மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மணிப்பூர் என்.ஐ.டி.யில் கோஷ்டி மோதல்: தெலுங்கு மாணவர்கள் மீது தாக்குதல்
- 6 மாதங்களுக்குள் 10 சதவீத பணிகளை முடித்து விட மத்திய மந்திரிகளுக்கு மோடி உத்தரவு
- கொல்கத்தா: மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.பி. சாய்புதீன் சவுத்ரி மரணம்
- டீசல் விலை நிர்ணயத்தை மத்திய அரசு கைவிட இதுவே சரியான நேரம்: ரகுராம் ராஜன் வலியுறுத்தல்
- இறைச்சி ஏற்றுமதி: மத்திய மந்திரி மேனகா காந்தியின் பேச்சால் சர்ச்சை
- மழையில் 64 பாலங்கள் உடைந்ததால் காஷ்மீரில் மேலும் 1½ லட்சம் பேர் தவிப்பு
- திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: தரிசனத்துக்கு 24 மணி நேரம் ஆகிறது
- ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி கொலை: சரண் அடைந்த வாலிபரிடம் உண்மை கண்டறியும் சோதனை
- திருவனந்தபுரம் அருகே ஆற்றில் குதித்து மாணவி தற்கொலை
- கேரளாவில் மது பார்களுக்கு தடை: சுற்றுலா பயணிகள் வருகை பாதிக்காது
- ஐ.எஸ். தீவிரவாத குழுவில் இணைந்த மும்பை வாலிபர்கள் நாடு திரும்புவதாக தகவல்
- மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிப்பு எதிரொலி-அரசு இல்லத்தை காலி செய்து விடுவேன்: அஜீத்சிங்
- 3 ஆண்டுகளில் கங்கை நதி சுத்தப்படுத்தப்படும் மத்திய மந்திரி உமாபாரதி உறுதி
- சுற்றுலா துறையை மேம்படுத்த ராஜஸ்தானில் 35 கோட்டைகளை தனியாரிடம் வழங்க அரசு முடிவு
- ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மாணவர் பேரவை தேர்தலில் இடதுசாரி அணி வெற்றி
- மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் நிறுத்த விஞ்ஞானிகள் மும்முரம்
- ஐதராபாத்தில் ஒரு ரூபாய்க்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்க ஏற்பாடு
- தகவல் அறியும் உரிமை சட்டம்: சோனியா காந்தி, அமித்ஷாவுக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீசு
- ரூ.25 ஆயிரம் கோடி செலவில் 4 போர் கப்பல்கள் கட்டும் பணி தனியாரிடம் ஒப்படைப்பு
- மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: செப்.19-ல் பிரசாரத்தை துவக்கும் அமித் ஷா
| மணிப்பூர் என்.ஐ.டி.யில் கோஷ்டி மோதல்: தெலுங்கு மாணவர்கள் மீது தாக்குதல் Posted: 14 Sep 2014 11:26 PM PDT மணிப்பூர் மாநிலம் இம்பாலில் என்.ஐ.டி. தொழில் நுட்ப கல்லூரி உள்ளது. இதில் வெளி மாநில மாணவர்கள் ஏராளமானோர் விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். விடுதியில் சிக்கன் உணவு வழங்கப்பட்டது, இதனை பெற முண்டியடித்து முன்னேறிய உள்ளூர் மாணவரை தெலுங்கு மாணவர் ஒருவர் கண்டித்துள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு பெரும் மோதலாக வெடித்தது. |
| 6 மாதங்களுக்குள் 10 சதவீத பணிகளை முடித்து விட மத்திய மந்திரிகளுக்கு மோடி உத்தரவு Posted: 14 Sep 2014 11:14 PM PDT இந்தியாவை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்வதற்காக முதல் கட்டமாக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பிரதமர் மோடி தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் துறை வாரியாக ஆய்வு செய்து, மத்திய மந்திரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இந்த நிலையில் வரும் நிதியாண்டு இறுதிக்குள் அதாவது இன்னும் 6 மாதங்களுக்குள் மொத்த உள்கட்டமைப்பு இலக்கில் 10 சதவீதத்தை பூர்த்தி |
| கொல்கத்தா: மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.பி. சாய்புதீன் சவுத்ரி மரணம் Posted: 14 Sep 2014 11:14 PM PDT மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.பி.யான சாய்புதீன் சவுத்திரி நேற்று டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். 62 வயதான சாய்புதீன் சில வருடங்களாக தொண்டை புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். டெல்லி ஆஸ்பத்திரியில் சிகிக்சை பெற்று வந்த அவர் நேற்று மரணம் அடைந்தார். 1980-ம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள |
| டீசல் விலை நிர்ணயத்தை மத்திய அரசு கைவிட இதுவே சரியான நேரம்: ரகுராம் ராஜன் வலியுறுத்தல் Posted: 14 Sep 2014 10:47 PM PDT இந்தியாவில் பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களும், டீசல் விலையை மத்திய அரசும் நிர்ணயித்து வருகிறது. பெட்ரோல் விலை, சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ற மாதத்திற்கு இரண்டு முறை எண்ணெய் நிறுவனங்களால் மாற்றியமைக்கப்படும். ஆனால், டீசல் விலைக்கு அதிக மானியம் வழங்கப்படுவதால் இதை சரிகட்ட மாதந்தோறும் 50 காசுகள் மத்திய அரசு உயர்த்தி வந்தது. தற்போது கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால் |
| இறைச்சி ஏற்றுமதி: மத்திய மந்திரி மேனகா காந்தியின் பேச்சால் சர்ச்சை Posted: 14 Sep 2014 10:38 PM PDT மத்திய மந்திரியாக இருக்கும் மேனகாந்தி ராஜஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியதாவது:- மாட்டு இறைச்சியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் உலக நாடுகளில் இந்தியாவே முதலிடம் வகிக்கிறது. சீனாவை விட நாம்தான் அதிகமான விலங்குகளை இறைச்சிக்காக கொலை செய்கிறோம். இதில் சட்டவிரோதமாக ஈடுபட்டு கிடைக்கும் |
| மழையில் 64 பாலங்கள் உடைந்ததால் காஷ்மீரில் மேலும் 1½ லட்சம் பேர் தவிப்பு Posted: 14 Sep 2014 10:29 PM PDT காஷ்மீர் மாநிலத்தின் மேற்கு பகுதியில் 2 வாரங்களுக்கு முன்பு பெய்த வரலாறு காணாத மழை காரணமாக மிக பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சுமார் 10 லட்சம் பேர் சிக்கினார்கள். கிராமங்களை இணைக்கும் சுமார் 2550 சாலைகள் அரித்து செல்லப்பட்டும், 64 பாலங்கள் உடைந்தும் விட்டதால் மக்கள் மழைத் தண்ணீரில் தத்தளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. |
| திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: தரிசனத்துக்கு 24 மணி நேரம் ஆகிறது Posted: 14 Sep 2014 09:57 PM PDT திருப்பதியில் வார விடுமுறையான நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 32,987 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அதன்பின்பு தர்ம தரிசன பக்தர்கள் 31 கம்பார்ட்மெண்டுகளில் நிரம்பி வழிந்தனர். இவர்களுக்கும் தரிசனத்துக்கு 24 மணி நேரம் ஆனது. கால்நடையாக வந்த பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை |
| ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி கொலை: சரண் அடைந்த வாலிபரிடம் உண்மை கண்டறியும் சோதனை Posted: 14 Sep 2014 09:47 PM PDT கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி மனோஜ். கடந்த சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இதுபற்றி கண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதன் பிறகு இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் மனோஜ் கொலை தொடர்பாக விக்ரமன் என்பவர் கோர்ட்டில் சரண் அடைந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட தலைவரை கொலை |
| திருவனந்தபுரம் அருகே ஆற்றில் குதித்து மாணவி தற்கொலை Posted: 14 Sep 2014 09:33 PM PDT கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள சிறையின்கீழ் வைக்கம் பகுதியை சேர்ந்தவர் சஜீவ். இவரது மனைவி ஸ்ரீஜா. இந்த தம்பதியின் மகள் கிருஷ்ணபிரியா (வயது 16). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கிருஷ்ணபிரியா பிளஸ்–1 படித்து வந்தார். இந்த நிலையில் தோழி வீட்டிற்கு சென்று விட்டு தாமதமாக |
| கேரளாவில் மது பார்களுக்கு தடை: சுற்றுலா பயணிகள் வருகை பாதிக்காது Posted: 14 Sep 2014 09:29 PM PDT கேரளாவில் வருகிற 10 ஆண்டுகளுக்குள் மது விலக்கை முழுமையாக அமல்படுத்த முதல்–மந்திரி உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக புதிய மது பார்களுக்கு லைசென்ஸ் வழங்கப்படவில்லை. மேலும் 5 நட்சத்திர அந்தஸ்துக்கு குறைவாக ஓட்டல்களில் செயல்பட்ட மதுபான பார்களின் லைசென்ஸ்கள் |
| ஐ.எஸ். தீவிரவாத குழுவில் இணைந்த மும்பை வாலிபர்கள் நாடு திரும்புவதாக தகவல் Posted: 14 Sep 2014 05:07 PM PDT இந்தியாவை சேர்ந்த ஏழை இஸ்லாமிய இளைஞர்கள் சிலர், ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை பிடித்து வைத்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளதாக பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் மும்பையில் உள்ள கல்யாண் பகுதியை சேர்ந்த நான்கு வாலிபர்களான ஆரிப் மஜித், ஷகின் டாங்கி, பகத் ஷெய்க் மற்றும் அமன் டாண்டே ஆகியோர் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்தது சில தினங்களுக்கு முன் தெரியவந்தது. |
| மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிப்பு எதிரொலி-அரசு இல்லத்தை காலி செய்து விடுவேன்: அஜீத்சிங் Posted: 14 Sep 2014 05:05 PM PDT கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த முன்னாள் மத்திய மந்திரிகள், முன்னாள் எம்.பி.க்கள் 30 பேர் டெல்லியில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு இல்லங்களை இன்னும் காலி செய்யாமல் உள்ளனர். இவர்களில் முன்னாள் மத்திய மந்திரிகள் அஜீத்சிங், ஜிதேந்திர சிங் மற்றும் முன்னாள் எம்.பி.க்கள் அசாருதீன், நீரஜ் சேகர், கே.எஸ்.ராவ் உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். |
| 3 ஆண்டுகளில் கங்கை நதி சுத்தப்படுத்தப்படும் மத்திய மந்திரி உமாபாரதி உறுதி Posted: 14 Sep 2014 04:57 PM PDT புனித நதியாக வணங்கப்படும் கங்கை நதி, பிணங்களும், குப்பை கூளங்களும் போடப்படுவதால் மாசு அடைந்து வருகிறது. எனவே, கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு மத்திய நீர்வளத்துறை மற்றும் நதி மேலாண்மைத்துறை மந்திரி உமாபாரதி பொறுப்பு ஏற்றுள்ளார். |
| சுற்றுலா துறையை மேம்படுத்த ராஜஸ்தானில் 35 கோட்டைகளை தனியாரிடம் வழங்க அரசு முடிவு Posted: 14 Sep 2014 04:47 PM PDT ராஜஸ்தான் மாநில வளர்ச்சிக்கு ஏதுவாக அம்மாநிலத்தில் உள்ள சுற்றுலா தளங்களான 35 கோட்டைகளை தனியார் வசம் ஒப்படைக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. சுற்றுலா துறையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த கோட்டைகளை தனியாருக்கு குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல் ராஜஸ்தான் சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் உள்ள பல்வேறு சொத்துக்களையும் தனியாரே ஏற்று நடத்தும் வகையில் பல்வேறு முயற்சிகளையும் அம்மாநில அரசு எடுத்து வருகிறது. |
| ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மாணவர் பேரவை தேர்தலில் இடதுசாரி அணி வெற்றி Posted: 14 Sep 2014 04:44 PM PDT டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மாணவர் பேரவை தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் இடதுசாரி அணியைச் சேர்ந்த அனைத்திந்திய மாணவர் சங்கத்துக்கும், அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்துக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் தலைவர், துணைத்தலைவர், இணைச்செயலாளர் மற்றும் |
| மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் நிறுத்த விஞ்ஞானிகள் மும்முரம் Posted: 14 Sep 2014 04:21 PM PDT ரூ.450 கோடி மதிப்பில் உருவான "மங்கள்யான்" விண்கலம், செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதி, ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்ட இந்த மங்கள்யான் விண்கலம், தனது பயணத்தில் இதுவரை 95 சதவீதத்தை முடித்துள்ளது. இந்த விண்கலத்தில் தற்போது உறங்கும் நிலையில் உள்ள எஞ்ஜினை வரும் செப்டம்பர் 21ந் தேதி நான்கு வினாடி நேரத்திற்கு இயங்கவைக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். |
| ஐதராபாத்தில் ஒரு ரூபாய்க்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்க ஏற்பாடு Posted: 14 Sep 2014 03:49 PM PDT தமிழகத்தில் 'அம்மா உணவகம்' மூலம் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது. நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த திட்டத்தை அண்டை மாநிலங்களும் செயல்படுத்த தொடங்கி உள்ளன. தெலுங்கானாவில் உள்ள ஐதராபாத் மாநகராட்சி சார்பில் இதே போன்று உணவகம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு 5 ரூபாய்க்கு உணவு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ஒரு ரூபாய்க்கு காலை உணவு |
| தகவல் அறியும் உரிமை சட்டம்: சோனியா காந்தி, அமித்ஷாவுக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீசு Posted: 14 Sep 2014 03:30 PM PDT கடந்த ஆண்டு சுபாஷ் அகர்வால் என்னும் சமூக ஆர்வலர் மத்திய தகவல் ஆணையத்திடம் கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார். அதில் அனைத்து அரசியல் கட்சிகளையும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டிருந்தார். இதையடுத்து காங்கிரஸ், பா.ஜனதா, தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ் ஆகிய 6 தேசிய |
| ரூ.25 ஆயிரம் கோடி செலவில் 4 போர் கப்பல்கள் கட்டும் பணி தனியாரிடம் ஒப்படைப்பு Posted: 14 Sep 2014 01:57 PM PDT இந்திய கடற்படைக்கு ரூ.25 ஆயிரம் கோடி செலவில் 4 போர் கப்பல்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் 3 தனியார் நிறுவனங்களுக்கு கடந்த ஆண்டு அளிக்கப்பட்டது. ஆனால், பொதுத்துறை நிறுவனமான கொச்சி கப்பல் கட்டும் தளமும் இப்பணியில் ஈடுபட விரும்பியது. ஆனால் அதை கடற்படை நிராகரித்து விட்டது. அப்போதைய |
| மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: செப்.19-ல் பிரசாரத்தை துவக்கும் அமித் ஷா Posted: 14 Sep 2014 01:34 PM PDT மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபர் பதினைந்தாம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அம்மாநிலத்தில் ஆளுங்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சி மீது மக்களுக்கு கடும் கோபம் உள்ளதால் இம்முறை ஆட்சியை எளிதில் கைப்பற்றிவிடலாம் என்று பா.ஜ.க கருதுகிறது. எனினும், அங்கு பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான சிவசேனா கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |