெயில், ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹாராவில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி பெங்களூர் ஐகோர்ட்டில் மனு செய்தார். நேற்று அந்த மனு மீதான விசாரணை நடந்தது. நீதிபதி சந்திரசேகரா முன்னிலையில் அரசு வக்கீல் பவானிசிங்கும்,

திருப்பதியில் தரிசனத்துக்கு முதியோர்களுக்கு மீண்டும் தனி வரிசை

Posted: 07 Oct 2014 10:24 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வாரம் வருடாந்திர பிரமோற்சவ விழா நடந்தது. இதற்காக கோவிலின் முன்பு இருந்த மூத்த குடிமக்கள் தரிசன வரிசை அகற்றப்பட்டது. பிரமோற்சவ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளின் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க படையினருக்கு உத்தரவு: பேச்சுவார்த்தையும் ரத்து

Posted: 07 Oct 2014 10:10 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியில் பொதுமக்கள் வாழும் இடங்களிலும், பாதுகாப்பு படையினரின் நிலைகள் மீதும் பாகிஸ்தான் படை தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இவ்வாறு தாக்குதல் நடத்தி வருவதால் அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பதிலடி கொடுக்க படையினருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

கிராமம் கிராமமாக பிரசாரம் செய்வது பிரதமருக்கு அழகல்ல: மோடி மீது சிவசேனா தாக்கு

Posted: 07 Oct 2014 08:34 PM PDT

மராட்டிய சட்டமன்ற தேர்தல் வரும் 15-ந் தேதி நடைபெற உள்ளது. தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 25 ஆண்டு கால சிவசேனா, பா.ஜனதா கூட்டணி உடைந்தது. இதனால் மிகவும் அதிருப்தி அடைந்த சிவசேனா, பா.ஜனதாவை தொடர்ந்து விமர்சித்து வருகிறது. அக்கட்சி பிரதமர் நரேந்திர மோடியையும் விட்டு வைக்கவில்லை.

இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 18 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்

Posted: 07 Oct 2014 04:54 PM PDT

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றதில் இருந்து இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் இதுவரை 20-க்கும் மேற்பட்ட அத்துமீறிய பெரிய தாக்குதல்களை பாகிஸ்தான் படைகள் நடத்தியுள்ளன. பாகிஸ்தானுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது என்று இந்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இதைப்போன்ற அத்துமீறல்களின் மூலம் இந்தியாவை மீண்டும் பேச்சுவார்த்தையின் பக்கம் திசைதிருப்பும் வகையில், சமீபத்திய தாக்குதல்களை பாகிஸ்தான் அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளதாக அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு: மராட்டிய கோர்ட்டில் ஜனவரி 7-ந் தேதி ஆஜராக உத்தரவு

Posted: 07 Oct 2014 04:27 PM PDT

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி, மராட்டிய மாநிலம், பிவண்டி அருகில் உள்ள சோனாலே கிராமத்தில் கடந்த மார்ச் 6-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் வரலாற்றை திரித்துக்கூறியதாகவும், அந்த இயக்கத்துக்கு அவதூறு ஏற்படுத்தும் விதத்தில்

இமாச்சலப் பிரதேசத்தில் 8760 பெண்கள் பங்கேற்ற தசரா நடன நிகழ்ச்சி

Posted: 07 Oct 2014 03:46 PM PDT

இமாச்சலப் பிரதேசத்தில் தசரா திருவிழாவையொட்டி 'பெண் குழந்தைகளை பாதுகாப்போம்' என்ற மைய கருத்துடன் மாபெரும் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. தசரா விழாவுக்கு புகழ்பெற்ற குளு நகரின் தால்பூர் மைதானத்தில் மாநில முதல் மந்திரி விர்பத்ர சிங் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இளம் பெண்கள் முதல் குடும்பத் தலைவிகள் வரை அனைத்து தரப்பு பெண்களும் பங்கேற்று, நாட்டுப்புற இசைக்கேற்ப நடனமாடி மகிழ்ந்தனர்.

மராட்டிய மாநிலத்தில் விபத்து: ஆற்றுக்குள் பஸ் விழுந்து 8 பக்தர்கள் பலி

Posted: 07 Oct 2014 01:53 PM PDT

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த 50 பேர், மராட்டிய மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்றனர். தரிசனத்தை முடித்துக்கொண்டு பஸ் மூலம் அனைவரும் திரும்பிக்கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை அந்த பஸ் சோலாப்பூர் அருகே உள்ள ஒரு ஆற்றுப்பாலத்தை கடக்கும்போது, தடுப்பு சுவரில் மோதி ஆற்றுக்குள் விழுந்தது.

ஜன்தன் யோஜனா திட்டத்தில் ஐந்தே வாரங்களில் 5 கோடி வங்கிக் கணக்கு துவக்கம்: மோடி பெருமிதம்

Posted: 07 Oct 2014 01:19 PM PDT

ஏழை எளியோருக்கும் நிதி அதிகாரம் வழங்குகிற வகையில், 'பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா' என்ற பெயரிலான திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி சுதந்திர தின விழா உரையில் அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு டெபிட் கார்டுடன் (பற்று அட்டை) கூடிய வங்கிக் கணக்கு தொடங்குவதுடன், ஒரு லட்சம் ரூபாய் காப்பீடும் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நான் இருக்கும் வரை மராட்டியத்தை பிரிக்க யாராலும் முடியாது: மோடி

Posted: 07 Oct 2014 01:09 PM PDT

'காங்கிரஸ் போல் பொய் வாக்குறுதிகளை அளிக்கமாட்டேன். நான் அரசியல்வாதி அல்ல, இந்தியாவின் முதல் சேவகன்' என்று மராட்டிய தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். மராட்டிய சட்டசபை தேர்தலையொட்டி, பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று அவர் 3-வது நாளாக பிரசாரத்தை மேற்கொண்டார்.

ஏ.டி.எம். மையத்துக்கு பணம் போடும் வேனில் இருந்து ரூ.23 லட்சம் மாயம்

Posted: 07 Oct 2014 12:53 PM PDT

நாடெங்கிலும் உள்ள வங்கி ஏ.டி.எம். இயந்திரங்களில் பணம் நிரப்பும் பணியை சில தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்து செய்து வருகின்றன. வங்கிகளில் இருந்து துப்பாக்கி ஏந்திய நபர்களின் பாதுகாப்புடன் வேன்களில் பணத்தை கொண்டு செல்லும் இந்த நிறுவன ஊழியர்கள், பணம் குறைவாக உள்ள ஏ.டி.எம். இயந்திரங்களில் பணத்தை நிரப்பிவிட்டு வருவதுண்டு. அவ்வகையில், நேற்று டெல்லியில் உள்ள ஒரு வங்கியில் இருந்து 87 லட்சம் ரூபாயை வேனில்

ஜெயலலிதாவை தமிழ்நாட்டுக்கு மாற்ற அரசுக்கு அதிகாரம் இல்லை: கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பேட்டி

Posted: 07 Oct 2014 12:42 PM PDT

கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, 'ஜனதா தர்ஷன்' என்னும் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து, பெங்களூரில் உள்ள அதிகாரபூர்வ இல்லமான 'கிருஷ்ணா'வில் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில், பெங்களூர் சிறையில் உள்ள ஜெயலலிதாவை தமிழ்நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்று

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிப்பு எதிரொலி: பெங்களூர் செல்லும் கர்நாடக அரசு பஸ்கள் நிறுத்தம்

Posted: 07 Oct 2014 12:02 PM PDT

சென்னையில் இருந்து நேற்று காலை முதல் வழக்கமாக ஓடிய கர்நாடக அரசு பஸ்கள், மாலை 4 மணி முதல் நிறுத்தப்பட்டன. இது குறித்து, கர்நாடக அரசு பேருந்து கழக அதிகாரி கூறியதாவது:- சென்னை கோயம்பேட்டில் இருந்து, பெங்களூர், மைசூர், ஷிமுகா, கே.ஜி.எப்., தர்மசாலா, பெல்காம், மங்களூர், மடிக்கேரி ஆகிய ஊர்களுக்கு 51 பஸ்கள்

ரூ.29 லட்சம் லஞ்சம்: மோடியை எதிர்த்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின் ஜாமீன் மனு மீது 10-ம் தேதி தீர்ப்பு

Posted: 07 Oct 2014 11:12 AM PDT

குஜராத் மாநில முதல்-மந்திரியாக நரேந்திர மோடி பதவி வகித்தபோது அம்மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தவர் பிரதீப் சர்மா. மோடியின் உத்தரவின் பேரில், இளம்பெண்ணை போலீசார் உளவு பார்த்த விவகாரம் கடந்த ஆண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பிரதீப் சர்மாவின் பெயரும் இணைத்துப் பேசப்பட்டது. குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் நில அபகரிப்பு குற்றச்சாட்டு உள்பட 5 குற்ற வழக்குகளை பிரதீப் சர்மா மீது அந்த மாநில போலீசார் பதிவு செய்திருந்தனர். இதனையடுத்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மெகா விற்பனையின் போது வெப்சைட்டில் கோளாறு: மன்னிப்பு கேட்டது பிளிப்கார்ட்

Posted: 07 Oct 2014 11:07 AM PDT

இந்திய ஆன்லைன் வர்த்தக ஜாம்பவான் பிளிப்கார்ட் நேற்று 'பிக் பில்லியன் டே சேல்' ஆஃபரை அறிவித்திருந்தது. வரலாறு காணாத அதிரடி விலை குறைப்புடன் முந்துபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த ஆஃபர் இருந்தது.

இந்தியாவுக்குள் ஊடுருவ பாக். எல்லையில் தயார் நிலையில் 2 ஆயிரம் தீவிரவாதிகள்

Posted: 07 Oct 2014 10:39 AM PDT

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் இந்த மாதத்தின் முதல் ஒரு வார காலத்தில் மட்டும் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர். எல்லைப் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

எல்லையில் தாக்குதலை நிறுத்தாவிட்டால் பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

Posted: 07 Oct 2014 09:13 AM PDT

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் போர்நிறுத்த மீறல் மற்றும் துப்பாக்கி சூடு நடத்துவதை பாகிஸ்தான் நிறுத்தாவிட்டால் தக்க பதிலடி கொடுப்போம் என்று உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் லத்தூரில் இன்று நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ராஜ்நாத் சிங்

தசரா நெரிசலில் சிக்கியவர்கள் சிகிச்சை பெறும் பாட்னா ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்

Posted: 07 Oct 2014 05:32 AM PDT

பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த வெள்ளியன்று நடைபெற்ற தசரா விழாவில் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 33 பேர் பலியாகினர். 28 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அம்மாநில முதல்வர் ஜித்தன் ராம் மன்ஜி மருத்துவமனைக்கு திடீர் விசிட் செய்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™