Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


செங்கோட்டையில் கட்டடம் இடிந்து 3 தொழிலாளர்கள் பலி

Posted: 06 Sep 2014 01:27 PM PDT

திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையில் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள பழைய கட்டடத்தை இடித்தபோது, அது இடிந்து விழுந்ததில், 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

Posted: 06 Sep 2014 01:23 PM PDT

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்துக்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக, காவல்துறைக் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் வந்த மிரட்டலையடுத்து, அங்கு வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

பணம் பெற்ற மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்காததற்கு நீதிமன்றம் கண்டனம்

Posted: 06 Sep 2014 01:23 PM PDT

மருத்துவக் காப்பீடு செய்திருந்தும் பயனாளிகளிடம் பணம் பெற்ற மருத்துவமனைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையெனில் அது அரசின் தவறே என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

லாரி - டெம்போ மோதல்: இருவர் சாவு

Posted: 06 Sep 2014 01:21 PM PDT

திருநெல்வேலி மாவட்டம், ஆவரைக்குளத்தில் உள்ள கோழிப் பண்ணையில் இருந்து கோழிகளை ஏற்றிக் கொண்டு நாகர்கோவில் நோக்கி டெம்போ ஒன்று வந்தது.

சிபிஐ காவல் முடிந்து கம்பெனிகள் பதிவாளர் மனுநீதி சோழன் நீதிமன்றத்தில் ஆஜர்

Posted: 06 Sep 2014 01:21 PM PDT

சென்னையில் ரூ. 10 லட்சம் லஞ்சம் வாங்கியதாகக் கைது செய்யப்பட்ட கம்பெனிகளின் பதிவாளர் எம்.மனுநீதி சோழனின் மூன்று நாள் சிபிஐ காவல் முடிந்ததால் அவர், சிபிஜ சிறப்பு முதன்மை நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்தியாவின் வளர்ச்சிக்கு மாணவர்கள் உதவ வேண்டும்: வெங்கய்ய நாயுடு

Posted: 06 Sep 2014 01:20 PM PDT

படிப்புக்காகவும், வருவாய் ஈட்டுவதற்காகவும் வெளிநாடு செல்லும் மாணவர்கள் நாடு திரும்பி, இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கேட்டுக் கொண்டார்.

ஓணம் பண்டிகை: விஜயகாந்த், ஞானதேசிகன் வாழ்த்து

Posted: 06 Sep 2014 01:13 PM PDT

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, மலையாள மக்களுக்கு விஜயகாந்த், ஞானதேசிகன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஓணம் பண்டிகை: முதல்வர் ஜெயலலிதா

Posted: 06 Sep 2014 01:07 PM PDT

ஓணம் பண்டிகையை ஒட்டி, மலையாள மொழி பேசும் மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஓணம் பண்டிகை: ஆளுநர் வாழ்த்து

Posted: 06 Sep 2014 01:07 PM PDT

ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாள மொழி பேசும் மக்களுக்கு ஆளுநர் ரோசய்யா வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் கல்வியின் தரத்தை உயர்த்த நடவடிக்கை: ஆட்சியர்

Posted: 06 Sep 2014 01:05 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் கல்வியின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர் ம. ரவிக்குமார்.

மாநில டேபிள் டென்னிஸ் : கோவில்பட்டி கல்லூரி அணி தகுதி

Posted: 06 Sep 2014 01:05 PM PDT

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி அணி மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஆறுமுகனேரி பள்ளியில் ஆசிரியர் தின விழா

Posted: 06 Sep 2014 01:04 PM PDT

ஆறுமுகனேரி கா.ஆ. மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா நடைப்பெற்றது. விழாவுக்கு பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் எல். ராஜமணி தலைமை வகித்தார். தலைமையாசிரிய

ரெட்டார்குளத்தில் 504 திருவிளக்கு பூஜை

Posted: 06 Sep 2014 01:04 PM PDT

சாத்தான்குளம் அருகே ரெட்டார்குளம் ஸ்ரீபெருமாள்சுவாமி, ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் கொடை விழாவையொட்டி 504 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

Posted: 06 Sep 2014 01:04 PM PDT

திருச்செந்தூரில் சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனார் பிறந்த நாள் விழா மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

கோவில்பட்டி பள்ளிகளில் ஆசிரியர் தின விழா

Posted: 06 Sep 2014 01:04 PM PDT

கோவில்பட்டி ஸ்ரீகரா சி.பி.எஸ்.இ. பள்ளி மற்றும் எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.

சர்வதேச தரவரிசை செஸ் போட்டி:கோவை மாணவி முதலிடம்

Posted: 06 Sep 2014 01:03 PM PDT

தூத்துக்குடியில் நான்குநாள்கள் நடைபெற்ற சர்வதேச தர வரிசை செஸ் போட்டியில் கோவையைச் சேர்ந்த மாணவி பிரியங்கா முதலிடத்தைப் பிடித்தார்.

எட்டயபுரத்தில் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா

Posted: 06 Sep 2014 01:03 PM PDT

எட்டயபுரத்தில் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள்விழா நடைபெற்றது.

மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங்:கோவில்பட்டி பள்ளி சாம்பியன்

Posted: 06 Sep 2014 01:03 PM PDT

கோவில்பட்டியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் கோவில்பட்டி கே.ஆர்.ஏ. வித்யாஷ்ரம் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்று முதலிடம் பெற்றுள்ளது.

சாத்தான்குளம் அருகேகடையில் தின்பண்டம் சாப்பிட்ட 5 மாணவர்கள் மயக்கம்

Posted: 06 Sep 2014 01:03 PM PDT

சாத்தான்குளம் அருகே பள்ளி முன்புள்ள கடையில் தின்பண்டம் சாப்பிட்டு 5 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். இதையொட்டி சனிக்கிழமை உணவு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் காலாவதியான பொருள்களை பறிமுதல் செய்தனர்.

உடன்குடியில் காங்கிரஸார் உண்ணாவிரதம்

Posted: 06 Sep 2014 01:03 PM PDT

உடன்குடி வட்டார காங்கிரஸ் சார்பில் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

2ஜி: பிரசாந்த் பூஷண், சிபிஐ தரப்பு ஆவணங்களின் நகல்களைத் தர உத்தரவிடக் கோரி ஆ. ராசா மனு

Posted: 06 Sep 2014 01:02 PM PDT

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்துடன் தொடர்புடையதாகக் கூறி, வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், சிபிஐ, சிபிஐ இயக்குநர் ஆகியோர் தாக்கல் செய்யும் ஆதாரங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவைகளின் நகல்களை தனக்கும் அளிக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா உச்ச நீதிமன்றத்தில் சனிக்கிழமை மனு தாக்கல் செய்துள்ளார்.

விளாத்திகுளம் அருகே கடத்தப்பட்ட டிப்பர் லாரி மீட்பு: இருவர் கைது

Posted: 06 Sep 2014 01:02 PM PDT

விளாத்திகுளம் அருகே குளத்தூரில் கடத்தப்பட்ட டிப்பர் லாரியை மீட்டு, கடத்திச் சென்றவர்கள் இருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

மாநில யோகா போட்டி:சென்ட்ரல் மெட்ரிக் பள்ளி சாதனை

Posted: 06 Sep 2014 01:02 PM PDT

மாநில யோகா போட்டியில் காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாதனைபடைத்துள்ளது.

பெண் தற்கொலை

Posted: 06 Sep 2014 01:02 PM PDT

விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் தொழிலாளி மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

ஆறுமுகனேரியில் தலைமைக் காவலரை தாக்கிய மேலும் ஒருவர் கைது

Posted: 06 Sep 2014 01:02 PM PDT

ஆறுமுகனேரியில் காவல்துறைதனிப்பிரிவு காவலரைத் தாக்கிய வழக்கில் மேலும் ஒருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

தீ விபத்து: பெண் சாவு

Posted: 06 Sep 2014 01:01 PM PDT

தஞ்சாவூரில் சமையல் செய்யும்போது ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த காயமடைந்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம்: மத்திய, மாநில அரசுகள் தலையிட மார்க்சிஸ்ட் கோரிக்கை

Posted: 06 Sep 2014 01:00 PM PDT

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன (என்.எல்.சி.) ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

40 விவசாயிகளுக்கு தென்னை மரம் ஏறும் கருவி

Posted: 06 Sep 2014 01:00 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், பசுபதிகோவில் கிராமத்தில் 40 விவசாயிகளுக்கு நவீன முறையில் தென்னை மரம் ஏறும் பயிற்சியும், பயிற்சி பெற்றவர்களுக்கு தென்னை மரம் ஏறும் கருவியும் வெள்ளிக்கிழமை இரவு வழங்கப்பட்டது.

பேருந்தில் பயணியிடம் 26 பவுன் நகை திருட்டு

Posted: 06 Sep 2014 01:00 PM PDT

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை ஓடும் பேருந்தில் பயணியிடம் 26 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

பூண்டிமாதா பேராலயத்தில் நாளை அன்னையின் அலங்காரத் தேர்பவனி

Posted: 06 Sep 2014 01:00 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டிமாதா பிறப்பு பெருவிழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை இரவு (செப். 8) அன்னையின் அலங்காரத் தேர்பவனி நடைபெறுகிறது.

இமானுவேல் சேகரன் நினைவு நாளுக்கு வாடகைக் காரில் செல்ல அனுமதிக்க வலியுறுத்தல்

Posted: 06 Sep 2014 01:00 PM PDT

தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளில் பங்கேற்க, வாடகை வாகனங்களில் செல்ல அனுமதிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மீண்டும் ஆட்டோவில் தீ

Posted: 06 Sep 2014 01:00 PM PDT

தஞ்சாவூரில் ஒரு வாரத்துக்கு முன்பு ஆட்டோ தீ பற்றி எரிந்த நிலையில், அதே பகுதியில் மற்றொரு ஆட்டோ சனிக்கிழமை அதிகாலை மர்மமான முறையில் தீ பற்றி எரிந்தது.

பேருந்து மோதி ஒருவர் சாவு

Posted: 06 Sep 2014 12:59 PM PDT

தஞ்சாவூரில் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த நபர் சனிக்கிழமை உயிரிழந்தார்.

விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது கல் வீசிய 10 பேர் கைது

Posted: 06 Sep 2014 12:59 PM PDT

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது, பட்டுக்கோட்டை சாலையில் உள்ள வீடுகளின் மீது கல் வீசியதாக 10 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

வனப்பகுதியில் முதியவர் சடலம் மீட்பு

Posted: 06 Sep 2014 12:59 PM PDT

சுமார் 100 ஏக்கர் வனப்பகுதியைக் கொண்டது புதுகை மாவட்ட ஆட்சியரக வளாகம். இங்கு சனிக்கிழமை காலையில் வனப்பகுதியில் துர்நாற்றம் வீசியதுடன், கழுகுகள் உள்ளிட்ட பறவைகள், நாய்களின்

புதுக்கோட்டையில்கஞ்சா விற்ற 3 பேர் கைது

Posted: 06 Sep 2014 12:58 PM PDT

புதுக்கோட்டையில் மின்வாரிய அலுவலகம் எதிரே கஞ்சா விற்ற 3 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

தில்லி அரசியலுக்கு திரும்பும் யோசனையை பரிசீலிக்கவில்லை: ஷீலா தீட்சித்

Posted: 06 Sep 2014 12:58 PM PDT

தில்லி அரசியலுக்கு திரும்பும் யோசனையை பரிசீலிக்கவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், தில்லி முன்னாள் முதல்வருமான ஷீலா தீட்சித் தெரிவித்தார்.

திருமண மாப்பிள்ளையை காணவில்லையென புகார்

Posted: 06 Sep 2014 12:58 PM PDT

நாகை மாவட்டம், குத்தாலம் அருகே திருமண மாப்பிள்ளை காணாமல்போனது குறித்து உறவினர்

பள்ளியில் ஆசிரியர் தினவிழா

Posted: 06 Sep 2014 12:58 PM PDT

கரூர் லிட்டில் ஏஞ்சல்ஸ் ஆங்கில மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை ஆசிரியர் தின விழா நடைபெற்றது.

கோமாரி நோய் இல்லாததாக கரூர் உருவாக வேண்டும்

Posted: 06 Sep 2014 12:57 PM PDT

கரூரை கோமாரி நோய் தாக்குதல் இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி.

நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்பு

Posted: 06 Sep 2014 12:57 PM PDT

நாகை அருகே மீன்பிடி படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்த புஷ்பவனம் மீனவர்கள் இந்திய கடற்படையினரால் மீட்கப்பட்டு, நாகையில் சனிக்கிழமை

மானாவாரி பருத்தி சாகுபடியில் பூசா ஹைட்ரோஜெல் அவசியம்

Posted: 06 Sep 2014 12:57 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் மானாவாரியாக சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்திக்கு பூசா ஹைட்ரோஜெ

பதவியைத் தவறாகப் பயன்படுத்துவதும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலே: கலாநிதி மாறன் கேபிள் நிறுவன வழக்கில் நீதிபதி கண்டனம்

Posted: 06 Sep 2014 12:57 PM PDT

பதவியைத் தவறாகப் பயன்படுத்துவதும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்தான் என்று கலாநிநி மாறனின் "கல்' கேபிள்ஸ் நிறுவன வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்தார்.

"ரூ. 38 கோடியில் ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன'

Posted: 06 Sep 2014 12:56 PM PDT

டெல்டா மாவட்டங்களில் கடைமடை வரை விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் ரூ. 38 கோடியில் ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன என்றார் பொதுப்பணித்துறையின் திருச்சி மண்

கொசு உற்பத்தி தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்

Posted: 06 Sep 2014 12:56 PM PDT

கும்பகோணம் பெரிய கடைவீதியில் கொசு உற்பத்தி தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

அணைக்கரையில் 45.2 மி.மீ. மழை

Posted: 06 Sep 2014 12:56 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக அணைக்கரையில் 45.2 மி.மீ. மழை பெய்தது.

பாரத் கல்லூரியில் கணிதக் கருத்தரங்கம்

Posted: 06 Sep 2014 12:55 PM PDT

தஞ்சாவூர் பாரத் அறிவியல், நிர்வாகவியல் கல்லூரியில் கணிதத் துறை சார்பில் கணிதம் குறித்த கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

குடுமியான்மலை வேளாண் கல்லூரியில் அடிப்படை வசதிகள் ஆய்வு

Posted: 06 Sep 2014 12:55 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அரசு வேளாண் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியர் செ. மனோகரன் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

ஊர்க்காவல் படையினருக்கு சியுஜி சிம்கார்டுகள்

Posted: 06 Sep 2014 12:55 PM PDT

புதுக்கோட்டை மாவட்ட ஊர்க்காவல் படையினருக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சியுஜி சிம்கார்டுகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

வேட்புமனு நிராகரிப்புக்கு கம்யூனிஸ்ட் கண்டனம்

Posted: 06 Sep 2014 12:54 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் காலியாகவுள்ள ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரின் மனு நிராகரிக்கப்பட்டதற்கு அக்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்

Posted: 06 Sep 2014 12:54 PM PDT

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் தின விழா

Posted: 06 Sep 2014 12:54 PM PDT

தஞ்சாவூர் பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் ஆசிரியர் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், கல்லூரிச் செயலரும், தாளாளருமான கி. துளசிஐயா வாண்டையார் கல்லூரியில் சிறப்பாகப்

காற்றாலை மின் உற்பத்தி 3 ஆயிரம் மெகா வாட்டாக மீண்டும் அதிகரிப்பு

Posted: 06 Sep 2014 12:54 PM PDT

காற்றாலைகளின் மின் உற்பத்தி 3 ஆயிரத்து 167 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. தென்மேற்குப் பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரை காற்றாலை மின் உற்பத்தி மிக அதிகமாக இருக்கும். இதனால் பெரும்பாலும் இந்த மாதங்களில் மின் பற்றாக்குறை இருக்காது.

கும்பகோணம் நீதிமன்றங்களில் தஞ்சை மாவட்ட நீதிபதி ஆய்வு

Posted: 06 Sep 2014 12:54 PM PDT

கும்பகோணத்தில் உள்ள நீதிமன்றங்களில் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எம்.என். முகமது அலி வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.

குடந்தையில் வாக்காளர்களுக்கு மயிலாடுதுறை எம்பி நன்றி தெரிவிப்பு

Posted: 06 Sep 2014 12:53 PM PDT

மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் ஆர்.கே. பாரதிமோகன், கும்பகோணம் பகுதியில் 45 வார்டுகளிலும் சனிக்கிழமை காலை முதல் மாலை வரை திறந்த ஜீப்பில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

பிரதமருடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு

Posted: 06 Sep 2014 12:53 PM PDT

சர்ச்சைக்குரிய குடும்பக் கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் தலைமையிலான குழுவினர் தில்லியில் சனிக்கிழமை சந்தித்துப் பேசினர்.

வேதாரண்யம் ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது

Posted: 06 Sep 2014 12:53 PM PDT

வேதாரண்யம் சர்வகட்டளை பகுதியைச் சேர்ந்த பணி ஓய்வு பெற்ற ஆசிரியர் சு. செல்வராசுவுக்கு, கல்வித் துறையில் சிறப்பாக பங்காற்றியமைக்காக தேசிய நல்லாசிரியர் விருது வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட

சோணாப்பேட்டை ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

Posted: 06 Sep 2014 12:53 PM PDT

நீடாமங்கலம் ஒன்றியம், சோணாப்பேட்டை ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

சீர்காழியில் பெரியார் தி.க. ஆர்ப்பாட்டம்

Posted: 06 Sep 2014 12:52 PM PDT

சீர்காழி நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து, பெரியார் திராவிடர் கழகம் மற்றும் சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை அமைப்புகள் சார்பில் வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரியார் திராவிடர் கழகம் மற்றும் சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

Posted: 06 Sep 2014 12:52 PM PDT

சீர்காழி நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து, பெரியார் திராவிடர் கழகம் மற்றும் சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை அமைப்புகள் சார்பில் வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சீர்காழியில் விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு

Posted: 06 Sep 2014 12:52 PM PDT

சீர்காழியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வென்றவர்களுக்கு சனிக்கிழமை பரிசு வழங்கப்பட்டது.

கோ-ஆப்டெக்ஸ் கிளையில் ஆசிரியர் தின சிறப்பு விற்பனை

Posted: 06 Sep 2014 12:51 PM PDT

மயிலாடுதுறை கோ-ஆப்டெக்ஸ் கிளையில் ஆசிரியர் தின சிறப்பு விற்பனை கண்காட்சி தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உள்ளாட்சி இடைத்தேர்தல் புகார்கள்: ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவு: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Posted: 06 Sep 2014 12:51 PM PDT

உள்ளாட்சி இடைத்தேர்தல்களில், எதிர்க்கட்சிகள் அளித்த புகார்கள் குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கைகளின் அடிப்படையில், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தாந்தோன்றிமலை கோயிலில் இன்று குடமுழுக்கு

Posted: 06 Sep 2014 12:50 PM PDT

கரூர் தாந்தோன்றிமலை வெங்கடரமணசுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) குடமுழுக்கு நடைபெறுகிறது.

தடைகள் வந்தாலும் கற்றல் தொடர வேண்டும்

Posted: 06 Sep 2014 12:50 PM PDT

கல்வி கற்கும்போது எந்தத் தடை வந்தாலும் மனம் தளராமல் தடையின்றி முழுமையாகக் கற்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி.

கரூர் அருகேபெண்ணிடம் வழிப்பறி: 2 இளைஞர்கள் கைது

Posted: 06 Sep 2014 12:50 PM PDT

கரூர் அருகே பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 2 பவுன் செயினை பறித்த 2 இளைஞர்களை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

கிருஷ்ணராயபுரம் அருகே 5 குடிசைகள் தீக்கிரை

Posted: 06 Sep 2014 12:50 PM PDT

கிருஷ்ணராயபுரம் அருகே வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 5 குடிசைகள் எரிந்து சாம்பலாயின. பாதிக்கப்பட்டோருக்கு கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ செ. காமராஜ் நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினார்.

மண்டல சதுரங்க போட்டிக்கு டிஎன்பிஎல் மாணவர் தேர்வு

Posted: 06 Sep 2014 12:49 PM PDT

மண்டல சதுரங்கப் போட்டிக்கு டிஎன்பிஎல் பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான பாரதியார் தின சதுரங்கப் போட்டி அண்மையில் புலியூர் டாக்டர் எம்ஏஎம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

ஆந்திர கடல் பகுதியில் மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் கைது

Posted: 06 Sep 2014 12:49 PM PDT

ஆந்திர கடல் பகுதியில் மீன் பிடித்த இலங்கை மீனவர்களை இந்திய கடலோரக் காவல் படையினர் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

பயிர்களைத் தாக்கும் மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்த...

Posted: 06 Sep 2014 12:49 PM PDT

கத்தரி, வெண்டை மற்றும் அழகுச்செடிகளை தாக்கும் மாவுப்பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

நாட்டின் நதிகளை இணைக்க வலியுறுத்தல்

Posted: 06 Sep 2014 12:49 PM PDT

நாட்டிலுள்ள அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும் என மத்திய அரசை கரூர் டாக்டர் அம்பேத்கர் மக்கள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மாவட்ட செஸ் : பாரதி வித்யாலயா பள்ளி சாம்பியன்

Posted: 06 Sep 2014 12:49 PM PDT

கரூர் மெஜஸ்டிக் அரிமா சங்கம் சார்பில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான செஸ் போட்டியில், குளித்தலை பாரதி வித்யாலயா பள்ளி மாணவ,மாணவிகள் சாம்பியன் பட்டம் வென்றனர்.

மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி

Posted: 06 Sep 2014 12:48 PM PDT

கரூர் பி.ஏ. வித்யாபவன் பள்ளியில் 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

வறுமை ஒழிப்புத் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு செயல்படுத்தப்படும்: வெங்கய்ய நாயுடு

Posted: 06 Sep 2014 12:48 PM PDT

நாட்டின் வறுமை ஒழிப்புக்காக, தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் ஒருசில மாற்றங்கள் செய்யப்பட்டு, தேவையான பணிகள் தொடங்கப்படும் என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.

அதிக மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை

Posted: 06 Sep 2014 12:48 PM PDT

பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.

செப். 9-ல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 06 Sep 2014 12:48 PM PDT

பெரம்பலூரில் மின் நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் செப். 9-ம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து பெரம்பலூர் கோட்ட செயற்பொறியாளர் சி. தேவராஜ் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்

வாகனம் மோதி முதியவர் சாவு : போலீஸாரை கண்டித்து மறியல்

Posted: 06 Sep 2014 12:48 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் சனிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழந்தார். சம்பவ இடத்துக்கு வராத போலீஸாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

29 உள்ளாட்சிப் பதவிகளுக்கு களத்தில் 54 பேர்

Posted: 06 Sep 2014 12:47 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள 26 பதவியிடங்களுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட 54 பேர் களத்தில் உள்ளனர்.

எம்.பி.பி.எஸ்.: நாளை முதல் இறுதிக் கட்ட கலந்தாய்வு

Posted: 06 Sep 2014 12:47 PM PDT

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க இறுதிக் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை (செப்.8) தொடங்குகிறது.

கண்புரை சிகிச்சைக்கு தேர்வான 421 பேர் மதுரை பயணம்

Posted: 06 Sep 2014 12:47 PM PDT

ஆலத்தூர் வட்டாரத்தைச் சேர்ந்த 421 பேருக்கு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

இன்று ஆரோக்கியமாதா கோயில் தேரோட்டம்

Posted: 06 Sep 2014 12:47 PM PDT

பெரம்பலூர் அருகே பாளையம் கிராமத்திலுள்ள ஆரோக்கிய மாதா கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை (செப். 7) நடைபெறுகிறது.

வி.களத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் விழா மேடை திறப்பு

Posted: 06 Sep 2014 12:47 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்குள்பட்ட வி.களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மக்கள் பங்களிப்புடன் தன்னிறைவுத் திட்டத்தின் கீழ், ரூ. 3 லட்சத்தில் கட்டப்பட்ட விழா மேடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ரூ. 47.50 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

Posted: 06 Sep 2014 12:46 PM PDT

ரூ. 47.50 லட்சத்தில் அங்கன்வாடி மையங்கள் கட்டுவது, கிணறு ஆழப்படுத்துவது, போர்வெல் அமைப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள குரும்பலூர் பேரூராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூர் அருகே இன்று அம்மா மருத்துவ முகாம்

Posted: 06 Sep 2014 12:46 PM PDT

அரியலூர் அருகேயுள்ள ஆதித்யா கிராமத்தில் அம்மா மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) நடைபெறுகிறது.

தடை செய்யப்பட்ட பொருட்கள் அழிப்பு

Posted: 06 Sep 2014 12:46 PM PDT

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் தடைசெய்யப்பட்ட ரூ. 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலைப் பொருட்கள் அழிக்கப்பட்டன.

வட்டாட்சியருக்கு பாராட்டு விழா

Posted: 06 Sep 2014 12:45 PM PDT

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் வட்டாட்சியராகப் பணிபுரிந்து ஜயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி மின்திட்ட வட்டாட்சியராகப் பொறுப்பேற்ற வட்டாட்சியர் முகுந்தனுக்கு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ரெட்கிராஸ் மாணவர்கள் கல்விச் சுற்றுலா

Posted: 06 Sep 2014 12:45 PM PDT

அரியலூர் ஜூனியர் ரெட்கிராஸ் மாணவர்கள் கல்விச் சுற்றுலாவாக பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று வந்தனர்.

பெண்ணிடம் 20 பவுன் சங்கிலி பறிப்பு

Posted: 06 Sep 2014 12:45 PM PDT

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை இரவு நடந்து சென்ற பெண்ணிடம் 20 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

பெண்ணிடம் வழிப்பறி: 2 இளைஞர்கள் கைது

Posted: 06 Sep 2014 12:45 PM PDT

கரூர் அருகே பெண்ணிடம் 2 பவுன் செயினை பறித்த 2 இளைஞர்களை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

புதுகை மாவட்டஆட்சியரக வளாகவனப்பகுதியில் முதியவர் சடலம் மீட்பு

Posted: 06 Sep 2014 12:44 PM PDT

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள வனப்பகுதியில் இறந்து கிடந்த முதியவரின் சடலத்தை போலீஸார் சனிக்கிழமை மீட்டனர்.

கண்டியாநத்தம் ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

Posted: 06 Sep 2014 12:44 PM PDT

பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் ஊராட்சியில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி மாணவன் மாயம்

Posted: 06 Sep 2014 12:44 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே எருதுப்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் ராஜ்குமார் (14). இவர் மலைக்குடிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 1-ம்

மாநில ஸ்கேட்டிங் போட்டிக்கு 40 பேர் தேர்வு

Posted: 06 Sep 2014 12:43 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 40 பேர் மாநில ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

ஆசிரியர்களுக்கு தொற்றா நோய் விழிப்புணர்வு முகாம்

Posted: 06 Sep 2014 12:43 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அரசு மருத்துவமனையில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பள்ளி ஆசிரியர்களுக்கு தொற்றா நோய் விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வாக்குப்பதிவு மையங்கள் ஆய்வு

Posted: 06 Sep 2014 12:43 PM PDT

புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு மையங்களை மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் சனிக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

"பிளாஸ்டிக் பொருள்களை ஒழிக்க வணிகர்களின் ஒத்துழைப்பு அவசியம்'

Posted: 06 Sep 2014 12:43 PM PDT

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருள்களின் விற்பனையை வணிகர்கள் நிறுத்திக்கொண்டால் அதை முழுமையாக ஒழித்துவிடலாம் என்றார் ஆலங்குடி பேரூராட்சித் தலை

தென்கிழக்கு ஆசிய கூட்டமைப்பினருக்கு வேளாண் பயிற்சி

Posted: 06 Sep 2014 12:42 PM PDT

புதுக்கோட்டை அருகேயுள்ள கொழுஞ்சி உயிர்ச்சூழல் பண்ணையில் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு சுயச்சார்பு வேளாண் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

சிவபுரம் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு நிறைவு

Posted: 06 Sep 2014 12:42 PM PDT

புதுக்கோட்டை அருகே சிவபுரம் ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியில் மேலாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு சனிக்கிழமை நிறைவடைந்தது.

செப். 9 -ல் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 06 Sep 2014 12:42 PM PDT

முதியோர்கள் அனைவருக்கும் இலவச பேருந்துப் பயண அட்டை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்

தஞ்சாவூரில் கொலு பொம்மைகள் கண்காட்சி தொடக்கம்

Posted: 06 Sep 2014 12:41 PM PDT

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள சங்கீத மஹாலில் நவராத்திரி கொலு பொம்மைகள் சிறப்பு விற்பனை கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™