Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


எண் கணித முறையில் திருமண தேதி

Posted: 03 Sep 2014 03:43 PM PDT

  எண் கணித முறையில் திருமண தேதி : 1, 10, 19, 28&ந் தேதி பிறந்தவர்களின் திருமண தேதியின் கூட்டு எண் 1, 3 என இருக்க வேண்டும். 1, 10, 19, 3 12, 21 ஆகிய தேதிகள் இவர்களுக்கு அதிர்ஷ்டமான திருமண நாள். 2, 11, 20, 29&ந் தேதிகளில் பிறந்தவர்களின் திருமண தேதி கூட்டு எண் 1, 6 என இருக்க வேண்டும். 1, 10, 19, 6 15, 24 ஆகிய தேதிகள் இவர்களுக்கு அதிஷ்டமான திருமண எண். 3, 12, 21, 30&ந் தேதிகளில் பிறந்தவர்களின் திருமண தேதி கூட்டு எண் 3, 9, ஆகும். 3 12, 21, 9, 18, 27 ஆகிய தேதிகள் இவர்களுக்கு அதிர்ஷ்ட திருமண ...

ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது - டெசோ பாய்ஸ்

Posted: 03 Sep 2014 01:39 PM PDT

ஐ.நா. சபையில் ராஜபக்சே பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி சென்னையில் கருணாநிதி தலைமையில் டெசோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை தமிழர்களை காக்கும் வரை போராடுவோம் என்று கருணாநிதி தெரிவித்தார். ஆர்ப்பாட்டம் ஐ.நா. சபை கூட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்துகொள்ள அனுமதிக்கூடாது என்பதை வலியுறுத்தி, சென்னையில் டெசோ அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடத்தப்பட்டது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு டெசோ அமைப்பின் தலைவரும், தி.மு.க. தலைவருமான ...

அடேங்கப்பா... 79000 பதிவுகள் நம்ம சிவா தம்பி....

Posted: 03 Sep 2014 01:37 PM PDT

79000 பதிவுகள் கடந்த ஈகரையின் நிறுவனர் சிவா தம்பியை வாழ்த்தலாம் வாங்க... இப்போது தான் கவனித்தேன் மன்னிக்கவும் இன்னும் லட்சம் பதிவுகள் தொட வாழ்த்துகள் தம்பி

நையாண்டி

Posted: 03 Sep 2014 01:10 PM PDT

அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு

Posted: 03 Sep 2014 01:08 PM PDT

அந்தக் காலப் பெரிசுங்க குறும்பு "நாங்களெல்லாம் அந்தக் காலத்தில எங்க வீட்டுக்காரர் (கணவர்) பெயரைச் சொல்லவே மாட்டோம். இப்ப இருக்கிற பொண்ணுங்க விட்டுக்காரர் பேரை மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லிக்கிட்டு இருக்காளுங்க... என்ன நாகரீகமோ... என்ன இழவோ..." - இப்படி வீட்டில் கிடக்கும் பாட்டிகள் புலம்பித் தள்ளிக் கொண்டிருப்பதை கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் கேட்டிருப்பார்கள். அந்தக் காலத்தில் பெண்கள் புகுந்த வீட்டிலிருக்கும் பெரியவர்கள் பெயரையோ அல்லது ஆண்கள் பெயரையோ வாய் தவறிக் கூடச் சொல்ல மாட்டார்கள். ...

சுயம்பு சித்தனின் அறிமுகம்

Posted: 03 Sep 2014 12:58 PM PDT

பெயர்: சுயம்பு சித்தன்
சொந்த ஊர்: திருவண்ணாமலை
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: இணையம்
பொழுதுபோக்கு: உள்ளும் வெளியும் இயற்கையை ரசித்தல்
தொழில்: சுயதொழில்
மேலும் என்னைப் பற்றி: வாழ்க்கையை அனுபவிக்கிறேன் சில சமயம் தமிழில் எழுதுவேன், கலைஞன் ஆக முயல்பவன்

பாருங்கள்..சிரியுங்கள்....:)

Posted: 03 Sep 2014 12:57 PM PDT



பாருங்கள்..சிரியுங்கள்....புன்னகை

பொருளாதாரத்துக்கு அருளாதாரத்தால் வரம்பு

Posted: 03 Sep 2014 12:56 PM PDT

- "நமஸ்கார மாஹாத்ம்யம்' - ஸவிஸ்தாரமாகச் சொல்லி விட்டேன். இந்த டாபிக் எதற்காக எடுத்துக் கொண்டேன் என்றால், வர வர ஜனங்களிடம் விநய குணம், பணிவு, பவ்யம் என்பது குறைந்து கொண்டே வருகிறது. - அப்படி ரொம்ப வருத்தப்படும்படியாக இன்றைக்கு ஒருத்தர் ஒன்று சொன்னார். அதைப் பற்றியும், அதற்கு மாற்று மருந்து பற்றியும் யோஜனை போயிற்று. அதைத்தான் தெரிவிக்க நினைத்துப் பேசினேன். - என்னவென்றால்: ஸமத்வம், ஸ்வதந்திரம், ஸ்வய மரியாதை என்றெல்லாம் விநய ஸம்பத்துக்கு ஹானி ஏற்பட ஆரம்பித்து இப்போது ஒரே முரட்டுத்தனத்திலும் ...

'பேஸ்புக்கை வெறுக்கும் இயக்குனர்!

Posted: 03 Sep 2014 12:52 PM PDT

ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. டெர்மினேட்டர், டைட்டானிக், அவதார் போன்ற பிரமாண்ட படங்களை உருவாக்கி, 'இப்படியெல்லாம் கூட படம் எடுக்க முடியுமா...' என, சினிமா ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தவர். நவீன தொழில் நுட்பங்களை திரைப்படங்களில் புகுத்துவதற்கு முன் உதாரணமாக செயல்பட்டவர். ஆனால், இவருக்கு, 'பேஸ்புக், டுவிட்டர்' போன்ற சமூக வலை தளங்கள் அறவே பிடிக்காதாம்; அவற்றை பயன்படுத்தவும் மாட்டாராம். இதுகுறித்து, அவர் கூறுகையில்,'தொழில் நுட்பங்களை நமக்கு அடிமையாக்க வேண்டுமே ...

கிருஷ்ணம்மாவின் சமையல் - அண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய!

Posted: 03 Sep 2014 12:10 PM PDT

நம் தளத்தின் சமையல் அரசி கிருஷ்ணாம்மா, தனது ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமையல் குறிப்புகள் அடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளார்கள். தரவிறக்கம் செய்து பயன்படுத்திப் பயனடையுங்கள்! மறவாமல் தங்களின் கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் உறவுகளே! இங்குள்ள சுட்டிகளின் ஏதாவது ஒன்றை அழுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளலாம்! http://goo.gl/RBNbnk http://eegarai.org/apps/Kitchen4All.apk http://eegarai.com/apps/Kitchen4All.apk http://goo.gl/mKFgVO

ஓவ்வொரு தடைக்கல்லும் வெற்றியின் படிக்கல்லாகவும் அமையும்

Posted: 03 Sep 2014 11:40 AM PDT

ஓவ்வொரு தடைக்கல்லும் வெற்றியின் படிக்கல்லாகவும் அமையும் ஓர் அரசன் தன் நாட்டை மிகவும் நன்றாக ஆண்டு வந்தான். தன்னை விடத் தன் மக்களின் மீது அதிக அக்கறை வைத்தான். மக்கள் மன்னன் என எல்லோராலும் பாராட்டப்பட்டன். மன்னன் தானே மக்களின் நேர்மையையும், தன்னலம் கருதா மனப்பான்மையையும் அறிய எண்ணி, ஒரு விடிகாலைப் பொழுதில் மாறுவேடம் அணிந்து, நகரின் முக்கியமான சாலை ஒன்றின் நடுவில் பெரிய கல் ஒன்றை வைத்தான். பின் சற்றுத் தொலைவில் சென்று மறைந்து நின்றவாறு யாராவது அந்தக் கல்லை நகர்த்தி, தனக்கும் மற்றவர்களுக்கும் ...

கடைசியாக

Posted: 03 Sep 2014 11:07 AM PDT

புகைத்தது போதுமென்று முடிவெடுத்து
பற்ற வைக்காமல் தூக்கி எறிந்தபின்
லாபமா நட்டமா என்ற குழப்பம்

அட…கேசரிக்கும் என்னோட நிலைமைதானா..?

Posted: 03 Sep 2014 10:42 AM PDT

- ஏங்க, நம்ம கல்யாண நாளுன்னு கேசரி பண்ணினேன். கொஞ்சம் கருகிப் போச்சு..! - அட…கேசரிக்கும் என்னோட நிலைமைதானா..? - >எம்.மிக்கேல்ராஜ் - ———————————– - ஏண்டி, இங்கே நான் நாய் மாதிரி கத்திக்கிட்டிருக்கேன்.. அங்கே நீ என்ன பண்ணிக்கிட்டிருக்கே? - உங்களுக்குத்தான் டீக்கு பொறை தேடிட்டிருக்கேன்..! - >வி.சகிதாமுருகள் - ——————————— - இன்னைக்கு டிஸ்சார்ஜ்னு நேற்றுவரை சொல்லிட்டு இப்ப நாளைக்குன்னு சொல்றீங்களே, ஏன் டாக்டர்? - உங்க ரூமுக்கு இன்னைக்கு ஆள் வந்துட்டா இன்னைக்கே டிஸ்சார்ஜ் ...

4000 பதிவுகள் கடந்த M.M செந்தில் அவர்களை வாழ்த்தலாம் வாங்க .

Posted: 03 Sep 2014 10:42 AM PDT

கவிதை , கட்டுரை , சிறப்பான மறுமொழி என கலக்கும் பன்முக பதிவர் M.M செந்தில் அவர்களுக்கு இனிய
வாழ்த்துகள் .



இன்னும் பல இலட்சம் பதிவுகள் கடக்க அன்பு வாழ்த்துகள்

தமிழக உள்ளாட்சி இடைத்தேர்தல்: காங்கிரஸ் புறக்கணிப்பு!

Posted: 03 Sep 2014 10:32 AM PDT

(03/09/2014) சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலை காங்கிரஸ் புறக்கணிப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கான தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, இந்த தேர்தலை தி.மு.க., ம.தி.மு.க., புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக ஏற்கனவே, அறிவித்துள்ளன. பா.ஜ.க. இந்த தேர்தலில் போட்டியிடும் என அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். ...

டெசோ ஆர்ப்பாட்டம்: ஈழத் தமிழர்களுக்காக அனைவரும் இணைந்து போராட கருணாநிதி அழைப்பு!

Posted: 03 Sep 2014 10:29 AM PDT

(03/09/2014) சென்னை: ஈழத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வினை ஏற்படுத்தி கொடுக்க அனைவரும் இணைந்து போராட முன்வரவேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் டெசோ இயக்கத்தினர் இலங்கை தமிழர் பிரச்னையில் 4 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டுத்தருவதோடு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். ஐ.நா. பொது உறுப்பினர் கூட்டத்தில் ராஜபக்சே ...

சிக்கல் - 65 -ஜிலீரிட வைக்கும் சிக்கன் ரிப்போர்ட்!

Posted: 03 Sep 2014 10:25 AM PDT

சிக்கன் பிரியாணி, சிக்கன்-65, சிக்கன் குழம்பு என வாரா வாரம் சிக்கன் சுவைக்கும் குடும்பமா நீங்கள்?! உங்களுக்குத்தான் இந்த அதிர்ச்சித் தகவல்கள்! சமீபத்தில் 'சென்டர் ஃபார் சயின்ஸ் அண்ட் என்விரான்மென்ட்' வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பிராய்லர் கோழிகள் வளர்ப்பில் டெட்ராசைக்ளின், ஃப்ளோரோகைனோலோன், அமினோக்ளைக்கோசைட் உள்ளிட்ட அதிகப்படியான ஆன்டிபயாடிக் அந்தக் கோழிகளுக்குச் செலுத்தப்படுகிறது. இத்தகைய கோழிகளை உணவாக எடுத்துக்கொள்பவர்களுக்கும் அதிகப்படியான ஆன்டிபயாடிக் உடம்பில் தங்குகிறது. இது, பல்வேறு ...

ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்....

Posted: 03 Sep 2014 10:22 AM PDT

ஆண்களைப் பற்றிய உண்மைகள்!! எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்... இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.... ஆண் என்பவன் யார்? ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான். அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் தாய் தந்தை, சகோதரிக்காக குடும்ப சூழ்நிலையால்,..... பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி தியாகம் செய்கிறான். தன் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு வெளிநாடுகளில் வேலை செய்வதன் மூலம் அன்பு ...

அலசி ஆராய்வது அப்பாடக்கர்!

Posted: 03 Sep 2014 09:42 AM PDT

அ.தி.மு.கவில் பொதுச் செயலாளர் தேர்தல் நடந்தது. 2467 பேர் மனுத்தாக்கல் செஞ்சாங்க. ஆச்சர்யமா இருக்குல்ல... அத்தனை பேருமே ஜெயலலிதா பொதுச் செயலாளர் ஆகணும்னு வேட்புமனு தாக்கல் பண்ணினாங்க. ஜெயலலிதா கட்சி ஆபீஸை எட்டிப் பார்த்ததுமாதிரிகூட தெரியலை. கட்சிக் காரங்களே தேர்தல் நடத்தி, கட்சிக்காரங்களே ஜெயலலிதாவுக்காக வேட்புமனு தாக்கல் செஞ்சு, கட்சிக்காரங்களே ஜெயலலிதா ஆறாவது முறையாகப் பொதுச் செயலாளர் ஆயிட்டாங்கனு முடிவும் அறிவிச்சிட்டாங்க. இப்படி ஒரு ஜனநாயகத்தை உலகத்துக்கே கத்துக்கொடுத்த அ.தி.மு.கவுக்கு எதுவும் ...

பச்சடி வகைகள் - 'டாங்கர் பச்சடி'

Posted: 03 Sep 2014 09:34 AM PDT

நமக்கு ரொம்ப பழக்கமான பச்சடி வகைகளை இங்கு பார்ப்போம். இது ரொம்ப சுலபமான ஆனால் ருசியான பச்சடி. தேவையானவை: சிவக்க வறுத்து அரைத்த உளுத்தம் பொடி 1/2 கப் திக்கான மோர் - ஒரு கப் மோர் மிளகாய் வறுத்தது அல்லது வறுக்காதது எதானாலும் பரவாஇல்லை 4- 6 உப்பு - தேவையான அளவு. செய்முறை: மோர் மிளகாய் யை கிள்ளி போட்டு, மேலே சொன்ன எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கரைக்கவும். வேண்டுமானால் தண்ணீர் விடவும். ஆவாலவுதான் 'டாங்கர் பச்சடி' தயார் எல்லா காரமான துவயல்களுக்கும் , கூட்டுக்கும் ...

முட்டை போடும் மூன்று பறவைகள் - மொக்க ஜோக்

Posted: 03 Sep 2014 09:30 AM PDT


-

3000 மதிப்பீடுகள் கடந்த கிருஷ்ணாம்மா...

Posted: 03 Sep 2014 09:29 AM PDT

3000 மதிப்பீடுகள் கடந்த நம் ஈகரை சமையல் ராணி கிருஷ்ணாம்மாவை வாழ்த்துவோம் வாங்க மென்மேலும் பல்லாயிரம் மதிப்பீடுகள் பெற மனமார்ந்த வாழ்த்துகள் கிருஷ்ணாம்மா

சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர்

Posted: 03 Sep 2014 09:23 AM PDT

சேதி சொல்லும் சிற்பங்கள்! முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் சைவர்களுக்குக் கோயில் என்றால் சிதம்பரத்தையும் (தில்லை), வைணவர்களுக்கான கோயில் என்றால் ஸ்ரீரங்கம் ஸ்ரீஅரங்கநாதர் ஆலயத்தையும் சொல்வார்கள். ஆனால், தமிழகத்தில் பெரியகோயில் என்றால் தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்று சொல்லப்படும் ஸ்ரீபிரகதீஸ்வரர் ஆலயம்தான்! சுமார் ஆயிரம் வருடங்களைக் கடந்து நிற்கிற பிரமாண்டமான ஆலயம். சோழப் பேரரசன் முதலாம் ராஜராஜசோழன், தன்னை சிவபாதசேகரன் என அழைத்துக் கொள்வதில் மகிழ்ச்சி கொண்டான். இவனின் மகன் ராஜேந்திர ...

கேரள கவர்னராக பி.சதாசிவம் நியமனம் :

Posted: 03 Sep 2014 09:17 AM PDT

- கேரள மாநில கவர்னராக இருந்த டில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்சித் தனது பதவியை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜினாமா செய்தார். இதனையடுத்து இந்த பதவிக்கு சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ளார் - இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது. சதாசிவம் நியமிக்கப்பட்டதற்கான ஒப்புதலை ஜனாதிபதி வழங்கினார். - ----------------------------------

ஓணம் ஸ்பெஷல் - ஓலன்

Posted: 03 Sep 2014 09:13 AM PDT

எனக்கு தெரிந்த சில கேரளா சமையல்களை இங்கு பகிறுகிறேன் புன்னகை செப்.9 -2011 ஓணம் வருகிறது புன்னகை அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த ஓணம் வாழ்த்துகள் அன்பு மலர்

படித்ததில் பிடித்தது :) - புகைப்படங்கள் மூலம் உறவுகளை பலப்படுத்தலாமே!

Posted: 03 Sep 2014 08:54 AM PDT

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

இளம் பெண்களே... எங்கே போகிறீர்கள் ?????????

Posted: 03 Sep 2014 08:29 AM PDT

இளம் பெண்களே... எங்கே போகிறீர்கள்! சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில், வளர்ந்து வரும் இளம் நடிகர் ஒருவரின் பேட்டியும், அதைத் தொடர்ந்து ரசிக, ரசிகைகளின் கலந்துரையாடும் நிகழ்ச்சியும் ஒளிபரப்பானது. அதில் சில இளம் பெண் ரசிகைகள், 'வெவ்வேறான கதா பாத்திரங்களில் நடிக்க வேண்டும்...' என்று தங்கள் ஆசையை தெரியப்படுத்தினர். ஆனால், இன்னும் சில ரசிகைகள் சொன்ன ஆசைகளை கேட்ட போது மிகவும் அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் இருந்தது. ஒரு இளம் ரசிகை, அந்த நடிகரின் கன்னங்களை பிடித்து கிள்ள வேண்டும் என்றும், அதேமாதிரி ...

முகம் வசீகரமாக இருக்க...

Posted: 03 Sep 2014 08:29 AM PDT

முகம் எப்போதும் பளபளப்பாக, வசீகரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், இவைகளை கடைபிடியுங்கள். * புதினாவை, தயிரில் சேர்த்து அரைத்து, தொடர்ந்து முகத்தில் பூசி வந்தால், முகம் பளிச்சென மாறும். * முட்டையின் வெள்ளைக்கரு, வெள்ளை வெங்காயம், மருதாணி ஆகியவற்றை அரைத்து முகத்தில் பூசினால், முக வசீகரம் அதிகரிக்கும். * தக்காளியை நறுக்கி, முகத்தில் அடிக்கடி தேய்த்தால், முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகள் நீங்கும். * வெள்ளரிக்காயை சிப்ஸ் போல சீவி, கண்களுக்கு கீழே வைத்தால், கருவளையம் நீங்கும். * ...

தண்டிக்கப்படாத அநியாயங்கள்!

Posted: 03 Sep 2014 08:23 AM PDT

வாசற் கேட்டை திறந்து, பவித்ரா உள்ளே நுழைவதைப் பார்த்ததும், அவளை நோக்கி வந்தார் தயாளன். முகம் வாடி சோர்ந்து போயிருக்கும் அவளைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. ''என்னம்மா பவித்ரா... அம்மாவோட கண்டிஷன் இப்ப எப்படி இருக்கு.'' ''அதே நிலைமை தான் மாமா. மேல் மூச்சு வாங்கறது அதிகமாகியிருச்சு; அப்பப்ப கண் திறந்து பாக்கறாங்க. நாம பேசறது புரியுது; ஆனா, பதில் பேச முடியல. டாக்டர் காலையில வந்து பாத்துட்டு, 'பல்ஸ் குறைஞ்சிட்டு வருது; எப்ப எது வேணுமின்னாலும் நடக்கலாம்'ன்னு சொல்லிட்டு போயிட்டாரு.'' குரல் உடைந்து ...

வீட்டுக்குள் வந்த வண்ணத்துப்பூச்சி!

Posted: 03 Sep 2014 08:23 AM PDT

அன்றைய காலை நேரம், உலகின் மிக அழகான விடியலாக தோன்றியது யமுனாவுக்கு. தன் பெயரை, கதாபாத்திரமாகக் கொண்ட மோகமுள் நாயகி யமுனாவின் நினைவு வந்தது. அவளும் இப்படித்தான், அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கம் கொண்டவள். காவிரிக்குப் போய் பித்தளைக் குடத்தை, 'பளபள'வென்று தேய்த்து, நதியில் குளித்து, சமையலுக்கு நீர் எடுத்து வருவாள். ஹூம்... இங்கு பெயர் மட்டும் தான் பொருத்தம்; மற்றவை எல்லாமே முரண். அதுவும் கல்யாணத்திற்குப் பின் வாழ்க்கையே நரகமாகி விட்டது. பாலை காய்ச்சி கிண்ணத்தில் ஊற்றி ரூபிக்கு வைத்தாள். ரூபி ...

இனியதோர் உதயம் - மாணிக்

Posted: 03 Sep 2014 08:13 AM PDT

அன்பு நண்பர்களுக்கு உறவுகளுக்கு இனிய வணக்கங்கள்.........        அனைவருக்கும் ஒரு நற்செய்தி..... ஆகஸ்ட் 27ம் தேதியன்று புதன்கிழமை திருப்பத்தூரில் GKM இன்டர்நெட் சென்டர் புதிதாக திறக்கப்பட உள்ளது. அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி அன்போடு வரவேற்கிறேன்.         வாழ்க்கையில் கற்றுக் கொள்ள வேண்டிய அனுபவம் நிறைய இருந்தாலும் சில அனுபவங்களை கற்று தேர்ந்து அதில் வெற்றியும் பெற்று (அப்படித்தான் நினைக்கிறேன்) சற்று முன்னேற்றம் அடைந்து இன்னுமொரு சேவை மையத்தை திறக்க போகிறேன்........         அனைவரும் ...

சிறப்பு தரிசனத்துக்கு சிக்கல்! ஸ்ரீரங்கத்தை சுற்றும் சர்ச்சை

Posted: 03 Sep 2014 07:01 AM PDT

'பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச்செங்கண் அச்சுதா! அமரரேறே! ஆயர் தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே!' - என பாடப்பட்ட ஸ்ரீரங்கம் கோயிலில் இப்போது புதுப் பிரச்னை முளைத்திருக்கிறது. ''அரங்கநாதனை தரிசிக்க இதுவரை வழங்கப்பட்டு வந்த 10 ஆயிரம் ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன சீட்டை எந்த அறிவிப்பும் இல்லாமல் ரத்து செய்துவிட்டார்கள். இஷ்ட தெய்வமான ஸ்ரீரங்கத்துக்கு அடிக்கடி வந்து போகும் ஜெயலலிதாவுக்கு தெரியாமலேயே இது நடந்திருக்கிறது'' என ...

வேர்க்கடலை - சத்துப்பட்டியல்

Posted: 03 Sep 2014 06:56 AM PDT


-
நன்றி: சிறுவர் தங்க மலர்

சுப்பிரமணிய சாமியை தமிழ்நாட்டில் நுழைய அனுமதிக்கக் கூடாது: கி. வீரமணி காட்டம்!

Posted: 03 Sep 2014 06:47 AM PDT

சென்னை: தமிழக மீனவர்களை விடுவிக்கலாம்; ஆனால் அவர்களின் படகுகளைத் திருப்பிக் கொடுக்கக் கூடாது என்று கூறும் சுப்பிரமணிய சாமிகளைத் தமிழ்நாட்டில் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரமே மீன்பிடித் தொழிலாகும். அவர்கள் கடலில் சென்று தம் தொழிலை மிகப் பெரிய சூறாவளி, கடல் சீற்றம் - இவைகளை யெல்லாம் பொருட்படுத்தாது, தம் வாழ்வைப் பணயம் வைத்து மேற்கொண்டு வரும் இத்தொழிலையே செய்ய இயலாத ...

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'

Posted: 03 Sep 2014 06:09 AM PDT

இன்றைய சிந்தனைத் துளிகள்

பண்பில்லாத நண்பனை விட, பண்புள்ள பகைவன் மேலானவன்

துன்பம் இல்லாமல் இன்பத்தை அடைந்தவனுக்கு அவனடைந்த இன்பமே ஒருநாள் துன்பமாகும்.

இன்பத்தில் பங்கெடுத்து துன்பத்தில் தூரச் செல்பவன் உறவை துண்டிப்பதே மேல்.

நண்பனின் உடலில் ஒரு பாகமாக இரு அப்போதுதான் அவனுக்கு ஏற்படும் காயம் உனக்கும் வலிக்கும்.

கால்விரல் இல்லை என்பதற்காக கவலைப்படாதே காலே இல்லாதவனைப் பார்த்து நீ ஆறுதல் அடைந்து கொள்.

அரிசியும் நோய் தீர்க்கும்

Posted: 03 Sep 2014 03:30 AM PDT

தென்னிந்திய மக்களின் மிக முக்கிய உணவுப்பொருள் அரிசி. நம்மில் பெரும்பாலானோருக்கு ஒரு வேளையாவது அரிசி சாதம் சாப்பிட்டே ஆகவேண்டும். அண்மைக்காலமாக அரிசிக்குப் பதில் அல்லது அரிசியைக் குறைத்துக்கொண்டு கோதுமையை அதிக உணவாகப் பயன்படுத்தும் பழக்கம் பெருக ஆரம்பித்திருக்கிறது. அரிசியை முழுமையாகத் தவிர்க்க வேண்டும் என்று சிந்திப்பதே தவறு. அகத்தியர் குணவாகடம், பதார்த்தகுண சிந்தாமணி போன்ற மருத்துவ நூல்களில் 25க்கும் மேற்பட்ட அரிசி வகைகள் மருந்தாகவும், உணவாகவும் பயன்படும் முறை விளக்கப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூர் ...

மீண்டும் சந்திப்போம்...! விமந்தனி

Posted: 03 Sep 2014 03:20 AM PDT

ஈகரை உறவுகளுக்கு வணக்கம்.

குடும்ப ஷேமத்திற்காக நாளை வைதீஸ்வரன் கோயில் செல்ல இருப்பதால், மீண்டும் திங்களன்று சந்திப்போம்.

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Posted: 03 Sep 2014 02:27 AM PDT

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Posted: 03 Sep 2014 01:38 AM PDT

பெங்களூரு: செவ்வாய் கிரக ஆய்வுக்காக இஸ்ரோ நிறுவனம் மங்கள்யான் என்ற செயற்கை கோளை அனுப்ப உள்ளது. இந்த செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும் தேதி நேற்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், தேதி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், மங்கள்யான் செயற்கை கோளை ஏவுவது தாமதமாகலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. தென்பசிபிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலையே இதற்கு காரணம் என்றும், வரும் 22ம் தேதி, செயற்கை கோள் ஏவப்படும் தேதி அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. ...

மனதில் ஊறட்டும் உற்சாகம் !

Posted: 03 Sep 2014 01:34 AM PDT

1.சந்தோஷம் என்பது வாங்கும் பொருட்களில் இல்லை . சந்தோஷத்தின் இருப்பிடம் மனம்தான் . எனவே கன்ட்ரோல் நம்மிடம்தான் . எனவே ஆனந்தமாக இருக்க வேண்டுமா , வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது நீங்கள் மட்டும் தான் . 2.வாழ்க்கையை ரொம்ப இறுக்கமாக கழிக்காதீர்கள். கொஞ்சம் இலகுவாகவும் நகைசுவையாகவும் அணுகுங்கள் அருகில் இருப்பவர்கள் நகைச்சுவை சொன்னால் சிரியுங்கள் . தினமும் இரண்டு , முன்று நபர்களையாவது சிரிக்க வையுங்கள் . சிரிப்பு ஒரு தொற்று நோய். இடம் விட்டு இடம் பெயர்ந்து ஆரோக்கியமாக பரவும் . 3.உடற்பயிட்சியும் ...

தேனருவி - ரசித்த பாடல் வரிகள் & காணொளிகள்

Posted: 03 Sep 2014 01:07 AM PDT

உன் கழுத்தில் மாலையிட உன்னிரண்டு தோளைத் தொட என்ன தவம் செஞ்சேனோ என் மாமா வண்ணக்கிளி கையைத் தொட சின்னக் சின்னக் கோலமிட உள்ளம் மட்டும் உன் வழியே நானே - உன் கழுத்தில் மாலையிட உன்னிரண்டு தோளைத் தொட என்ன தவம் செஞ்சேனோ என் மாமா வண்ணக்கிளி கையைத் தொட சின்னக் சின்னக் கோலமிட உள்ளம் மட்டும் உன் வழியே நானே --


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™