Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

Posted: 08 Oct 2014 01:04 PM PDT

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா பிறப்பித்த தீர்ப்பை விமர்சித்து அதிமுகவினர் வைத்த போஸ்டர்கள், பேனர்கள் குறித்து திமுக, பாமக மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையம் ஆகியவை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுள்ள சென்னை உயர்நீதிமன்றம் இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நவம்பர் 11ம் தேதிக்குள் விளக்குமாறு கூறி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா ...

பேஸ்புக் உடன் அதிகாரப்பூர்வமாக இணைந்தது வாட்ஸ்அப்!

Posted: 08 Oct 2014 12:54 PM PDT

பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் செயலியை வாங்குவதற்கான அனைத்து இறுதிக்கட்ட பணப்பரிவர்த்தனைகளும் முற்று பெற்றுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. நட்பு ஊடகங்களில் முன்னணியில் இருக்கும் பேஸ்புக் நிறுவனம், கடந்த பிப்ரவரி மாதம் வாட்ஸ்அப் செயலியை வாங்குவதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. சுமார் 21.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக விலை நிர்ணயம் செய்யப்பட்ட வாட்ஸ்அப் செயலியை பேஸ்புக் வாங்குவதற்கான முதற்கட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. எனினும், இறுதிக் கட்ட பணப்பரிவர்த்தனைகள், ஒழுங்கு முறைகள் ...

பெற்றதும்... கற்றதும்...-பாக்கியம் ராமசாமி

Posted: 08 Oct 2014 12:51 PM PDT

பெற்றதும்... கற்றதும்... பாக்கியம் ராமசாமி சுஜாதா கோவிச்சுக்க மாட்டார் (என்று நம்புகிறேன்) திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்தார் என் உறவுக்காரர் ஒருத்தர். வந்தவர் அழைப்பிதழை மட்டும் நீட்டாமல், அதன்மேல் நாலு அட்சதையையும் (மஞ்சள் அரிசி) வைத்து நீட்டினார். அதை என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. அதுபற்றி யாரும் எனக்கு சொல்லித் தரவும் இல்லை. எனவே, நானாக யூகித்து, அதை ஜாக்கிரதையாகக் கையில் எடுத்து என் தலையில் கொஞ்சம் போட்டுக் கொண்டேன். பக்கத்திலிருந்த என் மனைவியின் தலையிலும் கொஞ்சம் ...

காதல் ஆத்திசூடி: தபூ சங்கர்

Posted: 08 Oct 2014 12:41 PM PDT

காதல் ஆத்திசூடி அவளிடம் மதி மயங்கு! உனக்காகப் பிறந்தவள், உனக்கென்று ஒதுக்கப்பட்ட காதல் கணத்தில்... சட்டென்று உன் கண் முன்னே தோன்றுவாள். அந்த தேவ நிமிஷத்தில் நீ தொலைந்துபோவாய்! உன் நண்பர்கள், அவளது வீதியில் தொலைந்துகிடக்கும் உன்னைக் கண்டெடுத்து வந்து உன்னிடம் கொடுப்பார்கள். அது அவர்கள் நட்பின் கடமை. உன் காதலின் கடமை என்ன தெரியுமா? உன் நண்பர்கள் கொடுத்த உன்னை எடுத்துக்கொண்டு உடனே அவளிடம் ஓட வேண்டும். மீண்டும் தொலைப்பதற்காக! ஆயிரம் முறை அவள் கண்ணில் படு! அவள் திரும்பிப் ...

சிரிப்பு வைத்தியம்

Posted: 08 Oct 2014 12:40 PM PDT





என்னுடைய 14000 பதிவு அவசியம் படியுங்கோ :)

Posted: 08 Oct 2014 12:24 PM PDT

இது என்னுடைய 14000 வது பதிவு, எதாவது உருப்படியாக பதியனும் என்கிற எண்ணமே இந்த கட்டுரை கொஞ்சம் ஆழமான விஷயம் பற்றி பேசப்போகிறேன்; எனவே பொறுமையாக படியுங்கோ. பீடிகை பலமானதாக இருக்கே என்று பார்க்க வேண்டாம் விஷயமும் பலமானது தான். சரி விஷயத்துக்கு வருவோம்.... கொஞ்ச நாட்களாக பேப்பரில்...... 8 மாதக்குழந்தையை கற்பழிப்பு, 80 வயது கிழவி கற்பழிப்பு என்றெல்லாம் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறதே இதற்கு காரணம் என்ன என்று யாராவது யோசித்து பார்த்ததுண்டா? எதனால் இன்றைய இளைஞர்கள் இப்படிப்பட்ட மன நிலைக்கு ஆளாகிறார்கள் ...

நலம் 360’ - மருத்துவர் கு.சிவராமன்

Posted: 08 Oct 2014 10:40 AM PDT

நலம் 360' - 1 மருத்துவர் கு.சிவராமன், ஓவியம்: ஹாசிப்கான் குந்தா மலைக்கிராமத்தின் சாலையோரத்தில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தபோது வந்த தொலைபேசி அழைப்பு, என் வாழ்வின் மறக்க முடியாத ஒரு தருணத்தைப் பரிசளித்தது! ''எனக்கு 71 வயசு. 40 வருஷ விகடன் வாசகன். 'ஆறாம்திணை' முடிஞ்சிருச்சுனு படிச்சப்ப, மனசு பாரமாயிடுச்சு. நெஜமா சொல்றேன் தம்பி... கண்ணீர் வந்திருச்சு! ரெண்டு வருஷத்துல என் வீடே வேற மாதிரி ஆகிருக்கு. எல்லாரும் எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கிறாங்க. உளுந்தங்களி திரும்ப வந்திருக்கு. மருமக முடக்கறுத்தான் ...

கவிதை

Posted: 08 Oct 2014 10:29 AM PDT

விடை தெரியா
சில கேள்விகளுக்கு
பதில்.......
மேலும் சில கேள்விகளே!

நில்லுங்கள் ராஜாவே - சுஜாதா

Posted: 08 Oct 2014 10:24 AM PDT

தொடக்கம் முதல் முடிவு வரை விறுவிறுப்பான நாவல்.

http://www.mediafire.com/download/ew4zci9au44ppbg/Nillunkal+Rajave.pdf

மனித மர(ண)ம்

Posted: 08 Oct 2014 10:15 AM PDT

மரத்தை
மரணிக்கச் செய்துவிட்டு
அதன் மீது...
மரணித்துப் படுத்திருக்கிறான் மனிதன்
இருவரும் சேர்ந்து..... எரிய!

ஹய்கூ

Posted: 08 Oct 2014 10:09 AM PDT

உன்னை வாழ
வைக்கவே
நான்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
இதயம்....!

மகாத்மா முதல் மன்மோகன் வரை!-தேசபக்தன்---தொடர்

Posted: 08 Oct 2014 08:57 AM PDT

ரூபாய் நோட்டுகளில் காந்தி படம் எதற்காக இருக்கிறது? 55 கோடி ரூபாய் பணத்துக்காகத்தான் மகாத்மா உயிரைவிட்டார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ''நான் (கோட்சே) ஏன் காந்தியைக் கொலை செய்தேன்? இப்படிப்பட்ட சிந்தனை எனக்கு எதற்காக வந்தது? தாதாபாய் நௌரோஜி, விவேகானந்தர், கோபாலகிருஷ்ண கோகலே, பாலகங்காதர திலக், வீரசாவர்க்கர் ஆகியோரின் படைப்புகளையும், இவற்றுக்கு எல்லாம் மேலாக காந்தியின் எழுத்தோவியங்களையும்தான் அதிகம் படித்தேன். நான் படித்த படிப்பெல்லாம் என் கடமை எது என்பதை உணர்த்தியது. இந்த நாட்டைப் ...

இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது - விடுகதை

Posted: 08 Oct 2014 08:08 AM PDT

1) இருட்டு அறையில் முத்து வரிசை - அது என்ன? - 2) ஒரு கரண்டி மாவு, ஊரெல்லாம் தோசை - அது என்ன? - 3) எத்தனை பேர் ஏறினாலும் சலிக்காத குதிரை - அது என்ன? - 4) நடுக்காட்டில் ஒரு கூழ்ப்பானை திறந்து கிடக்குது - அது என்ன? - 5) டாக்டர் வந்தார், ஊசி போட்டார் - காசு வாங்காமல் ஓடி விட்டார் - அது என்ன? - 6) உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- அவன் யார்? - 7) இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது - அது என்ன? - 8) குண்டன் குழியில் விழுவான், குச்சியப்பன் தூக்கி விடுவான் - அது என்ன? - 90 ...

' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,

Posted: 08 Oct 2014 07:40 AM PDT

பெங்களூரு: தமிழகத்தில் இருந்ததை விட பெங்களூரு சிறையில் இருக்கும் தற்போது தனது உடல்நிலை நன்றாகத்தான் இருக்கிறது என ஜெ., தெரிவித்ததாக சிறைத்துறை டி. ஐ.ஜி., ஜெயஷிம்ஹா கூறியுள்ளார் . சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ., சிறையில் அடைக்கப்பட்டு இன்றுடன் 9 நாட்களாகிறது. சிறை வளாகம் வெளியே எப்போதும் காணப்படும் கூட்டம், பரபரப்பு எதுவுமில்லை. கூட்டவிடுமுறை நாள் என்பதால் ஜெயில் வளாகம் அருகே யாரும் அதிக அளவில் வரவில்லை. சில எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் ஆங்காங்கே தரையில் அமர்ந்து இருப்பதை காண முடிகிறது. ...

உறவுகள் உதிர்வதில்லை!

Posted: 08 Oct 2014 07:37 AM PDT

நடராஜ பெருமானையும், கோவிந்தராஜ பெருமாளையும் ஒருசேர தரிசித்து வரலாம்...' என்று நினைத்து கோவிலுக்கு வந்த சதாசிவத்திற்கு, துாரத்தில் வந்த மகனை பார்த்ததும் கோபம் வந்தது; அடக்க நினைத்தும் அவரால் முடியவில்லை. சதாசிவத்தின் இரண்டாவது மகன் மூர்த்தி; ஆயினும், இருவருக்குமிடையே சமீபகாலமாக பேச்சுவார்த்தையில்லை. தான் விரும்பும் பெண்ணை, அவன் திருமணம் செய்து கொள்ள கேட்ட போது, அவர் மறுத்தார். மூத்த பிள்ளைக்கு திருமணம் ஆகாத நிலையில், இரண்டாவது மகன் திருமணத்தை, அதுவும் காதல் திருமணத்தை எந்த தந்தையால் ஏற்றுக் ...

தெரிந்து கொள்வோம்...

Posted: 08 Oct 2014 07:16 AM PDT

தெரிந்து கொள்வோம்... சின்னப்பிள்ளை அம்மாள்..! அன்றாடம் கூலி வேலையும், விவசாயமும் செய்து கொண்டிருந்த சின்னபிள்ளை, சரியான கூலி தராமல் ஏமாற்றும் பண்ணை முதலாளிகளை தட்டி கேட்கலானார். அவருடைய தைரியத்தின் மூலம் அவருக்கு சரியான கூலி தரப்பட்டது. ஆகவே இவரின் கூட இருந்தால், நமக்கும் சரியான கூலி கிடைக்கும் என்று பல பெண்கள் அவருடன் இணைந்தனர், இவ்வாறு அவர்களுக்கெல்லாம் சிறு தலைவியாக விளங்கினார். பின்பு "Dhan Foundation" எனும் சேவை அமைப்பின் மூலம் உருவான "களஞ்சியம்" எனும் அமைப்பில் 1989 ஆம் ஆண்டு ...

மவுன போராளி

Posted: 08 Oct 2014 07:12 AM PDT

''எங்கிட்ட பேசி எந்தப் பிரயோஜனமும் இல்லப்பா.'' ''நீ சொன்னா, உங்கம்மா கேப்பான்னுதான் உங்கிட்ட வந்தேன்.'' ''நீங்க செஞ்ச எந்த நல்ல செயலச் சொல்லி, அம்மாகிட்ட பேச முடியும்...'' ''அப்ப... இப்படியே நாங்க தனித் தனியாதான் வாழணுமா?'' குரல் உயர்ந்தது. ''எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்லேர்ந்து நீங்க ரெண்டு பேரும், ஒரே குடும்பத்துக்குள்ள இருந்தாலும், தனித்தனியா தானப்பா வாழ்ந்துகிட்டு இருந்தீங்க. உங்களுக்கும், அம்மாவுக்கும் முனீஸ்வரன் - முனீஸ்வரிங்கிற பேர் ஒற்றுமையத் தவிர, வேறெந்த ஒற்றுமையும் இருந்ததா எனக்கு ...

நண்பர்களே... உங்கள் பார்வைக்கு...

Posted: 08 Oct 2014 07:05 AM PDT



நண்பர்களே... உங்கள் பார்வைக்கு...



முன்னாள் மற்றும் இந்நாள் தமிழக முதல்வர்களுடன்
நம் "கலையுலக முதல்வர்" சிவாஜி கணேசன் அவர்கள்.

குன்ஹா தீர்ப்பு முழு விவரம்

Posted: 08 Oct 2014 07:00 AM PDT

கற்பனை செய்ய முடியாத கணக்கு அது! இந்தியாவையே தனது தீர்ப்பை நோக்கி திருப்பியவர் நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா. 1,136 பக்கங்களுக்கு எழுதப்பட்ட தீர்ப்பு அது. முதல் 894 பக்கங்களுக்கு வழக்கின் பின்னணி, குற்றச்சாட்டுகள், அதற்கான ஆவணங்கள், கைப்பற்றப்பட்ட சொத்து விவரங்கள், வழக்கில் சேர்க்கப்பட்ட சாட்சிகள் ஆகியவை தனித்தனித் தலைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளன. குற்றம்சாட்டப்​பட்டவர்​களுக்கு எதிராக உள்ள சாட்சிகள், ஆவணங்கள் ஆகியவை உறுதியாக உள்ளன என்பதும் அவற்றை எதிர்த்துக் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அளித்த ...

படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல் :) - Jayatv right now :)

Posted: 08 Oct 2014 05:34 AM PDT



படம்பார்த்து சிரியுங்கள் புன்னகை

உன் மரணத்தின் வலிகள்

Posted: 08 Oct 2014 05:27 AM PDT

என்னவளே என்னவளே. எனக்காக பிறந்தவளே. உன் ஞாபகங்கள் தீயாக எரிகிறது. உன்னுடன் பழகிய காலங்கள் என் வாழ்வில் வசந்த காலங்கள். தனியாக வாழும் நாட்கள் எல்லாம் ஏதோ ஒன்றை இழந்தது போல   ஞாபக கீற்றுக்கள் மனவானில் மையல்லிடுகிறது. இதயத்தின் துடிப்புக் கூட உன் ஞாபக அலையடிக்கிறது. அன் பே அன்பே ஒரு கனம். திரும்பிப்பார் இரவுப் பொழுதில் நிலா வெளிச்சத்தில் முற்றத்தில் கைபிடித்து நடந்த காலங்கள். திருவிழாக் காலங்களில் கோயில் வீதியெங்கும் நடை பயின்ற காலங்கள். வீதியில் நான் நடந்து செல்லும் ...

பெண்ணோ ஒருத்தி, புடவையோ ஆயிரம் - விடுகதை

Posted: 08 Oct 2014 05:13 AM PDT

1) அர்த்த ராத்திரி ஆட்டம், அஞ்சாறு பேர் வந்தால் ஓட்டம் - அது என்ன? - 2) அந்தரத்தில் பறக்கும் பறவை அல்ல, அழகான வால் உண்டு, குரங்கும் அல்ல - அது என்ன? - 3) அடி மத்தளம், இலை பர்வதம், குலை சிறிது காய் துவர்ப்பு, பழம் தித்திப்பு - அது என்ன? - 4) அங்கமுத்து வாசலிலே கொங்குமுத்து ஆடுது அதையெடுத்து வாயில் போட்டால் திக்குமுக்கு ஆடுது - அது என்ன? - 5) ஆடி ஆடி அசையும் மலை..! - அது என்ன? - 6) எட்டாத கொம்பிலே மிட்டாய் பொட்டலம் தொங்குது - அது என்ன? - 7) ஒற்றைக்க்கால் குள்ளனுக்கு எட்டுக் ...

பாவங்களை தடுக்கும் இறை சிந்தனை

Posted: 08 Oct 2014 04:52 AM PDT

சிறந்த பக்தராகிய ஏகநாதரிடம்,  இல்லறவாசி ஒருவர் ஆசி பெறுவதற்காக வந்திருந்தார். அவர் ஏகநாதரிடம், 'சுவாமி! தாங்கள் தான் எனக்கு அருள்புரிய வேண்டும். பாவம் செய்யக்கூடாது என்று என்னுடைய மனம் எப்போதும் நினைக்கிறது. ஆனால் என்னையும் அறியாமல் ஏதாவது ஒரு பாவத்தை நான் செய்து விடுகிறேன். அதைத் தடுக்க தாங்கள்தான் உதவி புரிய வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். அப்போது அவரது கண்கள் பணித்திருந்தது. ஏகநாதர் அந்த இல்லறவாசியைப் பார்த்து, 'என்ன பாவம் செய்தாலும் நீங்கள் இன்னும் ஏழு நாட்களுக்கு மேல் பாவம் ...

பலனை கருதாத கர்மம்

Posted: 08 Oct 2014 04:48 AM PDT

மகாபாரத யுத்தம் முடிந்து பாண்டவர்கள் அரியணை ஏறிவிட்டனர். அவர்களின் அரசாட்சி நல்ல முறையில் நடந்து கொண்டிருந்தது. ஆனாலும் ஒரு சிலரது மனதில் சில குழப்பமான கேள்விகள் இருந்து கொண்டே இருந்தன. அவற்றுள் ஒன்றாக கிருஷ்ணரிடம், அந்தக் கேள்வி கேட்கப்பட்டது. 'கிருஷ்ணா.. நீ பாண்டவர்கள் மேல் அளவில்லாத அன்பு கொண்டவன். அவர்களின் நலனில் அக்கறை உள்ளவன். உன் தங்கை சுபத்ராவை கூட, அர்ச்சுனனுக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறாய். அப்படி இருக்க பாண்டவர்கள் சூதாடி நாட்டை இழந்து, நாடோடியாய் காட்டில் அலைந்தார்கள். ...

அந்த ஏழு இரவுகள்

Posted: 08 Oct 2014 04:44 AM PDT

--- - திங்கள் இரவு மனைவி : இன்னைக்கு என்ன குடிச்சிட்டு வந்தீங்களா? கணவன் : ஆமான்டா செல்லம் ஆபிஸ்ல வெளிநாட்டு வாடிக்கையாளருடன் சந்திப்பு அப்படியே குடிக்க வேண்டியதா போச்சி - செவ்வாய் இரவு மனைவி: என்ன இன்னைக்கும் குடிச்சிட்டு வர்றீங்களே கணவன் : ஆமான்டா செல்லம் நண்பனுக்கு நிச்சயம் பண்ணியதுக்கு பார்ட்டி கொடுத்தான் அதான் அப்படியே தவிர்க்க முடியல... - புதன் இரவு மனைவி: இன்னைக்கும் குடிச்சிட்டு வர்றீங்க கணவன் : ஒரு நண்பனுக்கு டிவேர்ஸ்...மனஉளைச்சல் அவனை ஆசுவாச படுத்தி அப்படியே.... - வியாழன் ...

தூய்மை இந்தியா - கார்ட்டூன்

Posted: 08 Oct 2014 04:13 AM PDT

படித்ததில் பிடித்தது :) - துணிக்கடையில் பொது அறிவுப்போட்டி!

Posted: 08 Oct 2014 01:37 AM PDT

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

அண்ணல் பற்றி அறியாதவை!

Posted: 08 Oct 2014 01:34 AM PDT

நமது பெரும் அன்பிற்கு உரிய காந்தியடிகளின் பிறந்த நாள் - அக்டோபர் 2. இந்தியர் தம் வாழ்வில் மறக்க முடியாத முக்கிய நாட்களில் இதுவும் ஒன்று. அவரின் பிறந்தநாள் காலத்தில் அவரை பற்றி அதிகம் அறிந்திராத செய்திகளை தெரிஞ்சிக்கோங்க பட்டூஸ். அதிகம் (பிடி)க்கப்பட்டவர்! காந்திஜிக்கு புகைப்பட கலைஞர்களைக் கண்டாலே பிடிக்காது. புகைப்படம் எடுப்பதையும் விரும்பாதவர். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த காலத்தில் அதிகமாக புகைப்படம் எடுக்கப்பட்ட தலைவரே அவர்தான். பறக்காத தேசப்பிதா! உலகத்து நாடுகளில் எல்லாம் ...

தெரிஞ்சுக்கோங்க!.....பலே செந்நாய்!

Posted: 08 Oct 2014 01:09 AM PDT

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ...

உங்கள் குழந்தை நல்லவனாக வேண்டுமா?

Posted: 08 Oct 2014 12:56 AM PDT

பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு எந்த அளவுக்கு நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுக்கின்றனரோ, அந்த அளவுக்கு அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும். வள்ளலாரின் வாழ்க்கை அப்படிப்பட்டது தான். வள்ளலாரின் பெற்றோர் இல்லறத்தில் இருந்தபடியே சிவதொண்டு செய்து வந்தனர். தாய், தந்தையின் இந்த சேவை குணம், வள்ளலாரின் மனதில் சிறுவயதிலேயே பதிந்து விட்டது. அதன் விளைவு தான், இன்று வரை அணையாமல் எரிந்து கொண்டிருக்கும் வடலுார் சத்திய ஞான சபையின் அடுப்பு. பசித்தவர்க்கு உணவளிக்க வேண்டும் என்ற பண்பை, வள்ளலார் தன் பெற்றோரிடமிருந்து ...

ஜெயலலிதா நினைத்த வாழ்க்கை இதுதானா?

Posted: 08 Oct 2014 12:16 AM PDT

'ஆரம்பத்திலேயே எங்க குடும்பம் ரொம்ப வசதியாக இருந்தது; ரொம்பப் பணக்காரக் குடும்பம். அப்போது இருந்த அந்தச் சொத்து அப்படியே நிலைச்சு இருந்திருந்தால், எங்க அம்மாவும் நடிக்க வந்திருக்க வேண்டாம்; நானும் சினிமாவில் நடிக்க வந்திருக்க வேண்டாம்!' - இப்படிச் சொன்னவர் ஜெயலலிதா! 'தங்களின் அரசியல் வளர்ச்சியை அருகில் இருந்து பார்க்காத உங்களது தாயாரின் நினைவுகளைச் சொல்லுங்கள்...' என ஒருமுறை ஜெயலலிதாவிடம் கேட்டபோது, 'அம்மா இருந்திருந்தால், இந்தக் கேள்விக்கே இடம் இருந்திருக்காது. ஏனென்றால், என்னை அவர் அரசியலில் ...

தப்பிக்க என்ன வழி..?

Posted: 08 Oct 2014 12:02 AM PDT

- முதல் அணுகுண்டு படைப்பை மேற்பார்த்து வந்த விஞ்ஞானி ராபர்ட் ஓப்பன்ஹீமர் என்பவர், அமெரிக்க காங்கிரஸ் குழு முன்பு, குண்டு குறித்த விவரங்களை விளக்குவதாக இருந்தார். - அவரது விளக்கத்தைக் கேட்க விஞ்ஞானிகள் திரண்டிருந்தனர். - ஹீமர், அணுகுண்டால் ஏற்படும் அழிவுகள் குறித்து விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தபோது, ''இதிலிருந்து தப்பிக்க ஏதாவது வழி இருக்கிறதா..?'' என்ற கேள்வி எழுப்பப்பட்டது. - இல்லாமல் இருக்குமா? நிச்சயமாக இருக்கிறது! என்றார் ஹீமர் - என்ன வழி என்று கூறுங்கள் - என்று அனைவரும் ...

சென்னை கால்பந்து அணியில் கேப்டன் தோனி

Posted: 07 Oct 2014 11:44 PM PDT

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் பங்கேற்கும் சென்னையின் எப்சி அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ஆகிறார் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி. ஹிந்தி நடிகர் அபிதாப் பச்சனும் இந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ஆவார். ஐபிஎல் பாணியிலான இந்த கால்பந்து போட்டி அக்டோபர் 12-ம் தேதி தொடங்க இருக்கிறது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, சவுரவ் கங்குலி ஆகியோரும் இதில் வெவ்வேறு அணிகளின் உரிமையாளராக உள்ளனர். இந்த வரிசையில் இப்போது ...

உன்னில் நான் சரிபாதி என்றாய்...

Posted: 07 Oct 2014 11:39 PM PDT

- காலையில் துவட்டி வீசிய துண்டு இன்னும் அதே இடத்தில் கிடக்கிறது சுவராணியில் மாட்டத் தவறிய கால் சட்டை வரவேற்பறையில் சிரித்துக் கொண்டிருக்கிறது - புரட்டிப்போட்ட நாளிதழ் மீதக் கோப்பைத் தேநீர் வழக்கம் போல் இவையாவும் காத்திருக்கின்றன வேலை முடிந்து வீடு திரும்பும் நான் சீர்படுத்தி வைக்க - உன்னில் நான் சரிபாதி என்றாய் உனக்கும் சேர்த்து நானே சுவாசிக்க வேண்டுமென்கிறபோது..! மனத்தாழியுடைத்தென் நிலைப்பாட்டை ஆராய முற்பட்ட வேளை தோளில் வந்தமர்ந்த பட்டாம்பூச்சி அதன் இயற்கையை மீண்டும் ...

விமானப்படை தினம்: பிரதமர் வாழ்த்து! - 8th October

Posted: 07 Oct 2014 11:19 PM PDT

புதுடில்லி: இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு, வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு, வீரர்களை வாழ்த்துகிறேன். வீரர்கள் நமது நாட்டின் பெருமைக்குரியவர்கள். அவர்களது வீரம், கடமை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை தொடர்ந்து நாட்டிற்கு ஊக்கமளிப்பதாக இருக்கும். இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.

தினமலர்

கருஞ்சிகப்பு வண்ணத்தில் சந்திரன் தோற்றம்: கடலோர பகுதிகளில் மாலை பார்க்கலாம்

Posted: 07 Oct 2014 11:09 PM PDT

சென்னை: இந்த ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் இன்று நடக்க உள்ளது. கிரஹணத்தின் போது, சந்திரன் கருஞ்சிவப்பு தோற்றத்தில் காட்சியளிக்கும். தமிழகத்தில், சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் இன்று மாலை கிரகணத்தை பார்க்க முடியும் என கூறப்படுகிறது. சந்திரன், பூமி, சூரியன் நேர்கோட்டில் வரும்போது கிரகணங்கள் ஏற்படுகின்றன. இந்த ஆண்டிற்கான கடைசி சந்திர கிரகணம் இன்று நடக்கிறது. இந்த கிரகணத்தை அமெரிக்காவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பார்க்கலாம். வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா மற்றும் சில தெற்காசிய ...

டிசம்பர் 5-இல் கார்த்திகை தீபத் திருவிழா

Posted: 07 Oct 2014 11:05 PM PDT

டிசம்பர் 5-இல் கார்த்திகை தீபத் திருவிழா: அருணாசலேஸ்வரர் கோயிலில் பூர்வாங்கப் பணிகள் தொடக்கம் - கோயில் ராஜகோபுரம் எதிரே நடப்பட்ட பந்தக்காலுக்கு சிறப்பு தீபாராதனை காட்டும் சிவாச்சாரியார்கள். ================== - உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, கோயிலில் பூர்வாங்கப் பணிகள் மேற் கொள்வதற்கான பந்தக்கால் முகூர்த்த விழா திங்கள்கிழமை நடைபெற்றது. அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ...

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு படை வீரரால் சகாக்கள் 3 பேர் சுட்டுக் கொலை

Posted: 07 Oct 2014 10:35 PM PDT

-- கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) அதிகாலை மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சக வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். சென்னை அருகே கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் பாதுகாவலர்கள் இன்று அதிகாலை 5.15 மணியளவில் வழக்கமான அணிவகுப்புக்கு அழைக்கப்பட்டனர். அப்போது விஜய் பிரதாப் சிங் என்ற தலைமைக் காவலர் திடீரென தனது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில், கணேசன் - கூடுதல் துணை ஆய்வாளர், சுப்புராஜ் - தலைமைக் ...

பெண்களை பூக்களோடு ஒப்பிடாதீர்கள்..

Posted: 07 Oct 2014 06:17 PM PDT

- வேண்டாம் பெண்களை பூக்களோடு ஒப்பிடாதீர்கள்.. பூக்களெல்லாம் இரத்தக் கண்ணீர் வடிப்பதில்லை! பெண்களை நிலவுடன் ஒப்பிடாதீர்கள்.. நிலவு, பாலியல் கொடுமையால் இம்சிக்கப் படுவதில்லை! - ====================================== -ச.விக்னேஸ்வரி, தாப்பா ரோட்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™