Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தனித்துவத்துடன் தொடரும் லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழா:மார்க்கோ சொலாரி

Posted:

 

சினிமாவை நேசிக்கும் பல்லாயிரக் கணக்கானவர்கள், பியாற்சா கிரான்டே பெரு முற்றத்தை  நிறைந்திருக்க, அமர்க்களமாக ஆரம்பமானது 67வது லோகார்ணோ சர்வதேச திரைப்படவிழா.


Read more ...

கொல்கத்தாவில் இரண்டு வருடங்களாக எந்த வளர்ச்சியும் இல்லை!:ரத்தன் டாட்டா

Posted:

கொல்கத்தாவில் கடந்த இரண்டு வருடங்களாக எந்த வளர்ச்சியும் இல்லை என்று, பிரபல தொழிலதிபர் ரத்தன் டாட்டா கூறியுள்ளார்.


Read more ...

பாலில் கலப்படம் செய்தால் கொடுமையான தண்டனை!:ஹர்ஷ வர்தன்

Posted:

பாலில் கலப்படம் செய்தால் கொடுமையான தண்டனை வழங்கப்படும் என்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.


Read more ...

நான் இன்னமும் மதுரை ஆதீனமாகவே இருக்கிறேன்!: நித்தியானந்தா

Posted:

தாம் இன்னமும் மதுரை இளம் ஆதீனமாகவே நீடிப்பதாக, நித்தியானந்தா மதுரை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.


Read more ...

சிக்கல் வருமா சினேகாவுக்கு?

Posted:

பத்திரிகையாளர் முத்துராமலிங்கன் இயக்கியிருக்கும் சினேகாவின் காதலர்கள் படத்தின் கதை நடிகை சினேகாவின் சொந்தக்கதையா?


Read more ...

குழந்தைகளை வைத்து அதிக ஆபாசப் படங்கள் எடுப்பது இந்தியாவில்தான்!

Posted:

குழந்தைகளை வைத்து அதிக ஆபாசப் படங்கள் எடுப்பது இந்தியாவில்தான் அதிகம் என்று, ஆய்வில் தெரிய வந்துள்ளது.


Read more ...

குற்றவியல் தண்டனை சட்டத்தின் படி 16 வயது உடையவர்கள் ஆண்களே!

Posted:

குற்றவியல் தண்டனைச் சட்டத்தின்படி, 16 வயதுக்குடையவர்கள் ஆண்கள்


Read more ...

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும் நிலை!

Posted:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்னும் ஓரிரு நாட்களில் 100 அடியை எட்டும் நிலையில் உள்ளது.


Read more ...

ஒன்றுபட்ட இலங்கையை ஏற்றுக்கொண்ட த.தே.கூ.உடன் அரசாங்கம் பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும்: சஜித் பிரேமதாஸ

Posted:

ஒன்றுபட்ட இலங்கை எனும் விடயத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உயர்நீதிமன்றத்திலேயே ஏற்றுக்கொண்டு அறிவித்துவிட்டது. இந்த நிலையில், அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முயற்சிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். 


Read more ...

இலங்கை மீதான ஐ.நா. விசாரணைகள் ஆரம்பம்; ஆதாரங்கள், தகவல்களை சமர்ப்பிக்க கோரிக்கை!

Posted:

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு, தனது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 


Read more ...

ஆப்பிரிக்க மக்களைத் தாக்கியுள்ள எபோலா நோய் இந்தியாவிலும் பரவும் அபாயம்!

Posted:

ஆப்பிரிக்க மக்களை கடந்த சில நாட்களாக எபோலா நோய்த் தொற்று பாதித்து, இதனால் அவர்கள் உயிரிழக்கவும் நேரிட்டு வருகிறது. இது இந்தியாவிலும் பரவும் அபாயம் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.


Read more ...

ஊவா மாகாண சபைத் தேர்தல் செப் 20ஆம் திகதி நடைபெறும்: மஹிந்த தேசப்பிரிய

Posted:

ஊவா மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். 


Read more ...

உள்ளூர் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்; வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் அரசு கோரிக்கை!

Posted:

காணாமற்போனோர் தொடர்பிலான நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்போது உள்ளூர் உணர்வுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளிநாட்டு இராஜதந்திரிகள் சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. 


Read more ...

மிசோரம் ஆளுநர் கமலா பேணிவலை மத்திய அரசு அதிரடியாக நீக்கியுள்ளது!

Posted:

மிசோரம் ஆளுநர் கமலா பேணிவலை மத்திய அரசு அதிரடியாக நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. 


Read more ...

பிரதமர் நரேந்திர மோடி சர்வாதிகாரி இல்லை: ராஜ்நாத் சிங்

Posted:

பிரதமர் நரேந்திர மோடி சர்வாதிகாரி இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 


Read more ...

இனவாதத்தைத் தூண்டும் குறுஞ்செய்திகளை அனுப்பிய குற்றச்சாட்டில் நான்கு முஸ்லிம்கள் கைது!

Posted:

இலங்கை முஸ்லிம்களுக்குள் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தகவல்களை அலைபேசி குறுஞ்செய்தி (SMS) மூலம் பரப்பியதாக குற்றஞ்சாட்டி நான்கு முஸ்லிம்களை பொலிஸார் நேற்று புதன்கிழமை கொழும்பில் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Read more ...

ரயில்வே உட்கட்டமைப்பில் 100 சதவீத நேரடி அன்னிய முதலீடு; மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Posted:

ரயில்வே உட்கட்டமைப்பில் 100 சதவிகிதம் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பிலான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று புதன்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது. 


Read more ...

முதன் முதலாக வால்வெள்ளியைச் (comet) சென்றடைந்த விண்கலமாக சாதனை படைத்தது Rosetta விண்கலம்

Posted:

சுமார் 10 வருடங்களாக பில்லியன் கணக்கான மைல்கள் விண்ணில் துரத்திச் சென்று ஒரு வழியாக இன்று புதன்கிழமை 'றொசெட்டா' (Rosetta) என்ற விண்கலம் வால்வெள்ளி (comet) ஒன்றின் சுற்றுவட்டப் பாதையில் இணைந்து அதில் தரையிறங்கியும் உள்ளது.


Read more ...

3300 ராக்கெட்டுக்கள்!:1900 உயிர்கள்!:மத்திய கிழக்கில் சமாதானம் வெகு தொலைவில்?

Posted:

ஜூலை 8 முதல் காஸாவில் சுமார் 3300 ராக்கெட்டுக்கள் வீசப்பட்டும் 1900 உயிர்கள் பலியாகியும் உள்ள வேளையில் நேற்று செவ்வாய்க்கிழமை எகிப்து மத்தியஸ்தம் வகித்த 72 மணித்தியாலம் நீடிக்கக் கூடிய சமாதான ஒப்பந்தத்தை இரு தரப்பும் ஏற்றுக் கொண்டன.


Read more ...

இன்று (ஆகஸ்ட் 6) ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் அணுகுண்டு பேரழிவு நிகந்த 69 ஆவது நினைவு தினம்

Posted:

இன்று புதன்கிழமை 69 ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பானின் ஹிரோஷிமா நகரை அணுகுண்டு தாக்கி அழித்த நினைவு தினமாகும். 1945 இல் 2 ஆம் உலக யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர ஜப்பானைச் சரணடைய வைப்பதற்காக ஆகஸ்ட் 6 ஆம் திகதி ஹிரோஷிமா நகரில் யுரேனியம் அணு அடங்கிய லிட்டில் பாய் (Little Boy) என்ற தனது முதலாவது அணுகுண்டை அமெரிக்கா வீசியிருந்தது.

3 நாட்களுக்குள் அதாவது ஆகஸ்ட் 9 ஆம் திகதி ஃபேட் மேன் (Fat Man) என்ற புளூட்டோனியம் வகை அணுகுண்டை நாகசாகி மீது அமெரிக்கா வீசியது. இவ்விரு அணுகுண்டுகளினதும் தாக்கம் இன்று வரை தொடர்கின்ற போதும் முதல் 4 மாதங்களுக்குள் ஹிரோஷிமாவில் 90 000 - 166 000 பொது மக்களும் நாகசாகியில் 60 000 - 80 000 பொது மக்களும் பலியாகி இருந்தனர். இதையடுத்து ஆகஸ்ட் 15 இல் ஜப்பான் சரணடைந்ததுடன் 2 ஆம் உலக யுத்தம் முடிவுக்கு வந்தது. ஜப்பான் மீது அணுகுண்டு போடப்பட்டது முக்கியமான அரசியல் நகர்வா அல்லது மனிதாபிமானம் அற்ற வல்லாதிக்கத்தின் வெளிப்பாடா என்பது இன்று வரை உலக அரங்கில் விவாதத்துக்கு உரிய விடயமாக இருந்து வருகின்றது.

இந்நிலையில் ஹிரோஷிமா அணுகுண்டு பேரழிவின் 69 ஆவது நினைவு தினமான இன்று அந்நகரில் உள்ள சமாதானப் பூங்காவில் 45 000 மக்கள் சூழ்ந்து ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். மேலும் ஹிரோஷிமா மேயர் கஷுமி மட்சுயி அமெரிக்க அதிபர் ஒபாமா உட்பட முக்கிய உலகத் தலைவர்களை தமது நகரான ஹிரோஷிமா மற்றும் நாகசாகிக்கு விஜயம் செய்து அணுகுண்டுகளின் பேரழிவு குறித்த விழிப்புணர்வைப் பெறுமாறு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அணுகுண்டின் தாக்கத்தை நேரில் அனுபவித்த ஒரேயொரு உலக நாடான ஜப்பான் உலகில் பெருகி வரும் அணுவாயுதங்களை அழிப்பதில் முக்கிய பொறுப்பைக் கொண்டுள்ளது என்றும் இந்நினைவு தினத்தில் கலந்து கொண்ட ஜப்பான் பிரதம்ர் சின்ஷோ அபே தெரிவித்துள்ளார்.


Read more ...

கட்டார் விமானத்தில் வெடி குண்டு பீதி!:இங்கிலாந்து போர் விமானப் பாதுகாப்புடன் அவசரத் தரையிறக்கம்

Posted:

நேற்று செவ்வாய்க்கிழமை சுமார் 282 பயணிகளுடன் டோஹாவில் இருந்து இங்கிலாந்து சென்ற கட்டார் ஏர்வேஸின் பிளைட் 23 விமானம் பயணித்துக் கொண்டிருக்கையில் 47 வயது மதிக்கத் தக்க இங்கிலாந்து நாட்டுப் பயணி ஒருவர் விமானத்தில் வெடி குண்டு இருப்பதாகப் பீதியைக் கிளப்பி ஒரு துண்டுப் பிரசுரத்தை பணியாளர் மூலம் விமானிக்குக் கொடுத்துள்ளார்.


Read more ...

அமெரிக்காவின் முக்கிய இராணுவத் தளபதி ஆப்கானிஸ்தானில் சுட்டுக் கொலை

Posted:

ஆப்கானிஸ்தானில் தற்போது நிலை கொண்டிருக்கும் பெரும்பான்மையான அமெரிக்க வீரர்கள் உட்பட நேட்டோ படை வீரர்கள் இவ்வாண்டு இறுதிக்குள் வாபஸ் பெறவுள்ள நிலையில் இவர்கள் மீதான தலிபான்களின் தாக்குதலும் பதில் தாக்குதலும் அதிகரித்து வருகின்றது.


Read more ...

பௌத்த பிக்குகள் அராஜகம்; கோத்தபாயவே பொறுப்பேற்க வேண்டும்: மனோ கணேசன்

Posted:

கொழும்பு மருதானையில் காணாமற்போனோரின் உறவினர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் இராஜதந்திரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் அத்துமீறி நுழைந்து பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட குழப்பத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே பொறுப்பேற்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


Read more ...

1470 வாடிக்கையாளர்களுக்கு மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர் தேவையில்லையாம்!

Posted:

இதுவரை 1470 வாடிக்கையாளர்கள் மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர் தேவையில்லை என்று விண்ணப்பித்து உள்ளனர் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.


Read more ...

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த தமது மகனை ரோபோ கருவி மூலம் மீட்டால் போதும்:தந்தை

Posted:

கர்நாடகாவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை, ரோபோ கருவி மூலமே மீட்டால் போதுமானது என்று, சிறுவனின் தந்தை மனமுடைந்து கூறியுள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™