Tamil Star |
- விஸ்வரூபம் பட வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன! 2 எந்த நேரமும் வெளியாகலாம்
- தெலுங்கு தங்க மகள் ஆக ஸ்ருதிஹாசன் முதலிடத்தில் தேர்வு!
- ஒவ்வொரு அப்பாக்களும் இதை அவதானிக்கவும்
- கண்கொள்ளாக் காட்சியாக அமைந்த ரொக்கெட் திருவிழா
- சாரதியுடன் மலையிலிருந்து உருண்டு விழும் பேருந்தின் நேரடிக்காட்சி!
- ஹெலிகப்டர் மொட்டை மாடியில தரையிரங்கி அவதானித்ததுண்டா?
- ஏலக்காயின் மருத்துவ பயன்கள்!
- வீடு பாதுகாப்பில் நவீன தொழில்நுட்பம்!
- இங்கிலாந்து அணியுடனான 2வது டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ் அபார சதம்!
- அமெரிக்க அணியுடனான ஜி பிரிவு லீக் ஆட்டத்தில் கடைசி நிமிட கோலால் தப்பி பிழைத்தது போர்ச்சுகல்!
- நாட்டை விட்டு வெளிநாடு செல்ல முஷாரபுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி மறுப்பு!
- இலங்கை எதிர்ப்பை நிராகரித்தது ஐ.நா போர்க்குற்றம் குறித்து திட்டமிட்டபடி விசாரணை!
- ஜனாதிபதி நான்தான்! குடும்பக் குடுமிப்பிடிச் சண்டையில் கோத்தபாய!
- ஐ.நா விசாரணைக் குழுவில் பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி?
- அளுத்கம பிரதேசத்தில் அமைதிக்கு சிலர் குந்தகம் விளைவிக்கின்றனர்! ருவன் வணிகசூரிய கருத்து
- பாலியல் ரீதியாக இம்சிக்கப்படுவதாக குற்றச்சாட்டு மறுக்கும் இலங்கை! நிரூபிக்கும் கனடா
- பெல் மீடியா நிறுவனமானது கிட்டத்தட்ட 120 பேருக்குப் பதவி நீக்கம்!
| விஸ்வரூபம் பட வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன! 2 எந்த நேரமும் வெளியாகலாம் Posted: 24 Jun 2014 06:10 AM PDT
விஸ்வரூபம் பட வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. எந்த நேரமும் அந்தப் படம் வெளியாகலாம் என படத்தின் இயக்குநரும் ஹீரோவுமான கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார். கமல் ஹாஸன் ரசிகர்களுக்கு இது கொண்டாட்ட ஆண்டு. எண்பதுகளில் இருந்தது போல, மகா பிஸியாக உள்ளார் கமல். ஒரே நேரத்தில் அவரது மூன்று பட வேலைகள் நடக்கின்றன. அவர் நடிப்பில் நடித்து வரும் உத்தமவில்லன் நகைச்சுவை படம் முடியும் தருவாயில் உள்ளது. அடுத்து மோகன்லால் நடிப்பில் ,வெளியான மலையாள படமான த்ரிஷ்யம் படத்தின் த்மிழ் ரீ மேக்கில் கமல் நடிக்க உள்ளார். அதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. விஸ்வரூபம்-2 விரைவில் தமிழ்-மற்றும் இந்தி இருமொழிகளில் வெளியாக உள்ளது.தமிழ் படத்தை வி.ரவிசந்திரனும், இந்தி மொழி படத்தை எக்தாகபூர்,ஷோபா கபூரும் தயாரித்துள்ளனர். இது குறித்து பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த கமல்ஹாசன் நாங்கள் விஸ்பரூபம் 2 படம் முடிந்துவிட்டது.சில பேட்ச் வேலைகள் மட்டுமே உள்ளன. தயாரிப்புக்கு பிந்தைய வேலைகளில் நடைபெற்று வருகின்றன. முடிந்ததும் எந்த நேரமும் படம் வெளியாகலாம். விரைவில் விஸ்வரூபம் 2 வெளியான பிறகு, உத்தம வில்லன் படம் செப்டம்பர் 10-ம் தேதி வெளியிடப்படுகிறது. லிங்குசாமி தயாரிக்கும் இந்தப் படத்தை, நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் த்ரிஷ்யம் படத்தின் ரீஇ மேக் ஜூலை 15 ந்தேதி தொடங்குகிறது. இந்தப் படத்தையும் இந்த ஆண்டே வெளியிட்டுவிட கமல் திட்டமிட்டுள்ளாராம்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| தெலுங்கு தங்க மகள் ஆக ஸ்ருதிஹாசன் முதலிடத்தில் தேர்வு! Posted: 24 Jun 2014 06:01 AM PDT
தெலுங்குத் திரையுலகமான டோலிவுட்டின் 'தங்க மகள்' ஆக ஸ்ருதிஹாசன் முதலிடத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆந்திராவிலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று ஆன்லைன் வாக்குப் பதிவு ஒன்றை நடத்தியது. ஆந்திரா ரசிகர்கள் ஸ்ருதிஹாசனுக்கு அமோக வாக்களித்து தங்களின் தங்கமகளாக தேர்வு செய்துள்ளனர். நடிகர் கமலின் மகள் ஸ்ருதிஹாசன் ஆரம்பத்தில் நடித்த படங்கள் வெற்றி பெறவில்லை. இதனால் லக் இல்லாத நடிகை என்ற பெயரினைப் பெற்றார். தெலுங்கு, தமிழ், ஹிந்தி என மூன்று மொழிகளில் நடித்தும் எதுவுமே கைகொடுக்கவில்லை. ஆனால் 2012ல் அவர் பவன்கல்யானுடன் நடித்த கப்பார் சிங் திரைப்படம்தான் ஸ்ருதிக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த வருடத்தில் இவர் நடித்து வெளிவந்த 'எவடு, ரேஸ் குர்ரம்' ஆகிய படங்களில் ஸ்ருதியின் தோற்றமும், கவர்ச்சியும் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்தது. படத்துக்குப் படம் கிளாமரில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார். சமீபகாலமாக தனது கிளாமரான நடிப்பில் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்திழுத்த ஸ்ருதிஹாசனை முதலிடத்தில் தேர்வு செய்துள்ளனர். இந்த வாக்கெடுப்பில் தமன்னா 2வது இடத்திலும் ஸ்ரேயா மூன்றவது இடத்திலும் தேர்வாகியிருக்கிறார்கள். தற்போது ஸ்ருதி தமிழில் ஒரு படத்திலும் ஹிந்தியில் நான்கு படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். டோலிவுட்டின் அதிக விரும்பத்தக்க நாயகியாக தேர்வானது பற்றி ஸ்ருதிஹாசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். "வெறும் லிப்ஸ்-டிக்கும், மேக்கப்பும் மட்டுமே நம்மை அழகாகக் காட்டி விடாது. நாம் யார் என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். இதுதான் எனது தோற்றம், இதுதான் எனது அழகு என நான் உணர்ந்துள்ளேன், அதை வைத்து நான் மகிழ்ச்சிகரமாக இருக்கிறேன். இந்த உண்மையை நாம் ஏற்றுக் கொண்டாலே அதுவே நம்பிக்கையாக மாறி நம்மை அழகாக வைத்துக் கொள்ளும். நம்மை நாமே செக்ஸியாக உணர வேண்டும், செக்ஸியாக நினைத்துக் கொள்ள வேண்டும். ஆடைகள் நம்மை அணியக் கூடாது, ஆடைகளை நாம்தான் அணிந்து கொள்ள வேண்டும். அதுதான் நமக்கு அழகாகவும் இருக்கும், என்ன நடந்தாலும் நீங்கள் நீங்களாக இருங்கள்," என தன் அழகின் ரகசியத்தை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்துகிறார் ஸ்ருதிஹாசன்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஒவ்வொரு அப்பாக்களும் இதை அவதானிக்கவும் Posted: 24 Jun 2014 05:55 AM PDT |
| கண்கொள்ளாக் காட்சியாக அமைந்த ரொக்கெட் திருவிழா Posted: 24 Jun 2014 05:51 AM PDT |
| சாரதியுடன் மலையிலிருந்து உருண்டு விழும் பேருந்தின் நேரடிக்காட்சி! Posted: 24 Jun 2014 05:48 AM PDT |
| ஹெலிகப்டர் மொட்டை மாடியில தரையிரங்கி அவதானித்ததுண்டா? Posted: 24 Jun 2014 05:44 AM PDT |
| Posted: 24 Jun 2014 05:40 AM PDT
ஏலக்காயை பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் நரம்பின் பலம் கூடும், கண்பார்வை அதிகரிக்கும். ஏலப்பொடி, சீரகப்பொடி, சோம்புப் பொடி ஆகிய மூன்றையும் 5 கிராம் வீதம் எடுத்து கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் பசி கூடும், ஜீரணம் அதிகரிக்கும். ஏலத்தை பொடியாக்கி துளசிச் சாற்றுடன் கலந்து உட்கொண்டால் வாந்தி நிற்கும். ஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பருகினால் வறட்டு இருமல், தொண்டை வலி ஆகியவைகள் தீரும். நான்கு ஏலத்தை கைப்பிடியளவு நாவல் இலைக் கொழுந்துடன் சேர்த்து அரைத்து ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிட்டால் செரியாமை, சீதக்காதி தீரும். ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு 5 ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்து போல் போட்டால் தலைவலி, சளி விலகும். புகைப்பதை நிறுத்த உதவும் ஏலக்காய் ஏலக்காய் மணத்திற்கு மட்டுமல்ல மருந்துக்கும் உதவுகிறது. சிகரெட் எரியும்போது கசியும் "நிக்கோட்டின்" நஞ்சு தொண்டை, ஈறு, நாக்குகளில் படியும்போது கறை உண்டாவதுடன், அங்கிருக்கும் பூந்தசைகளை அரித்துப் புண்களை உண்டாக்கும். "ஏலக்காய்" இந்தப் புண்களை ஆற்றுவிப்பதுடன், நிக்கோட்டின் கறைகளையும் படியாமல் அப்புறப்படுத்துகிறது. இன்னொரு அரிய பயனும் உள்ளது. சிகரெட் பிடிக்கும் எண்ணம் வரும்போதெல்லாம், ஒரு ஏலக்காயினை வாயிலிட்டுச் சுவைக்க, புகைக்கும் எண்ணம் விலகும். இதனைப் பல அன்பர்கள் பின்பற்றி சிலர் புகைப்பதையே விட்டுவிட்டனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| வீடு பாதுகாப்பில் நவீன தொழில்நுட்பம்! Posted: 24 Jun 2014 05:35 AM PDT
கட்டுமானத்துறையில் நாளுக்கு நாள் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன. விதவிதமான கட்டுமானங்கள், மரவேலைப்பாடுகள், கண்ணாடி இழை தொழில்நுட்பம் என புதுமைகள் பல நுழைந்துவிட்டன. தற்போது வீட்டினை பாதுகாப்பாக பராமரிக்கும் புதுமையான தொழில்நுட்பம் கட்டுமானத் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 'ஹோம் ஆட்டோமேசன்' என்று அழைக்கப்படும் இந்த புதிய தொழில்நுட்பத்தில் வீட்டின் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும், செயல்பாடுகளும் ஸ்மார்ட் போன்களில் மூலம் பார்த்துக்கொள்ள முடியும். வீட்டில் வசிக்கும் காலங்களிலும், வீட்டை பூட்டி விட்டு வெளியில் செல்லும் காலங்களிலும் இந்த தொழில்நுட்பம் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர் கட்டுமான வல்லுநர்கள். ஹோம் ஆட்டோமேஷன் என்ற இந்த தொழில்நுட்பமுறையில் வீட்டின் பாதுகாப்பு முறை, தட்பவெட்ப நிலைகள், வீட்டை கண்காணிக்கும் வீடியோ கேமரா போன்றவற்றின் நிலைகளை நமது கைகளில் இருக்கும் ஸ்மார்ட் போன் மூலம் கண்காணிக்க முடியும். இந்த தொழில்நுட்பமானது கம்ப்யூட்டரில் இருக்கும் ஈமெயில், பேஸ்புக், டுவிட்டர் போன்றவைகளை ஸ்மார்ட் போன்களில் இணைத்துக் கொள்வது போல தான் இந்த தொழில்நுட்பமும். வீட்டில் நாம் விளக்குகளை எரிய விட்டுவிட்டு அணைக்காமல் வெளியே செல்ல நேரிடலாம். இம்மாதிரியான சூழ்நிலைகளில் டி.வி. மற்றும் விளக்குகள் போன்றவை இயங்கி கொண்டே இருக்கும். இந்த நவீன தொழில்நுட்பம் மூலமாக வீட்டின் விளக்குகளை அணைத்தல், வீட்டினை பூட்டுதல், வீட்டை வீடியோ கேமராக்கள் மூலமாக கண்காணித்தல் போன்ற பணிகளை வெளியில் இருந்து கொண்டே செயல்படுத்த முடியும். பூட்டிய வீட்டிற்குள் யாராவது உள்ளே செல்ல முயன்றாலோ அல்லது வீட்டில் வேறு யாராவது நுழைந்து தவறான நடவடிக்கைளில் ஈடுபட முயன்றாலோ சென்சார் உதவியுடன் கண்டறிந்து உடனடியாக நமது ஸ்மார்ட் போனுக்கு தகவல் வந்துவிடும். இதே போல தீ விபத்து தடுப்பு சென்சார், தொலைக்காட்சி சவுண்ட் சிஸ்டம் இயக்கத்திற்கான சென்சார், நீச்சல் குளத்தின் தகவல்களை வழங்கும் சென்சார், சமையல் அறையில் சென்சார் போன்றவற்றை பொருத்தி அவைகளை கண்காணித்துக் கொள்ளலாம். வீட்டின் சூழ்நிலையை உணர்த்துவதுடன் பயன்பாட்டாளர் வழங்கும் கட்டளைகளை ஏற்று அதன்படி செயல்பட வைக்க முடியும். இதே போல வீட்டின் உள்ளே இருக்கும் தட்ப வெப்பநிலையை அறிந்து அதற்கேற்ப காற்று வசதியை உருவாக்கிட முடியும். வீட்டின் உள்ளே இருக்கும் காற்றை வெளியேற்றவும், வெளியில் இருந்து நல்ல காற்றை உள்ளே கொண்டுவருவதற்கான எக்ஸாஸ்ட் பேன் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளையும் நம் கைகளில் உள்ள ஸ்மார்ட்போன்கள் மூலமாக இயக்கி வைக்க முடியும் என்று கூறும் கட்டுமான வல்லுநர்கள் தற்போது இந்த தொழில்நுட்பம் சென்னை, பெங்களூர், டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதால் விரைவில் அனைத்து நகரங்களிலும் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்கின்றனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இங்கிலாந்து அணியுடனான 2வது டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ் அபார சதம்! Posted: 24 Jun 2014 05:28 AM PDT
ஹெடிங்லி, லீட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் இலங்கை 257 ரன்னும், இங்கிலாந்து 365 ரன்னும் எடுத்தன. 108 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன் எடுத்திருந்தது. ஜெயவர்தனே 55, கேப்டன் மேத்யூஸ் 24 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஜெயவர்தனே 79 ரன்னில் வெளியேறினார். சண்டிமால் (7), தம்மிகா பிரசாத் (0) அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப, இலங்கை 277 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்தது. இந்த நிலையில், மேத்யூஸ் - ஹெராத் ஜோடி 8வது விக்கெட்டுக்கு 149 ரன் சேர்த்து அசத்தியது. ஹெராத் 48 ரன் எடுத்து ரன் அவுட் ஆனார். அபாரமாக விளையாடிய மேத்யூஸ் சதம் விளாசினார். இலங்கை அணி 126 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 426 ரன் எடுத்திருந்தது. மேத்யூஸ் 149 ரன் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் இங்கிலாந்து அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| அமெரிக்க அணியுடனான ஜி பிரிவு லீக் ஆட்டத்தில் கடைசி நிமிட கோலால் தப்பி பிழைத்தது போர்ச்சுகல்! Posted: 24 Jun 2014 05:23 AM PDT
அமெரிக்க அணியுடனான ஜி பிரிவு லீக் ஆட்டத்தில் 1-2 என்ற கணக்கில் பின் தங்கியிருந்த போர்ச்சுகல் அணி, கடைசி நிமிடத்தில் கோல் அடித்து டிரா செய்தது. மனாஸ், அமேசானியா அரங்கில் நடந்த இப்போட்டியில், கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான பலம் வாய்ந்த போர்ச்சுகல் அணியுடன் அமெரிக்கா மோதியது. போர்ச்சுகல் எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டதற்கு ஏற்ப, அந்த அணியின் முன்கள வீரர் நானி 5வது நிமிடத்திலேயே அமர்க்களமாக கோல் அடித்து 1-0 என முன்னிலை ஏற்படுத்தினார். இடைவேளை வரை இதே நிலை நீடித்தது. இரண்டாவது பாதியில் கடும் நெருக்கடி கொடுத்த அமெரிக்கா, 64வது நிமிடத்தில் ஜெர்மைன் ஜோன்ஸ் மற்றும் 81வது நிமிடத்தில் கிளின்ட் டெம்ப்சி அடித்த கோல் மூலமாக 2-1 என முன்னிலை பெற்றது. இதனால், போர்ச்சுகல் அணி அதிர்ச்சி தோல்வியுடன் உலக கோப்பையில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. கடைசி சில விநாடிகளே எஞ்சியிருக்க, கிறிஸ்டியானோ ரொனால்டோ வாகாக பறக்கவிட்ட பந்தை மின்னல் வேகத்தில் தலையால் முட்டி கோல் ஆக்கினார் சில்வெஸ்டர் வரேலா. ஆட்டத்தை 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்ததுடன், அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை நூலிழையில் தக்கவைத்தது போர்ச்சுகல் அணி. இரு அணிகளும் தலா ஒரு புள்ளி பெற்றன. அமெரிக்க அணி கோல் கீப்பர் டிம் ஹோவர்டு ஆட்ட நாயகன் விருது பெற்றார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| நாட்டை விட்டு வெளிநாடு செல்ல முஷாரபுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி மறுப்பு! Posted: 24 Jun 2014 04:36 AM PDT
நாட்டை விட்டு வெளியேறும் கட்டுப்பாட்டு பட்டியலில் இருந்து முன்னாள் அதிபர் முஷாரபின் பெயரை நீக்கும்படி சிந்து உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்துவதை நிறுத்தி வைக்கும்படி அரசுக்கு பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிந்து உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை அளித்துள்ளது. வழக்கின் தீர்ப்பு வெளியாகும் வரை உயர்நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதை நிறுத்தி வைக்கும்படி உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் கூறியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள வயதான தனது தாயின் உடல்நிலை மோசமாக உள்ளதால் அவரைப் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று 70 வயதாகும் முஷாரப், சிந்த் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை ஏற்ற இரு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், நாட்டை விட்டு வெளியேறும் கட்டுப்பாட்டு பட்டியலில் இருந்து முஷாரப் பெயரை நீக்க வேண்டும் என்று அரசுக்கு கடந்த 12ம் தேதி உத்தரவிட்டது. அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்பட்டது, 2007ல் அவசரகால நிலையை அறிவித்தது, நீதிபதிகளை கைது செய்தது உள்பட பல்வேறு வழக்குகள் முஷாரப் மீது தொடரப்பட்டுள்ளன. மேலும், முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ கொலை வழக்கிலும் அவருடைய பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அதையடுத்து, வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்த முஷாரப், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடு திரும்பினார். உடனடியாக, நாட்டை விட்டு வெளியேறும் கட்டுப்பாட்டு பட்டியலில் அவருடைய பெயர் சேர்க்கப்பட்டது. அதன்படி, அரசின் முன் அனுமதியில்லாமல் அவர் நாட்டை விட்டு வெளியேற முடியாத நிலைமை உள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கை எதிர்ப்பை நிராகரித்தது ஐ.நா போர்க்குற்றம் குறித்து திட்டமிட்டபடி விசாரணை! Posted: 24 Jun 2014 04:30 AM PDT
இலங்கையில் நடைபெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்து திட்டமிட்டபடி விசாரணை நடத்தப்படும் என்று ஐ.நா தெரிவித்துள்ளது. அந்நாட்டில் நடந்த உள்நாட்டு போரில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டன. அப்போது நடைபெற்ற போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக 12 உறுப்பினர்கள் கொண்ட குழுவை ஐ.நா அமைத்துள்ளது. 10 மாதங்கள் நடைபெறும் விசாரணை முடிவில் இலங்கை போர் குற்றவாளிகளின் பட்டியல் அடங்கிய அறிக்கை ஐ.நா-விடம் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. ஆனால் இந்த விசாரணையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் விசாரணை குழுவினை நாட்டிற்கு அனுமதிக்க முடியாது என்றும் இலங்கை மறுப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில் அந்நாட்டிற்குள் விசாரணை குழுவினர் அனுமதிக்கப்படாவிட்டாலும் விசாரணை நடத்தப்படும் என்று ஐ.நா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஐ.நா மனித உரிமை ஆணையர் அலுவலக செய்தி தொடர்பாளர், சிரியா மற்றும் வடகொரிய நாடுகள் ஐ.நா பிரதிநிதிகளை நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை என்றும், ஆனால் இந்நாடுகளின் மனித உரிமை மீறல் குறித்து முழுமையான அறிக்கை தயாரிக்க முடிந்ததாகவும் கூறியுள்ளார். ஐ.நா குழுவினர் இலங்கைக்குள் அனுமதிக்கப்பட்டால் அது சிறந்த நடவடிக்கையாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஜனாதிபதி நான்தான்! குடும்பக் குடுமிப்பிடிச் சண்டையில் கோத்தபாய! Posted: 24 Jun 2014 04:02 AM PDT
இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, விடுதலைப் புலிகளுடான யுத்த வெற்றியின் பின்னர் பிரதமர் பதவி மீது கண் வைத்து கோத்தபாய காய் நகர்த்தினார். அதன் பின் மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக் காலத்தின் பின் தான் ஜனாதிபதி பதவியை அடையும் எண்ணம் அவருக்குள் இருந்தது. எனினும் அவருக்கு குறைந்த பட்சம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கூட கிட்டவில்லை. இந்நிலையில் எதிர்வரும் தேர்தலின் பின் அவரை பிரதமர் பதவிக்கு நியமிக்க கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ள ஜனாதிபதி, எவ்வாறாக இருந்த போதிலும் தனக்குப் பின் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக கொண்டு வரும் வகையிலேயே காய் நகர்த்தி வருகின்றார். இது கோத்தபாயவிற்கு கடும் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அது மாத்திரமன்றி சிங்கள பௌத்தர்களின் பெரும்பாண்மை பலத்தைப் பெற்றுக் கொள்ளும் வகையில் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட பொது பல சேனா கும்பலை ஜனாதிபதி தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இவற்றை வைத்துப் பார்க்கும் போது கோத்தபாயவிற்கு அரசியல் எதிர்காலம் இல்லை என்பது தெளிவாகத் தெரியவந்துள்ளது. இவ்வாறான நிலையில் கோத்தபாய ராஜபக்ஷ தனது பொறுமையைக் கைவிட்டுள்ளதுடன், தனது சகோதரன் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக காய் நகர்த்தல்களை மேற்கொண்டுள்ளார். அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஒதுக்கிவிட்டு தான் போட்டியிடும் வகையில் அவரது செயற்பாடுகள் அமைந்துள்ளன. மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்தவுக்கு சட்டச் சிக்கல்களை ஏற்படுத்துவது, பெரும்பாண்மை சிங்கள மத்தியில் பௌத்தத்தின் உண்மையான காவலனாக தன்னை இனங்காட்டிக்கொள்வது, சிங்கள பௌத்த சிந்தனை கொண்ட ஒருவரே அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற கருத்தியலுக்கு வலுச் சேர்ப்பது போன்ற விடயங்கள் ஊடாக அவர் தனது இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றார். இதற்காக அவர் சம்பிக்க ரணவக்க போன்ற சிங்கள இனவாதத்தலைவர்கள் மற்றும் மகாநாயக்கர்களின் ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொண்டுள்ளதுடன், சுதந்திரக் கட்சிக்குள்ளும் படிப்படியாக தனது ஆதரவுத் தளமொன்றைக் கட்டி எழுப்பி வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஐ.நா விசாரணைக் குழுவில் பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி? Posted: 24 Jun 2014 03:56 AM PDT
ஐ.நா விசாரணைக் குழுவில் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை நடாத்துவதற்கு, குழுவின் ஆலோசனை வழங்கும் பிரத்தியேக நிபுணராக பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி மார்ட்டி அத்திசாரி நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தொடர்பான விசாரணை தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இந்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழுவை வழிநடத்தவும் ஆலோசனைகளை வழங்கவும் வெளியக வல்லுநர்கள் இருவரை நியமிக்க ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முடிவு செய்திருந்தமை ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த குழுவிற்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு இரண்டு நிபுணர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டது. இவர்களில் ஒருவராக நியுசிலாந்தின் முன்னாள் ஆளுநர் நாயகம் டேம் சில்வியா கட்ரைட் நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டாவது வல்லுநராக ஆசியா அல்லது ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க முயன்றதாகவும் எவரும் கிடைக்காத காரணத்தால் பின்லாந்து நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும் சாமாதானத்திற்கான நோபல் பரிசை பெற்றவருமான மார்ட்டி அத்திசாரி நியமிக்கப்படலாமென ஊகிக்கப்படுகின்றது. இவர் ஐக்கிய நாடுகளின் கொசோவாவிற்கான பிரதிநிதியாகவும் பணியாற்றியவராவார். இதேவேளை, விசாரணைக் குழுவினரின் உறுப்பினர் தெரிவு மற்றும் ஏனைய விபரங்கள் தொடர்பான அனைத்து விபரங்களும் இந்த வாரம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படலாமென எதிர்பார்க்கபடுகின்றது. இதேசமயம், விசாரணை சபை முன் சாட்சியமளிக்க முன்வரும் தமிழ் மக்களிற்கு தகுந்த பாதுகாப்பு வசதிகளை வழங்க வேண்டுமென இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் கொடுக்கப்படுமென ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களிற்கான உதவி செயலாளர் ஒஸ்கர் பேர்னான்டஸ் தெரியப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| அளுத்கம பிரதேசத்தில் அமைதிக்கு சிலர் குந்தகம் விளைவிக்கின்றனர்! ருவன் வணிகசூரிய கருத்து Posted: 24 Jun 2014 03:49 AM PDT
அளுத்கம பிரதேசத்தில் ஏற்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து இந்த நாடே பற்றி எரியவில்லை என சிலர் எண்ணுவதாக இராணுவ பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், "இது சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் உள்ளிட்ட இன்னும் பல இனங்களை கொண்ட நாடு என்பதனை நாடாளுமன்ற வரபிரசாதங்களை கொண்டுள்ள சிலர் மறந்து செயற்படுகின்றனர். தங்களுடைய வரப்பிரசாதங்களை பயன்படுத்தி சிலர், நாட்டின் ஐக்கியத்திற்கு குந்தகம் விளைவிப்பதற்கு முயற்சிக்கின்றனர். இனங்களுக்கு இடையிலான அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான செயற்பாடுகளை சிலர் முன்னெடுப்பதற்கும் முயற்சிக்கின்றனர். அளுத்கமை மற்றும் பேருவளை சம்பவத்திற்கு அடுத்து இந்நாடே தீபற்றி எரியும், இந்த சந்தர்ப்பத்தில் குழப்பிய குட்டையில் நாம் மீன் பிடித்து கொள்ளலாம் என்று சிலர் நினைத்தனர். எமது புலனாய்வு பிரிவினரின் செயற்பாட்டினால் இந்நாடே தீ பற்றி எரியவிருந்தமை தடுக்கப்பட்டுவிட்டது. அளுத்கமை மற்றும் பேருவளை சம்பவத்தையடுத்து மேற்குல நாடுகளின் தூதுவராலயத்திலிருந்து, நடந்தது போதாதா என்று வினவப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. நாட்டை குழப்பி அதில் குளிர்காய்வதற்கு முயற்சிக்கின்ற இவ்வாறான தேசத் துரோகிகள் தொடர்பில் மக்கள் கவனமாகவும் அவதானமாகவும் இருக்க வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பாலியல் ரீதியாக இம்சிக்கப்படுவதாக குற்றச்சாட்டு மறுக்கும் இலங்கை! நிரூபிக்கும் கனடா Posted: 24 Jun 2014 03:38 AM PDT
வடக்கில் இராணுவத்தினரால் பெண்கள் பாலியல் ரீதியாக இம்சிக்கப்படுவதாக கனடா முன்வைத்த குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட வடக்கு பெண்களை சிறிலங்காவின் இராணுவத்தினர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துவதாக கனடா ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் குற்றம் சுமத்தி இருந்தது. அத்துடன் அதிகரித்த இராணுவ பிரசன்னத்தினால், வடக்கில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை நிராகரித்து இலங்கையின் மனித உரிமைகள் பேரவைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார். இதில் இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று தெரிவித்ததுடன், இதற்கான ஆதாரங்கள் முன்வைக்கப்படும் பட்சத்தில் அது தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்தும் என்றும் கூறியுள்ளார். இன்றைய சபை அமர்வின் போது, கனடா அரசினால் இலங்கை படையினர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, அரச கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில், இராணுவத்தினரால் பெண்கள் வல்லுறவுக்குட்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை முற்றாக நிராகரித்த இலங்கை அரசாங்கம், அதற்கான பதிலையும் வழங்கியுள்ளது. இலங்கையில் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடைமுறைகளை பின்பற்றி வருகின்றோம். குறிப்பாக, பெண்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. யுத்த காலத்திலும் யுத்தம் முடிவடைந்த காலத்திலும் மிகக் குறைந்தளவிலான படையினரே பாலியல் குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருக்கிறார்கள். யுத்தம் உக்கிரமாக இருந்த 2007 ஜனவரி தொடக்கம் 2009 மே வரையான காலப்பகுதியில், வடக்கில் 5 பாலியல் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட 7 பாதுகாப்பு படையினரே இனங்காணப்பட்டுள்ளனர். அக்காலத்தில் மொத்தமாக 119 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதில் 225 சந்தேக நபர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 7 பேர் மட்டுமே படைத்தரப்பைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனைய அனைவரும் வடக்கினைச் சேர்ந்தவர்கள்தான். அதேபோல், யுத்தம் முடிவடைந்த காலப்பகுதியான 2009 ஆம் ஆண்டு தொடக்கம் 2012ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் வடக்கில் இடம்பெற்ற 256 பாலியல் வன்முறைச் சம்பவங்களில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 307 நபர்களில், 6 பாலியல் வன்முறைச் சம்பவங்களில் தொடர்புபட்ட 10 பேர் மட்டுமே பாதுகாப்பு படையினரைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன்படி, யுத்த காலத்தில் 5.6 சமவீதமான படையினரும், யுத்தத்திற்கு பிந்திய காலத்தில் 3.3 சதவீதமான படையினரும் மாத்திரமே பாலியல் குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருக்கிறார்கள். இவை, நம்பத்தகுந்த ஆதாரங்களிலிருந்து தொகுக்கப்பட்டவையாகும். இச்சம்பவங்களுடன் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான சட்டப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, குற்றச்செயலில் ஈடுபட்ட படையினர் மீது, படைத்துறை சட்டம் மூலமாகவும் சிவில் சட்டம் மூலமாகவும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு, படைத்தரப்பினருக்கு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அனுசரணையுடன் மனித உரிமை தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல், இலங்கையிலுள்ள சகல அரச துறைகளிலும் பெண்கள், சிறுவர்களுக்கான விசேட சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவர்களின் பாதுகாப்பு மிகவும் வலுவுள்ள நாடாக இலங்கை திகழ்கிறது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில், கனடாவினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டினை நாங்கள் மறுக்கின்றோம். ஆதாரமற்ற முறையில், எம்மீது வீண் பழி சுமத்துவதற்காக, கனடா முயற்சிக்கின்றமையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஆகையினால், பொறுப்பற்ற மற்றும் நம்பகமற்ற குற்றச்சாட்டுகளிலிருந்து விலகி செயற்படுமாறு கனடாவை கேட்டுக் கொள்கிறோம் என, இலங்கை அரசாங்கம் தனது மறுப்பறிக்கையை ஜெனீவாவில் சமர்ப்பித்திருக்கிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பெல் மீடியா நிறுவனமானது கிட்டத்தட்ட 120 பேருக்குப் பதவி நீக்கம்! Posted: 24 Jun 2014 03:30 AM PDT
இந்த நிறுவனமானது தொலைக்காட்சிப் பிரிவில் பணியாற்றுபவர்களில் கிட்டத்தட்ட 120 பேருக்குப் பதவி நீக்கம் வழங்கவுள்ளது எனத் தெரியவருகிறது. குறிப்பாக ரொறன்ரோவிலே இந்தப் பணி நீக்கம் நிகழவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் ரொறன்ரோப் பணியாளர்களில் இத் தொகையானது 5 சதவீதமாகவும் தேசிய ரீதியில் 2 சதவீதமானதாகவும் இருக்கின்றது. குறிப்பிட்ட பெல் மீடியா கட்டான கட்டம் எனவும் அதனால்தான் தொலைக்காட்சிப் பகுதியிலிருந்து 120 பேருக்குப் பதவி நீக்கம் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றது. பெல் மீடியா நிறுவனத்தின் தலைவரான Kevin Crull தமது பணியாளர்களுக்கு ' தாம் தொடர்ந்து நிதி நிலமைகளைச் சமாளிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதன் காரணமாக பணியாளர்களைக் குறைக்கின்றோம் எனவும், அத்துடன் குறிப்பிட்ட நிறுவனத்தின் பணிகள் அடிக்கடி மாற்றமடைய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் பல போட்டிகளை எதிர்நோக்க வேண்டிய நிலையில் இருப்பதாலும் பணியாளர் குறைப்பு எனும் நடவடிக்கையை எடுத்திருக்கின்றோம்' என மின்னஞ்சல் மூலமாகத் தெரிவித்திருக்கின்றார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
















