Tamil Star |
- பெரியசாமி இயக்கும் ஜிகினா.. லிங்குசாமி தொடங்கி வைத்தார்!
- பிரமாண்டமாக நடந்த அஜீத், த்ரிஷா "திருமணம்"
- பேயை நம்புகிறேன்… – அஞ்சலி வாக்குமூலம்!
- முதல் முறையாக வில்லனாகிறார் அரவிந்த சாமி!
- சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுப்பது எப்படி?
- முட்டாள்தனமான செயலால் தீ பற்றி எரிந்த மனிதனின் உடல்…. உயிர்தப்பியிருப்பாரா?
- அழகான பெண் செய்த அசிங்கமான காரியம்!
- பெண்ணின் அதிற வைக்கும் அசாத்திய திறமை!
- 1000 தடவை பார்த்தாலும் அசறாமல் சிரிப்பீங்க!
- போப் ஆண்டவர்: தமிழர் பகுதிகளை பார்வையிட திட்டம்?
- 6வது நாளில் இந்தியா அபாரம்- 9 பதக்கம் வென்று 36 பதக்கங்களுடன் 5வது இடத்தைப் பிடித்தது!
- காஸாவுக்கு ஆதரவான வாசகத்துடன் இங்கிலாந்து வீரர் மொயீன் அலி!
- இந்த நூற்றாண்டின் தவிர்க்க இயலாத நட்பாளர்கள்: ஜான் கெர்ரி!
- ஐ.நா. பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்- பாலஸ்தீன அகதிகள் 15 பேர் பலி!!
- முதலாம் உலகப்போர் நினைவு பிரார்த்தனை நிகழ்வில் மகிந்த பங்கேற்கமாட்டார்! த ரைம்ஸ் கருத்து
- மலேசியாவின் சூரிய, காற்றலை மின்சாரம்!- மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய சொகுசு பஸ்கள்!
- சுப்பிரமணிய சாமியை ஒதுக்கி வைக்க ராமதாஸ் வலியுறுத்தல்!
- மகிந்த அரசுக்கு கண்ணை மூடிக்கொண்டு ஆதரவளிக்கிறது இந்தியா!
- சாம்சங் கேலக்ஸி போன் வெடித்து சிதறியது:13 வயது சிறுமி அதிர்ச்சியில்!
- கட்டிடத்திற்குள் கோழைத்தனமான தாத்தாவால் கைவிடப்பட்ட 3-பேரப்பிள்ளைகள்!
| பெரியசாமி இயக்கும் ஜிகினா.. லிங்குசாமி தொடங்கி வைத்தார்! Posted: 30 Jul 2014 04:36 AM PDT
நந்தா பெரியசாமி இயக்கும் புதிய படமான ஜிகினாவை இன்று தொடங்கி வைத்தார் இயக்குநர் லிங்குசாமி. கல்லூரியின் கதை, மாத்தி யோசி, அழகன் அழகி போன்ற படங்களை இயக்கியவர் நந்தா பெரியசாமி. ஆனால் எந்தப் படமும் சொல்லிக் கொள்கிற மாதிரி அமையவில்லை. ஆனாலும் மனம் தளராத விக்ரமாதித்தனாய் தனது அடுத்த படத்தை ஆரம்பித்துள்ளார். படத்துக்கு சினிமாவில் ரொம்ப பழக்கப்பட்ட பெயரான ஜிகினா என்பதைத் தலைப்பாக வைத்துள்ளார். இந்தப் படத்தை இன்றைக்கு சினிமாவில் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் இயக்குநர் லிங்குசாமி தொடங்கி வைத்தார். 'ஜிகினா' படத்தை ராகுல் பிக்சர்ஸ் சார்பில் கே டி கே தயாரிக்கிறார். விஜய் வசந்த் கதாநயாகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளவர் சானியா. இவர்களோடு சிங்கம் புலி,'கும்கி' அஷ்வின் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நந்தா பெரியசாமி இந்த படத்தின் கதை,திரைகதை அமைத்து, வசனம் எழுதி இயக்குகிறார். பாலாஜி ரங்கா ஒளிபதிவில், ஜோன் என்ற புதிய இசை அமைப்பாளர் யுக பாரதியின் பாடல்களுக்கு இசை அமைத்து அறிமுகமாகிரார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிரமாண்டமாக நடந்த அஜீத், த்ரிஷா "திருமணம்" Posted: 30 Jul 2014 04:33 AM PDT
கௌதம் மேனன் படத்திற்காக அஜீத், த்ரிஷா திருமணம் செய்து கொள்ளும் காட்சி படமாக்கப்பட்டது. கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடித்து வரும் படம் தல 55. இது படத்தின் தற்காலிக தலைப்பு ஆகும். இந்த படத்தில் அஜீத் இரட்டை வேடத்தில் வருகிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பெரும்பாலும் இரவு நேரத்தில் தான் நடந்து வருகிறது. இரவு நேரத்தில் தனது காட்சிகள் படமாக்கப்படவில்லை என்றாலும் அஜீத் படப்பிடிப்புக்கு வருகிறார். படத்தில் அஜீத், த்ரிஷா திருமணம் செய்து கொள்ளும் காட்சி வரும். அதற்காக பிரமாண்ட செட் போட்டு திருமணக் காட்சியை படமாக்கினர். சமூகத்தில் உள்ள பெரிய மனிதர்கள் முன்னிலையில் திருமணம் நடப்பது போன்று காட்சியாக்கியுள்ளனர். கௌதம் படத்தில் அஜீத், த்ரிஷா ஜோடியின் மகளாக மலையாள படமான 5 சுந்தரிகளில் நடித்ததற்காக கேரள அரசின் விருதை பெற்ற அனிகா என்ற குழந்தை நடிக்கிறார். இந்த படத்தில் அஜீத் 20 வயது வாலிபராக வருகிறார். இதற்காக மெனக்கெட்டு உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளாராம்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பேயை நம்புகிறேன்… – அஞ்சலி வாக்குமூலம்! Posted: 30 Jul 2014 04:30 AM PDT
தெலுங்கில் தயாராகும் 'கீதாஞ்சலி' படத்தில் அஞ்சலி நடிக்கிறார். இது ஆவிகளைப் பற்றிய கதை. அப்படியெனில் அஞ்சலிக்கும் பேய் நம்பிக்கை உண்டா...? இதுகுறித்து அஞ்சலி கூறுகையில், "உண்டு. எனக்குப் பேய் நம்பிக்கை ரொம்பவே உண்டு, தனது நட்சத்திரத்தில் பிறந்தவர்களைத் தேடி பிடித்து பேய்கள் பயமுறுத்தும் என்பது உண்மைதான். அதே நேரம் கடவுள் நம்பிக்கை இருப்பவர்களை பேயால் ஒன்றுமே செய்ய முடியாது. ஆஞ்சநேயரை கும்பிட்டால் பேய் தொல்லை இருக்காது என்பது நம்பிக்கை. சிறு வயதில் இருட்டை பார்த்து பயந்து இருக்கிறேன். ஏதோ உருவம் இருட்டில் நடந்து போவதை பார்த்து இருக்கிறேன். வளர்ந்த பிறகு அப்படியெல்லாம் பார்க்கவில்லை. ஆனால் பேய் பிடித்தவர்களை பார்த்து இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை பேய் இருக்கிறது. பேயால் பாதிப்பும் நிறைய உள்ளது," என்றார். அஞ்சலி இப்போது தமிழில் நடிக்க ஆரம்பித்துள்ளார். மதகஜராஜா படத்துக்குப் பிறகு தமிழில் அவர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார். அவருக்கு கோடம்பாக்கத்தில் உள்ள ஒரே தொல்லை இப்போதைக்கு இயக்குநர் மு களஞ்சியம்தான். அவரது ஊர் சுற்றிப் புராணத்தில் சில காட்சிகள் மட்டும் நடித்துவிட்டால், பிரச்சினை தீர்ந்துவிடும் என்பதால், அந்தப் படத்தில் அஞ்சலியை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| முதல் முறையாக வில்லனாகிறார் அரவிந்த சாமி! Posted: 30 Jul 2014 04:26 AM PDT
தளபதியில் மணிரத்னத்தால் அறிமுகமாகி, பின்னர் ரோஜா மூலம் பெரிய கதாநாயாக உயர்ந்தவர் அரவிந்தசாமி. ஆனால் ஒரு கட்டத்துக்குப் பிறகு சினிமாவிலிருந்து அடியோடு ஒதுங்கினார். வியாபாரத்தில் மும்முரமாக இறங்கினார். பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அவரது மறுபிரவேசமும் மணிரத்னம் மூலமே நிகழ்ந்தது. அவர் இயக்கிய கடல் படத்தில் பாதிரியார் வேடத்தில் நடித்தார் அரவிந்தசாமி. இப்போது முழு வீச்சில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்தி - தமிழில் உருவாகும் ஒரு படத்தில் நாயகனாக நடிக்கும் அவர், தமிழில் ஜெயம் ராஜா இயக்க, ஜெயம் ரவி - நயன்தாரா நடிக்கும் தனி ஒருவன் படத்தின் வில்லனாக நடிக்கவிருக்கிறார். அவர் வில்லனாக நடிப்பது இதுவே முதல் முறை. பட வாய்ப்புகள் அதிகம் வந்தாலும், அனைத்தையும் ஒப்புக் கொள்ள மறுக்கும் அரவிந்தசாமி, தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவற்றைப் பற்றி அவ்வப்போது ட்விட்டரிலும் எழுதி வருகிறார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுப்பது எப்படி? Posted: 30 Jul 2014 04:17 AM PDT
கடுமையான வலியைத் தரக்கூடியவை தான் சிறுநீரக கற்கள். அதிலும் சிறுநீரக கற்கள் இருந்தால், சிறுநீர் கழிக்கும் போது தாங்கமுடியாத வலியுடன் சிறுநீர் கழிக்கக்கூடும். எனவே இந்த சிறுநீரக கற்கள் யாருக்கு உள்ளதோ அவர்கள் உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சிறுநீரக கற்களானது உடலில் போதிய அளவில் நீர்ச்சத்து இல்லாவிட்டாலும், ஒருசில உணவுகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போதும் ஏற்படும். நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய சிறுநீரக நோயின் 12 அறிகுறிகள்!!! பொதுவாக சிறுநீரக கற்களானது ஒரு குறிப்பிட்ட கெமிக்கல்களால் உருவாகக்கூடியது. அதுமட்டுமிமன்றி, உடலில் யூரிக் ஆசிட்டின் அளவு அதிகரிக்கும் போது, ஒரு கட்டத்தில் அவை கற்களாக மாறி சிறுநீரகத்தில் உருவாகும். மேலும் கால்சியம் அதிகமாக உள்ள பால் மற்றும் பால் பொருட்கள் உட்கொள்ளும் போது, அது நாம் உண்ணும் காய்கறிகள் மற்றும் கீரை வகையில் உள்ள ஆக்சலேட் அமிலத்துடன் சேர்ந்து பி.எச்.8 போன்ற உப்பாக மாறுகிறது. அப்படி உப்பு உருவாகும் போது, போதிய அளவில் தண்ணீர் குடிக்காவிட்டால், அவை சிறுநீரகத்தில் கற்களாக படிந்துவிடும். பின் அவை எப்போது சிறுநீர்பைக்கு நகர்கிறதோ அப்போது தாங்க முடியாத வலியை உணரக்கூடும். சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும் சைவ உணவுகள்!!! எனவே சிறுநீரக கற்கள் உருவாகாமல் இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று இங்கு கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை பின்பற்றினால், சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். சிறுநீரக கற்கள் உருவாகாமல் இருக்க வேண்டுமானால், தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியமானது. சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றால் செய்யப்பட்ட ஜூஸ் குடித்து வருவதும் நல்லது. ஏனெனில் இவையும் சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கக்கூடியவை ஆகும். சிறுநீரக கற்கள் இருப்பவர்கள், ஒரு வாரம் தொடர்ந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு ஜூஸ் குடித்து வந்தால், சிறுநீரகக்கற்கள் கரைந்துவிடும். சிறுநீரக கற்கள் இல்லாவிட்டாலும், வாரம் ஒரு முறை இந்த ஜூஸ் குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். எப்போதும் ஒரு பிரச்சனை வந்த பின் அதற்கான தீர்வுகளை கண்டறியாமல், அந்த பிரச்சனை வராமல் இருக்க என்னவெல்லம் செய்ய வேண்டுமென்று தெரிந்து கொண்டு, அந்த பிரச்சனையில் இருந்து விலகி இருப்பதே நல்லது. எனவே சிறுநீரக கற்கள் வராமல் இருக்க தண்ணீர் அதிகம் குடித்து, காய்கறிகள் மற்றும் பழங்களை சரியான அளவில் உட்கொண்டு வந்தாலே, சிறுநீரக கற்கள் வருவதைத் தடுக்கலாம்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| முட்டாள்தனமான செயலால் தீ பற்றி எரிந்த மனிதனின் உடல்…. உயிர்தப்பியிருப்பாரா? Posted: 30 Jul 2014 04:08 AM PDT |
| அழகான பெண் செய்த அசிங்கமான காரியம்! Posted: 30 Jul 2014 04:04 AM PDT |
| பெண்ணின் அதிற வைக்கும் அசாத்திய திறமை! Posted: 30 Jul 2014 03:59 AM PDT |
| 1000 தடவை பார்த்தாலும் அசறாமல் சிரிப்பீங்க! Posted: 30 Jul 2014 03:54 AM PDT |
| போப் ஆண்டவர்: தமிழர் பகுதிகளை பார்வையிட திட்டம்? Posted: 30 Jul 2014 03:50 AM PDT
ஜனவரி மாதத்தில் இலங்கையில் போப் ஆண்டவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்க கிறிஸ்தவ மத பிரிவின் தலைவரான போப் பிரான்சிஸ் ஜனவரி 12ம்தேதி முதல் 15ம்தேதி வரை இலங்கையில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக வாடிகன் சிட்டி அறிவித்துள்ளது. இருப்பினும், பயணத்திற்கான நோக்கம் பற்றி அதில் தெரிவிக்கப்படவில்லை. இலங்கையில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட பிறகு, ஃபிலிப்பைன்சுக்கு, போப் ஆண்டவர் செல்ல உள்ளார். இம்மாத துவக்கத்தில் போப் ஆண்டவருக்கு கடிதம் எழுதிய தமிழ் சிவில் சொசைட்டி ஃபோரம் (TCSF) அமைப்பு, இலங்கையின் வட கிழக்கு பகுதிக்கு வருகை தருமாறு அவரை கேட்டுக்கொண்டது. இலங்கையின் வட கிழக்கு பகுதியில் தமிழர்கள் பகுதியில், இலங்கை மக்கள் குடியமர்த்தப்படுவதாகவும், இதை நேரில் பார்த்து தெரிந்துகொள்ளும்படியும் போப் ஆண்டவருக்கு தமிழர் நலன்சார் குழுக்கள் கோரிக்கைவிடுத்தன. எனவே போப் ஆண்டவர் இலங்கை வரும்போது தமிழர் பகுதிகளுக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| 6வது நாளில் இந்தியா அபாரம்- 9 பதக்கம் வென்று 36 பதக்கங்களுடன் 5வது இடத்தைப் பிடித்தது! Posted: 30 Jul 2014 03:45 AM PDT
கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியின் 6வது நாளான நேற்று இந்தியா 9 பதக்கங்களைத் தட்டிச் சென்றது. நடப்பு காமன்வெல்த் போட்டியில் ஒரே நாளில் இந்தியா அதிகப் பதக்கங்களை நேற்றுதான் வென்றது. அதில் 3 தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று பெற்ற பதக்கங்களுடன் சேர்த்து இந்தியா இதுவரை 10 தங்கம், 15 வெள்ளி, 11 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 36 பதக்கங்களை வென்று 5வது இடத்திற்கு முன்னேறியது. நேற்று இந்திய மல்யுத்த வீரர்கள் இருவரும், ஒரு வீராங்கனையும் தங்கப் பதக்கங்களைக் குவித்து அசத்தி விட்டனர். இந்தியாவின் சுஷில் குமார் ஆடவர் 77 கிலோ பிரிவில் பாகிஸ்தான் வீரரைத் தோற்கடித்து தங்கத்தைப் பெற்றார். அதேபோல அமீத் குமார், வீராங்கனை வினேஷ் பொகத் ஆகியோரும் தங்கம் வென்றனர். ஆடவர் டிராப் பிரிவில் மனவ்ஜித் சந்து, ஆடவர் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் ககன் நரங், மகளிர் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் லஜ்ஜா கோஸ்வாமி ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றனர். ஆடவர் மல்யுத்தப் போட்டியில் ராஜீவ் தோமர் வெள்ளிப் பதக்கத்தை நேற்று வென்றார். இவர் 125 கிலோ எடைப் பிரிவில் கனடா வீரர் கோரி ஜார்விஸிடம் தோற்று வெள்ளியுடன் திருப்தி பட்டுக் கொண்டார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| காஸாவுக்கு ஆதரவான வாசகத்துடன் இங்கிலாந்து வீரர் மொயீன் அலி! Posted: 30 Jul 2014 03:41 AM PDT
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் காஸாவுக்கு ஆதரவான வாசகத்துடன் களம் இறங்கிய இங்கிலாந்து வீரர் மொயின் அலிக்கு நடுவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் சவுதம்டனில் 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாள் ஆட்டத்தின் போது இங்கிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள மொயீன் அலி காஸாவுக்கு ஆதரவாக "Free Gaza" என்ற வாசகம் கொண்ட காப்புகளை தனது கையில் அணிந்து விளையாடினார். இது பற்றி வந்த புகாரை தொடர்ந்து போட்டி நடுவர் டேவிட் பூன், மொயீன் அலியின் அந்த காப்புகளை அகற்ற உத்தரவிட்டார். இனிமேல் இதுபோன்று விதிமுறைக்கு மாறாக செயல்படக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்தார். அரசியல், மதம், இனம் தொடர்பான தகவல் கொண்ட எந்தவொரு பொருளையும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பயன்படுத்த தடை இருக்கிறது. கிரிக்கெட் ஆடுகளத்தில் இதுபோல் விதிமுறையை மீறி நடக்கக்கூடாது என்று மொயீன் அலி எச்சரிக்கப்பட்டுள்ளார் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் மலேசியாவை சேர்ந்த சைக்கிள் பந்தய வீரர் ஒருவரும் காஸாவுக்கு ஆதரவாக கையுறை அணிந்து வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்த நூற்றாண்டின் தவிர்க்க இயலாத நட்பாளர்கள்: ஜான் கெர்ரி! Posted: 30 Jul 2014 03:35 AM PDT
இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு இன்றியமையாதது என்றும், இரு நாடுகளும் அந்த மாற்றத்துக்கான நேரத்தை நெருங்கியுள்ளது என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி குறுகிய கால அரசுமுறைப் பயணமாக இன்று டெல்லி வருகை தர உள்ளார். எரிசக்தி மற்றும் பருவநிலை மாற்றம், கல்வி மற்றும் வளர்ச்சி, பொருளாதாரம், வணிகம், விவசாயம், அறிவியல், தொழில்நுட்பம், சுகாதாரம் உள்ளிட்டவற்றில் இந்திய, அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தலைமையில் நாளை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்நிலையில், வாஷிங்டனில் திங்கள்கிழமை நடைபெற்ற அமெரிக்க சிந்தனையாளர்கள் கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்ட ஜான் கெர்ரி, "இந்தியா மீதான வெளிநாட்டுக் கொள்கை' குறித்து பேசினார். பிரதமர் நரேந்திர மோடியின் "அனைவருடனும், அனைவரின் வளர்ச்சிக்காகவும்' என்ற திட்டத்தை சிறந்த தொலைநோக்குப் பார்வையாகக் கருதுகிறோம். அந்தத் திட்டத்துக்கு ஆதரவளிக்க விரும்புகிறோம். இந்தியாவில் மாற்றத்தையும், சீர்திருத்தத்தையும் கொண்டு வருவதற்காகவே பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற புதிய அரசு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவும், இந்தியாவும் இந்த நூற்றாண்டின் தவிர்க்க முடியாத நட்பாளர்கள். உலகின் மிகப் பெரிய பிரச்னைகளைத் தீர்க்க நமது நட்புறவு அவசியம் என இவ்வாறு ஜான் கெர்ரி.தெரிவித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஐ.நா. பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்- பாலஸ்தீன அகதிகள் 15 பேர் பலி!! Posted: 30 Jul 2014 03:31 AM PDT
பாலஸ்தீனத்தில் ஐக்கிய நாடுகள் சபை நடத்தி வரும் பள்ளிக்கூடம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அகதிகள் 15 பேர் பலியாகி உள்ளனர். காஸா பகுதிகள் மீது இஸ்ரேல் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களில் மட்டும் 200க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இஸ்ரேல் நடத்தி வரும் இந்த இனப்படுகொலையில் பலியான பாலஸ்தீனர்கள் எண்ணிக்கை 1,500ஐ தொட்டது. படுகாயமடைந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை எட்டுகிறது. சுமார் 2 லட்சம் பாலஸ்தீனர்கள் தங்களது சொந்த வாழ்விடங்களை விட்டு வெளியேறி அகதிகளாக முகாம்களில் தங்கியுள்ளனர். அப்படி வெளியேறிய பாலஸ்தீனர்கள், வடக்கு காஸாவில் ஐக்கிய நாடுகள் சபை நடத்தி வரும் பள்ளிக்கூடம் ஒன்றில் தஞ்சமடைந்திருந்தனர். நேற்று இரவு முழுவதும் விடிய விடிய இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதலில் ஐ.நா. பள்ளியும் தப்பவில்லை. அங்கு அகதிகளாக தஞ்சமடைந்திருந்த பாலஸ்தீனர்களில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 50 பேர் பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| முதலாம் உலகப்போர் நினைவு பிரார்த்தனை நிகழ்வில் மகிந்த பங்கேற்கமாட்டார்! த ரைம்ஸ் கருத்து Posted: 30 Jul 2014 03:20 AM PDT
இலங்கை அரசாங்கம் போர்க்குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நிலையில், அடுத்த வாரம் கிளாஸ்கோவில் நடக்கவுள்ள கொமன்வெல்த் முதலாம் உலகப்போர் நினைவு பிரார்த்தனையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார் என்று லண்டனில் இருந்து வெளியாகும் "த ரைம்ஸ்" நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 2009ம் ஆண்டு முடிவுக்கு வந்த 26 ஆண்டு காலப் போரின் இறுதிக் கட்டத்தில், 40 ஆயிரம் தமிழர்களைக் கொன்றதாக மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வரும் திங்கட்கிழமை நடக்கவுள்ள பிரார்த்தனையில் தாம் பங்கேற்றால், இதன் தாக்கம், எதிரொலிக்கும் என்ற கவலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஏற்பட்டுள்ளது. கொமன்வெல்த் தலைவர்கள் மற்றும் பிரித்தானிய அரசியல்வாதிகள் இந்தப் பிரார்த்தனையில் பங்கேற்கின்றனர். ஆனால் அடுத்த ஆண்டு வரை கொமன்வெல்த் அமைப்பின் தலைவராக மகிந்த ராஜபக்ச பதவி வகிப்பார் என்ற போதும், அவர் இந்த நிகழ்வில் இருந்து ஒதுங்கி நிற்கவுள்ளார். புனித முன்கோஸ் தேவாலயத்தில் நடக்கும் பிரார்த்தனையில், இலங்கையின் சார்பில், பிரித்தானியாவுக்கான அதன் தூதுவர் பங்கேற்கவுள்ளார். இந்தப் பிரார்த்தனையில் பங்கேற்குமாறு, கொமன்வெல்த் அமைப்பின் தலைவரான இலங்கை ஜனாதிபதிக்கு, பிரித்தானிய அரசாங்கம் கடந்த மாதம் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மலேசியாவின் சூரிய, காற்றலை மின்சாரம்!- மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய சொகுசு பஸ்கள்! Posted: 30 Jul 2014 03:15 AM PDT
மலேசிய அரசாங்கத்தின் தெனகா நாசனல் என்ற நிறுவனம் இலங்கையில் சூரியகதிர் மற்றும் காற்றலை சக்தி மின்சார திட்டங்களுக்காக இலங்கையில் முதலீடு செய்யவுள்ளது இதற்கான உடன்படிக்கை இலங்கை அரசாங்கத்துடன் அண்மையில் செய்துக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மலேசிய நிறுவனம் யாழ்ப்பாணத்தில் தமது முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளது. மலேசியாவின் பாரிய நிறுவனங்களில் ஒன்றான தெனகா நாசனல் இந்த திட்டத்தின் மூலம் 35 மெகாவோட்ஸ் மின்சாரத்தை உற்பத்திசெய்ய எதிர்ப்பார்க்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய சொகுசு பஸ்கள் மாற்றுத்திறனாளிகளுக்காக பஸ் சேவை ஒன்றை இலங்கை போக்குவரத்து சபை அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்காக இந்தியாவின் நிறுவனம் ஒன்றுடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்;று போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இந்தச் சேவைகள் கொழும்பிலும், கொழும்பை அண்டிய பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்படவுள்ளன. இவை சொகுசு பஸ்களாக இருக்கும். இவை கெஸ்பாவ, ஹோமாகம, மஹரகம, மாலபே, கடுவெல, களனி. ஜா- எல, கிரிபத்கொட ஆகிய இடங்களுக்கு நடத்தப்படும். இதேவேளை இலங்கைக்கு 2500 புதிய பயணிகள் பஸ்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. அதேநேரம் 10- 15 வருட கால காலசேவையில் உள்ள பஸ்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| சுப்பிரமணிய சாமியை ஒதுக்கி வைக்க ராமதாஸ் வலியுறுத்தல்! Posted: 30 Jul 2014 03:11 AM PDT
இந்த கருத்தரங்கில் இந்தியா சார்பில் இராணுவ உயரதிகாரிகளும், சுப்பிரமணிய சாமி, சேஷாத்திரி சாரி உள்ளிட்ட பாரதிய ஜனதா தலைவர்களும் கலந்து கொள்வர் என அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்னர் இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படும், அது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்பது தான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், இலங்கை தொடர்பான இந்திய அரசின் முடிவுகள் அனைத்துமே ஏமாற்றம் அளிப்பவையாகவே உள்ளன. இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவளிக்க முடியாது, ஐ.நா. மனித உரிமை ஆணைய போர்க்குற்ற விசாரணைக் குழுவுக்கு இந்தியாவுக்குள் நுழைய விசா வழங்க முடியாது என்பன போன்ற முடிவுகளைத் தொடர்ந்து இலங்கை அரசு நடத்தும் பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்க இந்தியா முடிவு செய்திருப்பது தமிழர்களுக்கு ஆறா மனக் காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கை பாதுகாப்பு கருத்தரங்கில் பங்கேற்கவிருக்கும் பாரதிய ஜனதாவின் உத்தி வகுப்புக் குழுத் தலைவர் சுப்பிரமணிய சாமி, வெளியுறவுக் கொள்கை வகுப்புக் குழுவின் அமைப்பாளர் சேஷாத்திரி சாரி ஆகிய இருவருமே தொடக்கத்திலிருந்தே இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள். கச்சத்தீவு இலங்கைக்குத் தான் சொந்தம் என்றும், வங்கக்கடலில் மீன் பிடிக்கும் விஷயத்தில் தமிழக மீனவர்கள் தான் தவறு செய்கிறார்கள் என்றும் இவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். அண்மையில் இலங்கை சென்ற இவர்கள் இருவரும் ஐ.நா. போர்க்குற்ற விசாரணையில் இலங்கைக்கு ஆதரவாகத் தான் இந்தியா நடந்து கொள்ளும் என்று ராஜபக்சவிடம் வாக்குறுதி அளித்துவிட்டு திரும்பினர். அதுமட்டுமின்றி, 2011ம் ஆண்டு முதல் இன்று வரை இலங்கையில் நடந்த அனைத்து பாதுகாப்பு கருத்தரங்குகளிலும் சுப்பிரமணிய சாமி பங்கேற்று சிங்களப்டிபடையினரின் மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்திப் பேசி வந்திருக்கிறார். இந்த கருத்தரங்கில் இந்தியா கலந்து கொள்வதற்கு இவர்கள் இருவரின் தவறான ஆலோசனைகள் தான் காரணமாக இருக்குமோ என்ற ஐயம் எழுகிறது. பாதுகாப்புக் கருத்தரங்குகளை இலங்கை நடத்தத் தொடங்கியதன் பின்னணியில் மிகப்பெரிய சதி உள்ளது. இலங்கைப் போரில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் கடந்த 2011ம் ஆண்டு தீவிரமடைந்தது. அப்போது தான் முதல் பாதுகாப்பு கருத்தரங்கை இலங்கை நடத்தியது. சிங்களப் படையினர் நடத்தியது மிகப்பெரிய இனப்படுகொலை; போர்க்குற்றம் என்று உலகம் முழுவதும் பரவியிருக்கும் கருத்தை மாற்றி, பயங்கரவாத ஒழிப்பு என்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்துவதும், உலகில் எங்கெல்லாம் அரசுக்கு எதிரான இயக்கங்கள் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் இதே உத்திகளை கையாள வேண்டும் என்று வலியுறுத்துவதும் இந்த கருத்தரங்கின் நோக்கங்கள் ஆகும். கடந்த 3 ஆண்டுகளாக இந்த கருத்துக்கள் தான் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. இலங்கைப் படையினரின் போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணை தொடங்கியுள்ள நிலையில், இலங்கை பாதுகாப்புக் கருத்தரங்கில் இந்தியா கலந்து கொள்வதும், அந்நாட்டு படைகளை ஆதரித்து பேசுவதும் போர்க்குற்ற விசாரணையில் தமிழர்களுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, பாதுகாப்பு கருத்தரங்கில் பங்கேற்கும் முடிவை கைவிடுவதுடன், இலங்கை விவகாரத்தில் சுப்பிரமணியசாமி போன்ற சக்திகளை மத்திய அரசு ஒதுக்கி வைக்க வேண்டும். This posting includes an audio/video/photo media file: Download Now |
| மகிந்த அரசுக்கு கண்ணை மூடிக்கொண்டு ஆதரவளிக்கிறது இந்தியா! Posted: 30 Jul 2014 03:06 AM PDT
இந்திய மத்திய அரசு மகிந்த ராஜபக்ச அரசுக்கு ஆதரவாக கண்ணை மூடிக்கொண்டு செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். கோவை மாவட்ட குழு கூட்டத்தில் பத்திரிகையாளர்களிடம் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கச்சதீவு, இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்கு சொந்தமானது. மன்னராட்சி ஒழிக்கப்பட்ட பின்னர் அவை அனைத்தும் அரசுக்கு சொந்தமாகி விடும். ஆனால் கச்சதீவு எப்போதும் இந்தியாவுக்கு சொந்தமானது அல்ல என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றம் மனு தாக்கல் செய்துள்ளது. இலங்கை போர் குறித்து விசாரணை நடத்துவதற்காக இந்தியா வரும் ஐ.நா. குழுவுக்கு விசா அளிக்க மத்திய அரசு மறுத்துள்ளது. இலங்கை இராணுவத்தினருக்கு கடந்த மாதம் வரை குன்னூரில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இராணுவ கருத்தரங்குக்கு இந்திய அதிகாரிகள் கலந்து கொள்ள செல்வது என இலங்கையின் ராஜபக்ச அரசுக்கு ஆதரவாகவே மத்திய பாரதீய ஜனதா அரசு கண்ணை மூடிக்கொண்டு செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது என தா.பாண்டியன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| சாம்சங் கேலக்ஸி போன் வெடித்து சிதறியது:13 வயது சிறுமி அதிர்ச்சியில்! Posted: 30 Jul 2014 02:53 AM PDT
அமெரிக்காவில் உள்ள 13 வயது சிறுமி பயன்படுத்தி வந்த Samsung Galaxy S4 திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக அந்த சிறுமிக்கு எவ்வித காயமும் இன்றி உயிர் பிழைத்துள்ளார். அமெரிக்காவில் Dallas என்ற பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி சில மாதங்களாக Samsung Galaxy S4 என்ற ஸ்மார்ட்போனை பயன்படுத்தி வருகிறார். இவர் நேற்று முன் தினம் இரவில் தூங்குவதற்கு முன்னர் தனது தலையணைக்கு அடியில் போனை வைத்துவிட்டு தூங்கியுள்ளார். நள்ளிரவில் தனது படுக்கையறையில் ஏதோ தீ எரியும் வாசனையை உணர்ந்து எழுந்து பார்த்தபோது தான் தலைக்கு வைத்து படுத்திருந்த தலையணையில் நெருப்பு பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அந்த சிறுமி வந்து சோதனை செய்தபோது, அவர் தலையணைக்கு அடியில் வைத்திருந்த ஸ்மார்ட்போனால்தான் தீ ஏற்பட்டுள்ளது என்பதை கண்டுபிடித்தார். அதிஸ்ரவசமாக தீப்பற்றிய உடனே விழிப்பு ஏற்பட்டு சிறுமி எழுந்துவிட்டதால் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை இதுகுறித்து சாம்சங் டீலர்கள் நடத்திய விசாரணையில் சம்மந்தப்போட்ட ஸ்மார்ட் போனில் ஒரிஜினல் பேட்டரி இல்லாமல் இருந்ததாகவும், விலைகுறைவான டூப்ளிகேட் பேட்டரி உபயோகித்ததே இந்த விபத்துக்கு காரணம் என்றும் கண்டறியப்பட்டது. எனவே எந்த வகை ஸ்மார்ட்போனாக இருந்தாலும், அந்த மாடலுக்குரிய ஒரிஜினல் பேட்டரியை பொதுமக்கள் உபயோகிக்குமாறு சாம்சங் நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கட்டிடத்திற்குள் கோழைத்தனமான தாத்தாவால் கைவிடப்பட்ட 3-பேரப்பிள்ளைகள்! Posted: 30 Jul 2014 02:48 AM PDT
இச்சிறுவர்கள் மூவரும் அவர்களது தொடர்மாடிக் கட்டிட குடியிருப்பில் அவர்களின் தாத்தாவின் பராமரிப்பில் இருந்தனர். அச்சமயம் அங்கு தீ பிடித்துள்ளது. இவர்களை கவனித்து வந்த தாத்தா தன்னை காத்து கொண்டு பிள்ளைகளை சாக விட்டுள்ளார். முதல் இரண்டு பையன்களையும் யன்னல் ஊடாக வெளியே எடுத்த தீயணைப்பு பிரிவினரால் கடைசி சிறுவனை எடுக்க முடியவில்லை. அவன் எரிந்து கொண்டிருந்த படுக்கை அறைக்குள் நினைவிழந்த நிலையில் காணப்பட்டுள்ளான். அவன் ஒரு தகமைவாய்ந்த தீயணைப்பு படைவீரரினால் காப்பாற்றப்பட்டான். இவர் ஆப்கானிஸ்தான் போரில் போரிட்ட ஒருவர் என கூறப்பட்டுள்ளது. மூவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டனர். கடைசி பையனின் நிலை கவலைக்கிடமாக இருந்து பின்னர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டான். தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்றடைந்த போது இரண்டு பிள்ளைகளும் புகை நிரம்பிய 4-வது மாடி அப்பார்ட்மென்டின் யன்னல் வழியாக தங்களை பார்த்ததாக தெரிவித்துள்ளனர். இவர்களின் தாயார் மருத்துவ மனையில் இருந்ததால் 66-வயதுடைய தாத்தா இவர்களை கவனித்துள்ளார். தீச்சுவாலையை கண்டதும் பிள்ளைகளை கவனியாது இவர் தனியே வெளியே ஓடியதை கண்டதாக கூறப்பட்டுள்ளது. தீயணைப்பு படையினர் வாளி ஏணி மூலம் சிறுவர்களை வெளியே எடுத்துள்ளனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



















