Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


காவல் துறையைக் கண்டித்து ஜூலை 31-ல் போராட்டம்

Posted: 24 Jul 2014 01:17 PM PDT

விவசாய தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளை தாக்கியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாத காவல் துறையைக் கண்டித்து வரும் 31-ம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

ஆடிப்பெருக்கு: பல்லவன்குளத்தில் நீராடும் வசதி ஏற்படுத்தப்படுமா?

Posted: 24 Jul 2014 01:17 PM PDT

புதுக்கோட்டை மக்கள் ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாடும் வகையில் சாந்தநாதர் ஆலயம் அருகே அமைந்துள்ள பல்லவன் குளத்தில் திருச்சி காவிரிக்கரைப் பகுதியில் உள்ளதைப் போல

விராலிமலையில் ஒப்பந்தக்காரரிடம் ரூ. 2.67 லட்சம் திருட்டு

Posted: 24 Jul 2014 01:16 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ. 2.67 லட்சத்தை வியாழக்கிழமை நூதன முறையில் திருடியவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கொள்முதலும் ஊக்கத் தொகையும்!

Posted: 24 Jul 2014 01:16 PM PDT

நெல் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு சென்ற மாதம் உயர்த்தியது. இதன்படி, அக்டோபர் மாதம் நடைபெறும் கொள்முதலில், ஒரு குவிண்டால் சன்ன ரக நெல்லுக்கு ரூ.1,400 கிடைக்கும்.

இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு தொழிற்பயிற்சி

Posted: 24 Jul 2014 01:16 PM PDT

புதுவாழ்வுத் திட்டத்தின் கீழ் கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு தொழிற்பயிற்சி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் திமுகவை வலுப்படுத்த நடவடிக்கை

Posted: 24 Jul 2014 01:16 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தில் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் திமுகவின் தஞ்சாவூர் மாவட்டப் பொறுப்பாளர் து. செல்வம்.

விவசாயி மீது தாக்குதல்: 2 பேர் கைது

Posted: 24 Jul 2014 01:16 PM PDT

பாபநாசம் அருகே விவசாயியை தாக்கிய 2 பேரை போலீஸார் கைது செய்தனர். பாபநாசம் காவல் சரகம், நல்லூர் மேலவீதியைச் சேர்ந்தவர் அசோகன் (32). விவசாயி. இவரு

அறுவடை புள்ளிவிவரங்களை தயார் செய்ய அறிவுறுத்தல்

Posted: 24 Jul 2014 01:15 PM PDT

 பயிர் அறுவடைக்கு வரும் வயல்கள் குறித்து சரியான முறையில் புள்ளிவிவரங்களைத் தயாரிக்க வேண்டும் என்றார் ஆட்சியர் என். சுப்பையன்.

திருட்டு: 14 வயது சிறுவன் கைது

Posted: 24 Jul 2014 01:15 PM PDT

தஞ்சாவூர் நடுக்காவிரி கீழத்தெருவைச் சேர்ந்தவர் ராஜா (35). இவருடைய வீட்டில் கடந்த மாதம் 29-ஆம் தேதி ரூ.31 ஆயிரம், 4 பவுன் நகை திருட்டு போனது.

இலவச மனைப் பட்டா கோரி உண்ணாவிரதம்

Posted: 24 Jul 2014 01:15 PM PDT

இலவச மனைப் பட்டா கோரி, கீழக்காவல்குடியைச் சேர்ந்த பொதுமக்கள் திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் அருகே தம்பதிக்கு அரிவாள் வெட்டு: 2 பேர் கைது

Posted: 24 Jul 2014 01:14 PM PDT

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே வியாழக்கிழமை ஆடு மேய்ந்த தகராறில் தம்பதியை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

"வேளாண்மைக்கு ஊறு விளைவிக்கும் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது'

Posted: 24 Jul 2014 01:14 PM PDT

வேளாண்மைக்கு ஊறு விளைவிக்கும் எந்தத் திட்டத்தையும் நடைமுறைபடுத்தவும், தொழில் நிறுவனங்கள் தொடங்கவும் மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளிக்கக் கூடாது என்றார் திராவிட

"மாணவப் பருவத்தில் தவறுகளை மறைக்கக் கூடாது'

Posted: 24 Jul 2014 01:14 PM PDT

மாணவப் பருவத்தில் தவறுகளை மறைக்கக் கூடாது என்றார் நீடாமங்கலம், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பெ. முருகன்.

கதண்டுகள் கடித்து 28 பேர் காயம்

Posted: 24 Jul 2014 01:14 PM PDT

குத்தாலம் அருகே வியாழக்கிழமை கதண்டுகள் கடித்ததில் 28 பேர் காயமடைந்தனர். குத்தாலம் வட்டம், தொழுதாலங்குடி ஊராட்சியில் தேசிய ஊரக உறுதித் திட்டத்தின் கீழ்

ஆறுகாட்டுத்துறை மீனவர்களுக்கு தகவல் தொடர்பு சாதனம் அளிப்பு

Posted: 24 Jul 2014 01:13 PM PDT

வேதாரண்யத்தைச் சேர்ந்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்துக்கு தகவல் தொடர்புக்காக எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ஒலிபெருக்கி சாதனங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

வேதாரண்யம், கோடியக்கரைகடலில் புனித நீராட ஏற்பாடு

Posted: 24 Jul 2014 01:13 PM PDT

ஆடி அமாவாசையையொட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம், கோடியக்கரையில் கடலில் சனிக்கிழமை (ஜூலை 26) அதிகாலை புனித நீராடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சீர்காழியில் குறள்நெறி வாழ்வியல் பயிற்சி

Posted: 24 Jul 2014 01:13 PM PDT

சீர்காழி திருக்குறள் பண்பாட்டு பேரவை சார்பில், மாணவ, மாணவிகளுக்கு குறள்நெறி வாழ்வியல் பயிற்சி அளிக்கப்பட்டது.

"கடல்கடந்து நிற்கும் ராசேந்திரசோழனின் புகழ்'

Posted: 24 Jul 2014 01:12 PM PDT

ராசேந்திரசோழனின் புகழ் கடல் கடந்து நிற்கிறது என்றார் ஓய்வு பெற்ற வரலாற்றுத் துறை பேராசிரியர் இல. தியாகராஜன்.

தமிழ்ப் பல்கலை.யில் அக்குபங்சர் பட்டப்படிப்பு

Posted: 24 Jul 2014 01:12 PM PDT

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இளநிலை அக்குபங்சர் பட்டப்படிப்புத் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. திருமலை தெரிவித்திருப்பது: மரபு வழி மருத்துவ

கோபாலபுரம் வீடு மட்டுமே எனது சொத்து

Posted: 24 Jul 2014 01:12 PM PDT

சென்னை, கோபாலபுரத்தில் உள்ள வீடு மட்டுமே தனது சொத்து என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம்:அனைத்துக்கட்சி கூட்டம் தேவை

Posted: 24 Jul 2014 01:12 PM PDT

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.

காலமானார்:புலவர் சி. நயினார் முகம்மது (85)

Posted: 24 Jul 2014 01:11 PM PDT

திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியின் முன்னாள் முதல்வர் புலவர் சி. நயினார் முகம்மது (85) அமெரிக்காவில் புதன்கிழமை இரவு காலமானார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தீர்ப்பாயம் நோட்டீஸ்

Posted: 24 Jul 2014 01:11 PM PDT

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தில்லியில் உள்ள சட்டவிரோத செயல்கள் தடுப்புத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பெருங்குடியில் இன்று "அம்மா' திட்ட முகாம்

Posted: 24 Jul 2014 01:11 PM PDT

திருவாரூர் அருகே பெருங்குடியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) "அம்மா' திட்ட முகாம் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார்.

வேலை உறுதித் திட்டத்தை கண்காணிக்காத அலுவலர்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர்

Posted: 24 Jul 2014 01:11 PM PDT

நாகை மாவட்டத்தில் ஊரக வேலை உறுதித் திட்டத்தை முறையாக கண்காணிக்காத அலுவலர்கள், பணித் தளப் பொறுப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி.

கூடங்குளம் 2ஆம் அணு உலையில் விரைவில் மின் உற்பத்தி தொடக்கம்: பியூஷ் கோயல்

Posted: 24 Jul 2014 01:11 PM PDT

கூடங்குளம் அணு மின் நிலையத்தின் 2ஆவது அணு உலையில் விரைவில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று மத்திய மின்சாரத்துறை இணையமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

ஆக. 5-ல் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 24 Jul 2014 01:10 PM PDT

நாகை மாவட்ட சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஆக. 5-ம் தேதி மாலை 3.30 மணிக்கு நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

செம்போடை ஆசிரியர்பயிற்சி நிலையத்தில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்கம்

Posted: 24 Jul 2014 01:10 PM PDT

வேதாரண்யத்தை அடுத்த செம்போடை ஆர்.வி. ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 2014-15 கல்வி ஆண்டுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் புதன்கிழமை தொடங்கின.

ரூ. 150 கோடியில் புதிய அணைக்கட்டுகள், கால்வாய் புனரமைப்புப் பணிகள்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

Posted: 24 Jul 2014 01:10 PM PDT

புதிய அணைக்கட்டுகள், கால்வாய் புனரமைப்பு உள்பட பல்வேறு பொதுப் பணித் துறைப் பணிகள் ரூ.150.56 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என்று அந்தத் துறையின் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் வியாழக்கிழமை அறிவித்தார்.

டிராக்டர் மோதி ஒருவர் சாவு

Posted: 24 Jul 2014 01:10 PM PDT

குத்தாலம் அருகே வியாழக்கிழமை டிராக்டர் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். குத்தாலம் அருகேயுள்ள தேரழந்தூர் கிராமம் தெற்கு பிரதான சாலையைச் சேர்ந்தவர் அப்துல்கரீம் (55). இவர் வியாழக்கிழமை தாமரைக்குளம் அருகே மோட்டார் சைக்கிளில்

மத்திய அரசின் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 24 Jul 2014 01:10 PM PDT

மத்திய அரசின் ஸ்ரம் விருது மற்றும் ஜீவன் ரக் ஷ பதக் விருதுகளுக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்துள்ளார்.

கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேர் மீது போலீஸில் புகார்

Posted: 24 Jul 2014 01:10 PM PDT

திருவாரூர் மாவட்டம், பெருகவாழ்ந்தான் அருகே முன்விரோதம் காரணமாக கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேர் மீது வியாழக்கிழமை போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

காலமானார்:ந. காசியம்மாள் (92)

Posted: 24 Jul 2014 01:09 PM PDT

குத்தாலம் வட்டம், அரையபுரம் கிராமத்தைச் சேர்ந்த மறைந்த திராவிடர் கழக பிரமுகர் கோ. நடேசனின் மனைவி ந. காசியம்மாள் (92), ஜூலை 23-ம் தேதி இரவு காலமானார்.

ஜூலை 31-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Posted: 24 Jul 2014 01:09 PM PDT

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 31-ம் தேதி காலை 10.30 மணிக்கு, ஆட்சியர் எம். மதிவாணன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று, தங்களது நிறை குறைகளைத் தெரிவித்து

சர்க்கரை ஆலைகளை ஊக்குவிக்க புதிய திட்டங்கள்

Posted: 24 Jul 2014 01:09 PM PDT

சர்க்கரை ஆலைகளை ஊக்குவிப்பதற்கான புதிய திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்ற வெடிபொருள்கள் பறிமுதல்: 3 பேர் கைது

Posted: 24 Jul 2014 01:08 PM PDT

இரு சக்கர வாகனத்தில் அனுமதியின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெடிபொருள்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 3 பேரை வந்தவாசி போலீஸார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தெற்கு உதவி ஆய்வாளர் ஜெய்சங்கர் தலைமையிலான

"5,565 அங்கன்வாடி மையங்கள் தரம் உயர்வு'

Posted: 24 Jul 2014 01:08 PM PDT

தமிழகத்தில் மொத்தமுள்ள 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்களில் முதல்கட்டமாக 5 ஆயிரத்து 565 மையங்கள் ரூ.55.65 கோடியில் தரம் உயர்த்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சிஎஸ்ஐ பள்ளி மாணவர்களுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்

Posted: 24 Jul 2014 01:08 PM PDT

ஆரணி சிஎஸ்ஐ மேல்நிலைப்பள்ளி பிளஸ்1 மாணவர்களுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை நகர்மன்றத் தலைவர் ஆனந்தகுமாரி கருணாகரன் வியாழக்கிழமை வழங்கினார்.

போளூரில் தரமற்ற, காலாவதியான பொருள்கள் பறிமுதல்

Posted: 24 Jul 2014 01:08 PM PDT

போளூரில் மளிகைக் கடைகள், பெட்டிக்கடைகள் உள்ளிட்டவற்றில் வைக்கப்பட்டிருந்த தரமற்ற, காலாவதியான பொருள்களை உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்து தீயிட்டு

தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் அனைவருக்கும் பணி வழங்கக் கோரி பெண்கள் மறியல்

Posted: 24 Jul 2014 01:08 PM PDT

ஆரணியை அடுத்த நேத்தபாக்கம் கிராமத்தில் தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின்கீழ் பாகுபாடின்றி அனைவருக்கும் பணி வழங்கக்கோரி ஆரணி-செய்யாறு சாலையில் பெண்கள்

மேல் சீசமங்கலத்தில் ரத்த தான முகாம்

Posted: 24 Jul 2014 01:07 PM PDT

செய்யாறு பொது சுகாதாரத் துறை, போதிவனம் டாக்டர் அம்பேத்கர் மாணவர் சங்கம் இணைந்து நடத்திய ரத்த தான முகாம் மேல்சீசமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

பின்தங்கிய பகுதியில் ரூ.6,525 கோடியில் தேசிய முதலீடு, உற்பத்தி மண்டலம்

Posted: 24 Jul 2014 01:07 PM PDT

பின்தங்கிய மாவட்டமான ராமநாதபுரத்தில் ரூ.6 ஆயிரத்து 525 கோடி மதிப்பீட்டில் தேசிய முதலீடு, உற்பத்தி மண்டலம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

கந்துவட்டி: எஸ்.பி. அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தொழிலாளர்கள் தஞ்சம்

Posted: 24 Jul 2014 01:07 PM PDT

ஆரணியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் கந்து வட்டி கும்பலிடமிருந்து தப்பி ஓடி திருவண்ணாமலை எஸ்.பி. அலுவலகத்துக்குச் சென்று பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளனர்.

போளூரில் வளர்ச்சிப் பணிகள்: திட்ட இயக்குநர் ஆய்வு

Posted: 24 Jul 2014 01:07 PM PDT

போளூர் ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை கூடுதல் இயக்குநர் மற்றும் திட்ட இயக்குநர் சம்பத் ஆய்வு செய்தார்.

தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அலுவலர்களுக்குப் பயிற்சி

Posted: 24 Jul 2014 01:07 PM PDT

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை செயல்படுத்தும் அலுவலர்களுக்கான 2 தின பயிற்சி வகுப்பு திருவண்ணாமலையில் வியாழக்கிழமை தொடங்கியது.

கடன் கேட்டு தகராறு செய்ததாக சகோதரர்கள் கைது

Posted: 24 Jul 2014 01:06 PM PDT

கலசப்பாக்கத்தை அடுத்த வீரலூர் கிராமத்தில் வசிப்பவர் கண்ணு என்பவருடைய மகன் அரி.

பேரவையில் இன்று....

Posted: 24 Jul 2014 01:06 PM PDT

சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் பால்வளம், கால்நடை, மீன்வளத் துறைகள் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகின்றன.

10ம் வகுப்பு, 12ம் வகுப்புத் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த நடவடிக்கை

Posted: 24 Jul 2014 01:06 PM PDT

: நடப்புக் கல்வியாண்டில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டாய்வுக்காக

ஆரணியில் ஒட்டுமொத்த துப்புரவுப் பணி

Posted: 24 Jul 2014 01:06 PM PDT

ஆரணியில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணி காரணமாக ஒட்டு மொத்த துப்புரவு பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

250 பேருக்கு மருத்துவப் பரிசோதனை

Posted: 24 Jul 2014 01:06 PM PDT

செய்யாறில் நகராட்சி, செயின்ட் ஜான்ஸ் நர்சிங் பயிற்சி மையம் ஆகியன இணைந்து நடத்திய மருத்துவ முகாம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

நீர்வழித் தடத்தில் கட்டடம் கட்டினால் நடவடிக்கை

Posted: 24 Jul 2014 01:06 PM PDT

நீர்வழித் தடத்தில் கட்டடம் கட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப் பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

நில பதிவேடுகளை சரிசெய்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம்

Posted: 24 Jul 2014 01:05 PM PDT

கணினி மயமாக்கப்பட்ட நில பதிவேடுகளை இணையதளத்தில் வெளியிடுமுன் நாளது தேதிவரை உள்ள பதிவுகளை சரிசெய்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

முதியவர் தீக்குளித்து தற்கொலை

Posted: 24 Jul 2014 01:05 PM PDT

செய்யாறு அருகே நோய் கொடுமைக் காரணமாக ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டார். இந்த பரிதாப சம்பவம் புதன்கிழமை நடந்தது.

மன்னார்குடி

Posted: 24 Jul 2014 01:05 PM PDT

தஞ்சாவூர்

Posted: 24 Jul 2014 01:04 PM PDT

புதுக்கோட்டை

Posted: 24 Jul 2014 01:04 PM PDT

மணல் விலை குறைந்துள்ளது: அமைச்சர் விளக்கம்

Posted: 24 Jul 2014 01:04 PM PDT

தமிழகம் முழுவதும் மணல் விநியோகம் சீரான முறையில் நடைபெறுவதால் மணல் விலை குறைந்துள்ளதாக பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

மணல் விற்பனை மூலம் ரூ.110 கோடி வருவாய்: தமிழக அரசு தகவல்

Posted: 24 Jul 2014 01:03 PM PDT

மணல் விற்பனை மூலம் தமிழக அரசுக்கு கடந்த நிதியாண்டில் (2013-14) மட்டும் ரூ.110 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக பொதுப்பணித் துறையின் திட்டச் சாதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாம் முக்கிய தீவிரவாதக் குழு தலைவர் உள்பட 5 பேர் கைது

Posted: 24 Jul 2014 12:58 PM PDT

அஸ்ஸாம் மாநிலத்தில் செயல்பட்டு வரும் கார்பி மக்கள் விடுதலைப்படை (கேபிஎல்டி) என்ற தீவிரவாத அமைப்பின் பொதுச் செயலாளர் உள்பட 5 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

"செபி' சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted: 24 Jul 2014 12:57 PM PDT

மோசடி நிதி நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்தை, இந்திய பங்குப் பரிவர்த்தனை வாரியத்துக்கு (செபி) அளிக்கும் சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.

நீரில் மூழ்கும் விளை நிலங்கள்: 20 லட்சம் டன் உணவு தானிய உற்பத்தி இழப்பு

Posted: 24 Jul 2014 12:57 PM PDT

இந்தியாவில் விளை நிலங்களில் தண்ணீர் தேங்குவதன் மூலம் ஆண்டுதோறும் 20 லட்சம் டன் உணவு தானிய உற்பத்தி இழப்பு ஏற்படுவதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த முடியாமல் மத்திய அரசு திணறல்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

Posted: 24 Jul 2014 12:56 PM PDT

பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது என்று மாநிலங்களவையில் காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

பிஜேடி அரசுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்னை

Posted: 24 Jul 2014 12:55 PM PDT

ஒடிஸா சட்டப்பேரவையில் விளக்கம் கோரும் சிறப்புக் குறிப்புகளை எழுப்பிய உறுப்பினர்களுக்கு தகுந்த பதிலை அளிக்காமல் விதிகளை மீறியதாக புகார் கூறி, நவீன் பட்நாயக் அரசுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்னையை எதிர்க்கட்சித் தலைவர் நரசிங்க மிஸ்ரா வியாழக்கிழமை கொண்டுவந்தார்.

சமையல் எரிவாயு விலை நிர்ணய முறையை மாற்றியமைக்க புதிய குழு: மத்திய அரசு முடிவு

Posted: 24 Jul 2014 12:55 PM PDT

இயற்கை எரிவாயு விலையை இரு மடங்காக உயர்த்த வேண்டும் என்ற முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எடுத்த முடிவுக்கு, மாற்றுத் திட்டம் குறித்து ஆராய புதிய குழு ஒன்றை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகத் தமிழர்களின் படைப்புகளை அறிமுகப்படுத்த ஈரோடு புத்தகத் திருவிழாவில் சிறப்பு படைப்பரங்கம்

Posted: 24 Jul 2014 12:27 PM PDT

உலகத் தமிழர்களின் படைப்புகளை தாய் தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் ஈரோடு புத்தகத்திருவிழாவில் உலகத்தமிழர் படைப்பரங்கம் என்ற சிறப்பு அரங்கு உருவாக்கப்படுகிறது.

நாகர்கோவில் புனித அல்போன்சா ஆலய ஆண்டுத் திருவிழா: இன்று தொடக்கம்

Posted: 24 Jul 2014 12:06 PM PDT

நாகர்கோவில் புனித அல்போன்சா ஆலய வெள்ளி விழா ஆண்டுத் திருவிழா வெள்ளிக்கிழமை (ஜூலை 25) கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

குமரி மாவட்டத்தில் சாரண இயக்கம் சிறப்பாகச் செயல்படுகிறது

Posted: 24 Jul 2014 12:05 PM PDT

குமரி மாவட்டத்தில் சாரண, சாரணிய இயக்கம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.எஸ்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

விவசாயத்தை பாதுகாக்கக் கோரி நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்

Posted: 24 Jul 2014 12:05 PM PDT

விவசாயத்தை பாதுகாக்கக் கோரியும், ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்க வலியுறுத்தியும் நாகர்கோவிலில் ஏர் கலப்பையுடன் தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில்

புதிய அரசுப் பேருந்துகளை இயக்க தேமுதிக வலியுறுத்தல்

Posted: 24 Jul 2014 12:05 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் பழுதடைந்த அரசுப் பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை இயக்க வேண்டுமென தக்கலை ஒன்றிய தேமுதிக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி திருட்டு

Posted: 24 Jul 2014 12:05 PM PDT

களியக்காவிளை அருகே பெண்ணிடமிருந்து 5 பவுன் தாலிச் சங்கிலியை திருடிச் சென்ற மர்மநபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தண்டவாளத்தில் இளைஞர் சடலம்

Posted: 24 Jul 2014 12:04 PM PDT

மார்த்தாண்டம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த இளைஞர் சடலத்தை போலீஸார் வியாழக்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனர்.

குமரி - சென்னைக்கு கிழக்கு கடற்கரை ரயில் பாதை

Posted: 24 Jul 2014 12:04 PM PDT

கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரையிலான கிழக்கு கடற்கரை ரயில் பாதை அமைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது தென் மாவட்ட பயணிகளை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

மழை குறைந்ததால் பெருஞ்சாணி அணை மூடல்

Posted: 24 Jul 2014 12:04 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை குறைந்ததையடுத்து பெருஞ்சாணி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவது புதன்கிழமை நிறுத்தப்பட்டது.

குமரியில் கரை ஒதுங்கிய வள்ளம் உரியவரிடம் ஒப்படைப்பு

Posted: 24 Jul 2014 12:03 PM PDT

கன்னியாகுமரி வாவத்துறையில் கடலில் மிதந்து வந்த வள்ளத்தை கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார் கைப்பற்றி வியாழக்கிழமை உரியவரிடம் ஒப்படைத்தனர்.

நாகர்கோவிலில் அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு

Posted: 24 Jul 2014 12:03 PM PDT

கன்னியாகுமரி மாவட்ட அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நாகர்கோவிலில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆடி அமாவாசை: பூ, காய்கனி விலை உயர்வு

Posted: 24 Jul 2014 12:03 PM PDT

 ஆடி அமாவாசையையொட்டி குமரி மாவட்டத்தில் காய்கனிகள் மற்றும் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

குமரி மாவட்டத்தில் மேலும் 3 தீயணைப்பு நிலையங்கள்

Posted: 24 Jul 2014 12:02 PM PDT

குமரி மாவட்டத்தில் மேலும் 3 இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் அமைய வாய்ப்பு உள்ளதாக கன்னியாகுமரி கோட்ட தீயணைப்பு அதிகாரி பாலசுப்பிரமணியன் வியாழக்கிழமை தெரிவித்தார்

நாகர்கோவிலில் முதியோர் பாதுகாப்பு தினம்

Posted: 24 Jul 2014 12:02 PM PDT

நாகர்கோவிலில் முதியோர் பாதுகாப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. நாகர்கோவில் ரோஜாவனம் முதியோர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு மையத்தில் நடைபெற்ற முதியோர் பாதுகாப்பு தின விழாவுக்கு மைய இயக்குநர் அருள்கண்ணன் தலைமை வகித்தார்.

ஆகஸ்ட் 1 முதல் ஆன்லைன் மூலம் சான்றிதழ்கள்: வட்டாட்சியர்

Posted: 24 Jul 2014 12:02 PM PDT

ஆன்லைன் மூலம் சாதிச்சான்று, வருமானச் சான்று உள்ளிட்ட சான்றிதழ்கள் ஆகஸ்ட் 1 முதல் வழங்கப்படும் என வட்டாட்சியர் முத்துராமலிங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

ரூ.19,000 கோடியில் ரயில் பாதைகள் மேம்படுத்தப்படும்

Posted: 24 Jul 2014 12:01 PM PDT

ரயில் பாதைகள் மேம்படுத்த ரூ.19,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் சதானந்த கெளடா தெரிவித்துள்ளார்.

பாஜக மண்டல செயற்குழுக் கூட்டம்

Posted: 24 Jul 2014 12:01 PM PDT

காயல்பட்டினத்தில் பாஜக மண்டல செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மண்டலத் தலைவர் என்.மகேஷ் கண்ணன் தலைமை வகித்தார். மாநில ஆயுள் ஜீவன்

சமையல் கியாஸ் கசிவு: தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வுப் பிரசாரம்

Posted: 24 Jul 2014 12:01 PM PDT

தூத்துக்குடியில் வியாழக்கிழமை சமையல் கியாஸ் கசிவு ஏற்பட்டதால் தெருவில் திரண்ட மக்களிடம் தீயணைப்பு படை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

காடல்குடி அரசுப் பள்ளியில் பழுதடைந்த கட்டடத்தில் பயிலும் மாணவர்கள்!

Posted: 24 Jul 2014 12:01 PM PDT

விளாத்திகுளம் அருகே காடல்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாததால் அருகே உள்ள பழுதடைந்த கட்டடத்தில் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

நாசரேத் கல்லூரியில் கோலப் போட்டி

Posted: 24 Jul 2014 11:59 AM PDT

நாசரேத் புனித லூக்கா சமுதாயக் கல்லூரியில் மாணவிகளுக்கு கோலப் போட்டி நடைபெற்றது.

காயல்பட்டினத்தில் பத்ரு ஸஹாபாக்கள் நினைவு நாள்

Posted: 24 Jul 2014 11:58 AM PDT

காயல்பட்டினம் பள்ளிகளில் பத்ரு ஸஹாபாக்கள் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.

ஆர்எஸ்எஸ் குரு பூஜை விழா

Posted: 24 Jul 2014 11:58 AM PDT

திருச்செந்தூரில் ஆர்எஸ்எஸ் சார்பில் குருபூஜை விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னாள் திருச்செந்தூர் நகர கூட்டுறவு வங்கிச் செயலர் எஸ்.கணேசன் தலைமை

சீருடையார்புரத்திற்கு ராமர் ரதம் வருகை

Posted: 24 Jul 2014 11:58 AM PDT

உடன்குடி அருகே சீருடையார்புரத்திற்கு வந்த ஸ்ரீராமர் ரதத்திற்கு இந்து முன்னணி சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.

கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

Posted: 24 Jul 2014 11:58 AM PDT

கோவில்பட்டி நகர, ஒன்றியக் குழுக்கள் சார்பில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம்

கொலை வழக்கு: இளைஞர் கைது

Posted: 24 Jul 2014 11:57 AM PDT

கோவில்பட்டியில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி பணம் மோசடியில் ஈடுபட்டவரைக் கடத்தி கொலை செய்த வழக்கில் தொடர்புடைய இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் போராட்டம்

Posted: 24 Jul 2014 11:57 AM PDT

புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் பெண் தலைமையாசிரியருக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர்

விளாத்திகுளம் அருகே கூட்டுறவு சங்கத் தலைவர் கைது

Posted: 24 Jul 2014 11:57 AM PDT

விளாத்திகுளம் அருகே புதூர் சின்னையாபுரம் பகுதியில் கிணறு தோண்டும் பணியில் ஏற்பட்ட தகராறில் ஒப்பந்ததாரரை தாக்கி காயப்படுத்திய கூட்டுறவு கடன் சங்கத் தலைவரை காடல்குடி போலீஸார் கைது செய்தனர்.

நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்குகூடுதல் இழப்பீடு வழங்கக் கோரிக்கை

Posted: 24 Jul 2014 11:57 AM PDT

தூத்துக்குடியிலிருந்து கன்னியாகுமரி வரை சாலை அமைப்பதற்கு நெடுஞ்சாலைத் துறை கையகப்படுத்திய விவசாய நிலத்துக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டுமென ஆறுமுகனேரியில் நடைபெற்ற விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

போதைப் பொருள் ஒழிப்புவிழிப்புணர்வுப் பேரணி

Posted: 24 Jul 2014 11:56 AM PDT

கோவில்பட்டி சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

Posted: 24 Jul 2014 11:56 AM PDT

கழிப்பறை கட்டியவர்களுக்கு மட்டுமே, தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணி வழங்க முடியும் என தெரிவித்ததால், கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டன

பள்ளியில் பாலகங்காதர திலகர் பிறந்தநாள்; தியாகி சுப்பிரமணிய சிவாவின் நினைவு நாள் நிகழ்ச்சி

Posted: 24 Jul 2014 11:56 AM PDT

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை குமரப்ப மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில், விடுதலைப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகர் பிறந்த நாள் நிகழ்ச்சியும் மற்றும் தியாகி சுப்பிரமணிய சிவாவின் நினைவு நாள் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பிறந்த பெண் குழந்தையை ஆண் என தவறான தகவலளித்த இருவர் பணியிடமாற்றம்

Posted: 24 Jul 2014 11:55 AM PDT

அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை ஆணா, பெண்ணா என தவறான தகவல் அளித்த சுகாதாரப் பணியாளர்கள் இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கொடைக்கானல் ஏரியின் அருகே விதிகளை மீறி கட்டப்படும் கட்டடங்களுக்கு சீல்

Posted: 24 Jul 2014 11:55 AM PDT

கொடைக்கானல் நகர்மன்றக் கூட்டத்தில், ஏரியின் அருகே விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு வரும் கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலையை சீரமைக்க வலியுறுத்தி பிரசார இயக்கம்

Posted: 24 Jul 2014 11:55 AM PDT

கூடலூரில் வியாழக்கிழமை, திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரசார இயக்கம் நடைபெற்றது.

பாலிடெக்னிக்கில் சுற்றுச்சூழல் கருத்தரங்கு

Posted: 24 Jul 2014 11:54 AM PDT

: ராஜபாளையம் என்.ஏ. மஞ்சம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

மாணவர்களுக்கு காய்கறியில் உருவம் செதுக்குதல் பயிற்சி

Posted: 24 Jul 2014 11:54 AM PDT

சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி உணவக மேலாண்மை மற்றும் உணவாக்கல் அறிவியல் துறை சார்பில் காய்கறியில் உருவம் செதுக்குதல் பயிற்சி முகாம் நடைபெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™