Tamil News | Online Tamil News |
- கூடங்குளத்தில் வணிக மின் உற்பத்திக்கு மேலும் சில தினங்கள் ஆகலாம்: அதிகாரி
- போட்டியிட வேண்டாம்: விஜயகாந்த் வேண்டுகோள்
- தமிழகம் முழுவதும் பணம், பொருள் வைத்து சூதாட்டம்: முதல்வர் மீதான சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு
- 'ஆசிரியர் பிரச்னையிலும் அலட்சியம்'
- ஜப்பானிய தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு: சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படும் என உறுதி
- மரண தண்டனை பெற்றவர்களின் மறுசீராய்வு மனுக்கள்: பகிரங்கமாக விசாரிக்கப்படும்: சுப்ரீம் கோர்ட் அதிரடி
- '2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., இயக்குனர் மீது பரபரப்பு புகார்
- மோடி100:தெற்காசியாவில் வல்லரசு: சொல்லாமல் சொன்ன மோடி
- உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சிகள் தயக்கம்: புது கூட்டணி அமைக்க முடியாததால் திணறல்: தனியாக களம் இறங்க பா.ஜ., மட்டும் ஆயத்தம்
| கூடங்குளத்தில் வணிக மின் உற்பத்திக்கு மேலும் சில தினங்கள் ஆகலாம்: அதிகாரி Posted: திருநெல்வேலி: ''கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வணிக ரீதியிலான மின் உற்பத்திக்கு மேலும் சில தினங்கள் ஆகலாம்,'' என, வளாக இயக்குனர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்தார்.திருநெல்வேலி மாவட்டத்தின் கடற்கரை கிராமமான கூடங்குளத்தில், ரஷ்யாவின் தொழில்நுட்ப உதவியுடன், 17 ஆயிரத்து 270 கோடி ரூபாய் செலவில், ஒவ்வொன்றும், 1,000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், முதலாவது அணு உலையில், 2013 அக்., 22ல் மின் உற்பத்தி துவங்கியது. 2014 ஜூன் 7ல் அணுஉலை முழு உற்பத்தி அளவான, 1,000 மெகாவாட்டை எட்டியது. அணுசக்தி ஒழுங்குமுறை வாரிய அதிகாரிகள், மத்திய கண்காணிப்பு ... |
| போட்டியிட வேண்டாம்: விஜயகாந்த் வேண்டுகோள் Posted: 'உள்ளாட்சி இடைத்தேர்தலில், தே.மு.தி.க., சார்பில், யாரும் போட்டியிட வேண்டாம்' என, மாவட்ட செயலர்கள் மூலம், கட்சியினருக்கு விஜயகாந்த் ரகசிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.தமிழகத்தில், காலியாகவுள்ள உள்ள கோவை, திருநெல்வேலி, துாத்துக்குடி மேயர் பதவிகள் உட்பட, 1,000க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பதவிகளுக்கு, வரும் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.இத்தேர்தலை, தி.மு.க., - பா.ம.க., - ம.தி.மு.க.,- புதிய தமிழகம், -ம.ம.க., உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன.தேர்தலை சந்திக்க பா.ஜ., தலைமை தயாராகி வருகிறது. தேர்தல் குறித்து முடிவெடுப்பதற்காக, அக்கட்சி சார்பில், குழுவும் ... |
| தமிழகம் முழுவதும் பணம், பொருள் வைத்து சூதாட்டம்: முதல்வர் மீதான சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு Posted: பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடந்து வரும், தமிழக முதல்வர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை மையப்படுத்தி, தமிழகத்தில், அ.தி.மு.க., -- தி.மு.க.,வினர் இடையே, சூதாட்டம் களை கட்டுகிறது. இந்த சூதாட்டத்தில், தங்கம், வெள்ளி, பணம், கார் ஆகியன, பந்தயப் பொருட்களாக வைக்கப்படுகின்றன.குழப்பமான மனநிலை:பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடந்து வரும், முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு, வரும் செப்., 20ம் தேதி வெளியாகிறது.இந்த தீர்ப்பு, தி.மு.க.,வினர் மத்தியில், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அ.தி.மு.க.,வினர் குழப்பமான மனநிலையில் ... |
| 'ஆசிரியர் பிரச்னையிலும் அலட்சியம்' Posted: சென்னை: 'போராட்டம் நடத்தும் ஆசிரியர்களின் பிரதிநிதிகளை, உடனடியாக, முதல்வர் அழைத்து பேசி, சுமூக முடிவு காண வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில், கல்லுாரிகளில் பயிற்சி பெற்று தேர்வு எழுதி, வெற்றி பெற்றவர்களுக்கு, ஆசிரியர் பணிக்கான தகுதிச் சான்றை, தமிழக அரசு தந்துள்ளது. இவ்வாறு சான்றிதழ் கொடுத்தவர்களுக்கே, மீண்டும், ஒரு தகுதி தேர்வை நடத்துவது, ஏன் என, புரியவில்லை. 'வெயிட்டேஜ்' என்ற பெயரில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளனர்.ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், பணி நியமனம் ... |
| ஜப்பானிய தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு: சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படும் என உறுதி Posted: டோக்கியோ : ''இந்தியாவில், நிர்வாக தலையீடு அதிகம் இருப்பதாக கூறப்படும், 'ரெட் டேப்பிசம்' அறவே இருக்காது. ஜப்பானி தொழிலதிபர்களை வரவேற்று, 'ரெட் கார்ப்பெட்' எனப்படும் சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்க நாங்கள் தயாராக உள்ளோம்; இந்தியாவுக்கு வாருங்கள்; இந்தியாவில் தொழிற்சாலைகளை துவக்குங்கள்,'' என, ஜப்பானிய தொழிலதிபர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.ஐந்து நாள் அரசு முறை பயணமாக, ஜப்பான் சென்றிந்த பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், அந்நாட்டின் தொழில் மேம்பாட்டு அமைப்பான, 'நிக்கி' மற்றும் 'ஜெட்ரா' ஏற்பாடு செய்திருந்த ... |
| மரண தண்டனை பெற்றவர்களின் மறுசீராய்வு மனுக்கள்: பகிரங்கமாக விசாரிக்கப்படும்: சுப்ரீம் கோர்ட் அதிரடி Posted: புதுடில்லி : 'நீண்ட காலம் நடக்கும் வழக்கு விசாரணையால், ஒருவர் சிறையில் இருப்பதை காரணமாக காட்டி, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றும்படி கோர முடியாது. அதேநேரத்தில், மரண தண்டனை பெற்றவர்கள் தாக்கல் செய்யும், மறுசீராய்வு மனுக்கள் எல்லாம், பகிரங்கமான முறையில், மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வால் விசாரிக்கப்படும்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.செங்கோட்டை தாக்குதல் வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட முகமது ஆரிப், 1993ம் ஆண்டு நிகழ்ந்த, மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தண்டனை பெற்ற, யாகூப் அப்துல் ரசாக் மேமன் உட்பட, மரண தண்டனை பெற்ற ஆறு பேர், உச்ச ... |
| '2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., இயக்குனர் மீது பரபரப்பு புகார் Posted: புதுடில்லி : 2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, சி.பி.ஐ., இயக்குனர் ரஞ்சித் சின்கா மீது தன்னார்வ அமைப்பு, சுப்ரீம் கோர்ட்டில் புகார் தெரிவித்துள்ளதால், சர்ச்சை எழுந்துள்ளது.முந்தைய காங்., ஆட்சி காலத்தில், '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டில், 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. தற்போது, சி.பி.ஐ., இயக்குனராக ரஞ்சித் சின்கா பதவி வகிக்கிறார்.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள, பொதுநல சட்ட மையம் என்ற தன்னார்வ அமைப்பின் வழக்கறிஞர் ... |
| மோடி100:தெற்காசியாவில் வல்லரசு: சொல்லாமல் சொன்ன மோடி Posted: எங்கு பார்த்தாலும் ஊறிக்கிடந்த ஊழல், நசுக்கப்படும் ஜனநாயகத்தின் குரல்வளை, நகராமல் தேங்கி நின்ற பொருளாதாரம், சுதந்திரம் பெற்று 67ஆண்டுகள் ஆகியும் அடிப்படை வசதிகளை காணாத கிராமங்கள், ஏழைகள் ஏழைகளாகவே இருக்க பணத்தில் கொழித்தஅரசியல்வாதிகள்... இப்படியான சமுதாய அபாயங்களுக்கு எப்போது தான் விடிவு என சராசரிஇந்தியர்கள் ஏங்கிக்கொண்டு இருந்தபோது வந்தவர் தான்நரேந்திர மோடி.பிரதமராக மோடி பணியைதுவக்கி 100 நாட்கள் நிறைவடைகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சி செய்யப்போகும் ஒரு அரசுக்கு இது குறைவான நாட்களாக இருந்தாலும், ஒரு அரசின் முழு செயல்பாட்டை அதற்குள் எடை ... |
| Posted: தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள, உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியை எதிர்த்துப் போட்டியிட, எதிர்க்கட்சிகள் தயக்கம் காட்டுகின்றன. பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., 'போதிய கால அவகாசம் இல்லை' எனக் கூறி, தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இக்கட்சி உட்பட, முக்கிய எதிர்க்கட்சிகள் எல்லாமே, புதிதாக கூட்டணி அமைக்க முடியாமல் திணறும் நிலையில், தமிழக பா.ஜ., மட்டும், தனியாக களம் இறங்க ஆயத்தமாகி வருகிறது.அதன் துவக்கமாக, லோக்சபா தேர்தலில் ஏற்படுத்திய கூட்டணிக்கு, மீண்டும் புத்துயிர் அளிக்கும் முயற்சியில், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |செப்டம்பர் 03,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |