மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- எபோலா காய்ச்சல் இந்தியாவில் பரவும் அபாயம்: விமான நிலையங்களில் மருத்துவ சோதனை
- பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ பெண் ஏஜெண்டுடன் தொடர்பு: ஐதராபாத் ராணுவ அதிகாரி கைது
- ராஜீவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனையை உறுதிபடுத்த மத்திய அரசு தீவிரம்
- எர்ணாகுளம் அருகே அடுக்குமாடி குடியிருப்பு மண்ணில் புதைந்தது 3 பேர் பலி
- இந்திய அணியில் இடம் பிடித்த கேரள கிரிக்கெட் வீரருக்கு உம்மன்சாண்டி பாராட்டு
- எபோலா நெருக்கடி: இந்தியா வரும் மேற்கு ஆப்பிரிக்கப் பயணிகள் கண்காணிக்கப்படுவர்
- மகாராஷ்டிரா அமைச்சரவை கூட்டத்தில் நாராயண் ரானே: சவானுடன் நெருக்கம் காட்டினார்
- ஒரு தலைப்பட்சமாக நடக்கிறேனா?: ராகுல்காந்தி குற்றச்சாட்டுக்கு சபாநாயகர் மறுப்பு
- பீகாரில் இடைத்தேர்தல்: லாலு-நிதிஷ் ஒரே மேடையில் பிரசாரம்
- பிரியங்கா தீவிர அரசியலுக்கு வரவேண்டும் என்ற கருத்தால் ராகுல் டென்ஷன்: பா.ஜ.க கருத்து
- குஜராத் ஆளுனராக இருந்தபோது விமான பயணத்தில் முறைகேடு செய்ததால் கமலா பெனிவால் நீக்கம்
- ஆ.ராசா, கனிமொழி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு 20-ந் தேதிக்கு தள்ளிவைப்பு
- கோர்ட்டு ஆலோசகராக நீடிக்குமாறு கோபால் சுப்பிரமணியத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு வேண்டுகோள்
- 16 வயதுடையவர்கள் ஆண்கள்: சிறுவர் நீதி சட்ட மசோதா திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- லிப்டில் சென்றபோது பெண் ஊழியருக்கு முத்தம் கொடுக்க முயன்ற சி.இ.ஓ மீது வழக்கு
- சி.வி.சி.க்கு கடந்த ஆண்டு 49 ஆயிரம் ஊழல் புகார்கள்: ரெயில்வே துறை முதலிடம்
- மிசோரம் கவர்னர் பதவியில் இருந்து கம்லா பேனிவால் நீக்கம்
- ரெயில்வே துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல்
- வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இந்திய பாதுகாப்பு படை வீரரை காப்பாற்றிய பாக். வீரர்கள்
- வாரணாசி கங்கையில் படகு கவிழ்ந்து விபத்து: 7 உடல்கள் மீட்பு
| எபோலா காய்ச்சல் இந்தியாவில் பரவும் அபாயம்: விமான நிலையங்களில் மருத்துவ சோதனை Posted: 06 Aug 2014 10:36 PM PDT பறவை காய்ச்சல், டெங்கு காய்ச்சல் வரிசையில் தற்போது ''எபோலா காய்ச்சல்'' இந்தியர்களிடம் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. காய்ச்சல் வகைகளில் எபோலா காய்ச்சல் என்பது மிக, மிக மோசமானதாகக் கருதப்படுகிறது. எபோலா காய்ச்சல் தாக்கியவர்களில் 80 சதவீதம் பேர் உயிரிழப்பை சந்தித்துள்ளனர் என்பதில் இருந்தே இந்த காய்ச்சலின் கொடூரத்தை தெரிந்து கொள்ளலாம். உயிர் பறிக்கும் இந்த காய்ச்சலுக்கு ''எபோலா'' என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? 1976–ம் ஆண்டு ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள சையர் நாட்டில் எபோலா ஆற்றங்கரை மக்களிடம் ஒருவித காய்ச்சல் பரவியது. அது என்ன வகை வைரசால், எப்படி பரவுகிறது என்பது மர்மமாக இருந்தது. |
| பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ பெண் ஏஜெண்டுடன் தொடர்பு: ஐதராபாத் ராணுவ அதிகாரி கைது Posted: 06 Aug 2014 10:16 PM PDT பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ. பெண் ஏஜெண்டிடம் ராணுவ ரகசியங்களை கூறியதாக ஐதராபாத் ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டார். கைதான அதிகாரியின் பெயர் பதன்குமார் பொத்தார் நாயக் (40). மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இவர் செகந்திரபாத் கண்டேண் மெண்ட்டில் இ.எப்.இ. யூனிட்டில் சுபேதராக பணியாற்றி வருகிறார். முன்பு சென்னையில் பணியாற்றி வந்த இவர் ஒரு ஆண்டுக்கு முன்புதான் செகந்திரபாத் கண்டோன்மெண்டு பிரிவுக்கு பணி மாறுதலாகி வந்தார். |
| ராஜீவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனையை உறுதிபடுத்த மத்திய அரசு தீவிரம் Posted: 06 Aug 2014 10:00 PM PDT முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991–ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வந்தபோது மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு தூக்குத் தண்டனையும் 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. பிறகு நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் |
| எர்ணாகுளம் அருகே அடுக்குமாடி குடியிருப்பு மண்ணில் புதைந்தது 3 பேர் பலி Posted: 06 Aug 2014 09:48 PM PDT கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ளது குன்னத்தேரி. இங்கு வசித்து வந்தவர் ஷாஜஹான்(வயது 48). இவரது மனைவி செய்புன்னிசா(34). இவர்களது மகள் ஆயிஷா(13). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் ஆயிஷா 9–ம் வகுப்பு படித்து வந்தாள். ஷாஜஹானின் வீடு அடுக்குமாடி குடியிருப்பாகும். தரைத்தளத்தில் ஷாஜஹான் மற்றும் அவரது குடும்பத்தினர் வசித்து வந்தனர். முதல் தளத்தில் யாரும் இல்லை. 2–வது தளத்தில் வடமாநில தொழிலாளர்கள் 7 |
| இந்திய அணியில் இடம் பிடித்த கேரள கிரிக்கெட் வீரருக்கு உம்மன்சாண்டி பாராட்டு Posted: 06 Aug 2014 09:11 PM PDT கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞத்தைச் சேர்ந்தவர் சஞ்சு சாம்சன். அங்குள்ள மார் இவானியோஸ் கல்லூரியில் படித்து வருகிறார். கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள இவர், கேரள மாநில அணியில் இடம் பிடித்து பல்வேறு போட்டிகளில் சிறப்பாக ஆடினார். இதனால் இந்திய ஏ அணியிலும் இடம் பிடித்தார். சமீபத்தில் இந்திய ஏ அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய 4 நாடுகள் கிரிக்கெட் போட்டியில் |
| எபோலா நெருக்கடி: இந்தியா வரும் மேற்கு ஆப்பிரிக்கப் பயணிகள் கண்காணிக்கப்படுவர் Posted: 06 Aug 2014 05:24 PM PDT மேற்கு ஆப்பிரிக்காவின் கினியாவில் தென்படத் துவங்கிய எபோலா என்னும் விஷ நோய்த்தொற்று தாக்குதலுக்கு இதுவரை 800-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் இதற்கான மருத்துவ, நிதி உதவிகளை அந்நாடுகளுக்கு அளித்து இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் |
| மகாராஷ்டிரா அமைச்சரவை கூட்டத்தில் நாராயண் ரானே: சவானுடன் நெருக்கம் காட்டினார் Posted: 06 Aug 2014 04:29 PM PDT மகராஷ்டிராவில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து அக்கட்சி தலைவர் சோனியாவை அம்மாநில தொழிற்துறை மந்திரி நாராயண் ரானே சந்தித்தார். அப்போது மாநில முதல்வர் பிரித்விராஜ் |
| ஒரு தலைப்பட்சமாக நடக்கிறேனா?: ராகுல்காந்தி குற்றச்சாட்டுக்கு சபாநாயகர் மறுப்பு Posted: 06 Aug 2014 04:07 PM PDT தான் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்வதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளதை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மறுத்தார். பாராளுமன்றத்துக்கு வெளியே இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், "என் மீது காங்கிரசார் குற்றம் சாட்டுவது குறித்து நான் எதுவும் செய்ய முடியாது |
| பீகாரில் இடைத்தேர்தல்: லாலு-நிதிஷ் ஒரே மேடையில் பிரசாரம் Posted: 06 Aug 2014 03:47 PM PDT பீகார் மாநிலத்தில் காலியாக உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு இம்மாதம் 21ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தும் வண்ணம் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரியா ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன |
| பிரியங்கா தீவிர அரசியலுக்கு வரவேண்டும் என்ற கருத்தால் ராகுல் டென்ஷன்: பா.ஜ.க கருத்து Posted: 06 Aug 2014 03:33 PM PDT பாராளுமன்ற கூட்டத்தொடர் நேற்று நடந்து கொண்டிருந்தபோது அவையின் மையப்பகுதிக்கு சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு எதிராக கோஷம் எழுப்பினார். மேலும் சுமித்ரா பாரபட்சமாக நடந்து கொள்வதாக அவர் குற்றஞ்சாட்டினார் |
| குஜராத் ஆளுனராக இருந்தபோது விமான பயணத்தில் முறைகேடு செய்ததால் கமலா பெனிவால் நீக்கம் Posted: 06 Aug 2014 02:47 PM PDT குஜராத் மாநில கவர்னராக பதவி வகித்த கமலா பெனிவால் கடந்த மாதம் மிசோரம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார். அங்கு 30 நாட்களே கவர்னராக பணியாற்றிய நிலையில் திடீரென நேற்று மாலை அவரை ஆளுநர் பதவியிலிருந்து நீக்கி பிரணாப் முகர்ஜி |
| ஆ.ராசா, கனிமொழி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு 20-ந் தேதிக்கு தள்ளிவைப்பு Posted: 06 Aug 2014 01:56 PM PDT 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கப்பட்ட விவகாரத்தில், கலைஞர் டி.வி.க்கு பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து முறைகேடாக ரூ.200 கோடி பணம் வழங்கப்பட்டதாக கூறி மத்திய அமலாக்கப் பிரிவினர் வழக்கு தொடர்ந்தனர் |
| கோர்ட்டு ஆலோசகராக நீடிக்குமாறு கோபால் சுப்பிரமணியத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு வேண்டுகோள் Posted: 06 Aug 2014 12:19 PM PDT முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியத்தை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு ஆட்சேபனை தெரிவித்ததால், அவர் நீதிபதி நியமன பட்டியலில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டார். அத்துடன், தலைமை நீதிபதி லோதா |
| 16 வயதுடையவர்கள் ஆண்கள்: சிறுவர் நீதி சட்ட மசோதா திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் Posted: 06 Aug 2014 12:00 PM PDT நாட்டில் கற்பழிப்பு குற்றங்கள் பெருகுவதை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி 16 வயதை சேர்ந்தவர்கள் கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபட்டால் அவர்கள் வயது வந்தவர்களாக கருதப்பட ஏதுவாக சிறுவர் நீதி சட்ட மசோதாவில் திருத்தங்களை கொண்டு வர அரசு |
| லிப்டில் சென்றபோது பெண் ஊழியருக்கு முத்தம் கொடுக்க முயன்ற சி.இ.ஓ மீது வழக்கு Posted: 06 Aug 2014 10:29 AM PDT பெங்களூரின் எச்.எஸ்.ஆர் லே அவுட் அருகே உள்ள ஓட்டலில் லிப்டில் சென்றபோது, தனது அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு முத்தம் கொடுக்க முயன்ற சி.இ.ஓ மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் |
| சி.வி.சி.க்கு கடந்த ஆண்டு 49 ஆயிரம் ஊழல் புகார்கள்: ரெயில்வே துறை முதலிடம் Posted: 06 Aug 2014 09:24 AM PDT மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு நாடும் முழுவதும் இருந்து கடந்த 2013-ம் ஆண்டில் 48920 புகார்கள் வந்துள்ளதாக பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் லஞ்சம் வாங்கியது தொடர்பாக ரெயில்வே துறைக்கு எதிராக 11243 புகார்கள் வந்துள்ளன. வங்கி அலுவலகத்திற்கு எதிராக 7365 புகார்களும், |
| மிசோரம் கவர்னர் பதவியில் இருந்து கம்லா பேனிவால் நீக்கம் Posted: 06 Aug 2014 09:02 AM PDT மத்தியில் மோடி தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைத்ததும், அக்கட்சியில் உள்ள முக்கிய தலைவர்களுக்கு கவர்னர் பதவி கொடுத்து கவுரவிக்க நினைத்தது. அதன்படி, காங்கிரஸ் ஆட்சியில் கவர்னராக நியமிக்கப்பட்ட சிலரை ராஜினாமா செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியது. ஆனால், கேரளாவில் இருந்த ஷீலா தீட்சித் உள்பட சிலர் பதவி விலக மறுத்து விட்டனர். குஜராத்தில் லோக் ஆயுக்தா |
| ரெயில்வே துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல் Posted: 06 Aug 2014 08:53 AM PDT ரெயில்வே துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. ரெயில்வே துறையில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும் என்றும், பொது தனியார் பங்களிப்புடன் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும் பா.ஜனதா அரசு தாக்கல் செய்த முதல் ரெயில்வே பட்ஜெட்டில் |
| வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இந்திய பாதுகாப்பு படை வீரரை காப்பாற்றிய பாக். வீரர்கள் Posted: 06 Aug 2014 07:10 AM PDT இந்திய- பாகிஸ்தான் எல்லைக்கோடு அருகே இருநாட்டு வீரர்களும் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவைச் சேர்ந்த 6 வீரர்கள் ஜம்முவில் உள்ள செனாப் ஆற்றில் படகில் ரோந்து சென்றனர். அப்போது அவர்கள் சென்ற படகின் என்ஜின் திடீரென பழுதானது. அதேசமயம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக |
| வாரணாசி கங்கையில் படகு கவிழ்ந்து விபத்து: 7 உடல்கள் மீட்பு Posted: 06 Aug 2014 06:49 AM PDT உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி கங்கை நதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான பகுதியில் இருந்து 7 பேரின் உடல்கள் இன்று மீட்கப்பட்டன. கங்கை நதியில் வாரணாசியில் இருந்து மிர்சாபூரின் காங்பூருக்கு நேற்று ஒரு பயணிகள் படகு சென்றது. அதில் 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன், |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |