Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


சீரியல்களிலும், நடன நிகழ்ச்சிகளிலும் நடிகை ஆனந்தியின் சினிமா என்ட்ரி: மீகாமன் படத்தில் அறிமுகம்

Posted: 02 Jun 2014 07:44 AM PDT

anandhi

anandhiஇதுவரை சீரியல்களிலும், நடன நிகழ்ச்சிகளிலும் தனது திறமையைக் காட்டி வந்த ஆனந்தி, தற்போது வெள்ளித்திரைக்கு ஷிப்ட் ஆகியுள்ளார். எப்போதும் சீரியல்களில் நடித்து வந்த ஆனந்தி, விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் சீசன் 7 நடன நிகழ்ச்சியில் தனது சூப்பரான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார். அதுவும் சோலோ ரவுண்டில் அவர் ஆடிய பெல்லி டான்ஸ் யூடியூப்பில் லைக்குகளை அள்ளுகிறது. ஆட்டம் தந்த புகழால் இப்போது சினிமா நடிகையாகிவிட்டார். மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா, ஹன்சிகா நடிக்கும் மீகாமன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் இன்னும் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுபற்றி ஆனந்தியிடம் கேட்டபோது, " சின்ன வயசிலிருந்தே நடனம்தான் எனக்கு உயிர். ஆனாலும் முதலில் சின்னத்திரையில் நடிக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது. சீசன் 7 இல் ஆட ஆரம்பித்தபிறகு என் வாழ்க்கையே திசை மாறிவிட்டது. எனது ஆட்டத்தை பார்த்துவிட்டு வெளிநாடுகளில் இருந்தெல்லாம் எப்படியோ என் போன்நம்பரை பிடித்து பாராட்டி பேசினார்கள். இயக்குனர் மகிழ்திருமேனியும் எனது நிகழ்ச்சியை பார்த்துவிட்டு நடிக்க அழைத்தார். மீகாமன் படத்தில் ஹன்சிகாவுக்கு அடுத்து முக்கியமான கேரக்டர். இப்போது நிறைய வாய்ப்புகள் வருகிறது. அதனால் இனி சீரியல்களில் நடிக்க மாட்டேன். சீசன் 7ல் மட்டும் ஆடுவேன். மற்றபடி இனி சினிமாவுக்குத்தான் முக்கியத்துவம்" என்று கூறியுள்ளார் ஆனந்தி.

This posting includes an audio/video/photo media file: Download Now

மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்! பிறந்த நாள் விழாவில் இளையராஜா பேச்சு

Posted: 02 Jun 2014 07:32 AM PDT

illayaraja-birthday

illayaraja-birthdayதன் பிறந்த நாளை மரக்கன்று நட்டு இன்று தொடங்கினார் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவில் 40 ஆண்டு காலமாய் கோலோச்சிக் கொண்டிருப்பவர் இளையராஜா. இந்திய சினிமா தாண்டி, உலகளாவிய இசை மேதைகளுள் முன்னணியில் இருப்பவர் என மேலை நாட்டவரும் வியக்கும் பெரும் மேதையாகத் திகழ்கிறார். இன்று பிரசாத் ஸ்டுடியோவில் தன் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடினார். அவருக்காக இசை வடிவில் சிறப்பாக கேக் வடிவமைக்கப்பட்டு வரவழைக்கப்பட்டது. முதலில் கேக் வெட்ட தயக்கம் காட்டினாலும், பின்னர் இயக்குநர்கள் பாலா மற்றும் சுகா ஆகியோர் வற்புறுத்தியதால் வெட்டினார். முதல் துண்டை அவர் பஞ்சு அருணாச்சலத்துக்குத் தந்தார். அடுத்து பஞ்சு அருணாச்சலம், இளையராஜாவுக்கு கேக் ஊட்டினார். பின்னர் பேசிய இளையராஜா, "இது பிறந்தநாள் விழா என்பதைவிட புத்தக வெளியிட்டு விழா என்றே சொல்லலாம். இவ்விழாவிற்கு வந்திருக்கும் பஞ்சு சார், பாலா, பார்த்திபன், ராமகிருஷ்ணன், சுகா அனைவருமே அவரவர் துறைகளில் சாதித்தவர்கள்தான். பொதுவாக அழைப்பிதழ்கள் அடித்து பிறந்தநாள் விழா கொண்டாடுவது எனக்குப் பிடிக்காது. ஆனால் இது புத்தக வெளியீட்டு விழாவோடு பிறந்தநாள் விழாவும் சேர்ந்த இந்த நாளில் உங்களை சந்திப்பது மிக்க மகிழ்ச்சி. எனக்கு எழுதி சாதிக்க வேண்டுமென்றோ, மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தி சாதிக்க வேண்டுமென்றோ எனக்கு எண்ணம் கிடையாது. அதேபோல, இங்கே வந்திருக்கும் பஞ்சு அண்ணனோ ஒரே சமயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் சரி, உலகநாயகன் கமல்ஹாசனுக்கும் சரி, ஆறிலிருந்து அறுபதுவரை, கல்யாணராமன் என்ற இரண்டு படங்களை ஒரே சமயத்தில் எழுதி, ஒரே வாரத்தில் ரிலீஸ் செய்து, இரண்டு படங்களையும் சக்சஸ் செய்தவர். இது எப்படி சாத்தியம் என ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். கமலும், ரஜினியும் அவர்கள் வாழ்க்கையில் அதிக வெற்றிப் படங்களில் நடித்திருப்பது பஞ்சு அண்ணன் தயாரிப்பில்தான். எனவே அவர் இந்த விழாவிற்கு வருகை தந்து என்னை வாழ்த்தியது எனக்கு மகிழ்ச்சி. உங்களைச் சந்தித்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி... இன்று என் பிறந்த நாளையொட்டி மரங்கள் நட்டிருக்கிறார்கள். நானும் ஒரு மரக்கன்று நட்டேன். மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான் என்று ஏற்கெனவே பாடியிருக்கிறேன்.. நான் வைத்த மரத்துக்கு நானே தினமும் நீர் ஊற்றிக் கொண்டிருக்க முடியாது. இங்குள்ள தோட்டக்காரர் ஊற்றுவார்.. அப்படி இன்று நடப்படும் மரங்கள் அனைத்துக்கும் ஏதோ ஒரு வகையில் நீர் பெறும்.. வேறு என்ன சொல்ல.. நன்றி,'' என்றார். இன்று மட்டும் தமிழகமெங்கும் இளையராஜா ரசிகர்கள் 71001- மரக்கன்றுகள் நட்டது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

மெல்ல மெல்ல அழிந்து வரும் பறவையினம்தான் 'சிட்டுக்குருவி' ஆல்பம்!

Posted: 02 Jun 2014 07:21 AM PDT

chittukkuruvi

chittukkuruviபூமி மாசு பட்டு வருவது குறித்து 'முத்தமிடும் பூமி', மழைநீர் சேகரிப்பு குறித்து 'விரலை நனைத்த மழைத்துளி', என்று இரண்டு படைப்புகளை உருவாக்கிய விஜய் ஆர்ஆர் தற்போது இயக்கியுள்ள ஆல்பம் 'சிட்டுக்குருவி'. 'மெல்ல மெல்ல அழிந்து வரும் பறவையினம்தான் சிட்டுக்குருவி. தற்போது இந்தியாவில் ஆங்காங்கே நடைபெற்று வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்கள், பெண்களையும் அந்த சிட்டுக் குருவிகளைப் போல இல்லாமல் செய்துவிடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டது. டெல்லி மருத்துவ மாணவிக்கு ஏற்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்திலும் அதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவது, ஆண் இனத்திற்கே தீராத அவமானத்தை தேடி தருவதை போல உணர்ந்தேன். எனது வருத்தத்தை ஒரு ஆல்பமாக பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றியது. செல்வராஜ், எஸ்.சசி நீலாவதி இருவரும் தந்த ஊக்கத்தால் உருவானதுதான் இந்த ஆல்பம்' என்கிறார் இயக்குனர் விஜய் ஆர்ஆர். அடிப்படையில் விசில் கலைஞரான செல்வராஜ் இதில் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருக்கிறார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

விக்டுலீக் நியோ ஸ்மார்ட்போன் ரூ. 11,990 விலையில் அறிமுகம்!

Posted: 02 Jun 2014 07:06 AM PDT

wicto-leek-wammy

wicto-leek-wammyவிக்டுலீக் நிறுவனம் இந்திய சந்தையில் Wammy நியோ என்ற ஒரு புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை ரூ. 11,990 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விக்டுலீக் வலைத்தளத்தில் இருந்து ஜூன் 15 முதல் டெலிவரி செய்யப்படும் என்று கூறியுள்ளது. நிறுவனம் அக்வாப்ரோடெக்ட் பாதுகாப்பு திரையை இதோடு வழங்குகிறது. இது ஜிஎஸ்எம்-WCDMA (3G) ஆதரவு கொண்ட இரட்டை சிம் ஸ்மார்ட்போன் ஆகும். ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் இயங்குகிறது, ஆனால் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் அப்டேட் செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளது. இதில் 720x1280 பிக்சல் தீர்மானம் கொண்ட 5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது, மேலும் ஒரு டிராகன் டெயில் திரை கொண்டு வருகிறது. Wammy நியோ ஸ்மார்ட்போன், மாலி 450 ஜி.பீ. யூ உடன் இணைந்து 1.7GHz அக்டா கோர் மீடியாடெக் MTK6592 SoC இல் இயங்குகிறது, மற்றும் இது ரேம் 2GB உள்ளது. இது microSD அட்டை வழியாக 64GB வரை விரிவாக்கக்கூடிய 8GB உள்ளமைக்கப்பட்ட சேமிப்பு வழங்குகிறது. Wammy நியோ ஸ்மார்ட்போனில் 5.0-மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, மற்றும் எல்இடி பிளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற ஆட்டோ ஃபோகஸ் கேமரா உள்ளது. இணைப்பு விருப்பங்கள் 3G, GPRS / EDGE, Wi-Fi, ஹாட்ஸ்பாட் உடன் 802.11 b / g / n மற்றும் டைரக்ட் செயல்பாடு, EPO உடன் ப்ளூடூத் v2.1, ஜி.பி. எஸ் / எ -ஜி.பி. எஸ், எப்எம் ரேடியோ, மைக்ரோ-USB, மற்றும் ஒரு 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போனில் 2200mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது மற்றும் மெஷர்ஸ் 114.5x71x7.7mm கொண்டுள்ளது. மேலும் எடை பற்றிய விவரங்கள் எதுவும் அளிக்கப்படவில்லை. விக்டுலீக் Wammy நியோ ஸ்மார்ட்போன் அம்சங்கள்: இரட்டை சிம் (ஜிஎஸ்எம்-WCDMA (3G)), 720x1280 பிக்சல் தீர்மானம் கொண்ட 5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, மாலி 450 ஜி.பீ. யூ உடன் இணைந்து 1.7GHz அக்டா கோர் மீடியாடெக் MTK6592 SoC, ரேம் 2GB, microSD அட்டை வழியாக 64GB வரை விரிவாக்கக்கூடிய 8GB உள்ளமைக்கப்பட்ட சேமிப்பு, 5.0-மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, எல்இடி பிளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற ஆட்டோ ஃபோகஸ் கேமரா, 3G, GPRS / EDGE, Wi-Fi, ஹாட்ஸ்பாட் உடன் 802.11 b / g / n, EPO உடன் ப்ளூடூத் v2.1, ஜி.பி. எஸ் / எ -ஜி.பி. எஸ், எப்எம் ரேடியோ, மைக்ரோ-USB, 3.5mm ஆடியோ ஜாக், ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன், 2200mAh பேட்டரி.      

This posting includes an audio/video/photo media file: Download Now

லிங்கா படப்பிடிப்பின் போது சோனாக்ஷி சின்ஹாவை பார்த்து பதட்டப்பட்ட ரஜினி

Posted: 02 Jun 2014 03:13 AM PDT

rajini-sonakshi

rajini-sonakshiநடிகை சோனாக்ஷி சின்ஹாவை பார்த்து ரஜினிகாந்த் பதட்டப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. பாலிவுட்டில் வெற்றி நாயகியாக இருக்கும் சோனாக்ஷி சின்ஹா கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் லிங்கா படம் மூலம் கோலிவுட்டுக்கு வருகிறார். படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய ஸ்டாருடன் நடிக்கிறோமே என்று நினைத்தபோது சோனாக்ஷிக்கு லிங்கா படப்பிடிப்பின் முதல் நாளில் ரஜினியை பார்த்ததும் பதட்டமாகிவிட்டதாம். உடனே சோனாக்ஷி ரஜினியிடம் சென்று சார் உங்களுடன் நடிப்பதை நினைக்கையில் பெருமையாக உள்ளது. ஆனால் அதே நேரம் பதட்டமாகவும் உள்ளது என்று தெரிவித்துள்ளார். சோனாக்ஷி கூறியதை கேட்ட ரஜினி அவரிடம், நீங்க ஏன் என்னை பார்த்து பதட்டப்படுகிறீர்கள். நண்பரின் மகளுடன் நடிக்கிறோமே என்பதை நினைத்து எனக்கு தான் பதட்டமாக உள்ளது என்றாராம். சோனாக்ஷி சின்ஹா ரஜினியின் நண்பரான இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கோப்பையை வென்றது கொல்கத்தா அணி! பஞ்சாபின் ஷாகாவின் சதம் வீணானது!!

Posted: 02 Jun 2014 03:02 AM PDT

kkp-ipl-champions

kkp-ipl-champions7வது ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. ஐ.பி.எல். கோப்பையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெல்வது 2வது முறையாகும். ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் 7-வது சீசன் போட்டிகள் கடந்த ஏப்ரல் 16-ந் தேதி தொடங்கின. பெங்களூரில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங்கில் களமிறங்கிய பஞ்சாப் அணி ஆட்டத்தின் துவக்கத்தில் திணறியது. ஆனால், பிற்பகுதியில் வொக்ரா மற்றும் சஹாவின் கூட்டணி அதிரடியாக கைகொடுத்தது. பஞ்சாப் அணி தொடக்கம் முதலே அதிரடி இல்லாமல் குறைந்த ரன்னுடன் திணறியது. சேவாக் 7 ரன்களிலும் பெய்லி ஒரு ரன்னிலும் அவுட் ஆனார்கள். இதனையடுத்து வோக்ராவும், சஹாவும் கைகோர்த்தனர். 10 ஓவர்கள் முடிவில் வோக்ரா 34, சஹா 15 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் விளையாடினர். அதைத் தொடர்ந்து இருவரும் அதிரடி ஆட்டத்தில் இறங்கினர். சிக்சர், பவுண்ரி என நாலாபுறமும் பந்துகளை பறக்க செய்தனர். இதனையடுத்து களம் இறங்கிய பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர் மேக்ஸ்வெல் முதல் பந்திலே அவுட் ஆனார். சாவுலா வீசிய பந்தை அவர் அதிரடியுடன் அடித்தார். அப்போது பந்தை மோர்கல் கேட்ச் பிடித்து மேக்ஸ்வெல் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேக்ஸ்வெல் வெறும் கையுடன் திரும்பினார். ஆனால் விருத்திமான் சஹா தனது அதிரடியான ஆட்டத்தை தொடர்ந்து அடித்து முதலில் திணறி வந்த பஞ்சாப் அணியை ரன்கள் குவிக்க செய்தார். சஹா 55 பந்துகளில் 115 ரன்கள் குவித்தார். மில்லர் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தார். பஞ்சாப் அணி 20 ஓவர்களுக்கு 4 விக்கெட்களை இழந்து 199 ரன்கள் அடித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நிர்ணயம் செய்தது. இதை அடுத்து களம் இறங்கிய கொல்கத்தா அணியில், தொடக்க வீரர் உத்தப்பா 3 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 5 ரன்களில் வெளியேறினார். கம்பீர் 17 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 23 ரன் எடுத்தார். அடுத்து வந்த பாண்டேயும் யூசுப் பதானும் அதிரடி காட்டினர். பதான் 22 பந்தில் 33 ரன்கள் எடுத்தார். இதில் 4 சிக்சர்கள் அடங்கும். பாண்டே 50 பந்துகளில் 6 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 94 ரன் குவித்தார். இருவரும் ஆட்டம் இழந்த பின்னர் ஆட்டம் பஞ்சாப் கைகளுக்குச் சென்றது போல் இருந்தது. ஆனால், வெற்றிக்கு ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற நிலையில் கடைசி ஓவரை எதிர்கொண்ட சாவ்லா 5 பந்துகளில் தலா ஒரு சிக்ஸர் மற்றும் பவுண்டரியுடன் ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். கொல்கத்தா அணி 19.3 ஓவரில் வெற்றிக்குத் தேவையான 200 ரன்களை 7 விக்கெட் இழந்து பெற்றது. இதன் மூலம் 2வது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. கடந்த 2012ஆம் ஆண்டு கொல்கத்தா அணி, ஐ.பி.எல். கோப்பையைக் கைப்பற்றியிருந்தது.நடப்பு ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணி தொடக்கம் முதலே மிகச் சிறப்பாக விளையாடி வந்தது. இந்த முறை கோப்பையை வெல்லும் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அணியாகவும் இருந்தது. கடைசிக் போட்டியில் பரிதாபமாகத் தோற்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கங்னம் ஸ்டைல் வீடியோவை யூடியூப்பில் பார்த்த 200 கோடி பேர்: புதிய சாதனை

Posted: 02 Jun 2014 02:53 AM PDT

gangnam-style

gangnam-styleதென் கொரிய பாப் பாடகரான பிஎஸ்ஒய்-இன் கங்னம் ஸ்டைல் வீடியோவை யூடியூப்பில் இதுவரை 200 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர். தென் கொரிய பாப் பாடகரான பி.எஸ்.ஒய் கடந்த 2012ம் ஆண்டு கங்னம் ஸ்டைல் என்ற பாப் பாடல் வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோ பட்டி தொட்டி எல்லாம் பட்டையை கிளப்பியது. சிறுவர்கள் கூட கங்னம் ஸ்டைல் பாடலை பாடிக் கொண்டு அந்த நடன அசைவை செய்து காட்டினார்கள். கங்னம் ஸ்டைல் வந்து இரண்டு ஆண்டுகள் ஆகப் போகிறது. ஆனால் அது இன்னும் பிரபலமாகவே உள்ளது. அந்த வீடியோவை யூடியூப்பில் போட்டு இரண்டு ஆண்டுகளுக்குள் அதை 200 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர். இது குறித்து பி.எஸ்.ஒய். கூறுகையில், 200 கோடி பேர் என் வீடியோவை பார்த்துள்ளனர். இது மிகப்பெரிய கௌரவம் ஆகும். இதற்கு மரியாதை செலுத்தும் விதமாக நான் விரைவில் ஒரு நல்ல பாடலை வெளியிடுவேன் என்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரபல பாப் பாடகி பியான்ஸே நோலஸ் பாடிகார்டுடன் கள்ளத்தொடர்பு

Posted: 02 Jun 2014 02:48 AM PDT

beyonce-knowles

beyonce-knowlesபிரபல பாப் பாடகி பியான்ஸே நோலஸ் தனது மெய்காப்பாளருடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரபல பாப் பாடகி ராப்பரான ஜே சியை கடந்த 2008ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் பியான்ஸே தனது மெய்க்காப்பாளர் ஜூலியஸ் டி போயருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பியான்ஸேவுக்கும், ஜூலியஸுக்கும் இடையே நிச்சயம் ஏதோ இருக்கிறது என்று ஜே நினைக்கிறாராம். கடந்த பிப்ரவரி மாதம் அவர் ஜூலியஸை வேலையை விட்டு அனுப்ப நினைத்தபோது பியான்ஸே தடுத்துவிட்டாராம். முன்னதாக கடந்த 2009ம் ஆண்டு பியான்ஸேவும், ஜூலியஸும் ஒரு ஹோட்டலில் இருந்து ஜோடியாக வந்துள்ளனர். அப்போது ஜூலியஸின் உதட்டில் பியான்ஸே அடிக்கடி பயன்படுத்தும் சிவப்பு நிற லிப்ஸ்டிக் கறை இருந்துள்ளது. பியான்ஸேவும், ஜூலியஸும் பல முறை தனிமையில் இருந்துள்ளனர். மேலும் அவர் பியான்ஸேவின் ஹோட்டல் அறையில் தங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கை வடக்கு கிழக்கு மாகாணங்களில் சேவை செய்ய .மருத்துவர்கள், ஆசிரியர்களை அனுப்புங்கள் சிவாஜிலிங்கம் அறிக்கை

Posted: 02 Jun 2014 02:40 AM PDT

mk-sivajilingam

mk-sivajilingamஇலங்கை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சேவை செய்ய தமிழ் பேசும் மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களை அனுப்பி வைக்குமாறு இந்திய அரசுக்கு வடக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறையை நீக்க இந்தியாவில் இருந்து தமிழ் பேசும் மருத்துவர்களை 2 ஆண்டுகள் சேவை செய்ய அனுப்பி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் ஆங்கில, தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்கள் பற்றாக்குறையை நீக்க, இந்தியாவில் தமிழ் பேசும் ஆங்கில, தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்களையும் 2 ஆண்டுகள் சேவை செய்ய அனுப்பி வைக்க வேண்டுகிறோம். மருத்துவர்களும் ஆங்கில, தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்களும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சேவையாற்ற உரிய நடவடிக்கைகளையும் அனுமதிகளையும் வழங்கி உதவ ஏற்பாடுகள் செய்யுமாறு இந்திய அரசையும், தமிழக அரசையும், இலங்கை அரசையும் வடக்கு மாகாண சபை கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் சிவாஜிலிங்கம் கேட்டுக் கொண்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கார் ஒரு பக்கம், டயர் ஒரு பக்கம்…. இது எங்க போய் முடிஞ்சிருக்கும்!

Posted: 02 Jun 2014 02:05 AM PDT

Frenzied-wheel

Frenzied-wheel

This posting includes an audio/video/photo media file: Download Now

புதுப் பொண்ணு முன்பு இந்த பெருத்த அவமானம் தேவை தானா?

Posted: 02 Jun 2014 02:02 AM PDT

Het-sabreren-van-champagne

Het-sabreren-van-champagne

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்த வயசுல எப்படியொரு ரசனை பார்த்தீர்களா?

Posted: 02 Jun 2014 01:58 AM PDT

twin-baby

twin-baby

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்த காலத்துல இப்படியொரு மின்னல் வேக பெண்ணா?

Posted: 02 Jun 2014 01:54 AM PDT

Caught-a-spambot-in-action

Caught-a-spambot-in-action

This posting includes an audio/video/photo media file: Download Now

500 ஆண்டுகளாக உறையாமலிருக்கும் 15 வயது சிறுமியின் உடல் இரத்தம்!

Posted: 02 Jun 2014 01:50 AM PDT

BBC-News-Inca-mummies-Child

BBC-News-Inca-mummies-Child

This posting includes an audio/video/photo media file: Download Now

முதலையை உயிருடன் விழுங்கும் ராட்சத பாம்பு!

Posted: 02 Jun 2014 01:45 AM PDT

Python-eats-Alligator

Python-eats-Alligator

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் கால் இறுதியில் யூஜெனி பவுச்சார்டு

Posted: 02 Jun 2014 01:41 AM PDT

pouchard

pouchardபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட, கனடா வீராங்கனை யூஜெனி பவுச்சார்டு தகுதி பெற்றார். நான்காவது சுற்றில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பருடன் (8வது ரேங்க்) நேற்று மோதிய பவுச்சார்டு (18வது ரேங்க்) 6&1 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டிலும் அதிரடியாக விளையாடி கெர்பரின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த அவர் 6&1, 6&2 என்ற நேர் செட்களில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு 4வது சுற்றில் சுவாரஸ் நவர்ரோ (ஸ்பெயின்) 6&3, 6&3 என்ற நேர் செட்களில் குரோஷியாவின் டாம்ஜனோவிச்சை வீழ்த்தினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் செக் குடியரசின் தாமஸ் பெர்டிச் (6வது ரேங்க்) 6&4, 6&4, 6&4 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஜான் ஐஸ்னரை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார். போராடி வென்றார் மர்ரே: ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் இங்கிலாந்தின் ஆண்டி மர்ரே (7வது ரேங்க்), ஜெர்மனி வீரர் பிலிப் கோல்ஸ்கிரைபர் இடையே நேற்று முன்தினம் இரவு நடந்த 3வது சுற்று ஆட்டம் இழுபறியாக நீடித்ததால், 5வது செட்டின்போது நிறுத்தப்பட்டது. நேற்று தொடர்ந்து நடந்த இப்போட்டியில், ஆண்டி மர்ரே 3&6, 6&3, 6&3, 4&6, 12&10 என்ற செட் கணக்கில் 4 மணி நேரத்துக்கும் அதிகமாகப் போராடி வென்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். கடைசி செட் ஆட்டம் மட்டும் 96 நிமிடங்கள் நீடித்தது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பெடரர் அதிர்ச்சி தோல்வி!

Posted: 02 Jun 2014 01:36 AM PDT

federer

federerபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில், அனுபவ வீரரும் 17 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று சாதனை படைத்தவருமான ரோஜர் பெடரர் (4வது ரேங்க், சுவிஸ்) அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். நான்காவது சுற்றில் லாட்வியா வீரர் எர்னஸ்ட் குல்பிசுடன் (18வது ரேங்க்) நேற்று மோதிய பெடரர் 7-6 (7-5) என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் குல்பிஸ் 7-6 (-3) என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. மூன்றாவது செட்டில் அதிரடியாக விளையாடிய குல்பிஸ் 6-2 என கைப்பற்றி முன்னிலை பெற்றார். அடுத்த செட்டில் பெடரர் வெற்றி பெற மீண்டும் சமநிலை ஏற்பட்டது.கடைசி செட் ஆட்டத்தில் பெடரரின் சர்வீஸ்களை முறியடித்து முன்னேறிய குல்பிஸ் 6-7 (5-7), 7-6 (7-3), 6-2, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் மூன்றரை மணி நேரத்துக்கும் அதிகமாகப் போராடி வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்தியாவைச் சேர்ந்த பேராசிரியருக்கு அமெரிக்க பல்கலை விருது!

Posted: 02 Jun 2014 01:27 AM PDT

Anil-Kulkarni

Anil-Kulkarniஅமெரிக்காவில் பணியாற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த அனில் குல்கர்னி என்ற மருத்துவ பேராசிரியருக்கு புல்பிரைட் நேரு பெல்லோஷிப் என்ற விருதை டெக்சாஸ் பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது. அமெரிக்காவின் ஹுஸ்டனில் அமைந்துள்ள டெக்சாஸ் மருத்துவ பல்கலைக்கழகத்தில், இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர். அனில் குல்கானி என்பவர் பேராசியராக பணியாற்றி வருகிறார். அவர், நோய் தடுப்பு மற்றும் ஊட்டச்சத்து உணவுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டார். அவரது ஆய்வு மற்றும் கல்வி பணியை மேலும் ஊக்குவிக்கும் வகையில் அவருக்கு புல்பிரைட் நேரு பெல்லோஷிப் விருதை டெக்சாஸ் பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது. இது குறித்து அனில் குல்கர்னி கூறுகையில், இந்த விருது மூலம் இந்தியாவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகம் நான் கல்வி கற்பிக்கவும், அமெரிக்க மருத்துவத்துறையில் உள்ள பாடத்திட்டங்களை மேம்படுத்தவும் எனக்கு அனுமதி கிடைக்கும் என்றார். பேராசிரியர் அனில் குல்கர்னி, இந்தியாவில் உள்ள சிக்கிம் மணிபால் பல்கலைக்கழகம், கொச்சியில் உள்ள அமிர்தா பல்கலைக்கழகம், புனே பல்கலைக்கழகத்தின் பர்கசன் கல்லூரி, மற்றும் மும்பையில் உள்ள ஹாப்கின் இன்ஸ்டிடியூட் ஆகியவற்றிலும் தனது கல்வி பணியை தொடர உள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக் குழுவில் 13 பேர்!

Posted: 02 Jun 2014 01:23 AM PDT

koffi_annan

koffi_annanஇலங்கையின் இறுதிப்போரின் போது இரண்டு தரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் மீறல்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தும் குழுவில் 13 பேர் உள்ளடக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தவிர இந்த விசாரணையை கண்காணிக்க சர்வதேசத்தில் உயர் பதவியுடைய ஒருவர் உட்பட்ட இரண்டு பேர் நியமிக்கப்படவுள்ளனர். இது, பெரும்பாலும் ஐக்கிய நாடுகளின் முன்னாள் செயலாளர் கொபி அன்னனாக இருக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை தரப்புக்களை கோடிட்டு இணையம் ஒன்று வெளியிட்டுள்ளது. விசாரணைக் குழுவில் சட்டமருத்துவ நிபுணர்களும் உள்ளடங்கவுள்ளனர். இவர்கள் இலங்கைக்கும் ஆசிய பசுபிக் பிராந்தியங்களுக்கும், வட அமரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய இடங்களுக்கு அடுத்த 8 மாதங்களில் பயணம் செய்து தகவல்களையும் சாட்சியங்களையும் திரட்டவுள்ளனர். இந்த வருட மார்ச்சில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட சர்வதேச விசாரணை யோசனைக்கு 42 அமைப்புக்கள் அனுசரணையை வழங்கியுள்ளன. இந்தக்குழுவின் விசாரணைகள் அடுத்து வரும் வாரங்களில் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பரிணாம வளர்ச்சியடையாத குரங்குகள் இலங்கையில் இருப்பவர்கள்: அமைச்சர் ரெஜினோல்ட் குரே கருத்து

Posted: 02 Jun 2014 01:00 AM PDT

human_kurre

human_kurreஇலங்கையில் இருப்பவர்கள் குணாதிசயங்களின் அடிப்படையில் பரிணாம வளர்ச்சியடையாத குரங்குகள் என சிறு ஏற்றுமதி பயிர்கள் தொடர்பான அமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த நவீன அறிவு பூரணமான உலகத்தில் நாம் வாழ்கின்றோம். நாம் ஆடம்பர உணவுகளை உண்கின்றோம், ஆடம்பர வாகனங்களின் பயணம் செய்கின்றோம். ஆடம்பர உடைகளை அணிகின்றோம். சன் கிளாஸ்களை அணிகின்றோம். நவீன நாகரீகம் எம்மை கடந்து செல்கிறது. என்ன செய்தாலும் குணாதிசயங்களின் அடிப்படையில், நாம் இன்னும் காடுகளில் வாழ்கின்றோம். பரிணாம வளர்ச்சியடைந்த குரங்கில் இருந்துதான் மனிதன் தோன்றினான். தாடிகளை மழித்து தலைமுடியை வெட்டி எப்படியான நாகரீகமாக இருந்தாலும் மனிதர்களிடம் சிறந்த குணாதிசயங்கள் இல்லாமல் போய்விட்டன. அப்படி பார்க்கும் போது குணாதிசயங்களின் அடிப்படையில், இலங்கையில் இன்னும் பரிணாம வளர்ச்சியடையாத குரங்குகளே இருக்கின்றன எனவும் அமைச்சர் குரே குறிப்பிட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™