Tamil News | Online Tamil News |
- ரயில்வே திட்டங்களுக்கு தமிழக முதல்வரிடமிருந்து ஒத்துழைப்பில்லை: அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் சதானந்த கவுடா
- தமிழகத்தில் 'அம்மா சிமென்ட்' திட்டம் அறிமுகம்: ஒரு மூட்டை ரூ.190க்கு விற்க முதல்வர் உத்தரவு
- அக்கறைப்படுவதற்கு நீங்கள் யார்?சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி கோபம்
- டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைகிறது: விரைவில் அறிவிப்பு வெளியாகிறது
- இந்தியா - அமெரிக்கா பங்குதாரர் நாடுகள் அமெரிக்க பத்திரிகைக்கு மோடி பேட்டி
- முன்கூட்டியே தேர்தல்: ஸ்டாலின் கணிப்பு
- கங்கை நதிக்கரையில் பிணங்கள் எரிப்புக்கு மாற்று வழி: கண்டறிய கமிட்டி அமைத்தது மத்திய அரசு
- பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க கோர்ட் சம்மன்
- சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் தமிழ் பாடம் கட்டாயம்: அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது
| Posted: தமிழகத்தில், 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில், முக்கியமான விரிவாக்க திட்டங்களை, ரயில்வே அமைச்சகம் கண்டு கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. சென்னை வந்திருந்த ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவிடம் இதுகுறித்து கேட்ட போது, ''தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் ரயில்வே திட்டங்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, ஒத்துழைப்பு தரவில்லை,'' என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.சில மாதங்களுக்கு முன், ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் சதானந்த கவுடா, துணிச்சலான ஒரு முடிவை எடுத்தார். ... |
| தமிழகத்தில் 'அம்மா சிமென்ட்' திட்டம் அறிமுகம்: ஒரு மூட்டை ரூ.190க்கு விற்க முதல்வர் உத்தரவு Posted: சென்னை : சிமென்ட் விலை ஏற்றத்தால், மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, 'அம்மா சிமென்ட்' திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார்.வீடு கட்டும் அனைத்து தரப்பினரும், இந்த திட்டத்தின் கீழ், 50 கிலோ அடங்கிய, ஒரு மூட்டை சிமென்ட்டை, 190 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளலாம்.தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் சிமென்ட் உற்பத்தித் திறன்; அந்த நிறுவனங்களின், தற்போதையஉற்பத்தி; அண்டை மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு வரும் சிமென்ட், ஆகிய விவரங்களை, அதிகாரிகளுடன் முதல்வர் கலந்து ஆலோசித்தார்.தமிழகத்தில், ஒரு மாதத்திற்கு சராசரியாக, 17 - 18 லட்சம் டன் ... |
| அக்கறைப்படுவதற்கு நீங்கள் யார்?சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி கோபம் Posted: "ஜெயலலிதாவுக்கு அச்சுறுத் தல் இருப்பதாக இருந்தால், அவரல்லவா, எங்களிடம் வந்து, கோரிக்கை வைத்திருக்க வேண்டும்? உங்களுக்கு ஏன் தேவையற்ற அக்கறை? அவர் மீது, அக்கறைப்பட நீங்கள் யார்?" என, நீதிபதிகள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறி, 'மனுவை வாபஸ் வாங்குவதாக' மனுதாரர் கூறியதால், சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது.தற்காலிக நீதிமன்றம்:முதல்வர் ஜெயலலிதா மீதான, சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு, இன்று வழங்கப்படவுள்ளது. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள, பரப்பன அக்ரஹார பகுதியில் இருக்கும், தற்காலிக நீதிமன்றத்தில் ... |
| டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைகிறது: விரைவில் அறிவிப்பு வெளியாகிறது Posted: புதுடில்லி: சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதை அடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளில், முதல் முறையாக, டீசல் விலையை, லிட்டருக்கு, இரண்டு ரூபாய் குறைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களை, பொதுமக்களுக்கு மானிய விலையில் விற்பதால், தங்களுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படுவதாக, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், நீண்ட நாட்களாக குற்றம் சாட்டி வந்தன.இதையடுத்து, பெட்ரோலின் விலையை, நிர்ணயிக்கும் பொறுப்பு, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களிடம் ... |
| இந்தியா - அமெரிக்கா பங்குதாரர் நாடுகள் அமெரிக்க பத்திரிகைக்கு மோடி பேட்டி Posted: நியூயார்க்: 'இந்தியாவின் இயற்கையான, உலக பங்குதாரர் நாடு அமெரிக்கா. இந்த உறவால் தான், ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் அமைதி, பாதுகாப்பு, நல்லிணக்கம் நிலகிறது' என, பிரதமர், நரேந்திர மோடி கூறினார்.அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டின் பிரபல, 'தி வால்ஸ்ட்ரீட் ஜார்னல்' பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் மேலும் கூறியுள்ளதாவது: இருநாடுகளுக்கும் இடையே நல்லுறவு நிலவுவதற்கு, அமெரிக்காவில் செழித்து வரும் இந்தியர்களும் ஒரு காரணம். எங்களின் உறவால், உலகளாவிய வளர்ச்சி, உலகம் முழுவதும் வாழும் மக்களின் முன்னேற்றம் ... |
| முன்கூட்டியே தேர்தல்: ஸ்டாலின் கணிப்பு Posted: ''தமிழகத்திற்கு முன் கூட்டியே தேர்தல் வரும்,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.கிருஷ்ணகிரி மாவட்ட, தி.மு.க., பொது உறுப்பினர் கூட்டத்தில் கலந்து கொண்டு, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது:கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகளை, தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்திய போது, அனைவரும் ஒட்டுமொத்தமாக சில, கருத்துக்களை முன் வைத்தனர். அதில் முக்கியமானது - தி.மு.க., நிர்வாகிகள் போட்டி, பொறாமையுடன் செயல்படுகின்றனர் என்பது.இளைஞர் அணியினருக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்க வேண்டும்; சுழற்சி முறையில் பதவிகளை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை ... |
| கங்கை நதிக்கரையில் பிணங்கள் எரிப்புக்கு மாற்று வழி: கண்டறிய கமிட்டி அமைத்தது மத்திய அரசு Posted: புதுடில்லி : கங்கை நதிக்கரையில் பிணங்களை எரித்து, மிச்சங்களை நதியில் வீசுவதைத் தடுக்கவும், புனித கங்கையை வழிபடும் போது, விளக்குகள், பூமாலைகள் போன்றவற்றை நதியில் வீசுவதைத் தடுக்கவும் தேவையான பரிந்துரைகளை அளிக்க, உயர்மட்ட கமிட்டி ஒன்றை அமைத்து, கங்கை நதிக்கு புத்துயிர் அளிக்கும் துறை அமைச்சர், உமா பாரதி உத்தரவிட்டுள்ளார்.நதிக்கு புத்துயிர்:பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, நதிகளை சுத்தப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. குறிப்பாக, இந்துக்களின் புனித நதியான கங்கையை சுத்தப்படுத்த, தனி அமைச்சகத்தையே ... |
| பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க கோர்ட் சம்மன் Posted: நியூயார்க்: 'குஜராத்தில், 2002ல் நடைபெற்ற மத கலவரங்களை ஒடுக்கத் தவறினார்' என தெரிவித்து, பிரதமர் மோடி மீது அமெரிக்க கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், சம்மன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், இது போன்ற நீதிமன்ற ஆணைகளுக்கு மதிப்பளிக்கவோ, கோர்ட்டில் ஆஜராகவோ தேவையில்லை. அதற்கான விலக்கு அதிகாரம், பிரதமருக்கு உள்ளதால், இந்த சம்மன் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.நியூயார்க்கில் உள்ள பெடரல் கோர்ட், நேற்று முன்தினம், மோடிக்கு சம்மன் பிறப்பித்தது. எனினும், அந்த சம்மன் மோடி தரப்பில் பெறப்பட்டதா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. அந்நாட்டின், அமெரிக்க ... |
| சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் தமிழ் பாடம் கட்டாயம்: அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது Posted: தமிழக அரசு பாட திட்டத்தை கடைபிடித்து வரும் பள்ளிகளில் மட்டும் அமலில் இருந்து வரும் கட்டாய தமிழ் பாட சட்டம், அடுத்த ஆண்டு முதல், சி.பி.எஸ்.இ., பள்ளி உட்பட, அனைத்து வகை மத்திய அரசு பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. இது தொடர்பான அரசாணையை, தமிழக அரசு பிறப்பித்துள்ளது.முந்தைய தி.மு.க., ஆட்சியில், பத்தாம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களும், கட்டாயம் தமிழ் பாடம் படிக்கும் வகையில், தனி சட்டம் கொண்டு வரப்பட்டது.தமிழக அரசு பாடத்திட்டத்தை கடைபிடிக்கும், நர்சரி, பிரைமரி, ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில், கட்டாயம் தமிழ் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |செப்டம்பர் 27,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |