Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


இலங்கை மீதான மனித உரிமை மீறல் புகார்: ஐ.நா. விசாரணைக் குழு உறுப்பினர்கள் அறிவிப்பு

Posted: 25 Jun 2014 01:31 PM PDT

இலங்கை மீதான மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவுக்கு 3 உறுப்பினர்களை ஐ.நா. சபை அறிவித்துள்ளது.

திருச்செந்தூரில் ஜமாபந்தி நிறைவு: 1,162 மனுக்களுக்கு உடனடி தீர்வு

Posted: 25 Jun 2014 01:26 PM PDT

திருச்செந்தூர் வட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் 1,162 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் மகளிருக்கான புதிய சேமிப்புக் கணக்கு திட்டம் தொடக்கம்

Posted: 25 Jun 2014 01:26 PM PDT

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் மகளிருக்கான புதிய சேமிப்புக் கணக்கு திட்ட சேவை தொடக்க விழா தூத்துக்குடியில் புதன்கிழமை நடைபெற்றது.

நாகலாபுரம் கல்லூரியில் புதிய கட்டடத்துக்கு பூமிபூஜை

Posted: 25 Jun 2014 01:26 PM PDT

விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாதிரி உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டும் பணிக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை

Posted: 25 Jun 2014 01:26 PM PDT

தூத்துக்குடியில் அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

குடிநீர்க் குழாய், தெருவிளக்குகளை சேதப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Posted: 25 Jun 2014 01:25 PM PDT

கோவில்பட்டி நகராட்சி 18ஆவது வார்டுக்குள்பட்ட பகுதிகளில் குடிநீர்க் குழாய், தெருவிளக்குகள் மற்றும் வாகனங்களை சேதப்படுத்தும் மர்ம நபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் புதன்கிழமை காவல் நிலையம் முன்பு திரண்டனர்.

கிணற்றில் தத்தளித்த மயில் மீட்பு

Posted: 25 Jun 2014 01:25 PM PDT

சாத்தான்குளம் அருகே கிணற்றில் தத்தளித்த மயிலை தீயணைப்புத் துறையினர் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.

ஜூன் 26 மின் தடை

Posted: 25 Jun 2014 01:24 PM PDT

தூத்துக்குடி மாநகரத்தில் சில பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 26) மற்றும் 28 ஆம் தேதிகளில் பகலில் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உடன்குடியில் ஆலய பிரதிஷ்டை28 இல் தொடக்கம்

Posted: 25 Jun 2014 01:24 PM PDT

உடன்குடி சிவல்விளைபுதூர் பரி. பேதுரு ஆலய பிரதிஷ்டை விழா, ஜூன்  28ஆம் தேதி தொடங்குகிறது.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி

Posted: 25 Jun 2014 01:24 PM PDT

கோவில்பட்டி நகராட்சி நிர்வாகம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

கயத்தாறு, குளத்தூரில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம்

Posted: 25 Jun 2014 01:24 PM PDT

தலா  ரூ.12 லட்சம் செலவில் கயத்தாறு மற்றும் குளத்தூரில் புதிதாக கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பை விடியோ கான்பரன்ஸிங் முறையில் முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை திறந்துவைத்தார்.

தூத்துக்குடி, கோவில்பட்டியில் ரயில் மறியல்: 42 பேர் கைது

Posted: 25 Jun 2014 01:23 PM PDT

ரயில் கட்டண உயர்வைக் கண்டித்து,கோவில்பட்டி, தூத்துக்குடியில் புதன்கிழமை ரயில் மறியலில் ஈடுபட்ட 42 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சாலைப் பணியால் குழாய்கள் சேதம்: திருச்செந்தூரில் குடிநீர் விநியோகம் பாதிப்பு

Posted: 25 Jun 2014 01:23 PM PDT

திருச்செந்தூரில் சாலைப் பணியின் போது குடிநீர்க் குழாய்கள் சேதமடைந்ததால் குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கோவில்பட்டி ஜமாபந்தியில் 54 பேருக்கு பட்டா மாற்ற ஆணை

Posted: 25 Jun 2014 01:23 PM PDT

கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாய கணக்குகள் சரிபார்க்கும் நிகழ்ச்சியில் 54 பேருக்கு பட்டா மாற்றத்துக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடியில் ஆபரேஷன் ஆம்லா பாதுகாப்பு ஒத்திகை

Posted: 25 Jun 2014 01:22 PM PDT

தூத்துக்குடியில் ஆபரேஷன் ஆம்லா  என்ற பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது. மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பிறகு தமிழகம் மற்றும்

மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு

Posted: 25 Jun 2014 01:22 PM PDT

பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவிக்கு,வீரபாண்டியன்பட்டணம் ஊராட்சி அலுவலத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

கால்பந்து: குமரி மாவட்ட அணி காலிறுதிக்குத்  தகுதி

Posted: 25 Jun 2014 01:22 PM PDT

நாசரேத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாநில கால்பந்து போட்டி 7ஆவது நாள் ஆட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட கால்பந்துக் கழக அணி வெற்றி பெற்று காலிறுதிக்குத் தகுதி பெற்றது.

வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்

Posted: 25 Jun 2014 01:21 PM PDT

புதுப்பாளையத்தில் வேளாண்மைத் துறை ஆட்மா திட்டம் மூலம் தொழில்நுட்ப மேலாண்மை உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வேளாண்மை அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை

கோயில் திருவிழா சமாதான கூட்டம்

Posted: 25 Jun 2014 01:21 PM PDT

போளூர் தாலுகா அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.  போளூர் ஒன்றியம் அனந்தபுரம் ஊராட்சியைச் சேர்ந்த கைலாசபுரத்தில் ஸ்ரீதிரௌபதி அம்மன் கோவில்

 பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

Posted: 25 Jun 2014 01:21 PM PDT

செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்கவிழா புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பரிமளாஜெயந்தி வரவேற்றார்.

இன்று பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு

Posted: 25 Jun 2014 01:20 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட அரசு, நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெறுகிறது.

ஜமாபந்தி நிறைவு

Posted: 25 Jun 2014 01:20 PM PDT

வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா மற்றும் விவசாயிகள் மாநாடு செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

வேளாண் துறையில் காலியிடம்: ஜூலை 4-ல் நேர்முகத் தேர்வு

Posted: 25 Jun 2014 01:20 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட வேளாண் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஜூலை 4-ல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் தகுதியானோர் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

ஆறுமுகனேரி

Posted: 25 Jun 2014 01:19 PM PDT

நைஜீரியாவை வீழ்த்தியது ஆர்ஜெண்டினா

Posted: 25 Jun 2014 01:17 PM PDT

ஆர்ஜெண்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி தனது 27-வது பிறந்தநாளைக் கொண்டாடிய மறுநாள் நைஜீரியாவுக்கு எதிராக 2 கோல்கள் அடித்து கைகொடுக்க ஆர்ஜெண்டினா அணி 3-2 என வெற்றி பெற்றது. இதன் மூலம் குரூப் எஃப் பிரிவில் 9 புள்ளிகளுடன் ஆர்ஜெண்டினா முதலிடத்தில் உள்ளது.

"ஆழ்துளைக் கிணறுகளில் தவறி விழும் குழந்தைகளை மீட்க தீயணைப்பு துறையினருக்கு அதிநவீன கருவிகள் தேவை'

Posted: 25 Jun 2014 01:10 PM PDT

தமிழகத்தில் ஆழ்துளைக் கிணறுகளில் தவறி விழும் குழந்தைகளை மீட்க தீயணைப்புத் துறையினருக்கு அதிநவீன கருவிகளை வழங்க வேண்டுமென குழந்தைகள் உரிமைகளுக்கான அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

தங்கம்: பவுனுக்கு ரூ.168 குறைவு

Posted: 25 Jun 2014 01:08 PM PDT

ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.168 குறைந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் சாவு

Posted: 25 Jun 2014 01:07 PM PDT

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புதன்கிழமை மாலை தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பி.இ. மெக்கானிக்கல் பிரிவுக்கு முன்னுரிமை அளித்த விளையாட்டு வீரர்கள்

Posted: 25 Jun 2014 01:05 PM PDT

விளையாட்டு வீரர்களுக்கான பொறியியல் கலந்தாய்வில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் மெக்கானிக்கல் பிரிவையே தேர்வு செய்துள்ளனர்.

சிட்கோ தலைமை அலுவலக கட்டடம்: முதல்வர் திறந்து வைத்தார்

Posted: 25 Jun 2014 01:04 PM PDT

தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் (சிட்கோ) தலைமை அலுவலகக் கட்டடத்தை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் விடியோ கான்ஃபரன்சிங் முறை மூலம் அவர் புதிய கட்டடத்தை திறந்தார்.

ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு: வெளிப்படையாக நடத்த உத்தரவு

Posted: 25 Jun 2014 01:01 PM PDT

ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்த பள்ளிக் கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராகிங்கில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: மருத்துவக் கல்வி இயக்குநர் எச்சரிக்கை

Posted: 25 Jun 2014 12:58 PM PDT

அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ராகிங்கில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.கீதாலெட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதிமுகவின் கடலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்:  வைகோ அறிவிப்பு

Posted: 25 Jun 2014 12:58 PM PDT

மதிமுகவின் கடலூர் மாவட்டப் பொறுப்பாளர்களை நியமித்து, அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

புதுவையில் 105 டிகிரி வெயில்; சென்னையில் 104 டிகிரி

Posted: 25 Jun 2014 12:57 PM PDT

தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை, சென்னையில் 104 டிகிரி வெயில் புதன்கிழமை (ஜூன் 24) பதிவானது.

சிமென்ட் விலையேற்றம்: கட்டுமானப் பணிகள் பாதியில் நிறுத்தம்

Posted: 25 Jun 2014 12:56 PM PDT

சிமென்ட் விலை ஏற்றத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பை அடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் பல இடங்களில் கட்டுமானப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், குறைந்த பட்ஜெட்டில் வீடு கட்டுவோர், கட்டுமானத் தொழிலாளர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை-ஹெளரா-யஸ்வந்த்பூர் ப்ரீமியம் வாராந்திர ரயில் அறிமுகம்

Posted: 25 Jun 2014 12:56 PM PDT

சென்னைசென்ட்ரல்-ஹெளரா, ஹெளரா- யஸ்வந்த்பூர் ப்ரீமியம் வாராந்திர ரயில்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக நிர்வாக புதிய இயக்குநர் செல்வராஜ்

Posted: 25 Jun 2014 12:55 PM PDT

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக ஆர்.செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் புதன்கிழமை வெளியிட்டார். அதன் விவரம்:

வட்டாட்சியர் உள்பட வருவாய்த் துறைக்கான புதிய அலுவலகக் கட்டடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்

Posted: 25 Jun 2014 12:54 PM PDT

வட்டாட்சியர் உள்பட வருவாய்த் துறைக்கான புதிய அலுவலகக் கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

கல்வி உதவித் தொகை மோசடி விவகாரம்: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

Posted: 25 Jun 2014 12:50 PM PDT

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை ரூ.81 லட்சத்தை மோசடி செய்த 77 தலைமை ஆசிரியர்கள் மீது விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விதிகளை அறிந்து வாகனம் ஓட்டுவோம்

Posted: 25 Jun 2014 12:47 PM PDT

அண்மையில் ஒரு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு இடைத்தரகர் 5 நபர்களுக்கு ஆட்டோ ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக, அவர்களை அழைத்து வந்திருந்தார்.

செம்மரங்களைக் காத்திடுவோம்!

Posted: 25 Jun 2014 12:46 PM PDT

கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி திருப்பதி வனவிலங்கு மற்றும் வன நிர்வாக அலுவலர்கள் இருவர் சேஷாசலம் வனப் பகுதியில் செம்மரங்கள் கடத்தப்பட்டதைக் கண்டுபிடித்து ஒரு லாரியை வழிமறித்தபோது செம்மரக் கடத்தல் மாஃபியாக்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

வாராக்கடனும் ஏமாளி ஜனமும்!

Posted: 25 Jun 2014 12:44 PM PDT

அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களால் கடனாகப் பெறப்பட்டு, திருப்பிச் செலுத்தப்படாமல் ஏறத்தாழ 2 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடனாகத் தேங்கிக் கிடக்கிறது.

சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு ஸ்டாலின்தான் காரணம்: கே.பி.ராமலிங்கம் குற்றச்சாட்டு

Posted: 25 Jun 2014 12:30 PM PDT

திமுகவில் இருந்து தான் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினே காரணம் என, கே.பி.ராமலிங்கம் எம்.பி. குற்றம்சாட்டினார்.

நாட்டுப் படகு-விசைப் படகு மீனவர் இடையேயான பிரச்னை: அமைச்சர் தலைமையில் மீனவர் சங்கத்தினர் ஆலோசனை

Posted: 25 Jun 2014 12:28 PM PDT

நாட்டுப் படகு மற்றும் விசைப் படகு மீனவர்களுக்கு இடையிலான பிரச்னை குறித்து மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால் தலைமையில் சென்னையில் புதன்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது.

108 ஆம்புலன்ஸ் சேவைக்கு 70 வாகனங்கள்

Posted: 25 Jun 2014 12:27 PM PDT

தமிழக சுகாதாரத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு புதியதாக 70 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

நடப்பு கல்வியாண்டில் 5.50 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்-டாப்: தமிழக அரசு இலக்கு

Posted: 25 Jun 2014 12:26 PM PDT

நடப்பு கல்வியாண்டில் (2014-15) 5.50 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

புதிய பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

Posted: 25 Jun 2014 12:25 PM PDT

தண்ணீரில் தன்னிறைவு பெற புதிய பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வு: நாளை தொடக்கம்

Posted: 25 Jun 2014 12:24 PM PDT

பொறியியல் மாணவர் சேர்க்கையில் பொதுப் பிரிவினருக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஜூன் 27) தொடங்க உள்ளது.

ரூ.30 கோடியில் அரசு மருத்துவமனைகளுக்கான கட்டடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்

Posted: 25 Jun 2014 12:23 PM PDT

அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளுக்கு ரூ. 30 கோடியே 73 லட்சத்து 80 ஆயிரம் செலவில் புதிய கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை (ஜூன் 25) திறந்து வைத்தார்.

நாகையில் ரயில் மறியல்: போலீஸ் தடியடி

Posted: 25 Jun 2014 12:23 PM PDT

 மார்க்சிஸ்ட் கட்சி சார்பு அமைப்புகளான ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கம் மற்றும் மாணவர் சங்கம் சார்பில் நாகையில் புதன்கிழமை நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தின்போது, போராட்டக் குழுவினருக்கும் போலீஸாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நாகை, காரைக்காலில்  தீவிரவாத தடுப்பு ஒத்திகை

Posted: 25 Jun 2014 12:22 PM PDT

தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவவதைத் தடுக்கும் "ஆபரேஷன் ஆம்லா' ஒத்திகை நாகை மற்றும் காரைக்காலில் புதன்கிழமை தொடங்கியது.

பெருவுடையார்  கோயிலில் நாளை ஆஷாட நவராத்திரி விழா தொடக்கம்

Posted: 25 Jun 2014 12:22 PM PDT

தஞ்சாவூர் பெருவுடையார் திருக்கோயிலில் ஸ்ரீ மகா வராஹி அம்மன் சன்னதியில் 12 ஆம் ஆண்டு ஆஷாட நவராத்திரி பெருவிழா வெள்ளிக்கிழமை (ஜூன் 27) தொடங்கப்படவுள்ளது.

அனுமதியின்றி சேவல் சண்டை : 25 பேர் கைது

Posted: 25 Jun 2014 12:22 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் அருகே அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தியது தொடர்பாக 25 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

ஜூலையில் ஆர்ப்பாட்டம் நடத்த பண்ணைத் தொழிலாளர்கள் முடிவு

Posted: 25 Jun 2014 12:22 PM PDT

சென்னையில் ஜூலை மாதத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது எனத் தமிழ்நாடு அரசு மற்றும் வேளாண் பல்கலைக்கழகப் பண்ணைத் தொழிலாளர் சங்கம் முடிவு செய்துள்ளது

உரிய ஆவணமின்றி சிலைகளோடு வந்தவர் கைது

Posted: 25 Jun 2014 12:21 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் அருகே முறையான ஆவணங்களின்றி சாமி சிலைகளோடு வந்தவர் செவ்வாய்க்கிழமை கைதானார்.

மீத்தேன் திட்ட ரத்து கோரி ரயில் மறியல்: 104 பேர் கைது

Posted: 25 Jun 2014 12:21 PM PDT

மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை முற்றிலுமாக நிறுத்தக் கோரி கும்பகோணத்தில் புதன்கிழமை ரயில் மறியல் செய்ய முயன்ற சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவை (எஸ்டிபிஐ) சேர்ந்த 104 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ராமேசுவரம், புதுகை மீனவர்கள் 46 பேர் விடுவிப்பு: இலங்கை நீதிமன்றம்

Posted: 25 Jun 2014 12:21 PM PDT

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட ராமேசுவரம், புதுக்கோட்டை மீனவர்கள் 46 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூரில் இளையோர் செஞ்சிலுவை சங்கக் கூட்டம்

Posted: 25 Jun 2014 12:21 PM PDT

பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், இளையோர் செஞ்சிலுவை சங்க மாவட்ட துணைக் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சாதாரணச் சங்கை வலம்புரி சங்கு எனக் கூறி விற்ற 6 பேர் கைது

Posted: 25 Jun 2014 12:20 PM PDT

பொன்னமராவதி அருகே  மேலத்தானியத்தில் சாதாரணச் சங்கை வலம்புரிச்சங்கு எனக்கூறி ரூ. 5 லட்சம் வரை விற்பனை செய்த 6 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

சமுதாய மாற்றத்துக்குஅடிப்படையானவர்கள் ஆசிரியர்கள்தான்

Posted: 25 Jun 2014 12:20 PM PDT

சமுதாய மாற்றத்துக்கு அடிப்படையானவர்கள் ஆசிரியர்கள்தான் என்றார் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகப் பதிவாளர் ஏ. மாணிக்கவாசகம்.

தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முப்பெரும் விழா

Posted: 25 Jun 2014 12:20 PM PDT

புதுக்கோட்டை அருகேயுள்ள லெனா விலக்கு செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரியில் வாரியத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு, ஆசிரியர்களுக்கு தங்கக்காசு, முதலாண்டு வகுப்புகள் தொடக்கம் ஆகிய முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது.

மாவட்டத்தில் 31 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

Posted: 25 Jun 2014 12:19 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் உள்ள வட்டாட்சியர்கள் உள்பட மொத்தம் 31 வட்டாட்சியர்கள் ஆட்சியர் செ. மனோகரனின் ஆணைப்படி செவ்வாய்க்கிழமை பணியிட மாற்றம்

பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கத்துக்கு விருதுகள்

Posted: 25 Jun 2014 12:19 PM PDT

புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கத்துக்கு பல்வேறு சேவைப்பணிகளுக்காக 9 விருதுகள் கிடைத்துள்ளது.

ரயில் மறியலுக்கு முயன்ற 52 பேர் கைது

Posted: 25 Jun 2014 12:19 PM PDT

ரயில் கட்டணம் மற்றும் டீசல், சமையல் எரிவாயு விலைகளை உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஜனநாயக வாலிபர், மாதர் சங்கம், மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த 52 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

பெருவுடையார் கோயிலில் நாளை ஆஷாட நவராத்திரி விழா தொடக்கம்

Posted: 25 Jun 2014 12:18 PM PDT

தஞ்சாவூர் பெருவுடையார் திருக்கோயிலில் ஸ்ரீ மகா வராஹி அம்மன் சன்னதியில் 12 ஆம் ஆண்டு ஆஷாட நவராத்திரி பெருவிழா வெள்ளிக்கிழமை (ஜூன் 27) தொடங்கப்படவுள்ளது.

அரசு சேவைப் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்

Posted: 25 Jun 2014 12:18 PM PDT

தஞ்சாவூர் அரசுச் சேவை இல்ல மேல்நிலைப் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மேலும் தெரிவித்தது:

வாகனத் திருட்டில் ஈடுபட்ட  மூவர் கைது: 9 வாகனங்கள் பறிமுதல்

Posted: 25 Jun 2014 12:18 PM PDT

மன்னார்குடி பகுதியில் வாகனத் திருட்டுகளில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவர்களிடமிருந்து 9 இரு சக்கர வானங்களை பறிமுதல் செய்தனர்.

பெட்ரோல் பங்க் ஊழியருக்கு அரிவாள் வெட்டு

Posted: 25 Jun 2014 12:18 PM PDT

சீர்காழி அருகே நள்ளிரவு நேரத்தில் பெட்ரோல் வழங்க மறுத்த பெட்ரோல் பங்க்  ஊழியரை அரிவாளால் வெட்டியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

"பாலியல் கொடுமையிலிருந்து காத்துக் கொள்ளும் விழிப்புணர்வை குழந்தைகளிடம் மேம்படுத்த வேண்டும்'

Posted: 25 Jun 2014 12:17 PM PDT

பாலியல் கொடுமைகளிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளும் விழிப்புணர்வை குழந்தைகளிடம் மேம்படுத்த வேண்டும் என்றார் நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி.

செயற்கை கால்பொருத்தும் முகாம்: 46 பேர் தேர்வு

Posted: 25 Jun 2014 12:17 PM PDT

காரைக்காலில் நடைபெற்ற செயற்கை கால் பொருத்தும் பரிசோதனை முகாமில் 46 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

ரூ. 5.68 கோடியில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

Posted: 25 Jun 2014 12:17 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ. 5.68 கோடியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மகளிடம் பலாத்காரம்:தந்தை கைது

Posted: 25 Jun 2014 12:16 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே மகளை பலாத்காரம் செய்ய முயன்ற தந்தையை மகளிர் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.

2014-15-ல் ரூ. 2,488 கோடி முன்னுரிமை கடன் வழங்க இலக்கு

Posted: 25 Jun 2014 12:16 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் 2014-15-ம் ஆண்டில் வங்கிகள் முன்னுரிமை கடனாக ரூ. 2,488 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் தற்கொலை

Posted: 25 Jun 2014 12:16 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில், வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் தற்கொலை செய்துகொண்டனர்.

ஆக. 24-ல் மாற்றுதிறனாளிகளுக்கு சுயம்வரம்: முன்பதிவு செய்யலாம்

Posted: 25 Jun 2014 12:16 PM PDT

பெரம்பலூரில், மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் ஆக. 24-ம் தேதி நடைபெற உள்ளது என்றார் பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கச் செயலர் சையது முஸ்தபா.

நகை பறிப்பு:3 பெண்கள் உள்பட 5 பேர் கைது

Posted: 25 Jun 2014 12:15 PM PDT

பெரம்பலூரில் அண்மையில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற பெண்களிடம் நகைகளை பறித்துச் சென்ற 5 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

அரியலூர் சிமென்ட் நகர லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு

Posted: 25 Jun 2014 12:15 PM PDT

அரியலூர் சிமென்ட் நகர லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.

"சுற்றுச்சூழலை காக்க நபருக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும்'

Posted: 25 Jun 2014 12:15 PM PDT

சுற்றுச்சூழலை காக்க நபருக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்றார் அரியலூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆர். கண்ணன்.

ஜூன் 26 மின் தடை

Posted: 25 Jun 2014 12:14 PM PDT

தமிழ்நாடு மின் வாரியத்தின் மின் பகிர்மானக் கழக செந்துறை உதவிச் செயற்பொறியாளர் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அரியலூரில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 27 பேர் கைது

Posted: 25 Jun 2014 12:14 PM PDT

ரயில் கட்டண உயர்வைக் கண்டித்து, அரியலூரில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த 27 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

மக்களவைத் தேர்தல் பணி: மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

Posted: 25 Jun 2014 12:14 PM PDT

மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடவடிக்கைகளை மடிக்கணினி, வெப்கேமரா மூலம் பதிவு செய்த மாணவ, மாணவிகளுக்கு அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் பாராட்டுச் சான்றிதழ்களை புதன்கிழமை வழங்கினார்.

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

Posted: 25 Jun 2014 12:13 PM PDT

புதுகை ராணியார் மகப்பேறு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டுமென தமிழக முதல்வருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வழக்குரைஞர்கள் அறை கட்டுமானப் பணிகள் ஆய்வு

Posted: 25 Jun 2014 12:13 PM PDT

புதுக்கோட்டை நீதிமன்றத்தில் சுமார் ரூ. 1 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் வழக்குரைஞர்களுக்கான 26 அறைகள் கொண்ட அலுவலகக் கட்டுமானப் பணிகளை உயர்நீதிமன்ற நீதிபதியும், மாவட்டக் கண்காணிப்பு நீதிபதியுமான டி. மதிவாணன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

நற்சாந்துபட்டியில் இன்று நவீனவாசக்டமி சிகிச்சை முகாம்

Posted: 25 Jun 2014 12:13 PM PDT

புதுக்கோட்டை மாவட்ட குடும்ப நலத் துறை மூலம் திருமயம் வட்டம், நற்சாந்துபட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வியாழக்கிழமை (ஜூன் 26) நவீன வாசக்டமி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

வாக்காளர்களுக்கு திருச்சி எம்.பி. நன்றி

Posted: 25 Jun 2014 12:13 PM PDT

திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ப. குமார் புதுக்கோட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த 50 கிராமங்களில் செவ்வாய்க்கிழமை சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.    புதுக்கோட்டை ஒன்றியம் தேனிப்பட்டியில் நடைபெற்ற நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியது: மக்களவைத் தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. தமிழக முதல்வர்

வட்டாட்சியர் பொறுப்பேற்பு

Posted: 25 Jun 2014 12:12 PM PDT

அறந்தாங்கி வட்டாட்சியராக வீ. கதிரேசன் (54) புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் இதற்கு முன்பு புதுக்கோட்டை குடிமைப்பொருள் தனி வட்டாட்சியராக பணியாற்றி வந்தார். அறந்தாங்கி

ரூ. 1.80 கோடியில் புதிய குடியிருப்புக் கட்டடம் திறப்பு

Posted: 25 Jun 2014 12:12 PM PDT

புதுக்கோட்டையிலுள்ள அரசு மறுவாழ்வு இல்லத்தில் ரூ. 1.80 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய குடியிருப்பு, நவீன சமையல் கூட கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா  காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்ததைக் கொண்டாடும் வகையில் இல்லவாசிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் இனிப்பு

அரசு மருத்துவக் காப்பீட்டு அட்டைக்கு பதிவு செய்ய நாளை சிறப்பு முகாம்

Posted: 25 Jun 2014 12:12 PM PDT

தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் ஆலங்குடி, கறம்பக்குடி வட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் சிறப்பு முகாமில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகனத் தணிக்கை:  லாரி உள்பட 3 வாகனங்கள் பறிமுதல்

Posted: 25 Jun 2014 12:12 PM PDT

புதுக்கோட்டை அருகே வட்டார போக்குவரத்துத் துறையினர் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட வாகனத்தணிக்கையில் விதிமீறலில் ஈடுபட்ட லாரி உள்பட 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அறந்தாங்கியில் ஜூன் 28-ல் முத்திரைக் கட்டண வசூல் முகாம்

Posted: 25 Jun 2014 12:11 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஜூன் 28-ல் முத்திரைக்கட்டண வசூல் முகாம் நடைபெறுவதாகவும், இதில் பங்கேற்காதோர் மீது ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் வெளியிட்ட தகவல்:

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

Posted: 25 Jun 2014 12:11 PM PDT

பொன்னமராவதி அருகே உள்ள தேனிமலை எஸ்எஸ்ஆர் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்க உள்ளாட்சி நிதியைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்

Posted: 25 Jun 2014 12:11 PM PDT

குடிநீர்த்தட்டுப்பாடு நிலவும் ஊராட்சிப் பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்க ஊராட்சி நிதியைப் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டுமென ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பாராட்டு

Posted: 25 Jun 2014 12:11 PM PDT

புதுக்கோட்டை கலீப் நகரில் உள்ள கலிலியோ கலிலி, சர்.சி.வி. ராமன் துளிர் இல்லம் சார்பில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா, ஆலோசனைக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மருத்துவத் துறையில் அன்னிய முதலீடு அனுமதிக்கப்படாது: கேரளம்

Posted: 25 Jun 2014 12:11 PM PDT

மருத்துவத் துறையில் அன்னிய முதலீடுகளுக்கு அனுமதி வழங்கப்படாது என கேரள அரசு அறிவித்துள்ளது.

மாவட்டத் தொழில் மையக் கட்டடம் திறப்பு

Posted: 25 Jun 2014 12:10 PM PDT

தஞ்சாவூரில் ரூ. 1 கோடியில் கட்டப்பட்ட புதிய மாவட்டத் தொழில் மையக் கட்டடத்தைச் சென்னையிலிருந்து தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தார்.

நல்ல காலம் பிறக்கவில்லை: பாஜக மீது ஹேமந்த் சோரன் விமர்சனம்

Posted: 25 Jun 2014 12:10 PM PDT

"நாட்டுக்கு நல்ல நாள்கள் வரவிருப்பதாக நரேந்திர மோடி கூறினார். ஆனால், தற்போது ஏழைகளின் மேல் பொருளாதாரச் சுமை ஏற்றப்பட்டிருப்பதைப் பார்த்தால், இவை நல்ல நாள்களுக்கு எதிரானவையே' என்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசை ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் விமர்சித்துள்ளார்.

மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம்

Posted: 25 Jun 2014 12:09 PM PDT

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி அகில இந்திய மாணவர் கழகத்தின் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குடந்தை சாஸ்த்ரா பல்கலை.யில் பொறியியல் கலந்தாய்வு தொடக்கம்

Posted: 25 Jun 2014 12:09 PM PDT

கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக் கழக சீனிவாச ராமானுஜன் மையத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது.

டிஆர்எஸ்ஸில் 5 காங்கிரஸ் எம்எல்சிக்கள்

Posted: 25 Jun 2014 12:09 PM PDT

தெலங்கானாவில் காங்கிரûஸச் சேர்ந்த 5 பேர் உள்பட 9 சட்ட மேலவை உறுப்பினர்கள் டிஆர்எஸ் கட்சியில் புதன்கிழமை இணைந்தனர்.

ரயில் கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டம்

Posted: 25 Jun 2014 12:09 PM PDT

ரயில் கட்டண உயர்வைக் கண்டித்து தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்த முயன்ற 37 பேரை போலீஸார் கைது செய்தனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™