Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பாமக வெள்ளி விழாவை முன்னிட்டு இலவச நோட்டுப் புத்தகங்கள் விநியோகம்

Posted: 27 Jul 2014 01:22 PM PDT

பாமக வெள்ளி விழாவையொட்டி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்களை வழங்கினார்.

"கல்லீரல் பாதிப்பை தடுத்துக் கொள்வதே நல்லது'

Posted: 27 Jul 2014 01:20 PM PDT

மதுப் பழக்கத்தைக் கைவிட்டு கல்லீரல் பாதிப்பைத் தடுத்துக் கொள்வதே சிறந்தது என்று சென்னை கல்லீரல் அறக்கட்டளையின் நிறுவன அறங்காவலர் டாக்டர் ஆர்.பி.சண்முகம் தெரிவித்தார்.

வில்லிவாக்கம் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து

Posted: 27 Jul 2014 01:19 PM PDT

திருவொற்றியூர் இளைஞர் கடத்திக் கொலை: ஒரு மாதத்திற்கு பின்பு துப்புத் துலங்கியது

Posted: 27 Jul 2014 01:18 PM PDT

ஒரு மாதத்திற்கு முன்பு காணாமல் போன திருவொற்றியூரைச் சேர்ந்த இளைஞர் ஆந்திரத்துக்குக் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கால் டாக்சி ஓட்டுநர் கொலை

Posted: 27 Jul 2014 01:18 PM PDT

கிண்டி அருகே கால்டாக்சி ஓட்டுநர் ஞாயிற்றுக்கிழமை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

சிமென்ட் விலையை  அரசு கட்டுப்படுத்த வேண்டும்: ராமதாஸ்

Posted: 27 Jul 2014 01:17 PM PDT

சிமென்ட் விலையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ச.ராமதாஸ் வலியுறுத்தினார்.

சேலத்தில் ஆகஸ்ட் 17-இல் கல்வி உரிமை மாநாடு: திருமாவளவன்

Posted: 27 Jul 2014 01:16 PM PDT

சேலத்தில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி, கல்வி உரிமை மாநாடு நடத்தப்படும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

தகவல் உரிமைச் சட்ட வரம்புக்குள் விமானப் படை விளையாட்டு வளாகம்

Posted: 27 Jul 2014 01:06 PM PDT

தகவல் உரிமைச் சட்ட வரம்புக்குள் விமானப் படை விளையாட்டு வளாகம் கொண்டு வரப்படும் என்று மத்திய தகவல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஊழல் நீதிபதிக்கு பணி நீட்டிப்பு: நான் கருத்துக் கூற வேண்டிய அவசியமில்லை - மன்மோகன் சிங்

Posted: 27 Jul 2014 01:06 PM PDT

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது தொடர்பாக, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு எழுப்பியுள்ள சர்ச்சை குறித்து, ""நான் கருத்துத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை'' என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

கடற்படைக்கு ஹெலிகாப்டர்கள் வாங்கும் திட்டம் ஒத்திவைப்பு

Posted: 27 Jul 2014 01:03 PM PDT

கடற்படைக்கு ஹெலிகாப்டர்கள் வாங்கும் திட்டத்தை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.

6 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ. 13 கோடி அபராதம்

Posted: 27 Jul 2014 01:01 PM PDT

மத்தியபிரதேசத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் கடந்த 2013-14 ஆம் ஆண்டு அரசு ஒதுக்கீட்டு இடங்களை, கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பியதாக 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு அந்த மாநில அரசு ரூ. 13 கோடி அபராதம் விதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யுபிஎஸ்சி தேர்வு முறை விவகாரம்: ராஜ்நாத் சிங் ஆலோசனை

Posted: 27 Jul 2014 12:58 PM PDT

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் குடிமைப் பணிக்கான தேர்வு முறை குறித்த விவகாரத்துக்கு தீர்வு காண, உயர்நிலைக் கூட்டத்தை மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை கூட்டியது.

நீதிபதிகள் தேர்வுக் குழு கலைப்பா? இன்று கருத்து கேட்கிறது மத்திய அரசு

Posted: 27 Jul 2014 12:56 PM PDT

நீதிபதிகள் தேர்வுக் குழு முறையை நீக்குவது தொடர்பான மசோதா தொடர்பாக சட்ட நிபுணர்கள், முன்னாள் நீதிபதிகளின் கருத்துகளை மத்திய அரசு திங்கள்கிழமை கேட்க உள்ளது.

கேமரூன் துணைப் பிரதமரின் மனைவி கடத்தல்

Posted: 27 Jul 2014 12:54 PM PDT

கேமரூன் நாட்டின் துணைப் பிரதமரின் மனைவியை போகோ ஹராம் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.

கவலைக்கிடமான கழிவறைகள்

Posted: 27 Jul 2014 12:42 PM PDT

கழிப்பறையைச் சுத்தம் செய்து கழிப்பிட பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் மகாத்மா காந்தி.

அகதிகளல்ல; சகோதரர்கள்!

Posted: 27 Jul 2014 12:41 PM PDT

நம் பாரத மணித் திருநாட்டில் பல்வேறு காலகட்டங்களில் நம்மைச் சுற்றியுள்ள வெவ்வேறு அண்டை நாடுகளிலிருந்தும் பலவிதமான மக்கள் அகதிகளாகவும், ஊடுருவல்காரர்களாகவும் நுழைந்துள்ளனர்.

வாளாவிருந்தால் எப்படி?

Posted: 27 Jul 2014 12:40 PM PDT

ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவிகள் குண்டு வீச்சில் இறந்திருக்கிறார்கள். படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கையோ பல மடங்கு அதிகம்.

15 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிடமாற்றம்

Posted: 27 Jul 2014 12:38 PM PDT

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 15 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், மாவட்டக் கல்வி அலுவலர்கள் நிலையில் உள்ள 15 அலுவலர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களாக (சி.இ.ஓ.) பதவி உயர்வு வழங்கி பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இல்லத்தில் சக்தி வாய்ந்த ஒட்டுக் கேட்கும் கருவி?

Posted: 27 Jul 2014 12:37 PM PDT

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் தில்லி இல்லத்தில் சக்தி வாய்ந்த ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

நெல் கொள்முதலுக்கு ஊக்கத்தொகை வழங்கத் தடை: மத்திய அரசுக்கு கண்டனம்

Posted: 27 Jul 2014 12:36 PM PDT

நெல் கொள்முதலுக்கு மாநில அரசுகள் ஊக்கத்தொகை வழங்க கூடாது என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு திமுக தலைவர் கருணாநிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.

கூகுள் நிறுவனத்தின் மீது சிபிஐ வழக்கு

Posted: 27 Jul 2014 12:33 PM PDT

பிரபல தேடுதல் இணையதளமான கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு நில வரைபடப் போட்டி நடத்தியபோது, விதிகள் மீறப்பட்டதாக அந்த நிறுவனத்தின் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

செப்டம்பர் 6-இல் மூன்றாம் கட்ட எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கலந்தாய்வு

Posted: 27 Jul 2014 12:32 PM PDT

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மூன்றாம் கட்டக் கலந்தாய்வு செப்டம்பர் 6-ஆம் தேதி தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரியலூரில்குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது

Posted: 27 Jul 2014 12:28 PM PDT

அரியலூரில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அரியலூர் மாவட்டம், கோவிந்தபுத்தூர் கிராமம், கீழத்தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன் (39). இவர்மீது ஆற்றிலிருந்து அனுமதியின்றி மணல் அள்ளியதாக பல வழக்குகள் உள்ளன. இந்த

அரியலூரில் தேமுதிக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு

Posted: 27 Jul 2014 12:27 PM PDT

அரியலூரில் தேமுதிக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. அரியலூர் மார்க்கெட் பள்ளிவாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேமுதிக மாவட்டச் செயலாளர்

பிளாஸ்டிக் ஒழிப்புப் பணியில் பள்ளி மாணவர்கள்

Posted: 27 Jul 2014 12:27 PM PDT

அரியலூர் மான்ட்போர்ட் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கல்லங்குறிச்சியில் பிளாஸ்டிக் ஒழிப்புப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.

ஆக. 1 வரை காப்பீடு அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி

Posted: 27 Jul 2014 12:27 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்தில் ஆக. 1-ம் தேதி வரை விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இதுவரை காப்பீட்டு அட்டை பெறாதவர்களுக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற உள்ளது.

புதிய வேளாண் மின் இணைப்புகளை உடனே வழங்க வலியுறுத்தல்

Posted: 27 Jul 2014 12:26 PM PDT

புதிய வேளாண் மின் இணைப்புகளை தாமதமின்றி வழங்க வேண்டும் என மாவட்ட நுகர்வோர் குழு வலியுறுத்தியுள்ளது.

நமனசமுத்திரத்தில் மருத்துவ முகாம்

Posted: 27 Jul 2014 12:26 PM PDT

புதுக்கோட்டை அருகே நமனசமுத்திரத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.

"மின்சார சேமிப்பு மின் உற்பத்திக்கு இணையானது

Posted: 27 Jul 2014 12:26 PM PDT

மின்சார சேமிப்பு என்பது மின் உற்பத்திக்கு இணையானது என்றார் புதுக்கோட்டை மாவட்ட மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் பாரதி.

எள் சாகுபடி தொழில்நுட்பப் பயிற்சி

Posted: 27 Jul 2014 12:26 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், குலமங்கலம் அருகே விவசாயிகளுக்கு ஆடிப்பட்ட எள் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண் கல்லூரி மாணவர்கள் வெள்ளிக்கிழமை பயிற்சி அளித்தனர்.

ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு இந்தியா விசா வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

Posted: 27 Jul 2014 12:25 PM PDT

இலங்கை மீதான ஐ.நா. விசாரணைக் குழு இந்தியாவில் விசாரணை நடத்துவற்கு மத்திய அரசு விசா வழங்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.

மனிதக் கழிவுகளை அகற்றுவோரைகணக்கெடுக்கும் பணி இன்று தொடக்கம்

Posted: 27 Jul 2014 12:25 PM PDT

நாகை மாவட்டத்தில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோரைக் கணக்கெடுக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கி ஆக. 3-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

2.84 லட்சம் குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்ட அட்டை

Posted: 27 Jul 2014 12:25 PM PDT

நாகை மாவட்டத்தில் 2.84 லட்சம் குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்றார் நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி

பொறியியல் பணித் தேர்வு: 31 ஆயிரம் பேர் பங்கேற்பு

Posted: 27 Jul 2014 12:25 PM PDT

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த பொறியியல் பணித் தேர்வை 31 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.

ரயில் பயணிகள் அவதி

Posted: 27 Jul 2014 12:25 PM PDT

கரூர் பயணிகள் ரயிலில் ஞாயிற்றுக்கிழமை திடீரென பிரேக்கில் பழுது ஏற்பட்டதைத் தொடர்ந்து கரூரில் இருந்து ரயில் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.

கரூரில் டேங்கர் லாரி மோதி இளைஞர் சாவு

Posted: 27 Jul 2014 12:24 PM PDT

கரூரில் டேங்கர் லாரி மோதியதில் சனிக்கிழமை இரவு இளைஞர் ஒருவர் இறந்தார்.

பெண்ணிடம் 10 பவுன் பறிப்பு

Posted: 27 Jul 2014 12:24 PM PDT

தொட்டியம் வட்டம், ஸ்ரீராமசமுத்திரம் அக்ரஹாரத்தில் வசிப்பவர் சீனிவாசன் (52). விவசாயத் தொழிலாளர். சனிக்கிழமை இரவு இவரது வீட்டின் பின்பக்க ஜன்னலை உடைத்து வீட்டினுள் புகுந்த

அமராவதி ஆற்றிலுள்ள குடிநீர் உறிஞ்சு கிணறுகளைத் தூர்வார வேண்டும்

Posted: 27 Jul 2014 12:24 PM PDT

கரூர் அமராவதி ஆற்றில் உள்ள குடிநீர் உறிஞ்சு கிணறுகளைத் தூர்வார வேண்டும் என கரூர் திருக்குறள் பேரவை வலியுறுத்தியுள்ளது.

அமராவதி ஆற்றில் சீரமைப்புப் பணி தீவிரம்

Posted: 27 Jul 2014 12:24 PM PDT

அமராவதி ஆற்றில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் திங்கள்கிழமை கரூரை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஆற்றில் உள்ள முட்புதர்களை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கரூர் பகுதியில் மின் திருட்டு: ரூ.10,000 அபராதம் விதிப்பு

Posted: 27 Jul 2014 12:23 PM PDT

கரூர் பகுதியில் மின்சாரம் திருடியவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தங்கம் விலை உயர்ந்தாலும் தாலிக்குத் தங்கம் திட்டத்தை நிறுத்தவில்லை : அமைச்சர்

Posted: 27 Jul 2014 12:23 PM PDT

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தபோதும் ஏழைப் பெண்களுக்கு வழங்கப்படும் தாலிக்குத் தங்கம் திட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்து தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார் என்றார் போக்குவரத்து அமைச்சர் வி.செந்தில்பாலாஜி.

ஆற்றில் தண்ணீர் திருட்டை தடுக்க கண்காணிப்புக் குழு

Posted: 27 Jul 2014 12:23 PM PDT

கரூர் அமராவதி ஆற்றில் தண்ணீர் திருட்டைத் தடுக்க கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

லாரி மோதி தொழிலாளி சாவு

Posted: 27 Jul 2014 12:23 PM PDT

கும்பகோணம் அருகே சனிக்கிழமை இரவு நடந்து சென்ற கட்டுமானத் தொழிலாளி மீது லாரி மோதியதில் அவர் உயிரிழந்தார்.

தொடர் குற்றங்களில் ஈடுபட்ட இருவர்குண்டர் சட்டத்தில் கைது

Posted: 27 Jul 2014 12:22 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இருவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் உத்தரவிட்டார்.

ராகிங்கை தடுக்க பொறியியல் கல்லூரிகளில் தனிக் குழு: அண்ணா பல்கலை. அறிவுறுத்தல்

Posted: 27 Jul 2014 12:22 PM PDT

மாணவ, மாணவிகளிடையே ராகிங்கை தடுக்க குழு அமைக்க வேண்டும் என்று அனைத்துப் பொறியியல் கல்லூரிகளுக்கும் அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

நாகை அருகே 70 லிட்டர் சாராயம் பறிமுதல் : பெண் கைது

Posted: 27 Jul 2014 12:22 PM PDT

நாகை மாவட்டம், சிக்கலில் வீட்டின் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 70 லிட்டர் புதுச்சேரி சாராயம் சனிக்கிழமை இரவு கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக ஒரு பெண் கைது

உண்டு உறைவிட பள்ளி தொடக்கம்

Posted: 27 Jul 2014 12:21 PM PDT

புதுக்கோட்டையில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் புதுகை பல்நோக்கு சமூக சேவை சங்கம் சார்பில் உண்டு உறைவிடப் பள்ளி தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வினாடி வினா போட்டி

Posted: 27 Jul 2014 12:21 PM PDT

ஆலங்குடியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஒன்றிய அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான வினாடிவினா போட்டி அண்மையில் நடைபெற்றது.

2 ஆயிரம் பேருக்கு மடிக்கணினி, மிதிவண்டி அளிப்பு

Posted: 27 Jul 2014 12:21 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல், விராலிமலை ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் 2099 விலையில்லா மடிக்கணினிகள் மற்றும் 2020 விலையில்லா

ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு

Posted: 27 Jul 2014 12:21 PM PDT

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த பொறியாளர் பணிகளுக்கான எழுத்துத் தோவில் 430 பேர் பங்கேற்றனர்.

உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

Posted: 27 Jul 2014 12:20 PM PDT

உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டுமென புதுக்கோட்டை மாவட்ட உணவக உரிமையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஊராட்சித் தலைவரின் கணவர்மீது கொலை முயற்சி வழக்கு

Posted: 27 Jul 2014 12:20 PM PDT

சித்தன்னவாசல் சமத்துவபுரத்தில் பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கியதில் முறைகேடு தொடர்பாக புகார் எழுப்பியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட புகாரின்பேரில் ஊராட்சித் தலைவியின்

ரெளடி கொலை : கைதானோர் நீதிமன்றத்தில் ஆஜர்

Posted: 27 Jul 2014 12:20 PM PDT

புதுக்கோட்டை ரெளடி கொலை வழக்கில் கைதான 7 பேரை திருமயம் நீதிமன்றத்தில் சனிக்கிழமை இரவு முன்னிலைப்படுத்தினர்.

குளத்தூரில் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உதவிகள்

Posted: 27 Jul 2014 12:19 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூரில் சனிக்கிழமை நடந்த முகாமில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் ரூ. 1.43 லட்சத்திலான நலத் திட்ட உதவிகளை ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் ந. சுப்பிரமணியன் வழங்கினார்.

சதுர்மாஸ்ய விரதம்: மந்த்ராலய மடத்தின் பீடாதிபதிக்கு குடந்தையிலிருந்து பிரசாதம்

Posted: 27 Jul 2014 12:19 PM PDT

சதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டுள்ள மந்த்ராலய ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் மடத்தின் பீடாதிபதிக்கு கும்பகோணம் ஸ்ரீவிஜயீந்திர தீர்த்தசுவாமிகள் மடத்தின் பிரசாதம் மற்றும் இந்தப் பகுதி கோவில்களின் பிரசாதங்கள் அண்மையில் வழங்கப்பட்டன.

60 பேருக்கு தையல் இயந்திரம்: அமைச்சர் வழங்கினார்

Posted: 27 Jul 2014 12:19 PM PDT

தஞ்சாவூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 60 பேருக்கு விலையில்லா தையல் இயந்திரம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

வன்முறையற்ற வாழ்க்கையை உறுதிப்படுத்த வேண்டும்

Posted: 27 Jul 2014 12:18 PM PDT

வன்முறையற்ற வாழ்க்கையை அனைவருக்கும் உறுதிப்படுத்த வேண்டும் என அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

குடந்தை அருகேலாரி மோதி கட்டுமான தொழிலாளி சாவு

Posted: 27 Jul 2014 12:18 PM PDT

கும்பகோணம் அருகே சனிக்கிழமை இரவு நடந்து சென்ற கட்டுமானத் தொழிலாளி மீது லாரி மோதியதில் அவர் உயிரிழந்தார்.

திருபுவனம் பட்டுக் கூட்டுறவு சங்கத்தில் கடந்த 4 மாதங்களில் ரூ. 13.35 கோடிக்கு விற்பனை

Posted: 27 Jul 2014 12:18 PM PDT

திருபுவனம் பட்டுக் கூட்டுறவு சங்கத்தில் கடந்த 4 மாதங்களில் 13.35 கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றுள்ளது என அந்தச் சங்கத்தின் தலைவர் ஜோதி, மேலாண்மை இயக்குநர் சாரதிசுப்

தொடர் குற்றங்களில் ஈடுபட்ட இருவர்குண்டர் சட்டத்தில் கைது

Posted: 27 Jul 2014 12:18 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இருவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் உத்தரவிட்டார்.

குடந்தையில் பா.ம.க. முப்பெரும் விழா

Posted: 27 Jul 2014 12:17 PM PDT

பாட்டாளி மக்கள் கட்சியின் 25-வது ஆண்டு வெள்ளிவிழாவை முன்னிட்டு, குடந்தையில் ஜூலை 24-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் முப்பெரும் விழா நடைபெற்றது.

சந்தன மாதா ஆலய மின் அலங்கார தேர் பவனி

Posted: 27 Jul 2014 12:17 PM PDT

காரைக்காலில் புனித சந்தன மாதா ஆலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு மின் அலங்கார தேர் பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

"அரசுத் திட்டங்கள் பயனாளிகளை சென்றடைவது கண்காணிக்கப்படுகிறது'

Posted: 27 Jul 2014 12:17 PM PDT

அரசுத் திட்டங்களின் பயன்கள் உரிய பயனாளிகளைச் சென்றடைகிறதா என்பதை அரசு கூர்ந்து கண்காணித்து வருகிறது என்றார் அமைச்சர் கே.ஏ. ஜெயபால்.

கட்டிய 6 மாதங்களில் இடிந்துவிழும் நிலையில் இடுகாட்டு தடுப்புச் சுவர்

Posted: 27 Jul 2014 12:17 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூரை அடுத்த கோவில்பத்து ஊராட்சியில் சுமார் 6 மாதங்களுக்கு முன்பு ரூ. 3 லட்சம் செலவில் கட்டப்பட்ட இடுகாட்டு தடுப்புச்சுவர் தற்போது இடிந்துவிழும் நிலையில்

உணவு விடுதி உரிமையாளர் கொலையில் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு?

Posted: 27 Jul 2014 12:16 PM PDT

: தஞ்சாவூர் உணவு விடுதி உரிமையாளர் கொலை வழக்கில் அரசியல் பிரமுகர்களுக்கும், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீஸார்

ஆடையை களையச் செய்து சோதனை: 2 டிக்கெட் பரிசோதகர்கள் பணியிடை நீக்கம்

Posted: 27 Jul 2014 12:11 PM PDT

மும்பையில் இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்வதற்கு பயணச்சீட்டு வாங்கிய 65 வயது பெண் ஒருவர் தவறுதலாக முதல் வகுப்பு பெட்டியில் ஏறியதையடுத்து, அவரை ஆடைகளைக் களையச் செய்து சோதனை நடத்தியதாக 2 பெண் பயணச்சீட்டுப் பரிசோதகர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மக்களவைக் குழுக்களுக்கு 4 பிஜேடி எம்.பி.க்கள் தேர்வு

Posted: 27 Jul 2014 12:09 PM PDT

மக்களவையின் 4 அலுவல் குழுக்களுக்கு உறுப்பினர்களாக பிஜு ஜனதாதளத்தைச் சேர்ந்த 4 எம்.பி.க்கள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பத்ருஹரி மகாதப் தெரிவித்துள்ளார்.

40 ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட நிலத்தை வழங்காமல் இழுத்தடிப்பு

Posted: 27 Jul 2014 12:08 PM PDT

மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி பகுதியில் ராணுவ வீரரின் விதவை மனைவி இந்திரா யாதவுக்கு (72) அரசு நிலம் வழங்குவதாக அளித்த உறுதிமொழியை 40 ஆண்டுகளாக நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருவதற்கு அந்த மாநில அரசை மும்பை உயர் நீதிமன்றம் கண்டித்தது.

10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த காளை மாட்டின் உயிரணுவில் இருந்து "குளோனிங்கில்' ஆண் கன்று

Posted: 27 Jul 2014 12:07 PM PDT

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த காளை மாட்டின் பதப்படுத்தப்பட்ட உயிரணுவில் இருந்து குளோனிங் முறை மூலம் ஆண் கன்றை உருவாக்கி இந்திய விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

உ.பி. கலவரத்துக்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும்: பாஜக

Posted: 27 Jul 2014 12:07 PM PDT

உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நடந்த கலவரம்-வன்முறைக்கு மாநில அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி கூறியது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி: காங்கிரஸ் குற்றச்சாட்டில் நியாயமில்லை

Posted: 27 Jul 2014 12:06 PM PDT

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி அளிப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தெரிவித்து வரும் குற்றச்சாட்டுகளில் நியாயமில்லை என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.

மலைச்சாலையில் சென்றபோது ஜீப் டிரைவர் மாரடைப்பால் சாவு

Posted: 27 Jul 2014 12:04 PM PDT

ஏலத் தோட்டத் தொழிலாளர்களை ஜீப்பில் அழைத்து வந்தபோது, மலைப்பாதையில் சனிக்கிழமை மாலை டிரைவர் மாரடைப்பால் உயிரிழந்தார். ஜீப் நிலைதடுமாறி கவிழ்ந்ததில் பெண் தொழிலாளர்கள் காயமடைந்தார்.

மா மதிப்புக் கூட்டு உற்பத்தி நிலையம் அமைக்க கோரிக்கை

Posted: 27 Jul 2014 12:03 PM PDT

தேனி மாவட்டத்தில் மா விவசாயத்தை மேம்படுத்தும் வகையில், மா மதிப்புக் கூட்டு பொருள் உற்பத்தி நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பண்ணைக் குட்டைகள் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு

Posted: 27 Jul 2014 12:03 PM PDT

தேனி மாவட்டத்தில் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் விவசாய நிலங்களில் பண்ணைக் குட்டைகள் அமைக்க விரும்பும் சிறு, குறு மற்றும் ஆதி திராவிடர் சமுதாய விவசாயிகள் ஊரா

தேனி பழைய பேருந்துநிலையத்தில் பொதுமக்கள் அவதி

Posted: 27 Jul 2014 12:03 PM PDT

தேனியில் நகராட்சி பழைய பேருந்து நிலைய நிறுத்தத்தில், வாகனப் போக்குவரத்து முறைப்படுத்தப்படாததால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

தடுப்பணை கல் கடத்தல்: இளைஞர் மீது வழக்கு

Posted: 27 Jul 2014 12:03 PM PDT

நத்தம் புன்னப்பட்டியைச் சேர்ந்தவர் சசிக்குமார்(34). இவர் காட்டுப்பெரியகுளத்தில் உள்ள தடுப்பணையின் உடை கல்லை உடைத்து கடத்தினாராம். இதுபற்றி பொதுப்பணித்துறை பணி

குறைதீர் கூட்டத்துக்கு வரும் அரசியல் அமைப்புகள்: பாதுகாப்பு பணியில் சிக்கல்

Posted: 27 Jul 2014 12:02 PM PDT

அடிப்படை பிரச்னைகளை தீர்ப்பதற்கு மனு அளிக்க வரும் பொதுமக்களைப் போல், அரசியல் அமைப்புகள் மற்றும் சங்கத்தினரும் குறைதீர் கூட்டத்திற்கு வருவதால், பாதுகாப்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பாமக வெள்ளிவிழா கொண்டாட்டம்

Posted: 27 Jul 2014 12:02 PM PDT

பழனியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வெள்ளிவிழா ஆண்டு கொண்டாட்டமும், கொடியேற்று விழாவும் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

Posted: 27 Jul 2014 12:02 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் வெற்றிலை நகர் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

பைக்கில் சென்ற மூவர் காயம்

Posted: 27 Jul 2014 12:01 PM PDT

ராஜபாளையத்தில் பைக்கில் சென்ற மூவர் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர்.

மெட்ரிக். பள்ளியில் இப்தார் விருந்து

Posted: 27 Jul 2014 12:01 PM PDT

விருதுநகர் அருகே பெரியவள்ளிக்குளம் நோபிள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இப்தார் நோன்பு விருந்து சனிக்கிழமை மாலையில் நடைபெற்றது.

வாகனங்களில் அதிக மாணவர்களை ஏற்றிச் சென்றால் நடவடிக்கை

Posted: 27 Jul 2014 12:01 PM PDT

கல்லூரி மற்றும் பள்ளி வாகனங்களில் மாணவ- மாணவியரை அனுமதிக்கப்பட்ட இருக்கையை விட கூடுதலாக ஏற்றி, அவர்களை நிற்க வைத்து பயணிக்க வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

லாரி மீது பேருந்து மோதல்: ஸ்ரீவிலி. இளைஞர் சாவு

Posted: 27 Jul 2014 12:00 PM PDT

திருச்சி சமயபுரம் அருகே ஞாயிற்றுக்கிழமை லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார். 2 பேர் பலத்த காயமடைந்தனர்.

தங்கம் இறக்குமதி மீதான சுங்க வரியை குறைக்காவிட்டால் கடத்தல் அதிகரிக்கும்

Posted: 27 Jul 2014 12:00 PM PDT

தங்கம் இறக்குமதிக்கான சுங்க வரியை 10 சதவீதத்தில் இருந்து குறைக்காவிட்டால், கள்ளச்சந்தை நடவடிக்கைகள் அதிகரிக்க வாய்ப்புகள் ஏற்படும் என்றும், அதனால் தங்கக் கடத்தல் ஊக்கம் பெறும் என்றும் நகைத் தொழில் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மணல் அள்ளிய 6 மாட்டு வண்டிகள் பறிமுதல்

Posted: 27 Jul 2014 12:00 PM PDT

மானாமதுரை பகுதி வைகையாற்றுக்குள் மணல் அள்ளிய 6 மாட்டு வண்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கிராம வறுமை ஒழிப்பு சங்க செயல்பாடுகள்: ஆட்சியர் ஆய்வு

Posted: 27 Jul 2014 12:00 PM PDT

திருப்புவனம் ஒன்றியம் கல்லூரணி ஊராட்சியில் புதுவாழ்வுத் திட்டத்தின் சார்பில் செயல்பட்டு வரும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜாராமன் ஆய்வு செய்து உறுப்பினர்களிடம் கலந்துரையாடினார்.

பள்ளி மாணவர்களுக்கு காயகல்ப பயிற்சி

Posted: 27 Jul 2014 11:59 AM PDT

சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி ஏ.எஸ்.வி. திருமண மண்டபத்தில் பள்ளி மாணவ, மாணவியர் பங்கு கொண்ட காயகல்ப பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திராவிடர் கழக பொறுப்பாளர்பயிற்சி முகாம்

Posted: 27 Jul 2014 11:59 AM PDT

காரைக்குடியில் சிவகங்கை மண்டல திராவிடர் கழக பொறுப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

எல்.ஐ.சி.யில் அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு: மக்களவை உறுப்பினரிடம் ஊழியர்கள் மனு

Posted: 27 Jul 2014 11:59 AM PDT

எல்.ஐ.சியில் அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஊழியர் சங்கத்தினர், சிவகங்கை மக்களவை உறுப்பினர் செந்தில்நாதனிடம் மனு அளித்தனர்.

வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் நகை திருட்டு

Posted: 27 Jul 2014 11:59 AM PDT

மண்டபத்தில் உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பணியாற்றி வருபவர் ஜோசப் அந்தோணி(49). இவர் பரமக்குடி அங்கு நகர் பகுதியில் சொந்தமாக வீடு கட்டி குடியிருந்து வருகிறார். இவரது

"பிகார் இடைத் தேர்தலில் நிதீஷ் - லாலு கூட்டு பிரசாரம்'

Posted: 27 Jul 2014 11:58 AM PDT

பிகார் மாநிலத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) கட்சியின் மூத்த தலைவர் நிதீஷ் குமாரும், ராஷ்ட்ரீய ஜனதாதளச் (ஆர்ஜேடி) தலைவரான லாலு பிரசாத் யாதவும் கூட்டாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.

கோட்டை மாரியம்மன் 3ஆம் நாள் வீதி உலா

Posted: 27 Jul 2014 11:58 AM PDT

ஆடி மாதவீதி உலாவை முன்னிட்டு, அருள்மிகு கோட்டை மாரியம்மன் 3ஆவது நாளாக வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பணிமனையில் ஓய்வெடுத்த நடத்துனர் திடீர் சாவு

Posted: 27 Jul 2014 11:58 AM PDT

வேடசந்தூர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை ஓய்வறையில் தங்கியிருந்த நடத்துனர், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், வையம்பட்டி

பழனியில் சித்தர்கள் கொடியேற்று விழா

Posted: 27 Jul 2014 11:58 AM PDT

பழனியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சித்தர்கள் கொடியேற்று விழா மற்றும் இலவச மருத்துவ முகாம், அன்னதானம் ஆகியன நடைபெற்றது.

பேரிடர் மீட்புப் பணி செயல் விளக்கம்

Posted: 27 Jul 2014 11:58 AM PDT

இயற்கை பேரிடர் நிகழ்வுகளின்போது மீட்புப் பணிகள் குறித்து, தீயணைப்பு துறை சார்பில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்தியாவில் அழியும் நிலையில் 173 பறவையினங்கள்

Posted: 27 Jul 2014 11:57 AM PDT

இந்தியாவில் 173 பறவையினங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதாக சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு சங்கம் (ஐ.யூ.சி.என்) தெரிவித்துள்ளது.

கொடைக்கானலில் கோவையைச் சேர்ந்த ஓட்டுநர் சாவு

Posted: 27 Jul 2014 11:57 AM PDT

கொடைக்கானலில் கோவையைச் சேர்ந்த ஓட்டுநர் மாரடைப்பால் உயிரிழந்தார். கோவையைச் சேர்ந்தவர் மரியபாபு(40). இவர் தனியார் டிராவல்ஸில் ஓட்டுநராக பணி புரிந்து

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு

Posted: 27 Jul 2014 11:57 AM PDT

வத்தலகுண்டில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தேர்தல் நடைபெற்றது. சிஎஸ்ஐ உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்தலில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கல்லூரியில் பட்டமளிப்பு விழா

Posted: 27 Jul 2014 11:57 AM PDT

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே பண்ணைக்காடு வீரம்மாள் பரமசிவம் கலை-அறிவியல் கல்லூரியின் 10ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடத்தப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜர்: இளைஞர் கைது

Posted: 27 Jul 2014 11:57 AM PDT

வத்தலகுண்டு அருகே மாயமான பெண் மீட்கப்பட்டு உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பழைய வத்தலகுண்டைச் சேர்ந்த கண்ணன், ஆயிபொண்ணு ஆகியோரின் 17 வயது மகள் கடந்த


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™