மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மராட்டியத்தில் பாஜக–சிவசேனா கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறும்: கருத்துக் கணிப்பில் தகவல்
- இந்தியாவுக்கு நல்ல நேரம் வரவில்லை-கண்ணீர் வடிக்கும் நேரம்தான் வந்துள்ளது: மோடி மீது மம்தா தாக்கு
- நடிகை மைத்ரியை திருமணம் செய்யவில்லை: சதானந்தகவுடா மகன் போலீசில் வாக்கு மூலம்
- 9 மாநிலங்களில் இடைத்தேர்தல்: விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு
- டெல்லியில் கடத்தல் நாடகமாடி குடும்பத்தாரிடம் ரூ.2 லட்சம் பறித்த வாலிபர் கைது
- காஷ்மீர் வெள்ளத்தில் மேலும் 100–க்கும் மேற்பட்ட மலையாளிகள் சிக்கித் தவிப்பு
- கிணற்றுக்குள் விஷவாயு தாக்கி போலீஸ்காரர் உள்பட 3 பேர் பலி
- இதய ஆபரேஷனுக்கு பின்னர் குணமடைந்த லல்லு இன்று வீடு திரும்புகிறார்
- இந்தியாவில் 100 பில்லியன் டாலர் திட்டங்களுக்கு முதலீடு செய்ய சீனா திட்டம்
- இத்தாலி கடற்படை வீரர் சிகிச்சைக்காக தாய்நாடு செல்ல சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
- காஷ்மீர் வெள்ளம், தேசிய பேரழிவாக அறிவிக்கப்படுமா? மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட்டு அறிக்கை
- உத்தரபிரதேசத்தில் போலீஸ் உடையில் வந்து நகைக்கடையில் ரூ.2 கோடி நகை–பணம் கொள்ளை
- சுத்தமான இந்தியா இயக்கம் அக்டோபர் 2–ந்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
- அல்கொய்தா அச்சுறுத்தல் பற்றி கவலைப்பட தேவை இல்லை: மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்
- மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
- கங்கையை சுத்தமாக்குவோம் என்ற வலைதளத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உமாபாரதி
- காஷ்மீர் வெள்ள பாதிப்பு: பாலியல் தொழிலாளர்கள் நிதி உதவி
- மகாராஷ்டிரா-அரியானா மாநில சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிப்பு
- ஆயுதங்களை ஒப்படைத்தால் நக்சல்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயார்: ராஜ்நாத் சிங்
- வரதட்சணை கொண்டு வராத மனைவியை விஷம் வைத்துக் கொன்ற வக்கீல் கைது
| மராட்டியத்தில் பாஜக–சிவசேனா கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறும்: கருத்துக் கணிப்பில் தகவல் Posted: 12 Sep 2014 10:45 PM PDT மராட்டிய மாநில சட்ட சபைக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 15–ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 20–ந்தேதி தொடங்குகிறது. தேர்தல் முடிவுகள் அக்டோபர் 19–ந்தேதி தெரியவரும். 288 இடங்களை கொண்ட மராட்டிய மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் – தேசிய வாத காங்கிரசின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. காங்கிரஸ் |
| இந்தியாவுக்கு நல்ல நேரம் வரவில்லை-கண்ணீர் வடிக்கும் நேரம்தான் வந்துள்ளது: மோடி மீது மம்தா தாக்கு Posted: 12 Sep 2014 10:38 PM PDT நாட்டுக்கு நல்ல நேரம் வர வேண்டுமானால் பா.ஜ.க.வுக்கு வாக்களியுங்கள் என்று கூறி கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது வாக்கு சேகரித்த பிரதமர் நரேந்திர மோடியை நையாண்டி செய்யும் விதமாக, தற்போது நாட்டுக்கு வந்திருப்பது நல்ல நேரமல்ல; கண்ணீர் விட்டு கதறியழும் நேரம் தான் வந்துள்ளது என்று மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பாணர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். தனியார் டி.வி. ஒன்றுக்கு பேட்டியளித்த மம்தா கூறியதாவது:- ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் 'நல்லகாலம் வரப்போகுது', 'நல்லகாலம் வரப்போகுது' என்ற முழக்கங்கள் கேட்டன். ஆனால், இப்போது இந்திய மக்களுக்கு கண்ணீர் சிந்தி கதறியழும் நேரம்தான் வந்துள்ளது. |
| நடிகை மைத்ரியை திருமணம் செய்யவில்லை: சதானந்தகவுடா மகன் போலீசில் வாக்கு மூலம் Posted: 12 Sep 2014 10:33 PM PDT மத்திய ரெயில்வே மந்திரி சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடாவுக்கு சமீபத்தில் ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில் கடந்த 24–ந்தேதி நடிகை மைத்ரி, பெங்களூர் போலீசில் ஒரு புகார் செய்தார். அதில், கார்த்திக் கவுடா என்னை ரகசிய திருமணம் செய்து கொண்டார். அதைச் சொல்லி பாலியல் பலாத்காரம் செய்தார். இப்போது வேறு பெண்ணை திருமணம் செய்து என்னை ஏமாற்ற திட்டமிட்டுள்ளார். |
| 9 மாநிலங்களில் இடைத்தேர்தல்: விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு Posted: 12 Sep 2014 10:19 PM PDT பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி, முலாயம் சிங் யாதவ், சந்திரசேகரராவ் ஆகிய மூவரும் தலா 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதில் மோடி வதோதரா (குஜராத்), முலாயம்சிங் யாதவ் மணிப்புரி (உ.பி.), சந்திரசேகரராவ் மேடக் (தெலுங்கானா) தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர். |
| டெல்லியில் கடத்தல் நாடகமாடி குடும்பத்தாரிடம் ரூ.2 லட்சம் பறித்த வாலிபர் கைது Posted: 12 Sep 2014 10:15 PM PDT டெல்லியின் க்ரிஷன் விகார் பகுதியைச் சேர்ந்தவர், சாகர் குமார்(22). தனியார் மருந்து கம்பெனி ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றிவந்த இவர், உத்தரப்பிரதேசம் மாநிலம், மோடி நகரில் வசிக்கும் தனது தங்கையை காணச் சென்றார். மறுநாளே டெல்லி திரும்பி விடுவதாக கூறிச் சென்ற சாகர் குமார் வீடு வந்து சேரவில்லை. அவரை தொடர்பு கொள்ள குடும்பத்தினர் முயற்சித்தபோது 3 செல்போன்களும் அணைக்கப்படிருந்தது. இரு நாட்களுக்குப் பின்னர், செல்போன் மூலம் தனது குடும்பத்தை தொடர்பு கொண்ட சாகர் குமார், தன்னை நான்கைந்து பேர் கண்ணைக் கட்டி கடத்திவந்து ஒரு தனியறையில் அடைத்துவைத்து |
| காஷ்மீர் வெள்ளத்தில் மேலும் 100–க்கும் மேற்பட்ட மலையாளிகள் சிக்கித் தவிப்பு Posted: 12 Sep 2014 09:52 PM PDT காஷ்மீரில் கடந்த வாரம் பெய்த வரலாறு காணாத மழையால் மாநிலமே ஸ்தம்பித்தது. மலைக்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியதோடு சுற்றுலா தலங்களும் சிதைந்தன. இதில் காஷ்மீருக்கு சென்ற ஏராளமான சுற்றுலா பயணிகள் சிக்கிக் கொண்டனர். வெள்ளத்தில் பலர் இழுத்துச் செல்லப்பட்டும், தண்ணீரில் மூழ்கியும் இறந்து போனவர்கள் பற்றிய தகவலை மாநில நிர்வாகம் சேகரித்து |
| கிணற்றுக்குள் விஷவாயு தாக்கி போலீஸ்காரர் உள்பட 3 பேர் பலி Posted: 12 Sep 2014 08:51 PM PDT சத்தீஸ்கர் மாநிலம், கவர்தா மாவட்டத்தில் உள்ள ராஜ்நந்கான் கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் பழுதாகிப் போன ஒரு மின்சார மோட்டாரை கிணற்றில் இருந்து மேலே ஏற்றி சரிபார்க்கும் முயற்சியில் நேற்று அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கிணற்றில் இருந்து திடீரென்று வெளிப்பட்ட விஷவாயு தாக்கியதில் உதவி போலீஸ் காண்ஸ்டபிள் கமல் மார்கம், சண்ட் பரார், |
| இதய ஆபரேஷனுக்கு பின்னர் குணமடைந்த லல்லு இன்று வீடு திரும்புகிறார் Posted: 12 Sep 2014 08:24 PM PDT ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரியும், ரெயில்வே துறை மந்திரியுமான லல்லு பிரசாத் யாதவ்வுக்கு கடந்த மாதம் 27-ம் தேதி மும்பையில் உள்ள ஏசியன் இதய சிகிச்சை மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. சுமார் 6 மணி நேரம் நீடித்த இந்த ஆபரேஷன் மூலம் அவரது இதயத்தில் 3 மில்லி மீட்டர் அளவுக்கு ஏற்படிருந்த ஓட்டையை பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் ராமகண்டா பாண்டா தலைமையிலான 20 டாக்டர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் வெற்றிகரமாக அடைத்தனர். இதனையடுத்து, கடந்த இரு வாரங்களாக மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த லல்லு, பூரண குணமடைந்ததையடுத்து இன்று பிற்பகல் 3 மணியளவில் அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிறார். |
| இந்தியாவில் 100 பில்லியன் டாலர் திட்டங்களுக்கு முதலீடு செய்ய சீனா திட்டம் Posted: 12 Sep 2014 08:04 PM PDT தஜிகிஸ்தான், மாலத்தீவு மற்றும் இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த மாதம் 17ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திற்கு வருகை தருகின்றார். பிரதமரது பிறந்த நாளான அன்று அவருடன் மேற்கொள்ளவிருக்கும் சந்திப்பில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 100 பில் |
| இத்தாலி கடற்படை வீரர் சிகிச்சைக்காக தாய்நாடு செல்ல சுப்ரீம் கோர்ட்டு அனுமதி Posted: 12 Sep 2014 05:26 PM PDT கேரள கடற்கரையோரம் கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 2 பேரை, இத்தாலி கப்பலில் இருந்தவர்கள் சுட்டுக்கொன்றனர். இது தொடர்பாக இத்தாலி கடற்படை வீரர்களான மாசிமிலியனோ லத்தோர், சல்வத்தோர் ஜிரோன் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். |
| காஷ்மீர் வெள்ளம், தேசிய பேரழிவாக அறிவிக்கப்படுமா? மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட்டு அறிக்கை Posted: 12 Sep 2014 05:04 PM PDT காஷ்மீரில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு பலத்த மழை பெய்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், காஷ்மீர் மழை சேதத்தை இயற்கை பேரிடராகவும், தேசிய பேரழிவாகவும் அறிவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான |
| உத்தரபிரதேசத்தில் போலீஸ் உடையில் வந்து நகைக்கடையில் ரூ.2 கோடி நகை–பணம் கொள்ளை Posted: 12 Sep 2014 04:15 PM PDT உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடைக்கு நேற்று முன்தினம் இரவு போலீஸ் உடை அணிந்த 6 பேர் ஒரு காரில் வந்தனர். கடையின் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்வதற்காக வந்ததாக கூறிய அவர்கள், கடையில் இருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். |
| சுத்தமான இந்தியா இயக்கம் அக்டோபர் 2–ந்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் Posted: 12 Sep 2014 03:55 PM PDT நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றது முதல் முக்கிய பொதுநலத் திட்டங்களை அறிமுகம் செய்வதற்கு முன்னோட்டமாக பொதுமக்களின் கருத்துகளை இணைய தளம் மூலம் கேட்டறிந்து வருகிறார். கடந்த மாதம் சுதந்திர தினத்தன்று உரையாற்றியபோது தற்போதுள்ள திட்டக் கமிஷனை அகற்றிவிட்டு வேறு புதிய அமைப்பை ஏற்படுத்துவதற்கான யோசனைகளை அவர் பொதுமக்களிடமிருந்து கேட்டு இருந்தார். |
| அல்கொய்தா அச்சுறுத்தல் பற்றி கவலைப்பட தேவை இல்லை: மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் Posted: 12 Sep 2014 01:35 PM PDT மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசில் உள்துறை மந்திரியாக உள்ள ராஜ்நாத் சிங், தனது அமைச்சகம் 100 நாள் நிறைவு செய்திருப்பதையொட்டி டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- உள்துறை அமைச்சகத்தில் பணி ஆற்றுவது என்பது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி போன்றதல்ல. ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போன்றதும் அல்ல. |
| மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு Posted: 12 Sep 2014 12:56 PM PDT மும்பை ஐகோர்ட்டு சமீபத்தில் ஒரு பரபரப்பு தீர்ப்பு அளித்தது. ஐ.ஏ.எஸ். பணியிடங்களில் நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கும், மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கும் (யு.பி.எஸ்.சி.) உத்தரவிட்டது. |
| கங்கையை சுத்தமாக்குவோம் என்ற வலைதளத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உமாபாரதி Posted: 12 Sep 2014 11:23 AM PDT மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி கங்கையை சுத்தமாக்குவோம் என்ற வலைதளத்தை இன்று தொடங்கி வைத்தார். பொதுமக்கள் இந்த இணையதளத்தை பயன்படுத்தி கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று அமைச்சர் தெரிவித்தார். மக்கள் தங்கள் ஆலோசனைகளை இதன் மூலம் கொடுக்க முன் வரவேண்டும் என்று தெரிவித்தார். |
| காஷ்மீர் வெள்ள பாதிப்பு: பாலியல் தொழிலாளர்கள் நிதி உதவி Posted: 12 Sep 2014 11:00 AM PDT காஷ்மீரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மராட்டிய மாநிலம் அகமதுநகர் பகுதியை சேர்ந்த பாலியல் தொழிலாளர்கள் நிதி உதவி அளித்து உள்ளனர். பாலியல் தொழிலாளர்களிடம் இருந்து வசூல் செய்யப்பட்ட ரூ.10 ஆயிரத்து 321–யை தன்னார்வ தொண்டு நிறுவன அறங்காவலர் சினேகலாயா, அகமது நகர் துணை கலெக்டர் ராஜேந்திர குமார் பாட்டீலிடம் வழங்கினார். |
| மகாராஷ்டிரா-அரியானா மாநில சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிப்பு Posted: 12 Sep 2014 04:49 AM PDT மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களில் வரும் அக்டோபர் 15-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:- மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 8-ம் தேதி நிறைவடைகிறது. இதேபோல் அரியானா சட்டசபையின் பதவிக்காலம் அக்டோபர் 27-ம்தேதி முடிகிறது. |
| ஆயுதங்களை ஒப்படைத்தால் நக்சல்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயார்: ராஜ்நாத் சிங் Posted: 12 Sep 2014 04:28 AM PDT மாவோயிஸ்டுகள் வன்முறையை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ஆயுதங்ளை ஒப்படைத்தால் அவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கூறினார். உள்துறை அமைச்சகத்தில் தனது 100 நாட்கள் பணி நிறைவு பெற்றதையொட்டி டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது |
| வரதட்சணை கொண்டு வராத மனைவியை விஷம் வைத்துக் கொன்ற வக்கீல் கைது Posted: 12 Sep 2014 02:31 AM PDT மகாராஷ்ட்டிர மாநிலம், லகாட்கஞ்ச் பகுதியை சேர்ந்த சோனாலி (26) என்ற திருமணமான பெண் இரு தினங்களுக்கு முன்னர் விஷ பாதிப்பினால் நாக்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அந்த பெண் இறந்து விடவே, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் குடும்பத்தினர், தங்கள் மகளை விஷம் வைத்துக் கொன்று விட்டதாக உள்ளூர் போலீசில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர். இதனையடுத்து, அந்த பெண்ணின் பிரேதத்தை பார்த்த போலீசார், தலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கிய அடையாளம் இருப்பதை கண்டனர். அவரை தாக்கி, வற்புறுத்தி விஷம் குடிக்க வைத்திருக்கக் கூடும் என சந்தேகித்த போலீசார், பிரேதத்தை பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இறந்த பெண்ணின் கணவரான வக்கீல் தொழில் செய்யும் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |