Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

Posted: 20 Sep 2014 10:48 PM PDT

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஏழுமலையானை தரிசிக்க தமிழக பக்தர்கள் அதிக அளவில் திருப்பதியில் குவிந்தனர். புரட்டாசி மாதம் திருப்பதி ஏழுமலையானுக்கு உகந்த மாதம். புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் ஏழுமலையானுக்கு விரதமிருந்து அவரை வழிபடுவது தமிழர்களிடையே இருக்கும் பழமையான வழக்கம். திருமலைக்கு செல்ல முடியாத நிலையில் இருக்கும் தமிழக பக்தர்கள் தங்கள் ஊரில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சனிக்கிழமைகளில் சென்று வழிபாடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் புரட்டாசி முதல் சனிக்கிழமையான நேற்று ஏழுமலையானை தரிசிக்க தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் இருந்து

இந்திய எல்லையில் சீன ராணுவ வீரர்கள் தொடர்ந்து ஊடுருவல்

Posted: 20 Sep 2014 10:43 PM PDT

இந்தியாவின் வடக்கு எல்லையில் உள்ள லடாக் பகுதியில் இந்தியா – சீன இடையே எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. சமீபத்தில் சீன ராணுவத்தின் சீன மக்கள் விடுதலை ராணுவம் மற்றும் மக்கள் ஆயுத போலீஸ் ஆகிய 2 படைப் பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் 100–க்கும் மேற்பட்டவர்கள் வடகிழக்கு லடாக் பகுதியின் சூமார் என்ற இடத்தில் ஊடுருவலில் ஈடுபட்டனர்.

திருப்பதியில் தேவஸ்தான பஸ் முன்பு பாய்ந்து பக்தர் தற்கொலை

Posted: 20 Sep 2014 10:36 PM PDT

திருப்பதியில் உள்ள நந்தனம் தங்கும் விடுதி அருகே பக்தர் ஒருவர் நின்றிருந்தார். அந்த பக்தர், அந்த வழியாக வந்த ஒரு லாரியின் மீது திடீரென பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். அந்த நேரத்தில் டிரைவர் திடீரென பிரேக் போட்டு லாரியை நிறுத்தியதால், அந்த பக்தர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆத்திரம் அடைந்த லாரி டிரைவர், தற்கொலைக்கு முயன்ற பக்தரை திட்டி எச்சரித்து அனுப்பி வைத்தார். பின்னர் சிறிது நேரதுக்கு பிறகு அந்த வழியாக திருமலை– திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான இலவச பஸ் ஒன்று வந்தது. மேற்கூறிய அதே இடத்தில் நின்றிருந்த அந்த பக்தர் இலவச பஸ் முன்பு திடீரென

குரோர்பதி டி.வி. நிகழ்ச்சியில் ரூ.7 கோடி பரிசு பெற்ற சகோதரர்கள்

Posted: 20 Sep 2014 10:09 PM PDT

நடிகர் அமிதாப்பச்சன் தனியார் தொலைக்காட்சியில் 'கான் பனேகா குரோர்பதி' என்ற ரியாலிட்டி ஷோ நடத்தி வருகிறார். இதில் அமிதாப்பச்சன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து முன்னேறிச் செல்பவர்களுக்கு முதல் பரிசாக ரூ.7 கோடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதலில் ஒரு கோடியாக இருந்த பரிசுத்தொகை மற்ற டி.வி.க்களும் போட்டி போட்டு பரிசுத் தொகையை உயர்த்தியதால் அமிதாப் பச்சனும் தனது நிகழ்ச்சியில் ரூ.7 கோடியாக பரிசுத் தொகையை உயர்த்தினார்.

விண்வெளி ஆராய்ச்சியில் சீனாவுடன் இணைந்து செயல்பட இந்தியா ஒப்பந்தம்

Posted: 20 Sep 2014 07:41 PM PDT

கடந்த 1960களில் இருந்து விண்வெளி ஆராய்ச்சியில் பல நாடுகளுடன் ஒத்துழைத்துள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ தற்போது சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடனும் இணைந்து செயல்படும்விதத்தில் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. செவ்வாய்க் கிரகத்தின் சுற்றுப்பாதையில் மார்ஸ் விண்கலம் இணையவிருப்பதற்கு

பத்திரிகை விற்பனை தணிக்கை குழுவின் தலைவராக அமித் மாத்யூ தேர்வு

Posted: 20 Sep 2014 05:13 PM PDT

பத்திரிகை விற்பனை தணிக்கை குழுவின் (ஏ.பி.சி.) 2014- 2015-ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். குழுவின் தலைவராக மலையாள மனோரமா ஆசிரியரும், இயக்குனருமான அமித் மாத்யூ ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவராக ஐ.பி.ஜி. மீடியாபிராண்ட்சின் இந்தியாவுக்கான

சொத்து தகராறில் முன்னாள் ராணுவ வீரரை மனைவியும் மகளும் அடித்தே கொன்ற கொடுமை

Posted: 20 Sep 2014 05:01 PM PDT

உத்தரப்பிரதேசம் மாநிலம், அமேதி மாவட்டத்தில் உள்ள கோச்சிட் கிராமத்தை சேர்ந்தவர், ஜப்பார். முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். இரு மகள்களுக்கும் திருமணமாகி மூத்த மகள் கணவரது வீட்டிலும், இளைய மகள் கணவருடன் தந்தையின் வீட்டிலும் வாழ்ந்து வருகின்றனர். ஜப்பாரின் பெயரில் உள்ள சொத்துக்களை எல்லாம் இளைய மகளான ஷஹீனின் பெயருக்கு எழுதித்தரும்படி மனைவி மஹேஜபானும் ஷஹீனும் அவரை வற்புறுத்தி வந்துள்ளனர்.

சிறையில் வேலை செய்து வரும் நடிகர் சஞ்சய்தத்தின் தினசரி சம்பளம் 15 ரூபாய் உயர்வு

Posted: 20 Sep 2014 03:53 PM PDT

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவர் பேப்பர் பைகள் செய்யும் வேலை செய்து வருகிறார். இதற்காக அவருக்கு தினசரி சம்பளமாக 25 முதல் 30 ரூபாய் வரை வழங்கப்பட்டு வந்தது.

அவதூறு வழக்கில் கெஜ்ரிவால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவு

Posted: 20 Sep 2014 03:17 PM PDT

முன்னாள் மத்திய மந்திரி கபில்சிபலின் மகன் அமித் சிபல். இவர், தனது தந்தை மத்திய தொலைத் தொடர்பு மந்திரியாக பதவி வகித்தபோது அவருடைய செல்வாக்கை பயன்படுத்தி ஆதாயம் அடைந்ததாக ஆம் ஆத்மி தலைவர்கள் அரவிந்த் கெஜ்ரிவால், பிரசாந்த் பூஷண், மணிஷ் சிசோடியா, ஷாஜியா இல்மி ஆகியோர் குற்றம் சாட்டினர்.

ஒடிசாவில் மின்னல் தாக்கி மீனவ தம்பதியர் பலி

Posted: 20 Sep 2014 03:10 PM PDT

ஒடிசா மாநிலம், பலஸோர் மாவட்டத்தில் உள்ள கிர்டானியா என்ற கடலோர கிராமத்தைச் சேர்ந்த சுனி பேரா(60), அவரது மனைவி சந்தியாராணி பேரா(55) ஆகியோர் நேற்று மீன் பிடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது இடி, மின்னலுடன் பெருத்த மழை பெய்யத் தொடங்கியது. மழைக்கு பயந்து ஒரு ஓரமாக ஒதுங்கி நின்றிருந்த அவர்களின்மீது சக்தி வாய்ந்த மின்னல் பாய்ந்தது.

டெல்லி: மெட்ரோ ரெயில் பணியின் போது மண் சரிந்து எலெக்ட்ரீஷியன் பலி

Posted: 20 Sep 2014 02:57 PM PDT

டெல்லி மெட்ரோ ரெயில் நிலையம் அமைப்பதற்காக ஜாமியா நகர் பகுதியில் மின்தடம் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று மதியம் ஒரு பள்ளத்துக்குள் நின்றபடி ஒப்பந்த தொழிலாளியான துர்கேஷ் என்பவர் இந்த வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது மேல்பகுதியில் இருந்த மண் சரிந்ததில் பள்ளத்தினுள் சிக்கிக் கொண்ட துர்கேஷ் பரிதாபமாக பலியாகினார்.

இந்தியாவின் தங்கக் குரலாக மாற்றுத் திறனாளிப் பெண் தேர்வு

Posted: 20 Sep 2014 02:56 PM PDT

தனியார் பண்பலை வானொலி நிலையத்துடன் பிரபல இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனம் இணைந்து நடத்திய 'இந்தியாவின் தங்கக் குரலுக்கான தேடல்' போட்டியில் கொலகத்தாவை சேர்ந்த மாற்றுத் திறனாளிப் பெண்ணான சயானி பலிட் தேர்வு செய்யப்பட்டார். நாட்டின் திறமை மிக்க பாடகர்-பாடகிகளை வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தும் இந்தப் போட்டியில் பங்கேற்க 90 ஆயிரத்துகும் மேற்பட்டவர்கள் ஆர்வம் காட்டிய நிலையில் இறுதிச் சுற்று போட்டியில் 12 பேர் பங்கேற்றனர்.

125 சீட் தருவதை ஏற்க பா.ஜ.க. மறுப்பு: மராட்டியத்தில் சிவசேனா கூட்டணி முறிந்ததா?

Posted: 20 Sep 2014 12:57 PM PDT

288 இடங்களை கொண்ட மராட்டிய மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 15-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க.– சிவசேனா கூட்டணிக்கும் காங்கிரஸ்– தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. மராட்டியத்தில் பா.ஜ.க.– சிவசேனா இடையிலான தேர்தல் கூட்டணி கடந்த 25 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அந்த மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலின்போது பா.ஜ.க. அதிக இடங்களிலும் சட்டசபை தேர்தலின்போது சிவசேனா அதிக இடங்களிலும் போட்டியிடுவது வழக்கமாக உள்ளது

அரியானா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக சுஷ்மா சுவராஜின் தங்கை போட்டி

Posted: 20 Sep 2014 12:27 PM PDT

90 உறுப்பினர்களை கொண்ட அரியானா மாநில சட்டசபையின் பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதம் 27-ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், புதிய சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் பொதுத் தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 15-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் 43 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை பா.ஜ.க. தலைமை கடந்த 9-ம் தேதி அறிவித்தது. மீதமுள்ள 47 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் முன்னிலையில்

அவசர தரையிறக்கத்தின் போது இந்திய விமானப்படை விமானத்தில் தீ: 11 பேர் உயிர் தப்பினர்

Posted: 20 Sep 2014 11:46 AM PDT

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என். 32 ரக விமானம் நேற்று சில விமானப்படை வீரர்களை ஏற்றிக் கொண்டு பட்டிநாடாவில் இருந்து புறப்பட்டது. விமானிகள், விமான சிப்பந்திகள் உள்பட அதில் 11 பேர் இருந்தனர். ரஷ்ய தயாரிப்பான அந்த விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து, நேற்றிரவு சுமார் 8.30 மணியளவில் அரியானா மாநில தலைநகர் சண்டிகரில் உள்ள விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க முயன்றபோது, விமானியின் கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் ஓடுபாதையில் தாறுமாறாக ஓடியது.

கற்பழிப்பு புகார் கொடுப்பேன் என்று மிரட்டி சிறுவர்களிடம் பணம் பறிக்க முயன்ற பெண் கைது

Posted: 20 Sep 2014 10:59 AM PDT

ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ய்பூரின் புறநகரான சாங்கனெர் பகுதியில் வசித்துவரும் கொல்கத்தாவைச் சேர்ந்த சுமார் 27 வயது மதிக்கத்தக்க பெண், அப்பகுதியில் உள்ள சில போலீஸ் நிலையங்களில் கடந்த 9 மாத காலத்தில் 6 பேர் மீது கற்பழிப்பு, கற்பழிப்பு முயற்சி மற்றும் பாலியல் கொடுமை தொடர்பாக புகார் அளித்து வந்துள்ளார். நேற்றிரவு, தனது வீட்டுக்கு அருகே திருமணமாகாத 4 சிறுவர்கள் தனியாக வசிக்கும் அறைக்குள் நுழைந்த அந்தப் பெண் மது அருந்துவதற்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.

கேரள மாநிலத்தில் மது பார்கள் மூடலுக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி

Posted: 20 Sep 2014 10:51 AM PDT

கேரள அரசு புதிய கலால் கொள்கையை அறிவித்துள்ளது. அதன்படி அந்த மாநிலத்தில் 418 மதுக்கடை பார்களை மூட உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து பார் உரிமையாளர்கள் சார்பில் கேரள ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.

கருக்கலைப்புக்கு கோர்ட்டிடம் அனுமதி கோரிய 16 வயது சிறுமியின் மனு தள்ளுபடி

Posted: 20 Sep 2014 10:34 AM PDT

அரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா மாவட்டத்தை சேர்ந்த தங்களின் 16 வயது மகளை காணவில்லை என அவளது பெற்றோர் கடந்த ஏப்ரல் மாதம் போலீசில் புகார் அளித்தனர். அந்தப் பெண்ணை தேடிவந்த போலீசார், கடந்த ஜூலை மாதம் அவளை கண்டுபிடித்து, பெற்றோரிடம் ஒப்படைத்தனர். திருமண ஆசை காட்டி அந்த சிறுமியை வீட்டை விட்டு அழைத்துச் சென்று, மறைவான இடத்தில் தங்கவைத்து கற்பழித்ததாக சுர்ஜித் குமார் என்ற வாலிபர் உள்பட 7 பேர் மீது அம்பாலா மாவட்டத்தின் பிம்லேஷ் தன்வரில் உள்ள விரைவு நீதி மன்றத்தில்

அரசு செய்தி, விளம்பரங்களை டிடி, ஆல் இந்தியா ரேடியோவில் வெளியிட மத்திய அரசு முடிவு

Posted: 20 Sep 2014 10:18 AM PDT

பொதுத்துறை ஊடகமான தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோவில் அரசின் செய்திகள் மற்றும் விளம்பரங்களை அதிக அளவில் வெளியிட வேண்டும் என மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் மற்ற துறைகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறது. அரசின் செய்தி மற்றும் விளம்பரங்கள் பெரும்பாலும் தனியார் தொலைக்காட்சி ஊடகங்களுக்கே அதிகமாக தரப்படுவதாகவும், பொதுத்துறை

சாரதா நிதி நிறுவன ஊழல்: அசாம் பாடகருக்கு 25-ம் தேதி வரை நீதிமன்றக் காவல்

Posted: 20 Sep 2014 10:17 AM PDT

மேற்கு வங்காளத்தை மையமாக வைத்து சாரதா சிட்பண்ட் என்ற நிதி நிறுவனம் நாட்டின் பல பகுதிகளில் செயல்பட்டு வந்தது. இதன் உரிமையாளர் சுதிப்தா சென். இவரும், இவரின் நிறுவனத்தை சேர்ந்தவர்களும், முதலீட்டாளர்களிம் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. சலுகைககள், பரிசு பொருட்கள் அளிப்பதாக, பொதுமக்களிடம் சீட்டு பணம் வசூல் செய்து, மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த சாரதா நிறுவன தலைவர் சுதிப்தா சென் காஷ்மீரில் கைது செய்யப்பட்டு


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™