Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஆந்திரா தலைநகர் பற்றி சந்திரபாபு நாயுடு 9–ந்தேதி முடிவு: மத்திய குழு சிபாரிசு ஏற்கப்படுமா?

Posted: 31 Aug 2014 11:15 PM PDT

ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. ஐதராபாத் தெலுங்கானாவுடன் சேர்க்கப்பட்டதால், ஆந்திராவுக்கு புதிய தலை நகரை தேர்வு செய்ய முன்னாள் மத்திய நகர்புற அபிவிருத்தி துறை செயலாளர் கே.எம்.சிவராம கிருஷ்ணன் தலைமையில் நிபுணர் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. இக்குழுவினர் அனைத்து மாவங்களையும் பார்வைட்டயிட்டனர். பின்னர்

தேப்பாறை அணை நிரம்பியது: கேரளாவில் கனமழை நீடிப்பு

Posted: 31 Aug 2014 11:03 PM PDT

கேரளாவில் தென் மேற்கு பருவமழை கடந்த ஒருவாரகாலமாக கனமழையாக பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் பல இடங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வாழை, மரச்சீனி, நெல் உள்பட விவசாய பயிர்கள் சேதம் அடைந்துள்ளது.

எல்லையில் தாக்குதல் நீடிப்பு: பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை

Posted: 31 Aug 2014 10:58 PM PDT

பாகிஸ்தான் ராணுவம் கடந்த மூன்று மாதங்களாக எல்லையில் தாக்குதல் நடத்தி வருகிறது. காஷ்மீர் மாநிலம் ஜம்மு, சம்பா ஆகிய இரு மாவட்டங்களில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் சிறு ரக பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறல்களால் எல்லைப் பகுதி மக்களில் 3 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயம் அடைந்தனர். இதனால் எல்லையோர

உலக நாடுகளில் இந்தியாவில்தான் வீட்டு விற்பனை விலை மிகவும் சரிவு: ஐஎம்எப் தகவல்

Posted: 31 Aug 2014 10:47 PM PDT

உலக நாடுகளில் நடைபெற்றுவரும் ரியல் எஸ்டேட் வர்த்தக விற்பனைகளில் இந்தியாதான் மிகவும் சரிவை சந்தித்துள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில் எடுத்த கணக்கீடுகளில் தெரிவித்துள்ளது. உலகளவில் 52 நாடுகளில் நடைபெறும் முக்கிய சந்தைகளின் விற்பனையை ஆய்வு செய்து தொகுக்கப்பட்ட முடிவுகளில் இந்தியா 9.1 சதவிகித வீழ்ச்சியை சந்தித்துள்ளது

வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் சந்திரபாபு நாயுடுவை தூங்க விட மாட்டோம்: சிரஞ்சீவி

Posted: 31 Aug 2014 10:36 PM PDT

ஆந்திராவில் நடந்து முடிந்த பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. உள்ளாட்சி தேர்தலில் கூட அக்கட்சி பெரும் தோல்வியை சந்தித்தது. ஆந்திராவை பிரிக்கும் முடிவை எடுத்ததே காங்கிரஸ் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது. பலர் கட்சியில் இருந்து விலகி மாற்று கட்சிக்கு தாவி விட்டனர்.

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா 26–ந்தேதி தொடங்குகிறது

Posted: 31 Aug 2014 09:33 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 26–ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது. இதுகுறித்து திருமலை–திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திரா பிரம்மோற்சவ விழா

மத மோதல்களுக்கு காரணம் யார்?: பா.ஜனதா எம்.பி. கருத்தால் சர்ச்சை

Posted: 31 Aug 2014 08:50 PM PDT

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பாரதீய ஜனதா எம்.பி., ஆதித்யநாத். அந்த மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் அவர் கட்சியின் பொறுப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனியார் டெலிவிஷன் சேனல் ஒன்றுக்கு மத மோதல்கள் குறித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் மத மோதல்களுக்கு சிறுபான்மையினர்தான் காரணம் என்று அர்த்தம் தொனிக்கிற வகையில்

டெல்லியில் குழந்தை வரம் வேண்டி வந்த பெண்ணை கற்பழிக்க முயன்ற 3 மந்திரவாதிகள் கைது

Posted: 31 Aug 2014 08:30 PM PDT

தலைநகர் டெல்லியில் உள்ள பஜன்புரா பகுதியை சேர்ந்த ஒரு பெண், திருமணமாகி ஏழாண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாததால் மனமுடைந்துப் போனார். தனது மன உளைச்சலுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் வெளியாகியிருந்த ஒரு விளம்பரத்தை கண்டு மகிழ்ச்சியடைந்த அந்தப் பெண் டெல்லியின் மோகன் நகர் பகுதியில் உள்ள மாந்தரீக நிலையத்திற்கு சென்று அங்குள்ள மந்திரவாதியிடம் தனது மனக்குறையை கூறினார்.

வாரணாசியில் வெடித்த வன்முறையில் வாகனங்களுக்கு தீவைப்பு: 5 போலீசார் காயம்

Posted: 31 Aug 2014 08:10 PM PDT

குஜராத் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட வாரணாசியில் நேற்று வெடித்த வன்முறையை கட்டுப்படுத்த வந்த போலீசாரில் 5 பேர் கல்வீச்சில் காயமடைந்தனர். இங்குள்ள சகுனாஹா கிராமத்தை சேர்ந்த ரவ்னக் என்ற சிறுவன் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் கடத்தி கொல்லப்பட்ட சம்பவத்தில் சரியான நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டிக்கும் விதமாக படகான் பகுதியில்

மனைவியின் செக்ஸ் தொல்லையால் பாதிக்கப்பட்ட கணவருக்கு விவாகரத்து

Posted: 31 Aug 2014 08:00 PM PDT

மும்பையை சேர்ந்தவர்கள் சரத்-யாமினி தம்பதியர் (பெயர்கள் மாற்றித் தரப்பட்டுள்ளன). இவர்களுக்கு கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. சிறிது காலமே யாமினியுடன் வாழ்ந்த நிலையில், அவரது செக்ஸ் தொல்லை காரணமாக சரத் மிகவும் பாதிக்கப்பட்டார். மனைவியிடமிருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என கோரி மும்பை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்தார்.

சோஷலிசத்திற்கு எதிரான திரிணாமூல் காங்கிரசுடன் கூட்டணியில்லை: புத்ததேவ் பட்டாச்சார்யா

Posted: 31 Aug 2014 04:32 PM PDT

சோஷலிசத்திற்கு எதிரான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என அக்கட்சியின் மத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சார்யா கூறியுள்ளார். பீகார் அரசியலில் இரு துருவங்களாக இருந்த ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலுவும், ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமாரும் பல

முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் பேரன் பா.ஜ.க.வில் இணைந்தார்

Posted: 31 Aug 2014 03:17 PM PDT

அரியானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்தின் முக்கிய தலைவரும், மறைந்த துணை பிரதமரான தேவிலாலின் பேரன்கள் அனிருத் மற்றும் ஆதித்யா ஆகியோர் பா.ஜ.க.வில் இணைந்தனர். விவசாயிகளின் தலைவராக கருதப்பட்ட தேவிலாலுக்கு நான்கு மகன்கள் உள்ளனர். இவர்களில் நீண்ட நாட்களுக்கு முன் இறந்த மகனான ஜகதீஷ் சவுதாலாவின் மகன்கள் தான் அனிருத்தும் ஆதித்யாவும். அவரது

மேடக் பாராளுமன்ற தொகுதியில் கடும் போட்டி: டி.ஆர்.எஸ்-பா.ஜ.க கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் பாய்ச்சல்

Posted: 31 Aug 2014 03:10 PM PDT

தெலுங்கானா மாநிலம் மெடக் பாராளுமன்ற தொகுதியில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி சார்பில் சந்திரசேகரராவ் வெற்றி பெற்றார். பின்னர், தெலுங்கானா மாநில முதல்–மந்திரியாக பதவி ஏற்றதால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து காலியான மெடக் தொகுதிக்கு அடுத்த மாதம் 13–ந் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி வேட்பாளராக பிரபல தொழில் அதிபரும், சோனி டிராவல்ஸ் நிறுவன தலைவருமான கொத்த பிரபாகர் ரெட்டி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ்

இமாச்சலில் கார் கவிழ்ந்து விபத்து: இருவர் பலி

Posted: 31 Aug 2014 02:41 PM PDT

இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள மஹ்லி என்ற இடம் அருகே 100 அடி பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலியானார்கள். தனியார் பல்கலைக்கழகத்தின் துணை பதிவாளரான பங்கஜ் சிங் மற்றும் ஸ்டோர் இன்சார்ஜ் ஈஸ்வர் பரத்வாஜ் ஆகியோர் பயணம் செய்த கார் மஹ்லிலிருந்து 15 கி.மீ தொலைவில் சிம்லா-ஜுங்கா சாலையில் சென்று கொடிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கிடு கிடு பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே பங்கஜ் சிங் பலியானார்.

பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க கோரி ஈரோடு ஆங்கிலோ-இந்திய பெண் பிரதமர் மோடிக்கு கடிதம்

Posted: 31 Aug 2014 01:59 PM PDT

பாராளுமன்ற மக்களவையில் ஆங்கிலோ-இந்திய பிரதிநிதிகள் போதிய அளவில் இல்லை என ஜனாதிபதி கருதினால், அதிகபட்சமாக அந்த சமூகத்தைச் சேர்ந்த இருவரை மக்களவை உறுப்பினர்களாக அவர் நியமிக்க முடியும். இந்த நிலையில், ஈரோட்டைச் சேர்ந்த சமூக சேவகியான ஆங்கிலோ-இந்திய பெண் டயானா கிரேஸ் தாமஸ் (வயது 33) பிரதமர் நரேந்திர

கர்நாடக கவர்னரை நியமிப்பது குறித்து என்னிடம் கலந்து பேசவில்லை: சித்தராமையா குற்றச்சாட்டு

Posted: 31 Aug 2014 01:31 PM PDT

கர்நாடக கவர்னராக இருந்த பரத்வாஜின் பதவிக்காலம் முடிந்ததும், உடனடியாக புதிய கவர்னரை மத்திய அரசு நியமிக்கவில்லை. இதற்கு பதிலாக தமிழக கவர்னர் ரோசய்யா, கூடுதல் பொறுப்பாக கர்நாடகத்தையும் கவனித்து வந்தார். இந்த நிலையில், கர்நாடகத்தின் புதிய கவர்னராக வஜூபாய் வாலா நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் இன்று (திங்கட்கிழமை) பதவி ஏற்க உள்ளார்.

ஆசிரியர் தினத்தன்று பிரதமர் மோடி, மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார்

Posted: 31 Aug 2014 01:18 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ந் தேதி ஆசிரியர் தினத்தை சிறப்பிக்கும் விதமாக டி.வி.யில் உரை நிகழ்த்துவது வழக்கம். அவரது இந்த உரையை குஜராத் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பார்ப்பதற்கும் ஏற்பாடு செய்யப்படும். இதே பாணியை பின்பற்றி வருகிற 5-ந் தேதி பிரதமர் மோடி நாடு முழுவதிலும் உள்ள பள்ளி மாணவ-மாணவிகளிடையே கலந்துரையாடும்

மத்திய மந்திரி ஆன பிறகும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஜிதேந்திரசிங்

Posted: 31 Aug 2014 01:05 PM PDT

காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர் டாக்டர் ஜிதேந்திரசிங். ஜம்முவில் மருத்துவமனை நடத்தும் இவர் பாரதீய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.பி.யாகி, மத்திய மந்திரி சபையிலும் இடம் பெற்றார். அறிவியல், தொழில்நுட்பம், பிரதமர் அலுவலகம் ஆகிய துறைகளை கவனிக்கும் ராஜாங்க மந்திரியான டாக்டர் ஜிதேந்திரசிங், இப்போதும் ஜம்மு நகரில்

இந்தியா இனியும் வெள்ளைக் கொடியை காண்பித்துக் கொண்டிருக்காது: ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

Posted: 31 Aug 2014 09:47 AM PDT

பாகிஸ்தான் உட்பட அனைத்து நாடுகளுடனும் அமைதியான நல்லுறவையே பேண இந்தியா விரும்புகிறது. ஆனால், அதற்காக பொறுமையாகவும், மௌனமாகவும் இருக்கும் இந்தியாவின் நிலைப்பாட்டை மற்ற நாடுகள் பலவீனமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

டெல்லியில் திடீர் மழையால் தணிந்தது வெப்பம்

Posted: 31 Aug 2014 09:35 AM PDT

ஹரியானா, உத்தரபிரதேசத்தில் பெய்த மழையை தொடர்ந்து தலைநகர் டெல்லி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் இன்று திடீர் மழை பெய்தது. இதனால், கடந்த சில நாட்களாக அங்கு நிலவி வந்த கடும் வெப்பம் தணிந்தது. ஞாயிற்றுக்கிழமையான இன்று அங்கு குறைந்த பட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியஸ் வரை சென்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™