Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


கவர்னர் கமலாபெனிவால் முட்டுக்கட்டையால் குஜராத் மாநில அரசுக்கு ரூ.1,200 கோடி இழப்பு: புதிய குற்றச்சாட்டு

Posted: 07 Aug 2014 10:49 PM PDT

கமலா பெனிவால் குஜராத் கவர்னராக இருந்போது அரசுக்கு ரூ.1200 கோடி இழப்பு ஏற்படுத்தினார் என்று புதிய குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது. குஜராத் மாநில கவர்னராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 87 வயது கமலா பெனிவால் பதவி வகித்தார். மத்தியில் பா.ஜனா ஆட்சிக்கு வந்ததும் அவர் பதவி விலக மறுத்துவிட்டார். இதனால் அவர் மிசோரம் மாநில கவர்னராக மாற்றப்பட்டார்.

வீட்டில் தவறி விழுந்த ஜஸ்வந்த்சிங் தலையில் அடிப்பட்டது: ஆஸ்பத்திரியில் சிகிச்சை

Posted: 07 Aug 2014 10:45 PM PDT

முன்னாள் ராணுவ மந்திரியும், பா.ஜனதா முன்னாள் தலைவருமான ஜஸ்வந்த்சிங் டெல்லியில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார். நேற்று நள்ளிரவு 11 மணிக்கு அவர் வீட்டில் திடீரென்று கால் வழுக்கி தவறி விழுந்தார். இதில் அவர் தலையில் அடிபட்டு பலத்த காயம் அடைந்தார். உடனடியாக டெல்லியில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் காவிரி வழக்கு வேறு அமர்வுக்கு மாறுகிறது

Posted: 07 Aug 2014 10:40 PM PDT

தமிழகத்திற்கு கர்நாடகத்திற்கும் இடையே காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்ந்து இருந்த வண்ணம் இருக்கிறது. இதுதொடர்பாக இரண்டு அரசுகளும் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. காவிரி பிரச்சினையில் காவிரி நடுவர்மன்றம் விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதியான லோதா தலைமையிலான அமர்வு விசாரிக்க மறுக்கிறது.

ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி பிறப்பித்த 19 உத்தரவுகள்

Posted: 07 Aug 2014 10:28 PM PDT

மத்திய– மாநில அரசுப் பணிகளில் உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் உயர் அதிகாரிகள் சிறப்பாகவும், பொறுப்பாகவும் செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார். பிரதமர் பதவியை ஏற்றதும் இதற்காக அவர் அரசின் பல்வேறு துறை செயலாளர்களையும் நேரில் அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கொள்கை முடிவு தொடர்பான ஆவணங்கள் 3 மேஜைகளுக்கு

கேரளாவில் பலத்த மழை நீடிப்பு: 3 மாடி வீடு இடிந்து மகளுடன் தம்பதி பலி

Posted: 07 Aug 2014 10:13 PM PDT

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 1 வாரமாக மாநிலம் முழுவதும் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக வட மாவட்டங்களிலும், மலை கிராமங்களிலும் பலத்த மழை பெய்வதால் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பயிர்களும் நாசமானது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியதால் பல வீடுகள் இடிந்து விழுந்தன.

லிபியாவில் இருந்து 71 கேரள நர்சுகள் உள்பட 114 மலையாளிகள் நாடு திரும்பினர்

Posted: 07 Aug 2014 09:51 PM PDT

லிபியாவில் இருந்து 71 கேரள நர்சுகள் உள்பட 114 மலையாளிகள் நாடு திரும்பினர்

கேரள அரசின் கனிம ஆலையில் வாயு கசிவு: 85 மாணவிகள் ஆஸ்பத்திரியில் அனுமதி

Posted: 07 Aug 2014 09:16 PM PDT

கேரள மாநிலம் சாவரா பகுதியில் அரசுக்கு சொந்தமான கனிம மற்றும் உலோக ஆலை உள்ளது. இதன் அருகே அரசு மற்றும் சில தனியார் பள்ளிகளும் உள்ளன. இங்கு நூற்றுக்கணக்கான மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள். நேற்று காலை பள்ளி தொடங்கியதும், திடீரென அந்த பகுதியில் ஒருவித நெடியுடன் கூடிய வாயு பரவியது.

மாநில மொழிகளில் சிவில் சர்வீசஸ் தேர்வுகள்: அதிமுக கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது

Posted: 07 Aug 2014 08:42 PM PDT

சிவில் சர்வீசஸ் தேர்வில், ஆங்கிலப்புலமை பெற்றவர்களுக்கு சாதகமாக கொண்டு வரப்பட்டுள்ள 'சிசாட்' எனப்படும் திறனறி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் கடந்த சில மாதங்களாக போராடி வருகின்றனர். இந்த விவகாரம் மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள நிலையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள்

கல்பாக்கம் அணு மின்நிலையம் அடுத்த ஆண்டு செயல்பட தொடங்கும்: மத்திய மந்திரி

Posted: 07 Aug 2014 08:07 PM PDT

டெல்லி மேல்-சபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது ஒரு துணைக் கேள்விக்கு பதில் அளித்து அணுசக்தித்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியதாவது:- கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் தோரியத்தை மூலப்பொருளாக கொண்டு 300 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அணு உலை அமைக்கும் திட்டத்தின் பெரும் பகுதிகள் முடிவடைந்துவிட்டன. அடுத்த ஆண்டு முதல் அந்த அணு உலை செயல்படத் தொடங்கும். தோரியத்தை

கே.ஆர்.எஸ். அணை நிரம்பியதால் காவிரி நீர் பிரச்சினை ஏற்படாது: சித்தராமையா பேச்சு

Posted: 07 Aug 2014 05:20 PM PDT

கர்நாடகத்தில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்று மண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.எஸ். அணை. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவ மழை கொட்டி வருகிறது. இதனால் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதையடுத்து, அணை தனது முழு கொள்ளளவான

இந்திய கடற்படைக்கு மேலும் ஒரு போர்க்கப்பல்: பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

Posted: 07 Aug 2014 04:58 PM PDT

புதிய போர்க்கப்பல் 6 ஆயிரத்து 800 டன் எடை கொண்டது. மும்பையில் மஜகாவ் டக்யார்டு லிமிடெட் என்ற நிறுவனம் போர்க்கப்பல் கட்டும் பணியை மேற்கொண்டது. கடற்படை சார்பில் வடிவமைப்பு பணிகள் செய்யப்பட்டன

பத்மநாபசாமி கோவிலில் மதிப்பீட்டு பணிகள் நிறைவு

Posted: 07 Aug 2014 04:26 PM PDT

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் ஆறு ரகசிய அறைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ரகசிய அறைகளில் தங்கம், வெள்ளி, வைரம், ரத்தினம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் இருந்தன. இதற்கிடையே ரகசிய அறைகளில் உள்ள பொருட்களின் விவரப்பட்டியலை தயாரித்து தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம்

சோனியா, ராகுல் மீதான வழக்கு விசாரணை 28-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

Posted: 07 Aug 2014 03:12 PM PDT

முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவினால் 1938-ம் ஆண்டு தொடங்கப்பட்டது நேஷனல் ஹெரால்டு பத்திரிகை. தற்போது வெளிவராத அந்தப் பத்திரிகைக்கு புத்துயிரூட்ட அசோஷியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு காங்கிரஸ்

வாரணாசி கங்கையில் படகு கவிழ்ந்து விபத்து: மேலும் 5 உடல்கள் மீட்பு

Posted: 07 Aug 2014 08:29 AM PDT

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி கங்கை நதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான பகுதியில் இருந்து மேலும் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. கங்கை நதியில் வாரணாசியில் இருந்து மிர்சாபூரின் காங்பூருக்கு சென்ற மோட்டார் படகு பெடாவர் கட் அருகே சென்றபோது கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த 42க்கும் மேற்பட்ட பயணிகள் தண்ணீருக்குள் விழுந்தனர். தண்ணீரில் விழுந்தவர்களில் 23 பேர் நீந்தி கரைக்கு வந்தனர். தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் தண்ணீருக்குள் விழுந்து மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவு வரை 7 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், அதன்பின்னர்

மக்களவையில் தொழிலாளர் சட்டத்திருத்த மசோதாக்கள் அறிமுகம்

Posted: 07 Aug 2014 07:50 AM PDT

மக்களவையில் இன்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தொழிலாளர் சட்டத் திருத்த மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. தொழில் நிறுவனங்களில் பெண்கள் இரவில் பாதுகாப்பாக பணிபுரிவதற்கும், பின்னர் அவர்கள் பாதுகாப்புடன் வீடு போய்ச்சேர வாகன வசதி வழங்குவதற்கும் ஏற்ற வகையில் தொழிற்சாலைகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. பெண்கள் இரவுப்பணி புரிவதற்கு ஏற்க வகையில் சில விதிமுறைகள் தளர்த்தப்படுகிறது. ஓவர் டைம் நேரத்தை அதிகரித்தல், பொறியியல் அல்லாத பட்டதாரிகளுக்கு பயிற்சி பணி உள்ளிட்ட சில திருத்தங்கள் செய்யவும் மத்திய அரசு முடிவு

வறட்சி பாதித்த பகுதிகளில் டீசல்-விதை மானியம்: மத்திய அரசு அறிவிப்பு

Posted: 07 Aug 2014 06:04 AM PDT

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குறைவான அளவே மழை பெய்துள்ள நிலையில், வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் விவசாயத்துக்கு டீசல் மற்றும் விதைகளுக்கு மானியம் அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் இன்று விவசாயத்துறை மந்திரி ராதா மோகன் சிங் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அபபோது அவர் பேசியதாவது:- 50 சதவீதத்துக்கும் அதிகமாக மழை பற்றாக்குறை உள்ள மாநிலங்களுக்கு விவசாயத்திற்காக டீசல் மானியம் வழங்கப்படும். மேலும், மறுவிதைப்பு

மகாராஷ்டிராவில் மகாயுதி கூட்டணியில் லோக் ஜனசக்தி கட்சி ஒரு அங்கம்: பஸ்வான்

Posted: 07 Aug 2014 05:45 AM PDT

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜனதா-சிவசேனா தலைமையிலான மகாயுதி கூட்டணியில் லோக் ஜனசக்தி கட்சி அங்கம் வகிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மும்பையில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த பிறகு, மகாயுதி கூட்டணியிலும் லோக் ஜனசக்தி கட்சி இடம் பெற்றுள்ளது. எத்தனை இடங்கள் என்பது விஷயமில்லை. நாங்கள் போட்டியிட ஒரு சீட் கூட கிடைக்காவிட்டாலும் எங்கள் கூட்டணி உடையாது. நாங்கள் நாக்பூர் தொகுதியில் நிதின் கட்காரிக்காக பிரச்சாரம் செய்வோம். அவர் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

ரெயில்களில் பயணிகளின் லக்கேஜ் திருட்டு அதிகரிப்பு

Posted: 07 Aug 2014 05:24 AM PDT

ரெயில் பயணம் வசதியாக இருப்பதால் இந்தியாவில் பெரும்பாலானோர் ரெயில் பயணத்தையே நாடுகின்றனர். ஆனால் அவர்கள் கொண்டு வரும் லக்கேஜ் மற்றும் பொருட்கள் அடிக்கடி திருட்டு போகும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. 2013-ம் ஆண்டில் மட்டும் 1587 திருட்டு புகார்கள் வந்துள்ளன. இது 2012-ம் ஆண்டை விட 489 அதிகமாகும். இந்த வருடம் ஜூன் மாதம் வரை 827 திருட்டு புகார்கள் வந்துள்ளன.

உத்தரகாண்டில் விவசாயிகளுக்கு பென்சன் திட்டம்: சுதந்திர தினத்தில் அறிமுகம்

Posted: 07 Aug 2014 05:23 AM PDT

உத்தரகாண்ட் மாநில அரசு, விவசாயிகளுக்கு பென்சன் வழங்கும் திட்டத்தை சுதந்திர தினத்தில் அறிமுகம் செய்ய உள்ளது. இதன்மூலம் 60 வயதைக் கடந்த விவசாயிகள் மாதம் 800 ரூபாய் ஓய்வூதியம் பெறுவார்கள். விவசாயத்தில் ஈடுபடும் வகையில் மக்களை, குறிப்பாக மலைப்பகுதியில் வசிக்கும் மக்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டிருப்பதாக தலைமை செயலாளர் தெரிவித்தார். சுதந்திர தினத்தன்று பென்சன் வழங்கும் வகையில் தங்கள் பகுதிகளில் 100 பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும் என்று மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மின் உற்பத்தியை அதிகரிக்க பழைய மின் நிலையங்கள் நவீனமாக மாற்றப்படும்: மத்திய அரசு

Posted: 07 Aug 2014 05:07 AM PDT

மின்சார உற்பத்தியை அதிகரிக்க 25 வருடங்களுக்கு முன்புள்ள அனைத்து மின்உற்பத்தி நிலையங்களும் நவீனமாக மாற்றப்படும் என்று மக்களவையில் மின்சாரத்துறை மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:- பழமையான அனைத்து மின்உற்பத்தி நிலையங்களும் நவீன மற்றும் சுற்றுப்புற சூழலை பாதிக்காத மின் உற்பத்தி நிலையங்களாக படிப்படியாக மாற்றம் செய்யப்படும்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™