Tamil Star |
- விவசாயம் போல் சினிமாவும் அழிந்து விடும் அபாயம்: விவேக் ஆதங்கம்!
- பிரபுதேவா உடன் வெறும் நட்பு மட்டும்தான்: லிங்கா நாயகி சோனாக்ஷி சின்கா!
- அஜீத், விஜய் இணைந்து மீண்டும் நடிக்கணும்: மெட்டி ஒலி காயத்ரி விருப்பம்!
- நிலைத்து நிற்பது சிரமம் தனுஷ் பேட்டி!
- அதிபர் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது- வேட்பாளர் அப்துல்லா எதிர்ப்பு!
- ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் மீது ஆசிரியருக்கு வந்த தெய்வீக காதல்!
- காதலியைக் கவர தவளை போடுற ஆட்டத்தைப் பாருங்க!
- கழட்ட முடியாத மோதிரத்தை எளிதில் கழட்டுவது எப்படி?… கலக்கும் சூப்பர் காணொளி!
- அய்யோ பாவம்!…. இவங்களுக்கு உதவிசெய்ய யாருமே இல்லையா?
| விவசாயம் போல் சினிமாவும் அழிந்து விடும் அபாயம்: விவேக் ஆதங்கம்! Posted: 09 Jul 2014 02:40 AM PDT
ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் - அமலாபால் நடித்துள்ள வேலையில்லா பட்டதாரி படம் வரும் 18ம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படம் தனுஷின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் தனுஷ், அமலாபால், அனிருத், விவேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் விவேக் பேசியதாவது:- படங்களை தயாரித்து அதை திரைக்கு கொண்டு வருவது இப்போது மிக சிரமமாக இருக்கிறது. ஒரே வாரத்தில் தியேட்டர்களில் இருந்து படத்தை தூக்கி விடுகிறார்கள். சிறு முதலீட்டு பட தயாரிப்பாளர்கள் ஆபத்தில் இருக்கிறார்கள். ஏராளமான சிறு முதலீட்டு படங்கள் திரைக்கு வர முடியாமல் முடங்கிக்கிடக்கின்றன. அந்த படங்கள் வெளிவருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், விவசாயம் அழிவது போல் சினிமாவும் அழிந்து விடும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார். விரைவில் ரிலீசாகியுள்ள இப்படத்தில் தனுஷ் - விவேக் கூட்டணியில் காமெடி தூள் பறக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளது.
This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிரபுதேவா உடன் வெறும் நட்பு மட்டும்தான்: லிங்கா நாயகி சோனாக்ஷி சின்கா! Posted: 09 Jul 2014 02:36 AM PDT
மணிரத்னம், லிங்குசாமி என பல இயக்குநர்கள் முயன்றும் தமிழுக்கு நடிக்க வராத சோனாக்ஷி, ரஜினி படம் என்ற உடன் ஒத்துக்கொண்டுள்ளார். பிரபுதேவா உடன் நீண்டகாலமாக நட்பு பாராட்டி வரும் சோனாக்ஷி, அவர் தமிழில் படம் இயக்கினால் கண்டிப்பாக நடிப்பேன் என்கிறார். ரஜினி சார் என் அப்பாவின் நண்பர், அவருடன் நடித்தால் ஒரே நாளில் தமிழ் மக்களுக்கு தெரிந்தவளாகிவிடுவேன் எனவேதான் லிங்கா படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டேன் என்கிறார். இந்த வயதிலும் ரஜினி இளமையாக, சுறுசுறுப்பாக இருக்கிறார். நகைச்சுவை உணர்வும், ஹீரோயிசமும்தான் அவரது ஸ்பெசல் என்று கூறியுள்ளார் சோனாக்ஷி. பிரபு தேவா என்னுடைய வெற்றிப் படங்களின் இயக்குநர். நான் அவருடைய நடனத்திற்கு ரசிகை. அவருடன் வெறும் நட்பு மட்டும்தான் உள்ளது. தமிழில் அவர் படம் இயக்கினால் கண்டிப்பாக நடிப்பேன். குஷ்பு, ஜோதிகா, தேவயானி போன்ற மும்பையைச் சேர்ந்த நாயகிகளுக்கு தமிழக ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர். எனக்கு இதே வரவேற்பு இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு நடிகையைப் பிடித்துப் போனால் கோவில் கட்டும் ரசிகர்கள் இங்கே இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் என்கிறார் சோனாக்ஷி. This posting includes an audio/video/photo media file: Download Now |
| அஜீத், விஜய் இணைந்து மீண்டும் நடிக்கணும்: மெட்டி ஒலி காயத்ரி விருப்பம்! Posted: 09 Jul 2014 12:02 AM PDT
மாமியாரிடம் திட்டு வாங்கி எல்லா மருமகள்கள் மனதிலும் பச்சென்று ஒட்டிக்கொண்ட காயத்ரி பின்னர் மேகலா தொடரில் நடித்தார். சில ஆண்டுகள் தமிழ் சீரியல் பக்கம் எட்டிப்பார்க்காமல் இருந்துவிட்டு இப்போது மீண்டும் ஜீ தமிழ் சேனலில் 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' நெடுந்தொடர் மூலம் வீட்டின் வரவேற்பரைக்கு வந்து போகிறார். இந்த காதல் தொடர் நடுத்தரவயது காதலர்களை அதிகம் கவர்ந்துள்ளதாம். தன்னுடைய சினிமா, சீரியல் பயணங்களைப் பற்றி அவரே கூறியுள்ளார் படியுங்களேன். ஒரு தொடரில் நடிக்கும் போது மற்ற தொடர்களில் கமிட் ஆவதில்லை என்பது என் பாலிசி எனவேதான் தமிழ் தொடர்களில் இவ்வளவு இடைவெளி ஏற்பட்டுள்ளது. இனி அப்படி ஏற்படாது. முப்பது வயதைத் தாண்டிய ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏற்படும் காதல் எப்படிப்பட்டது என்பதுதான் நெஞ்சத்தைக் கிள்ளாதே தொடரின் கதை. தல அஜீத், தளபதி விஜய் இணைந்து நடித்த 'ராஜாவின் பார்வையிலே' படத்தில் நாயகி நான்தான். அஜீத் என்னுடன் சகஜமாக பேசினார். விஜய் பேச தயக்கம் காட்டினார். அப்போது இருவருமே வளரும் நாயகர்கள். இன்றைக்கு இருவரும் இரு துருவங்களாக பிரம்மாண்டமாக வளர்ந்து இருக்கின்றனர். தல, தளபதி மீண்டும் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும். மும்பைப் பெண் என்பதால் தமிழில் அறிமுகமானபோது எனக்கு தமிழ் தெரியாது. இப்போது எனக்கு ஐந்து மொழி தெரியும். சீரியலில் மட்டும்தான் நடிப்பீர்களா? மீண்டும் சினிமாவில் நடிக்கமாட்டீர்களா என்று கேட்கிறார்கள். சும்மா வந்து போவதில் எனக்கு விருப்பமில்லை. ஒரு படம் நடிச்சாலும் வெயிட் ஆ இருக்கணும் என்கிறார் காயத்ரி. This posting includes an audio/video/photo media file: Download Now |
| நிலைத்து நிற்பது சிரமம் தனுஷ் பேட்டி! Posted: 08 Jul 2014 11:55 PM PDT
நடிகராவது சுலபம். ஆனால், நிலைத்து நிற்பது சிரமமான காரியம் எனத் தெரிவித்துள்ளார் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை படம் மூலம் அறிமுகமான நடிகர் தனுஷின் 25வது படம் வேலையில்லா பட்டதாரி. இப்படத்தில் தனுஷ் ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் டைரக்டு செய்துள்ள இப்படத்தை, தனுஷே தயாரித்துள்ளார். எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் வெளியிடுகிறார். இந்நிலையில், நேற்று இப்படம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்தார் தனுஷ். அப்போது அவர் கூறியதாவது :- நான், 14 வருடங்களுக்கு முன்பு சினிமாவுக்கு வந்தேன். 'வேலையில்லா பட்டதாரி'எனக்கு 25-வது படம். முன்பெல்லாம் நடிகராவது கஷ்டமானதாக இருந்தது. வந்தபின், அதிர்ஷ்டம் இருந்தால் நிலைக்கலாம். ஆனால் இப்போது, நடிகராவது சுலபம். ஆனால், நிலைத்து நிற்பது சிரமம். நான் 14 வருடங்களாக சினிமாவில் நிலைத்து நிற்பதற்கு ரசிகர்களின் அன்பும், ஆதரவும்தான் காரணம். 'வேலையில்லா பட்டதாரி,'நல்ல கதை. எனக்கு முக்கியமான படமாக இருக்கும். என் 25-வது படத்தில் விவேக் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அது நடந்துள்ளது. அமலாபாலும், நானும் ஏற்கனவே பல படங்களில் ஜோடியாக நடிக்க முயன்றும் நடக்கவில்லை. இந்த படத்தில் அது நடந்திருக்கிறது. அவருக்கு, பக்கத்து வீட்டுப்பெண் 'இமேஜ்'இருக்கிறது. மிக சிறப்பாக நடித்து இருக்கிறார். 1980-90-களில் மனோரமா இல்லாத படமே இருக்காது. இப்போது சரண்யா அம்மா வேடத்தில் நடிக்காத படமே இல்லை. அவரும், சமுத்திரக்கனியும் இந்த படத்தில் என் அம்மா-அப்பாவாக நடித்து இருக்கிறார்கள்' என இவ்வாறு தனுஷ் தெரிவித்தார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| அதிபர் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது- வேட்பாளர் அப்துல்லா எதிர்ப்பு! Posted: 08 Jul 2014 11:48 PM PDT
ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் அப்துல்லா அப்துல்லா அறிவித்துள்ளார். அமெரிக்காவில் 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி இரட்டை கோபுரத்தில் தாக்குதல் நடத்தி 3 ஆயிரம் பேரை கொன்ற அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் தாலிபான் அரசு அடைக்கலம் தந்தது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்து தாலிபான்களின் ஆட்சியை வீழ்த்தி, ஹமீது கர்சாயை அதிபராக அமர்த்தியது. அதைத் தொடர்ந்து அவர் 13 ஆண்டுகளாக அதிபர் பதவி வகித்து வருகிறார். அங்கு புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கு கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதி தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட ஹமீது கர்சாய்க்கு அனுமதி தரப்படவில்லை. இந்தத் தேர்தலில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா அப்துல்லா, பொருளாதார நிபுணர் அஷ்ரப் கனி ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தலில் யாரும் 50 சதவீத ஓட்டுக்களைப் பெற முடியவில்லை. இதன் காரணமாக அங்கு இரண்டாவது சுற்று தேர்தல் கடந்த மாதம் 14ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலின் முதல் கட்ட முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இந்தத் தேர்தலில் அப்துல்லா அப்துல்லா வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சற்றும் எதிர்பாராத வகையில் அஷ்ரப் கனி 56.44 சதவீத ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்றிருப்பதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. இறுதிக்கட்ட முடிவு வரும் 22ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். இதில் ஓட்டு சதவீதம் மாறக்கூடும் என தகவல்கள் கூறுகின்றன. இந்தத் தேர்தல் முடிவினை அப்துல்லா அப்துல்லா ஆதரவாளர்கள் முழுமையாக நிராகரித்து விட்டனர். இதுபற்றி அப்துல்லா அப்துல்லாவின் செய்தி தொடர்பாளர் முஜிப் ரகுமான் ரஹிமி கூறும்போது, இப்போது அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளை நாங்கள் ஏற்கவில்லை. இதில் மக்களின் ஓட்டுகளுக்கு எதிராக நடந்த சதி என கருதுகிறோம். கூறினார். இந்தத் தேர்தலில் பெருமளவு மோசடி நடந்துள்ளதாக அப்துல்லா அப்துல்லா குற்றம் சாட்டி உள்ளார். இவர் தாலிபான்களுக்கு எதிராக தீவிரமாக போராடியவராகும். இதனிடையே, ஆப்கன் தேர்தலில் முறைகேடு நடைபெற்றது தெரியவந்தால் அந்த நாட்டிற்கு அளிக்கப்படும் ராணுவ, பொருளாதார உதவிகள் நிறுத்தப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கைவிடுத்துள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் மீது ஆசிரியருக்கு வந்த தெய்வீக காதல்! Posted: 08 Jul 2014 11:42 PM PDT |
| காதலியைக் கவர தவளை போடுற ஆட்டத்தைப் பாருங்க! Posted: 08 Jul 2014 11:38 PM PDT |
| கழட்ட முடியாத மோதிரத்தை எளிதில் கழட்டுவது எப்படி?… கலக்கும் சூப்பர் காணொளி! Posted: 08 Jul 2014 11:35 PM PDT |
| அய்யோ பாவம்!…. இவங்களுக்கு உதவிசெய்ய யாருமே இல்லையா? Posted: 08 Jul 2014 11:32 PM PDT |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |








