Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


கடத்திவரப்பட்ட ஐம்பொன் சிவன் சிலை பறிமுதல்: 4 பேர் கைது

Posted: 27 Jun 2014 01:31 PM PDT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து கடத்தி வந்து திருவண்ணாமலையில் விற்க முயன்ற, சுமார் ஆயிரம் ஆண்டு பழமையான சிவன் சிலையை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரசு விழாக்களில் அசைவ உணவு பரிமாறத் தடை கோரி வழக்கு

Posted: 27 Jun 2014 01:30 PM PDT

அரசு விழாக்களில் அசைவ உணவுகள் பரிமாறத் தடைகோரும் மனுவுக்கு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மக்களுக்கு மயக்க மருந்து கொடுக்கும் மத்திய அரசு: ஜி.கே. வாசன் குற்றச்சாட்டு

Posted: 27 Jun 2014 01:29 PM PDT

கசப்பு மருந்து என்ற பெயரில் மக்களுக்கு மயக்க மருந்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு கொடுத்து வருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் குற்றம்சாட்டினார்.

ரயில்வேயில் எந்தச் சீர்திருத்தமும் அறிவிக்காமல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது: ப. சிதம்பரம்

Posted: 27 Jun 2014 01:28 PM PDT

ரயில்வேயில் எந்த சீர்திருத்தமும் அறிவிக்காமல் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

இலங்கை சிறையிலிருந்து விடுதலையான 22 மீனவர்கள் ராமேசுவரம் திரும்பினர்

Posted: 27 Jun 2014 01:25 PM PDT

இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டு, சிறையிலிருந்து விடுதலையான, ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 22 மீனவர்களும் வெள்ளிக்கிழமை மாலை ராமேசுவரம் வந்து சேர்ந்தனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு: இரண்டு பதில்களில் எதை அளித்தாலும் மதிப்பெண்: உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 27 Jun 2014 01:24 PM PDT

மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு கேள்விக்கான இரண்டு பதில்களில் எதை அளித்தாலும் அதற்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருந்திரி தயாரித்த கூடாரத்தில் தீ விபத்து: 4 பேர் சாவு; 10 பேர் படுகாயம்

Posted: 27 Jun 2014 01:23 PM PDT

விருதுநகர் அருகே சட்ட விரோதமாக கருந்திரி தயாரித்த கூடாரத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் சிறுமி உள்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னையில் ஜூலை 7-இல் போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 27 Jun 2014 01:22 PM PDT

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தமிழக அரசு ரகசியமாக மேற்கொண்டு வரும் தனியார்மய முடிவைக் கைவிட வலியுறுத்தி, சென்னையில் ஜூலை 7-ஆம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் தொழிலாளர் சம்மேளனம்-ஏஐடியுசி முடிவு செய்துள்ளது.

நியாயம் வேண்டும்

Posted: 27 Jun 2014 01:19 PM PDT

கர்நாடக நீர்ப்பாசனத்துறை சார்பிலான விளம்பரங்களை செய்தித்தாள்களில் வெளியிடுவதை அரசு நிறுத்த வேண்டும்.

குற்றங்களும் காரணமும்

Posted: 27 Jun 2014 01:19 PM PDT

பொதுமக்களைக் கொந்தளிக்கச் செய்கின்ற மூன்று தீவிரமான சமூகப் பிரச்னைகள் அமெரிக்க ஊடகங்களில் அண்மைக்காலமாக அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன.

வல்லான் வகுத்ததே வாய்க்கால்!

Posted: 27 Jun 2014 01:16 PM PDT

இந்தியாவில் பணம் இருப்பவர்கள் நீதிமன்றத்தை நாடி, கழுத்துமேல் உட்கார்ந்து காரியம் சாதிக்க முடியும். அதற்கு சமீபத்திய உதாரணம், தனியார் கல்லூரிகள் கூட்டாகச் சேர்ந்து பொறியியல் மாணவர் கலந்தாய்வை தள்ளி வைக்கும்படி செய்திருப்பது!

அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்கினால் போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு

Posted: 27 Jun 2014 01:13 PM PDT

அரசு போக்குவரத்துக் கழகங்களைத் தனியார்மயமாக்கினால் பாமக போராட்டம் நடத்தும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

தமிழக ரயில் திட்டங்களுக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை

Posted: 27 Jun 2014 01:12 PM PDT

மொரப்பூர் ரயில் இணைப்புத் திட்டம் உள்பட தமிழகத்தில் நிலுவையில் உள்ள ரயில் திட்டங்களுக்கு ரயில்வே பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் டி.வி.சதானந்தா கெளடாவிடம் தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், பாமக இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

பி.இ. கலந்தாய்வு ஒத்திவைப்பு: மாணவர்கள், பெற்றோர் கடும் அதிருப்தி

Posted: 27 Jun 2014 01:10 PM PDT

பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு திடீரென ஒத்தி வைக்கப்பட்டதால் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த மாணவர்களும், பெற்றோரும் புகார் தெரிவித்தனர்.

கலந்தாய்வு மறு தேதியை ஜூன் 30-இல் முடிவு செய்து கொள்ளலாம்: ஏஐசிடிஇ அனுமதி

Posted: 27 Jun 2014 01:06 PM PDT

பொதுப் பிரிவு கலந்தாய்வு மறு தேதியை வரும் 30-ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகம் நிர்ணயம் செய்துகொள்ள ஏஐசிடிஇ அனுமதி அளித்துள்ளது.

தமிழக அணைகள் கேரளத்துக்கு சொந்தமானது எப்படி? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கேள்வி

Posted: 27 Jun 2014 01:05 PM PDT

தமிழகத்துக்குச் சொந்தமான நான்கு அணைகள் கேரளத்துக்கு சொந்தமானது எப்படி என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தரை நீக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் தீர்மானம்

Posted: 27 Jun 2014 01:04 PM PDT

உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி மதிவாணனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

ஊரக வளர்ச்சித் துறை சார்பில் புதிய கட்டடங்கள், பசுமை வீடுகள், பாலங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்

Posted: 27 Jun 2014 01:03 PM PDT

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள், பசுமை வீடுகள் மற்றும் பாலங்களை முதல்வர் ஜெயலலிதா, விடியோ கான்ஃபரன்சிங் முறையில் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

புரியில் நாளை ஜகந்நாதர் ரத யாத்திரை

Posted: 27 Jun 2014 12:37 PM PDT

புரி ஜகந்நாதர் ரத யாத்திரை வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கிறது.

பாலியல் கல்விக்கு தடையா? ஹர்ஷவர்தன் கருத்தால் சர்ச்சை

Posted: 27 Jun 2014 12:37 PM PDT

பள்ளிகளில் பாலியல் தொடர்பான விழிப்புணர்வு கல்விக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீ ராம்சேனை அமைப்புக்கு தடை கிடையாது: பாஜக

Posted: 27 Jun 2014 12:35 PM PDT

கலாசாரத்தை சீரழிப்பதாகக் கூறி இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திவரும் ஸ்ரீ ராம்சேனை அமைப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்திவரும் நிலையில், "அந்த அமைப்பின் கிளையை கோவாவில் தொடங்குவதற்கு தடை விதிக்க இயலாது' என்று அந்த மாநில ஆளும் பாஜக தெரிவித்துள்ளது.

நாட்டுக்கு நல்ல நாள்கள் வருவதாக தோன்றவில்லை: நிதீஷ்குமார்

Posted: 27 Jun 2014 12:35 PM PDT

நரேந்திர மோடி அரசு இதுவரை செய்துள்ள பணிகளைப் பார்க்கும்போது நாட்டுக்கு நல்ல நாள்கள் வருவதைப் பிரதிபலிப்பதாக இல்லை என்று பிகார் முன்னாள் முதல்வர் நிதீஷ்குமார் விமர்சித்துள்ளார்.

தொழிற்கல்வி தேர்வு வாரிய ஊழல் விவகாரம்: ம.பி. முதல்வரை நீக்கும் எண்ணமில்லை: ராஜ்நாத் சிங்

Posted: 27 Jun 2014 12:34 PM PDT

மத்தியப் பிரதேச தொழிற்கல்வி தேர்வு வாரியத்தில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் தொடர்பாக அந்த மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் செüஹான் மீது எதிர்க்கட்சிகள் புகார் கூறிவரும் நிலையில், ""இந்த விவகாரம் தொடர்பாக, உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மணல் லாரி கவிழ்ந்து விபத்து: இளைஞர் சாவு

Posted: 27 Jun 2014 12:30 PM PDT

இரும்புலிக்குறிச்சி அருகே வெள்ளிக்கிழமை மணல் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 27 Jun 2014 12:30 PM PDT

ரயில் கட்டண உயர்வைக் கண்டித்து, அரியலூரில் காங்கிரஸ் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டத்தில் நாளை குரூப் 2 தேர்வு: 6283 பேர் பங்கேற்பு

Posted: 27 Jun 2014 12:30 PM PDT

அரியலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) நடைபெற உள்ள குரூப் 2 தேர்வில் 6283 பேர் பங்கேற்று தேர்வு எழுதவுள்ளனர். இதுகுறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்

அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு

Posted: 27 Jun 2014 12:30 PM PDT

அரியலூர் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

வாக்காளர்களுக்கு திருச்சி எம்.பி. நன்றி தெரிவித்தார்

Posted: 27 Jun 2014 12:29 PM PDT

திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ப. குமார் கந்தர்வகோட்டை ஒன்றியப்பகுதி கிராமங்களுக்கு வெள்ளிக்கிழமை சென்று

வளர் இளம்பெண்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்

Posted: 27 Jun 2014 12:29 PM PDT

பொன்னமராவதி பொன் புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வளர் இளம் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

சர்க்கரை ஆலை நிர்வாகத்தைக் கண்டித்து இரண்டாவது நாளாக கரும்பு விவசாயிகள் போராட்டம்

Posted: 27 Jun 2014 12:29 PM PDT

அறந்தாங்கி அருகே குரும்பூர் ஈ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரத்த தான விழிப்புணர்வுப் பேரணி

Posted: 27 Jun 2014 12:29 PM PDT

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை ரத்த தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வருகின்ற ஜுலை 14-ம் தேதி உலக ரத்த தான தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி

புதுக்கோட்டை, மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் திறப்பு

Posted: 27 Jun 2014 12:28 PM PDT

புதுக்கோட்டை, மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களை காணொலிக்காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

கம்மங்காடு ஊராட்சித் தலைவர், துணைத் தலைவருக்கு 9 மாதம் சிறை

Posted: 27 Jun 2014 12:28 PM PDT

பயனாளிகளுக்கு கொடுக்க வேண்டிய காசோலைகளை வழங்காத வழக்கில் கம்மங்காடு ஊராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் இருவருக்கும் தலா 9 மாதம் சிறைத் தண்டனை விதித்து அறந்தாங்கி குற்றவியல் நடுவர் நீதிபதி வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.

செம்பூதி நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு இரும்பு சத்து மாத்திரை வழங்கல்

Posted: 27 Jun 2014 12:28 PM PDT

பொன்னமராவதி அருகே உள்ள செம்பூதி அரசு நடுநிலைப்பள்ளியில் இரும்பு சத்து மாத்திரைகள் வழங்கும் திட்டம்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஜூலை 6-ல் கலைத்திறன் போட்டிகள்

Posted: 27 Jun 2014 12:28 PM PDT

புதுக்கோட்டை மணிமன்றப் பொன் விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குகான கலைத்திறன் போட்டிகள் ஜூலை 6-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

Posted: 27 Jun 2014 12:27 PM PDT

கரும்புக்கான நிலுவைத் தொகையை இரு தனியார் ஆலைகள் வழங்காததைக் கண்டித்தும், நெல்லுக்கான மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையை போதுமான அளவுக்கு நிர்ணயிக்க முடிவு

போலி ஆவணம் மூலம்மனையை விற்ற 2 பெண்கள் கைது

Posted: 27 Jun 2014 12:27 PM PDT

தஞ்சாவூர் அருகே போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்று மோசடி செய்ததாக இரு பெண்களை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

இராக்கில் சிக்கியுள்ள கணவரை மீட்க மனைவி வலியுறுத்தல்

Posted: 27 Jun 2014 12:27 PM PDT

இராக்கில் சிக்கியுள்ள கணவரை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்குமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் பெண் வெள்ளிக்கிழமை மனு அளித்தார்.

22,178 பேர் எழுதுகின்றனர்

Posted: 27 Jun 2014 12:26 PM PDT

தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) நடத்தும் குரூப் 2 தேர்வில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 22,178 பேர் பங்கேற்கவுள்ளனர் என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன்.

குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

Posted: 27 Jun 2014 12:26 PM PDT

தமிழக த்தின் காவிரி நீர் உரிமையை மறுக்கும் கர்நாடக அரசை பதவி நீக்க மத்திய அரசை வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

சாலை விபத்தில்காயமடைந்த இளைஞர் சாவு

Posted: 27 Jun 2014 12:26 PM PDT

பாபநாசம் வட்டம் தேவன்ஓடை மனோகரன் மகன் குருமூர்த்தி (29). இவர் கடந்த 8-ம் தேதி தனது

ஆசிரியர் கலந்தாய்வில் முறைகேடு:ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

Posted: 27 Jun 2014 12:26 PM PDT

நாகை மாவட்ட தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்கள் கலந்தாய்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை கண்டித்து மாவட்டக் கல்வித் துû ற நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதென தமிழ்நாடு

சீர்காழி அருகேகதவை உடைத்து நகை, பணம் திருட்டு

Posted: 27 Jun 2014 12:25 PM PDT

சீர்காழி அருகே வீட்டின் பின்புற கதவை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது.

தேஜ்பால் ஜாமீன் நீட்டிப்பு

Posted: 27 Jun 2014 12:25 PM PDT

பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பாலின் இடைக்கால ஜாமீனை ஜூலை 1ஆம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேருந்து மோதிஆயுதப்படை காவலர்கள் 5 பேர் காயம்

Posted: 27 Jun 2014 12:25 PM PDT

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே வியாழக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் ஆயுதப் படை காவலர்கள் 5 பேர் காயமடைந்தனர்.

திருவாரூரில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

Posted: 27 Jun 2014 12:25 PM PDT

திருவாரூர் மற்றும் மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தில்லி சட்டப்பேரவைக்கு அக்டோபரில் தேர்தல்? தேர்தல் ஆணையம் பரிசீலனை

Posted: 27 Jun 2014 12:24 PM PDT

தில்லி சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபர் மாதம் தேர்தல் நடத்தும் வாய்ப்புகள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

வன்கலவியால் கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் பெற்றோரிடம் விசாரணை

Posted: 27 Jun 2014 12:24 PM PDT

கரூர் மாவட்டம், மாயனூர் அருகே இளம்பெண் பாலியல் வல்லுறவால் கொலை செய்யப்பட்ட வழக்கில், அப்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தமிழ்நாடு குழந்தை உரிமை பாதுகாப்பு

பணிக்கு வராத விடுதிக் காவலர் பணியிடை நீக்கம்

Posted: 27 Jun 2014 12:24 PM PDT

அரியலூரில் பணிக்கு வராத அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதிக் காவலரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

மீன்சுருட்டி அருகே ரூ. 6 லட்சம் மரங்கள் தீக்கிரை: 3 பெண்கள் கைது

Posted: 27 Jun 2014 12:24 PM PDT

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே வியாழக்கிழமை நேரிட்ட தீ விபத்தில் ரூ. 6 லட்சம் மதிப்பிலான முந்திரி மற்றும் தைல மரங்கள் சேதமடைந்தது தொடர்பாக, 3 பெண்களை போலீஸார் கைது செய்தனர்.

காங்கிரஸின் மதச்சார்பின்மையில் மக்களின் நம்பிக்கை சரிந்துள்ளது: ஏ.கே.அந்தோணி

Posted: 27 Jun 2014 12:24 PM PDT

""காங்கிரஸின் மதச்சார்பின்மைக் கொள்கையில் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை சற்று சரிந்துள்ளது'' என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார்.

உரிமமின்றி வெடி பொருள்கள் வைத்திருந்தவர் கைது

Posted: 27 Jun 2014 12:24 PM PDT

பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் கிராமத்திலிருந்து வெடி பொருள்கள் காரில் எடுத்துச் செல்லப்படுவதாக, கியூ பிரிவு போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை காலை ரகசிய தகவல் கிடைத்தது.

இரண்டரை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை: சிறுவன் கைது

Posted: 27 Jun 2014 12:23 PM PDT

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள மணவாளநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் விமல் (16). இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வெள்ளுவாடி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். வியாழக்கிழமை இரவு உறவினரின்

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 8 லட்சம் மோசடி: ஒருவர் மீது வழக்கு

Posted: 27 Jun 2014 12:23 PM PDT

கும்பகோணம் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 8 லட்சம் மோசடி செய்ததாக தனியார் டிராவல்ஸ் உரிமையாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 27 Jun 2014 12:23 PM PDT

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தமிழக அரசு ரகசியமாக மேற்கொண்டு வரும் தனியார்மய முடிவைக் கைவிட வலியுறுத்தி, சென்னையில் ஜூலை 7-ம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தத் தமிழ்நாடு

வங்கதேசப் பயணம் நல்லுறவுக்கான சிறந்த தொடக்கம்: சுஷ்மா ஸ்வராஜ்

Posted: 27 Jun 2014 12:23 PM PDT

வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் வங்கதேசப் பயணம், இந்திய-வங்கதேச நல்லுறவுக்கான சிறந்த தொடக்கம் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மக்கள் எதிர்ப்பால் கருத்துக் கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு

Posted: 27 Jun 2014 12:22 PM PDT

திருவாரூர் மாவட்டத்தில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு அபிவிருத்தி கிணறுகள் அமைப்பது குறித்த கருத்துக் கேட்பு கூட்டம் மக்கள், விவசாயிகள் எதிர்ப்பால் ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட

மயிலாடுதுறை அருகே வீட்டின் கூரையை பிரித்து நகை திருட்டு

Posted: 27 Jun 2014 12:22 PM PDT

மயிலாடுதுறை அருகே ஓட்டு வீட்டின் கூரையை பிரித்து, 3 பவுன் நகை மற்றும் தொலைக்காட்சிப் பெட்டி திருடப்பட்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

மழை வேண்டி நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை

Posted: 27 Jun 2014 12:22 PM PDT

மழை வேண்டி நாகூர் தர்காவில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது.

கர்நாடகம், திரிபுரா ஆளுநர்களின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு

Posted: 27 Jun 2014 12:22 PM PDT

கர்நாடக ஆளுநர் ஹெச்.ஆர்.பரத்வாஜ் மற்றும் திரிபுரா ஆளுநர் தேவானந்த் கன்வர் ஆகியோரின் பதவிக் காலம் இன்றுடன் (ஜூன் 28) நிறைவடைகிறது.

வீட்டு வரி வசூலிப்பதில் உள்ள குளறுபடி சரி செய்யப்படும்

Posted: 27 Jun 2014 12:22 PM PDT

மன்னார்குடி நகர்மன்ற கூட்டம் வெள்ளிக்கிழமை அதன் தலைவர் டி. சுதா அன்புச்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

நக்ஸல்களுடன் பேச்சுவார்த்தை கிடையாது: மத்திய அரசு

Posted: 27 Jun 2014 12:21 PM PDT

நக்ஸல்களுடன் தற்போதைக்கு பேச்சுவார்த்தை நடத்தப்படமாட்டாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில்22,178 பேர் எழுதுகின்றனர்

Posted: 27 Jun 2014 12:21 PM PDT

தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) நடத்தும் குரூப் 2 தேர்வில் தஞ்சாவூர்

தஞ்சாவூரில் ரூ. 1.50 கோடியில் உழவர் மையம் திறப்பு

Posted: 27 Jun 2014 12:21 PM PDT

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் ரூ. 1.50 கோடியில் அமைக்கப்பட்ட உழவர் மையத்தை தமிழக முதல்வர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் வெள்ளிக்கிழமை தி

கேரளம்: 1,500 ஆண்டுகள் பழமையான கோயில் ஆபரணம் திருட்டு

Posted: 27 Jun 2014 12:21 PM PDT

கேரளத்தில் உள்ள திருநெட்டூர் மகாதேவர் கோயிலில் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வெண்கலத்தால் ஆன கிரீடத்தை மர்ம நபர்கள் வியாழக்கிழமை திருடிச் சென்றனர்.

சாலை விபத்தில் பெண் சாவு

Posted: 27 Jun 2014 12:21 PM PDT

பாபநாசம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

தஞ்சாவூர்

Posted: 27 Jun 2014 12:20 PM PDT

காஷ்மீர்: சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்வு

Posted: 27 Jun 2014 12:20 PM PDT

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோப்பூரில், இளைஞர் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, அங்கு விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு பெரும்பாலான இடங்களில் வெள்ளிக்கிழமை தளர்த்தப்பட்டது.

அமர்நாத் யாத்திரையை தொடங்கியது முதல் குழு

Posted: 27 Jun 2014 12:19 PM PDT

ஜம்மு-காஷ்மீரில் முதல்கட்டமாக 1,160 பேர் கொண்ட பக்தர்கள் குழு அமர்நாத் யாத்திரையை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

அஸ்ஸாமில் கன மழை: 7 பேர் பலி

Posted: 27 Jun 2014 12:18 PM PDT

அஸ்ஸாமில் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவுகளில் சிக்கியும், மின்சாரம் தாக்கியும் 7 பேர் உயிரிழந்தனர். பராலு நதியில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவரை காணவில்லை.

எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்

Posted: 27 Jun 2014 12:17 PM PDT

ஜம்மு - காஷ்மீரில் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தின.

நான்காண்டு பட்டப் படிப்புத் திட்டம் வாபஸ்: யுஜிசி உத்தரவுக்கு பணிந்தது தில்லி பல்கலைக்கழகம்

Posted: 27 Jun 2014 12:17 PM PDT

தில்லி பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நான்காண்டு இளங்கலை பட்டப் படிப்புத் திட்டம் திரும்பப் பெறப்படுகிறது என்று அப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தினேஷ் சிங் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

மழை நீர் சேகரிப்புத் திட்டம்: அதிகாரிகள் ஆய்வு

Posted: 27 Jun 2014 12:07 PM PDT

போளூரை அடுத்த படவேடு ஊராட்சியில் உள்ள அ.கோ.படவேடு, ரேணுகொண்டாபுரம், மண்டபம், வீரகோவில், கேசவபுரம்,ஜடகொண்டாபுரம், காளிகாபுரம், தேவனாங்குளம், மங்களாபுரம்,

தென்முடியனூரில் அதிமுக பொதுக் கூட்டம்

Posted: 27 Jun 2014 12:07 PM PDT

தண்டராம்பட்டை அடுத்த தென்முடியனூரில் அதிமுக பொதுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தண்டராம்பட்டு ஒன்றிய அதிமுக செயலாளர் ராஜா (எ) தேவராஜன் தலைமை

புத்தூர்செக்கடியில் அம்மா திட்ட முகாம்

Posted: 27 Jun 2014 12:07 PM PDT

தண்டராம்பட்டை அடுத்த திருவடத்தனூர், புத்தூர்செக்கடி கிராம ஊராட்சி மக்களுக்கான அம்மா திட்ட முகாம் புத்தூர்செக்கடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

3,672 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

Posted: 27 Jun 2014 12:07 PM PDT

செய்யாறில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் 3,672 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆரணி தொகுதி எம்.பி. செஞ்சி சேவல் வெ.ஏழுமலை வழங்கினார்.

மின்சாரம் பாய்ந்து விவசாயி சாவு

Posted: 27 Jun 2014 12:06 PM PDT

கலசப்பாக்கத்தை அடுத்த சேங்கபுத்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி நடராஜன் (60). அவருடைய விவசாய நிலத்தில் வியாழக்கிழமை தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார்.

சிறப்பு முகாமில் இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்

Posted: 27 Jun 2014 12:06 PM PDT

செய்யாறு வருவாய்த் துறை சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் வெள்ளிக்கிழமை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

கல்லூரியில் முதலாம் ஆண்டு தொடக்க விழா

Posted: 27 Jun 2014 12:06 PM PDT

செய்யாறு இந்தோ அமெரிக்கன் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளநிலை பட்டப்படிப்பு வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கக் கோரிக்கை

Posted: 27 Jun 2014 12:05 PM PDT

மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

காவல் உதவி ஆய்வாளர்கள் 24 பேர் இடமாற்றம்

Posted: 27 Jun 2014 12:05 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையில் பணிபுரிந்து வரும் 24 காவல் உதவி ஆய்வாளர்கள், 40 போலீஸாரை இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.முத்தரசி உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு

Posted: 27 Jun 2014 12:05 PM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தியது.

பிளாஸ்டிக் கவர் பயன்பாட்டை தடுக்க வேண்டும்

Posted: 27 Jun 2014 12:05 PM PDT

ஆரணி நகரில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வேண்டும் என்று நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர் வி.டி. அரசு வலியுறுத்தினார்.

கொண்டையாங்குப்பம் கிராமத்தில் தகராறு: இளைஞர் கைது

Posted: 27 Jun 2014 12:04 PM PDT

வந்தவாசி அருகே ஏற்பட்ட தகராறு தொடர்பாக இளைஞர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

வழக்கு விசாரணைக்கு வந்தவர் விஷம் குடித்து தற்கொலை

Posted: 27 Jun 2014 12:04 PM PDT

திருவண்ணாமலை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தவர், நீதிமன்றம் எதிரே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நூலகம் அமைக்க கோரிக்கை

Posted: 27 Jun 2014 12:04 PM PDT

வந்தவாசி கோட்டை காலனி பகுதியில் நூலகம் அமைத்துத்தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ஐம்பொன் சிவன் சிலை கடத்தல்: 4 பேர் கைது

Posted: 27 Jun 2014 12:04 PM PDT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து கடத்தி வந்து திருவண்ணாமலையில் விற்க முயன்ற, சுமார் ஆயிரம் ஆண்டு பழமையான சிவன் சிலையை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஏழை குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள்

Posted: 27 Jun 2014 12:03 PM PDT

செங்கம் அருகே ஏழை குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை மாவட்ட சமூக நலத் துறை அலுவலர் உமையாள் வெள்ளிக்கிழமை வழங்கினார்.

ரயில் கட்டண உயர்வைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

Posted: 27 Jun 2014 12:03 PM PDT

ரயில் கட்டண உயர்வைக் கண்டித்து, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸார் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரி மாணவர் தற்கொலை

Posted: 27 Jun 2014 12:03 PM PDT

திருவண்ணாமலை, முத்துவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர்  பிரவீன்குமார் (18). சென்னையில்

மாம்பழங்களை பழுக்க வைக்கும் புதிய முறை

Posted: 27 Jun 2014 11:59 AM PDT

மாம்பழங்களை பழுக்க வைக்கும் புதிய சுகாதார முறை குறித்து கன்னியாகுமரி அரசு தோட்டக்கலை அலுவலர் குமரேசன் பொதுமக்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

சிறுவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்: அமெரிக்காவில் 275 பேர் கைது

Posted: 27 Jun 2014 11:59 AM PDT

அமெரிக்காவில், இணையதளம் மூலம் சிறுவர்களைத் தொடர்புகொண்டு அவர்களின் அறியாமையை பயன்படுத்தி, நேரில் சந்திக்க வைத்து பாலியல் ரீதியாக அவர்களைத் துன்புறுத்திய 275 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கலிஃபோர்னியா அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு மருத்துவ மனையில் மூதாட்டியிடம் நகைத் திருட்டு

Posted: 27 Jun 2014 11:58 AM PDT

குழித்துறை அரசு மருத்துவமனையில் மூதாட்டியிடம் நூதன முறையில் 2 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடிவருகின்றனர்.

விஷம் குடித்த பேராசிரியை சாவு

Posted: 27 Jun 2014 11:58 AM PDT

 நாகர்கோவிலில் விஷம் குடித்த கல்லூரிப் பேராசிரியை மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு இறந்தார்.

போகோ ஹராம் தலைவர் மீது பொருளாதார தடை

Posted: 27 Jun 2014 11:58 AM PDT

நைஜீரியாவைச் சேர்ந்த இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களான போகோஹராம் மற்றும் அன்சாரு ஆகியவற்றின் தலைவர்கள் மீது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் பொருளாதார தடை விதித்துள்ளது.

இலவச வீட்டுமனைக் கோரி பெண்கள் போராட்டம்

Posted: 27 Jun 2014 11:58 AM PDT

கன்னியாகுமரி கிராம நிர்வாக அலுவலகம் முன் இலவச வீட்டுமனை கேட்டு 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்து வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினர்.

சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு சீனாவும், இந்தியாவும்தான் காரணம்: ஒபாமா குற்றச்சாட்டு

Posted: 27 Jun 2014 11:58 AM PDT

சீனாவிலும், இந்தியாவிலும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருவதால், அவற்றில் இருந்து வெளியேறும் அதிகபட்ச கரியமில வாயுவால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அரசுப் பேருந்தை சேதப்படுத்திய இளைஞர் கைது

Posted: 27 Jun 2014 11:58 AM PDT

திருவட்டாறு அருகே புதன்கிழமை இரவு அரசுப் பேருந்து மீது கற்களை வீசி சேதப்படுத்திய இளைஞரை  போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

ஆட்டோவில் கடத்த முயன்ற 600 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

Posted: 27 Jun 2014 11:57 AM PDT

நித்திரவிளை அருகே ஆட்டோவில் கேரளத்துக்கு கடத்த முயன்ற 600 லிட்டர் மண்ணெண்ணெய்யை போலீஸார் வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.

இந்து கோயில் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 27 Jun 2014 11:57 AM PDT

கருங்கல் பேருந்து நிலையம் முன் குளச்சல் ஏ.எஸ்.பி.யை கண்டித்து கிள்ளியூர் ஒன்றிய இந்துகோயில் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™