Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


கேலக்ஸி ஸ்டார் 2, கேலக்ஸி ஸ்டார் அட்வான்ஸ், கேலக்ஸி ஏஸ் NXT இந்தியாவில் அறிமுகம்!

Posted: 13 Aug 2014 03:13 AM PDT

samsung

samsungசாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட்-ல் இயங்கும் மூன்று புதிய மலிவு விலை ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி ஸ்டார் 2, கேலக்ஸி ஸ்டார் அட்வான்ஸ் மற்றும் கேலக்ஸி ஏஸ் NXT ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஸ்டார் 2 ரூ.5,100 விலையிலும், கேலக்ஸி ஸ்டார் அட்வான்ஸ் மற்றும் கேலக்ஸி ஏஸ் NXT ஆகிய இரண்டும் ரூ.7,400 விலையிலும் கிடைக்கும். தென் கொரிய நிறுவனமான கேலக்ஸி இந்த மூன்று புதிய கேலக்ஸி போன்கள் கிடைக்கும் விவரங்கள் பற்றி வெளியிடப்படவில்லை. குறிப்பாக, கேலக்ஸி ஸ்டார் 2, கேலக்ஸி ஸ்டார் அட்வான்ஸ் மற்றும் கேலக்ஸி ஏஸ் NXT ஆகிய மூன்று புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்கள் நிறுவனத்தின் TouchWiz Essence UI உடன் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்கும் மற்றும் மூன்றுமே இரட்டை சிம் ஆதரவு செயல்பாடுகளை கொண்டுள்ளது. மேலும், நிறுவனம், மூன்று புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போன்களுடன் அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், மராத்தி, மலையாளம், ஒரியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது உட்பட 12 இந்திய மொழிகள் ஆதரவை கொண்டு வரும் என்று அறிவித்துள்ளது. சாம்சங் நிறுவனம் வோடபோன் உடன் இணைந்து, முதல் ஆறு மாதங்களுக்கு, மாதம் ஒன்றிற்கு இலவசமாக 200MB டேடா வழங்கும் என்றும் அறிவித்துள்ளது. சாம்சங் கேலக்ஸி ஸ்டார் 2: சாம்சங் கேலக்ஸி ஸ்டார் 2 ஸ்மார்ட்போன் 320x480 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 3.5 இன்ச் HVGA வருகிறது. இது ரேம் 512MB உடன் இணைந்து 1GHz ஒற்றை கோர் Spreadtrum SC6815A மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 2 மெகாபிக்சல் ஃபிக்ஸ்ட் போகஸ் பின்புற கேமரா கொண்டுள்ளது. microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடிக்கிய சேமிப்பு வருகிறது. இதில் ப்ளூடூத் 4.0, Wi-Fi b/g/n, மற்றும் மைக்ரோ-USB இணைப்பு விருப்பங்கள் அடங்கும். சாம்சங் கேலக்ஸி ஸ்டார் 2 ஸ்மார்ட்போனில் 3 ஜி நெட்வொர்க் ஆதரவு இல்லை. மேலும், 109.8x59.9x11.8mm மெஷர்ஸ் மற்றும் 108 கிராம் எடையுடையது. இந்த ஸ்மார்ட்போனில் 1300mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஸ்டார் 2 ஸ்மார்ட்போன் சாம்பல் மற்றும் வெள்ளை ஆகிய வண்ண வகைகளில் கிடைக்கும். சாம்சங் கேலக்ஸி ஸ்டார் அட்வான்ஸ்: சாம்சங் கேலக்ஸி ஸ்டார் அட்வான்ஸ் ஸ்மார்ட்போன் 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.3 இன்ச் WVGA TFT டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது ரேம் 512MB உடன் இணைந்து 1.2GHz (குறிப்பிடப்படாத சிப்செட்) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 3 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது, இதில் முன் எதிர்கொள்ளும் கேமரா இல்லை. microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடிக்கிய சேமிப்பு வருகிறது. சாதனத்தில் இணைப்பு விருப்பங்கள் 3 ஜி, Wi-Fi, ப்ளூடூத், மற்றும் ஜி.பி. எஸ் ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போனில் 1800mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. மேலும், 129.7x65.9x9.4mm மெஷர்ஸ் மற்றும் 138 கிராம் எடையுடையது. சாம்சங் கேலக்ஸி ஸ்டார் 2 ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய வண்ண வகைகளில் கிடைக்கும். சாம்சங் கேலக்ஸி ஏஸ் NXT: இறுதியாக, சமீபத்தில் சாம்சங் கேலக்ஸி ஏஸ் NXT ஸ்மார்ட்போன் ரூ.7,335 விலையில் நிறுவனத்தின் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏஸ் NXT ஸ்மார்ட்போன் 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4 இன்ச் WVGA TFT டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது ரேம் 512MB உடன் இணைந்து 1.2GHz Spreadtrum டால்பின் (ஒற்றை A7) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 3 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது, இதில் முன் எதிர்கொள்ளும் கேமரா இல்லை. microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடிக்கிய சேமிப்பு வருகிறது. சாதனத்தில் இணைப்பு விருப்பங்கள் 3 ஜி, Wi-Fi, ப்ளூடூத், ஜிபிஆர்எஸ் / எட்ஜ், மற்றும் ஜிபிஎஸ் / எ- ஜிபிஎஸ் ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போனில் 1500mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. மேலும், 121.4x62.9x10.7mm மெஷர்ஸ் மற்றும் 123 கிராம் எடையுடையது. சாம்சங் கேலக்ஸி ஸ்டார் 2 ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய வண்ண வகைகளில் கிடைக்கும். சாம்சங் கேலக்ஸி ஸ்டார் 2 ஸ்மார்ட்போன் குறிப்புகள்: 320x480 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 3.5 இன்ச் HVGA, ரேம் 512MB, 1GHz ஒற்றை கோர் Spreadtrum SC6815A, 2 மெகாபிக்சல் ஃபிக்ஸ்ட் போகஸ் பின்புற கேமரா, microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடிக்கிய சேமிப்பு, ப்ளூடூத் 4.0, Wi-Fi b/g/n, மைக்ரோ-USB, ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட், 1300mAh பேட்டரி, 108 கிராம் எடை. சாம்சங் கேலக்ஸி ஸ்டார் அட்வான்ஸ் ஸ்மார்ட்போன் குறிப்புகள்: 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.3 இன்ச் WVGA TFT டிஸ்ப்ளே, ரேம் 512MB, 1.2GHz (குறிப்பிடப்படாத சிப்செட்) ப்ராசசர், எல்இடி ப்ளாஷ் கொண்ட 3 மெகாபிக்சல் பின்புற கேமரா, microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடிக்கிய சேமிப்பு, 3 ஜி, Wi-Fi, ப்ளூடூத், மைக்ரோ-USB, ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட், 1800mAh பேட்டரி, 138 கிராம் எடை. சாம்சங் கேலக்ஸி ஏஸ் NXT ஸ்மார்ட்போன் குறிப்புகள்: 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4 இன்ச் WVGA TFT டிஸ்ப்ளே, ரேம் 512MB, 1.2GHz Spreadtrum டால்பின் (ஒற்றை A7) ப்ராசசர், எல்இடி ப்ளாஷ் கொண்ட 3 மெகாபிக்சல் பின்புற கேமரா, microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடிக்கிய சேமிப்பு, 3 ஜி, Wi-Fi, ப்ளூடூத், ஜிபிஆர்எஸ் / எட்ஜ், ஜிபிஎஸ் / எ- ஜிபிஎஸ், ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட், 1500mAh பேட்டரி, 123 கிராம் எடை.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒல்லிக்குச்சிகளின் ஆரோக்கிய ரகசியம் இதுதாங்க..!

Posted: 13 Aug 2014 02:09 AM PDT

treadmill-gym

treadmill-gymரகசியம் என்றாலே அனைவருமே அதை தெரிந்து கொள்ள அதிக ஆவல் காட்டுவோம். அதில் தற்போது பெரும்பாலானோர் தெரிந்து கொள்ள விரும்பும் ஒன்று ஒல்லியாக இருப்பவர்கள் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பது தான். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை எப்படி ஒல்லியாக இருப்பவர்கள் தங்களை பிட்டாகவும், சிக்கென்றும் வைத்துக் கொள்கிறார்கள் என்பது பற்றி உங்களுக்கு சொல்கிறது. பத்தே நாட்களில் எடையை குறைக்க வேண்டுமா? அப்ப வாட்டர் டயட் ஃபாலோ பண்ணுங்க... உண்மையில் ஒல்லியாக இருப்பவர்கள் நன்கு சாப்பிடுவார்கள். ஆனால் அதே சமயம் அவர்கள் நீரை அதிகம் குடிப்பதோடு, உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவற்றில் ஈடுபட்டு எப்போதும் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். அதுமட்டுமின்றி, அவர்கள் நன்கு சாப்பிட்டாலும், நீரை அதிக அளவில் குடிப்பதால், அவர்களின் உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் வெளியேறி உடலானது ஆரோக்கியமாக உள்ளது. உடல் எடையை குறைக்க உதவும் மிகவும் சிறப்பான இந்திய காலை உணவுகள்!!! இங்கு ஒல்லியாக இருப்பவர்களின் ஆரோக்கிய ரகசியமானது கொடுக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் குண்டாக இருந்து ஒல்லியாக நினைத்தால், இவர்களின் டயட்டை ஃபாலோ பண்ணுங்க... நீங்கள் ஒல்லியாக இருக்க வேண்டுமானால், தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். இதனால் உடலில் தங்கியுள்ள நச்சுக்களானது உடலில் இருந்து வெளியேறி, உடலை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்ள உதவும். உடலை ஆரோக்கியமாகவும், ஒல்லியாகவும் வைத்துக் கொள்ள டயட்டில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சேர்த்து வர வேண்டும். இதனால் அதில் உள்ள சிட்ரஸ் ஆசிட்டானது உடலில் தங்கியுள்ள அதிகப்படியான கொழுப்புக்களை கரைத்துவிடும். ஒல்லியாக இருப்பவர்கள் ஜங்க் உணவுகளை உட்கொள்வர்கள். அதே சமயம் அவர்களுக்கு எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற அளவும் நன்கு தெரியும். வாழ்க்கையில் நமக்கு பிடித்ததை செய்தாலே சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கலாம். அதிலும் ஒல்லியாக இருப்பவர்கள் நேரம் கிடைக்கும் போது ஏதேனும் ஒரு விளையாட்டு, நடனம் அல்லது உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்கள். இதனால் அவர்களின் உடலில் கொழுப்புக்கள் தங்குவதில்லை. இரவில் சரியாக தூங்காமல் இருந்தால் உடல் பருமனடையும். அதிலும் ஒருவருக்கு குறைந்தது 7-8 மணிநேர தூக்கமானது மிகவும் அவசியம். இதை ஒல்லியாக இருப்பவர்கள் சரியாக கடைப்பிடிப்பார்கள். எனவே தான் அவர்கள் ஆரோக்கியாகமாகவும், ஒல்லியாகவும் இருக்கிறார்கள். உடல் எடையை குறைக்க தான் ஜிம் செல்ல வேண்டும் என்பதில்லை. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் ஜிம் செல்லலாம் என்ற கருத்தை மனதில் கொண்டு ஒல்லியாக இருப்பவர்கள் அன்றாடம் 1/2 முதல் 1 மணிநேரம் ஜிம்மில் நேரத்தை செலவழிப்பார்கள். ஒல்லிக்குச்சி போன்று இருப்பவர்களுக்கு மனக்கட்டுப்பாடு அதிகம் இருக்கும். எனவே இவர்கள் முன்பு எவ்வளவு சுவையான இனிப்புக்களை வைத்தாலும், அளவாக தான் சுவைப்பார்கள்.

This posting includes an audio/video/photo media file: Download Now

வேகமாக காரை ஓட்டிய டிரைவர்.. தூங்கிய கொடுமை.. கத்தி எழுப்பித் தப்பிய கவாஸ்கர்!

Posted: 13 Aug 2014 02:00 AM PDT

gavaskar

gavaskarசாலையில் போகும்போது அதிலும் வாகனத்தில் போகும்போது நாம் சூதானமாக போனாலும் கூட சுற்றியிருப்பவர்களும் கூட அதே போல இருந்தால்தான் உண்டு. இல்லாவிட்டால் எமன் எப்போது வந்து வெல்கம் சொல்லி நம்மைக் கூட்டிக் கொண்டு போவான் என்பதை சொல்லவே முடியாது. அப்படி ஒரு பெரும் அபாயத்திலிருந்து சுனில் கவாஸ்கர் தப்பிப் பிழைத்துள்ளார். சில நொடிகள்தான்.. அந்த சில நொடிகளில் அவரது உயிர் தப்பியுள்ளது. ஆனால் அந்த சில நொடிகளில் அவரது உயிரைக் காப்பாற்றிய அதே கார் டிரைவர்தான், இந்த விபத்து நேரிடும் வாய்ப்பு ஏற்பட்டதற்கும் காரணமாக இருந்துள்ளார். கெட்டதிலும் ஒரு நல்லது போல அவர் செய்த தவறிலிருந்து அவரே கவாஸ்கர் உள்ளிட்டோரையும் காத்துள்ளார் என்பதுதான் இங்கு கவனிக்கத்தக்கது. கிரிக்கெட் வர்னணைக்காக இங்கிலாந்தில் முகாமிட்டுள்ளார் கவாஸ்கர். மான்செஸ்டரில் நடந்த இந்தியா - இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டி முடிந்ததும் கவாஸ்கர், அவரது நம்பர் சந்திரேஷ் படேல், இங்கிலாந்து வர்னணையாளர் மார்க் நிக்கோலஸ் ஆகியோர் ஜாகுவார் காரில் லண்டன் கிளம்பினர். காரை ஓட்டிச் சென்ற டிரைவர் திடீரென அப்படியே மெதுவாக கண்ணயர்ந்துள்ளார். அதை முதலில் கவாஸ்கர் உள்பட யாருமே கவனிக்கவில்லை. அப்போது கார் சற்று தடம் மாறி எதிரே வந்த வாகனத்தின் மீது மோதுவது போல போனபோதுதான் கவாஸ்கர் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டுக் கத்தியுள்ளார். இந்த விபத்தில் கவாஸ்கர் உள்ளிட்ட அனைவருமே காயமின்றித் தப்பி விட்டனர். ஆனால் கார்தான் பெரும் சேதமடைந்து விட்டது. அதன் பின்னர் ரயிலில் ஏறி லண்டன் போனார்கள் கவாஸ்கரும் மற்றவர்களும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

போரில் அப்படி ஒன்னும் நிறைய பேர் காணாமல் போகலியே… சொல்வது கமிஷன் தலைவர்!

Posted: 13 Aug 2014 01:51 AM PDT

lankan-tamils

lankan-tamilsஇலங்கையின் உள்நாட்டு போரின்போது ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர். அதில் பெரும்பாலானோர் தமிழர்கள், அவர்களை கண்டுபிடித்து திரும்ப ஒப்படைக்கும்படி மக்கள் கோரிக்கைவிடுத்து வருகிறார்கள். சர்வதேச நாடுகளின் நெருக்கடியை தொடர்ந்து இதற்காக ஒரு 3 பேர் கொண்ட கமிஷனை அந்த நாட்டு அதிபர் மகிந்தா ராஜபக்சே அமைத்துள்ளார். கமிஷன் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி மேக்ஸ்வெல் பரனகமா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு வாரமாக, வடகிழக்கு பகுதியான மன்னார் மாவட்டத்தில் மக்களின் குறைகளை கேட்டறிந்தது மேக்ஸ்வெல் தலைமையிலான குழு. மன்னார் பகுதியில் 1 லட்சத்து 47 ஆயிரம் பேர் காணாமல் போய்விட்டதாக கூறப்பட்டுவருகிறது. எங்கள் கமிஷனுக்கு வந்த புகார்களின் எண்ணிக்கை வெறும் 312 மட்டுமே. எனவே குற்றச்சாட்டுகளில் முழுமையாக உண்மையில்லை என்றே கருதுகிறேன். எங்கள் கமிஷன் மீது தமிழ் மக்களுக்கு நம்பிக்கையில்லை என்று கூறப்படும் குற்றச்சாட்டும் பொய்தான். எங்களை சந்திக்க திரளாக வரும் தமிழர்களின் எண்ணிக்கையை பார்த்தால் இதை புரிந்துகொள்ள முடியும். இதுவரை எங்கள் கமிஷனுக்கு 19 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன. இதில் 5600 புகார்கள் பெற்றோர்களிடமிருந்து தங்களது பிள்ளைகளை காணவில்லை என்று கூறி வந்துள்ளன. காணாமல் போயுள்ளதாக கூறப்படும் பலர் வெளிநாடுகளில் பத்திரமாக வசிப்பது குறித்த தகவலும் எங்களுக்கு கிடைத்துள்ளன. இலங்கை வெளியுறவு துறை, கடிதம் மூலமாக இங்கிருந்து தப்பி சென்றவர்கள் வசிக்கும் நாடுகளை தொடர்புகொண்டு அவர்களை பற்றிய விவரங்களை கேட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மக்களைக் காக்க விமானங்கள் மூலம் 85,000 உணவுப் பொட்டலங்கள்- அமெரிக்கா ராணுவம்!

Posted: 13 Aug 2014 01:46 AM PDT

iraq

iraqஈராக்கில் இனக் கலவரத்தில் பாதிக்கப்பட்டுள்ள யாஸிதி இனத்தவருக்கு அமெரிக்கா 85 ஆயிரம் உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகின்றது. ஈராக்கில் "யாஸிதி" சிறுபான்மையின மக்களை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் வேட்டையாடி வருவதை தடுக்கும் நோக்கில் பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா தொடர்ந்து ஐந்தாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. சிஞ்ஜார் மலைகளில் தஞ்சம் புகுந்துள்ள இந்த மக்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பொட்டலங்களை வீசி வரும் அமெரிக்க விமானங்கள் மற்றொரு புறம் பயங்கரவாதிகளின் சோதனைச் சாவடி பதுங்குமிடங்கள் வாகன அணிவகுப்புகள் மீது வானிலிருந்து விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி அழித்து வருகிறது. கடந்த ஐந்து நாட்களில் 85 ஆயிரம் உணவு பொட்டலங்கள், 75 ஆயிரம் லிட்டர் தண்ணீரை விமானங்கள் மூலம் போட்டுள்ளது. எனினும் தரை வழி தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. "யாஸிதி இன மக்கள் முஸ்லிம் கொள்கைகளுக்கு எதிரானவர்கள்; அவர்கள் பேயை வழிபடுகின்றனர். அவர்களை அழிக்க வேண்டும்" எனக் கூறி கொத்து கொத்தாக அவர்களை கொன்று வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் நூற்றுக்கணக்கான யாஸிதி இன பெண்கள் சிக்கியுள்ளனர். இந்த இனத்தவர் ஜோராஸ்டிரிய மதம் எனப்படும் சிறுபான்மை மத வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

மனித உருவம்… நாசா வீடியோவால் பரபரப்பு!

Posted: 13 Aug 2014 01:38 AM PDT

dont-miss-an-alien-and-its-shadow-walking-on-moon

dont-miss-an-alien-and-its-shadow-walking-on-moonநிலவில் ஒரு மனித உருவமும், அதன் நிழலும் தெரிவது போன்ற வீடியோ காட்சியால் புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது.

இது நாசா எடுத்த படம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்து இன்னும் நாசா உறுதிப்படுத்தவில்லை. அந்த உருவம் என்ன, யார் அது என்பது குறித்தும் இன்னும் நாசா தெளிவுபடுத்தவில்லை.

ஒரு மனிதனின் உருவத்தைப் போலவே அது தெரிகிறது. அதன் நிழலும் நிலவின் தரைப்பரப்பில் தெளிவாகத் தெரிகிறது.

இந்தப் படம் அடங்கிய வீடியோ தற்போது யூடியூபில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

படையினருக்கு 'ஸ்பெஷல்' ஊசி போட்டு கொல்ல அனுப்பும் தலிபான்கள்!

Posted: 13 Aug 2014 01:35 AM PDT

taliban

talibanசுய நினைவையும் பயத்தையும் போக்கும் வகையில் தலிபான் தீவிரவாதிகளுக்கு ஒரு வித ஊசியைப் போட்டு பின்னரே தற்கொலைப் படைத் தாக்குதல்களுக்கு தீவிரவாத தலைவர்கள் அனுப்புவதாக தெரிய வந்துள்ளது. இதை ஆப்கானிஸ்தானின் காந்தகார் மாகாணத்தில் பிடிபட்ட தற்கொலைப் படைத் தீவிரவாதி ஒருவர் கூறியுள்ளார். அனைத்து தற்கொலைப் படைத் தீவிரவாதிகளுக்கும் இந்த ஸ்பெஷல் ஊசி போடப்படுவதாக அவர் கூறியுள்ளார். இந்த ஊசி போட்டதும் தாங்கள் மிகுந்த வெறியுடனும், விருப்பத்துடனும் தாக்குதலில் ஈடுபடும் எண்ணம் வரும் என்றும் அந்த தீவிரவாதி கூறியுள்ளார். இதுகுறித்து கைது செய்யப்பட்ட ரகமதுல்லா என்ற அந்தத் தீவிரவாதி கூறுகையில், தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு புறப்படுவதற்கு முன்பு அந்த தீவிரவாதிக்கு ஒரு ஊசி போடுவார்கள். ரகமதுல்லாவுக்கு ஆரம்பத்தில் பாகிஸ்தானில்தான் பயிற்சி அளித்து வந்துள்ளனர். பின்னர் அவர் காந்தஹார் மாகாணத்திற்கு வந்துள்ளார். அப்போதுதான் பாதுகாப்புப் படையினரிடம் சிக்கிக் கொண்டார். காந்தஹார் மாகாண ஆளுநரைக் கொல்லும் திட்டம் இவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்குள் இவர் சிக்கி விட்டார். காந்தஹார் மாகாண ஆளுநரைக் கொல்லும் திட்டம் இவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்குள் இவர் சிக்கி விட்டார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கைக்கு எதிரான விசாரணை குழு! ஐ.நா. ஆணையை மீறிய செயற்பாடு!- பிரசாத் காரியவசம்

Posted: 13 Aug 2014 12:12 AM PDT

prasad-kariyawasam

prasad-kariyawasamஇலங்கைக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் குழுவானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கப்பட்ட ஆணையை மீறிய செயற்பாடு என அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். அவ்வாறு குழு வொன்றை நியமிப்பதாயின் அந்தக் குழுவானது நாட்டை மீளக்கட்டியெழுப்பும் நோக்கிலானதாக அமைய வேண்டுமே தவிர நாட்டைத் தண்டிக்கும் நோக்கிலானதாக அமையக் கூடாது என்றும் அவர் குறிப்பிட் டுள்ளார். அமெரிக்க ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. இதனாலேயே சர்வதேச விசாரணைகளுக்கு நாம் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றோம். அது மட்டுமன்றி இலங்கையில் எந்தவிதமான மனித உரிமை மீறல்களும் இடம்பெறவில்லை. அவ்வாறானதொரு நிலையில் இலங்கை தொடர்பில் உயர்மட்டத்தில் கவனம் செலுத்தப்படுவதானது அதிர்ச்சிதரும் வகையில் அமைந்துள்ளது. பிரிவினைவாத எல்.ரி.ரி.ஈயினர் அழிக்கப்பட்டமைக்காக நாட்டைத் தண்டிக்கும் நோக்கில் செயற்பட்டுவரும் வெளிநாடுகளில் வாழும் எல்.ரி.ரி.ஈ ஆதரவுக் குழுவினரின் முயற்சியாகவே இந்த விசாரணைக் குழு அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் தனது செவ்வியில் அவர் குறிப்பிட்டார். நாட்டின் பொருளாதாரம், வர்த்தக மற்றும் அரசியல் செயற்பாடுகளில் தமிழர்கள் முழுமையாக ஈடுபடுத்தப்படுவதில்லையென்ற குற்றச்சாட்டு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமெரிக்கத் தூதுவர் பிரசாத் காரியவசம், இது தவறானதொரு கருத்து. கொழும்பு நகரிலுள்ள 70 வீதமான வர்த்தக நிலையங்கள் தமிழர்களுக்குச் சொந்தமானவை. தமிழ் அரசியல்வாதிகள் பலர் உள்ளனர். வடமாகாணத்தில் தமிழ் முதலமைச்சர் உள்ளார். தமிழ் கட்சிகளுடன் அரசாங்கம் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாராகவே உள்ளது என்றார். எனினும், தமிழ் பிரிவினைவாத குழுவினர் இலங்கைக்கு எதிராக நீண்ட காலமாகவே பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கட்டமைப்பை தக்கவைத்துக் கொள்ள 24 கேர்ணல்கள் பிரிகேடியர்களாக தரமுயர்வு!

Posted: 12 Aug 2014 11:58 PM PDT

Jaffna

Jaffnaஇலங்கையில் 24 இராணுவ கேர்ணல்கள் பிரிகேடியர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர். இதற்கான அங்கீகாரம் நேற்று வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் பாதுகாப்பு படைகளின் பிரதானி என்ற அடிப்படையில் ஜனாதிபதி இந்த பதவி உயர்வுகளை வழங்கியுள்ளார். இந்த பதவியுயர்வுகளில் சில ஜூன் மாதம் முதல் அமுலாகும் வகையிலும் ஏனையவை ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைமுறைக்கு வரும் வகையிலும் வழங்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் வடக்கு, கிழக்கில் பணியாற்றும் இராணுவத்தினருக்கே இந்த பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. போருக்கு பின்னர் அமைதி சூழ்நிலையில் இராணுவக் கட்டமைப்பில் பிரச்சினைகளை தவிர்க்கும் வகையிலேயே இவ்வாறான பதவியுயர்வுகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பாகிஸ்தானியர்களை நாடு கடத்தியதன் மூலம் இலங்கை சர்வதேச சட்டத்தை மீறியுள்ளது!- ஐ.நா. அமைப்பு!

Posted: 12 Aug 2014 11:45 PM PDT

people

peopleபாகிஸ்தான் அகதிகளை திருப்பியனுப்பியதன் மூலம் சர்வதேச சட்டங்களை இலங்கை அரசாங்கம் மீறியுள்ளது என்று ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது. இந்த அகதிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உரிய விசாரணைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. அடைக்கலம் பெற்ற அகதிகளை பலாத்காரமாக திருப்பியனுப்புவதில்லை என்று இலங்கை அரசாங்கம் சர்வதேச சட்டத்தின்படி உடன்பட்டுள்ளது. எனினும் அதனை மீறி பாகிஸ்தானிய அகதிகளை அது திருப்பியனுப்பியுள்ளமை தெளிவான உரிமை மீறலாகும் என்று ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை இந்த ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து 88 பாகிஸ்தானிய அகதிகளை திருப்பியனுப்பியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் அகதி அமைப்பின் எட்வேட்ஸ் குறிப்பிட்டுள்ளார். குறித்த அகதிகள் குடும்பங்களாக தடுத்து வைக்கப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 11 பெண்களும் 8 சிறுவர்களும் அடங்கியிருந்தனர். இந்தநிலையில் தொடர்ந்தும் குறித்த அகதிகள் நாடு கடத்தப்படுவதை கண்டிப்பதாக எட்வேட் குறிப்பிட்டுள்ளார். தமக்கு பாதுகாப்பில்லை என்று கூறி நூற்றுக்கணககான கிறிஸ்தவர்கள் பாகிஸ்தானில் இருந்து வந்து இலங்கையில் அடைக்கலம் கோரியிருந்தனர். இதேவேளை இலங்கையின் சிறைகளில் 71 ஆப்கானிஸ்தானியர்களும் இரண்டு ஈரானியர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக எட்வேட் குறிப்பிட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கொழும்பில் ஆர்ப்பாட்டங்களை நடத்த நீதிமன்றம் தடையுத்தரவு!

Posted: 12 Aug 2014 11:39 PM PDT

courts

courtsகொழும்பில் இன்று எவ்வித ஆர்ப்பாடடங்களையும் நடத்த முடியாது என்று மூன்று அமைப்புக்களின் மீது கொழும்பு நீதிவான் நீதிமன்றம் தடைஉத்தரவு பிறப்பித்துள்ளது. முஸ்லிம்களின் தவாஹித் ஜமாத், பௌத்த அமைப்பான பொது பல சேனா மற்றும் சிஹல ராவய ஆகியவற்றின் மீதே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நேற்று மாலை பொலிஸார் பெற்றுள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த அமைப்புக்கள் இன்று ஆர்ப்பாட்டங்களை நடத்தவிருப்பதாக தெரியவந்தமையை அடுத்தே பொலிஸார் தடையுத்தரவை பெற்றுள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

விஜயம் செய்யுமாறு அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரிக்கு அரசாங்கம் அழைப்பு!

Posted: 12 Aug 2014 11:24 PM PDT

johnkerryhearme

johnkerryhearmeஅமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இலங்கைக்கு விஜயம் செய்யவேண்டும் என்று அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. அமைச்சர் ஜி எல் பீரிஸ் இந்த அழைப்பை விடுத்துள்ளார். 2009 ஆம் போர் நிறைவடைந்தமையின் பின்னர் இலங்கை அடைந்துள்ள சாதனைகளை இதன்போது நேரில் அறிந்துக்கொள்ளலாம் என்று பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். மியன்மாரில் நடைபெற்ற 21வது ஆசியான் பிராந்திய அமர்வின் போது ஜோன் கெரிக்கு இந்த அழைப்பை அமைச்சர் நேற்று முன்தினம் விடுத்தார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அமைச்சர் பீரிஸ், உண்மையான நிலவரங்களை அறிந்துகொள்ள ஜோன் கெரி இலங்கைக்கு விஜயம் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளில்அண்மைய காலங்களில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கதாகும்,

This posting includes an audio/video/photo media file: Download Now

தலையை தூக்கிப் பிடித்திருக்கும் 7-வயது சிறுவன்: கவலையான, வயிற்றை புரட்டக்கூடிய, கோரமான காட்சி!

Posted: 12 Aug 2014 11:18 PM PDT

Boy

Boyயு.எஸ்.மாநில செயலாளர் ஜோன் கெரி சிட்னியில் பிறந்த 7-வயது சிறுவன் ஒருவன் சிரிய போர்வீரர் ஒருவரின் துண்டிக்கப்பட்ட தலையை தூக்கி வைத்திருப்பதை காட்டும் படம் மிகவும் மோசமான வயிற்றை புரட்டக்கூடிய கொடூரமான இது வரை ஒருபோதும் வெளியிடப்படாத ஒன்றென விபரித்துள்ளார். இப்படம் சிரியாவின் வடபகுதியில் உள்ள ஒரு நகரத்தில் எடுக்கப்பட்டு சிறுவனின் தந்தையும் பயங்கரவாத குற்றவாளி என தண்டிக் கப்பட்டவருமான Khaled Sharrouf என்ற இஸ்லாமிய நாட்டு போராளியால் ருவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் தொடர்பாக அரசியல் வாதிகளும் முஸ்லீம் தலைவர்களும் அதிர்ச்சியும் அருவருப்பும் கொண்டுள்ளதாக அறியப்படுகின்றது. ருவிட்டரில் அவுஸ்ரேலிய குடியிருப்பாளரும் சிறுவனின் தந்தையுமான Khaled Sharrouf வெட்டப்பட்ட தலை ஒன்றை வைத்திருக்கும் இன்னுமொரு படமும் வெளியிடப்பட்டுள்ளது. "இந்த பிள்ளை பாடசாலையில் இருக்க வேண்டும். தனது எதிர்காலத்தை நினைத்து படிக்கவேண்டும் மற்றய பிள்ளைகளுடன் விளையாட வேண்டும் இவ்வாறு வெட்டப்பட்ட தலையை தூக்கிப் பிடித்து கொண்டு வெளியே நிற்க கூடாதென" ஜோன் கெரி கூறியுள்ளார். இன்னுமொரு படத்தில் Khaled Sharrouf தனது இரண்டு மகன்களுடன் கையில் இயந்திர துப்பாக்கிகள் ஏந்தியபடி நிற்கின்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™