Tamil Star |
- வெடித்து சிதறி பற்றி எரியும் எரிமலையின் பயங்கரமான காட்சி!
- பல லட்சக்கணக்கானோரைக் கவர்ந்த ஏழைச் சிறுவர்களின் சூப்பர் நடனம்!
- உலக டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 11ம் இடத்துக்கு தள்ளப்பட்டார் முர்ரே!
- ரேங்கிங் பட்டியலில் விராட் கோஹ்லி நம்பர்-1
- சீனாவை பகைத்துக்கொள்ளும் வகையில் இலங்கை – ஜப்பான் உறவில் நெருக்கம்!
- தீவிரவாதிகளை ஒடுக்குவது குறித்து சவுதி மன்னருடன் ஒபாமா ஆலோசனை!
- சிரியாவிலும் வான்வழித் தாக்குதல்: ஒபாமா அறிவிப்பு
- மீனவர்களின் செயல் இலங்கைக்கு மாத்திரமல்ல, இந்தியாவுக்கும் கெடுதல் தரும்: மஹிந்த ராஜபக்ச
- தமிழர் பேரவை முன்னெடுக்கும் “ஆறாவது ஆண்டு தமிழ்க் கனடியர் நிதிசேர் நடை”
- ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ள பிரதம மந்திரி ஸ்டீபன் ஹாப்பர்!
- கல்கறியில் கடும் பனிப்பொழிவு: மின் விநியோகத்தை இழந்துள்ள சுமார் முப்பதாயிரம் பேர்!
- சந்தேகத்திற்குரிய கட்டி காரணமாக மேயர் றொப் வோட் வைத்தியசாலையில்அனுமதி!
| வெடித்து சிதறி பற்றி எரியும் எரிமலையின் பயங்கரமான காட்சி! Posted: 11 Sep 2014 03:14 AM PDT |
| பல லட்சக்கணக்கானோரைக் கவர்ந்த ஏழைச் சிறுவர்களின் சூப்பர் நடனம்! Posted: 11 Sep 2014 03:07 AM PDT |
| உலக டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 11ம் இடத்துக்கு தள்ளப்பட்டார் முர்ரே! Posted: 11 Sep 2014 03:02 AM PDT
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், ஏடிபி ஆடவர் ஒற்றையர் தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் முதலிடத்தையும், நடால் இரண்டாமிடத்திலும், ரோஜர் பெடரர் மூன்றாமிடத்தி லும் உள்ளனர். வாவ்ரிங்கா, டேவிட் பெரர் ஆகியோர் முறையே நான்காம், ஐந் தாம் இடத்தில் உள்ளனர். அமெரிக்க ஓபன் சாம்பியனான குரோஷியாவின் மரீன் சிலிச் 7 இடங்கள் முன்னேறி 9ம் இடத்தைப் பிடித்துள்ளார். இறுதிப்போட்டியில் சிலிச்சிடம் தோல்வி கண்ட ஜப்பான் வீரர் கீய் நிஷிகோரி 3 இடங்கள் முன்னேறி 8ம் இடத்தைப் பிடித்துள்ளார். செக் குடியரசு வீரர் தாமஸ் பெர்டிச் 1 இடம் முன்னேறி 6ம் இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டில் போதிய வெற்றிகளைக் குவிக்காத பிரிட்டனின் ஆண்டி முர்ரேவுக்கு மேலும் ஒரு அடியாக தர வரிசையில் 2 இடங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவர் தற்போது 11வது இடத்தில் உள்ளார். அமெரிக்க ஓபன் காலிறுதிப்போட்டியில் 27 வயது முர்ரே, நோவாக் ஜோகோவிச்சிடம் தோல்வி கண் டார். 2008ம் ஆண்டுக்குப் பின்னர் தர வரிசையில் இப்போதுதான் முதல் 10 இடங்களில் இருந்து பின்தங்கியுள்ளார் முர்ரே. கடந்த ஆண்டு முர்ரே விம்பிள்டன் பட்டத்தை வென்று 2 மாதங்களுக்குப் பின்னர் செப்டம்பர் மாதம் முதுகில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அப் போது தர வரிசையில் 3ம் இடத்தில் இருந்த முர்ரே பின்னர் படிப்படியாக சரிந்து தற்போது 11ம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள் ளார். இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் காலிறுதிவரை அவர் முன்னேறியுள்ளார். பிரெஞ்ச் ஓபனில் அரையிறுதிவரை முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.தர வரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீரர்கள் பங்கேற்கும் 'வேர்ல்ட் டூர் பைனல்ஸ்' டென்னிஸ் போட்டி லண்டனில் நவம் பர் மாதம் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க முர்ரே போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வேர்ல்ட் டூருக்கு முன்னதாக முர்ரே மூன்று போட்டித் தொடர்களில் விளையாட உள்ளார். அடுத்து விளையாட உள்ள ஷாங்காய் அல்லது பாரீஸ் மாஸ்டர்ஸ் தொடர்களில் ஏதாவது ஒற்றில் இறுதிப்போட்டி வரை முன்னேறினாலே அவர் வேர்ல்ட் டூர் பைனல்ஸில் விளையாடத் தேவையான புள்ளிகளைப் பெறும் வாய்ப்பு உள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரேங்கிங் பட்டியலில் விராட் கோஹ்லி நம்பர்-1 Posted: 11 Sep 2014 02:59 AM PDT
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ரன் குவிக்க தவறிய விராட் கோஹ்லி முதல் முறையாக டி20 ரேங்கிங் பட்டியலில் 'நம்பர்-1' இடத்தை பிடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டி20 ரேங்கிங் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோஹ்லி முதல் இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இவர் மோசமாக பேட்டிங் செய்தார். கடைசியாக நடந்த டி20 போட்டியில் மட்டும் சிறப்பாக ஆடிய கோஹ்லி 41 பந்தில் 66 ரன்களை குவித்தார். இதன் மூலம், டி20 பேட்ஸ்மேன்கள் ரேங்கிங் பட்டியலில் 8 புள்ளிகள் அதிகம் பெற்று 897 புள்ளிகளுடன் முதல் இடத்தை கைப்பற்றினார். ஆஸ்திரேலிய டி20 கேப்டன் ஆரோன் பிஞ்ச் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். கோஹ்லி நம்பர்-1 இடத்தை பிடிப்பது இதுவே முதல் முறை. டாப்-10 பட்டியலில் கோஹ்லியை தவிர, சுரேஷ் ரெய்னா மட்டுமே இடம் பெற்றுள்ளார். இவர், 677 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளார். பந்துவீச்சாளர்கள் பட்டியலில் டாப்-10 பட்டியலில் அஷ்வின் மட்டுமே 697 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| சீனாவை பகைத்துக்கொள்ளும் வகையில் இலங்கை – ஜப்பான் உறவில் நெருக்கம்! Posted: 11 Sep 2014 02:25 AM PDT
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் என்றும் இல்லாதவாறு உறவுகள் பலப்பட்டுள்ளன. இந்தநிலையில் ஜப்பானுக்கு எதிரான சீனா மேற்கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பில், ஜப்பானுக்கு இலங்கை தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. கிழக்கு சீன கடலில் வான் மற்றும் கடல்பகுதி பயணங்களுக்கு சீனா ஏனைய நாடுகளுக்கு கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி வருகிறது. இதன்காரணமாக ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையில் முறுகல் நிலவி வருகிறது. இந்தநிலையில் அண்மையில் இலங்கைக்கு ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே விஜயம் மேற்கொண்ட போது, இலங்கையும் ஜப்பானும் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டன. அந்த அறிக்கையில், கிழக்கு சீனக் கடல் பகுதியில் சுதந்திரமான நடமாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று இரண்டு நாடுகளும் இணக்கம் வெளியிட்டுள்ளன. இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்துக்கொள்வதற்காகவும் அதன் வர்த்கத்தை பெருபிக்கும் வகையிலேயே இலங்கை இந்த விடயத்தில் ஜப்பானுடன் இணைந்த நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| தீவிரவாதிகளை ஒடுக்குவது குறித்து சவுதி மன்னருடன் ஒபாமா ஆலோசனை! Posted: 11 Sep 2014 02:20 AM PDT
ஈராக், சிரியாவில் மேலாதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினரை ஒடுக்குவது தொடர்பாக சவுதி மன்னருடன் அமெரிக்கா அதிபர் ஒபாமா ஆலோசனை நடத்தினார். ஈராக், சிரியாவில் பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம், இஸ்லாமிய தேசம் என்ற தனிநாட்டை பிரகடனப்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள பிற மதத்தினர் இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும்; இல்லையென்றால் தனியே வரி செலுத்த வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்காத கிறிஸ்தவர்கள், யாஸிதிகள் போன்ற சிறுபான்மையினர் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் நிலைகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. தற்போது சிரியா மீதும் வான்வழித் தாக்குதலை நடத்த இருப்பதாக ஒபாமா அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாக ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினரை ஒடுக்குவது தொடர்பான வியூகங்கள் குறித்து சவுதி மன்னருடன் தொலைபேசியில் ஒபாமா ஆலோசனை நடத்தினார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| சிரியாவிலும் வான்வழித் தாக்குதல்: ஒபாமா அறிவிப்பு Posted: 11 Sep 2014 02:17 AM PDT
ஈராக்கைப் போல சிரியாவிலும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினருக்கு எதிராக வான் வழி தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். ஈராக், சிரியா நாடுகளில் பெரும் பகுதியை கைப்பற்றியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் அந்தப் பகுதிகளை ஒருங்கிணைத்து இஸ்லாமிய தேசம் என்ற தனிநாட்டை பிரகடனப்படுத்தியுள்ளனர். ஈராக்- சிரியா எல்லைகளைத் தகர்த்து இருநாடுகளையும் ஒன்றாக்கி வைத்துள்ளனர். இந்த பகுதிகளை மீட்பதற்காக ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே இன்று அமெரிக்கா அதிபர் ஒபாமா அந்நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவரது உரை விவரம்: உலகில் தீவிரவாதிகள் எந்த பகுதியில் இருந்தாலும் அவர்களை ஒடுக்க வான்வழித் தாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஐ.எஸ்.ஐ.எஸ். ஆயுத குழுவினரால் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் மக்களுக்கு அச்சுறுத்ததல் இருக்கிறது. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் அவசியம். அத்துடன் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக ஈராக்குக்கு மேலும் 500 அமெரிக்கா ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவர். இவ்வாறு ஒபாமா கூறினார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மீனவர்களின் செயல் இலங்கைக்கு மாத்திரமல்ல, இந்தியாவுக்கும் கெடுதல் தரும்: மஹிந்த ராஜபக்ச Posted: 11 Sep 2014 01:59 AM PDT
இழுவைப் படகுகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதன் மூலம் இந்திய மீனவர்கள் இலங்கையின் சுற்றலாடலை நாசமாக்குகின்றனர் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். ஒன்று இரண்டு என்றில்லாமல் நூற்றுக்கணக்கான இழுவைப் படகுகள் நாள்தோறும் இலங்கையின் கடற் பகுதிக்கு வந்து தொழிலில் ஈடுபடுகின்றன என்று ஜனாதிபதி த ஹிந்து நாளிதழுக்கு நேற்று வழங்கிய செவ்வியின்போது குற்றம் சுமத்தினார். இந்திய மீனவர்கள் இலங்கையர்களுக்கு கெடுதல் செய்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இது இலங்கையின் சுற்றாடலை மாசுபடுத்தும் காரியம் மட்டுமல்ல. இந்தியாவுக்கு கெடுதல் நினைக்கும் செயலாகும். தம்மை பொறுத்தவரை மீன்கள் கரைக்கு வராது மீனவர்களே அவற்றை தேடிச்செல்ல வேண்டும் என்று நம்புவதாக ராஜபக்ச குறிப்பிட்டார். இந்தநிலையில் குறித்த விடயத்தை தீவிரமான ஒன்றாக கருதி இரண்டு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| தமிழர் பேரவை முன்னெடுக்கும் “ஆறாவது ஆண்டு தமிழ்க் கனடியர் நிதிசேர் நடை” Posted: 11 Sep 2014 01:44 AM PDT
"ஆறாவது ஆண்டு தமிழ்க் கனடியர் நிதிசேர் நடை" இதய மற்றும் மாரடைப்பு அமைப்பின் (Heart and Stroke Foundation) நலமான இதயம்செயற் திட்டத்திற்கு நிதி சேகரிக்கும் நோக்கில் நடைபெறுகிறது. கனடாவில் ஏழு மணித்துளிக்கு ஒருவர் என்ற வகையில் மாரடைப்பால் மரணம் அடைகின்றனர். பிற தெற்காசியரைப் போலவே தமிழ்க்கனடியரும் ஏனைய கனடியரைப் பார்க்கிலும் மும்மடங்கு அதிகமாக இதயம் தொடர்பான நோய்களுக்கு இளம் அகவையிலேயே ஆளாகும்அபாயம் உள்ளது. மரபணுக்கள் மற்றும் வாழ்க்கை முறைபோன்ற காரணங்களால் இந்த அபாயம் அதிகமாகிறது. நலமான இதயம் (Fit for Heart) செயற்திட்டமானது தங்கள் குடும்பத்தார், நண்பர் மற்றும் குமுகத்தோடு நலமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்கும் தங்களின் அனுபவத்தையும் விருப்பையும் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பை ஏற்படுத்துகிறது. இந் நிதிசேர் நடைநிகழ்விற் கலந்து கொண்டு நிதி சேர்ப்பதன் மூலம் உயிர் காக்கும் இதய நோய் ஆராய்ச்சி மற்றும் அறிவூட்டலுக்கு தங்கள் பங்களிப்பை வழங்க முடியும். கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்க் கனடியர் நிதிசேர் நடை மூலம் வேறு இலாப நோக்கமற்ற அமைப்புகளுக்கு $250 000 இற்கும் அதிகமான நிதி சேகரித்து வழங்கப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ள பிரதம மந்திரி ஸ்டீபன் ஹாப்பர்! Posted: 11 Sep 2014 01:22 AM PDT
இந்த மாதத்தின் பிற்பகுதியில் நியூயோர்க்கில் ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கூட்டத்தொடரில் கனேடிய பிரதம மந்திரி ஸ்டீபன் ஹாப்பர் உரையாற்றுவாரென அறிவிக்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டின் பின்னர் அவர் பொதுச் சபைக் கூட்டத்தொடர்களில் உரையாற்றவில்லை. எனவும் அவருக்குப் பதிலாக வெளியுறவு அமைச்சர்கள் உரையாற்றினார்கள். இதனால், ஐக்கிய நாடுகள் அமைப்பை அவர் பொருட்படுத்தவில்லையென்ற கருத்து வெளியாகியது. இந்த நிலையில், பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றும் பிரதம மந்திரி ஸ்டீபன் ஹாப்பர், வளரும் நாடுகளில் உள்ள கர்ப்பிணிகள் மற்றும் சிறுவர்களின் நலவாழ்வு குறித்த மகாநாடு ஒன்றிலும் கலந்து கொள்வார். எனவும் காலநிலை விடயங்கள் குறித்து ஆராய்வதற்கான இராப்போசன விருந்திலும் அவர் கலந்து கொள்வார். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கல்கறியில் கடும் பனிப்பொழிவு: மின் விநியோகத்தை இழந்துள்ள சுமார் முப்பதாயிரம் பேர்! Posted: 11 Sep 2014 01:18 AM PDT
பனியின் பாரம் காரணமாக மரக்கிளைகள் முறிந்து வீழ்ந்தமையால் இந்த நிலை ஏற்பட்டது. வீதிச் சமிக்ஞை விளக்குகள் செயல் இழந்தமையால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மரக்கிளைகள் முறிந்து வீழ்ந்தமை, மற்றும் முறிந்து விழும் ஆபத்து என்பன காரணமாக, கல்கறி மிருககாட்சிசாலை மூடப்பட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| சந்தேகத்திற்குரிய கட்டி காரணமாக மேயர் றொப் வோட் வைத்தியசாலையில்அனுமதி! Posted: 11 Sep 2014 01:10 AM PDT
மேயர் றொப் வோட் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார் என புதன்கிழமை இரவு அறிவிக்கப்பட்டுள்ளது. வயிற்றுவலி காரணமாக வைத்தியசாலைக்கு சென்ற மேயர் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 3-மாதங்களாக இவருக்கு வயிற்று வலி இருந்ததாகவும் கடந்த 24-மணித்தியாலங்களில் மோசமான நிலையை அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. உறுதியான ஆய்வு செய்யும் காரணத்திற்காக அனுமதிக்கப் பட்டார் என அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. வோட் மேயர் பதிவிக்காக தேர்தலில் போட்டியிடுகின்றார். அண்மையில் கிடைக்கப்பெற்ற கணிப்பீடுகளின் படி ஜோன் ரொறி முதலாவது இடத்திலும் வோட் இரண்டாவதாகவும் ஒலிவியா சௌ மூன்றாவது இடத்திலும் உள்ளனர். மேயராக பதவி வகித்த காலப்பகுதியில் வோட் இரு தடவைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
















