Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


அனாதையாக விட்டுச் செல்லப்பட்ட மூதாட்டி முதியோர் இல்லத்தில் சேர்ப்பு

Posted: 26 Jul 2014 01:20 PM PDT

பரமத்திவேலூர் வட்டம், ஜேடர்பாளையம் அருகே உள்ள தண்ணீர்பந்தல்மேடு பகுதியில் அனாதையாக விட்டுச் செல்லப்பட்ட மூதாட்டி, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.

திருச்செங்கோட்டில் தொழிலாளி தற்கொலை

Posted: 26 Jul 2014 01:20 PM PDT

திருச்செங்கோட்டில் அரளிக்கொட்டையைச் சாப்பிட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

இறைச்சி உணவகங்களுக்கு நகராட்சி நிர்வாகம் கட்டுப்பாடு

Posted: 26 Jul 2014 01:19 PM PDT

நாமக்கல் நகராட்சி பகுதியிலுள்ள உணவகங்களில் நகராட்சி இறைச்சிக் கூடத்தில் வெட்டிய இறைச்சிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆடிப் பெருக்கு: ஆகஸ்ட் 3-இல் மோகனூருக்கு ரயில் இயக்க நாமக்கல் எம்.பி. வலியுறுத்தல்

Posted: 26 Jul 2014 01:19 PM PDT

ஆகஸ்ட் 3-இல் ஆடிப் பெருக்கு விழா நடைபெறுவதையொட்டி, சேலம் - கரூர் ரயில் பாதையில் பயணிகள் ரயில் இயக்க வேண்டும் என நாமக்கல் எம்.பி. பி.ஆர்.சுந்தரம் மத்திய ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

அரசுக் கல்லூரி மாலை நேர வகுப்பு சேர்க்கை விண்ணப்பம் வழங்கல்

Posted: 26 Jul 2014 01:19 PM PDT

ராசிபுரம் திருவள்ளுவர் அரசுக் கலை அறிவியல் கல்லூரியில் மாலை நேர வகுப்புகள் சேர்க்கைகான விண்ணப்பம் ஆகஸ்ட் 1 முதல் வழங்கப்படும் என கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.

சட்டமும் திட்டமும் முதல்வருக்கு வெற்றியைக் கொடுத்தன

Posted: 26 Jul 2014 01:18 PM PDT

தமிழக முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஜெயலலிதா இயற்றிய மக்கள் நலத் திட்டங்களும், பயனுள்ள சட்டங்களும் அவருக்கு மக்களவைத் தேர்தலில் வெற்றியை பெற்றுக் கொடுத்திருப்பதாக செய்தித் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

மணலில் புதைந்து தொழிலாளி சாவு

Posted: 26 Jul 2014 01:18 PM PDT

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே மணலில் புதைந்து தொழிலாளி உயிரிழந்தார். கொளத்தூர் அருகேயுள்ள கருங்கல்லூரைச் சேர்ந்தவர் குழந்தைசாமி (50). இவர் வெள்ளிக்கிழமை

சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் ரூ.11 லட்சம் மோசடி: தனி வட்டாட்சியர், உதவியாளர் பணியிடை நீக்கம்

Posted: 26 Jul 2014 01:18 PM PDT

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் நடைபெற்ற ரூ.11 லட்சம் மோசடி தொடர்பாக, தனி வட்டாட்சியர், அலுவலக உதவியாளர் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கணித ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பயிற்சி

Posted: 26 Jul 2014 01:18 PM PDT

இடைநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான முதன்மை கருத்தாளர் கணித கற்பித்தல் பயிற்சி விநாயகா மிஷன்ஸ் பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.

துப்பாக்கி உரிமம் கேட்டு நரிக்குறவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 26 Jul 2014 01:17 PM PDT

துப்பாக்கி உரிமம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் நரிக்குறவர் சமுதாயத்தினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

லாரி மோதியதில் காயமடைந்தவர் சாவு

Posted: 26 Jul 2014 01:17 PM PDT

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் லாரி மோதிய விபத்தில் காயமடைந்தவர் உயிரிழந்தார்.

பல்வேறு முறைகேடுகள் புகார்:பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்

Posted: 26 Jul 2014 01:17 PM PDT

பல்வேறு முரைகேடுகள் காரணாக பள்ளப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

ஆடி அமாவாசை: முன்னோர்களின் நினைவாக மரக் கன்று நடும் விழா

Posted: 26 Jul 2014 01:17 PM PDT

ஆடி அமாவாசை நாளன்று முன்னோர்கள் நினைவாக பிதுர் தர்ப்பணம், அன்னதானம் கொடுப்பது வழக்கம். ஆனால், சேலத்தில் முன்னோடி நிகழ்வாக முன்னோர்களின் நினைவாக மரக் கன்று

ரயிலில் கடத்த முயன்ற 11 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

Posted: 26 Jul 2014 01:16 PM PDT

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே ரயிலில் கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 மூட்டை ரேஷன் அரிசியை வருவாய்த் துறை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்  .

ஆயுதப்படை குடியிருப்பில் தங்கியுள்ள காவல் நிலைய காவலர்கள் காலி செய்ய ஆணையர் உத்தரவு

Posted: 26 Jul 2014 01:16 PM PDT

சேலம் அன்னதானப்பட்டி ஆயுதப்படை குடியிருப்பில் தங்கியுள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்களை குடும்பத்துடன் காலி செய்ய வேண்டும் என்று, காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

மரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநர் காயம்

Posted: 26 Jul 2014 01:16 PM PDT

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் சில்வர் ஓக் மரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநர் பலத்த காயமடைந்தார்.

கருணை அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்களின் பணியை வரன்முறை செய்ய கோரிக்கை

Posted: 26 Jul 2014 01:16 PM PDT

கருணை அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்களின் பணியை வரன்முறைப்படுத்த வேண்டும் என்று, வருவாய்த் துறை அலுவலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

பெங்களூரு

Posted: 26 Jul 2014 01:15 PM PDT

காங்கிரஸின் அடிச்சுவடையே பாஜகவும் பின்பற்றுகிறது: ப.சிதம்பரம்

Posted: 26 Jul 2014 01:11 PM PDT

காங்கிரஸ் கட்சியின் அடிச்சுவடை பின்பற்றும் கட்சியாக பாஜக மாறிவிட்டது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

தமிழ் அகதிகளைத் திரும்ப அழைக்காவிட்டால் அழியாத பழியை மத்திய அரசு சுமக்க நேரிடும்: டி. ராஜா

Posted: 26 Jul 2014 01:07 PM PDT

ஆஸ்திரேலிய கடற்படையால் காவலில் வைக்கப்பட்டுள்ள, இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற 157 இலங்கை அகதிகளை திரும்ப அழைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், இலங்கைத் தமிழர்களை தொடர்ந்து கைவிட்டு வரும் "அக்கறை இல்லாத நாடு' என்ற அழியாத பழியை இந்தியா சுமக்க நேரிடும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா தெரிவித்தார்.

ஹஜ் புனிதப் பயணம்: தமிழக ஒதுக்கீட்டு அளவை அதிகரிக்க வேண்டும்

Posted: 26 Jul 2014 01:03 PM PDT

இஸ்லாமியர்கள் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக, நிகழாண்டில் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள எண்ணிக்கை ஒதுக்கீட்டு அளவை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

நெல்லுக்கு ஊக்கத்தொகை மறுப்பு: வைகோ, ஜி.கே.வாசன் கண்டனம்

Posted: 26 Jul 2014 01:01 PM PDT

நெல் கொள்முதலுக்கு மாநில அரசுகள் ஊக்கத்தொகை வழங்கக் கூடாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திமுகவுக்கு ஆதரவாக மனு: தேமுதிக, காங்கிரஸ், இடதுசாரிகளுக்கு கருணாநிதி நன்றி

Posted: 26 Jul 2014 12:58 PM PDT

சட்டப்பேரவையிலிருந்து நிகழ் கூட்டத் தொடர் முழுவதும் நீக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ.க்களை மீண்டும் பேரவைக்கு அழைக்க வேண்டும் என பேரவைத் தலைவரிடம் கடிதம் கொடுத்த தேமுதிக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.கே.கெüல் பதவியேற்பு

Posted: 26 Jul 2014 12:55 PM PDT

சென்னை உயர்நீதிமன்றத்தின் 27-ஆவது புதிய தலைமை நீதிபதியாக புது தில்லியைச் சேர்ந்த சஞ்சய் கிஷன் கெளல் (எஸ்.கே.கெüல்) சனிக்கிழமை பதவியேற்றார்.

மாநில மொழிகளைப் புறக்கணித்தால் ஜனநாயகத்துக்கு ஆபத்து: தா.பாண்டியன் பேட்டி

Posted: 26 Jul 2014 12:50 PM PDT

மாநில மொழிகளைப் புறக்கணிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்தை விளைவிக்கும்; எனவே, மொழிக் கொள்கையில் நேரு பின்பற்றிய கொள்கைகளை மத்திய அரசு தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று, யுபிஎஸ்சி தேர்வு குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் தெரிவித்தார்.

ராஜஸ்தான் பேரவைக்குள் குற்றவாளி நுழைந்தாரா? பாஜக புகாரால் காங்கிரஸ் அமளி

Posted: 26 Jul 2014 12:37 PM PDT

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை வளாகத்துக்குள் குற்றவாளி ஒருவர் நுழைந்ததாக பாஜக எம்எல்ஏ எழுப்பிய புகாரால் சனிக்கிழமை அமளி ஏற்பட்டது.

அகால் தக்த் தலையீட்டால் சீக்கியர் மாநாடு ரத்து

Posted: 26 Jul 2014 12:33 PM PDT

ஹரியாணாவில் தனியாக குருத்வாரா மேலாண்மைக் கமிட்டி அமைக்கப்படுவதை எதிர்த்து அகாலி தளம் நடத்தவிருந்த சீக்கியர் மாநாடு ரத்து செய்யப்பட்டது. அகால் தக்த் அமைப்பின் தலையீட்டின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உ.பி.யில் இரு சமூகத்தினரிடையே மோதல்: 2 பேர் சாவு

Posted: 26 Jul 2014 12:32 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் நிலத்தகராறு காரணமாக இரு சமூகத்தினரிடையே சனிக்கிழமை நேரிட்ட மோதலில் 2 பேர் உயிரிழந்தனர். கலவரம் மூண்டதை அடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வகுப்புக் கலவரம் தொடர்பாக பிரதமர் தனது நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும்

Posted: 26 Jul 2014 12:26 PM PDT

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமீபத்தில் நிகழ்ந்த வகுப்புக் கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தியுள்ளது.

கார்கில் போர்த் தியாகிகளுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

Posted: 26 Jul 2014 12:25 PM PDT

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான 1999ஆம் ஆண்டு கார்கில் போரில், இந்தியா வெற்றி பெற உயிர்த் தியாகம் செய்த வீரர்களை நினைவுகூரும் விதமாக "கார்கில் தியாகிகள் நினைவு தினம்' சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு: முறைகேடு: நவீனையும் விசாரிக்க பாஜக வலியுறுத்தல்

Posted: 26 Jul 2014 12:20 PM PDT

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்கையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று ஒடிஸா மாநில பாஜக தலைவர் கே.வி.சிங்தேவ் வலியுறுத்தியுள்ளார்.

எம்.பி. சஞ்சய் சிங்கின் மகன் மீது திருட்டு வழக்குப் பதிவு

Posted: 26 Jul 2014 12:18 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலத்தின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங்கின் மகன் ஆனந்த் விக்ரம் சிங் உள்பட 18 பேர் மீது அந்த மாநில போலீஸார் திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர்.

போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்: பாகிஸ்தான் ராணுவம் ஒரே நாளில் 2 முறை துப்பாக்கிச்சூடு

Posted: 26 Jul 2014 12:15 PM PDT

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இந்திய நிலைகளை குறிவைத்து வெள்ளிக்கிழமை 2 முறை பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிகார் இடைத்தேர்தல்: ஜேடியு - ஆர்ஜேடி - காங்கிரஸ் இடையே கூட்டணி

Posted: 26 Jul 2014 12:13 PM PDT

நடைபெறவுள்ள பிகார் மாநில சட்டப் பேரவை இடைத்தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு), ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கிடையே கூட்டணி ஏற்பட்டுள்ளது.

அமர்நாத் யாத்திரை: 30-ஆவது குழு பயணம்

Posted: 26 Jul 2014 12:12 PM PDT

அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக, 628 பேர் அடங்கிய 30}ஆவது பக்தர்கள் குழு சனிக்கிழமை அதிகாலை புறப்பட்டுச் சென்றது.

எதிர்க்கட்சி அந்தஸ்து விவகாரம்: அட்டர்னி ஜெனரலின் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம்

Posted: 26 Jul 2014 12:12 PM PDT

மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற, காங்கிரஸ் கட்சிக்குத் தகுதியில்லை என்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

47 கிலோ கஞ்சா பறிமுதல், 3 பேர் கைது

Posted: 26 Jul 2014 12:11 PM PDT

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் கஞ்சாவை விற்பனை செய்ய முயன்ற மூன்று பேர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.

ரயில் விபத்து: 7 குழந்தைகள் கவலைக்கிடம்

Posted: 26 Jul 2014 12:10 PM PDT

தெலங்கானாவில் பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதிய சம்பவத்தில் மேலும் 7 குழந்தைகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு மிரட்டல்

Posted: 26 Jul 2014 12:10 PM PDT

கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால், அனைத்து ரயில் நிலையங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கி 5 பெண்கள் பலி

Posted: 26 Jul 2014 12:09 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சனிக்கிழமை இடி, மின்னல் தாக்கி 5 பெண்கள் உயிரிழந்தனர்.

கங்கையில் வெள்ளப் பெருக்கு

Posted: 26 Jul 2014 12:07 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கங்கை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போர் நினைவுச் சின்னத்துக்கு புதிய இடம் விரைவில் தேர்வு: அருண் ஜேட்லி

Posted: 26 Jul 2014 12:07 PM PDT

தில்லியில் போர் நினைவுச் சின்னத்துக்கு விரைவில் புதிய இடம் தேர்வு செய்யப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

தெலங்கானா, ஆந்திர ஆளுநர் மாற்றம்?

Posted: 26 Jul 2014 12:04 PM PDT

தெலங்கானா, ஆந்திரம் ஆகிய 2 மாநிலங்களுக்கும் தற்போது ஆளுநராக உள்ள இஎஸ்ஐ நரசிம்மன் விரைவில் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாகஅண்மையில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

உக்ரைனில் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம்

Posted: 26 Jul 2014 12:00 PM PDT

உக்ரைனில் பிரதமர் ஆர்செனி யாட்சென்யுக்கின் திடீர் ராஜிநாமாவை ஏற்பதா? அல்லது நிராகரிப்பதா? என்பது குறித்து விவாதிப்பதற்காக, வரும் வியாழக்கிழமை சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிரியா: ஐ.எஸ்.ஐ.எஸ். தாக்குதலில் 85 வீரர்கள் சாவு

Posted: 26 Jul 2014 11:59 AM PDT

சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், அந்நாட்டு பாதுகாப்புப் படை வீரர்கள் 85 பேர் கொல்லப்பட்டனர்.

மோடியின் விசா விவகாரம் "முடிந்து போன விஷயம்'

Posted: 26 Jul 2014 11:59 AM PDT

பிரதமர் மோடி அமெரிக்கா வருவதற்கு விசா மறுக்கப்பட்ட விவகாரம், "முடிந்து போன விஷயம்' என்று அமெரிக்காவின் மூத்த உதவி அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

தெற்கு சூடானில் கடும் உணவுத் தட்டுப்பாடு: ஐ.நா.

Posted: 26 Jul 2014 11:58 AM PDT

தெற்கு சூடானில் அதிபர் சல்வா கீரின் ஆதரவுப் படையினருக்கும், எதிர்ப்புக் குழுவினருக்கும் இடையே நீடித்து வரும் சண்டையால், அந்நாட்டில் உலக அளவில் மிகக் கடுமையான உணவுப் பஞ்சம் நிலவுகிறது என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.

ஆப்கன் தேர்தல் முடிவுகளை அதிபர் பதவி வேட்பாளர்கள் ஏற்க வேண்டும்: ஒபாமா

Posted: 26 Jul 2014 11:58 AM PDT

ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தல் முடிவுகளை, தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களான அப்துல்லா அப்துல்லா, அஷ்ரஃப் கனி ஆகிய இருவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் சீன மாணவர் அடித்துக் கொலை

Posted: 26 Jul 2014 11:57 AM PDT

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வந்த சீன மாணவர் ஒருவர், மர்ம நபர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.

நேபாள வெளியுறவு அமைச்சருடன் சுஷ்மா ஸ்வராஜ் பேச்சுவார்த்தை

Posted: 26 Jul 2014 11:57 AM PDT

நேபாளத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் மகேந்திர பகதூர் பாண்டே யுடன் சனிக்கிழமை இருதரப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

12 மணி நேர போர் நிறுத்தம்: இஸ்ரேல்-ஹமாஸ் தீவிரவாதிகள் ஒப்புதல்

Posted: 26 Jul 2014 11:55 AM PDT

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் 19ஆவது நாளாக தாக்குதல் நடத்திய நிலையில், ஐ.நா.சபையின் வேண்டுகோளை ஏற்று சனிக்கிழமை 12 மணி நேர போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ராணுவமும், ஹமாஸ் தீவிரவாதிகள் இயக்கமும் ஒப்புதல் அளித்துள்ளன.

ஆடி அமாவாசை: சேதுக்கரை கடற்கரையில் பக்தர்கள் புனித நீராடல்

Posted: 26 Jul 2014 11:55 AM PDT

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகேயுள்ள சேதுக்கரை கடற்கரையில் சனிக்கிழமை பல்லாயிரக்கணக்கானோர் பிதுர் தர்ப்பணம் செய்து புனித நீராடி அருள்மிகு சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேய சுவாமியை வழிபட்டனர்.

மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டுப் பணிகள்: அதிகாரிகள் ஆய்வு

Posted: 26 Jul 2014 11:54 AM PDT

ராமநாதபுரம் மாவட்டத்தில் நீர்வள ஆதாரங்களை மேம்படுத்துவதற்காக செயல்பட்டு வரும் நீர்வடிப்பகுதி மேம்பாட்டுப் பணிகளை வேளாண்மைத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை நேரில்

ராமேசுவரம் மீனவர்கள் 2ஆவது நாளாக வேலைநிறுத்தம்

Posted: 26 Jul 2014 11:54 AM PDT

இலங்கை கடற்படையினரால் சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக பகுதியைச் சேர்ந்த படகுகளையும், மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் என்று கோரி வெள்ளிக்கிழமை (ஜூலை 25) முதல் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற

பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் ஜூலை 30இல் மறுகலந்தாய்வு

Posted: 26 Jul 2014 11:54 AM PDT

பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பாடப் பிரிவுகளில் உள்ள காலியிடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான மறுகலந்தாய்வு ஜூலை 30ஆம் தேதி நடைபெற உள்ளதாக அக்கல்லூரியின் முதல்வர் தா. மனோகரன் சனிக்கிழமை தெரிவித்தார்.

கமுதி கோயில்களில் சிறப்பு பூஜை

Posted: 26 Jul 2014 11:54 AM PDT

கமுதி கோயில்களில் ஆடி 2ஆவது வார வெள்ளி உற்சவ பூஜைகள் நடைபெற்றன. க்ஷத்திரிய நாடார் உறவின்முறை டிரஸ்டுக்குப் பாத்தியமான ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயிலில் ஆடி 2ஆவது வார வெள்ளி உற்சவம் நடைபெற்றது. உற்சவ சிறப்பு பூஜையை தலைமை அர்ச்சகர் ரவி என்ற

மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கல்

Posted: 26 Jul 2014 11:53 AM PDT

முதுகுளத்தூர் அருகே அலங்கானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை சட்டப்பேரவை உறுப்பினர் எம். முருகன் சனிக்கிழமை வழங்கினார்.

காரைக்குடி சம்பை ஊற்றுப் பகுதியை சுத்தம் செய்யும் பணி: அமைச்சர் பார்வையிட்டார்

Posted: 26 Jul 2014 11:53 AM PDT

காரைக்குடி மக்களின் குடிநீர் ஆதாரமான சம்பை ஊற்றுப் பகுதியை சுத்தம் செய்யும் பணியை சனிக்கிழமை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பார்வையிட்டார். மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மானாமதுரை, திருப்புவனம் கோயில்களில் ஆடி அமாவாசை விழா

Posted: 26 Jul 2014 11:53 AM PDT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஸ்ரீசெüந்தரநாயகி சமேத புஷ்பவனேசுவரர் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் சனிக்கிழமை நடைபெற்றன.

பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை

Posted: 26 Jul 2014 11:52 AM PDT

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறை அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக சிவகங்கை மாவட்டக் கிளை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சிவகங்கை மாவட்ட புதிய டி.ஆர்.ஓ. பொறுப்பேற்பு

Posted: 26 Jul 2014 11:52 AM PDT

சிவகங்கை மாவட்டத்துக்கு புதிய டி.ஆர்.ஓ வாக இளங்கோ நியமனம் செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.

காரைக்குடியில் திருவையாறு இசை நிகழ்ச்சியில் இளம் இசைக் கலைஞர்கள் பங்கேற்பு

Posted: 26 Jul 2014 11:52 AM PDT

காரைக்குடி தமிழிசைச் சங்கம், காரைக்குடி மியூசிக் அகாதெமி ஆகியவை சார்பில் ஸ்ரீ ராமநவமி மண்டபத்தில் காரைக்குடியில் திருவையாறு - 2014 எனும் இசை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 2ஆவது நாளான சனிக்கிழமை இளம் இசைக் கலைஞர்கள் இன்னிசை நிகழ்ச்சியை நடத்தினர்.

ஐ.ஓ.பி. வங்கி: முதல் காலாண்டில் நிகர லாபம் ரூ.271 கோடி

Posted: 26 Jul 2014 11:52 AM PDT

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (ஐ.ஓ.பி.) நிகர லாபம் முதல் காலாண்டில் ரூ.271.72 கோடியாக உயர்ந்துள்ளது என அந்த வங்கியின் தலைவர் எம்.நரேந்திரா கூறினார்.

தேவகோட்டை பள்ளியில் சதுரங்க போட்டி

Posted: 26 Jul 2014 11:51 AM PDT

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றன.

கல்லூரியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

Posted: 26 Jul 2014 11:51 AM PDT

தேவகோட்டை அருகே உள்ள சருகனி இதயா கல்லூரியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழச்சி நடைபெற்றது.

புதை சாக்கடைப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

Posted: 26 Jul 2014 11:51 AM PDT

 திருவள்ளூர் நகராட்சியில் நடைபெற்று வரும் புதை சாக்கடைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என திருவள்ளூர் நகர்மன்றத் தலைவர் ஏ.பாஸ்கரன் அறிவுறுத்தினார்.

சாலை விபத்து: சென்னை பாதுகாப்புப் பிரிவு உதவி ஆய்வாளர் சாவு

Posted: 26 Jul 2014 11:51 AM PDT

திருவள்ளூர் அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் சென்னை காவல் துறை பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த உதவி ஆய்வாளர்

மின்தடை: தபால் நிலைய பணிகள் பாதிப்பு

Posted: 26 Jul 2014 11:51 AM PDT

திருவள்ளூர் ஜே.என்.சாலையில் பிற்பகல் வரையில் மின்தடை ஏற்பட்டதால் தலைமைத் தபால் நிலையப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது.

பள்ளிகளில் மடிக்கணினி வழங்கல்

Posted: 26 Jul 2014 11:51 AM PDT

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள மாங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது.

மானாமதுரையில் தொடர் முழக்கப் போராட்டம்

Posted: 26 Jul 2014 11:51 AM PDT

 மானாமதுரையில் சிவப்பு நட்சத்திரம் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

இந்தியன் வங்கி: பங்குப் பத்திரங்கள் மூலம் ரூ.2,500 கோடி திரட்ட முடிவு

Posted: 26 Jul 2014 11:50 AM PDT

இந்தியன் வங்கி பங்குப் பத்திரங்கள் மூலம் ரூ. 2,500 கோடி திரட்ட முடிவு செய்துள்ளதாக அந்த வங்கியின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான டி.எம்.பாசின் தெரிவித்தார்.

ஆடி அமாவாசை: கோ. மாரியூர் கடலில் பக்தர்கள் புனித நீராடல்

Posted: 26 Jul 2014 11:50 AM PDT

ஆடி அமாவாசையை முன்னிட்டு, சாயல்குடி அருகே கோ. மாரியூர் கடலில் பல ஆயிரக்கணக்கானோர், சனிக்கிழமை அதிகாலை முதல் கடலில் புனித நீராடி, முன்னோர்களுக்கு

லாரி மீது கார் மோதல்: 4 பேர் காயம்

Posted: 26 Jul 2014 11:50 AM PDT

உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியில் சாலையில் நின்றுகொண்டு இருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் காரில் பயணித்த நான்கு பேர் காயம் அடைந்தனர்.

வீரராகவர் கோயிலில் குவிந்த பக்தர்கள்

Posted: 26 Jul 2014 11:50 AM PDT

ஆடி மாத அமாவாசை தினத்தையொட்டி திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

அமைதியாக நடந்து முடிந்த மதுபான விடுதி ஏலம்

Posted: 26 Jul 2014 11:50 AM PDT

திருவள்ளூர் மாவட்டத்தில் மதுபான விடுதிகளுக்கான ஏலம் வெள்ளிக்கிழமை அமைதியான முறையில் நடந்து முடிவடைந்தது.

செவ்வாப்பேட்டை காவல் ஆய்வாளர் இடமாற்றம்

Posted: 26 Jul 2014 11:50 AM PDT

திருவண்ணாமலை தினமணி செய்தியாளரைத் தாக்கிய காவல் ஆய்வாளரை பணியிடமாற்றம் செய்து காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. சத்தியமூர்த்தி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் திருட்டு

Posted: 26 Jul 2014 11:50 AM PDT

செங்கல்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

சேதமடைந்த தரைப்பாலம் சீரமைப்பு

Posted: 26 Jul 2014 11:50 AM PDT

ஊத்துக்கோட்டை அருகே சேதமடைந்த தரைப்பாலம் தாற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் சாலையில் ஆரணி ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர்

பூச்சிக் கொல்லி மருந்து நெடியால் விவசாயி சாவு

Posted: 26 Jul 2014 11:49 AM PDT

கம்பம், 20-ஆவது வார்டு எல்.எப்.சாலை பகுதியில் வசித்து வந்தவர் துரையரசன்(47). கம்பம் அருகே மணிகட்டு ஆலமரம் பகுதியில் உள்ள தனது மொச்சைக் காட்டில் பூச்சிக் கொல்லி மருந்து தெளித்துக்

நைஜரில் 3ஜி சேவைகளை வழங்க ஏர்டெல்லுக்கு அனுமதி

Posted: 26 Jul 2014 11:49 AM PDT

இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான பார்த்தி ஏர்டெல், ஆப்பிரிக்க நாடான நைஜர் குடியரசில் 3ஜி சேவைகளை வழங்குவதற்கான அனுமதியை (உரிமம்) பெற்றுள்ளது.

நாய்களுக்கு இனப்பெருக்கத் தடை அறுவைச் சிகிச்சை

Posted: 26 Jul 2014 11:49 AM PDT

போடியில் நாய்களுக்கு இனப்பெருக்கத் தடை அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது. போடி பகுதியில் 450-க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித் திரிகின்றன. கடந்த சில வாரங்களாக நாய்கள்

ஹைவேவிஸ் மலைப்பகுதியில் பராமரிப்பில்லாத சாலைகள்

Posted: 26 Jul 2014 11:49 AM PDT

சின்னமனூர் அடுத்துள்ள ஹைவேவிஸ் மலைப்பகுதியில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. சாலைகள் பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக உள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

புதிய பாலம் கட்ட ரூ.3 கோடி ஒதுக்கீடு: முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

Posted: 26 Jul 2014 11:49 AM PDT

பெரியகுளத்தில் ஆடு பாலம் அருகே புதிதாக பாலம் கட்டுவதற்கு ரூ 3 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற நகர்மன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

மாணவி கடத்தல்: இளைஞர் கைது

Posted: 26 Jul 2014 11:49 AM PDT

சின்னமனூர் காந்திநகர் காலனியைச் சேர்ந்தவர் சிங்கராஜா. இவருடைய மகள் இங்குள்ள தனியார் பள்ளியில் 10 வகுப்பு படித்து வருகிறார். கடந்த 21-ஆம் தேதி முதல் மாணவியை காணவில்லை. இதையடுத்து, சிங்கராஜா தனது மகளை, இதே பகுதியை சேர்ந்த சங்கரபாண்டியன்(21) கடத்திச்

அலாகாபாத் வங்கியின் நிகர லாபம் முதல் காலாண்டில் 73% குறைவு

Posted: 26 Jul 2014 11:48 AM PDT

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிகர லாபம் 72.6 சதவீதம் குறைந்துள்ளதாக பொதுத்துறை வங்கியான அலகாபாத் வங்கி சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

வேலை வாங்கித் தருவதாக மோசடி:பெண் உள்பட 3 பேர் கைது

Posted: 26 Jul 2014 11:48 AM PDT

கூடுவாஞ்சேரி அருகே வேலை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

வயிற்றுப்போக்கு தடுப்புத் திட்டம் நாளை முதல் தொடக்கம்

Posted: 26 Jul 2014 11:48 AM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தை வயிற்றுப்போக்கு தடுப்புத் திட்டம் திங்கள்கிழமை முதல் (ஜூலை 28) தொடங்கவுள்ளதாக மாவட்ட சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநர் டாக்டர் கிருஷ்ணராஜ் அறிவித்தார்.

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள்

Posted: 26 Jul 2014 11:48 AM PDT

காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஈஞ்சம்பாக்கம், பரந்தூர் கிராமங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினிகள், மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களுக்கு ரூ. 7 கோடி ஒதுக்கீடு

Posted: 26 Jul 2014 11:48 AM PDT

உத்தரமேரூர் புறவழிச்சாலை அமைக்கும் பணிக்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களுக்கு ஈட்டுத்தொகை வழங்குவதற்காக ரூ. 7 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் - திருப்பதி இடையே குளிர்சாதனப் பேருந்தை இயக்கக் கோரிக்கை

Posted: 26 Jul 2014 11:48 AM PDT

காஞ்சிபுரம் - திருப்பதி இடையே குளிர்சாதன வசதியுடன் கூடிய அரசுப் பேருந்தை இயக்க வேண்டும் என காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் வி.சோமசுந்தரம்

அரசு மருத்துவக் கல்லூரி நிறுவக் கோரிக்கை

Posted: 26 Jul 2014 11:48 AM PDT

பழனியில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆயக்குடி இலவசப் பயிற்சி மையம் தமிழக முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனு:

மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் ரூ.1.35 லட்சம் மோசடி

Posted: 26 Jul 2014 11:48 AM PDT

மானியத்துடன் கூடிய கடன் பெற்றுத் தருவதாக கூறி, சுய உதவிக்குழுவினரிடம் ரூ.1.35 லட்சம் வரை மோசடி நடந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காவல் உதவி ஆணையர்கள் 38 பேர் திடீர் இடமாற்றம்

Posted: 26 Jul 2014 11:47 AM PDT

தில்லியில் கண்காணிப்பு, பாதுகாப்பு உள்பட காவல் துறை முக்கிய பிரிவுகளின் உதவி ஆணையர்கள் 38 பேரை பணியிடமாற்றம் செய்து நகர காவல் துறை ஆணையர் பி.எஸ்.பஸ்ஸி உத்தரவிட்டார்.

ரூ.10,000 லஞ்சம் பெற்றதாக திஹார் சிறை ஊழியர் கைது

Posted: 26 Jul 2014 11:47 AM PDT

கைதியை மிரட்டி ரூ.10,000 லஞ்சம் பெற்றதாக திஹார் சிறை ஊழியர் கைது செய்யப்பட்டார்.

வியாபாரி தூக்கிட்டு தற்கொலை

Posted: 26 Jul 2014 11:47 AM PDT

தில்லியில் வியாபாரி ஒருவர் மின்விசிறியில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கெளச்சர் நோய்க்கு இலவச சிகிச்சை கோரி பேரணி

Posted: 26 Jul 2014 11:47 AM PDT

"கெளச்சர்' நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளிக்கக் கோரி பிரதமர் இல்லம் அருகே சமூக ஆர்வலர்கள் சனிக்கிழமை அமைதிப் பேரணி

டிடிஇஏ தமிழ் மாணவர்களுக்கு இலவச சீரூடை: 5 பள்ளிகளில் விநியோகம்

Posted: 26 Jul 2014 11:47 AM PDT

தில்லி தமிழ் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) 5 பள்ளிகளில் பயிலும் தமிழ் மாணவர்களுக்கு இலவச சீருடைகள் சனிக்கிழமை விநியோகிக்கப்பட்டன. முதல் முறையாக டிடிஇஏ பள்ளியில் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

"இணையதளத்தின் தரத்தை வைத்தே பொருள்களை வாங்க வேண்டும்'

Posted: 26 Jul 2014 11:47 AM PDT

இணைய தளத்தின் தரத்தை வைத்தே பொருள்களை வாங்கினால்தான் நுகர்வோருக்கு தேவையான உத்தரவாதம் கிடைக்கும் என ஓமன் நாட்டு பேராசிரியர் பால்சுந்தர் கிருபாகரன் தகவல் தெரிவித்தார்.

பள்ளியில் ஹிந்தி இலக்கிய மன்றத் தொடக்கம்

Posted: 26 Jul 2014 11:47 AM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர்- பிள்ளையார்குளம், சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஹிந்தி இலக்கிய மன்றத் தொடக்க விழா தாளாளர் சி.குமரேசன் தலைமையில் நடைபெற்றது. முதல்வர் பி.

வாகனம் மோதி முதியவர் சாவு

Posted: 26 Jul 2014 11:47 AM PDT

அருப்புக்கோட்டை அருகே சேதுராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (70). இவர் தனது ஊருக்கு அருகிலுள்ள பந்தல்குடி புறவழிச்சாலையில் சனிக்கிழமை காலை, சாலை ஓரம் நடந்து சென்றார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™