Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தனித்துவம் : மனமே வசப்படு

Posted:

புலிகள் மீதான தடையை நீக்குவது தொடர்பில் இந்தியா ஆலோசிக்கவில்லை: வெங்கையா நாயுடு

Posted:

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது தொடர்பில் இந்திய மத்திய அரசு இதுவரை ஆலோசிக்கவில்லை என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். 


Read more ...

ஐ.தே.க.வின் பிரதித் தேசிய அமைப்பாளராக ஹரீன் பெர்ணான்டோ நியமனம்!

Posted:


ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளராக ஊவா மாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவரான ஹரீன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். 


Read more ...

சரத்குமாருக்கு வந்த சங்கடம்

Posted:

சரத்குமார் ஹீரோவாக நடித்த ‘நீ நான் நிழல்’ படம் வந்த சுவடும் தெரியாமல் ஓடுகிற சுவடும் தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.


Read more ...

இந்தியாவில் அமைக்கவுள்ள ஸ்மார்ட் சிட்டிக்கான இறுதி வடிவம் நவம்பருக்குள்:வெங்கைய நாயுடு

Posted:

இந்தியாவில் அமைக்கவுள்ள ஸ்மார்ட் சிட்டிக்கான இறுதி வடிவ வரைவு அறிக்கை வரும் நவம்பருக்குள் தயாராகிவிடும் என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார்.


Read more ...

ஜெயலலிதாவை விடுவிப்பதற்கான உத்தரவை வழங்கியது பெங்களூரு உயர் நீதிமன்றம்

Posted:

ஜெயலலிதாவை விடுவிப்பதற்கான உத்தரவை பெங்களூரு உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளதால்,இன்னும் சற்று நேரத்தில் நேரத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் விடுதலையாவார்கள் என்று தெரிய வருகிறது.


Read more ...

புலிகள் மீதான தடை இரத்து; இலங்கை சர்வதேச ரீதியில் தோல்வியடைவதைக் காட்டுகின்றது: தயான் ஜயதிலக

Posted:

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்த தடையை ஐரோப்பிய நீதிமன்றம் இரத்து செய்தமை, சர்வதேசத்தில் இலங்கைக்கு எதிரான பனிப் போர் முன்னோக்கி கொண்டு செல்லப்படுவதையும், இலங்கை அதில் தோல்வியடைந்துள்ளமையும் காட்டுவதாக சிரேஷ்ட இராஜதந்திரியான கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார். 


Read more ...

மஹிந்த ராஜபக்ஷவை சிறையில் அடைக்காமல் விட்டமைக்காக மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்: சரத் என் சில்வா

Posted:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 2005ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னதாக, ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை ஊழல் குற்றச்சாட்டில் அவரை சிறையில் அடைக்காமல் விட்டமைக்காக மக்களிடம் மன்னிப்பு கோருவதாக முன்னாள் பிரதம நீதியரசரான சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். 


Read more ...

ஒருகாலத்தில் இயக்கங்கள், இராணுவத்தினரின் ஆணையை நிறைவேற்றவேண்டியிருந்தது: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

நாம் ஒரு காலத்தில் இயக்கங்கள், இராணுவம், அரசியல்வாதிகளின் தேவைகளை நிறைவேற்ற வேண்டியிருந்தது. ஆனால் இந்த மூன்று தரப்பாருமே தமது சுயநலம் கருதி அதிகாரத்துடன் செயற்பட்டார்கள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

கத்தி - ஆத்தி என , செல்பி புள்ள பாடல்கள் Promo வீடியோ

Posted:

கத்தி - ஆத்தி என , செல்பி புள்ள பாடல்கள் புரோமோ வீடியோ


Read more ...

இந்தியாவில் உயிர்காக்கும் மருந்துகளின் விலை உயர்ந்துவிட்டதா?:பிரதமர் கேள்வி

Posted:

இந்தியாவில் உயிர்காக்கும் மருந்துகளின் விலை இப்போது உயர்ந்துவிட்டதா என்ன என்று பிரதமர் நரேந்திர மோடி, கேரள முதல்வர் உம்மன்சாண்டியிடம்
கேள்வி வைத்துள்ளார்.


Read more ...

நேபாளத்தில் பனிப்புயலில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!:27 சடலங்கள் மீட்பு

Posted:

நேபாளத்தின் இமய மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக மலையேறும் பயிற்சியில் ஏராளமான வெளிநாட்டினர் ஈடுபட்டு வந்த நிலையில் அங்கு கடந்த 3 நாட்களுக்கு முன் அன்னபூர்ணா மலைப் பகுதியில் மனாங், முஸ்டாங் மாவட்டங்களில் திடீரென கடும் பனிப் புயல் வீசியது.


Read more ...

சிரியாவில் யுத்த விமானங்களைப் பயன்படுத்த பயிற்சியளிக்கும் ISIS?

Posted:

சிரியாவில் ISIS போராளிகள் வான் வழித் தாக்குதலுக்குத் தயாராகி வருவதாகப் பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன.


Read more ...

கறுப்புப் பணம் பதுக்கியவர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிட முடியாமைக்கு முந்தைய காங்கிரஸ்அரசே ...

Posted:

கறுப்புப் பணம் பதுக்கியவர்களின் பெயர்ப்பட்டியலை மத்திய அரசு வெளியிட முடியாததற்கு முந்தைய காங்கிரஸ் அரசு வெளிநாடுகளுடன் செய்துக்கொண்ட ஒப்பந்தமே காரணம் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.


Read more ...

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு; விமல் வீரவங்சவின் கட்சி அறிவிப்பு!

Posted:

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு பூரண ஆதரவு வழங்கப்போவதாக அமைச்சர் விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. 


Read more ...

செயற்திறன் மிக்க மக்கள் பிரதிநிதிகளாலேயே மக்களுக்கு சேவையாற்ற முடியும்: வை.தவநாதன்

Posted:

செயற்திறன் மிக்க, மக்களின் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும் என்ற உணர்வுள்ள மக்கள் பிரதிநிதிகளால் மட்டுமே மக்களுக்கு சேவையாற்ற முடியுமே தவிர, வெற்று கோசங்களாலும், பேச்சுக்களாலும் பாதிக்கபட்டுள்ள மக்களின் வாழ்வில் எவ்வித மாற்றத்தினையும் ஏற்படுத்தி விட முடியாது என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன் தெரிவித்துள்ளார். 


Read more ...

தமிழக அரசு கேட்டுக்கொண்டால் மெட்ரோ ரயில் பெட்டிகளை தயாரித்துத் தரத் தயார்:ஐசிஎஃப்

Posted:

சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்பெட்டித் தயாரிக்கும் தொழிற்சாலையான ஐசிஎஃப், தமிழக அரசு கேட்டுககொண்டால் மெட்ரோ ரயில்ப்பெட்டிகளைத் தயாரித்துத் தர நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அறிவித்துள்ளது.


Read more ...

காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக பேசும் மக்களை மேலும் தூண்டிவிட வேண்டும்:முஷரப்

Posted:

காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக பேசும் மக்களை மேலும் தூண்டிவிட
வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் பேசியிருப்பது புதிய
சர்ச்சை கிளப்பியுள்ளது.


Read more ...

2014 சனி பெயர்ச்சிப் பலன்கள்: கன்னி

Posted:

நிகழும் மங்களகரமான கொல்லம் 1190ம் ஆண்டு ஸ்ரீஜய வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 1ம் தேதி -  16.12.2014 செவ்வாய்கிழமையும் கிருஷ்ண தசமியும் ஹஸ்த நக்ஷத்ரமும் ஸௌபாக்ய நாம யோகமும் வணிசை  கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 20.40க்கு (பகல் மணி 2.44) வாக்கியப்  பஞ்சாங்கப்படி சனிபகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குள் பிரவேசிக்கிறார். அடுத்த இரண்டரை வருட  காலத்திற்கு விருச்சிக ராசியிலிருந்து சனி பகவான் அருள் புரிவார்.

சனி பெயர்ச்சியின் காரணமாக பன்னிரு ராசிகளுக்கும் ஏற்படக் கூடிய பொதுப் பலன்களை, 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, கிரகநிலைகளின் துணைக்கொண்டு ஆராய்ந்து சொல்கின்றார், நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர்;  பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast).

அவரது கணிப்பில் பன்னிரு ராசிகளுக்ககுமான விரிவான பலன்கள் இங்கு தொடர்ந்து பதிவாகும். இங்கு குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் பொதுப்பலன்களே என்பதை வாசகர்கள் கவனத்திற் கொள்க. ஒவ்வொரு ஜாதகருக்குமான தசாபுத்தி நிலைகளின் அடிப்படையில், அவர்களது  நிகழ் பலன்களில் மாற்றங் காணலாம்.

 

கன்னி: உத்திரம் 2, 3, 4ம் பாதம், ஹஸ்தம், சித்திரை 1, 2ம் பாதங்கள்  மற்றும் டோ, ப, பா, பி, பூ, ஷ, ட, பே, போ ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.

இனிமையாக பேசி எல்லோர் மனதிலும் இடம் பிடிக்கும் கன்னி ராசி அன்பர்களே. நீங்கள் நவக்கிரகங்களில்  வித்தைக்குநாயகனும், நரம்புகளுக்கு உடையவனுமாகிய புதனை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள். நல்ல செயல்கள்  செய்து தன்னை பிறருக்கு உணர்த்துவீர்கள். எந்த விதமான பொறுப்புகளை தனக்கே உரிய பாணியில் செய்து  முடிப்பீர்கள்.

இது வரை உங்களது தன, வாக்கு, குடும்பஸ்தானமான இரண்டாம் வீட்டில் அமர்ந்து சோகம், குழப்பம், மனஉளைச்சல்  என உங்களின் பொறுமையை சோதித்த சனீஸ்வரன் இனி மூன்றாம் ஸ்தானத்தில் இருந்து வரும் 2 1/2 ஆண்டுகளுக்கு  என்னென்னெ பலன்கள் தரப்போகிறார் என்பதைப் பார்ப்போம்.

கிரகநிலை:
இதுவரை உங்களது தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்த சனி பகவான் இனி தைரிய வீரிய ஸ்தானத்திற்கு  மாறுகிறார். அவர் தனது ஏழாம் பார்வையாக உங்களது பாக்கிய ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக உங்களது அயன  சயன போக ஸ்தானத்தையும், தனது மூன்றாம் பார்வையால் உங்களது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும்  பார்க்கிறார்.

மற்ற கிரகங்களின் நிலை:
குரு:
சனி மாறும் போது குரு அயன சயன போக ஸ்தானத்தில் இருக்கிறார். குரு தனது பஞ்சம பார்வையால் உங்களது  சுகஸ்தானத்தையும், தனது சப்தம பார்வையால் உங்களது ரண ருண ரோக ஸ்தானத்தையும், தனது ஒன்பதாவது  பார்வையால் உங்களது அஷ்டம ஆயுள் ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

ராகு:
கன்னி ராசியில் இருக்கிறார். ராகு தனது மூன்றாம் பார்வையால் உங்களது லாப ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால்  உங்களது களத்திர ஸ்தானத்தையும், பதினோறாம் பார்வையால் உங்களது தைரிய வீரிய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

கேது:
கேது களத்திர ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். கேது தனது மூன்றாம் பார்வையால் உங்களது பஞ்சம பூர்வ புண்ணிய  ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் உங்களது ராசியையும், பதினோறாம் பார்வையால் உங்களது பாக்கிய  ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

ஏழரை வருடம் போதும் போதும் என்றாகி விட்டதா? நீங்கள் வாயைத் திறந்தாலே தவறு என்றிருந்த நிலை மாறுகிறது.  எதிர்ப்புகள் மறையும். குடும்பத்தில் இருந்த சண்டை, சச்சரவுகள் நீங்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம்  ஏற்படும். கொடுத்த வாக்கை நிறைவேற்றும் காலம் வந்துவிட்டது. சொத்துப் பிரச்சனைகள் நீங்கும். தாயார், தாய் வழி  உறவினர்களிடம் நெருக்கம் ஏற்படும். தாயார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வாகனம் வாங்கும் கனவு  நினைவாகும். பழைய வாகனத்தை விற்று புதிய வாகனம் வாங்குவீர்கள். பழைய வீட்டை புதுப்பித்துக் கொள்வீர்கள். 

சிலருக்கு புதிய வீடு வாங்கும் யோகம் உண்டு. கடன் பிரச்சினை நீங்கும். வழக்கு வியாஜ்ஜியங்களில் உங்களுக்கு  வெற்றி ஏற்படும். உங்களை பற்றிய விமர்சனங்கள் அகலும். பிரச்சனைகள் நீங்கும். உங்களிடம் பேசவும், பழகவும்  யோசித்த பலர் இனி வலிய வந்து பேசுவர், பழகுவர். உங்களைப் பற்றிய தவறான எண்ணங்கள் நீங்கும். அவமானம்  நீங்கி வெகுமானம் கிடைக்கும். அலைச்சல், அல்லல் குறையும். பல விழாக்களுக்கும் முன்னின்று நடத்தும் பாக்கியம்  வந்துவிட்டது. சந்தான பாக்கியம் இல்லாதவர்களுக்கு சந்தான பாக்கியம் கிடைக்கும். உங்களின் குழந்தைகள் கெட்ட  பழக்க வழக்களிலிருந்து விடுபடுவார்கள். கடந்து போன திருமணம் இனிதே நடைபெறும்.

தொல்லை தந்த நோய்கள்  எல்லாம் நீங்கி இன்பம் பிறக்கும். நண்பர்களிடம் இருந்த மனக்கசப்பு நீங்கும். புது வாகன சேர்க்கை உண்டு. புதிய  நண்பர்கள் கிடைப்பர். பிரபலங்களது நட்பு கிடைக்கும். பெரிய பதவிகளுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் இருந்து  வந்த போட்டி, பொறாமை நீங்கும். பார்ட்னரிடம் இருந்து வந்த கருத்து மோதல் நீங்கும். உத்தியோகத்தில் இருந்து வந்த  தடங்கல்கள் நீங்கும். உங்கள் கீழ் வேலை பார்ப்பவர்கள் உங்கள் சொல்படி நடப்பார்கள். பிரிந்த சென்ற உறவுகள்  ஒன்றுசேர்வர்.

கம்ப்யூட்டர், முலிகை, விவசாயம் சம்பந்தப்பட்ட தொழில்கள் லாபம் தரும். சம்பளம் கூடும். உயர் கல்வி  கிடைக்கும். பணியில் நிரந்தரம் ஏற்படும். உத்தியொகம் தொடர்பாக வெளிநாட்டு பயணம் உண்டு. பெற்றோர்களுக்கு  பாரமாக இல்லாமல் நல்ல வேலை கிடைக்கும். சலுகைகள் நிரம்ப கிடைக்கும். இதுவரை இருந்து வந்த மந்தபுந்தி, மறதி  ஆகியவை நீங்கும். மாணவ மாணவிகளே அதிக மதிப்பெண்கள் எடுக்கும் காலம் வந்து விட்டது. விருதுகள், பரிசுகள்  கிடைக்கும். உங்களுக்கும் அங்கீகாரம் கிடைக்கும். கடன் பெறுவதில் இருந்த சிக்கல்கள் நீங்கும். மொத்தத்தில் மந்த  வளர்ச்சி மாறி அசுர வளர்ச்சி ஏற்படும்.

நக்ஷத்திர ரீதியான பலன்கள்:
உத்திரம் 2 - 3 - 4ம் பாதங்கள்: சொத்துக்களில் மூலம் செலவுகள் நேரலாம். குடும்பத்தில் கருத்து வேற்றுமை  ஏற்பட்டாலும் உங்கள் கருத்து ஏற்கப்படும். பெரிய முதலீடுகளில் ஈடுபடும்போது தகுந்த நபரிடம் ஆலோசனை பெற்று  செய்யவும். சூடு, நரம்பு சம்பந்தப்பட்ட உடல் உபாதைகள் ஏற்படலாம். எச்சரிக்கை. குரு பகவானை நினைத்து எதையும்  ஆரம்பித்தால் எதிலும் வெற்றிதான்.

ஹஸ்தம்: உங்களுக்கு நெருக்கமானவர்களே உங்களுக்கு துரோகம் செய்யும் நிலையிருந்து மாற்றம் வந்துவிட்டது.  வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்து போங்கள். பணப்பற்றாக்குறை இன்றி இருக்க சியாமளா தண்டகம் படியுங்கள்.

சித்திரை 1 - 2ம் பாதங்கள்: உத்தியோகத்தில் இடமாற்றம், பணிஉயர்வு உண்டு. எதிர்பாராத செலவினம் ஏற்படலாம்.  கூட்டுத்தொழிலில் ஈடுபடுபவர்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.

பரிகாரம் : புதன்கிழமைதோறும் அருகிலிருக்கும் ஐயப்பன் கோவிலுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றி வழிபடவும்.  வெண்ணையை ஆஞ்சநேயருக்கு சாத்தி அர்ச்சனை செய்து வணங்கி வர தடைகள் விலகி நன்மைகள் கிடைக்கப்  பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்தவந்த பிரச்சனைகள் மாறும்.

பொதுப்பலன் மற்றும் ஏனைய ராசிகளுக்கான பலன்களை இந்த இணைப்பினை அழுத்திக் காணலாம்.

- 4தமிழ்மீடியாவிற்காக : ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)

உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை அறிந்து கொள்ள, மின்னஞ்சல் வழி ஜோதிடருன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். ஜோதிடரின் மின்னஞ்சல் முகவரி: ramjothidar@gmail.com

 

 


Read more ...

சரத் பொன்சேகாவின் வாக்குரிமை இரத்து!

Posted:

முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகாவின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குமாறு சட்டமா அதிபர், தேர்தல்கள் ஆணையாளருக்கு பரிந்துரைத்துள்ளார். 


Read more ...

ஜெயலலிதா சொல்லித்தான் உங்கள் இல்லத்தில் கல் எறியப்பட்டது என்பதற்கு ஆதாரம் உள்ளதா?சு.சாமிக்கு கேள்வி

Posted:

ஜெயலலிதா சொல்லித்தான் உங்கள் இல்லத்தில் கல் எறியப்பட்டது என்பதற்கு ஆதாரம் உள்ளதா என்று சுப்ரமணியசாமிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™