Tamil News | Online Tamil News |
- ஜெ., ஜாமின் மனு மீது இன்று மீண்டும் விசாரணை: புதிய மனுவை உடனடியாக விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
- 'சொத்துக்கள் வாங்கியதற்கு ஜெ.,யால் கணக்கு காட்ட முடியவில்லை' : நீதிபதி குன்ஹா தீர்ப்பு விவரம்
- அமைச்சர்கள் பெங்களூரில் முகாம்: தமிழக அரசு இயந்திரம் முடக்கம்
- கருணாநிதி, ஸ்டாலினை கைது செய்ய தீவிரம்: வழக்கை எதிர்கொள்ள தயாராகும் தி.மு.க.,
- பெட்ரோல் விலை 65 காசு குறைப்பு: டீசல் விலை மோடி நாடு திரும்பியதும் அறிவிப்பு
- கோட்டையில் முதல்வர் அறையில் குழப்பம்
- ஜெ., இன்று ஜாமினில் வெளி வருவாரா? : சட்ட வல்லுனர்கள் விளக்கம்
- 'பாரத தூய்மை'திட்டம்: தமிழகத்தில் புறக்கணிப்பு
- காலத்திற்கு ஒவ்வாத தொழிலாளர் சட்டங்கள் ரத்தாகும்: ராஜ்நாத் சிங்
- பயங்கரவாதத்திற்கு எதிராக இணைந்து போராடுவோம்: மோடி, ஒபாமா கூட்டறிக்கை
- தே.ஜ., கூட்டணியில் இருந்து சிவசேனா விலகல்? பிரதமர் நாடு திரும்பியதும் முடிவு என அறிவிப்பு
| ஜெ., ஜாமின் மனு மீது இன்று மீண்டும் விசாரணை: புதிய மனுவை உடனடியாக விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு Posted: பெங்களூரு:சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட நான்கு பேரின் ஜாமின் மனு மீதான விசாரணை, கர்நாடக உயர்நீதிமன்றத்தில், வரும் 6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. எனினும், ஜாமின் கோரும் மனுக்கள் மீண்டும் நேற்றே தாக்கல் செய்யப்பட்டு, அவற்றின் மீது, இன்றே(புதன் கிழமை-01.10.2014) விசாரணை நடத்தப்படுகிறது.சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல், சசிகலா, இளவரசி, சுதாகரன் ... |
| 'சொத்துக்கள் வாங்கியதற்கு ஜெ.,யால் கணக்கு காட்ட முடியவில்லை' : நீதிபதி குன்ஹா தீர்ப்பு விவரம் Posted: பெங்களூரு: 'ஜெயலலிதாவும், அவருடன் குற்றம் சாட்டப்பட்டவர்களும், 53.6 கோடி ரூபாய் மதிப்புக்கு, அசையாச் சொத்துக்களை வாங்கி உள்ளனர். அதற்கான பணம் எங்கிருந்து வந்தது என்பதற்கான கணக்கை, அவர்களால் காட்ட முடியவில்லை' என, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா தன் தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.எங்கிருந்து வந்தது?ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில், கடந்த, 27ம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா தீர்ப்பு அளித்தார். அந்தத் தீர்ப்பின் முழு விவரம்:கடந்த, 1991 முதல் 1996 வரை, ஜெயலலிதா தமிழக ... |
| அமைச்சர்கள் பெங்களூரில் முகாம்: தமிழக அரசு இயந்திரம் முடக்கம் Posted: சென்னை: ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசு இயந்திரம் முடங்கி உள்ளது. அமைச்சர்களும், அதிகாரிகளும் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.புதிய முதல்வராக, நேற்று முன்தினம் ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். அவருடன், 30 அமைச்சர்கள் பதவியேற்றனர். அன்றே முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருடன் விமானம் மூலம், பெங்களூரு சென்றார்.அவர்களைத் தொடர்ந்து, மற்ற அமைச்சர்களும், பெங்களூரு சென்றனர். நேற்று, தலைமைச் செயலகத்திற்கு அமைச்சர்கள் யாரும் வரவில்லை. அமைச்சர் அறைகள் வெறிச்சோடி ... |
| கருணாநிதி, ஸ்டாலினை கைது செய்ய தீவிரம்: வழக்கை எதிர்கொள்ள தயாராகும் தி.மு.க., Posted: தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் பொருளாளர் ஸ்டாலின் மீது போடப்பட்டிருக்கும் வழக்கில், கைது செய்ய, போலீசார் தீவிரமாகி இருப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், நான்கு ஆண்டு கள் தண்டனை விதித்து, அவரை சிறைக்கு அனுப்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க., வினர் பஸ் எரிப்பு, சாலை மறியல், கடைகளை அடித்து நொறுக்குதல், சிலைகளை உடைத்தல் என, பல்வேறு ரூபங்களில், தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில், ... |
| பெட்ரோல் விலை 65 காசு குறைப்பு: டீசல் விலை மோடி நாடு திரும்பியதும் அறிவிப்பு Posted: புதுடில்லி: பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 65 காசு நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டது. மானியமில்லாத சமையல் காஸ் சிலிண்டர் விலையிலும், 21 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: பெட்ரோல் மீதான விலை கட்டுப்பாட்டை, மத்திய அரசு கைவிட்டு விட்டதால், சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில், பெட்ரோல் விலையை, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன.அதேநேரத்தில், டீசல் மீதான விலை கட்டுப்பாடு தொடர்ந்தது. இந்நிலையில் 2013 ஜன., 17முதல், டீசல் விலை ஒவ்வொரு மாதமும், லிட்டருக்கு, 50 காசுகள் ... |
| கோட்டையில் முதல்வர் அறையில் குழப்பம் Posted: சென்னை :தலைமைச் செயலகத்தில், முதல்வர் அறை இன்னமும், முடிவு செய்யப்படாமல் உள்ளது.நேற்று முன்தினம் முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம், நேராக முதல்வர் அறைக்கு செல்லாமல் நிதி அமைச்சராக இருந்த போது பயன்படுத்திய அறைக்கே சென்றார். அந்த அறை முன் தொங்க விடப்பட்டிருந்த நிதி அமைச்சர் என்ற பெயர் பலகை அகற்றப்பட்டது. ஆனால், நேற்று மீண்டும் அந்தப் பலகை தொங்க விடப்பட்டது.முதல்வர் அறை முன்பு இருந்த ஜெயலலிதா பெயர் பலகை அகற்றப்பட்டு உள்ளது. ஆனால், புதிய முதல்வர் பெயர் பொறிக்கப்பட்ட பலகை எதுவும் வைக்கப்படவில்லை. இதனால், முதல்வர் பன்னீர்செல்வம் எந்த அறையில் ... |
| ஜெ., இன்று ஜாமினில் வெளி வருவாரா? : சட்ட வல்லுனர்கள் விளக்கம் Posted: சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா, இன்று ஜாமினில் வெளியே வர வாய்ப்பு இருப்பதாக, அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.ஜெயலலிதா தாக்கல் செய்த ஜாமின் மனு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த போது, அரசு வழக்கறிஞர் இல்லாததால், வழக்கை விசாரிக்க இயலாது என்று கூறி, அக்., 6ம் தேதிக்கு, மனு மீதான விசாரணையை நீதிபதி ரத்னகலா கூறினார்.சந்தர்ப்பம் தேவை: இதுகுறித்து சட்டத்துறை வல்லுனர்கள் கூறியதாவது:'ஆயுள் தண்டனை அல்லது, 10 ஆண்டுகளுக்கு அதிகமாக சிறைதண்டனை ... |
| 'பாரத தூய்மை'திட்டம்: தமிழகத்தில் புறக்கணிப்பு Posted: கோவை : நாளை துவங்கவுள்ள பிரதமரின் 'பாரத தூய்மை' திட்டத்துக்கு, தமிழக அரசிடமிருந்து ஒத்துழைப்பு இல்லாததால், உள்ளாட்சி அமைப்புகளில் இதற்காக எந்த நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்படவில்லை.தூய்மையான தேசத்தை உருவாக்கும் முயற்சியாக, நாடு முழுவதும் 'பாரத தூய்மை' என்ற திட்டம், காந்தி ஜெயந்தி தினமான நாளை துவங்கவுள்ளது. பிரதமர் மோடியின் முக்கியத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த 'ஸ்வராஜ் பாரத் மெஷின்' திட்டத்துக்கு, எல்லா மாநிலங்களிலும் ஆதரவு பெருகி வருகிறது.மற்றவர்களுக்கு முன்னோடியாக, மத்திய அரசுத்துறைகள் ஒவ்வொன்றும், அந்தந்த துறைக்குட்பட்ட ... |
| காலத்திற்கு ஒவ்வாத தொழிலாளர் சட்டங்கள் ரத்தாகும்: ராஜ்நாத் சிங் Posted: லக்னோ: ''காலத்திற்கு ஒவ்வாத தொழிலாளர் சட்டங்கள் ரத்து செய்யப்படும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இடையூறுகள்:உ.பி., மாநிலம், லக்னோவில், தொழிலாளர் சேமநல நிதி ஓய்வூதியதாரர்கள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது:சில தொழிலாளர் சட்டங்களால், தொழிலாளர்களும், தொழில் நிறுவனங்களும் சிரமங்களையும், இடையூறுகளையும் சந்தித்து வருகின்றன. அதனால், காலத்திற்கு ஒவ்வாத, 44 சட்டங்கள் குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. தேவைப்பட்டால், அதில், சில சட்டங்கள் ரத்து ... |
| பயங்கரவாதத்திற்கு எதிராக இணைந்து போராடுவோம்: மோடி, ஒபாமா கூட்டறிக்கை Posted: வாஷிங்டன்: 'பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து போராடும்' என பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் சேர்ந்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தனர்.அமெரிக்கா சென்றுள்ள மோடி, பயணத்தின் கடைசி நாளான நேற்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் பேச்சு நடத்தினார். அதற்குப் பின் இருவரும் கூட்டறிக்கை வெளியிட்டனர். முதலில் பேசிய ஒபாமா, ''இந்திய பிரதமரை அமெரிக்காவுக்கு வரவேற்கிறேன். பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள், அணுசக்தி பயன்பாடு, பருவநிலை மாறுபாடு பற்றி பேசினோம். உலக வர்த்தக உடன்பாடு ... |
| தே.ஜ., கூட்டணியில் இருந்து சிவசேனா விலகல்? பிரதமர் நாடு திரும்பியதும் முடிவு என அறிவிப்பு Posted: மும்பை :''பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசிலிருந்து, சிவசேனா கட்சி விலகுவது குறித்து, பிரதமர் நரேந்திர மோடியுடன் விவாதித்த பின், முடிவு எடுக்கப்படும்,'' என, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.மும்பையில் நேற்று நிருபர்களிடம் பேசிய, அவர் கூறியதாவது:தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருவதும், அதிலிருந்து வெளியேறுவதும் எளிதான விஷயம் அல்ல. லோக்சபா தேர்தலில், வெற்றி பெற்ற எம்பி.,க்களும், வெற்றி பெறாதவர்களும், சிவசேனா மற்றும் பா.ஜ., கட்சியின் ஓட்டுகளை சேர்ந்தே பெற்றுள்ளனர். அது மக்கள் அளித்த தீர்ப்பு.பிரதமர் நரேந்திர மோடி, ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |அக்டோபர் 01,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |