Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


தேவர் மகன், விருமாண்டிக்கு பின் மீண்டும் வேட்டி, சட்டையில் கமல்

Posted:

கிராமத்து பின்னணியில் அமைந்த படங்களில் கமல் நடித்து ரொம்ப நாட்களாகி விட்டது' என்ற, ரசிகர்களின் ஏக்கம், விரைவில் தீரப்போகிறது. 'தேவர் மகன், விருமாண்டி' ஆகிய படங்களை தொடர்ந்து, தற்போது, மலையாளப் படமான 'த்ரிஷ்யம்' ரீ - மேக்கில் உருவாகும், 'பாபநாசம்' படத்தில், மீண்டும் வேட்டி, சட்டையில் அசத்த காத்திருக்கிறார், கமல். இந்த ...

திருமணம் தள்ளி போவது ஏன்? ரகசியத்தை உடைத்தார் பிபாஷா

Posted:

நடிகை பிபாஷா பாசுவிடம், 'உங்களுடன் நடிக்க வந்த பல நடிகைகள் திருமணம் செய்து விட்டனர். நீங்கள் காலதாமதம் செய்து வருவது ஏன்' என, சிலர் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'நான் திருமண பந்தத்தை மதிக்கிறேன். ஆனால், நான் ஒவ்வொரு முறை திருமணத்திற்கு தயாராகும் போதும், ஏதாவது நல்ல கதைகளில் நடிக்க வாய்ப்பு கிடைத்து விடுகிறது. இதனால் தான், ...

அழகி போட்டியில் ஜெயித்தேன்:மோனல் கஜ்ஜார் பெருமிதம்

Posted:

உற்சாகத்தில் மிதக்கிறார், மோனல் கஜ்ஜார். ஒரே நேரத்தில், இவர் நடித்த இரண்டு படங்கள் வெளியாகி இருப்பது தான், இந்த உற்சாகத்துக்கு காரணம். ஒன்றிரண்டு தெலுங்கு படங்களில் மட்டுமே தலை காட்டியுள்ள இந்த, குஜராத் குல்பி ஐசை, கோடம்பக்கம், அலேக்காக துாக்கி வந்து விட்டது. பொதுவாக, தமிழ் ரசிகர்கள், பப்ளிமாஸ் நடிகைகளை அதிகம் விரும்புவதால், ...

முத்த காட்சியில் நடிப்பதில்தவறில்லை என்கிறார் ரெஜினா

Posted:

'அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா' உட்பட சில படங்களில் நடித்தவர் ரெஜினா. அதன் பின், கிளாமர் கதைகளாக வந்ததால், தமிழே வேண்டாமென்று தெலுங்கிற்கு சென்று விட்டார்.ஆனால், தற்போது ரவி தேஜாவுடன் நடித்துள்ள, 'பவர்' படத்தில், முத்தக் காட்சியில் நடித்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ரெஜினா.இதுபற்றி அவர் கூறும்போது, 'கிளாமராக ...

'ஐ' படத்தின் கதை என்ன?பரபரப்பான தகவல்கள்

Posted:

பல கோடி ரூபாய் செலவில் தயாராகியுள்ள, 'ஐ' படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சமீபத்தில் சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. ஹாலிவுட் நடிகர் அர்னால்டை இந்த விழாவுக்கு அழைத்து வந்தது, பாலிவுட்காரர்களை வாய் பிளக்க வைத்து விட்டது. இதனால், இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும்' என்பது தான், தற்போது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. ...

புரோக்கர்களை தேடும் இலியானா ஐதராபாத் வீட்டை விற்க முடிவு

Posted:

மும்பை நடிகையான இலியானா, தெலுங்கில் பிசியாக நடித்து வந்த போது, மும்பையிலிருந்து இடம் பெயர்ந்து, ஐதராபாத்தில் சொந்தமாக விடு வாங்கி குடியேறினார். அதையடுத்து, தமிழ், இந்தியில் நடித்த போதும், ஐதராபாத்தில் தங்கியிருந்து தான், நடித்து வந்தார். 'பர்பி' படத்திற்கு பின், இந்தியில் தொடர்ந்து நடித்துவரும் இலியானாவுக்கு, அங்குள்ள ...

கணேஷ் ஆச்சாரியா படத்தில் ஆடிய அக்ஷ்ய் குமார்

Posted:

அக்ஷ்ய் குமாரும், நடன அமைப்பாளர் கணேஷ் ஆச்சார்யாவும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. 1996ம் ஆண்டு வெளிவந்த மைந்தன்-இ-ஜங்க் படத்தில் தான் அக்ஷ்ய் குமாரும், கணேஷ் ஆச்சார்யாவும் இணைந்து பணியாற்றினர். அப்போது அவர்களுக்கு துவங்கிய நட்பு இப்போது வரை தொடர்கிறது. இந்நிலையில் கணேஷ் ஆச்சார்யா, தற்போது இயக்கி வரும் புதிய ...

34 வருடங்களுக்கு பிறகு சின்னத்திரைக்கு திரும்பினார் ஏ.ஆர்.ரகுமான்

Posted:

1980ம் ஆண்டில் ஒண்டர் பலூன் என்ற சின்னத்திரை தொடரில் நடித்தார் ஏ.ஆர்.ரகுமான். அதன் பிறகு அவர் சின்னத்திரை பக்கம் வரவில்லை. தற்போது, அதாவது 34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பி உள்ளார். அஷூதோஸ் கவுரிகர் இயக்கும் எவரெஸ்ட் என்ற சின்னத்திரை நிகழ்ச்சிக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். அஷூதோஸ் இயக்கிய பல படங்களுக்கு ...

மருத்துவ கல்லூரிகளின் மறுமுகம் காட்டும் படம்

Posted:

புதுமுக இயக்குனர் நிரஞ்சன் இயக்கி ஹீரோவாக நடிக்கும் படம் நீதானே ராஜா. ஹீரோயினாக கேரள நாட்டிளம் பெண்களுடனே படத்தில் நடித்த காயத்ரி நடிக்கிறார். மதராச பட்டினம் படத்தில் நடித்த லீமா தங்கையாக நடிக்கிறார். பாலாசிங், சம்பத்ராம், வெள்ளைதேவன், குண்டுரவி உள்பட பலர் நடிக்கிறார்கள். தென்காசி, குற்றாலம், பாபாநாசம் பகுதிகளில் படப்பிடிப்பு ...

எடிசன் திரைப்பட விழாவில் நான் சிவப்பு மனிதன்

Posted:

மலேசியாவில் உள்ள மலாக்கா மாநிலத்தில் வருகிற அக்டோபர் 2 ந் தேதி முதல் 5ந் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. மலாக்கா தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியாகும். ஆண்டு தோறும் இங்கு நடக்கும் எடிசன் சர்வதேச திரைப்பட விழா மலேசியா நாட்டின் மிகப்பெரிய திரைப்பட விழாவாகும். இதில் இந்த ஆண்டு நான் சிவப்பு மனிதன் படம் திரையிடப்படுகிறது. இந்த ...

கத்தி ஆடியோ விழாவிற்கு பலத்த பாதுகாப்பு

Posted:

லைகா நிறுவனம் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் கத்தி. இந்த படத்தின் ஆடியோ விழா இன்று சென்னையில் நடக்கிறது. தனியார் டிவி ஒன்று, விழாவின் ஒளிபரப்பு உரிமத்தையும் படத்தையும் வாங்கி உள்ளது. இதனிடையே கத்தி படத்திற்கு தமிழ் அமைப்புக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளதால், விழா நடைபெறும் அரங்கில் பலத்த ...

ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது - சோனம் கபூர் பேட்டி!

Posted:

பாலிவுட் நடிகர் அனில் கபூரின் வாரிசு சோனம் கபூர். பாலிவுட்டின் ஸ்டைலான, திறமையான நடிகை. குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்துவிட்டார். இவருக்கு பாலிவுட்டின் டைவா என்ற பட்டமே உள்ளது. கூப்சூரத் படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருந்த சோனம் கபூர் அப்படம் பற்றி தெரிவித்திருப்பதாவது...

கூப்சூரத் குடும்ப ...

ஜீவாவுக்கு யூ சான்றிதழ்

Posted:

பாண்டியநாடு படத்துக்கு பிறகு சுசீந்திரன் இயக்கி உள்ள படம் ஜீவா. இதில் விஷ்ணு விஷால் நாயகனாகவும், ஸ்ரீதிவ்யா நாயகியாகவும் நடித்துள்ளனர். வெண்ணிலா கபடி குழு படத்தில் கபடி விளையாட்டின் உள், வெளி அரசியலை கதை களமாக வைத்ததைபோல ஜீவாவில் கிரிக்கெட் விளையாட்டை கதை களமாக வைத்திருக்கிறார். கிரிக்கெட் அணியில் சேர ஒரு நடுத்தர இளைஞன் படும் ...

டிசைனிங் ஸ்டூடியோ தொடங்கினார் லேகா வாஷிங்டன்

Posted:

சின்னத்திரை தொகுப்பாளினியாக இருந்து நடிகை ஆனவர் லேகா வாஷிங்டன். உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், வா குவாட்டர் கட்டிங், கல்யாண சமையல் சாதம் உள்பட பல படங்களில் நடித்தார்.
தற்போது லேகா வாஷிங்டன் மும்பை பந்தாரா பகுதியில் டிசைனிங் ஸ்டூடியோ ஒன்றை தொடங்கியிருக்கிறார். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாடிக்ககையாளர்கள் விரும்பும் ...

புறம்போக்கு படத்தின் டைட்டில் திருத்தம்

Posted:

பேராண்மை படத்திற்கு பிறகு எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் படம் புறம்போக்கு. இதில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. சென்னை பின்னி மில்லில் பிரம்மாண்ட ஜெயில் ஷெட் போடப்பட்டு அதில் கிளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புறம்போக்கு ...

அர்னால்ட் வெளிநடப்புக்கு பாபி சிம்ஹா, பாடி பில்டர்கள் காரணமா?

Posted:

சில தினங்களுக்கு முன் நடைபெற்ற ஐ இசைவெளியீட்டுவிழாவில் இசையை வெளியிடாமலே பாதியோடு கிளம்பிப்போனார் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட்.
அவரது வெளிநடப்பால் ஐ விழாவுக்கு வந்த பார்வையாளர்கள் மட்டுமல்ல, திரைப்படத்துறையை சேர்ந்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
அர்னால்ட் புகழ்பெற்ற நடிகர். கலிபோர்னியா மாநில கவர்னராக இருந்தவர். தவிர ஐ ...

நாளை 9 படங்கள் ரிலீஸ்!

Posted:

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் படங்கள் ரிலீசாகிக் கொண்டிருக்கிறது. 2014ம் ஆண்டில் இதுவரை 200 படங்கள் ரிலீசாகிவிட்டது. வாரத்துக்கு குறைந்தது 5 படங்கள் முதல் 10 படங்கள் ரிலீசாகிறது. நாளை (செப் 19) 9 படங்கள் ரிலீசாகிறது.

நாளை ரிலீசாகும் படங்களில் அரண்மணை மட்டுமே பெரிய பட்ஜெட் படம். சுந்தர்.சி இயக்கியுள்ள திரில்லர் ...

ஹர்மான்-பிபாசா இடையே காதலா?

Posted:

பாலிவுட் நடிகை பிபாசா பாசுவும், நடிகர் ஹர்மான் பட்டும் இணைந்து மும்பையை தலைமையிடமாகக் கொண்டு உடற்பயிற்சி கூடம் ஒன்றை துவக்க உள்ளதாக செய்தி வெளியான சில நாட்களிலேயே, அவர்கள் இருவருக்கும் இடையே காதல் இருப்பதாகவும் வதந்திகள் கசிய துவங்கி உள்ளன.
பிபாசா-ஹர்மான் துவங்க திட்டமிட்டிருப்பதை போன்றே, பிபாசாவின் முன்னாள் காதலர் டினோ ...

பேங் பேங் பாடல்கள் தமிழில் வெளியீடு

Posted:

ஹிருத்திக் ரோஷன், கத்ரினா கைஃப் நடித்துள்ள புதிய இந்திப் படம் பேங் பேங். சஞ்சய் கோஷின் கதையை சித்தார்த் ராஜ் ஆனந்த இயக்கி உள்ளார். விஷால் சக்கார் பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். சலீம் சுலைமான் பின்னணி இசை அமைத்துள்ளார். பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. ஆக்ஷன் மற்றும் இன்னிசை சித்திரமான இந்தப் படத்தின் பாடல்கள் சமீபத்தில் ...

நஸ்ரூதின் ஷா சுயசரிதை எழுத காரணம் என்ன.?!

Posted:

பாலிவுட்டின் மூத்த நடிகர் நஸ்ரூதின் ஷா. 64 வயதான இவர் சுமார் 200 படங்களில் நடித்துவிட்டார். சமீபத்தில் இவர் தனது சுயசரிதையை புத்தகமாக வெளியிட்டுள்ளார். ''அண்ட் தென் ஒன் டே'' என்ற பெயரில் வெளியாகி இருக்கும் இந்த புத்தகத்தில், நஸ்ரூதின் ஷா பற்றிய முழுமையாக தகவல்கள் இல்லை. தனது வாழ்வில் நிகழ்ந்த ஏற்ற-இறக்கங்கள், தனது முதல் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™