Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


பஞ்சாபில் மரத்தில் மோதி மூன்று துண்டுகளான பி.எம்.டபிள்யூ கார்: இருவர் பலி

Posted: 26 Oct 2014 10:43 PM PDT

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானாவில் மிகவும் விலை உயர்ந்த காரான பி.எம்.டபிள்யூ. மரத்தில் மோதியதில் மூன்றாக சிதறியது. இதில் காரில் பயணம் செய்த மூவரில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். லூதியானா அருகே சாலையில் சென்று

வாட்ஸ் அப் மூலம் சரிதாநாயர் நிர்வாண காட்சியை வெளியிட்ட போலீஸ்காரர் சஸ்பெண்டு

Posted: 26 Oct 2014 10:41 PM PDT

திருவனந்தபுரத்தில் சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் கருவி பொருத்தி தருவதாக பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி நடைபெற்றது. பெண் தொழில் அதிபரான சரிதாநாயர் இந்த மோசடியில் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. அவருக்கு கேரள அரசியல் பிரமுகர்கள் பலர் உதவி செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது. இந்த மோசடி

ஆன்லைன் முன்பதிவு திட்டத்தால் திருப்பதிக்கு 2 மாதத்தில் ரூ.10 கோடி வருவாய் இழப்பு

Posted: 26 Oct 2014 09:59 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆகஸ்டு 20–ந் தேதி முதல் ஆன்லைன் முன்பதிவு திட்டம் தொடங்கப்பட்டது. தினமும் 11 ஆயிரம் டிக்கெட் இதற்காக ஒதுக்கப்பட்டது. இதனால் கோவிலில் ''கரண்ட் புக்கிங்'' நிறுத்தப்பட்டது.

ராஜஸ்தான் மாநில மந்திரிசபையை இன்று விரிவாக்கம் செய்கிறார் வசுந்தரா ராஜே சிந்தியா

Posted: 26 Oct 2014 09:52 PM PDT

ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா இன்று தனது மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய உள்ளார். ஆட்சிப்பொறுப்பேற்று பத்து மாதங்களுக்கு பின் தனது மந்திரிசபையை வசுந்தரா விரிவாக்கம் செய்கிறார். தற்போது 12 மந்திரிகள் மட்டுமே உள்ள நிலையில், 47 துறைகளை முதல்வர் வசுந்தரா மட்டுமே இதுவரை நிர்வகித்து வந்தார். இந்த

தூய்மை இந்தியா திட்டத்திற்கு புதிய சக்தி கொடுத்தவர் மோடி: சசிதரூர் மீண்டும் பாராட்டு

Posted: 26 Oct 2014 09:34 PM PDT

பிரதமர் நரேந்திரமோடி 'தூய்மை இந்தியா' திட்டத்தை அறிவித்து அதை தீவிரமாக செயல்படுத்த பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் இந்த திட்டத்தை பொதுமக்களிடம் விரைவாக கொண்டு சேர்க்க வசதியாக முக்கிய பிரமுகர்கள் மற்றும் சினிமா, விளையாட்டு பிரபலங்களையும் இந்த திட்டத்தின் விளம்பர தூதுவர்களாக அறிவித்து உள்ளார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மேற்கு வங்கம் செல்கிறார்: மம்தாவுக்கு சிக்கல்

Posted: 26 Oct 2014 09:25 PM PDT

மேற்கு வங்காளத்தில் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு தொடர்பிருப்பதை தேசிய புலனாய்வு குழு கண்டுபிடித்தது. இதை தொடர்ந்து குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களுடன் இவர்களுக்கு

நில ஒதுக்கீடு விவகாரம்: வதேரா மீதான புகார் பற்றி விசாரணை - அரியானா அரசு அறிவிப்பு

Posted: 26 Oct 2014 08:29 PM PDT

நில ஒதுக்கீடு விவகாரத்தில் வதேரா மீதான புகார் பற்றி விசாரணை நடத்தப்படும் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள அரியானா அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து புதிய மந்திரி அனில்விஜ், பதவி ஏற்ற சிறிது நேரத்தில்

ஜார்கண்ட் மாநிலத்தில் அனைத்து தொகுதிகளிலும் போட்டி: பா.ஜனதா அறிவிப்பு

Posted: 26 Oct 2014 08:12 PM PDT

ஜார்கண்ட் மாநிலத்தில் 5 கட்ட சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 25-ந் தேதி தொடங்குகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 81 தொகுதிகளிலும் பா.ஜனதா போட்டியிடும் என்று அக்கட்சியின் தேசிய

வரதட்சணை கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

Posted: 26 Oct 2014 05:23 PM PDT

அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு கடிதம் எழுதி உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஒரு பெண், அவளுடைய கணவராலோ அல்லது அவருடைய குடும்பத்தினராலோ சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டால், அவர்களுக்கு மூன்று ஆண்டு வரை ஜெயில் தண்டனையும், அபராதமும் விதிக்க இ.பி.கோ. 498 ஏ பிரிவு வகை செய்கிறது. ஆனால், சமீபகாலமாக வரதட்சணை கொடுமை

சோனியா, அத்வானி உள்பட 401 எம்.பி.க்கள் சொத்து கணக்கை தெரிவிக்கவில்லை: பாராளுமன்ற செயலகம் தகவல்

Posted: 26 Oct 2014 05:17 PM PDT

பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற ஒருவர், 90 நாட்களுக்குள் தனது சொத்து, கடன் விவரத்தை தெரிவிக்க வேண்டும் என்று பாராளுமன்ற சொத்து விதிகள்-2004 கூறுகிறது. இந்த நிலையில் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் சொத்து விவரம் குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் ஒருவர் கேள்வி எழுப்பி

கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-5 ஏவுகணை சோதனை அடுத்த மாதம் நடக்கிறது

Posted: 26 Oct 2014 05:10 PM PDT

இந்திய ராணுவம் ஏவுகணைகளை தயாரித்து சோதனை நடத்தி வருகிறது. அக்னி என்ற பெயரிடப்பட்ட இந்த வரிசையில் 'அக்னி-1' 700 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கக்கூடியது. 'அக்னி-2' 2 ஆயிரம் கிலோ மீட்டரும், 'அக்னி-3' மற்றும் 'அக்னி-4' முறையே 2,500 கி.மீ, 3,500 கி.மீ.க்கு மேல் சென்று தாக்கக் கூடியவைகளாகும்.

அரபிக்கடலில் புதிதாக உருவான நிலோபர் புயல்

Posted: 26 Oct 2014 04:06 PM PDT

அரபிக் கடலில் புதிதாக ஒரு புயல் உருவாகி இருக்கிறது. இந்த புயலுக்கு 'நிலோபர்' என பெயரிடப்பட்டு உள்ளது. அரபிக் கடலின் மத்திய மேற்கு பகுதியிலும், அதையொட்டிய தென்மேற்கு பகுதியிலும் நிலை கொண்டுள்ள இந்த புயல் அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு குஜராத் கடலோர

மராட்டிய புதிய முதல்-மந்திரி யார்? பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் நாளை கூடி முடிவு

Posted: 26 Oct 2014 01:07 PM PDT

மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் யாருக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், பா.ஜனதா 122 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக விளங்குகிறது. இதனால் 63 இடங்களை பிடித்து 2-வது பெரிய கட்சியாக திகழும் பழைய நட்பு கட்சியான சிவசேனாவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது. ஆட்சியை பகிர்ந்து கொள்வது குறித்து இரு

ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

Posted: 26 Oct 2014 11:48 AM PDT

பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாரதீய ஜனதா கூட்டணிஅரசு கடந்த மே மாதம் 26-ந் தேதி பதவி ஏற்றது. மத்தியில் பாரதீய ஜனதா கூட்டணி அரசு அமைந்து 5 மாதங்கள் முடிவு அடைந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, கூட்டணி கட்சி எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தேநீர் விருந்து வழங்க முடிவு செய்தார்.

பிரதமர் மோடி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம்: விவாதிக்க வேண்டிய பிரச்சனைகள் பற்றி கருத்து தெரிவிக்க அழைப்பு

Posted: 26 Oct 2014 11:06 AM PDT

பிரதமர் மோடி முதன்முறையாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல தயாராகி வருகிறார். இந்நிலையில், இந்தியா மட்டுமில்லாது ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியர்களும், சுற்றுப்பயணத்தின் போது அவர்களது கோரிக்கைகளை முன்வைக்க வேண்டிய விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

புதிதாக பதவியேற்ற ஹரியானா முதல்வருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Posted: 26 Oct 2014 10:10 AM PDT

ஹரியானாவில் முதல்முறையாக பா.ஜ.க. முதல்வராக இன்று மனோகர் லால் கத்தார் பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி மனோகர் லால் மற்றும் அவரது மந்திரிகள் குழு ஹரியானா மாநிலத்தை வரும் ஆண்டுகளில் புதிய சாதனைகளுக்கு கொண்டு செல்வார்கள் என்றார்.

பா.ஜ.க. எங்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தால் 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றிருக்கும்: சிவசேனா

Posted: 26 Oct 2014 07:18 AM PDT

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு இருந்தால் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்றிருக்கும் என சிவசேனாவின் ராஜ்யசபா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

என்.டி.ஏ. கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமர் தேநீர் விருந்து: அத்வானி-ஜோஷி கலந்துகொண்டனர்

Posted: 26 Oct 2014 04:05 AM PDT

பாரதப் பிரதமராக பதவியேற்றுள்ள மோடி இன்று தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களுக்கு விருந்தளிக்கிறார். இவ்விருந்தில் கலந்து கொள்ள அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் வந்த வண்ணம் உள்ளனர். மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு, ராம் விலாஸ் பஸ்வான், ஹர்ஷ்வர்தன் மற்றும்

மத்தியப்பிரதேசத்தில் ஜீப்-டிரக் மோதல்: 8 பேர் பலி

Posted: 26 Oct 2014 03:08 AM PDT

மத்தியப்பிரதேசத்தில் உள்ள காண்ட்வா மாவட்டத்தில் இன்று ஜீப்பும் டிரக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 8 பேர் பலியானார்கள். மேலும் 7 பேர் காயமடைந்தனர். அம்மாநிலத்திலுள்ள ஓம்கரேஷ்வரர் கோவிலுக்கு செல்வதற்காக 15 பேர் கொண்ட ஒரு குழுவினர் ஜீப்பில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் பயணம் செய்த ஜீப் இந்தூர்-இச்சாப்பூர் நெடுஞ்சாலையில்

சீக்கிய அமைப்பு தேர்தல்: தேர்தல் அதிகாரியை நியமிக்க மோடி தலைமையில் குழு

Posted: 26 Oct 2014 01:13 AM PDT

சீக்கியர்களின் மத அமைப்பான குருத்வா ராக்களுக்கு 'குருத்வாரா சட்டம் 1925' படி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தேர்தல் நடத்துவதற்கான முதன்மை கமிஷனரை நியமிக்க பிரதமர் மோடி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவுக்கு 70 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதிகள்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™