Tamil Star |
- ஃபெட்னா விழா சான் பிரான்சிஸ்கோவில்!
- வதந்தி பரப்பியவர்களின் வாயை அடைத்த தனுஷ்!
- இளசுகளின் மனதைக் கசக்கிப் பிழிந்த செரீன் திகில் காட்ட வருகிறார்!
- பல மில்லியன் வருடங்களாக உயிருடன் இருக்கும் படிமம் கண்டுபிடிப்பு!
- சிரிப்பின் அருமை உங்களுக்கு தெரியுமா?… 50 நொடியில் தெரிஞ்சிக்களாம்!
- சீறி படமெடுத்த ராஜநாகம்: லாவகமாக கையாளும் மனிதர்!
- பயங்கரமான மின்னலுக்கு மத்தியில் த்ரில்லிங்காக பயணமாகும் விமானம்!
- வானில் பறக்கும் யானை…. கயிற்றில் நடக்கும் ஒட்டகச்சிவிங்கி…. நம்பமுடியாத காட்சி!
- இறந்த குட்டியை சுமந்து வரும் டால்பின்: வார்த்தையால் விவரிக்க முடியாத தாய் பாசம்!
- அனுமதியின்றி செயற்கைக்கோள் தொலைபேசி வைத்திருந்த ஆஸ்திரேலியர் கைது!
- ஸ்லேட்6 வாய்ஸ்டேப் விலை குறைப்பு, தற்போது ரூ.15,990 விலையில் கிடைக்கும்!
- கால்பந்து போட்டி: சாம்பியன் பட்டத்தை வென்றது ஜெர்மனி!
- காசா மீது இஸ்ரேல் விமானங்கள் தொடர் தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம்!
- மனித உரிமைகள் தொடர்பில் இலங்கையைக் காப்பாற்ற அவுஸ்திரேலியா தொடர்ந்து முயற்சி!
- தேவையானவரை ஆளுநராக நியமிக்கவே முடியாது என்கிறார் அமைச்சர் பசில்
- அகதிகள் 153 பேரையும் ஏற்றுக்கொள்ளுமாறு மெல்பேர்னில் ஆர்ப்பாட்டம்!
- ஜனாதிபதி மஹிந்தவின் சிவப்பு நிறச் சால்வை: சுவாரஸ்ய சம்பவம்!
- அரசியல்வாதிகள் மக்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும்! அமைச்சர் மேர்வின் சில்வா
- பேருந்தில் பாட்டு பாடினால் அபராதம்: அதிரடி அறிவிப்பு!
- பென்சேகா இராணுவக் கட்டமைப்பை உடைக்கும் சாத்தியம்: கனடாவில் இருந்து கிருஸ்ணர்!
| ஃபெட்னா விழா சான் பிரான்சிஸ்கோவில்! Posted: 14 Jul 2014 01:10 AM PDT
செயின்ட் லூயிஸ்: ஃபெட்னா எனப்படும் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 28வது ஆண்டு விழா அடுத்த ஆண்டு ஜூலை மாதம் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடக்கிறது. உலகெங்கும் தமிழர்கள் பரவிக் கிடக்கிறார்கள். தமிழர் இல்லாத நாடே இல்லை என்ற நிலை இன்றைக்கு வந்துவிட்டது. தமிழன் புலம் பெயர்ந்த காரணம் சோகமானதாக இருந்தாலும், சென்ற இடத்துக்கு சிறப்பு சேர்க்கும் விதத்தில்தான் பெரும்பாலும் அவர்களின் செயல்பாடுகள் அமைகின்றன. சென்ற இடத்துக்கு சிறப்பு சேர்த்தால் மட்டும் போதுமா... பிறந்த இனத்தின் பெருமை காக்க வேண்டாமா... அமுதத் தாய் மொழியான தமிழைக் காக்க ஏதாவது செய்தாக வேண்டுமே என்ற துடிப்பை மட்டும் ஒருபோதும் தமிழன் மறப்பதில்லை. தாய்த் தமிழகத்திலிருந்து சென்றவராக இருந்தாலும், ஈழத்திலிருந்து பெயர்ந்தவராக இருந்தாலும், தமிழனின் அடிப்படை நோக்கத்தில் மாற்றமில்லை. பிறந்த இனத்தின் பெருமை, அன்னைத் தமிழை அடுத்த தலைமுறைக்கும் பெருமை குறையாமல் கொண்டு செல்லுதல் என்ற லட்சியங்களை முன்னிறுத்தி ஆரம்பிக்கப்பட்டதுதான் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையான ஃபெட்னா. அமெரிக்காவின் 52 மாகாணங்கள் மற்றும் கனடாவில் உள்ள 50க்கும் மேற்பட்ட தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு இந்த ஃபெட்னா. ஆண்டு தோறும் வெவ்வேறு அமெரிக்க நகரங்களில் இந்த அமைப்பின் ஆண்டு விழா சிறப்பாக நடந்து வருகிறது. தாயகத் தமிழர்களுக்கு தைத் திருநாள் என்றால், அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு ஃபெட்னா நடக்கும் நாளே திருவிழா எனலாம். இந்த ஆண்டு ஃபெட்னா நிகழ்ச்சி மிசௌரி மாகாணத்தில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் நடந்தது. ஜூலை 3-ம் தேதி தொடங்கி, 5-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடந்த இந்த நிகழ்ச்சி தமிழர்களின் வாழ்வியலை, அடுத்த கட்ட நகர்வைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்தது. ஃபெட்னாவின் அடுத்த ஆண்டு விழா, கலிபோர்னியா மாகாணத்தின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடக்கவிருக்கிறது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் நகரங்களில் ஒன்றான சான் பிரான்சிஸ்கோவில் இந்த விழா நடக்கவிருப்பது இதுவே முதல் முறை. விழாவுக்கான ஏற்பாடுகளை இப்போதிலிருந்தே முன்னெடுக்க ஆரம்பித்துள்ளனர் பேரவையின் தலைவரான நாஞ்சில் பீட்டர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் தில்லைக் குமரன் உள்ளிட்ட விழா குழுவினர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| வதந்தி பரப்பியவர்களின் வாயை அடைத்த தனுஷ்! Posted: 14 Jul 2014 01:04 AM PDT
தனக்கும், மனைவிக்கும் இடையே பிரச்சனை என்று வதந்தியை பரப்பிவிட்டவர்களின் வாயை அடைப்பது போன்று தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் பிலிம்ஃபேர் விருது விழாவுக்கு வந்திருந்தார். 61வது பிலிம்ஃபேர் விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. பிரமாண்டமாக நடந்த விழாவில் தென்னிந்திய திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகைகளின் கண்கவர் நடன நிகழ்ச்சிகளும் இடம்பெற்றிருந்தன. தனுஷுக்கும் அவரது மனைவி ஐஸ்வர்யாவுக்கும் இடையே பிரச்சனை. அதனால் அவர்கள் முகம் கொடுத்து கூட பேசுவது இல்லை. அதனால் தான் எங்கு வந்தாலும் தனுஷ் தனியாக வருகிறார் என்று வதந்தி பரவியது. தனுஷ் பாலிவுட், கோலிவுட் என்று பிசியாக இருக்கிறார். ஐஸ்வர்யாவும் தனது வை ராஜா வை படத்தில் பிசியாக இருக்கிறார். வேலை காரணமாகவும் அவர்களுக்குள் உள்ள இடைவெளி அதிகரித்துள்ளது என்று பேசப்பட்டது. பிலிம்ஃபேர் விருது விழாவுக்கு தனுஷ் தனியாக வரவில்லை. மாறாக தனது மனைவி ஐஸ்வர்யாவை அழைத்து வந்து வதந்தியை பரப்பியவர்களின் வாயை அடைத்துவிட்டார். தனது கணவர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விமர்சகர்கள் விருது கிடைத்துள்ளதை ஐஸ்வர்யா ட்விட்டரில் தெரிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். விருது விழாவுக்கு ஐஸ்வர்யா சிம்பிளான சேலையில் அதற்கு ஏற்றது போல நகை அணிந்து நச்சென்று வந்திருந்தார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| இளசுகளின் மனதைக் கசக்கிப் பிழிந்த செரீன் திகில் காட்ட வருகிறார்! Posted: 14 Jul 2014 12:58 AM PDT
துள்ளுவதோ இளமை மூலம் இளசுகளின் மனதைக் கசக்கிப் பிழிந்த செரீன் சில படங்களில் நடித்த பிறகு காணாமல் போன செரீன் பெரிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வருகிறார்.. திகில் படம் மூலம். படத்தின் பெயரே திகில்தான். மிராக்கிள் மூவி மேக்கர்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இந்த படத்தில் அசோக் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக செரீன் நடிக்கிறார். தனுஷ் நடித்து அறிமுகமான துள்ளுவதோ இளமைதான் செரீனுக்கும் முதல் படம். காந்தக் கண்களால் கவர்ச்சி காட்டி ரசிகர்களை அப்படத்தில் வசீகரித்திருந்தார் செரீன். ஆனால் அவருக்குத் தொடர்ந்து பட வாய்ப்புகள் சிறப்பாக இல்லை. விசில் படத்தில் முக்கியப் பாத்திரத்தில் வந்து போயிருந்தார். அதன் பின்னர் செரீனைக் காணவில்லை. அவர் நடிப்பை விட்டும் போய் விட்டார். இந்த நிலையில் திகில் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார். கல்கி ஸ்ருதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திகில் படம் கன்னடத்துப் படமாகும். அது தமிழுக்கு வருகிறது. இப்படத்தை எழுதி இயக்கி இருப்பவர் சந்தோஷ் கொடன்கேரி. இப்படத்தின் கதை குறித்து இயக்குநர் கூறுகையில், இது ஒரு திகில் கலந்த ஹாரர் படம். ஒரு இரவில் நடக்கும் கதை என்பதால் திகில் அதிகமாக இருக்கும். சென்னையில் இருக்கும் செரீன் தனது வருங்கால கணவரை சந்திக்க கூர்க் என்ற இடத்திற்கு வந்து ஒரு மாளிகையில் தங்குகிறார். மலைப் பிரதேசம் என்பதால் இரவு பயணத்தை தவிபதற்காகத்தான் கூர்கில் தங்குகிறார். அந்த இரவில் அவர் சந்திக்கும் திகில் அனுபவங்கள்தான் கதை. விடிந்து அவர் தனது வருங்கால கணவரை சந்திக்க மைசூர் சென்றாரா இல்லையா என்பதை திரைக்கதை திகிலுடன் சொல்லும். படப்பிடிப்பு சென்னை, கூர்க், மைசூர் மற்றும் இயற்கை எழில் நிறைந்த இடங்களில் நடைபெற்று முடிந்திருக்கிறது என்றார். கவர்ச்சியில் கிலியூட்டிய செரீன், திகிலில் திகைப்பூட்டுவாரா என்பதைப் படம் பார்த்ததும்தான் சொல்ல முடியும்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பல மில்லியன் வருடங்களாக உயிருடன் இருக்கும் படிமம் கண்டுபிடிப்பு! Posted: 14 Jul 2014 12:51 AM PDT |
| சிரிப்பின் அருமை உங்களுக்கு தெரியுமா?… 50 நொடியில் தெரிஞ்சிக்களாம்! Posted: 14 Jul 2014 12:41 AM PDT |
| சீறி படமெடுத்த ராஜநாகம்: லாவகமாக கையாளும் மனிதர்! Posted: 14 Jul 2014 12:39 AM PDT |
| பயங்கரமான மின்னலுக்கு மத்தியில் த்ரில்லிங்காக பயணமாகும் விமானம்! Posted: 14 Jul 2014 12:34 AM PDT |
| வானில் பறக்கும் யானை…. கயிற்றில் நடக்கும் ஒட்டகச்சிவிங்கி…. நம்பமுடியாத காட்சி! Posted: 14 Jul 2014 12:27 AM PDT |
| இறந்த குட்டியை சுமந்து வரும் டால்பின்: வார்த்தையால் விவரிக்க முடியாத தாய் பாசம்! Posted: 14 Jul 2014 12:23 AM PDT |
| அனுமதியின்றி செயற்கைக்கோள் தொலைபேசி வைத்திருந்த ஆஸ்திரேலியர் கைது! Posted: 14 Jul 2014 12:12 AM PDT
மும்பை விமான நிலையத்தில் செயற்கைக்கோள் தொலைபேசியுடன் வந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார். பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தியாவில் செயற்கைக்கோள் தொலைபேசி பயன் படுத்தத் தடை விதிக்கப் பட்டுள்ளது. உரிய ஆவணங்களுடன் வெளிநாட்டவர் கொண்டு வரும் செயற்கைக் கோள் தொலைபேசிகளுக்கு மட்டுமே, இந்தியாவில் பயன்படுத்த அனுமதி அளிக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மலேசிய நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராக உள்ள ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மெக்டொனல்ட் புரூஸ் ஆண்ட்ரூ (54) என்ற நபர் கோவா செல்வதற்காக தனது குடும்பத்தாருடன் மும்பை விமான நிலையம் வந்திருந்தார். அப்போது, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அவரைச் சோதனை செய்து பார்த்தபோது, அவரிடம் இரிடியம் நிறுவனத்தின் செயற்கைக்கோள் தொலைபேசி ஒன்று இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், செயற்கைக்கோள் தொலைபேசியை பறிமுதல் செய்து மெக்டொனால்டை கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, இந்தியாவில் செயற்கைக்கோள் தொலைபேசி பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறை அமலில் உள்ளது தனக்குத் தெரியாது என்றும், தவறான நோக்கத்துக்காக தான் அந்த தொலைபேசியைப் பயன்படுத்தவில்லை என்றும் போலீசாரிடம் விளக்கமளித்தார் மெக்டோனால்ட். அதையடுத்து, மெக்டொனால்ட் ரூ 15,000 மதிப்பிலான சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இத்தகவலை மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். மெக்டோனால்ட் கடந்த ஜூன் மாதம் இந்தியா வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஸ்லேட்6 வாய்ஸ்டேப் விலை குறைப்பு, தற்போது ரூ.15,990 விலையில் கிடைக்கும்! Posted: 14 Jul 2014 12:06 AM PDT
ஆண்ட்ராய்டு அடிப்படையிலான ஸ்லேட்6 வாய்ஸ்டேப் ஸ்மார்ட்போன் ரூ.22,990 தொடக்க விலையில் இருந்து தற்போது ரூ.15,990 விலையாக குறைந்து நிறுவனத்தின் உத்தியோகபூர்வ ஆன்லைன் ஸ்டோரில் கிடைக்கிறது. மே மாத தொடக்கத்தில், நிறுவனம் சாதனத்தின் விலை ரூ.19,990 ஆக குறைத்தது. குறிப்பாக, இரண்டு மாதங்களில் ஸ்லேட்6 வாய்ஸ்டேப் ஸ்மார்ட்போன் விலை இரண்டாவதாக குறைக்கப்பட்டுள்ளது. ஹெச்பி ஸ்லேட்6 வாய்ஸ்டேப் பேப்லட்டில் ஒரு 720x1280 பிக்சல் தீர்மானம் கொண்ட 6 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது, மற்றும் ரேம் 1GB உடன் இணைந்து 1.2GHz குவாட் கோர் மார்வெல் PXA1088 SoC மூலம் இயக்கப்படுகிறது. ஹெச்பி ஸ்லேட்6, ஆண்ட்ராய்டு 4.2.2 ஜெல்லி பீன் இயங்குகிறது மற்றும் 160 கிராம் எடையுடையது, 165x82.6x8.98mm பரிமாணங்களை கொண்டு வருகிறது. ஹெச்பி ஸ்லேட்6 வாய்ஸ்டேப், இரட்டை சிம் செயல்பாடுகளை (ஒரு வழக்கமான, ஒரு மைக்ரோ சிம்) கொண்டுள்ளது, மேலும் இந்த இரண்டு சிம் கார்டு ஸ்லாட்டில் 3G இணைப்பு ஆதரிக்கிறது. இது microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடிய 16 ஜிபி உள்ளடிக்கிய சேமிப்பு, கொண்டு வருகிறது. ஹெச்பி ஸ்லேட்6 வாய்ஸ்டேப், ஒரு 5 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் HD வீடியோ பதிவு ஆதரவுடன் ஒரு 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. இது ஒரு 3.5mm ஆடியோ ஜாக், ஒரு மைக்ரோ-USB போர்ட், மற்றும் ஸ்டீரியோ எஃப்எம் ரேடியோ ஆகியவை வருகிறது. இணைப்பு விருப்பங்கள் ப்ளூடூத் 3.0 EDR, 802.11b/g/n, Wi-Fi, மற்றும் ஜிபிஎஸ் ஆகியவை அடங்கும். ஹெச்பி ஸ்லேட்6, ஜி சென்சார், கைரோஸ்கோப், இ-காம்பஸ், அம்பிஎண்ட் லைட் சென்சார், மற்றும் ப்ராக்சிமிட்டி சென்சார் வருகிறது. இந்த பேப்லட்டில் 3000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. ஹெச்பி ஸ்லேட்6 வாய்ஸ்டேப் குறிப்புகள்: 720x1280 பிக்சல் தீர்மானம் கொண்ட 6 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, ரேம் 1GB, 1.2GHz குவாட் கோர் மார்வெல் PXA1088 SoC, இரட்டை சிம் (ஒரு வழக்கமான, ஒரு மைக்ரோ சிம்), 3G இணைப்பு, microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடிய 16 ஜிபி உள்ளடிக்கிய சேமிப்பு, 5 மெகாபிக்சல் பின்புற கேமரா, HD வீடியோ பதிவு ஆதரவுடன் ஒரு 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, ப்ளூடூத் 3.0 EDR, 802.11b/g/n, Wi-Fi, ஜிபிஎஸ், ஆண்ட்ராய்டு 4.2.2 ஜெல்லி பீன், 3000mAh பேட்டரி, 160 கிராம் எடை.. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கால்பந்து போட்டி: சாம்பியன் பட்டத்தை வென்றது ஜெர்மனி! Posted: 14 Jul 2014 12:00 AM PDT
This posting includes an audio/video/photo media file: Download Now |
| காசா மீது இஸ்ரேல் விமானங்கள் தொடர் தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம்! Posted: 13 Jul 2014 11:55 PM PDT
காசா மீது இஸ்ரேல் விமானங்கள் தொடர் தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. காசாவின் தெற்கு பகுதியில் நேற்று இஸ்ரேல் விமானங்கள் நடத்திய வான் வழித் தாக்குதலில் தந்தை மகன் உள்பட 4 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதன் மூலம் தாக்குதலில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது பலியானவர்களில் 36 குழந்தைகளும், 32 பெண்களும் அடங்கும். இதனிடையே இஸ்ரேலின் தாக்குதலுக்கு 1154 பேர் காயம் அடைந்துள்ளனர். இஸ்ரேல் மீது தொடர் ராக்கெட் தாக்குதலை நடத்த அல்குசாம் மற்றும் இதர அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 7 நாட்களில் இஸ்ரேல் மீது 700 முறை ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அல்குசாம் அமைப்பு தெரிவித்துள்ளது பதிலுக்கு இஸ்ரேல் விமானங்கள் தொடர் வான் வழித் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இதனால் ஏராளமான பாலஸ்தீனர்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். இரு தரப்பினர்க்கும் இடையேயான சண்டை வலுத்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மனித உரிமைகள் தொடர்பில் இலங்கையைக் காப்பாற்ற அவுஸ்திரேலியா தொடர்ந்து முயற்சி! Posted: 13 Jul 2014 11:51 PM PDT
மனித உரிமைகள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றி அதன் அடிப்படையில் நவநீதம்பிள்ளையால் 10 மாத வரையறையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் இன்னமும் டோனி அபோட்டின் அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றும் நடவடிக்கையை முன்கொண்டு செல்கிறது. எனினும் இலங்கையில் போர் முடிவடைந்துள்ள நிலையில் இன்னனும் அச்சமும் பயமும் சூழ்ந்துள்ளதாக வெளிநாட்டு இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவை பொறுத்தவரையில் இலங்கையில் அகதிகள் தமது நாட்டுக்கு வருவதை தடுக்க வேண்டும். இதற்காக இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட அந்த அரசாங்கம் முயற்சிக்கிறது. இதன் அடிப்படையில் அண்மையில் கூட அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட், இலங்கை சமாதானமான நாடு என்று தெரிவித்திருந்தார். அளுத்கமையில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் இடம்பெற்ற பின்னரும் இந்த கருத்தை அபோட் வெளியிட்டுள்ளமையை இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| தேவையானவரை ஆளுநராக நியமிக்கவே முடியாது என்கிறார் அமைச்சர் பசில் Posted: 13 Jul 2014 11:48 PM PDT
வட மாகாண சபைக்கு ஆளுநரை நியமிக்கும் முழுமையான அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. அது தொடர்பில் கேள்வியெழுப்பவோ எதிர்ப்பு வெளியிடவோ கூட்டமைப்பினால் முடியாது என்றும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தேவையானவரை ஆளுநராக நியமிக்கவே முடியாது என்றும் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார். வட மாகாண சபை ஆளுநராக மேஜர் ஜெனரல் சந்திரசிறி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளமை மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை கடுமையாக எதிர்த்துள்ளமை குறித்து வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் இந்த விடயம் குறித்து அவர் மேலும் கூறியதாவது ; வட மாகாண சபைக்கு ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. அது தொடர்பில் கேள்வியெழுப்பும் சட்ட உரிமையோ அதிகாரமோ கூட்டமைப்புக்கு இல்லை. மாகாண சபைக்கும் மத்திய அரசாங்கத்துக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்துபவராகவே ஆளுநர் செயற்படுகின்றார். வட மாகாணம் என்பது நாட்டிலிருந்து பிரிபட்டதல்ல. இலங்கையின் ஒரு மாகாணம். இந்நிலையில் மத்திய அரசாங்கத்தின் வட மாகாண சபைக்கான பிரதிநிதியாக யாரையும் நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. பல மாநிலங்கள் உள்ள இந்தியாவில் கூட இவ்வாறு மத்திய அரசாங்கத்துக்கு வேண்டப்பட்டவர்களே ஆளுநர்களாக நியமிக்கப்படுகின்றனர். இந்தியா மட்டுமல்ல முழு உலகிலும் இவ்வாறு தான் நிலைமை உள்ளது. அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் பொறுத்தவரை எமக்குத் தேவையானவர்களே நாங்கள் ஆளுநராக நியமிப்போம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரை அவர்களுக்கு வட மாகாண சபை நிர்வாகம் கிடைத்துள்ளது. மக்கள் பிரதிநிதிகள் உள்ளனர். வட மாகாண சபை அமைச்சரவை உள்ளது. முதலமைச்சர் பதவி ஆகியவை உள்ளன. இந்நிலையில் ஆளுநர் பதவியிலும் கூட்டமைப்புக்குத் தேவையானவர்களை நியமிக்க முடியாது. ஜனாதிபதிக்கு விசுவாசமான வடக்கு பற்றித் தெரிந்த தெற்கைச் சேர்ந்த ஒருவரே ஆளுநராக நியமிக்கப்படுவார். அதனை யாராலும் எதிர்க்க முடியாது. கூட்டமைப்பு எதிர்க்கின்றது என்பதற்காக அவர்கள் கூறுகின்றவரை ஆளுநராக நியமிக்க முடியாது. நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஜனாதிபதி தனக்கு தேவையானவரையே ஆளுநராக நியமித்துள்ளார். அதுதான் சம்பிரதாயமாக உள்ளது. அதனை மாற்ற முடியாது. கேள்வி: கூட்டமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் என்றும் கூட்டமைப்பு எங்களுடன் ஒத்துழைக்க வேண்டு:ம் என்று அரசாங்கம் கூறுகின்றது. இந்நிலையில் இந்த விடயத்தில் ஒத்துழைப்பு என்ற நோக்கத்துக்காக கூட்டமைப்பின் கோரிக்கைக்கு செவிமடுக்கலாமே? பதில்: ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது நாங்கள் நியமிக்கும் ஆளுநருடன் ஒத்துழைப்புடன் செயற்பட வேணடும் என்பதே எமது கோரிக்கையாகும். எம்முடன் ஒத்துழைப்புடன் வேலை செய்ய வேண்டும் என்று கூட்டமைப்பு கருதினால் ஆளுநருடன் ஒத்துழைப்புடன் செயற்டலாம். கேள்வி முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் வேண்டாம் என்றுதானே கூட்டமைப்பு கூறுகின்றது? பதில் - முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரை வட மாகாண ஆளுநாக நியமிக்கவேண்டாம் என்று கூறுகின்ற அருகதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை. அதாவது நாட்டின் தலைவராக இராணுவ அதிகாரி ஒருவரை நியமிக்க முயற்சித்த கூட்டமைப்புக்கு முன்னாள் இராணுவ அதிகாரி ஆளுநராக நியமிக்கப்படுவது கசக்கின்றதா? என்று வினவுகின்றோம். அவர் முன்னாள் இராணுவ அதிகாரி மட்டுமேயாவார். தற்போது இராணுவ அதிகாரியாக இல்லை. எம்மைப் பொறுத்தவரை வடக்குப் பற்றி தெரிந்த ஒருவரை ஆளுநராக நியமிக்க வேணடியது அவசியமாகும். அதனை யாராலும் மாற்ற முடியாது. கூட்டமைப்பை பொறுத்தவரை அவர்களுக்கு தனிப்பட்டவர்கள் குறித்து பிரச்சினைகள் இருக்க முடியாது. மாறாக அவர்களின் கொள்கைகளே அவர்களின் முரண்பாட்டுக்கு காரணமாக அமைகின்றது. வட மாகாண ஆளுநர் தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் கூட்டமைப்புக்கு எந்தப் பிரச்சினையும் இருக்க முடியாது. ஆனால் கொள்கைகள் அடிப்படையில் அவர்களுக்கு பிரச்சினை இருக்கலாம் என்று நாங்கள் கருதுகின்றோம். அதற்காக அவர்கள் கூறுகின்றவரை ஆளுநராக நியமிக்க முடியாது. வடக்கைப் பற்றி தெரிந்த எமக்கு விசுவாசமானவரையே நாங்கள் நியமிப்போம். மாகாண சபையை பொறுத்தமட்டில் ஆளுநர் என்பவர் ஒரு அதிகாரி மட்டுமேயாவார். அதிகாரம் முழுவதும் ஆளும் கட்சிக்கே உள்ளது. அந்தவகையில் வட மாகாண சபையின் ஆளும் கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காணப்படுகின்றது. இந்நிலையில் அவர்களினால் மக்களுக்கு சேவையாற்ற முடியும். ஆளுநர் என்பவர் முதலமைச்சர் அல்ல. அவர் ஒரு அதிகாரி. மத்திய அரசாங்கத்துக்கும், மாகாண அரசாங்கத்துக்கும் இடையில் இணைப்பாளராககடமையாற்றுகின்றவர். எனவே அவரை மாற்றிவிட்டு தங்களுக்கு தேவையானவரை நியமிக்குமாறு கோர முடியாது. கேள்வி - தாம் அதிகாரத்தில் உள்ள மாகாண சபைக்குத் தேவையான ஆளுநரை கூட்டமைப்பு கோர முடியாதா? பதில் - வட மாகாண சபையின் ஆட்சியையும் அதிகாரத்தையும் வைத்துக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபைக்கான ஆளுநர் பதவியையும் கோருவது நியாயமற்றதாகும். ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றுக்கு நாங்கள் ஊடகவியாளர்களை அழைக்கும் போது குறிப்பிட்ட ஊடகவியலாளரை அனுப்புமாறு நாங்கள் கோர முடியாது. அது பத்திரிகை ஆசிரியருக்கு உள்ள உரிமையாகும். அதேபோன்று தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வருமாறு கூட்டமைப்பை கோரியுள்ளோம். ஆனால் கூட்டமைப்பில் உள்ள ஒருவரை குறிப்பிட்டுக்காட்டி அவரை அனுப்புமாறு நாங்கள் கோர முடியாது. கூட்டமைப்பின் தலைமை விரும்புகி்ன்ற பொருத்தமானவரையே அனுப்புவார்கள். அதுதான் ஜனநாயக பண்பாகவுள்ளது. அதுபோன்றே வட மாகாண சபைக்காக மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதியாக எமக்குத் தேவையானவரையே நியமிப்போம். அது தொடர்பில் எவரும் கேள்வியெழுப்ப முடியாது. கூட்டமைப்பினர் தற்போது மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசிக்கொண்டிருக்காமல் சர்வதேச பிரச்சினைகள் குறித்து பேசுகின்றனர். மக்களுக்கு சேவையாற்றாமல் தொடர்ச்சியாக அரசாங்கத்தை குறைகூறுகின்றனர். வடக்கில் தற்போது கல்வி, சுகாதாரம், மீன்பிடி, விவசாயம், நீர்ப்பாசனம் போன்ற துறைகள் வீழ்ச்சி கண்டுள்ளன. பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க முடியுமாக இருந்தாலும் வட மாகாண சபை எதனையும் செய்யாமல் உள்ளது. மக்களுக்கு சேவையாற்றுங்கள் என்றே நாங்கள் கூறுகின்றோம். ஆனால் வட மாகாண சபை ஆளும் கட்சியானது அதிகாரிகளுடன் சண்டை போடுவதையும் ஊடகவியலாளர்களுடன் முரண்படுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளது. மக்களை சநதிப்பதில்லை. மாவட்டங்களுக்கு இடையில் பிரச்சினைகள் ஏற்படுத்தப்படுகின்றன. அவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகள் குறித்தே பேசிக்கொண்டிருக்கின்றனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| அகதிகள் 153 பேரையும் ஏற்றுக்கொள்ளுமாறு மெல்பேர்னில் ஆர்ப்பாட்டம்! Posted: 13 Jul 2014 11:40 PM PDT
அவுஸ்திரேலியா அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 153 தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாமென கோரி நேற்று ஆப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதிக மக்கள் கூடுகின்ற மெல்பேர்ன் நகரில் Refugee action collective எனும் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், அவுஸ்திரேலிய மக்கள் பலர் கலந்து கொண்டு "அகதிகளை ஆபத்தான இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம்", "அவர்களை தரையிறங்க அனுமதி", அவர்களை தங்க அனுமதி" போன்ற கோஷங்களை எழுப்பினர். இவ்வார்ப்பாட்டத்தில் பசுமைக்கட்சி சார்பில் செனற்றர் "ஜெனட் ரைஸ்" கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் சில தமிழர்களும் கலந்து கொண்டனர். தமிழ் அகதிகள் சார்பில் 2009ஆம் ஆண்டு மெராக் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்ட 254 அகதிகளின் பேச்சாளரான நிமல் கலந்து கொண்டு பேசினார். இலங்கைத் தமிழர்களுக்கு இன்னும் ஆபத்தான நாடாக இருந்து வருவதாகவும், இலங்கையில் தமிழர்கள் அரசியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதில்லை என கூறிய அவுஸ்திரேலிய அமைச்சர் ஸ்கொட் மொரிசனின் கருத்து தவறு எனவும் அங்கு பேசியவர்கள் சுட்டிக் காட்டினர். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அமைச்சர் அங்கு தமிழர்கள் எவரையும் சந்திக்காது இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மேஜர் ஒருவரையே சந்தித்ததாகவும் அங்கு தமிழர்கள் சார்பில் கலந்து கொண்ட நிமல் எதிர்ப்பு வெளியிட்டார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஜனாதிபதி மஹிந்தவின் சிவப்பு நிறச் சால்வை: சுவாரஸ்ய சம்பவம்! Posted: 13 Jul 2014 11:37 PM PDT
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழமையாக அணியும் சிவப்பு நிறச் சால்வையை "ரை" என்று நினைத்த தென்னாபிரிக்க பிரதிநிதியொருவர் அதனை டுவிட்டரில் பதிவு செய்த சுவாரஸ்ய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்த தென்னாபிரிக்க பதில் ஜனாதிபதி சிறில் ரமபோஷா தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவரது அலரி மாளிகை இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர். அந்த சந்திப்பின்போது, ஜனாதிபதி மகிந்த மற்றும் தென்னாபிரிக்க பதில் ஜனாதிபதி ரமபோசா இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படம் எடுக்கப்பட்டது. அந்த புகைப்படத்தை, தென்னாபிரிக்கக் குழுவில் வந்த பிரதிநிதி அவசரமாக டுவிட்டரில் பதிவேற்றியுள்ளார். அதில், "இது ரமபோஷா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்தபோது..... அவர் (மஹிந்த ராஜபக்ஷ) மிக அவசரத்தில்தான் இருக்கின்றார். தனது 'ரை'யைக் கட்டக் கூட மறந்து விட்டார்...! என குறிப்பும் எழுதியுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| அரசியல்வாதிகள் மக்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும்! அமைச்சர் மேர்வின் சில்வா Posted: 13 Jul 2014 11:34 PM PDT
அரசியல்வாதிகள் மக்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டுமென அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். அண்மையில் இரண்டு அரசியாவாதிகள் தொலைக்காட்சி விவாதமொன்றில் ஒருவரை ஒருவர் கடித்துக்கொண்டனர். இவ்வாறு கடித்துக் கொள்வது மிருகங்களுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கும். மனிதர்களுக்கு இது பொருத்தமாகாது. அரசியல்வாதிகள் மக்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். எனினும், இந்த அரசியல்வாதிகளின் நடவடிக்கை இழிந்த நிலையில் காணப்பட்டது. நான் ஓர் சிறந்த சிங்கள பௌத்தன. நான் எல்லா இனத்திற்கும் எல்லா மதத்திற்கும் கௌரவமளிக்கின்றேன். பௌத்த மத வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றினால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற வாய்ப்பில்லை என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். வடுவத்த விஹாரை ஒன்றில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வட மத்திய மாகாண சபையின் முதலமைச்சர் தயாசிறி ஜயசேகரவிற்கும், பதுளை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட சண்டை தொடர்பில் அமைச்சர் மேர்வின் சில்வா இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பேருந்தில் பாட்டு பாடினால் அபராதம்: அதிரடி அறிவிப்பு! Posted: 13 Jul 2014 11:27 PM PDT
பேருந்தில் பாட்டு பாடி தொல்லை கொடுக்கும் ஆசாமிகளை கட்டுப்படுத்த கனடாவில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேருந்தில் பயணம் செய்பவர்கள் பாட்டு பாடினால் ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்று கனடாவில் உள்ள வின்னிபெக் நகர நிர்வாகம் அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கனடா நகரங்களில் சிறிய இசைக்குழுவினர் அடிக்கடி பொது இடங்களில் பாடியபடி பயணம் செய்வது வழக்கம். தற்போது இந்த உத்தரவின் மூலம் அதற்கு முட்டு கட்டை விழுந்துள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நகர வாசி ஒருவர் கூறுகையில், நான் தினமும் வேலைக்கு பேருந்தில்தான் பயணம் செய்வேன். அப்போது ஓட்டுநர் விசிலடித்தபடியோ, பாட்டு பாடியபடியோ உற்சாகமாக பேருந்தை ஓட்டி செல்வார். இதனை பள்ளி குழந்தைகளும் ரசிக்கும். ஆனால் இனி அவ்வாறு பாட முடியாது. இந்த உத்தரவு மிகவும் கேலிக்கூத்தான ஒன்றாகும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே நகர நிர்வாகம் பேருந்தில் தீப்பிடிக்கும் பொருட்களை எடுத்து செல்வது, எச்சில் துப்புவது போன்ற குற்றங்களுக்கு அபராதம் விதிக்க அனுமதி வழங்கி உள்ளது. தற்போது பாட்டு பாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பென்சேகா இராணுவக் கட்டமைப்பை உடைக்கும் சாத்தியம்: கனடாவில் இருந்து கிருஸ்ணர்! Posted: 13 Jul 2014 11:24 PM PDT
இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பில்லை, அதனை தென்னிலங்கை அனுமதிக்காது, இலங்கை அரசு 2015, 2016ல் பாரிய அழிவை எதிர்கொள்ளளாம் என தமிழ் இன உணர்வாளரும் அரசியல் அவதானியுமான கிருஸ்ணர் தெரிவித்தார். இலங்கை சர்வதேச அரங்கில் அன்னியப்படுவதை உணர்ந்துள்ளது. அதனால் தன்னைப் பாதகாப்பதற்காக பல தந்திரங்களைக் கையாளுகிறது. இதன் விளைவு இலங்கை அரசின் அழிவுகாலமாகலாம் என லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசை நிகழ்வில் கனடாவில் வசித்துவரும் தமிழின உணர்வாளரும் அரசியல் அவதானியுமான கிருஸ்ணர் தெரிவித்தார்This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



















