Tamil Star |
- எனக்கு மகன் இருக்கான்.. நாலு காலு, ஒரு வாலோட!'- சித்தார்த் கடுப்பு
- சூர்யாவின் அஞ்சானுடன் மோதுகிறது சிம்புவின் வாலு!
- கேரளாவில் நடந்த சோலார் பேனல் ஊழலை மையமாக வைத்து படுமெடுத்த தயாரிப்பாளர் வீட்டுக்குப் போய் மிரட்டிய சரிதா நாயர்!
- இனியா வீட்டில் கொள்ளை: அக்காவுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையே திருடன்!
- கொழுப்பு மற்றும் இரும்புச் சத்து முருங்கைக்காயில்!
- இதயத்தை பலப்படுத்தும் சீதாப்பழம்!
- கூரிய ஆயுதங்களால் நெட் கபேயை துவாம்சம் செய்த கொள்ளை கும்பல்: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
- எப்படி இந்தியாவில மட்டும் இவ்வளவு வேகமா இருக்காங்க?
- இயற்கையின் சீற்றத்தில் இதுவும் ஒன்று…. மிகவும் அரிய காட்சி!
- முயற்சித்தால் முடியாதது எது?… பாருங்க உங்களுக்கே புரியும்!
- உலகத்திலுள்ள ஒவ்வொரு அப்பாக்களுக்கும் சமர்ப்பணம்
- குழந்தைக்கு பதிலாக பல்லியை பிரசவித்த பெண்!
- உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி: ஆஸ்திரேலிய அணி மீண்டும் சாம்பியன்!
- புல் தரை மைதான களத்தில் முதல் பட்டம்!
- இந்தியா – பூடான் இடையேயான உறவு வலுப்படுத்தப்படும் என்று நரேந்திர மோடி உரை!
- ராணுவத்துக்கும் சன்னி பிரிவினருக்கும் ஈராக்கில் முற்றியது தீவிரவாத தாக்குதல்!
- எதிர்கட்சியினர் அரசாங்கத்துடன் ஏட்டிக்குப்போட்டியாக செயற்பட இது உரிய தருணமல்ல அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல!
- அமெரிக்காவுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டுள்ள நாடுகளை நெருங்க ஆலோசனை பெறும் இலங்கை!
- சட்டவிரோதமாக இலங்கையில் 102 பாகிஸ்தான் பிரஜைகள் கைது!
- திஸ்ஸமஹாராம மற்றும் பெலியத்தையில் கொலைகளைச் செய்ய நான் உதவியிருக்கலாம்: உண்மையை ஒத்துக்கொள்ளும் மேர்வின் சில்வா!
| எனக்கு மகன் இருக்கான்.. நாலு காலு, ஒரு வாலோட!'- சித்தார்த் கடுப்பு Posted: 16 Jun 2014 03:36 AM PDT
எனக்கு மகன் இருப்பதாக ஏகப்பட்ட செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதெல்லாம் பொய், வதந்திதான் என்று கூறியுள்ளார் நடிகர் சித்தார்த். படங்கள் இருக்கிறதோ இல்லையோ.. எப்போதும் வதந்திகளில் இருப்பவர் நடிகர் சித்தார்த். திருமணமாகி, விவாகரத்தும் பெற்றுவிட்ட சித்தார்த்துடன் பல நடிகைகள் ஏற்கெனவே கிசுகிசுக்கப்பட்டனர். நடிகை ஸ்ருதியும் அவரும் ஒரே வீட்டில் வாழ்ந்ததாகக் கூறப்பட்டது. இப்போது நடிகை சமந்தாவும், சித்தார்த்தும் காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் சித்தார்த்துக்கும் அவரது மனைவி, குழந்தைகளுக்கும் இன்றளவும் தொடர்பு இருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானதில் படு அப்செட் ஆகிவிட்டாராம் சித்தார்த். இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சித்தார்த், "ஆமாம்... எனக்கு ஒரு மகன் இருக்கிறான். அவன் பெயர் மோக்லி. ஆனால் அவனுக்கு நான்கு கால்களும் ஒரு வாலும் இருக்கும். என்னுடைய இந்த செல்ல நாய்க்குட்டியை நான் தெரு ஓரத்தில் கண்டெடுத்தேன். நான் அவன் மீது அன்பு கொண்டு அவனை காப்பாற்றினேன்," என்று கடுப்புடன் கூறியுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| சூர்யாவின் அஞ்சானுடன் மோதுகிறது சிம்புவின் வாலு! Posted: 16 Jun 2014 03:32 AM PDT
சூர்யாவின் அஞ்சான் படம் வெளியாகும் ஆகஸ்ட் 15-ம் தேதி சிம்பு நடித்த வாலு படமும் வெளியாகும் என அறிவித்துள்ளார் அந்தப் படத்தின் இயக்குநர். சூர்யா, சமந்தா நடிக்கும் படம் அஞ்சான். லிங்குசாமி இயக்குகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் பரபரவென நடந்து சமீபத்தில் முழுமை பெற்றது. இப்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவேகத்தில் நடக்கிறது. எப்படியும் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் படத்தை வெளியிடுவதில் உறுதியாக உள்ளார் லிங்குசாமி. இதனை அவர் ஏற்கெனவே அறிவித்தும்விட்டார். இதற்கிடையில், நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த வாலு படத்தின் ஷூட்டிங் முழுமை பெற்று, போஸ்ட் புரொடக்ஷன் பணகளிலும் நிறைவுக் கட்டத்துக்கு வந்துள்ளதாம். இதைத் தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் விஜய் அளித்த பேட்டியில், வாலு படத்தை ஆகஸ்டச் 15-ம் தேதி சுதந்திர தின ஸ்பெஷலாக வெளியிடப் போகிறோம் என்று கூறியிருந்தார். சிம்பு - ஹன்சிகா நடித்துள்ள இந்தப் படம் நீண்ட காலம் தயாரிப்பிலிருந்தது. சிம்பு கடைசியாக நடித்த படம் போடா போடி. இந்தப் படத்தை விஜய்யின் துப்பாக்கி படத்துடன் வெளியிட்டார். படத்தின் ரிசல்ட் கோடம்பாக்கம் அறிந்ததே!This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 16 Jun 2014 03:27 AM PDT
கேரளாவில் நடந்த சோலார் பேனல் ஊழலை மையமாக வைத்து உருவாகும் மலையாளப் படத்தின் தயாரிப்பாளரை, இந்த ஊழலில் முக்கிய புள்ளியான சரிதா நாயர் மற்றும் சிலர் வீடு தேடிப் போய் மிரட்டியுள்ளனர். கேரளாவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது சோலார் பேனல் ஊழல். இதில் சரிதா நாயர் என்ற பெண் உள்பட பல்வேறு அரசியல் பிரமுகர்கள் சிக்கியுள்ளனர். இதுதொடர்பான வழக்கு நடந்து வருகிறது. இந்த விவகாரத்தை மையமாக வைத்து சோலார் ஸ்வப்னம் என்ற பெயரில் மலையாளத்தில் ஒரு படம் தயாராகிறது. ஜாய் ஆண்டனி இயக்கி இருக்கியுள்ள இந்தப் படத்தில் வருவது, முழுக்க முழுக்க உண்மை சம்பவங்கள்தான். இது சரிதா நாயரை கோபப்படுத்தியுள்ளது. அவர் தனது அடியாட்களுடன் படத்தின் தயாரிப்பாளர் வீட்டுக்கே போய் மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி பட தயாரிப்பாளர் ராஜு ஜோசப் கூறும்போது, "படத்தில் சரிதா நாயர் கேரக்டர் உள்ளது. அந்த வேடத்தில் நடித்திருப்பவர் பூஜா. இதுபற்றி அறிந்த சரிதா நாயர் திடீரென்று என்னுடைய வீட்டுக்கு சிலருடன் வந்தார். அப்போது வீட்டில் நான் இல்லை. 85 வயதான எனது தாயார் மட்டும் இருந்தார். அவரிடம் படத்தை வெளியிட்டால் நடப்பதே வேறு என்று மிரட்டிவிட்டு சென்றார்," என்றார். ஆனால் போலீசில் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. இப்படத்தில் ஆபாச காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இனியா வீட்டில் கொள்ளை: அக்காவுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையே திருடன்! Posted: 16 Jun 2014 03:21 AM PDT
இனியாவின் அக்கா சுவாதிக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையே, அவர் வீட்டில் கொள்ளையடித்தது அம்பலமாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாப்பிள்ளையை கைது செய்து 'மாமியார் வீட்டுக்கு' அனுப்பினர் போலீசார். தமிழில் பிரபல நடிகையாகத் திகழும் இனியா, கேரளாவைச் சேர்ந்தவர். இவரது சொந்த ஊர் திருவனந்தபுரம் கரமணை அருகே உள்ள மருதூர்க்க கடவு கிராமம். இனியாவுக்கு சுவாதி என்ற அக்கா உள்ளார். மலையாள டி.வி. தொடர்களில் நடித்து வருகிறார். நடிகை சுவாதியும் ஷாபின் (வயது 32) என்பவரும் காதலித்து வந்தனர். ஷாபின் தங்கள் அளவுக்கு வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல என்பதால் நடிகை இனியாவின் பெற்றோர் ஆரம்பத்தில் இந்த காதலை ஏற்கவில்லை. ஆனால் ஷாபினைத்தான் திருமணம் செய்வேன் என்று உறுதியாக சுவாதி இருந்ததால் வேறு வழியின்றி கடந்த மே 29 - ந் தேதி, நடிகை சுவாதி - ஷாபின் திருமண நிச்சயதார்த்தம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பெரிய நட்சத்திர ஓட்டலில் கோலாகலமாக நடந்தது. இருவருக்கும் இந்த மாத இறுதியில் திருமணம் செய்யவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி நடிகை இனியா குடும்பத்தினர் இரவுக் காட்சி படம் பார்க்க சென்ற போது, அவர்களது வீட்டில் இருந்த ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் 10 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதுபற்றி கரமணை போலீசில் புகார் செய்தனர் இனியா குடும்பத்தினர். திருவனந்தபுரம் துறைமுக உதவி போலீஸ் கமிஷனர் ஸ்ரீகுமார் தலைமையிலான போலீஸ் படையினர் இந்த கொள்ளை பற்றி தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது இந்த கொள்ளையில் ஈடுபட்டது நடிகை இனியாவின் அக்கா சுவாதிக்கு நிச்சயிக்கப்பட்ட ஷாபின்தான் என்ற உண்மை வெளியாகி, அதிரவைத்தது. உடனடியாக போலீசார் ஷாபினையும் அவருக்கு உதவிய அவரது நண்பர் சஜியையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க, சுவாதியைப் பயன்படுத்த ஷாபின் முயன்றது தெரிய வந்தது. சுவாதியுடன் நிச்சயதார்த்தம் முடிந்ததுமே, அந்த வீட்டில் பணம், நகையைக் கொள்ளையிட திட்டமிட்டுள்ளார். முதலில் வீட்டுச் சாவியைத் திருடி, அதை வைத்து போலி சாவி தயாரித்துள்ளார். பின்னர் அந்த சாவியை தன் கூட்டாளிகள் சஜி, ராஜன், சஜு ஆகிய மூவரிடமும் கொடுத்து வைத்திருந்தார். கொள்ளையடிக்க ஒரு நாளைத் தேர்வு செய்தவர், அந்த நாளில் இனியா, சுவாதி மற்றும் குடும்பத்தினர் அனைவருடனும் இரவுக் காட்சி சினிமா பார்க்க சென்றுள்ளார். வீட்டில் யாருமில்லாத அந்த மூன்று மணி நேரத்துக்குள் பக்காவாக திட்டத்தை அரங்கேற்றியுள்ளார். கொள்ளையடித்த பணத்தில் ஷாபினுக்கு வந்த பங்கு ரூ.2 லட்சத்து 51 ஆயிரமாம். மீதியை கூட்டாளிகள் பிரித்துக் கொண்டார்களாம். போலீஸ் விசாரணையில் இந்த உண்மைகளைக் கக்கியுள்ளார் ஷாபின். அவரையும் அவர் கூட்டாளி சஜியையும் கைது செய்துள்ள போலீஸ், தலைமறைவாக உள்ள ராஜன் மற்றும் சஜூவைத் தேடி வருகின்றனர். இந்த கொள்ளை மூலம், நடிகை சுவாதி திருமணம் ரத்தாக வேண்டிய நிலைக்கு வந்துவிட்டது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கொழுப்பு மற்றும் இரும்புச் சத்து முருங்கைக்காயில்! Posted: 16 Jun 2014 03:13 AM PDT
அனைவரும் விரும்பிச் சாப்பிடும் முருங்கைக்காயில் எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. ஆனால் நாம் அறிந்திருப்பதோ சில பயன்களை மட்டுமே. பயன்களை அறிந்து காய்கறிகளை சாப்பிடுவோமே பகுதியில் இன்று நாம் பார்க்க விருப்பது முருங்கைகாய். முருங்கைகாய். என்ன சத்துகள் இருக்கு: தினமும் முருங்கைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துகள். பொதுவாக முருங்கைக்காயில் கொழுப்பு மற்றும் இரும்புச் சத்து மற்றும் விட்டமின் ஏ, சி இருக்கிறதை தெரிந்துகொள்ள வேண்டும்.. மேலும் புரதம் 2.5 கிராம், கார்போஹைட்ரேட் 3.7 கிராம்,தண்ணீர் 86.9%, கலோரி 26,ஃபைபர் 4.8 கிராம்,கொழுப்பு 0.1 கிராம்,விட்டமின் ஏ 0.11 மிகி,வைட்டமின் பி (கோலைன்) 423 மி.கி,வைட்டமின் பி 1 (தயாமின்) 0.05 மி.கி, விட்டமின் பி2 (ரிபோப்லாவின்) 0.07 மி.கி,வைட்டமின் பி3 (நிகோடினிக் அமிலம்) 0.2 மிகி,கால்சியம் 30 மில்லி கிராம்,மெக்னீசியம் 24 மில்லி கிராம் கொண்டுள்ளது. யாருக்கு நல்லது : குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் சேரும் கிருமி பூச்சிகள் வெளியேறும், மலச்சிக்கலால் அவதி படுபவர்கள், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், சளி பிரச்சனை உள்ளவர்கள், ரத்தசோகை,வயிற்றில் புழு பிரச்சனை உள்ளவர்கள், கணையம், கல்லீரலில் வீக்கம் உள்ளவர்கள் சாப்பிடலாம். யாருக்கு நல்லதல்ல: முதியவர்கள், இதய நோயாளிகள், மூட்டு நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. ஏனெனில் வாயுப் பிடிப்பை ஏற்படுத்தும். பலன்கள்: நரம்பு மண்டலங்களுக்கு ஊக்கம் தரும். முருங்கைகாயை வாரத்தில் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் வயிறு வலி குணமாகும் மேலும் மூலம் தலைவலி, இரத்த நுகர்வு, சிறுநீர் நீர் சுத்திகரிப்பு, உடல், எரிவாயு பிரச்சினைகள் நீங்கும் உடலில் வெப்பநிலை அதிகம் கொண்டவர்கள் முருங்கைகாய் சாப்பிட்டு வந்தால் உயர் வெப்பநிலை குறையும். கர்ப்பிணி பெண்கள் முருங்கைகாய கண்டிப்பாக சாப்பிட வேண்டும், ஏனெனில் பிரவசத்திற்கு முன்பும் பிரவசத்திற்கு பின்பும் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை முருங்கைகாய் நீக்குகிறது. பிரசவத்திற்கு பின்னர் முருங்கைகாய் சாப்பிடுவதன் மூலம் தாய்க்கு பால் அதிகரிக்கும். சளியைப் போக்கும். காய்கள் காய்ச்சலுக்கும் வயிற்றுப் புழுக்களுக்கும் எதிரானவை.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இதயத்தை பலப்படுத்தும் சீதாப்பழம்! Posted: 16 Jun 2014 02:53 AM PDT
கஸ்டர்டு ஆப்பிள் என்றும் பட்டர் ஆப்பிள் என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சீதாப்பழம் சுவை மிக்க இனிய பழமாகும். குளூகோஸ் வடிவில் நிறைந்த அளவு சர்க்கரைச் சத்தைக் கொண்டிருக்கும் இப்பழம் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படுகிறது. வெப்பம் மிகுந்த பகுதிகளில் எளிதாக வளரும் சீதா சிறு மர வகையைச் சார்ந்தது. சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. இதன் தாவரவியல் பெயர் Annona squamosa என்று பெயர். சீத்தாப்பழத்தில் நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. மருத்துவ பயன்கள்: சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும். சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும். விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். சீத்தாப் பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது. சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது. சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும். சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு காணாமல் போகும். சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும். 100 கிராம் சீதாப்பழத்தில் அடங்கியுள்ள சத்துக்களின் உணவு மதிப்பீடு ஈரப்பதம்-70.5%, புரதம்-1.6%, கொழுப்பு-0.4%, மணிச்சத்து-0.9%, நார்ச்சத்து-3.1%, கால்சியம்-17மி.கி., பாஸ்பரஸ்-47மி.கி., இரும்புச்சத்து-4.31மி.கி., வைட்டமின் 'சி'-37மி.கி., வைட்டமின்'பி' காம்ப்ளக்ஸ் சிறிதளவு, மாவுச்சத்து-23.5%.,கலோரி அளவு-10.4% ஆகும். பேன் தொல்லைக்கு சீதாப்பழத்தின் விதைகளை சிறிதளவு சீயக்காய் அறைக்கும் பொழுது சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டு வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வர பேன்கள் நீங்கும்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| கூரிய ஆயுதங்களால் நெட் கபேயை துவாம்சம் செய்த கொள்ளை கும்பல்: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள் Posted: 16 Jun 2014 02:47 AM PDT |
| எப்படி இந்தியாவில மட்டும் இவ்வளவு வேகமா இருக்காங்க? Posted: 16 Jun 2014 02:42 AM PDT |
| இயற்கையின் சீற்றத்தில் இதுவும் ஒன்று…. மிகவும் அரிய காட்சி! Posted: 16 Jun 2014 02:39 AM PDT |
| முயற்சித்தால் முடியாதது எது?… பாருங்க உங்களுக்கே புரியும்! Posted: 16 Jun 2014 02:35 AM PDT |
| உலகத்திலுள்ள ஒவ்வொரு அப்பாக்களுக்கும் சமர்ப்பணம் Posted: 16 Jun 2014 02:29 AM PDT |
| குழந்தைக்கு பதிலாக பல்லியை பிரசவித்த பெண்! Posted: 16 Jun 2014 02:26 AM PDT |
| உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி: ஆஸ்திரேலிய அணி மீண்டும் சாம்பியன்! Posted: 16 Jun 2014 02:21 AM PDT
உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடரில், ஆஸ்திரேலிய அணி மீண்டும் சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை தக்கவைத்துக் கொண்டது. இறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியுடன் நேற்று மோதிய ஆஸ்திரேலியா 6-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று அசத்தியது. அந்த அணியின் சிரியெல்லோ 3 கோல் (20, 47, 53'வது நிமிடம்), கோவர்ஸ் (24'), டர்னர் (37'), வையர் (64') கோல் அடித்தனர். நெதர்லாந்து சார்பில் ஹெர்ட்ஸ்பெர்கர் (14') கோல் போட்டார். ஆஸ்திரேலியா தங்கம், நெதர்லாந்து வெள்ளிப் பதக்கம் பெற்றன. 3வது, 4வது இடத்துக்கான மோதலில் இங்கிலாந்தை 2-0 என வென்ற அர்ஜென்டினா முதல் முறையாக வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. இந்த தொடரில் இந்திய அணி 9வது இடத்துடன் திருப்தியடைந்தது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| புல் தரை மைதான களத்தில் முதல் பட்டம்! Posted: 16 Jun 2014 02:16 AM PDT
இங்கிலாந்தில் நடந்த ஏகான் கிளாசிக் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், செர்பிய வீராங்கனை அனா இவானோவிச் பட்டம் வென்றார். பைனலில் பார்போரா ஸ்டிரைகோவாவுடன் (செக்.) நேற்று மோதிய இவானோவிச் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை கைப்பற்றினார். புல் தரை மைதானங்களில் நடக்கும் டென்னிஸ் போட்டிகளில், அவர் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்தியா – பூடான் இடையேயான உறவு வலுப்படுத்தப்படும் என்று நரேந்திர மோடி உரை! Posted: 16 Jun 2014 02:10 AM PDT
இந்தியா - பூடான் இடையேயான உறவு வலுப்படுத்தப்படும் என்று நரேந்திர மோடி பூடான் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். பூடான் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவது பெருமை அளிக்கிறது என்றும் கூட்டதில் மோடி பேசினார். மேலும் இந்தியா - பூடான் உறவு வலுவான கலாச்சார அம்சங்களை கொண்டுள்ளதாகவும் மோடி தெரிவித்தார். இந்தியாவில் ஆட்சி மாற்றத்தால் ஏற்கனவே உள்ள உறவு பாதிக்கபடாது என்றும் பேசினார். நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பேசுவதை அதிர்ஷ்டமாக கருதுவதாகவும் மோடி தொவித்தார். எரிசக்தி பாதுகாப்பு எரிசக்தி துறையில் தன்னிறைவு காண்பதில் எதிர்காலத்தில் பெரும் சவாலாக இருக்கும் என்றும், எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்த நாடுகள் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று கூட்டத்தில் உரையாற்றினார். சார்க் வலுவடைய வேண்டும் தெற்காசியாவில் இந்தியா வலுவுடன் திகழ்வது அண்டை நாடுகளுக்கு பாதுகாப்பாக அமைந்துள்ளது என்று மோடி உரையாற்றினார். மோடி பெருமிதம் ஜனநாயகத்தின் மதிப்பை உணர்ந்து பூடான் மன்னர் செயல்படுவது பெருமையளிக்கிறது என்றும் அடித்தட்டு மக்களின் உரிமையை மன்னர் குடும்பம் பேணி பாதுகாக்கிறது என்றும் மோடி உரையாற்றினார். பூடானுடனான பொருளாதார கூட்டுறவை மேலும் வலுப்படுத்த இந்தியா ஆர்வமுடன் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டு பயணமாக நேற்று பூடான் சென்றுள்ளார். தலைநகர் திம்புவில் உள்ள அரண்மனையில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் பாரம்பரிய நடனத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பூடான் மன்னர் ஜிட்னிஸ் கேசர் நம்கியால் வாங்கை மோடி சந்தித்து பேசினார். அதன் பின்னர் பூடான் பிரதமர் ஷெரிங் தோப்கே-யுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பாரதத்துக்காக பூடான், பூடானுக்காக பாரதம் என்று சொல்லும் வகையில் இருநாட்டு உறவுகளும் மேம்பட வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். அண்டை நாடு நல்ல நாடாக அமைந்தால் மட்டுமே நாட்டில் மகிழச்சி நிலவும் என்றார் அவர். இந்தியாவில் பயிலும் பூடான் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை இரட்டிப்பாக்ககூடும் என்று தெரிவித்த மோடி அதற்காக ரூ.2 கோடி ஒதுக்கப்படும் என்று கூறினார். பூடான் இளைஞர்கள் பயன் அடைவதற்காக டிஜிட்டல் நூலகம் அமைக்க இந்தியா உதவும் எனறும் கூறினார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு இடம் அளிக்க வேண்டும் என்று பூடான் பிரதமர் தோப்கே வலியுறுத்தினார். அதனை தொடர்ந்து இந்திய நிதி உதவியுடன் கட்டப்படடுள்ள பூடான் உச்சநீதிமன்ற கட்டிடத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்திய நிதி உதவியுடன் தொடங்க இருக்கும் புதிய நீர்மின் திட்டத்திற்கு மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். பூடான் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் அவர் இன்று உரையாற்றினார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ராணுவத்துக்கும் சன்னி பிரிவினருக்கும் ஈராக்கில் முற்றியது தீவிரவாத தாக்குதல்! Posted: 16 Jun 2014 02:05 AM PDT
ஈராக்கில், ஷியா பிரிவினர் ஆதரவுடன் ராணுவத்துக்கும் சன்னி பிரிவினருக்கும் இடையே நடைபெறும் மோதல் தீவிரமடைந்துள்ளது. பிடிபட்ட ராணுவ வீரர்கள் மற்றும் ஷியா பிரிவினரை, சன்னி பிரிவு தீவிரவாதிகள் ஒட்டுமொத்தமாக சுட்டுக் கொன்ற சம்பவம் உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் அதிபர் சதாம் உசேனின் வீழ்ச்சிக்கு பிறகு, ஷியா பிரிவு தலைவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு அமெரிக்க ராணுவம் வெளியேறியது. தற்போது சதாம் உசேனின் ஆதரவாளர்களான சன்னி பிரிவினரின் கை மீண்டும் ஓங்கியுள்ளது. ஐ.எஸ்.ஐ.எல் (இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அண்ட த லெவன்ட்) என்ற படையை உருவாக்கி ஆயுதம் ஏந்தி போராடுகின்றனர். மொசுல், திக்ரித் உட்பட பல்வேறு நகரங்களைக் கைப்பற்றிய சன்னி பிரிவினர் தலைநகர் பாக்தாத் நோக்கி முன்னேறினர். அதைப் கைப்பற்ற விடாமல் தடுக்க ஷியா பிரிவினர் ஆதரவுடன் ராணுவம் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மோசூலுக்கு மேற்கே உள்ள தல்அஃபார் நகரில் இரு தரப்புக்கும் இடையே கடுமையான பீரங்கி தாக்குதல் நடைபெறுகிறது. ராணுவத்தினரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியபடி சன்னி பிரிவினர் இங்கு முன்னேறி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பாக்தாத் நகரை தீவிரவாதிகள் கைப்பற்றும் முயற்சியை ராணுவம் தடுத்தி நிறுத்தியுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட ராணுவத்தினர் மற்றும் ஷியா பிரிவினரை, சன்னி பிரிவினர் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் பிரச்னையில் மீண்டும் தலையிட்டு, மீண்டும் ராணுவத்தை களம் இறக்க அமெரிக்க அதிபர் ஒபாமா விரும்பவில்லை. இருந்தாலும் விமான தாக்குதல் நடத்தலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் அமெரிக்க போர்க்கப்பல் ஒன்று வளைகுடா பகுதிக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 16 Jun 2014 01:56 AM PDT
எதிர்கட்சியினர் அரசாங்கத்துடன் ஏட்டிக்குப்போட்டியாக செயற்படுவதற்கு இது உரிய தருணமல்ல. இவர்களின் தான்தோன்றித் தனமான செயற்பாடுகள் நாட்டுக்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அபாயம் கொண்டதென ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இலங்கையின் உள்விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தலையிட்ட நாள் முதல் இன்றுவரையில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டிலிருந்து கடுகளவும் விலகவில்லை. சர்வதேச அச்சுறுத்தலென்பது தேசிய ரீதியான பிரச்சினையாகும். இதனை இராஜதந்திரரீதியாக அணுக வேண்டுமென்தே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு. இதற்காகவே அனைத்து கட்சிகளினதும் பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றத்திற்கூடாக சர்வதேச விசாரணையை தடுத்து நிறுத்துவதற்கான பிரேரணையை கொண்டுவந்துள்ளோம். இப்பிரேரணையை பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்ற முடிவு செய்தோம் எனவும் அமைச்சர் கூறினார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஏதேனும் தீர்மானத்தினை சுயமாக முன்வைத்தால், அவர் எதேச்சதிகாரத்துடன் செயற்படுவதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ் சுமத்துகின்றனர். பாராளுமன்றத்திற்கூடாக தீர்மானத்தை நிறைவேற்ற ஜனாதிபதி முனையும் பட்சத்தில் அது வேலைக்காகாதது என தட்டிக்கழிக்கப் பார்க்கின்றனரெனவும் அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்தார். அரசாங்கத்துடன் ஏட்டிக்குப் போட்டியாக செயற்பட்டு வரும் எதிர்க்கட்சியினரின் இலக்குதான் என்ன? அவர்கள் எதனை நிறைவேற்றுவதற்காக இத்தனை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். நாட்டை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் எதிர்க்கட்சியினர் சந்தர்ப்பம் பார்த்து தேசிய பிரச்சினையுடன் உள்நாட்டு அரசியல் நடத்துகின்றனர். இவ்வாறு செயற்படுவது ஏன் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமென்பது அவசியமாகும். ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 25வது அமர்வு ஆரம்பித்து வைக்கப்பட்ட போதே வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளையின் தீர்மானம் பக்கச்சார்பானது; நியாயமற்றது எனத் தெளிவாக விளக்கி கூறியிருந்தார். அதே நிலைப்பாட்டில் தான், அரசாங்கம் இன்னமும் உள்ளது. நியாயமில்லாத விசாரணைக் குழுவினை எதற்காக இலங்கைக்குள் அனுமதிக்க வேண்டும். அவர்களது அறிக்கையில் எந்தவொரு உண்மைத் தகவலும் இருக்காது என்பதை தெரிந்தே நாம் அவர்களது வருகையை ஆட்சேபிக்கின்றோம். ஆனால் அரசாங்கத்துடன் ஏட்டிக்கு போட்டியாக செயற்பட்டு வரும் எதிர்கட்சியினர் எதற்காக இந்த விசாரணைக்குழுவின் வருகையை ஆதரிக்க முற்படுகின்றனர். இதன் உள்நோக்கத்தை வெளிப்படுத்த வேண்டியது அவர்களது கட்டாய பொறுப்பு எனவும் அமைச்சர் கெஹெலிய தெரிவித்தார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| அமெரிக்காவுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டுள்ள நாடுகளை நெருங்க ஆலோசனை பெறும் இலங்கை! Posted: 16 Jun 2014 01:19 AM PDT
பாகிஸ்தானின் சிரேஷ்ட சட்ட ஆலோசகரான கலாநிதி மொஹமட் அசாம் சௌதிரியிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இராஜதந்திர துறையில் பிரபலமான சட்ட ஆலோசகரான சௌதிரியிடம் இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்படவுள்ள சர்வதேச விசாரணை சமபந்தமான ஆலோசனைகளை பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மொஹமட் அசாம் சௌதிரி, கடந்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்து, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் இந்த விடயம் சம்பந்தமாக பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார். இந்த சந்திப்புகளில் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய சௌதிரி தனது பணிகளை ஆரம்பித்துள்ளார். இந்த பணிகளின் முன்னேற்றம் குறித்து அடுத்த வாரம் அமைச்சர் பீரிஸூக்கு அவர் அறிவிக்க உள்ளதாக அரசாங்கத்தின் உயர்தரப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன. This posting includes an audio/video/photo media file: Download Now |
| சட்டவிரோதமாக இலங்கையில் 102 பாகிஸ்தான் பிரஜைகள் கைது! Posted: 16 Jun 2014 01:10 AM PDT
சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் பிரஜைகளை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்று தருவதாக கூறி தரகர்கள், பெருமளவிலான பாகிஸ்தானியர்களை இலங்கைக்கு அழைத்து வந்து அவர்களை கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தில் பதிவு செய்துள்ளனர். வருடக்கணக்கில் இவர்களை இலங்கையில் தங்க வைத்து சமூக விரோத செயற்பாடுகள் மற்றும் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய ரகசியமான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என்பதால், திணைக்களம் இந்த விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இவ்வாறு பல வருடங்கள் தங்கியிருந்த 102 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டு, பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதேவேளை அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தில் பதிவு செய்துள்ள பாகிஸ்தான் பிரஜைகள் இரவு நேரத்தில் குறைந்த கூலிக்கு தொழில் புரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இலங்கையில் ஆயிரத்து 900 பாகிஸ்தானியர்கள் தம்மை அகதிகளாக பதிவு செய்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 16 Jun 2014 01:05 AM PDT
திஸ்ஸமஹாராம மற்றும் பெலியத்தை பகுதிகளில் கொலைகளை செய்ய தான் உதவியிருக்கலாம் என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். களனி உபுல்வத்தை ஸ்ரீ விஷ்ணு கோயில் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நான் களனிக்கு வந்து கொலைகளை செய்ததில்லை. அதற்கு உதவியதுமில்லை. திஸ்ஸமஹாராம மற்றும் பெலியத்தையில் இருக்கும் போது அவற்றுக்கு உதவியிருக்கலாம். அந்த காலத்தில் ஜே.வி.பியினர் எனது தங்கை மற்றும் மைத்துனரை கொலை செய்த காரணத்தினால், அவற்றுக்கு உதவியிருக்கலாம். எவர் என்ன கூறினாலும் மக்கள் என்னை நேசிக்கின்றனர். பொசன் பௌர்ணமி தினத்தில் என்னை மாத்தறைக்கு வருமாறு அழைத்தனர். நான் களனியை விட்டு செல்ல மாட்டேன். எனது மகனை விரும்பினால் அரசியலில் ஈடுபடுமாறு கூறினேன். நான் ஜாதகத்தை நம்புகிறவன். எனது மகனின் ஜாதகம் சிறந்த முறையில் உள்ளது எனவும் அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



















