Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சீனி நைனா முகம்மது அவர்களின் நினைவேந்தல் சென்னையில்

Posted: 24 Sep 2014 12:13 PM PDT

இன்று (24.09.`4) சென்னை மயிலாப்பூரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் மலேஷிய 'உங்கள் குரல்' இதழாசிரியர், தொல்காப்பிய அறிஞர், இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. மூத்த வழக்கறிஞர் இரா.காந்தி, ஈப்போ முத்தமிழ் பாவலர் மன்ற செயலாளர் அருள். ஆறுமுகம், முனைவர் சிலம்பொலி செல்லப்பனார், கவிக்கோ. அப்துல் ரகுமான், கவிவேந்தர் வேழவேந்தன், முனைவர். மறைமலை இலக்குவனார், கலைமாமணி. ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன், கவிஞர் வெற்றியழகன், மொழிப்பெயர்ப்புச் செம்மல் கு. பாலசுப்பிரமணியன், செந்தமிழ்த் ...

நான்கு தினம் விடுப்பில் செல்கிறேன்

Posted: 24 Sep 2014 12:00 PM PDT

அன்பு உறவுகளே, ஆண்டவன் அனுக்கிரகத்தாலும், உங்களின் வாழ்த்துக்கள் மற்றும் ஆசிர்வாதத்தினாலும் இன்று என் மகன் நலமாய் உள்ளார்.. மனைவி, செல்ல மகள் தனுஷ்கா மற்றும் மகனை கேரளாவில் மனைவியில் வீட்டில் விட்டு வர நாளை அதிகாலை புறப்படுகிறேன்... அங்கு இருந்தால் மனைவியும், மகனும் சற்று வேகமாய் உடல் நிலை தேறி வருவார்கள்.. (என் மகள் மட்டும் என்னை காண முடியாத நிலையில் சற்று உடல் இளைப்பால் என்று எண்ணுகிறேன்).. மீண்டும் ஞாயிறு இரவுதான் தமிழ்நாடு வருவேன்.. அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன்... ...

சிகரட் சுட்டுருச்சா,, ?!

Posted: 24 Sep 2014 11:59 AM PDT

ஒரு போக்குவரத்து சமிக்ஞையில் ஒரு ஊனமுற்ற சிறுமி நின்று கொண்டிருந்தாள். அங்கு ஒரு கார் வந்து நின்றது. அந்த சிறுமி சிறிது நேரம் அந்த காரில் உள்ள நபரை உற்று பார்த்துக்கொண்ட இருந்தாள். - பின்னர் அந்த காருக்கு அருகில் சென்று கதவை தட்டினாள்.ஜன்னலின் கண்ணாடி திறக்கப்பட்டது. அங்கு புகை பிடித்தபடி ஒரு நபர் அமர்த்திருந்தார். - கிழிந்த ஆடைகளுடன் கையில் தடியுடன் இருந்த சிறுமியை பார்த்து என்னமா ? காசு வேணுமா? என்று கேட்டார். - சிறுமியிடம் இருந்து பதில் வரவில்லை. அந்த சிறுமி காரில் இருந்த ...

ஈகரையில் இணைந்து கொண்டேன் அழகேசன்

Posted: 24 Sep 2014 11:47 AM PDT

பெயர்:ஈ.அழகேசன்
சொந்த ஊர்:பரமத்தி வேலூர்
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:வலைதளம்
பொழுதுபோக்கு:ஓவியம்,புத்தகம் படிப்பது
தொழில்:தமிழ் அரசு கல்வித்துறை
மேலும் என்னைப் பற்றி:தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மண்மங்களம் வட்ட பொருளாலர்.

திருமணத்துக்கு முன் குழந்தை பெற ஆசை: சுருதிஹாசன்

Posted: 24 Sep 2014 11:41 AM PDT

திருமணத்துக்கு முன் முதலில் குழந்தை பெற்றுக் கொள்வேன். அதன் பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சுருதிஹாசன் கூறினார். சுருதிஹாசன் டெலிவிஷன் பேட்டியொன்றில் விவாகரத்து செய்துகொண்ட தனது தந்தை கமலஹாசன், தாய் சரிகா பற்றி மனம் திறந்து பேசினார். அவர் கூறும்போது, ஒரு தம்பதியாக என் தாயும் தந்தையும் அழகான ஜோடியாக இருந்ததை நான் பார்த்து இருக்கிறேன். ஒருவருக்கொருவர் நிறைய அன்பு செலுத்தினார்கள். சந்தோஷமான குடும்பமாக இருந்தோம். தாய்–தந்தை போலவே நானும் சமூக வரையறைகளுக்குள் சிக்க விரும்பவில்லை. ...

ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.

Posted: 24 Sep 2014 11:41 AM PDT

ஒரு சின்ன கற்பனை. ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. பரிசு என்னவென்றால் ................. ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும். ஆனால் இந்தப் பரிசுக்கு சில கண்டிஷன்கள் உண்டு. அவை - 1) அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத பணம் உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுவிடும். 2) உங்கள் பணத்தை நீங்கள் வேறு அக்கவுண்டிற்கு மாற்ற முடியாது. 3) அதை செலவு செய்ய மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு. 4) ...

சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது ?

Posted: 24 Sep 2014 11:14 AM PDT

சமூகம் எங்கே போகிறது, கலாச்சாரம் என்னவானது ? சென்னை: திருமண பந்தத்தையும், தாம்பத்ய வாழ்க்கையையும் படு ரகசியமாக வாழ்ந்து வந்த ஒரு பெண் கடைசியில் பரிதாபமாக இறந்து போயுள்ளார் சென்னையில். அவரது ரகசியத் திருமணமும், காதல் வாழ்க்கையும், அவரது மரணத்திற்குப் பின்னரே தெரிய வந்து அந்தப் பெண்ணின் பெற்றோர் அதிர்ந்து போய் நிற்கின்றனர். கூடவே இப்பெண்ணின் மரணம் கொலையா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. என்றைக்கு அலை பாயுதே சினிமாப் படம் வந்ததோ, அன்றைக்கே பலரது மன நிலையில் குழப்ப அலைகள் வீசத் தொடங்கி விட்டன. ...

நன்றி - ஒரு பக்க கதை

Posted: 24 Sep 2014 11:13 AM PDT

டபுள் - ஒரு பக்க கதை

Posted: 24 Sep 2014 11:13 AM PDT

நவராத்திரி - கொத்துக்கடலை சுண்டல்

Posted: 24 Sep 2014 11:07 AM PDT

நவராத்திரி என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது அழகழகான பொம்மைகளும் சுண்டலும் தான் இல்லையா? சுண்டல் கள் உடல் ஆரோகியத்துக்கு ரொம்ப நல்லது, நிறைய 'புரோட்டீன்' இருக்கு இதில். மேலும் 'சரிவிகித உணவு என்று சொல்லும் அளவுக்கு, கொஞ்சம் எண்ணை, கொஞ்சம் தேங்காய், கொஞ்சம் புரோட்டீன், கொஞ்சம் கார்போ ஹைடிரெடு ' என்று எல்லாம் இருக்கும் இதில். சில சுண்டல் களைல் நாம் கேரட் , வெள்ளரி போன்ற சில காய் களையும் சேர்க்கலாம் . குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோரும் சாப்பிடலாம். சுண்டல் இல் கார சுண்டல் மட்டும் அல்ல ...

வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில்

Posted: 24 Sep 2014 10:44 AM PDT

வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில் [/b] [b]தினம் தினம் பார்ப்பதால் , புதிய தினம் தெரியவில்லை ! மரத்து போன நினைவுகளோ , மறந்து போன பிறந்த தினமோ .!!   ஆறை  கடந்து , எழுவதுசுலபம் என்பதும் , எட்டாத செயல் இல்லை என்பதும் ஒன்பதிலில் இருக்கும் என்பதே பத்தாதா எங்கள் மகிழ்ச்சிக்கு .. வாழ்த்துவோம் ஈகரையை அதன் பிறந்த நாளில் வாழ்த்துவோம் சிவா நிறுவனரையும்  . ரமணியன்   [/b]

கால் லக்ஷத்தை கடந்த பானுவை வாழ்த்த வாருங்கோ !

Posted: 24 Sep 2014 10:28 AM PDT

கால் லக்ஷத்தை கடந்த பானுவை வாழ்த்த வாருங்கோ ! என் மனமார்ந்த வாழ்த்துகள் பானு உங்கள் அன்பான பதிவுகளை தொடருங்கள் !

பயணங்கள் முடிவதில்லை: செப். 27 உலக சுற்றுலா தினம் !

Posted: 24 Sep 2014 10:14 AM PDT

சுற்றுலா' -பரபரப்பான வாழ்க்கை சூழலில் சிக்கித் தவிக்கும் இன்றைய மனிதர்களுக்கான 'ரீ சார்ஜ்' செய்யும் கருவி. கம்ப்யூட்டர் யுகத்தில் மனிதர்கள், கடிகார முள்ளைவிட வேகமாக சுழன்று கொண்டு, 24 மணிநேரம் போதவில்லை என்கின்றனர். மனதிற்குள் ஏதாவது ஒரு லட்சியத்தை சுமந்துகொண்டு இயந்திரங்களை காட்டிலும் வேகமாக ஓட முயன்று, துவண்டு விடுகின்றனர். எனவே தான் ஓய்வு நேரங்களில் இயந்திரமயமற்ற, 'ஆணையிடும் மனிதர்' இல்லாத இடங்களை நோக்கி பயணிக்கின்றனர். 'சுற்றுலா பயணி' யார் : 24 மணிநேரத்திற்கும் மேலாக தன்னுடைய ...

பெண்ணே நீ வாழ்க!

Posted: 24 Sep 2014 09:59 AM PDT

குடும்ப உறுப்பினரிடையே மதிப்பு, மரியாதை யாருக்கு அதிகம் என்றால் அது அம்மாவுக்கு தான். ஆண்களால் தனித்து இயங்குவது சிரமம்; பெண்களுக்கு அந்த சக்தி நிறையவே உண்டு. அதனால் தான் அம்மன்களுக்கு என தனிக்கோவில்கள் இருந்தாலும், சிவன் மற்றும் பெருமாள் கோவில்களில் மூலவர் மட்டும் தனித்து இருப்பதில்லை; அருகிலேயே அம்மன் சன்னிதியும் உண்டு. சக்தி இல்லாத ஜீவன், தனித்து இயங்க முடியாது என்பது இறைவனே ஒப்புக் கொண்ட விஷயம். பிருங்கி முனிவர் எப்போதும் சிவபக்தியில் திளைப்பவர்; சிவனை தவிர, வேறொருவரை வணங்க மறுப்பவர். ...

உலகின் சுத்தமான கிராமம் இந்தியாவில் உள்ள மவ்ளினோங் !

Posted: 24 Sep 2014 09:56 AM PDT

மேகாலயா வில் இருக்கும் மவ்ளினோங்:



உலகின் சுத்தமான கிராமம் இந்தியாவில் உள்ள மவ்ளினோங் ஈஸ்ட் காசி ஹில்ஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள மவ்ளினோங் கிராமம் ஆகும். மலையின் மீது அமைந்துள்ளதால் இது வெகு சுத்தமான கிராமமாக இது அறியப்படுகிறது. இங்கு அமைந்துள்ள அழகிய சிறிய அருவிகள் மேலும் கிராமத்திற்கு அழகை கூட்டுகின்றன.

கடவுள் எப்படி உதவி செய்வார்? நீயே முயற்சி செய் - சின்ன கதை

Posted: 24 Sep 2014 09:29 AM PDT

ஒருநாள் தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைப் பறித்து மூட்டைக் கட்டி மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு அவற்றை விற்க நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அப்போது, சாலையின் ஒரு திருப்பத்தில் வண்டியின் ஒரு சக்கரம் பள்ளத்தில் போய் விழ, வண்டி சாய்ந்து விட்டது. "கடவுளே! இது என்ன சோதனை? எனக்கு உதவி செய்!" என்று அவன் மனமுருக வேண்டினான். கடவுள் உதவிக்கு வரவில்லை. இரண்டாம் முறை, மூன்றாம் முறையென பலமுறை கடவுளை உதவிக்கு அழைத்தும், அவர் வரவில்லை. வேறு யாரும் உதவிக்கு வரவில்லை. கடைசியில், பள்ளத்தில் விழுந்திருந்த ...

இளைஞரைத் தாக்கிக் கொன்றது வெள்ளைப் புலி:

Posted: 24 Sep 2014 08:45 AM PDT

டில்லி உயிரியல் பூங்காவில் சுற்றி பார்க்க வந்த மாணவன் ஒருவரை புலி அடித்து கொன்றது. இந்த சம்பவம் டில்லியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. டில்லியில் புகழ்பெற்ற உயிரியல் பூங்காவில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து சென்று வருகின்றனர். இங்குள்ள விலங்கினங்களை பார்த்து பலரும் மகிழ்ச்சியாக வீடு திரும்புவர். இன்றும் வழக்கம் போல் பலரும் கூண்டுக்குள் அடைக்கப்பட்ட விலங்கினங்களை பார்த்து சென்றனர். இந்நிலையில் அரிய இனமான வெள்ளைப்புலி இருந்த கூண்டு அருகே ஒருவர் தனது நண்பர்களுடன் புகைப்படம் எடுத்து ...

வங்கிகளுக்கு 6 நாள் தொடர் விடுமுறை? பல ஆயிரம் கோடி ரூபாய் வணிகம் முடங்கும் அபாயம்!

Posted: 24 Sep 2014 07:06 AM PDT

வங்கிகளுக்கு, ஆறு நாள் தொடர் விடுமுறை வருவதால், விழாக்கால வணிகம் மற்றும் மாத ஊதியம் பெறுவோருக்கு, பெரும் பாதிப்பு ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் பல லட்சம் காசோலைகளை பணமாக்குவதில், பெரும் சிக்கல் ஏற்பட்டு, பல ஆயிரம் கோடி ரூபாய் வணிகமும் முடங்கும் என, பொதுமக்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர். எத்தனை நாள் விடுமுறை: வரும் 30ம் தேதி முதல், அக்., 5ம் தேதி வரை, வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது. செப்., 30, அக்., 1ம் தேதி வங்கிகளின் அரையாண்டு கணக்குகளை முடிக்கும் பணி; பண பரிவர்த்தனை ...

ஆஸ்கர் விழாவை காட்டிலும் சிறப்பாக இருந்தது 'ஐ' ஆடியோ விழா - அர்னால்டு கடிதம்!

Posted: 24 Sep 2014 06:57 AM PDT

ஆஸ்கர் விழாவை காட்டிலும் சிறப்பாக இருந்தது 'ஐ' ஆடியோ விழா - அர்னால்டு கடிதம்! ஷங்கர் இயக்கத்தில், விக்ரம்-எமியின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஐ. ஆஸ்கர் ரவிச்சந்திரன் இப்படத்தை தயாரித்து இருக்கிறார். இப்படம் தீபாவளிக்கு வெளிவர இருக்கிறது. இதனிடையே சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக ஹாலிவுட் நடிகர் அர்னால்டு பங்கேற்றார். விழாவில் இறுதிவரை அவர் பங்கேற்கவில்லை, சொல்லப்போனால் ஐ படத்தின் ஆடியோவை வெளியிடும் முன்பே பாதியில் வெளியேறினார். இதனால் ...

வெட்டியான் வேலை செய்து கல்லூரி படிப்பு !

Posted: 24 Sep 2014 06:52 AM PDT

வெட்டியான் வேலை செய்து கல்லூரி படிப்பு: சிவகங்கையில் தன்னம்பிக்கை மாணவர் ! சிவகங்கை: மானாமதுரை மாணவர் ஒருவர், வறுமையால் சுடுகாட்டில் பிணம் எரித்து கல்லூரி படிப்பை தொடர்கிறார்.சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கிருஷ்ணராஜபுரத்தில் வசிப்பவர்கள் முருகேசன்,- பஞ்வர்ணம். இத் தம்பதிக்கு ஆனந்தன், மணிகண்ட ன், சங்கர் , பரிமளா, ராக்கம்மாள் என, 5 குழந்தைகள். முருகேசனுக்கு சுடுகாட்டில் பிணம் எரிக்கும் தொழில். இதில், கிடைக்கும் வருமானத்தில் இவர், 2 மகன், ஒரு மகளை கரையேற்றினார். ஒரு மகள் இறந்துவிட்டார். இருமகன்கள், ...

அத்தை வீட்டு சின்னக் கிளி

Posted: 24 Sep 2014 06:08 AM PDT

என் அத்தை வீட்டு சின்னக் கிளி நீயே மாமரத்து இளம் குயிலே மாமன் வரு வான் வென்று. மல்லிகைப்பூ தலையில் சூடி மந்தாரப் பொழுதினிலே. ஒய்யாரம் செய்கிறாய் ஒற்றை வழி போறேன் னென்று ஓரக்கண்ணாலே ஒதுங்கி நின்று பார்க்கிறாய் காதல் வசந்தம் கல்பனா சக்தியாய் உன் உச்சந்தலையில் ஏற ஏற என் ஞாபகமே உன் மனக் கடலில் ஆர்ப்பரிக்கும் ஆரவாரம்... தாலாட்ட நிம்மதியாய் நீவிடும் பெருமூச்சில் திக்கு தடுமாறும் என் இதயம் நிம்மதியாய் உறங்கிறதே. அத்த வீட்டு சின்ன கிளியாலே. கடல் அன்னையின் மடியில் இருந்து துள்ளிக் ...

கோட்டயம் புஷ்பநாத்தின் 2 மோகினி நாவலை டவுன்லோட் செய்ய

Posted: 24 Sep 2014 05:42 AM PDT

கோட்டயம் புஷ்பநாத்தின் மந்திர மோகினி நாவலை டவுன்லோட் செய்ய கோட்டயம் புஷ்பநாத்தின் மந்திர மோகினி நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/ciye5wj7r9vw86e/manthira-k.p.pdf கோட்டயம் புஷ்பநாத்தின் மோகினி சிலை நாவலை டவுன்லோட் செய்ய கோட்டயம் புஷ்பநாத்தின் மோகினி சிலை நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/ueuwre99w9ty48z/mohini%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

அதிகாரிகள் அலட்சியம்: பலரின் உயிரைக் காப்பாற்றிய கேப் டிரைவர்!

Posted: 24 Sep 2014 05:11 AM PDT

சென்னை: சரிந்து விழுந்த மின் கம்பத்தின் தாக்குதலில் இருந்து பல பேரின் உயிரிரை காப்பாற்றி இருக்கிறார் கேப் டிரைவர் ஒருவர். கடந்த ஞாயிறு நள்ளிரவு கொட்டிய மழையில், சென்னை அசோக் நகர் 11வது அவென்யூவில் உள்ள தெருவிளக்கு மின்சாரக் கம்பம் சாலையில் விழ, 'ஜஸ்ட் மிஸ்' என உயிர்பிழைத்திருக்கிறார் கேப் டிரைவர் சாமுவேல் ராஜ்குமார். 'சரி, நம்ம வேலையப் பார்ப்போம்' என அவர் செல்லாமல், அங்கேயே இருந்து நூற்றுக்கணக்கானோரின் உயிரைக் காப்பாற்றியதுதான் ஹைலைட். அறுந்த மின்கம்பி, கீழே தேங்கியிருந்த மழைநீரில் ...

பாட்டி வைத்தியம்

Posted: 24 Sep 2014 04:26 AM PDT

சாதரணமாக நாம் எதுக் கெடுத்தாலும் டாக்டரிடம் ஓட முடியாது, சில பல கைவைத்தியங்களை தெரிந்து வைத்திருப்பது அவசியம் நண்பர்களே ! அது அமையா சமையத்தில் கை கொடுக்கும்.................நமக்கும் மற்றும் பிறருக்கும். இந்த திரி இல் நாம் சில ' பாட்டி வைத்தியம்' என்று சொல்லப்படுகிற 'கை வைத்தியம்' பற்றி சிலது அறிந்துகொள்வோம் நண்பர்களே ! நான் எப்போதும் சொல்வது தான், பிளீஸ் உங்கள் கருத்துகளையும் பகிருங்கள்.

உயிர்மெய் சேவா -ரத்ததான முகாம் - பிஜிராமன்

Posted: 24 Sep 2014 04:10 AM PDT

வணக்கம் உறவுகளே என் நண்பரும் அவரது நண்பர்களும் உயிர்மெய் சேவா என்ற ஒரு சமூக சேவை அமைப்பை துவங்கி பல சிறந்த செயல்களை செய்து வருகின்றனர்....நானும் என்னை அதில் இணைத்துக் கொண்டேன்... வருகிற செப்டம்பர் 28 ஆம் தேதி கீழுள்ள முகவரியில் ரத்த தான முகாம் அமைக்கவுள்ளோம். தாங்களும் முகாமில் கலந்து கொண்டு ரத்த தான முகாமை வெற்றிகரமானதாக மாற்றும்படி வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்...ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். என் நண்பர் உயிர்மெய் சேவாவிற்கு ஒரு ...

முத்துராஜ் அவர்களை வாழ்த்துவோம்

Posted: 24 Sep 2014 03:55 AM PDT

முத்துராஜ் அவர்களை வாழ்த்துவோம்

பிறந்த நாள் கொண்டாடும் முத்துராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள்






ரமணியன்

மன்னர் சரபோஜி 236வது பிறந்த நாள் !

Posted: 24 Sep 2014 02:16 AM PDT

இரண்டாம் சரபோஜி (கி.பி. 1798-1832) துல்ஜாஜி கி.பி.1787இல் வாரிசு இன்றி மறைந்தார். இவர் தாம் இறக்கும் முன்பு சரபோஜி என்பவரைத் தத்து எடுத்துக் கொண்டார். சரபோஜி இளம்வயதினராக இருந்ததால், துல்ஜாஜியின் ஒன்றுவிட்ட சகோதரர் அமர்சிங் என்பவர் அவருக்குக் காப்பாளராக இருந்து கி.பி.1787 முதல் 1798 வரை தஞ்சையை அரசாண்டு வந்தார். அமர்சிங் சுதந்திரத் தன்னாட்சி வேட்கை கொண்டவர். எனவே இவர் ஆங்கிலேயர்களைத் தஞ்சைப் பகுதியிலிருந்து விரட்ட விரும்பினார். அதனால் இவர் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலேயர் இவருக்குத் தொல்லைகள் ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (66)

Posted: 24 Sep 2014 01:24 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

ரத்தத்தை சுத்திகரிக்கும் சுக்கான் கீரை...

Posted: 23 Sep 2014 10:32 PM PDT

நாம் அறியாத அரிய வகைக் கீரைகள் எவ்வளவோ உள்ளன. அவற்றில் ஒன்று சுக்கான் கீரை. மருத்துவக் குணங்கள் நிறைந்த சுக்கான் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. குடல்புண் குணமாகும். மலச்சிக்கல் சரியாகும். வாயுத்தொல்லை, நீர்க்கடுப்பு, வாந்தி, வயிறு தொடர்பான அனைத்து நோய்களுக்கும் சிறந்த மருந்து சுக்கான். ரத்த அழுத்தத்தை சரிசெய்யும். இதயத்தைப் பலப்படுத்தும். வைட்டமின் ஏ, சி மற்றும் கால்சியம், இரும்புச் சத்து இதில் அதிகம் இருப்பதால், குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்கலாம். சுக்கான் கீரையைத் ...

பாமரர் தேவாரம்

Posted: 23 Sep 2014 08:10 PM PDT

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ...

ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு

Posted: 23 Sep 2014 06:21 PM PDT

குளிர்காலத்தில் நாம் பகல்பொழுதிலேயே தண்ணீரில் குளிக்க கஷ்டப்படுவோம். அதுவும் இந்த ஐயப்ப பக்தர்கள் விடியற்காலையில் கிராமப்புறங்களில் குளத்தில் குளிப்பதைப் பார்த்திருக்கிறேன். எப்படித்தான் குளிக்க முடிகிறதோ தெரியவில்லை. அதை வைத்துதான் இந்த ஹைக்கூ பிறந்திருக்கிறது. குளத்தில் இருக்கும் தண்ணீர் விடியற்காலையில் வெதுவெதுப்பாகத்தான் இருக்குமாம். சரி குளிர் காலத்தில்தானே பனியும் வருகிறது. அதனால், மார்கழிப் பனி வெதுவெதுப்பாய் குளம் என்று முதலிரண்டு அடிகளை எழுதி முடித்து மூன்றாம் அடியில் "ஐயப்ப பக்தர்கள்" ...

மருத்துவர்களுக்கு 2 இருதயம் வேண்டும்: கலாம் பேச்சு

Posted: 23 Sep 2014 05:55 PM PDT

- சொற்பொழிவின் சிறப்பு பதக்கத்தை அணிவிக்கும் மூத்த நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் ஆர். நாராயணன்.  உடன் (இடமிருந்து) மருத்துவமனையின் கெüரவச் செயலர் டாக்டர் எஸ்.சுரேஷ், மருத்துவமனையின் நரம்பியல் அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் எம்.சி.வாசுதேவன், மருத்துவமனையின் தலைவர் எம்.எஸ்.சுவாமிநாதன். - நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களுக்கு இரண்டு இருதயம் வேண்டும் என்று குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் கூறினார். சென்னை தரமணியில் உள்ள வி.எச்.எஸ். மருத்துவமனையின் டாக்டர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™