Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


கால்பந்து போட்டி: பிரேசிலை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஜெர்மனி!

Posted: 08 Jul 2014 11:24 PM PDT

jermany

jermanyஉலககோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற முதலாவது அரை இறுதி போட்டியில் பிரேசில் அணியை அதன் சொந்த மண்ணில் அபாரமாக வீழ்த்திய ஜெர்மனி அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

ஆட்டத்தின் முதல் பாதியில் 25 நிமிடங்களுக்குள் அடுத்தடுத்து 5 கோல்களை அடித்து ஜெர்மனி அசத்தியது. ஜெர்மனி அணியின் அபார ஆட்டத்தை கண்டு செய்வதறியாது திகைத்த பிரேசில் வீரர்கள் தடுமாறினர்.

ஆட்டத்தின் முதல் பாதிலயே ஜெர்மனி இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விடும் என்று சுலபமாக கணிக்க முடிந்தது.

இதனையடுத்து அரங்கத்தில் இருந்த 70ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரேசில் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பல ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.

பின்னர் ஆட்டத்தின் இரண்டாம் பாதியிலும் ஜெர்மனியே ஆதிக்கம் செலுத்தியது. அதன் பின்னர் 2 கோல்களை அடித்த ஜெர்மனி தனது கோல் கணக்கை 7 ஆக உயர்த்தியது.

ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் பிரேசில் அணி 1 கோல் அடித்து ஆறுதல் அடைந்தது. இறுதியில் பிரேசில் ரசிகர்களின் நெஞ்சங்கள் நொறுங்க 7-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்தியா – இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்!

Posted: 08 Jul 2014 11:17 PM PDT

dhoni-cook-trophy

dhoni-cook-trophyஇரு அணிகளும் இதுவரை 107 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளன. இதில் இங்கிலாந்து 40 டெஸ்டிலும், இந்தியா 20 டெஸ்டிலும் வென்றுள்ளன. 47 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. இங்கிலாந்தில் நடந்த 52 டெஸ்டில் இந்தியா 5ல் மட்டுமே வென்றுள்ளது. இங்கிலாந்து 27 வெற்றியை வசப்படுத்த, 20 டிராவில் முடிந்துள்ளது. இந்தியாவில் நடந்த 55 டெஸ்டில், இங்கிலாந்து 13 மற்றும் இந்தியா 15ல் வென்றுள்ளன. 27 டெஸ்ட் டிரா ஆகியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே நடந்துள்ள 30 டெஸ்ட் தொடர்களில் இந்தியா 9லும், இங்கிலாந்து 17லும் வென்றுள்ளன. 4 தொடர்கள் டிராவில் முடிந்துள்ளன. இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் 664 (ஓவல் மைதானம், 2007). இங்கிலாந்து 710/7 டிக்ளேர் (எட்ஜ்பாஸ்டன், 2011). இந்தியா 1974ல் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்டில் 42 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது குறைந்தபட்ச ஸ்கோர். இங்கிலாந்து 1971 ஓவல் டெஸ்டில் 101 ரன்னுக்கு சுருண்டுள்ளது. இந்திய தரப்பில் வினோத் காம்ப்ளி 224 ரன் விளாசியதே தனிநபர் அதிகபட்சமாகும் (1992-93, மும்பை). இங்கிலாந்து தரப்பில் கிரகாம் கூச் 333 ரன் குவித்துள்ளார் (லார்ட்ஸ், 1990). சச்சின், டிராவிட் தலா 7 சதம் விளாசி முன்னிலை வகிக்கின்றனர். இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் 6 சதம் அடித்துள்ளார். மொத்த ரன் குவிப்பில் சச்சின் (32 டெஸ்ட், 2535 ரன், சராசரி 51.73) இங்கிலாந்து தரப்பில் கிரகாம் கூச் 19 டெஸ்டில் 1725 ரன் எடுத்துள்ளார் (சராசரி 55.65).

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கையில் தீவிரவாதத்துக்கு இடமில்லை: வடிவேல் கிருஸ்ணமூர்த்தி கருத்து!

Posted: 08 Jul 2014 11:08 PM PDT

vadivel_krishnamoorthy

vadivel_krishnamoorthyஇலங்கையில் இஸ்லாமிய பாரம்பரியத்துக்கு உரிய மரியாதை வழங்கப்படுவதாக இலங்கையின் சவூதி அரேபியாவுக்கான தூதுவர் வடிவேல் கிருஸ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். இலங்கையி;ல் உள்ள முஸ்லிம்கள் தொடர்பில் சர்வதேசத்தில் உள்ள முஸ்லிம்கள் அச்சத்தை வெளியிட்டு வருகின்றனர். எனினும் இலங்கையில் தீவிரவாத்துக்கு இடமில்லை என்று அவர் குறிப்பிட்டார். இலங்கையில் நாட்டு பற்றுள்ள முஸ்லிம்களே இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சவூதியில் இடம்பெற்ற இப்தார் விசேட நிகழ்வில் பங்கேற்ற அவர், இந்த தகவல்களை வெளியிட்டார். இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் தொடர்வதாக குறிப்பிட்டார். இதேவேளை நிகழ்வில் பங்கேற்ற இலங்கையில் இருந்து சவூதிக்கு சென்று பணிபுரியும் இலங்கையர் ஒருவர், அளுத்கமையில் வன்முறைகள் நிறைவுப்பெற்று தமது குடும்பமும் மீள வீடு திரும்பிவிட்டது எனினும் அங்கு பதற்றம் தணியவில்லை என்று குறிப்பிட்டதாக அரப் நியூஸ் குறிப்பிட்டுள்ளது

This posting includes an audio/video/photo media file: Download Now

திருப்பி அனுப்பும் எண்ணம் டோனி அபேட்டுக்கு கிடையாது: அவுஸ்திரேலிய ஊடகம்!

Posted: 08 Jul 2014 11:03 PM PDT

tony_apott

tony_apottஅவுஸ்திரேலிய கடலில் நிலைக்கொண்டிருக்கும் படகிலுள்ள 153 இலங்கை அகதிகளையும் இலங்கைக்கு திருப்பியனுப்பும் எண்ணம் அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபேட்டுக்கு இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல அவர்களை பொறுப்பேற்க இலங்கையும் தயாரில்லை என அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை இந்த அகதிகள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணை நேற்று இடம்பெற்ற போது,

குறித்த அகதிகள் படகை அவுஸ்திரேலிய கடற்படையினர் அகதி வலயத்துக்கு அப்பால் அதாவது அவுஸ்திரெலிய நிலப்பரப்புக்கு 12 மைல்களுக்கு அப்பால் வைத்தே இடைமறித்தமையை அரச சட்டத்தரணிகள் ஏற்றுக்கொண்டனர்.

இதற்கிடையில் இந்த படகு பாண்டிச்சேரியில் இருந்து புறப்பட்டதாக கூறப்பட்ட போதும், இந்தியாவின் அகதிமுகாம்களில் உள்ளவர்கள் என்று நம்பப்படும் 93 பேரும் எந்த நாட்டவர்கள் என்று அடையாளம் காணப்படாத 60 பேரும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை பாண்டிச்சேரி கரையில் இருந்து படகு ஒன்று புறப்படவில்லை என்று இந்திய அதிகாரிகள் கூறுவதால், இந்தப்படகு பயணிகள் நடுக்கடலில் வைத்து படகில் ஏற்றப்பட்டிருக்கலாம் என்று இந்திய தரப்புகளை கோடிட்டு அவுஸ்திரேலிய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பாராளுமன்றத்துக்கு ஜனாதிபதி விஜயம்! பசில் வெளியேற்றம்!

Posted: 08 Jul 2014 10:59 PM PDT

mahinda-rajapaksa-basil-rajapaksa

mahinda-rajapaksa-basil-rajapaksaபாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளும் பொருட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று செவ்வாய்க்கிழமை சபைக்கு சமுகமளித்திருந்தார்.

ஜனாதிபதி சபைக்குள் சமுகமளித்த மறுகணத்தில் அமைச்சர் பசில் ராஜபக்ச சபையிலிருந்து வெளியேறினார்.

நேற்றைய அமர்வின்போது சுமார் 2.20 மணியளவில் ஜனாதிபதி சபைக்குள் பிரவேசித்தார்.

எனினும், ஜனாதிபதி சபைக்குள் பிரவேசித்த மறுகணத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச சபையை விட்டு வெளியேறினார்.

பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் பிற்பகல் 1.00 மணிக்கு ஆரம்பமானது. சபையின் பிரதான நடவடிக்கைகள் மற்றும் வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் என்பவற்றின் நிறைவில் போக்குவரத்து அமைச்சர் வெல்கம மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிக் கொண்டிருந்தார்.

இதன்போது 2.20 மணியளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபகச சபைக்குள் சமுகமளித்தார். ஜனாதிபதி சபைக்குள் சமுகமளித்த மறுகணத்தில் அமைச்சர் பசில் ராஜபக்ச சபையிலிருந்து வெளியேறினார்.

எனினும், எதிர்க்கட்சிகளின் பக்கமாக ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ள ஆளும் கட்சியின் பின்வரிசை எம்.பி.க்களான அருந்திக பெர்னாண்டோ, லொஹான் ரத்வத்த உள்ளிட்டோர் ஜனாதிபதி அமரும் ஆசனத்துக்கு பின்புறமாக வந்து அமர்ந்து கொண்டனர்.

இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் எரான் விக்கிரமரட்ண எம்.பி. உரையாற்றிக் கொண்டிருந்தார். எரான் எம்.பி. உரையாற்றி முடியும் வரையில் சபையில் அமர்ந்து அவதானித்துக் கொண்டிருந்த ஜனாதிபதி, சில சந்தர்ப்பங்களில் எரான் எம்.பி.யின் கருத்துகளை ஆமோதித்தும் சுவாரஷ்யமான கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார்.

இதன்போது, பார்வையாளர் கலரியில் அமர்ந்திருந்த பாடசாலை மாணவர்களைப் பார்த்து ஜனாதிபதி கையசைத்துக் கொண்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

இதேவேளை, எரான் எம்.பி.யின் உரையின் நிறைவின் 2.40மணியளவில் ஜனாதிபதி சபையிலிருந்து வெளியேறினார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

தீங்கு விளைவிக்க இங்கு வரவில்லை! பங்காளிக் கட்சிகளின் விமர்சனம் குறித்து ராமபோசா வருத்தம்!

Posted: 08 Jul 2014 10:55 PM PDT

Cyril+Ramaphosa

Cyril+Ramaphosaநாம் இலங்கைக்குத் தீங்கு விளைவிக்க இங்கு வரவில்லை. இலங்கை அரசின் அழைப்புக்கிணங்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விருப்பத்துக்கமையவும்தான் நாம் இலங்கை வந்தோம்.

என தென்னாபிரிக்க விசேட பிரதிநிதி சிறில் ராமபோசா தெரிவித்தார். ஆனால், எமது பயணத்தை இலங்கை அரசின் பங்காளிக் கட்சிகள் கண்டபடி விமர்சிக்கின்றன என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனைப் பார்த்து நாம் மனவருத்தமடைகிறோம். இதனை இலங்கை அரச தரப்புடன் நடத்திய சந்திப்பின்போது கூறியுள்ளோம்.

இவ்வாறு இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுக்கு அனுசரணை வழங்கும் வகையில் தென்னாபிரிக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள சிறில் ரமபோஷ தலைமையிலான குழுவினர் நேற்று கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய சந்திப்பின் போது தெரிவித்தனர் என்று கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. தெரிவித்தார்.

நாம் இலங்கைக்குத் தீங்கு விளைவிக்க இங்கு வரவில்லை. இலங்கையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்க வேண்டும். இங்கு நல்லிணக்கம், சமாதானம் ஏற்படவேண்டும்.

அனைத்து இன மக்களும் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதே தென்னாபிரிக்க அரசின் நோக்கம் என்றும் ராமபோசா தலைமையிலான குழுவினர் தம்மிடம் தெரிவித்தனர் என்றும் சுரேஷ் எம்.பி. குறிப்பிட்டார்.

தென்னாபிரிக்காவின் நல்லிணக்க முயற்சிகளை தாம் வரவேற்கின்றோம் என்றும், இதற்குக் கூட்டமைப்பின் முழு ஆதரவு இருக்கும் என்றும், தென்னாபிரிக்காவின் கடந்தகால பட்டறிவு இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் சுரேஷ் எம்.பி. மேலும் தெரிவித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழரின் பாரம்பரியம், வரலாறை ஏனையவர்களுக்கும் எடுத்துச் செல்லும் ‘ஈழம் சாவடி – 2014

Posted: 08 Jul 2014 10:45 PM PDT

EElam

EElamகனடாவில் தமிழரின் பாரம்பரியம், வரலாறை ஏனையவர்களுக்கும் எடுத்துச் செல்லும் 'ஈழம் சாவடி – 2014′ மிகவும் பிரமாண்டமான முறையில் இடம்பெற உள்ளது.

பிரம்டன் கரபிறாம் பல்கலாச்சார விழாவில் இரண்டாவது வருடமாகவும் இந்நிகழ்வு மிகச் சிறப்பாக இடம்பெறவுள்ளது.

பிரமாண்ட இசை நிகழ்சிகள், கண்கவர் கலை நிகழ்சிகள், தமிழர் கண்காட்சி, வர்த்தக, வாணிபச் சாவடிகள், உணவுச் சாவடிகள், விளையாட்டுடன் கலகலப்பாக இடம்பெற உள்ளது.

ஜூலை மாதம் 11, 12, 13 ஆகிய திகதிகளில் இடம்பெறும் நிகழ்வுக்கு அனைவரையும் அழைக்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்.

This posting includes an audio/video/photo media file: Download Now

டொரண்டோவில் 15 வயது இளம்பெண் திடீரென மாயம்! பொதுமக்களின் உதவியை நாடியுள்ள போலீஸார்!

Posted: 08 Jul 2014 10:41 PM PDT

Missing

Missingகனடா டொரண்டோவில் கடந்த வெள்ளியன்று Hannah Batty என்ற 15 வயது இளம்பெண் திடீரென காணாமல் போயுள்ளதால் அவரை கண்டுபிடிக்க உதவி செய்யும்படி பொதுமக்களை போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். டொரண்டோவை சேர்ந்த Hannah Batty என்ற 15 வயது இளம்பெண் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் திடீரென காணாமல் போயுள்ளார். அவர் இரவு நெடுநேரமாகியும் வீடு திரும்பாததால் அவருடைய பெற்றோர் டொரண்டோ காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஐந்தடி ஐந்து அங்குலம் உள்ள Hannah Batty, 115 பவுண்ட் எடையுடன் பிரெளன் நிற கண்களும், நீண்ட கூந்தலும் உடையவர் என்றும், கடைசியாக அவர் நீல நிற ஸ்கர்ட்டும், கருப்பு நிற டாப்பும் அணிந்திருந்தார் என்றும் கூறப்படுகிறது. காணாமல் போன Hannah Batty குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக 416-808-2200 or Crime Stoppers anonymously at 416-222-TIPS (8477) என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை டொரண்டோ போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

செய்தியாளர் மகாநாட்டில் மேல்சட்டை அணியாத ஆர்ப்பாட்டக்காரர்கள்!

Posted: 08 Jul 2014 10:38 PM PDT

press

pressசெவ்வாய்கிழமை ரொறொன்ரோ மேயர் றொப் வோட் பங்கு கொண்ட ஒரு செய்தியாளர் மகாநாட்டில் மேல் சட்டை அணியாத ஒரு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மேயரை பதிவியிலிருந்து ராஜினாமா செய்யும் படி கோசமிட்டனர்.

முன்மொழியப்பட்ட போக்குவரத்து திட்டம் சம்பந்தமாக தனது எதிர்ப்பை தெரிவித்து வோட் பேசிக்கொண்டிருக்கையில் ஆர்ப்பாட்ட காரர்களின் கோசம் அவரது பேச்சை முறியடிக்க செய்துள்ளது.

அவர்களது ஆர்ப்பாட்டம் தன்னை தொல்லை செய்யாது என வோட் கூறியுள்ளார்.

ஒரு நொடி தனது பேச்சை நிறுத்தி கிளுகிளுப்பான சிரிப்பொன்றை சிரித்துவிட்டு அவர்கள் தாங்கள் விரும்பிய வண்ணம் ஆர்ப்பாட்டம் செய்யட்டும் என தெரிவித்துள்ளார்.

கனடா தினத்தன்று மேல்சட்டை அணியாத ஜாக்கர் ஒருவர் மேயரிடம் கொந்தளித்தமை மேற் குறிப்பிடப்பட்ட குழுவினரின் கவனத்தை ஈர்த்துள்ளதென அறியப்படுகின்றது.

இவர் வோட்டை சுற்றி நின்று பதவி விலகவேண்டும் என கூச்சலிட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரஜினிக்கு ஜோடியா நடிக்கணும் த்ரிஷாவின் நிறைவேறாத ஆசை!

Posted: 08 Jul 2014 12:12 AM PDT

trisha-speech

trisha-speechதமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் நடித்துவிட்டாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடிக்காதது தனக்கு பெரும் மனக்குறையாக உள்ளதாக நடிகை த்ரிஷா தெரிவித்தார். ஃபெட்னா எனப்படும் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 27வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் முன்னணி நடிகை த்ரிஷா. விழாச் சிறப்புரை ஆற்றிய அவரிடம், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் கேள்வி கேட்க, அவற்றுக்கு த்ரிஷா பதில் சொல்லும் நிகழ்ச்சி வந்தது. த்ரிஷா, இந்த ஃபெட்னா விழாவுக்கு வந்திருப்பது பற்றிச் சொல்லுங்கள்.. எனக்கு உண்மையலேயே ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியையும் தந்த விழாவாக இது அமைந்ததுள்ளது. மீண்டும் மீண்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புகிறேன். தமிழில் முன்னணி நடிகர்கள் பெரும்பாலானோரோடு நடித்துவிட்டீர்கள்.. இவருடன் நடிக்க முடியாமல் போய்விட்டதே என்ற குறை உங்களுக்கு இருக்கிறதா? ஆமாம்.. சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இன்னும் நடிக்காதது எனக்கு பெரிய மனக்குறையாக உள்ளது. அவர் ஒரு சாதனையாளர். சர்வதேச அளவில் ஒரு அடையாளம். விரைவில் அவருடன் நடிக்க வேண்டும் என்ற என் ஆசை நிறைவேறும் என நம்புகிறேன். ஒரு துறையில் உள்ளவர்கள் அந்தத் துறை சார்ந்தவர்களையே திருமணம் செய்ய வேண்டும் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா? நிச்சயமாக. அது நல்லதுதான். ஒரு டாக்டரின் தொழிலில் உள்ள பிரச்சினைகள் இன்னொரு டாக்டருக்குத்தான் தெரியும். அதுபோலத்தான் நடிப்புத் துறையிலும். நான் திருமணம் செய்வதாக இருந்தால் ஒரு நடிகரையே திருமணம் செய்து கொள்வேன். இதைச் சொல்வதில் எனக்குத் தயக்கம் இல்லை. பல மொழிகளில் நடித்திருக்கிறீர்கள். தாய் மொழி தமிழில் நடிக்கும்போது எப்படி உணர்கிறீர்கள்? உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. தமிழ் தாய் மொழி என்பதால் அதில் உள்ள சந்தோஷமே தனி. எந்த மொழிப் படத்தில் நடித்தாலும், அந்த பட ஷூட்டிங் சென்னையில் இருந்தால் இரு மடங்கு சந்தோஷம் வரும். அதுவே தமிழ்ப் படமாக இருந்தால், இன்னும் கூடுதல் சந்தோஷம். தமிழில் நடிக்கிறபோது மிக வசதியாக உணர்கிறேன்.

This posting includes an audio/video/photo media file: Download Now

விபத்திலிருந்து தப்புமா இந்த இரு விமானங்கள்!

Posted: 07 Jul 2014 11:59 PM PDT

NEAR-MISS-GO-AROUND-at-Barcelona-El-Prat

NEAR-MISS-GO-AROUND-at-Barcelona-El-Prat

This posting includes an audio/video/photo media file: Download Now

படகின் மேல் இந்த சுறாவிற்கு அப்படியென்ன கொலைவெறி!

Posted: 07 Jul 2014 11:54 PM PDT

Attack-on-boat

Attack-on-boat

This posting includes an audio/video/photo media file: Download Now

மனதை கொள்ளையிடும் சூப்பர் ஹிட் சாகச நடனம்!

Posted: 07 Jul 2014 11:51 PM PDT

Groove-dance

Groove-dance

This posting includes an audio/video/photo media file: Download Now

குத்துச் சண்டை வீரர் ஆமிர்கானின் டிவிட்டர் பக்கத்தில் நிர்வாணப் பெண்ணின் படத்தைப் போட்ட ஹேக்கர்கள்!

Posted: 07 Jul 2014 11:44 PM PDT

AmirKhan

AmirKhanஇங்கிலாந்தைச் சேர்ந்த இளம் குத்துச் சண்டை வீரர் ஆமிர்கானின் டிவிட்டர் பக்கத்தில் சில விஷமிகள் நிர்வாணப் பெண்களின் படத்தைப் போட்டு ஹேக் செய்துள்ளனர். ரமலான் நோண்பு மாதத்தின்போது இப்படி நடந்ததால் ஆமிர்கானின் டிவிட்டர் பக்கத்தில் பலரும் கண்டனம் தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ளனர். ஆனால் தான் இதைச் செய்யவில்லை என்றும் ஹேக்கர்களே இதற்குக் காரணம் என்றும் ஆமிர்கான் விளக்கியுள்ளார். இங்கிலாந்தின் மான்செஸ்டரைச் சேர்ந்தவர் ஆமிர்கான். 27 வயதான இவர் குத்துச் சண்டை வீரர் ஆவார். இவரது டிவிட்டர் பக்கத்தில் இரு பெண்கள் நிர்வாண நிலையில் படுத்துக் கிடப்பதைப் போன்ற படம் திடீரென இடம் பெற்றது. இதனால் அதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரமலான் நோண்பு மாதத்தின்போது நிர்வாணப் படங்களைப் பார்க்கக் கூடாது என்ற வழிமுறை உள்ளது. இந்த நிலையில் ஆமிர்கானின் டிவிட்டர் பக்கத்தில் இப்படிப் படம் வெளியானதால் பலரும் கோபமடைந்தனர். பலரும் ஆமிர்கானை வசை பாட ஆரம்பித்தனர். ஆனால் உடனடியாக இந்தப் படத்தை நீக்கிய ஆமிர்கான், அதற்காக மன்னிப்பும் கேட்டார். அதேசமயம் இதைத் தான் வெளியிடவில்லை என்றும், ஹேக்கர்களின் விஷமம் இது என்றும் அவர் கூறியுள்ளார். 2 நாட்களுக்கு முன்புதான் இருவரை ஆமிர்கான் தாக்கியதாக சர்ச்சை எழுந்தது. பின்னர் அந்தப் புகார் திரும்பப் பெறப்பட்டது. இந்த நிலையில் அவரது டிவிட்டர் பக்கத்தில் விஷமம் செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™