Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


தெலுங்குதேச தலைவர்கள் 10-ந்தேதி பஸ் யாத்திரை: சந்திரபாபு நாயுடு வேண்டுகோள்

Posted: 06 Oct 2014 10:45 PM PDT

தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சிக்கு 15 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். தெலுங்கானா முதல்– மந்திரி சந்திர சேகரராவ் சமீபத்தில் பேசும் போது, ''தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி கூட்டம் 11, 12 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் பலர் நமது கட்சியில் சேருகிறார்கள்'' என்றார்.

நாளை சந்திரகிரகணம்: திருப்பதி கோவில் 10 மணி நேரம் மூடப்படுகிறது

Posted: 06 Oct 2014 10:45 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவத்துக்கு பிறகு நேற்று தான் பக்தர்கள் கூட்டம் குறைய தொடங்கியது. இருந்த போதிலும் தர்ம தரிசனத்துக்கு 20 மணி நேரம் ஆனது. இந்த நிலையில் நாளை சந்திர கிரகணத்துக்காக கோவில் நடை 10 மணி நேரம் மூடப்படுகிறது. சந்திர கிரகணம் நாளை மாலை 4.45 மணிக்கு தொடங்கி இரவு 7.05 மணி வரை நீடிக்கிறது. எனவே ஆகம விதிகள்படி முன்

நிதன் கட்காரி மீது ஷு வீச முயன்ற நபர்: போலீஸ் பிடித்து விசாரணை

Posted: 06 Oct 2014 10:25 PM PDT

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட நிதின் கட்காரி மீது ஷு வீச முயன்ற நபரை பா.ஜ.க.வினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். புனே அருகே உள்ள கோத்ரட் என்ற பகுதியில் நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்ள நிதின் கட்காரி வந்தபோது அவர் மீது ஷு-வை வீச அந்த நபர் முயன்றுள்ளார்.

நாடு முழுவதும் ரூ.2 லட்சம் கோடி செலவில் கழிவறைகள் கட்டப்படும்: வெங்கையா நாயுடு

Posted: 06 Oct 2014 10:02 PM PDT

மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை மந்திரி வெங்கையா நாயுடு ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:– நாடு முழுவதும் சுகாதார திட்டம் தீவிரப்படுத்தப்படும். இதற்காக 'சுகாதார இந்தியா' என்ற பெயரில் பிரசார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதில் ராமகிருஷ்ணா மிஷன் போன்ற தன்னார்வ அமைப்புகளும் முன்வர வேண்டும் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளது.

மனைவியுடன் விவாகரத்து: பெற்ற மகன்களை கொன்ற தந்தை தானும் தற்கொலை

Posted: 06 Oct 2014 09:53 PM PDT

ஐதராபாத்தில் நடைபெற்ற கொடூரமான சம்பவம் அம்மாநிலத்தில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெற்ற மகன்களை அவர்களது தந்தையே கொன்று தானும் ரெயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். ஐதராபாத் அருகே உள்ள அல்வால் பகுதியில் வசித்து வருபவர் 44 வயதான ராகவேந்திர குருபிரசாத். அவரது மனைவி சுகாசினியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது.

கூட்டணியை முறிக்கும் முன்பு பால் தாக்கரே மீதான மரியாதை எங்கே போனது?: மோடிக்கு சிவசேனா கேள்வி

Posted: 06 Oct 2014 08:53 PM PDT

மராட்டிய சட்டசபை தேர்தல் வருகிற 15-ந் தேதி நடைபெற உள்ளது. தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் 25 ஆண்டு கால சிவசேனா - பா.ஜனதா கூட்டணி உடைந்தது. அந்த கட்சிகள் தனித்து தேர்தலை சந்திக்கின்றன. இந்த நிலையில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி மராட்டியத்தில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் சாங்கிலி மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசார

ரேடியோ பேச்சு எதிரொலி: பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தேர்தல் கமிஷனிடம் காங்கிரஸ் புகார்

Posted: 06 Oct 2014 05:24 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 3-ந் தேதி, ஆல் இண்டிய ரேடியோவில், 'மான் கி பாத்' என்ற நிகழ்ச்சி மூலம் உரையாற்றினார். இந்நிலையில், இதுகுறித்து தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத்துக்கு காங்கிரஸ் கட்சியின் சட்டத்துறை செயலாளர் கே.சி.மிட்டல் ஒரு புகார் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

சமூக ஊடகங்களின் உதவியால் டெல்லியில் கடத்தப்பட்ட 3 வயது சிறுமி மீட்பு

Posted: 06 Oct 2014 04:45 PM PDT

மத்திய டெல்லியைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 3 வயது மகள் ஜான்வி கடந்த 28-ந் தேதி இந்தியா கேட் பகுதியில் சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென மாயமானாள். இதனால் அதிர்ச்சியடைந்த அவளது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.

பக்ரீத் பண்டிகை: வாகா எல்லையில் இனிப்பு பரிமாற்றம் இல்லை

Posted: 06 Oct 2014 04:34 PM PDT

பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானையொட்டி அமைந்துள்ள வாகா எல்லையில் முக்கிய பண்டிகைகளின் போது இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் இனிப்புகளையும், வாழ்த்துகளையும் பரிமாறிக்கொள்ளும் வழக்கம் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

மோடியை புகழ்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்: சசிதரூருக்கு கேரள காங்கிரஸ் வேண்டுகோள்

Posted: 06 Oct 2014 03:55 PM PDT

கடந்த 2-ந் தேதி தூய்மை இந்தியா விழிப்புணர்வு பிரசாரத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார். அப்போது இது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்துக்கு வருமாறு சச்சின் தெண்டுல்கர், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், திருவனந்தபுரம் தொகுதி

ரிசர்வ் வங்கியை டெல்லிக்கு மாற்றுவதாக பொய் பிரசாரம்: நிர்மலா சீதாராமன் பேட்டி

Posted: 06 Oct 2014 03:24 PM PDT

மராட்டியத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம் அனல் பறந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் காங்கிரஸ் தேர்தல் பிரசார குழு தலைவர் நாராயண ரானே, நாட்டின் நிதி தலைநகரமாக கருதப்படும் மும்பை நகரின் முக்கியத்துவத்தை குறைக்க நரேந்திர மோடி அரசு சதி செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீது கர்நாடக ஐகோர்ட்டில் இன்று விசாரணை

Posted: 06 Oct 2014 11:50 AM PDT

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த மாதம் 27-ந் தேதி தீர்ப்பு கூறியது. இதைத்தொடர்ந்து, அவர் அங்குள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1சி செயற்கைகோள் ஏவுதல் ஒரு வாரத்திற்கு தள்ளி வைப்பு

Posted: 06 Oct 2014 08:36 AM PDT

அமெரிக்காவின் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் போன்று இந்தியாவுக்கான சொந்தமாக வழிக்காட்டும் தொழில் நுட்பத்தை ஏற்படுத்த ஏதுவாக இஸ்ரோ செயற்கைகோள்களை அனுப்பி வருகிறது. 7 செயற்கை கோள்களை அனுப்பும் இத்திட்டத்தில் மூன்றாவது செயற்கைக்கோளாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1 சி செயற்கைகோளை அக்டோபர் 10-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டது.

நிதின் கட்காரிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

Posted: 06 Oct 2014 07:56 AM PDT

தேர்தல் விதிமுறையை மீறியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வரும் நிதின் கட்காரி, ஓட்டு போடுவதற்கு யாராவது பணம்

ஜெயலலிதாவின் ஜாமின் மனு நாளை விசாரணை: உயர் நீதிமன்ற பகுதியில் 144 தடை உத்தரவு

Posted: 06 Oct 2014 07:00 AM PDT

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் ஜாமின் மனு மீது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளதால், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியதையடுத்து

கிளீன் இந்தியா திட்டத்தில் இணைந்த தருண் கோகாய், சச்சினுக்கு மோடி பாராட்டு

Posted: 06 Oct 2014 05:08 AM PDT

தூய்மையான இந்தியாவை உருவாக்கும் வகையில் 'கிளீன் இந்தியா' திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2-ம் தேதி தொடங்கி வைத்தார். அப்போது, இத்திட்டத்தில் அனைவரும் இணைய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். அதனை ஏற்று நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய பிரமுகர்கள் தங்கள் பகுதிகளில் சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டுள்ளனர். கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர், அசாம் முதல்வர் தருண் கோகாய் ஆகியோரும் பிரதமரின் அழைப்பை ஏற்று இப்பணியில் ஈடுபட்டனர். அவர்களை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அருண் ஜெட்லி டிஸ்சார்ஜ் ஆனார்

Posted: 06 Oct 2014 12:52 AM PDT

மத்திய நிதி மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் அருண் ஜெட்லி நீரிழிவு நோயால் அவதிப்பட்டார். அவருக்கு சில வாரங்களுக்கு முன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின் சில நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் தனது வழக்கமாக பணிகளை கவனித்து வந்த அவர், அறுவை சிகிச்சைக்கு பின் மேற்கொள்ளப்படும் வழக்கமான செக்-அப்பிற்காக மருத்துவமனைக்கு சென்றார்.

ஆந்திராவில் உள்ள காப்பகத்தில் குற்ற பின்னணி பெண்கள் தப்ப முயற்சி

Posted: 06 Oct 2014 12:35 AM PDT

ஆந்திர மாநிலம் மெகபூப் நகர் மாவட்டத்தில் உள்ள ஆமனகல்லு என்ற இடத்தில் 'பிரஜ்வாலா' என்ற பெயரில் பெண்கள் காப்பகம் உள்ளது. குற்றப் பின்னணியில் சிக்கிய பெண்கள், விபசார விடுதியில் இருந்து மீட்கப்பட்டவர்கள் என 250–க்கும் மேற்பட்ட பெண்கள் இங்கு அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் விபசாரத்தில் ஈடுபட்ட இந்தி நடிகைகள், மாடல் அழகிகள் பலரும் உள்ளனர். இதன் காம்பவுண்டு சுவர் மத்திய சிறைச் சாலையில் இருப்பது போல் மிக உயரமாக இருக்கும்.

பீகாரில் தசரா நெரிசலில் சிக்கியவர்கள் சேர்க்கப்பட்டுள்ள ஆஸ்பத்திரிக்கு மன்ஜி ரகசிய விசிட்: டாக்டர் இல்லாததால் அதிருப்தி

Posted: 06 Oct 2014 12:03 AM PDT

பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த வெள்ளியன்று நடைபெற்ற தசரா விழாவில் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 33 பேர் பலியான நிலையில் மேலும் 28 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் பாட்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™