Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


திகார் சிறையில் முஸ்லிம்களுடன் ரமலான் நோன்பிருக்கும் 150 இந்து கைதிகள்

Posted: 05 Jul 2014 10:50 PM PDT

டெல்லி திகார் சிறைக்குள் ரமலான் நோன்பை கடைபிடிக்கும் சுமார் 2300 முஸ்லிம் கைதிகளுடன் 150 இந்திய கைதிகளும் நோன்பிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. ரமலான் நோன்பு தொடங்கிய முதல் நாலில் இருந்தே அங்கிருக்கும் முஸ்லிம் கைதிகளுடன் நோன்பிருந்துவரும் இந்த 150 இந்து கைதிகளும்

திருப்பதியில் பலத்த மழை: பக்தர்கள் கடும் அவதி

Posted: 05 Jul 2014 10:40 PM PDT

திருப்பதியில் சனிக்கிழமையான நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. காலை முதல் மாலை வரை 36975 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அதன்பிறகும் கோவிலில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளும் நிரம்பி விழிந்தது. இவர்கள் தரிசனத்துக்கு 24 மணி நேரம் ஆனது. கோவிலுக்கு வெளியே 2 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் வரிசையில் காத்து நின்றனர். இந்த நிலையில் திருப்பதியில் நேற்று பலத்த மழை பெய்தது. விடிய விடிய மழை கொட்டியது. இதனால் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். வரிசையில் இடம் பிடிக்க நடந்த தள்ளு முள்ளு சம்பவத்தில் வயதானவர்கள், குழந்தைகள் காயம் அடைந்தனர்.

ராஜீவ் கொலையாளிகள் விடுதலைக்கு பா.ஜனதா அரசு எதிர்ப்பு?

Posted: 05 Jul 2014 10:30 PM PDT

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக சுப்ரீம் கோர்ட்டு குறைத்து உத்தரவிட்டது. அவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து விட்டதால் இவர்களையும் ஏற்கனவே தண்டனை அனுபவித்து வரும் நளினி, ராபர்ட்பயஸ், உள்ளிட்ட 4 பேர் என மொத்தம் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் 19–ந்தேதி முடிவு செய்தது.

மோடி வெற்றி பெற்ற வாரணாசியில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு சதி திட்டம்

Posted: 05 Jul 2014 10:20 PM PDT

நரேந்திரமோடி வெற்றி பெற்ற வாரணாசியில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு சதி திட்டமிட்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திரமோடி போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி வாரணாசி. இது ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நகரம் ஆகும். இங்குள்ள காசிவிஸ்வநாதர் ஆலயம் பிரசித்தி பெற்றது. நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் ஒரு

குப்பைத் தொட்டியில் வெடிகுண்டு என்று கருதிய பையில் உயிருடன் பெண் குழந்தை

Posted: 05 Jul 2014 09:58 PM PDT

நாட்டின் தலைநகரான புது டெல்லியில் உள்ள குப்பைத் தொட்டியில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை குப்பையோடு குப்பையாக பைக்குள் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புது டெல்லியின் மதன்பூர் காதர் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் நேற்று சந்தேகத்துக்கிடமாக கிடந்த ஒரு பையை கண்ட அப்பகுதி மக்கள்

அமெரிக்காவில் சுதந்திர தினம்: ஒபாமாவுக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்து

Posted: 05 Jul 2014 09:04 PM PDT

அமெரிக்காவின் 238-வது சுதந்திர தினத்தையொட்டி அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- இந்தியாவும், அமெரிக்காவும் நாட்டின் குடிமக்கள் மதிப்புடன், மரியாதையுடன் வாழ்வதற்காக பல்வேறுதுறைகளில் இணைந்து கொள்கை கோட்டுபாடுகளை

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள மோடி 13-ந் தேதி பிரேசில் பயணம்

Posted: 05 Jul 2014 08:26 PM PDT

பிரதமர் பதவியேற்ற பின்பு நரேந்திர மோடி தனது முதல் வெளிநாட்டு பயணமாக கடந்த மாதம் பூடான் நாட்டுக்கு சென்றார். அங்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்தார். இதையடுத்து பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான 'பிரிக்ஸ்' சார்பாக வருகிற 13-ந் தேதி நடைபெறும் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் பிரேசில்

ஈராக்கில் இருந்து இந்தியர்கள் மீட்பு: மோடிக்கு, ஸ்ரீகாந்த் சர்மா பாராட்டு

Posted: 05 Jul 2014 08:18 PM PDT

ஈராக் நாட்டில் அரசை எதிர்த்து, தீவிரவாதிகள் போரிட்டு வருகின்றனர். இதில் அங்கு பல்வேறு நகரங்களில் பணியாற்றும் இந்தியர்கள், தாயகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவித்தனர். இந்த நிலையில் இந்திய அரசு வெளியுறவுத்துறை கடும் நடவடிக்கை எடுத்து, அங்குள்ளவர்களை பத்திரமாக மீட்டனர். அவர்கள் தனி விமானம் மூலம் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தனர். இதற்காக நரேந்திரமோடி தலைமையிலான அரசை, பாரதீய ஜனதா கட்சியின்

ரெயில் கட்டண உயர்வை கண்டித்து பாராளுமன்றம் நாளை முற்றுகை: டெல்லி காங்கிரஸ் முடிவு

Posted: 05 Jul 2014 05:19 PM PDT

மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு, சமீபத்தில் ரெயில் பயணிகள் கட்டணத்தை 14.2 சதவீதமும், சரக்கு கட்டணத்தை 6.5 சதவீதமும் உயர்த்தியது. சீசன் டிக்கெட் கட்டணங்களும்

மும்பையில் மெட்ரோ ரெயில் கட்டண உயர்வை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பீல்

Posted: 05 Jul 2014 04:10 PM PDT

மும்பையில் கடந்த மாத தொடக்கத்தில் வெர்சோவா- காட்கோபர் இடையே மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது. தொடக்க கால சலுகையாக ஒரு மாதத்துக்கு எந்த ரெயில் நிலையத்தில் ஏறி இறங்கினாலும் ரூ.10 டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது

7 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள்: இன்று அறிவிப்பு வெளியாகிறது

Posted: 05 Jul 2014 03:16 PM PDT

மத்தியில் பாரதீய ஜனதா கூட்டணி அரசு பதவி ஏற்றதை தொடர்ந்து முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசால் நியமிக்கப்பட்ட கவர்னர்கள் பி.எல். ஜோஷி (உத்தரபிரதேசம்), சேகர் தத் (சத்தீஷ்கார்), அஸ்வினி குமார் (நாகாலாந்து) ஆகியோர் பதவி விலகினர்

எந்தவொரு பிரச்சினையையும் விவாதிக்க மத்திய அரசு தயார்: வெங்கையா நாயுடு

Posted: 05 Jul 2014 01:33 PM PDT

பட்ஜெட் தொடரை சுமுகமாக நடத்துவது பற்றி அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தை தொடர்ந்து, எந்தவொரு பிரச்சினையையும் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி வெங்கையா நாயுடு

பாராளுமன்றம் நாளை கூடுகிறது: 10-ந் தேதி பட்ஜெட் தாக்கல்

Posted: 05 Jul 2014 01:26 PM PDT

பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பின்னர் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாரதீய ஜனதா கூட்டணி அரசு கடந்த மே மாதம் 26-ந் தேதி பதவி ஏற்றது. அதைத் தொடர்ந்து 16-வது பாராளுமன்றத்தின் முதல் கூட்டம்

திருடிய செல்போனைத் தொலைத்தவரிடமே விற்க முயன்று மாட்டிக்கொண்ட மாணவர்கள்

Posted: 05 Jul 2014 10:42 AM PDT

கடந்த திங்கட்கிழமை அன்று பாட்டியாலா பகுதியில் வசித்துவரும் குஷால் பன்சால் என்ற பொறியாளர் டெல்லி கன்னாட் பிளேசில் உள்ள ஏடிஎம் மையம் ஒன்றிற்கு சென்றிருந்தார். பணம் எடுத்துவிட்டுத் திரும்பும்போது தனது செல்போனை பன்சால்

பீகாரில் மதிய உணவில் பாம்பு: 54 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

Posted: 05 Jul 2014 06:32 AM PDT

பீகார் மாநிலம் சிதாமர்ஹி மாவட்டத்தில் பாம்பு விழுந்து கிடந்த மதிய உணவை சாப்பிட்ட மாணவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அம்மாவட்டத்தின் சுராசந்த் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரான வினோத்குமார் இச்சம்பவம் பற்றி கூறுகையில், "மேக்பூர் நடுநிலைப்பள்ளியில் மதிய உணவருந்திய 54 மாணவர்களுக்கு குமட்டலும், மயக்கமும் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவனையில் சேர்க்கப்பட்ட அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் யாருடைய உயிருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை" என்று தெரிவித்தார்.

பீகாரில் ஆறு மாவோயிஸ்டுகள் கைது

Posted: 05 Jul 2014 06:21 AM PDT

பீகாரில் உள்ள அவுரங்காபாத் மாவட்டத்தை சேர்ந்த கிராமத்தில் ஆறு மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து முர்கிபிகா என்ற கிராமத்தை சுற்றி வளைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அருகில் உள்ள காட்டுக்குள் செல்லும் வகையில், ஒரு வாகனத்தில் காய்கறிகள் மற்றும் உணவு பொருட்களை ஏற்றி கொண்டு இருந்த ஆறு மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை கண்காணிப்பாளரான உபேந்திர குமார் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட்டிற்கு முன்னதாக அனைத்து கட்சி கூட்டம்: சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அழைப்பு

Posted: 05 Jul 2014 06:09 AM PDT

நாடாளுமன்றத்தில் வரும் 10ந் தேதி பொது பட்ஜெட் தாக்கப்படுவதற்கு முன் அனைத்து கட்சிகள் கூட்டத்தை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூட்டியுள்ளார். அக்கூட்டத்தில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பாக அனைத்து கட்சிகளுடன் சபாநாயகர் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி தனது கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து தங்களுக்கு 59 எம்.பி.க்கள் பலம் உள்ளதாக கூறி எதிர்க்கட்சி தலைவர் பதவியை கோரி வருகிறது. ஆனால் பா.ஜ.க.வோ நீதிமன்றத்திற்கு சென்றால் காங்கிரஸ் கட்சி தனது கோரிக்கைக்காக வெட்கப்பட வேண்டியது இருக்கும் கூறி வருகிறது

கட்சியில் தீவிர மாற்றங்கள் செய்யவேண்டும்: காங்கிரஸ் தலைவர்கள்

Posted: 05 Jul 2014 05:32 AM PDT

நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவர்களுக்கிடையே கருத்து மோதல் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கட்சியின் அனைத்து மாநிலங்களின் முக்கிய தலைவர்களும் கட்சியில் தீவிர மாற்றங்களை செய்ய வேண்டும் என கட்சி தலைமையை கேட்டுக்கொண்டுள்ளனர். கட்சியின் மேல்மட்ட தலைவர்களை கடுமையாக விமர்சித்துள்ள அவர்கள், மேல்மட்ட தலைவர்கள் திமிர் பிடித்தவர்களாகவும், தொடர்பு கொள்ள முடியாதவர்களாகவும் உள்ளனர் என தெரிவித்தனர். டெல்லி முதல்வராக ஷீலா தீட்சித் பதவி வகித்த போது செய்த ஊழல்களால் தான் அம்மாநிலத்தில் கட்சி படுதோல்வியை சந்தித்தாக அக்கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் கூறியுள்ளனர்.

கலவரம் எதிரொலி: மொராபாத் கிராமத்தில் பதட்டம் நீடிப்பு

Posted: 05 Jul 2014 05:18 AM PDT

உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் கலவரம் நடந்த கிராமத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. மொராதாபாத் மாவட்டம் காந்த் கிராமத்தில் உள்ள கோவிலில் ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டதால் கடந்த ஒரு வாரகாலமாக அங்கு பதட்டம் நிலவி வருகிறது. இது தொடர்பாக சமுதாய பஞ்சாயத்து கூட்டம் நடத்தப்படும் என பா.ஜனதா அறிவித்தது. இதற்கு காவல்துறை தடை விதித்தது. ஆனால் தடையை மீறி பஞ்சாயத்து கூட்டம் நடத்த பா.ஜனதா எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அவரது ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று திரண்டு வந்தனர். இதனை போலீசார் தடுத்து நிறுத்தி கலைத்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பா.ஜனதா எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் அங்கு வன்முறை வெடித்தது.

ஒட்டிப்பிறந்த இரட்டை பெண்களுக்கு 45 வயதில் கிடைத்த காதலன்

Posted: 05 Jul 2014 04:43 AM PDT

கொல்கத்தாவில் ஒட்டிப்பிறந்த இரட்டை பெண்களுக்கு 45வது வயதில் ஜசிமுதீன் அகமது என்ற ஆசிரியர் காதலராக கிடைத்துள்ளார். ஒட்டிப் பிறந்த இரட்டை பிறவிகளான கங்கா மற்றும் ஜமனா மோன்டால் ஆகியோர் சர்க்கஸ் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர். 7 மாதங்களுக்கு முன் சர்க்கஸ் கம்பெனியில் சவுண்ட் என்ஜினியராக பணிபுரிய வந்த பள்ளி


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™